பேச்சு:சௌராட்டிர சமூகத்தவர் பட்டியல்

இச்சமூகத்தினரின் வரலாறு பற்றி நிறைய செய்திகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். கட்டுரை நீண்டு போகும். எனவே, இது தனிக் கட்டுரையாக இருக்கட்டும். இணைக்கத் தேவையில்லை. (முதல் பத்தியை படியெடுத்தேன், நீக்க மறந்துவிட்டேன்,)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:45, 27 மார்ச் 2013 (UTC)

குழப்பம் விளைந்துவிட்டது. வழிமாற்று மட்டும் ஏற்படுத்துகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு)

ஒரு சமூகத்தின் புகழ் பெற்ற மனிதர்கள் என்ற கட்டுரை தேவையா? எல்லா சமூகத்திலும் ஆட்கள் இருப்பார்கள், குறிப்பிட்ட சமூகத்தில் மிக குறைவாக புகழ் பெற்ற மனிதர்கள் இருந்தால் அவர்களை குறிக்கலாம் (அதுவும் கேள்விக்குரியதே) குறிப்பிட்ட மனிதரை பற்றி கட்டுரை இருந்தால் அதில் அவர் இந்த சமூகத்தை சேர்ந்தவர் என குறிக்கலாம். --குறும்பன் (பேச்சு) 15:17, 20 மே 2013 (UTC)Reply

👍 விருப்பம்--Anton (பேச்சு) 03:06, 1 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம் தமிழ்க்குரிசில், குறும்பன் மற்றும் ஆண்டன் அவர்களே; ஆங்கில விக்கிபீடியாவை பாருங்கள். அதில் List of .....(Community) People எனும் தலைப்பில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டுரைகள் உள்ளது என்பதை கவணித்துப் பார்த்தால் தமிழ்விக்கி பீடியாவில் ஏன் புகழ்பெற்ற...... சமுகத்தவர்கள் எனும் கட்டுரைகள் எழுதுவதற்கு கடிவாளம் போட வேண்டும். krishna1952 பேச்சு

உண்மை, கட்டுரை இருப்பது தகுந்ததே.--Kanags \உரையாடுக 10:37, 2 செப்டம்பர் 2013 (UTC)
ஆங்கில விக்கிபீடியாவில் குறிப்பிட்ட நபர்களுக்கென தனிக்கட்டுரைகள் உள்ளன. எனவே அதற்கான பட்டியலும் உள்ளன. எ.கா: List of Tamil people. குறிப்பிட்ட நபரை அறிய தனிக்கட்டுரை உதவும். இங்குள்ள நபர் யார் என்பதற்கு ஆதாரம் என்ன? மேலும், ஆங்கில விக்கிபீடியாவில் இன ரீதியான பட்டியலே உள்ளதாக அறிகிறேன். --Anton (பேச்சு) 10:47, 2 செப்டம்பர் 2013 (UTC)
en:Category:Lists of Indian people by community பகுப்பைப் பாருங்கள். நீங்கள் கூறுவது போல பட்டியல்களில் உள்ள நபர்கள் அனைவருக்கும் தனித்தனிக் கட்டுரைகள் உள்ளன. இந்தக் கட்டுப்பாட்டை தமிழ் விக்கியிலும் கடைப்பிடிக்கலாம். அல்லது குறைந்தது மேற்கோள்கள் தருமாறு கோரலாம்.--Kanags \உரையாடுக 11:14, 2 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--Anton (பேச்சு) 11:20, 2 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் ஆண்டன், சௌராட்டிர சமுகம், தமிழ்நாட்டில் வெறும் 7 இலட்சம் மக்கள் தொகை கொண்ட மொழிவாரி சிறுபாணமை சமுகம். இச்சமுகத்தில் புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள் கடந்த ஆறு மாதங்களாகத்தான் தமிழ் விக்கிபீடியாவில் வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் நீங்கள் குறிப்பட்டது போல், அனைத்து புகழ்பெற்ற சௌராட்டிர சமுகத்தவர்கள் பற்றி நிறைய தனிநபர் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் இடம் பெறும். அதுவரை, இக்கட்டுரையை நீக்கி விடாதீர்கள்.

krishna1952 (பேச்சு) 19:26, 4 செப்டம்பர் 2013 (UTC)

உண்மையே! சிறுபான்மையின சமூகத்தைப் பற்றி குறிப்பிடுவது பொருத்தமே! தனிக் கட்டுரைகள் வளர்ந்தபின்னர் இதை நீக்குவது குறித்து உரையாடலாம். 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:15, 4 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் கிருஸ்ணா, தமிழ்க்குரிசில். நீக்கலுக்குப் பதிலாக தரமுயர்த்தல் வார்ப்புரு இடுகிறேன். இக்கட்டுரையினை நீக்க வேண்டும் என்பதற்கு தனிப்பட்ட ஆர்வம் எதுவுமில்லை. வீக்கி மூலமே சௌராட்டிர சமூகத்தவர்கள் பற்றி அறிந்தேன். இக்கட்டுரையினை மாதிரியாக வைத்து சாதி, வகுப்புக் கட்டுரைகளே தமிழ் விக்கிப்பீடியாவாகக் கூடாது என்பதில் முன்னெச்சரிக்கையாக இருக்கிறேன். கால ஓட்டத்திற்கேற்ப த.வி.யும் மாறும்போது இக்கட்டுரை நீங்கப்படலாம் அல்லது விடப்படலாம். --Anton (பேச்சு) 14:49, 4 செப்டம்பர் 2013 (UTC)

குறிப்பிடத்தக்கமை தொகு

தனிக்கட்டுரைகள் இல்லாத நபர்களின் பெயர்களை இணைக்கும் போது மேற்கோள்கள் அவசியம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பெயர்களை நீக்க பரிந்துரைக்கிறேன். -- Mdmahir (பேச்சு) 13:24, 26 செப்டம்பர் 2015 (UTC)

  விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 15:37, 26 செப்டம்பர் 2015 (UTC)
Return to "சௌராட்டிர சமூகத்தவர் பட்டியல்" page.