பேச்சு:சௌராட்டிர நாடு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Yokishivam
பயனர் கிருட்டினமூர்த்தியால் பலமாதங்களிற்கு முன்னர் உருவாக்கப்பட்ட கட்டுரையை ஆகத்து 6ம் தேதி வலைப்பதிவில் பிரதியிட்டுப் போட்டிருந்தார்கள் http://www.shivajothidanilayam.com/blog/?p=4614, தற்போது அந்த உள்ளடக்கம் இந்த விக்கிக்கட்டுரையில் இருந்து நீக்கப்பட்டிருந்தது, அதை நான் தற்போது மீளமைத்திருக்கிறேன் காப்புரிமை மீறல் குறித்து கட்டுரை உள்ளடக்கங்களை நீக்குவோர் தீர விசாரித்துவிட்டு நீக்கினால் நன்று--சங்கீர்த்தன் (பேச்சு) 16:57, 2 செப்டம்பர் 2013 (UTC)
- முதலாவது, கலைக்களஞ்சிய நடையில் இல்லை என்பது இக்கட்டுரையின் முதலாவது சிக்கல். இதற்காக முன்னரே வார்ப்புரு இட்டிருந்தேன். அதனால், கலைக்களஞ்சிய நடையில் எழுதுவதற்காக உள்ளடக்கம் நீக்கப்பட்டு முதலிருந்து எழுதப்படலாம். இரண்டாவது, குறித்த வலைப்பக்கம் 2012இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேடுபொறியில் முன்னிலைப்படுத்த பக்கத் திகதியை நடப்பு ஆண்டுக்கேற்ப மாற்றுவதுண்டு. எனவே, குறித்த பக்கம் உருவாக்கப்பட்ட திகதி இதுவென்று கூறமுடியாது (பக்கத்திற்கான நிருவாக அணுக்கம் பெற்றால் தவிர). மூன்றாவது, குறித்த பயனரின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். --Anton (பேச்சு) 18:31, 2 செப்டம்பர் 2013 (UTC)
- குசராத்து என்று எழுதுவது தமிழ் விக்கியில் மட்டும் தான் என்பது யாவரும் அறிந்த உண்மை
- கலைக்களஞ்சிய நடையில் இல்லை என்றால் அதை அப்படியே நீக்கக்காது அதை முன்னேற்றத் தானே நடவடிக்கை எடுக்க வேண்டும் அது தானே விக்கி நடைமுறை?, தேவையெனில் உரைதிருத்துமாறு அப்பயனரை வேண்டியிருக்கலாமே?
- என்னைப் பொறுத்த வரையில் இக்கட்டுரை ஓரளவு கலைக்களஞ்சிய நடையில் தான் உள்ளது,
- பதிப்புரிமை மீறல் குறித்து சந்தேகம் மட்டும் தான் நிலவுகிறது எனக்கிறீர்கள் அப்படியென்றால் உறுதிப்படுத்தப்படவில்லை ..அப்படி என்றால் எப்படி ஒரு பயனரின் உழைப்பை முழுமையாக கட்டுரையில் இருந்து நீக்குவது எப்படித்தகும்?
- http://www.shivajothidanilayam.com/blog/?p=4614 என்ற தளம் ஓர் விக்கிப்பீடியாவின் mirror போல் உள்ளது பல விக்கிக்கட்டுரைகளிற்கு அங்கு உள்ளிணைப்பு காணப்படுகிறது.
- ""1 செப்டம்பர் 2013"" இல் விக்கியாக்கத்திற்கான வார்ப்புருவை கட்டுரையில் இணைத்திருக்கிறீர்கள் ""2 செப்டம்பர் 2013"" இல் உள்ளடக்கத்தை முழுமையாக கட்டுரையில் இருந்து நீக்கியிருக்கிறீர்கள்...அப்படியென்றால் விக்கியாக்கம் செய்வதற்கான காலக்கெடு ஒரு நாளா?--சங்கீர்த்தன் (பேச்சு) 19:16, 2 செப்டம்பர் 2013 (UTC)
- கட்டுரையில் குறிப்பிட்டுள்ள படம் குசராத்து மாநிலமாகும். பண்டைய இந்தியாவின் 56 தேசங்களில் இந்த குசராத்து கூர்சரதேசமாகும், பயனர் இதனை சௌராட்டிரதேசம் என குறிப்பிட்டுள்ளார். சௌராட்டிரதேசம் என்பது பண்டைய இந்தியாவின் 56 தேசங்களில் கொங்கணதேசமாகும். இதன் எல்லை ஏனையவிபரங்கள் புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் என்னும் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. தேசத்திற்கான படமும் கட்டுரையில் உள்ளது. எனவே கட்டுரையின் முதற்பத்தியில் தெறிவித்துள்ள சௌராட்டிரதேசம் என்பது மாற்றப்படவேண்டும். சௌராட்டிரதேசம் என்பது தற்போதைய மும்பை அதைச் சுற்றிய பகுதிகள் என்பது எனது பணிவான கருத்து தயவு கூர்ந்து கலந்துரையாடவும்--Yokishivam (பேச்சு) 10:09, 19 திசம்பர் 2013 (UTC)
- சௌராட்டிரதேசம் என்பது வரலாற்றுப் புதினம் கடல்புறா வில் சாண்டில்யன் மிக விரிவாகவே கூறியுள்ளார்.--Yokishivam (பேச்சு) 11:24, 19 திசம்பர் 2013 (UTC)