பேச்சு:தங்கம்மா அப்பாக்குட்டி

Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி in topic Untitled
தங்கம்மா அப்பாக்குட்டி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தங்கம்மா அப்பாக்குட்டி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Untitled

தொகு

இவர் யாழ். பல்கலைக்கழகத்தால் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதாக ஞாபகம். யாராவது உறுதிப்படுத்தினால் கட்டுரையில் தகவலைச் சேர்க்கலாம். --கோபி 11:37, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஆம் கோபி அவ்வாறு தான் எனக்கும் எங்கேயோ பத்திரிகையில் படித்த ஞாபகம். நிச்சயமாகச் சரியாகத்தான் இருக்கும்.--Umapathy (உமாபதி) 12:54, 14 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இந்த அம்மையாரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாதெனினும், கட்டுரையின் நடை சற்றே புகழுரை போலத் தோற்றமளிக்கிறது. நடுநிலை பேணும்பொருட்டும் கலைக்களஞ்சிய நடைக்காகவும் எவரேனும் உரைதிருத்தம் செய்தால் நலம். நான் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 03:47, 16 ஜூன் 2008 (UTC)

மாற்றங்களுக்கு நன்றி சுந்தர். ஒரேயெருமுறை சிறுவயதில் தெல்லிபழை துர்க்கையம்மன் கோயிலில் இவரது பிரசங்கத்தைக் கேட்டதாக ஞாபகம். :)--உமாபதி \பேச்சு 07:34, 16 ஜூன் 2008 (UTC)


இவரின் சேவையைப் பாராட்டிய யாழ் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் (காலநிதி) பட்டம் கொடுத்து மதிப்பளித்தது. அமெரிக்கா ஹாவாய் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆச்சிரமம் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி விருதை அம்மையாருக்கு வழங்கியது. அகில இலங்கை இந்து மாமன்றம் 2005 ஜூலை மாதத்தில் யாழ் மண்ணில் பொன் விழாவையொட்டி இந்து மாநாடு நடத்தியபோது இவருக்குத் தெய்வத் திருமகள் என்ற பட்டம் வழங்கி மதிப்பளித்தது.
மணிமேகலைப் பிரசுரத்தின் பதிப்பில், பெண்மைக்கு இணையுண்டோ? என்ற நூலை 2003இல் வெளியிட்டார்.

இவருக்குக் கிடைக்கப்பெற்ற கெளரவ விருதுகளாவன:
'செஞ்சொற் செம்மணி' - மதுரை ஆதீனம் (1966)
'சிவத்தமிழ் செல்வி' - காரைநகர் மணிவாசகர் சபை(1970)
'சித்தாந்த ஞான கரம்' - காஞ்சி மெய்கண்டான் ஆதீனம் (1971)
'சைவ தரிசினி' - தமிழ்நாடு இராசேசுவரி பீடாதிபதி (1972)
'திருவாசகக் கொண்டல்' - சிலாங்கூர் இலங்கைச் சைவச் சங்கம் (1972)
'திருமுறைச் செல்வி' - வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானம் (1973)
'சிவமயச் செல்வி' - ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் (1974)
'சிவஞான வித்தகர்' - அகில இலங்கை இந்து மாமன்றம் (1974)
'துர்க்கா துரந்தரி - துர்க்காதேவி தேவஸ்தானம் (1974)
'செஞ்சொற்கொண்டல்'- மாதகல் நூணசை முருகமூர்த்தி தேவஸ்தானம் (1978)
'திருமொழி அரசி' - இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் தேவஸ்தானம் (1983)

இவரது இவ்விருதுகளிற் சிவத்தமிழ்ச் செல்வி, துர்க்கா துரந்தரி என்பவை இயற்பெயர் போன்று நிலைத்து, வாழ்வு பெற்றன.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஒரு சொற்பொழிவாளராக அவர் கண்ட மேடைகள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவை. இச் சிவத்தமிழ்ச்செல்வியை அறியாத தமிழுலகு இல்லையென்றே கூறலாம். தமிழ் என்றால் அங்கே இவருக்கும் இடமுண்டு.

தெல்லிப்பளை ஜூனியன் காலேஜ் பழைய மாணவி என்ற வகையிலும், அவரிடம் சிறிதுகாலம் தமிழ் கற்றவள் என்ற வகையிலும் பெருமையடைகிறேன். -- குயினி 23:57, 30 மார்ச் 2009 (UTC)

Return to "தங்கம்மா அப்பாக்குட்டி" page.