பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தேர்தல் முடிவுகளைத் தரும் அதிகாரபூர்வ இணையதளம் (தேர்தல் ஆணையம்??) உள்ளதா? திமுக எடுத்த தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 133 ஆ அல்லது 128 ஆ?--Kanags \உரையாடுக 09:22, 13 மே 2021 (UTC)
- @Kanags: ஐயா அவர்களுக்கு வணக்கம், திமுக கட்சி சேர்த்தவர்கள் 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுக கூட்டணி கட்சிகள் சேர்த்த உறுப்பினர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மொத்தம் 8 பேர் உள்ளனர் இவர்களும் திமுக உறுப்பினர் என்று தான் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
8 பேர் பின்வருமாறு:
மதிமுக - 4 பேர்
- சாத்தூர் - ஏஆர்ஆர் ரகுராமன்
- மதுரை தெற்கு - எம்.பூமிநாதன்
- வாசுதேவநல்லூர் - டி.சதன் திருமலைக்குமார்
- அரியலூர் - கே.சின்னப்பா
மனிதநேய மக்கள் கட்சி - 2 பேர்
- பாபநாசம் - ஜவாஹிருல்லா
- மணப்பாறை - ப. அப்துல் சமது
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1 பேர்
- திருச்செங்கோடு - ஈ. ஆர். ஈஸ்வரன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி - 1 பேர்
- பண்ருட்டி - வேல்முருகன்
133 திமுக வெற்றி ஆதாரம் காண்க.
நன்றி --தாமோதரன் (பேச்சு) 09:54, 13 மே 2021 (UTC) தேர்தல் முடிவுகளைத் தரும் அதிகாரபூர்வ இணையதளம் (தேர்தல் ஆணையம்??) உள்ளதா? திமுக எடுத்த தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 133 ஆ அல்லது 128 ஆ?--Kanags \உரையாடுக 09:22, 13 மே 2021 (UTC)
@Kanags: 125 தொகுதிகளில் திமுகவின் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர், மீதி உள்ள 8 வேட்பாளர்கள் பிற கட்சியை சேர்ந்தவர்கள், ஆனால் அந்த 8 வேட்பாளர்களும் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர், அதனால் அவர்களையும் திமுகவினர் உடன் சேர்த்து விட்டனர். தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளம் காண்க. உ+தா: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு வேட்பாளர் ஈ. ஆர். ஈஸ்வரன் (கொமதேக) மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வேட்பாளர் தி. வேல்முருகன் (தவாக), இவர்களெல்லாம் திமுகவுடன் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 09:58, 13 மே 2021 (UTC)
- நன்றி தாமோதரன், கௌதம். இந்த 8 பேரில் எவருக்கேனும் அல்லது கூட்டணியில் வெற்றி பெற்ற எவருக்கேனும் அமைச்சர் பதவியோ அல்லது வேறு பதவிகளோ கொடுக்கப்பட்டுள்ளதா?--Kanags \உரையாடுக 10:18, 13 மே 2021 (UTC)
- @Kanags: வேறு பதவிகள் கொடுக்கப்படவில்லை ஐயா
நன்றி --தாமோதரன் (பேச்சு) 10:21, 13 மே 2021 (UTC)
- @Kanags: ஐயா, அதிமுக வெற்றி பெற்ற 66 தொகுதிகளில் ஒரு தொகுதியை கூட்டணி கட்சி அதிமுக சின்னத்தில் வெற்றிபெற்றுள்ளது
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி - கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதியில் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளார் காண்க. அதிமுக 65 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது ஐயா நன்றி --தாமோதரன் (பேச்சு) 12:33, 13 மே 2021 (UTC)
பட்டையில் காட்டு
தொகுதொகுதி வாரியாக முடிவுகள் என்ற பட்டையிலும், கட்சிகள் பெற்ற வாக்குகள் என்பதற்கு கீழுள்ள தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் பட்டையிலும் புகுபதியாவிடில் காட்டு தெரிகிறது, புகுபதிந்தால் தெரிவதில்லை. ஆம் புகுபதிந்தால் தெரிவதில்லை. வார்ப்புருவை பார்க்க காட்டை அழுத்த வேண்டும்--குறும்பன் (பேச்சு) 01:50, 17 மே 2021 (UTC)
- @Kurumban: புகுபதியும் போது எனக்குத் தெரிகிறது. காரணம் விளங்கவில்லை. மற்றவர்களுக்கு எவ்வாறு தெரிகிறது எனக் கேட்க வேண்டும்.@Gowtham Sampath and Neechalkaran:--Kanags \உரையாடுக 07:46, 17 மே 2021 (UTC)
- @Kurumban: எனக்கும் இச்சிக்கல் எழவில்லை. குரோம் மற்றும் ஐஇ இரண்டிலும் பார்த்தேன். உங்கள் உலாவின் அகலத்தைச் சரிபார்க்கலாம். ஒரு வேளை புகுபதிந்தால் திரையின் அகலம் அதிகரித்து, திரைக்கு வலது புறத்தில் மறைக்கப்பட்டிருக்கலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 08:44, 17 மே 2021 (UTC)
- @Kurumban and Kanags: கணினியில் எனக்கு இச்சிக்கல் எழவில்லை. ஆனால் கைப்பேசியில் பார்க்கும் போது காட்டு என்பது தெரியவில்லை. இதை சரிசெய்ய வேண்டும்.-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 11:45, 17 மே 2021 (UTC)
- @Gowtham Sampath: எனக்குக் கைபேசியிலும் (Android) வேலை செய்கிறது.--Kanags \உரையாடுக 21:19, 17 மே 2021 (UTC)
- @Kanags: கைபேசியில் சாதாரண முறையில் (கைபேசிப் பார்வை) பார்த்தால் தெரியவில்லை. நீங்கள் கணிணி பதிப்பு மூலம் பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன்.-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 04:11, 18 மே 2021 (UTC)
- @Gowtham Sampath and Neechalkaran: கைபேசியில் (app இல்லாமல்) தெரியவில்லை. மறைப்பதற்கு வேறு நிரல்கள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அல்லது மறைப்பை எடுத்து விட வேண்டும்.--Kanags \உரையாடுக 07:46, 18 மே 2021 (UTC)