பேச்சு:தமிழ் ஒலிப்புமுறை
இக்கட்டுரைக்கு மிகப்பொருத்தமான தலைப்பினைப் பரிந்துரைக்கவும் --மு.மயூரன் 20:35, 23 ஜூலை 2007 (UTC)
மயூரன், தமிழ் எழுத்தொலிப்பு, தமிழ்ப் பலுக்கல், தமிழ்ச் சொல்லொலிப்பு என்னும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை இடலாம். தமிழ் உச்சரிப்பு என்பதற்கும் வழிமாற்று தரலாம். எழுத்தொலிப்புகளில், வல்லின எழுத்துக்களில்தான் 2-3 ஒலிப்பு வேறுபாடுகள் உள்ளன. குற்றியலுகரம், குற்றியலிகரம் பற்றியும் கூறலாம். வேண்டும், வேண்டாம் என்பதில் பேச்சு வழக்கில் வேண்டாம் என்னும் பொழுது மட்டும் வே என்னும் எழுத்தொலி சற்று வேறுபடும். இந்த வே என்னும் உயிர்மெய் எழுத்தில் உள்ள ஏகாரம் ஆங்கிலத்தில் உள்ள apple என்னும் ஒலியில் உள்ள முதல் ஒலிபோல சற்று ஒலிக்கும் (பேச்சு வழக்கில் வரும் "வேண்டாம்" என்னும் சொல்லில் மட்டும் தான் இத்திரிபு. முறைப்படி ஒலிக்கும் பொழுது வேண்டாம்-வேண்டும் ஆகிய இரு சொற்களிலும் வரும் வே சற்றேறக் குறைய ஒரே மாதிரிதான் ஒலிக்கும்). --செல்வா 00:32, 24 ஜூலை 2007 (UTC)
- எழுத்து, சொல் என்ற அடிப்படையில் மட்டுமின்றி ஒலிப்பு முறையைப் பற்றி கூறுவதால் தமிழ் ஒலிப்புமுறை, தமிழ்ப் பலுக்கல், அல்லது தமிழ் மொழிதல் (சரியா?) எனப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். -- Sundar \பேச்சு 07:29, 24 ஜூலை 2007 (UTC)
- தமிழ் ஒலிப்புமுறை சரியாக இருக்கும். தமிழ்ப் பலுக்கல் முறையும் சரியாக இருக்கும். --செல்வா 12:58, 24 ஜூலை 2007 (UTC)
- 'தமிழ்ச்சொல்லொலி' --சரியாக இருக்குமா?--Profvk 14:22, 24 ஜூலை 2007 (UTC)
- தமிழ் ஒலிப்புமுறை - இதை ஒரு விரிவான கட்டுரையாக, தெளிவான கட்டுரையாக ஆக்க வேண்டும். நன்கு தமிழ் அறிந்தோர் இதை முன்வந்து ஆக்கி தரவேண்டும். தமிழ் உச்சரிப்பில் இருக்க வேண்டிய நேர்த்தி, பிற மொழி ஆள் பெயர்களை, இடப்பெயர்களை எழுதுவதில் உச்சரிப்பதில் இருக்கும் பிரச்சினைகள் இங்கு விளக்கப்பட்டால் நன்று. மேலும், வட்டார ரீதியான ஒலிப்பு முறைகளைப் பற்றியும் குறிப்பிடுதல் வேண்டும். இதற்கு கட்டுரைக்கான நிறைய ஆய்வு தேவைப்படும். --Natkeeran 01:06, 25 ஜூலை 2007 (UTC)
- தமிழ் ஒலிப்புமுறை என்பது சரியாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து. இத்தலைப்பின் கீழ் பல விடயங்களை விரிவாக எழுதலாம். செல்வா குறிப்பிட்டதுபோல் ஒரு எழுத்தே பல விதமான ஒலிப்புக்களைக் கொண்டிருக்கும் தன்மையும் உள்ளது. இதுவும்கூட இடத்துக்கிடமும், காலத்துக்குக் காலமும் வேறுபடுவதுண்டு. இத் தலைப்பில் அடங்கக்கூடிய பல விடயங்களைப் பற்றி இங்கே பல கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளன. Mayooranathan 03:16, 25 ஜூலை 2007 (UTC)
- தமிழ் ஒலியியல் (Tamil phonology) என்பதும் பொருத்தமானது. --Anton (பேச்சு) 15:18, 15 சூலை 2012 (UTC)
மயூரன் இட்ட தகவல்கள்
தொகுதமிழ் மொழி பேசப்படும்போது ஒர் எழுத்தே குறித்த இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு ஒலிப்பு முறைகளைக் காண்பிக்கும்.
தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு
தொகுஉயிரெழுத்துகள்
தொகுஎழுத்து | உச்சரிப்பு வேறுபாட்டைக் காட்டும் சொற்கள் | உச்சரிப்பு (ஒலி) |
---|---|---|
அ | அறிவு
அரிசி |
|
ஆ | ஆமை | |
இ | இலை | |
ஈ | ஈனம் | |
உ | உறவு | |
ஊ | ஊர் | |
எ | எச்சம்
எறும்பு |
|
ஏ | ஏணி
ஏன் |
--Natkeeran 16:30, 28 ஜூலை 2007 (UTC)
உச்சரிப்புக் குறிப்புகள்
தொகுல, ள, ழ
தொகுல ள ஆகியவற்றை உச்சரிக்கும்போது நாக்கின் விளிம்பு பயன்படுகிறது என்பது ஒற்றுமை. ல சொல்லும்போது நாக்கு வளையாமல் நேராக அண்ணத்தை நோக்கி இருப்பதும், ள சொல்லும்போது நாக்கு சற்றுப் பின்வளைந்து அண்ணத்தை நோக்கி இருப்பதும் ஒரு வேற்றுமை. ல சொல்லும்போது நாக்கு அண்ணத்தை ஒற்றுவதும், ள சொல்லும்போது வருடுவதும் மற்றொரு வேற்றுமை. இங்கு ஒற்றுவது என்பது நாக்கை அண்ணத்தில் வைத்து சிதைவுஎடுப்பதையும், வருடுதல் என்பது நாக்கை அண்ணத்தில் முன்னோக்கிச் சருக்குவதைக் குறிக்கிறது.
ழ சொல்வதற்காக, மேலும் நாக்கு நுனியைப் பின்னோக்கி வளைத்து அண்ணத்தை வருட வேண்டும்
ட, ர, ற
தொகுஇந்தக் குழப்பம் வருவதன் முக்கியக் காரணம் ற என்ற எழுத்தைத் தவறாக உச்சரிப்பதுதான். பலர் ற-வை ட்ர என்று உச்சரிப்பதுதான் இந்த மூன்று எழுத்துக்களுக்கும் ஒற்றுமை இருப்பதுபோன்ற மாயையை உண்டாக்கியிருக்கிறது. ற-வின் இணை எழுத்து ன என்பதைப் புரிந்துகொண்டால் குழப்பம் நீங்கும். ற என்பது வல்லினம். இதற்கு நிகரான மெல்லினம் ன. இதனால்தான் மன்றம், தென்றல், குன்று போன்ற பல சொற்களில் இவை சேர்ந்து வருகின்றன. ற, ன ஆகிய இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கும்போதும் வாயும் நாக்கும் ஒரே அமைவடிவத்தில் இருக்க வேண்டும். ன என்று சொல்லும்போது நுனிநாக்கு அண்ணத்தைத் தொடுகிறது. அதே இடத்தில் நாக்கை வைத்துற் ற என்ற எழுத்தைச் சொல்லவேண்டும். ர-வை அழுத்திச் சொல்வதுதான் ற என்று இக்காலத்தில் பெரும்பான்மையோர் தவறாக எண்ணுகின்றனர். ர சொல்லும்போது நுனிநாக்கால் அண்ணத்தை வருட வேண்டும். ற சொல்லும்போது நுனிநாக்கால் அண்ணத்தை ஒற்ற வேண்டும். மேலும் விளக்கத்துக்குக் காண்க: https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5bWF6TlY0UmQta0U
ன, ண, ந
தொகுன, ண, ந ஆகியவை முறையே ற, ட, த ஆகிய வல்லெழுத்துக்களுக்கு நிகரான மெல்லெழுத்துகள். ன சொல்லும்போம் இருக்கும் அமைவடிவத்திலே ற சொல்லும்போது வாய் இருக்கவேண்டும். இவ்வாறே மற்றவற்றுக்கும். மேலும் விளக்கங்களுக்குக் காண்க: https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5bWF6TlY0UmQta0U
எழுத்தும் ஒலியமும்
தொகு"ஒவ்வொரு எழுத்தும் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஒலியன்களை குறிக்கும் குறியீடு என்று வரைவிலக்கணம் தரலாம். இதில் பலவொலி எழுத்துகள் ஒன்றிற்கு மேற்பட்ட ஒலியன்களை குழுவாகவும், ஓரொலி எழுத்துகள் ஒலியன்களை தனியாகவும் குறிக்கும் குறிய்யீடுகள் ஆகின்றன. தமிழில் பலவொலி எழுத்துகள் நெருங்கிய தொடர்புகொண்ட ஒலியம்களை கூட்டாக குறிக்கும் எழுத்துகள் ஆகின்றன. ஆனால் சில ஓரொலி எழுத்துகள் குழுவாக குறிக்ககூடிய பல ஒலியன்களை தனித்தனியான ஓரொலி எழுத்துகளால் குறிப்பதை அவதானிக்கலாம். ஹிந்தி போன்ற பல இந்திய மொழிகளில் ஒவ்வொரு எழுத்தும் தனி தனியான ஒலியன்களை குறிக்கும் குறியீடுகள் என்று கருதப்படுகின்றது. ஒலியம் என்பது தனி தனியான ஒலியன்களை குறிக்கும் விபரணியாகும். ஒலியன் என்பது தனி தனியான பேச்சொலி கூறினை குறிக்கும் விபரணியாகும். ஹிந்தி போன்ற பல இந்திய மொழிகளில் ஒவ்வொரு எழுத்தும் தனி தனியான ஓரொலியன்களை குறிக்கும் குறியீடுகள் என்று கருதப்படுகின்றது."
Alphabet and Phoneme It can be defined that each Alphabet represents one or more phonemes. In this multiphonic alphabet represents a group of phonemes while a singlephonic alphabet provides one to one representation between phonemes and alphabet. Tamil writing system consists of both multiphonic and single phonic alphabet. For a number of phonemes closely related phonemes are grouped together and represented by one alphabet, while other sets of phonemes are represented in a one to one fashion. Examples: The multiphonic k (க்) represents k,h,g. Single phonic l, Lz, Lx represents l (ல்), Lz (ள்), Lx (ழ்). At some instances a mixture of multiphonic such as th0, th1, th2 (த்) and single phonic nth (ந்) can also be observed.
ஆசிரியர்: சின்னத்துரை ஸ்றீவாஸ் 12 மாசி 2005 (தி.ஆ 2036
இட்டது: --Natkeeran 18:05, 29 ஜூலை 2007 (UTC)