பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் ஐந்தாவதாக எப்படி வரும்? 40வது இடத்தில் இந்தியும், 58வது இடத்தில் தெலுங்கும் உள்ளன. அப்படியெனில் தமிழ் இந்திய மொழிகளில் மூன்றாவதாக இருக்க வேண்டுமே! விளக்கவும். http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias சென்று பார்த்து விளக்கம் தரவும்.−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- அது 2010 சனவரியில் இருந்த நிலை. இப்போது 3வதில் நிற்கிறோம்.--Kanags \உரையாடுக 10:05, 8 சூலை 2012 (UTC)
இற்றைப்படு்த்தியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 14:27, 8 சூலை 2012 (UTC)
- ஆகத்துத் திங்களுக்கான படிமம் இற்றைப்படுத்தப்பட்டது. --மதனாகரன் (பேச்சு) 12:32, 3 ஆகத்து 2012 (UTC)
- இது பயனற்ற ஓர் ஒப்பீடு. இதைப் பாருங்கள். தெலுங்கு விக்கியில் "45 ஆயிரம்" கட்டுரைகள் இருந்த பொழுது (மே 2010 இல்) 250 எழுத்துகளுக்கும் கூடுதலாக இருந்த கட்டுரைகள் 17 ஆயிரம் தான். 250 எழுத்துகள் என்பதே எவ்வளவு குறைந்த ஓர் அளவுகோல்! 250 எழுத்துகளில் ஒரு கட்டுரை என்பதே பெரிதும் பொருளற்றது. குறைந்தது ஒரு 3-4 வரிகளாவது இருக்க வேண்டும். ஆனால் ஊடகங்கள் இந்த பயனற்ற "official" எண்ணிக்கையைத்தான் (250 எழுத்துகள் உள்ள கட்டுரைகள் அல்ல, "official" என்னும் "ஏற்பு பெற்ற" எண்ணிக்கையை) எடுத்துக்கூறும்! தமிழும் மலையாளமும் இன்னும் சில மொழிகளும் சீராக வளர்ந்து வந்திருக்கின்றன. தமிழ் இன்னும் 100 மடங்கு சிறப்பாக வளர இயலும் எனினும், வெறும் எண்ணிக்கையால் நாம் உந்தப்படாமல், பயன் நல்கும் விதமாக கட்டுரைகளை வளர்த்தெடுப்பதில் முனைப்பாக இருக்கலாம். குறுங்கட்டுரையாகவே இருந்தாலும், ஓரளவுக்கேனும் நல்ல பயனுடைய தகவல்கள் கொண்டுள்ளனவா என்று அறிந்து எழுதி பயன்வளர்ப்போம்.--செல்வா (பேச்சு) 13:41, 3 ஆகத்து 2012 (UTC)
- குறைந்தது 250 எழுத்துகள் கொண்ட கட்டுரைகள் என்று பார்த்தால், இந்திய மொழிகளுள் தமிழ் இரண்டாவதாக உள்ளது. வரலாற்று நோக்கில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும். என்னும் வரியைக் கட்டுரையில் சேர்த்திருக்கின்றேன். --செல்வா (பேச்சு) 13:51, 3 ஆகத்து 2012 (UTC)
- இது பயனற்ற ஓர் ஒப்பீடு. இதைப் பாருங்கள். தெலுங்கு விக்கியில் "45 ஆயிரம்" கட்டுரைகள் இருந்த பொழுது (மே 2010 இல்) 250 எழுத்துகளுக்கும் கூடுதலாக இருந்த கட்டுரைகள் 17 ஆயிரம் தான். 250 எழுத்துகள் என்பதே எவ்வளவு குறைந்த ஓர் அளவுகோல்! 250 எழுத்துகளில் ஒரு கட்டுரை என்பதே பெரிதும் பொருளற்றது. குறைந்தது ஒரு 3-4 வரிகளாவது இருக்க வேண்டும். ஆனால் ஊடகங்கள் இந்த பயனற்ற "official" எண்ணிக்கையைத்தான் (250 எழுத்துகள் உள்ள கட்டுரைகள் அல்ல, "official" என்னும் "ஏற்பு பெற்ற" எண்ணிக்கையை) எடுத்துக்கூறும்! தமிழும் மலையாளமும் இன்னும் சில மொழிகளும் சீராக வளர்ந்து வந்திருக்கின்றன. தமிழ் இன்னும் 100 மடங்கு சிறப்பாக வளர இயலும் எனினும், வெறும் எண்ணிக்கையால் நாம் உந்தப்படாமல், பயன் நல்கும் விதமாக கட்டுரைகளை வளர்த்தெடுப்பதில் முனைப்பாக இருக்கலாம். குறுங்கட்டுரையாகவே இருந்தாலும், ஓரளவுக்கேனும் நல்ல பயனுடைய தகவல்கள் கொண்டுள்ளனவா என்று அறிந்து எழுதி பயன்வளர்ப்போம்.--செல்வா (பேச்சு) 13:41, 3 ஆகத்து 2012 (UTC)
மதன், இங்கு வட்ட விளக்கப் படம் பொருந்தாது. ஒரே விக்கிக்குள் எந்தெந்த துறைகளில் கட்டுரைகள் உள்ளன என்பதற்கு இப்படிப் படம் போடலாம். ஆனால், வெவ்வேறு விக்கிகளில் உள்ள ஒட்டு மொத்த கட்டுரைகளின் எண்ணிக்கையை ஒப்பிட பட்டை விளக்கப்படம் உதவும். செல்வா சுட்டியுள்ள காரணங்களை முன்னிட்டு இங்கு அது கூட சரியான ஒரு புரிதலைத் தராது. http://shijualex.wordpress.com/2012/02/16/indic-language-wikipedias-statistical-report-2011/ என்பதனை வெளி இணைப்பாக தரலாம்--இரவி (பேச்சு) 02:35, 4 ஆகத்து 2012 (UTC)
- இங்கு கட்டுரைகளின் எண்ணிக்கை மட்டுமே ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் கூறியுள்ளவற்றுக்கு இன்னுமோர் ஒப்பீடு செய்யலாம். கட்டுரைகளின் எண்ணிக்கையையும் ஒப்பீடு செய்வதில் தவறில்லையே. --மதனாகரன் (பேச்சு) 02:51, 4 ஆகத்து 2012 (UTC)
மதன், ஒட்டு மொத்த இந்திய விக்கிகளின் கட்டுரை எண்ணிக்கையை 100%மாகக் கொண்டு pie படம் போடுவது பிழை. bar chart போடுவதே சரியான முறை. --இரவி (பேச்சு) 03:38, 4 ஆகத்து 2012 (UTC)
மகிழ்ச்சியான செய்தி, தமிழ் விக்கியின் ஆழம் 30 ஆகிவிட்டது. முன்பு இருமாதங்களாக 28,29 ஆக இருந்தது. இதன் மூலம், கட்டுரைகளை உருவாக்கியவுடன் விட்டுவிடாமல், தொடர்ந்து உரைதிருத்தி, மேம்படுத்தி வருகிறீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்கிறேன். வாழ்த்துகள் சகாக்களே!! :) கூடுதல் தகவல்: மொத்தப் பயனர்களுக்கும் தொடர்பங்களிப்பாளர்களுக்குமான விகிதத்திலும் முன்னேறி உள்ளோம். விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:00, 20 அக்டோபர் 2012 (UTC)
பட விளக்கத்தில் செய்யவேண்டிய மேம்பாடு
@AntanO: இந்தக் கட்டுரையில், தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை மற்ற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒப்பிட்டு bar chart ஒன்று இடப்பட்டுள்ளது. இதற்கான தரவுகளை மனித ஆற்றல் கொண்டு இற்றை செய்யும்படியாக தற்போது உள்ளது. தரவுகள் தானாக இற்றையாகும்படி செய்ய இயலுமா? நான் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:08, 5 மே 2024 (UTC)
- முயன்று பார்க்கிறேன். AntanO (பேச்சு) 04:11, 5 மே 2024 (UTC)
- ஆயிற்று --AntanO (பேச்சு) 17:10, 5 மே 2024 (UTC)
- @AntanO உங்களின் உதவிக்கு மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:06, 5 மே 2024 (UTC)