பேச்சு:திருக்கோயில் பத்மநாபசுவாமி கோயில்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic திருக்கோயில்
திருக்கோயில்
தொகுஇக்கட்டுரையில் உள்ள மேற்கோள்களில் திருக்கோயில் என்ற முன்னொட்டு வருகிறது. அதை நீக்காமல் சேத்திரம் என்பதற்கு பதிலாக கோயில் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:23, 27 நவம்பர் 2023 (UTC)
- @பயனர்:பா.ஜம்புலிங்கம், வணக்கம். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் - இது வேறு கோவிலா? தெளிவுபடுத்துங்கள். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 15:07, 27 நவம்பர் 2023 (UTC)
- @நந்தகுமார், வணக்கம். இக்கட்டுரையில் ....திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்குப் பிறகு இரண்டாவது புகழ்பெற்ற கோயிலாகக் கருதப்படுகிறது...என்ற குறிப்பு உள்ளது. இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் வள்ளிகோடு என்னுமிடத்தில் உள்ளது. ஆனால் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் திருவனந்தபுரத்தில் உள்ளது. ஆகவே, இவற்றை வைத்துப்பார்க்கும்போது இக்கோயில்கள் வெவ்வேறு கோயில்களாகும் எனக் கருதுகிறேன். இரண்டுக்கும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் உள்ளன. இக்கோயிலுக்கான ஆங்கிலக்கட்டுரையை தற்போது நான் மொழிபெயர்த்துள்ளேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 28 நவம்பர் 2023 (UTC)
- @பயனர்:பா.ஜம்புலிங்கம், வணக்கம். தங்கள் விளக்கத்திற்கு நன்றி. இக்கட்டுரைத் தலைப்பை தெளிவுபடுத்துவதற்காக "வள்ளிகோடு பத்மநாபசுவாமி கோயில்" என்று மாற்றலாமா?--நந்தகுமார் (பேச்சு) 11:02, 28 நவம்பர் 2023 (UTC)
- @நந்தகுமார், திருக்கோயில் அல்லது (த்ரிக்கோயிலைக் குறிக்கின்ற) திரிகோயில் என்ற முன்னொட்டு இருக்கவேண்டியது மிகவும் இன்றியமையாதது. த்ரிகோயில் என்பதை நான் பல முறை சிந்தித்து திருக்கோயில் என்று எழுதியுள்ளேன். அனைத்து இணைப்புகளிலும் த்ரிகோயில் முன்னொட்டு உள்ள நிலையில் "திருக்கோயில் பத்மநாபசுவாமி கோயில், வள்ளிக்கோடு", என்றோ "வள்ளிக்கோடு திருக்கோயில் பத்மநாபசுவாமி கோயில்" என்றோ அமையலாம். அல்லது உள்ளது உள்ளபடியாக "த்ரிக்கோயில் பத்மநாபசுவாமி கோயில், வள்ளிக்கோடு", என்றோ "வள்ளிக்கோடு த்ரிக்கோயில் பத்மநாபசுவாமி கோயில்" என்றோ அமையலாம்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:51, 28 நவம்பர் 2023 (UTC)
- @பயனர்:பா.ஜம்புலிங்கம், திருக்கோயில் பத்மநாபசுவாமி கோயில்என்று இருமுறை கோயில் என்று வருவதால் புதிய தலைப்பைக் கூறினேன். இப்போதைக்கு இந்த தலைப்பே இருக்கட்டும்.--நந்தகுமார் (பேச்சு) 17:50, 28 நவம்பர் 2023 (UTC)
- @நந்தகுமார், சரி, நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:42, 29 நவம்பர் 2023 (UTC)