பேச்சு:திருவள்ளுவர் சிலை
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 10, 2012 அன்று வெளியானது. |
காமத்துப்பால்
தொகுகாமத்துப்பால் என்பதே சரி; இன்பத்துப்பால் என்பது பிழை. வள்ளுவப்பெருந்தகை 'காமம்' / 'இன்பம்' என்ற இரண்டு சொற்களையும் கையாளுகின்றார். 'காமத்துப்பால்' என்பதுதான் அவரின் சொல்லாட்சி; 'இன்பத்துப்பால்' என்பது அன்று! ஏதோ புதிதாகச் சொல்லவேண்டும் அல்லது விளங்காது படிப்பவர்களுக்கு என இவர்களாகவே நினைத்துக்கொண்டு மனம்போன போக்கில் பலரும் பலவிதமாக எழுதுகின்றார்கள். ஆனால், நாம் வள்ளுவர் சொல்லாட்சியையே மேற்கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. 'காமம்' என்ற சொல் புரியாது என்றால் அதனைப்புரிய வைப்போம்; அடுத்து, அவர்கள் எப்பொழுதுதான் புரிந்துகொள்வது? இரண்டு, மூன்று முறைகள் படித்தால் புரிந்து வி்ட்டுப்போகின்றது. சொற்களைச் சரியாகக் கையாள்வது மிகமிக முக்கியம்.--Meykandan 03:10, 16 மே 2010 (UTC)
"அய்யன்" என்று திருவள்ளுவர் பெயர் முன் சேர்த்துள்ளது சரியா?--கார்த்திக் 15:55, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
- திருவள்ளுவர் சிலை என்றே வைக்கலாம். அய்யன் தேவையற்றது. --இராஜ்குமார் 16:45, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
- தமிழ்நாடு அரசு இந்தத் திருவள்ளுவர் சிலையை அய்யன் திருவள்ளுவர் சிலை என்றுதான் தனது பதிவேடுகள் அனைத்திலும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் தலைப்பை திருவள்ளுவர் சிலை என மாற்றம் செய்து கொள்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. மேலும் திருவள்ளுவர் சிலை என்ற தலைப்பில் இக்கட்டுரைச் செய்திகள் இருப்பதால் அந்தக் கட்டுரையுடன் இதை இணைப்பதிலும் எனக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. --தேனி.எம்.சுப்பிரமணி. 01:36, 4 ஆகஸ்ட் 2010 (UTC)