பேச்சு:துத்தநாக-கரிம மின்கலம்

நாகம் என்பது பாம்பையே குறிக்கிறது. நாகதுத்தம் என்பது தானே ஸிங்க்-ஐ குறிக்கும். இதைப் போன்றே மயில்துத்தம் என்றும் வேறு சில பெயர்களாலும் குறிப்பிடுகின்றனர். துத்தம் என்றால் நிறம் என்று பொருள் இருக்குமோ? நாக நிறத்தில் இருப்பதனால் நாகதுத்தம் என பெயர் பெற்றிருக்கலாம்! நாகதுத்த-கார்பன் என தலைப்பை மாற்றலாம். நாகதுத்த-கரிம மின்கலம் என்றும் சின்க்-கார்பன் மின்கலம் என்றும் வழிமாற்றுகளை உருவாக்கலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:56, 11 பெப்ரவரி 2014 (UTC)

வழிமாற்றுக்களை உருவாக்கலாம். ஆனால் துத்தநாக-கார்பன் மின்கலம் என்பது பெரிய தலைப்பாகி விடுமே. சிறிது சுருக்கமாக தலைப்பு இருந்தால் நன்றாக இருக்குமே. --G.Kiruthikan (பேச்சு) 09:31, 12 பெப்ரவரி 2014 (UTC)

இரண்டெழுத்துகள் தானே அதிகம்! தவிர, இது ஒன்றும் பெரிய தலைப்பு இல்லையே. புரியும்படியான, எளிய தலைப்புகள் இருப்பது நல்லது. எளிமை என்பது சுருக்கமான பெயர் அல்ல! (இந்த தலைப்பை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிரமப்பட்டேன்) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:44, 12 பெப்ரவரி 2014 (UTC)
துத்தநாக-கரிம மின்கலம் எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 09:59, 12 பெப்ரவரி 2014 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:07, 12 பெப்ரவரி 2014 (UTC)
👍 விருப்பம்----G.Kiruthikan (பேச்சு) 05:18, 14 பெப்ரவரி 2014 (UTC)
Return to "துத்தநாக-கரிம மின்கலம்" page.