பேச்சு:துவாரம் வேங்கடசுவாமி

@Nan: விக்கிப்பீடியாவின் எந்த விதியின் கீழ் இந்த தலைப்பு மாற்றம் செய்தீர்கள் எனத் தெரிவிக்கவும். தயவு செய்து விதி உள்ள பக்கத்தின் இணைப்பைத் தரவும். --UKSharma3 02:31, 12 மார்ச் 2017 (UTC)

@Uksharma3:, தயவு செய்து விக்கிப்பீடியாவின் எந்த விதியின் கீழ் இத்தகைய சாதி தலைப்புகள் இருக்கலாம் என்பதைத் தெரிவிக்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 03:15, 12 மார்ச் 2017 (UTC)

@Nan: இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகிவிட்டன. ஆங்கிலம், தெலுங்கு மொழிக் கட்டுரைகளில் உள்ளது போலவே தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்திய அரசினால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் அவரது பெயர் எழுதப்பட்டிருப்பது போலவே கட்டுரைத் தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அவரது பெயரே துவாரம் வேங்கடசுவாமி நாயுடு தான். பெயரை மாற்றுவது தற்போது உயிருடன் இல்லாத ஒருவருக்குச் செய்யும் அவமரியாதையாகவே நான் கருதுகிறேன்.

மற்றும் இசைத்தட்டுகள், குறுந்தகடுகள் எல்லாவற்றிலும் ஒரே பெயர் தான் உள்ளது. அப்படியிருக்க நாயுடு சாதிப்பெயர் என்று நீங்களே முடிவு செய்து, விக்கிப்பீடியாவின் கூட்டுப் பொறுப்பு என்ற வகையில் பேச்சுப் பக்கத்தில் யாருடனும் கலந்தாலோசியாமல் தன்னிச்சையாக தலைப்பை மாற்றியுள்ளீர்கள். நாயுடு சாதிப் பெயர் என்பதற்கு நடுநிலையான மேற்கோள் அல்லது உசாத்துணை தரவும். --UKSharma3 06:50, 12 மார்ச் 2017 (UTC)

@Uksharma3:, தாங்கள் அவசியம் எனக் கருதுகின்ற, தேவைப்படுகிற தலைப்புகளை மீளமைத்துவிடுங்கள். பார்க்க: தெலுங்கு நாயுடு, தமிழ்நாடு சாதிகள் பட்டியல். சாதிப் பெயர்கள் இருப்பது பிறரை புண்படுத்துவதாக, இழிவுபடுத்துவதாகக் கருதுவதால் மாற்றினேன்.--நந்தகுமார் (பேச்சு) 09:50, 12 மார்ச் 2017 (UTC)
நான் நிர்வாகி இல்லாத காரணத்தால் என்னால் மீளமைக்க முடியாது. நிர்வாக அணுக்கம் கொண்டவர் மீளமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி --UKSharma3 13:58, 12 மார்ச் 2017 (UTC)
  • ஆங்கிலத்திலோ, இந்தியிலோ, தெலுங்கிலோ ஒருமுறை பின்பற்றப்படுகின்றது என்பதால் தமிழிலும் அப்படித்தான் பின்பற்றவேண்டும் என்னும் விதி ஏதுமில்லை. வேங்கடசாமி அல்லது வேங்கடசுவாமி என்று இருப்பதில் எந்தக் குற்றமும் இல்லை. சாதிப்பெயர்கள் பல்வேறு சாய்வுகளைத் தருகின்றன, என்பதால், சாதிப்பெயர்கள் இல்லாமல் எழுதுதல் அண்மைக் காலங்களில் தமிழகத்திலே ஒரு நல்வழக்கமாக இருக்கின்றது. இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது, ஆனால் அதனால் இந்நல்வழக்கத்தைத் தொடரக்கூடாது என வாதிடுதல் சரியாக அமையாது. தலைப்பு துவாரம் வேங்கடசாமி என்று இருப்பதே சரியென்பது என் கருத்து. தமிழ் விக்கிப்பீடியாவிலும் இது நல்வழக்கமாக இருக்கும். --செல்வா (பேச்சு) 16:14, 12 மார்ச் 2017 (UTC)
எனக்குத் தெரிந்து இங்கு யாரும் சாதிப் பெயரை வலிந்து எழுதுவதில்லை. அவ்வாறு வலிந்து எழுதினால் அதனை திருத்த வேண்டும் என்பது என் நிலைப்பாடு. தேசிக விநாயகம் பிள்ளை எனும் தலைப்பை எப்படி எழுத வேண்டும் எனும் கேள்வி எனக்கு எழுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:59, 12 மார்ச் 2017 (UTC)
தேசிய விநாயகம். இதே போல வ.உ. சிதம்பரம், நாமக்கல் இராமலிங்கம். வ.உ. சிதம்பரனார், பாரதியார், இலக்குவனார் என எழுதுவது போல அர் அல்லது ஆர் என்னும் பின்னொட்டு சேர்த்து வேண்டுமானால் எழுதலாம். --செல்வா (பேச்சு) 00:52, 13 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:10, 13 மார்ச் 2017 (UTC)
கட்டுரையிலிருந்த சாதிப் பெயர்களை நீக்கியுள்ளேன்.--UKSharma3 01:37, 13 மார்ச் 2017 (UTC)
நன்றி.--செல்வா (பேச்சு) 02:08, 13 மார்ச் 2017 (UTC)
நான் எழுப்பிய கேள்வி வேறுவிதமாக புரிந்துகொள்ளப்பட்டு அல்லது கருதப்பட்டு, விவாதம் திசை திரும்பியுள்ளது. ஒரு உதாரணத்திற்கு, தேசிக விநாயகம் பிள்ளை என்பதில் பிள்ளை என்பதை நீக்கினால் தெளிவின்மை ஏற்படுமே என்பதுதான் எனது கேள்வி. மரியாதை சேர்க்கும்பொருட்டு சாதிப் பெயரை சேர்க்கவேண்டும் என்று இந்தப் பக்கத்தில் சர்மா அவர்களோ, நானோ எழுதவில்லை. அவர்கள் அக்காலத்தில் எப்படி குறிப்பிடப்பட்டார்களோ அப்படியே தலைப்பில் குறிப்பிடப்பட வேண்டும் என்பதாகவே நந்தகுமார் அவர்களின் பேச்சுப் பக்கத்திலும் எனது பதிவு இருந்தது. எனது கருத்தினை நந்தகுமார் ஏற்கனவே அறிவார் என்பதால் இந்தப் பேச்சுப் பக்கத்தில் மீண்டும் எழுதவில்லை. சமூக விழிப்புணர்வு ஒரு கலைக்களஞ்சியத்தில் தேவையற்ற வகையில் புகுத்தப்படுவதாக எனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:28, 13 மார்ச் 2017 (UTC)
ஒருவரின் பெயர் அனுமதிக்கப்பட்ட அரசு ஆவணங்களில் (approved government documents) எவ்வாறு எழுதப்பட்டுள்ளதோ அவ்வாறே எழுதப்பட வேண்டும் என்பதே என் தனிப்பட்ட கருத்து. உலகம் எங்கும் அந்த வழக்கமே பின்பற்றப்படுகிறது. ஆயினும் தமிழ் விக்கியின் இரண்டு முக்கிய நிர்வாகிகளின் கருத்திற்கேற்ப இந்தக் கட்டுரையிலும், நான் உருவாக்கிய ஏனைய கட்டுரைகளிலும் இடம் பெற்ற சாதிப் பெயர்களை கூடுமானவரை நீக்கியுள்ளேன். இனிமேல் இந்த விடயம் தொடர்பாக நான் உரையாட விரும்பவில்லை. --UKSharma3 03:20, 13 மார்ச் 2017 (UTC)
@செல்வா and Ravidreams: விக்கிப்பீடியா கட்டுரைகளில் சாதிப்பெயர் வைத்திருப்பதற்கு ஏதேனும் விதிவிலக்குகள் உண்டா? எவ்வாறான விதிவிலக்குகள். இல்லையேல் நூற்றுக்கு நூறு வீதம் கட்டுரைத்தலைப்புகளில் இருக்கக் கூடாதா? தெளிவு படுத்துக.--Kanags \உரையாடுக 06:57, 13 மார்ச் 2017 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் சாதிப் பெயர் ஏற்பு, விலக்கு குறித்து முறையான சமூக ஒப்புதல் பெற்ற கொள்கை ஏதும் இது வரை இல்லை. அவ்வாறான கொள்கை ஏதும் பிற மொழி விக்கிப்பீடியாக்களில் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால், சில தமிழ் விக்கிப்பீடியர்கள் தங்கள் தனிப்பட்ட கொள்கைக்கு ஏற்பவும் அண்மைய சமூக வழக்குக்கு ஏற்கவும் முற்கால ஆளுமைகளின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களைத் தவிர்த்து எழுதி வர முற்படுகின்றனர். இது தொடர்பாக இரு பார்வைகளை முன்வைக்கலாம்:
1) கலைக்களஞ்சிய ஆசிரியர்களாக நமது பணி வரலாற்றை மாற்றுவது அன்று. உள்ளது உள்ளபடியே பதிவதே. எனவே, அக்காலத்தில் ஒருவர் சாதிப் பெயருடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அதுவே பொது வழக்காகவும் இருந்தால் அப்படியே எழுதுவதே சரி. வ. உ. சிதம்பரம்பிள்ளை , உ. வே. சாமிநாதையர் ஆகிய கட்டுரைகள் சாதிப்பெயர்கள் (அல்லது அப்படி கருதப்படும் பட்டப்பெயர்கள்) உடன் விளங்குவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. எனவே, தமிழ் விக்கிப்பீடியாவில் வரலாற்றுக் காலச் சாதிப்பெயர்களுக்குத் தடை ஏதும் இல்லை என்பதற்கு இது ஒரு சான்று.
2) வரலாற்றுக் காலத்தில் இவ்வாறு சாதியோடு இணைந்த பெயர்கள் இருந்தன என்பது உண்மை தான் என்றாலும் கடந்த 100 ஆண்டு கால தமிழக வரலாறும், பண்பாட்டு மாற்றங்களும் இவ்வாறு சாதியோடு இணைத்துப் பெயர்களைக் குறிப்பிடுவதைப் பொது வழக்கில் இருந்து அற்றுப் போகவும் செய்திருக்கின்றன. தமிழ்நாடு அரசு பாடநூல்கள் கூட சாதிப் பெயர்களை விடுத்தே எழுதுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, தமிழ்நாட்டுப் பாடநூல்களில் உ. வே. சாமிநாதர் (பக்கம் 7) என்று முத்துராமலிங்கர் (பக்கம் 34) என்றே குறிப்பிடுகிறார்கள். எனவே, சாதிப் பெயர்களை விடுத்து எழுதுவது என்பது தமிழ் விக்கிப்பீடியர் கண்டு பிடித்த ஒன்றோ, புதிதாகப் புகுத்தும் சமூக சீர்திருத்தமோ அன்று. ஒரு கலைக்களஞ்சியத்துக்கு என்று ஒரு நடையை வரையறை செய்யும் போது இவ்வாறு சாதிப் பெயர்களை விடுத்து எழுதும் கூட்டு முடிவு எடுக்கும் உரிமையும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு உண்டு. குறிப்பாக, ஒருவரின் சாதிப் பெயரை விடுத்து எழுதுவது அவரை அடையாளம் அற்றவராகவும் அவமரியாதை செய்வதாகவும் ஆக்குகிறது என்பது முற்றிலும் ஏற்க முடியாத சாதியவாதம்.
தேவைப்பட்டால், இது தொடர்பாக முறையாக உரையாடி வாக்கிட்டு கொள்கைப் பக்கம் ஒன்றை உருவாக்கலாம். அது வரை இப்படி ஒவ்வொரு பக்கத்திலும் உரையாடுவதையும் இருக்கிற பெயர்களை நீக்குவதையும் தவிர்க்கலாம். அதே வேளை, சாதிப் பெயர்களை விடுத்து எழுதும் முடிவு அல்லது அது போன்ற தோற்றம், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு எதிரான வலுவான எதிர் பரப்புரையில் சிலர் ஈடுபடுவதற்கான இக்கட்டையும் சேர்த்தே கொண்டு வரும் என்பதையும் கவனிக்க வேண்டும். --இரவி (பேச்சு) 08:49, 13 மார்ச் 2017 (UTC)
நன்றி இரவி. மேலும் ஒரு கருத்து. பொதுவாகப் பெண்களுக்கு சாதிப் பெயர் சேர்ப்பதில்லை. ஆனால் சிரவந்தி நாயுடு, சரோஜினி நாயுடு, லீலா நாயுடு போன்ற பெயர்களில் உள்ள நாயுடு என்பது அப்பெண்களின் surnames. அவற்றை நாம் நீக்க முடியாது.--Kanags \உரையாடுக 09:18, 13 மார்ச் 2017 (UTC)
Return to "துவாரம் வேங்கடசுவாமி" page.