பேச்சு:தொழினுட்பம்
தொழில்நுட்பம் என்பதில் என்ன பிழை? அவ்வாறேயாயினும் தொழிற்நுட்பம் என்றல்லவா இருக்க வேண்டும் தொழினுட்பம் என்பது தவறான வழிமாற்று.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:13, 3 சூன் 2012 (UTC)
- இது தவறான வழிமாற்றுப் பக்கம். இதனை மீளமையுங்கள். --இராஜ்குமார் (பேச்சு) 05:21, 3 சூன் 2012 (UTC)
பார்வதிஸ்ரீ, தொழிற்நுட்பம் என்பதற்குரிய இலக்கண விதி என்ன? ல் + ந = ன என்று தமிழ் இணையக் கல்விக்கழகம் (முன்னைய தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) கூறுகிறதே. நீங்கள் எப்படி அதனைப் பிழை என்கிறீர்கள்?--பாஹிம் (பேச்சு) 05:45, 3 சூன் 2012 (UTC)
- பாஹிம். நீங்கள் சொல்வது சரி தான். வருமொழி முதலில் மெல்லினம் தான் வந்துள்ளது. வல்லினம் என்றால் தான் 'ற்' வரும். தொழினுட்பம் என்பது சரி தான்.--இராஜ்குமார் (பேச்சு) 06:19, 3 சூன் 2012 (UTC)
- பாகிம் தாங்கள் சொல்வது சரி.
“ | "லள வேற்றுமையில் றடவும், அல்வழி
அவற்றோடு உறழ்வும் வலிவரின் ஆம், மெலி மேவின் னணவும், இடைவரின் இயல்பும் ஆகும் இருவழி யானும் என்ப" - நன்னூல், மெய்யீற்றுப் புணரியல், நூற்பா 227 |
” |
தெளிந்தேன். மிக்க நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:49, 3 சூன் 2012 (UTC)
அப்படியானாற் தொழினுட்பம் என்றுதானே இருக்க வேண்டும்? இலங்கையிற் கூடத் தொழினுட்பம் என்று பயன்படுத்தும் வழக்கமே உள்ளது. விளக்கத்துக்கு நன்றி, பார்வதிஸ்ரீ மற்றும் இராஜ்குமார்.--பாஹிம் (பேச்சு) 08:29, 3 சூன் 2012 (UTC)
- தொழினுட்பம் சரி. ஆனால் தலைப்பில் உள்ள தொழிநுட்பம் என்பது தவறு.--கி.மூர்த்தி (பேச்சு) 14:17, 23 ஏப்ரல் 2019 (UTC)