பேச்சு:நகர்ப்புறவியம்
நகரியம் என்பது நகர்ப்புற சூழலைக் குறிக்கும். urbanism என்பது ஒரு process. எனவே, இதை நகரமயம் எனக் குறிப்பிடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:44, 22 நவம்பர் 2013 (UTC)
- நீங்கள் நகரமயம் என்று urbanization ஐக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். இதுதான் ஒரு process. இதை நகரமயமாதல் அல்லது "நகராக்கம்" என்பர். urbanism என்பது வேறு. நீங்கள் நகர்ப்புறச் சூழல் என்று குறிப்பிடுவது urban என்று நினைக்கிறேன் அதை "நகர்ப்புறம்" எனக் குறிப்பிடுவதே வழக்கம். "நகரியம்" என்று சொல்வதில்லை. ---மயூரநாதன் (பேச்சு) 13:00, 22 நவம்பர் 2013 (UTC)
- நகரியம் என்பது நகர்ப்புறத்தை, மெட்ரோபாலிட்டன் சிட்டியை குறிக்கிறது. தி இந்துவின் தமிழ்ப் பதிப்பு இதையே பயன்படுத்துகிறது! (நான் குழப்பிவிட்டேன் என நினைக்கிறேன்)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:34, 22 நவம்பர் 2013 (UTC)
தமிழ்க்குரிசில், நீங்கள் "நகரியம்" என்பது "மெட்ரோபாலிட்டன் சிட்டி"யைக் குறிப்பதற்கு "தி இந்து" பயன்படுத்துவதாகக் கூறியுள்ளீர்கள், அதே வேளை கூகிளில் தேடியபோது இச்சொல்லை Township என்பதைக் குறிக்கவும் பரவலாகப் பயன்படுத்தி உள்ளது தெரிகிறது. Metropolitan City என்பது City இலும் பெரியது. Township என்பது Town இலும் சிறியது. மனிதக் குடியிருப்புக்கள் (Human Settlements) பல்வேறு வகைப்படுகின்றன. இவற்றுக்கான தமிழ்ப் பெயர்களில் பெருமளவு குழப்பங்கள் உள்ளன. எனக்குத் தெரிந்தவரை பின்வருவன பொருத்தமாகத் தெரிகின்றன.
- Hamlet - சிற்றூர்
- Village - ஊர்
- Township - சிறுநகரம்
- Town - நகரம்
- City - பெருநகரம்
- Metropolis - மாநகரம்
இவற்றோடு,
- Rural - கிராமப்புறம், ஊரகம்
- Urban - நகர்ப்புறம்
பொதுவாகத் தற்காலத்தில் -இயம் என்ற விகுதியைத் கொள்கை, கோட்பாடு, வழிமுறை தொடர்பான விடயங்களுக்கான சொல் உருவாக்கங்களிலேயே பயன்படுத்துகின்றோம். எடுத்துக்காட்டாக "பெண்ணியம்", "மார்க்சியம்" போன்றவற்றைக் குறிப்பிடலாம். இது ஆங்கிலத்தில் உள்ள -ism என்பதற்கு ஈடாகப் பயன்படுகிறது. -இயம் என்னும் விகுதியை (நகர் + இயம் ---> நகரியம் என்பது போல்) ஒரு பௌதீக உருப்படிக்குப் (physical entity) பயன்படுத்துவது இல்லை.
urbanism என்பது முதல் வகையைச் சார்ந்தது. -இயம் என்ற விகுதி இதற்குப் பொருத்தமாக அமையும். ஆனாலும் நகரியம் என்ற சொல் ஏற்கெனவே முரண்பாடான பல பொருள்களில் பயன்பட்டு வருவதால், குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகத் தலைப்பை "நகர்ப்புறவியம்" என மாற்றியுள்ளேன். இந்த விடயத்தைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. ---மயூரநாதன் (பேச்சு) 08:33, 23 நவம்பர் 2013 (UTC)