பேச்சு:நயன்தாரா திரைப்படங்கள்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by சா அருணாசலம்

Kanags ஐயா, ஆங்கில விக்கிபீடியாவில் நயன்தாரா குறித்து இரண்டு கட்டுரைகள் காணப்படுகின்றன. ஒன்று Nayanthara மற்றொன்று Nayanthara Filmography. இரண்டுமே மிக நீண்ட கட்டுரைகள். இவற்றின் நீளம் கருதி இரண்டாகப் பிரித்துள்ளதாக கருதுகிறேன். தமிழ் விக்கிபீடியாவிலும் இது போலவே தொடரலாம். பெரும்பாலான பயனர்களின் கருத்து இணைப்பது என்று கொள்ளப்பட்டால் எனக்கும் இணைப்பதில் உடன்பாடு உள்ளது. இரா.முத்துசாமி (பேச்சு) 01:40, 15 மே 2022 (UTC)Reply

தற்போதுள்ள நயன்தாரா கட்டுரை ஒரு குறுங்கட்டுரையாகவே உள்ளது. அதில் உள்ள திரைப்படங்கள் பட்டியலை நீக்கினால் மிகவும் குறுகிவிடும். நயன்தாரா கட்டுரையை விரிவுபடுத்த முடியுமானால் செய்யுங்கள். அல்லது இணைப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 01:52, 15 மே 2022 (UTC)Reply

Kanags ஐயா, தாங்கள் குறிப்பிட்டது போல இணைப்பதே நல்லது என்று தெரிந்துகொண்டேன். தங்கள் இணைத்தல் குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.. இரா.முத்துசாமி (பேச்சு) 16:05, 15 மே 2022 (UTC)Reply

@Iramuthusamy: பக்கத்தின் தலைப்பு நாயன்தாரா திரைப்படங்கள் என்று தவறாக உள்ளது. பக்கத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 13:37, 16 அக்டோபர் 2022 (UTC)Reply
சா. அருணாசலம்
Nayanthara Filmography என்ற ஆங்கில விக்கிபீடியா கட்டுரையின் உள்ளுறை இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. Nayanthara Filmography என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு "நயன்தாரா திரைப்படங்கள்" என்பதாகும். எனவே தலைப்பு சரி என்று கருதுகிறேன் இரா.முத்துசாமி (பேச்சு) 13:57, 16 அக்டோபர் 2022 (UTC)Reply
@Iramuthusamy: அதெல்லாம் சரி. நயன்தாரா என்பதற்கு பதிலாக நாயன்தாரா என்று எழுதியிருக்கீங்க. ( ந - நா) -- சா. அருணாசலம் (பேச்சு) 15:42, 16 அக்டோபர் 2022 (UTC)Reply
@சா அருணாசலம்: நீங்கள் குறிப்பிட்டிருந்த எழுத்துப் பிழையை அவர் சரியாக கவனிக்கவில்லை. அதனை நயம்பட மீண்டும் உணர்த்துதலே நமது கடமை. அறிஞர்கள் பங்களிக்கும் தளத்தில் வித்தியாசமான மொழியை பயன்படுத்துதலை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:22, 16 அக்டோபர் 2022 (UTC)Reply
அவர் நன்றாக எழுத்துகளை கவனிப்பார் என்றிருந்தேன். நான் குறில் நெடில் என்றே குறிப்பிட்டிருக்கலாம். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 01:29, 17 அக்டோபர் 2022 (UTC)Reply
Return to "நயன்தாரா திரைப்படங்கள்" page.