பேச்சு:நாடுகளின் பொதுநலவாயம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 11, 2012 அன்று வெளியானது. |
காமன்வெல்த் நாடுகளை இலங்கையில் பொதுநலவாய நாடுகள் என்று அழைக்கின்றனர். இது சரியென்றால் இத்தலைப்பை மீள வழிப்படுத்தலாமா?--உமாபதி 17:23, 9 மார்ச் 2006 (UTC)
- காமன்வெல்த் ஆங்கிலச் சொல். பொதுநலவாயம் நல்ல தமிழ்ச் சொல். எனவே வேறு நல்ல தமிழ்ச் சொல் இல்லையென்றால், பொதுநலவாயம் என்பதைப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும். Mayooranathan 20:04, 9 மார்ச் 2006 (UTC)
- அவ்வாறே செய்து விடலாம். -- சிவகுமார் 04:30, 10 மார்ச் 2006 (UTC)
தலைப்பு
தொகுபொதுநலவாய நாடுகள் என்ற பதம் பயன்பாட்டிலுள்ளதேயாயினும் நாடுகளின் பொதுநலவாயம் என்பதே சரியான மொழிபெயர்ப்பு. இது தவிர்ந்த பொதுநலவாயங்களும் (எடுத்துக் காட்டாக அவுஸ்திரேலியப் பொதுநலவாயம், பகாமாசுப் பொதுநலவாயம், டொமினிக்கப் பொதுநலவாயம், கெந்தக்கிப் பொதுநலவாயம், மசாச்சுசெட்சுப் பொதுநலவாயம், பென்சில்வேனியப் பொதுநலவாயம், வேர்ஜீனியப் பொதுநலவாயம்) காணப்படுவதால் இத்தலைப்பைச் சரியான மொழிபெயர்ப்புக்கு மாற்ற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:34, 30 சூலை 2014 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 20:57, 30 சூலை 2014 (UTC)
எனினும் எமது நாட்டில் பொது நலவாய மாநாடு நடைபெற்ற காலங்களில் தமிழில் பொதுநலவாய நாடுகள் எனும் தலைப்பு இடப்பட்டிருந்த பதாகை ஒன்றைக் கண்டதாக ஞாபகம்!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:27, 2 ஆகத்து 2014 (UTC)
பொதுநலவாய நாடுகள் என்பது அவ்வமைப்பின் உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பல்ல. உண்ணாட்டுப் பொதுநலவாயங்களுக்கு மேலதிகமாக, தற்காலத்தில் சர்வதேசப் பொதுநலவாயங்கள் இரண்டு காணப்படுகின்றன. Commonwealth of Nations (நாடுகளின் பொதுநலவாயம்), Commonwealth of Independent States (சுதந்திர அரசுகளின் பொதுநலவாயம்) என்பனவே அவை.--பாஹிம் (பேச்சு) 07:57, 2 ஆகத்து 2014 (UTC)