பேச்சு:நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2019
நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2019 என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
@Kanags:, வணக்கம். தாங்கள் பந்துப் பரிமாற்றம் மற்றும் இலக்கு போன்ற சொற்களை மீண்டும் மீண்டும் கட்டுரைகளில் பயன்படுத்துகிறீர்கள். பந்துப் பரிமாற்றம் என்பது களத்தடுப்பு செய்யும் வீரர்கள் பந்தை பரிமாறிக் கொள்வதையும் குறிக்கும் அல்லவா? இலக்கு என்பது Targetஐயும் குறிக்கும். எனவே இவை இரண்டையும் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வேண்டுகிறேன். பந்துப்பரிமாற்றத்தை நிறைவு என்றும் இலக்கை இழப்பு என்றும் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. AakashAH120 (பேச்சு) 11:41, 2 செப்டம்பர் 2019 (UTC)
- //இலக்கு என்பது Targetஐயும் குறிக்கும்// அதாவது தமிழில் ஒரு சொல்லை ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த முடியுமா. ஒரு சொல்லுக்கு பல விளக்கங்கள் இருக்க முடியாதா? Sri Lanka won by 5 wickets. தமிழில் இலங்கை 5 இழப்புகளால் வெற்றி என எழுதுவது சிறந்த தமிழாக்கமாகத் தெரியவில்லை. இலங்கை 5 இலக்குகளால் வெற்றி என்பதே சிறந்ததாக இருக்கும். நிறைவு என்பதும் எனக்கு உடன்பாடு இல்லை.--Kanags \உரையாடுக 07:39, 3 செப்டம்பர் 2019 (UTC)
- @Kanags:, தமிழில் இரு பொருள் கொண்ட பெயர்ச்சொற்கள் இருக்கின்றன. எனினும் துடுப்பாட்டம் சார்ந்த சொற்களை அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் பயன்படுத்துவதே சிறந்தது என்பது எனது கருத்து. ஏனென்றால் இலக்கு என்பது வெற்றி பெறத் தேவையான இலக்கைக் (Target) குறிக்கவே துடுப்பாட்டத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அது ஒரு சொற்றொடரின் இரு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் வந்தால் சராசரியான ஒரு பார்வையாளருக்குக் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
(எ-டு)
1) England chased down the target with 8 wickets.
- 8 இழப்புகளுடன் இலக்கை எட்டியது இங்கிலாந்து.
- 8 இலக்குகளுடன் இலக்கை எட்டியது இங்கிலாந்து.
2) SA chase down 278 without losing a wicket, set world record
- எந்தவொரு மட்டையாளரையும் இழக்காமல் 278 என்ற இலக்கைத் துரத்தி உலக சாதனை படைத்தது தென்னாப்பிரிக்கா
- எந்தவொரு இலக்கையும் இழக்காமல் 278 என்ற இலக்கை எட்டி உலக சாதனை படைத்தது தென்னாப்பிரிக்கா
எனவே இடத்திற்கு ஏற்றவாறு சொற்களை அமைத்தால் குழப்பம் ஏற்படாது.
(எ-டு)
- Team A lost all the wickets- அ அணி தன் அனைத்து மட்டையாளர்களையும் இழந்தது
- Team A won by 7 wickets- 7 இழப்புகளால் அ அணி வெற்றி
- A took his 100th wicket in test matches- அ தனது தேர்வுப் போட்டிகளில் 100வது மட்டையாளரை வீழ்த்தினார்
இவ்வாறு இடத்திற்கேற்ப சொற்களை அமைப்பதன் மூலம் படிப்பவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று எளிதில் விளங்கும்.
பொதுவாக ஒரு மட்டையாளர் ஆட்டமிழப்பது தான் wicket எனப்படுகிறது. எனவே அதற்கு இலக்கு என்ற சொல்லை பயன்படுத்துவது முற்றிலும் பொருத்தமற்றது என்று கருதுகிறேன்.
நிறைவு என்பதில் தங்களுக்கு ஏன் உடன்பாடு இல்லை? சரியான காரணம் தெரிவியுங்கள். எவ்வித காரணமும் இன்றி எதிர்ப்பது தவறு.
என் கருத்துக்களைக் கூறிவிட்டேன். @Sodabottle, ஞா. ஸ்ரீதர், Nan, and AntanO: மேலும் பல்வேறு நிர்வாகிகளின் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன். AakashAH120 (பேச்சு) 03:32, 5 செப்டம்பர் 2019 (UTC)