பேச்சு:நிருபேன் சக்கரபர்த்தி
நபர் பெயரில் பிழை திருத்தம்
தொகுஇந்த கட்டுரைக்கு மையமான நபரின் பெயர் வங்காள மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்திருக்க வேண்டும். இதன் வங்காள மொழி பதிவை பார்த்தால் அது தெரியவரும். ஆங்கிலத்தில் இருந்து பெயர் மொழிமாற்றம் செய்யப்படும் பொழுது உச்சரிப்பில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் Sree1959 (பேச்சு) 14:42, 27 செப்டம்பர் 2023 (UTC)
தலைப்பில் மீண்டும் மாற்றம்
தொகுபயனர்:சத்திரத்தான் அவர்கள் 30-ஸப்தம்பர் 2023 அன்று இக்கட்டுரையின் தலைப்பை நிருபேன் சக்ரபர்த்தி என்று திருத்தியதை இன்று காலை கவனித்தேன். பின்னர் கட்டுரையில் சேர்க்கப்படாத பல தகவல்களை ஆங்கில கட்டுரையில் இருந்து திரட்டி சேர்த்த பின்னர் கட்டுரையை சேமித்தேன். ஆனால் தலைப்பு மீண்டும் பழையபடி நிரூபன் சக்கரபோர்த்திஎன்று மாறியிருப்பது கண்டு வியப்புற்றேன். எவ்வாறு இது நடந்தது என்று புரியவில்லை. நேரம் கிடைக்கும் போது தாங்கள் இதை தயவு செய்து பார்க்க இயலுமா? நன்றி. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 10:29, 2 அக்டோபர் 2023 (UTC)
- பொதுவாக தமிழில் உச்சரிக்கக் கூடியவாறே தலைப்புகள் இடவேண்டும் என்பது எனது புரிதல். எனவேதான் சத்திரத்தான் அவர்கள் தலைப்பை மாற்றியுள்ளார் என நினைக்கிறேன். மேலும் இந்தியாவின் கிழக்குப்பகுதியில் Dev என்பதை Deb என்றும் Praba என்பதை Prava என்றும் எழுதுவதும் கூட இது போன்றவையே. எனவே சக்ரபோர்த்தி என்பதை "சக்ரவர்த்தி"யாக மாற்றியிருக்கலாம்.−முன்நிற்கும் கருத்து Balu1967 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- தமிழில் நிருபன் சக்கரவர்த்தி என்பதே சரியானது (இரவீந்திரநாத் தாகூர் போன்று).--Kanags \உரையாடுக 11:15, 2 அக்டோபர் 2023 (UTC)
- ஆலோசனைக்கு மிகவும் நன்றி. வங்காள மொழியில் "வ" என்ற எழுத்து இல்லாத காரணத்தாலும் பொதுவாக அவர்கள் "ப" என்ற எழுத்தை தான் "வ"வுக்கு பதிலாக பயன்படுத்துகிறார்கள் என்பதாலும் "வசு" என்பது "பசு" என்றும், " "தேவ்" என்பதை "தேப்" என்றும் எழுதுகின்றனர். ஆகவே வங்காள நபர்களை பற்றியோ அம்மொழியை சார்ந்த மற்ற விஷயங்களை பற்றியோ மொழி மாற்றம் செய்யுமுன் நான் வங்காள மொழி இணையதளத்தை பார்ப்பது வழக்கம். அப்படித்தான் அவரது சரியான பெயர் உச்சரிப்பை பற்றி தெரிந்து கொண்டேன். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 11:18, 2 அக்டோபர் 2023 (UTC)
- @Sree1959: சரியான உச்சரிப்பு என்ன என்பதை நீங்கள் தெரிவிக்கவில்லை. தலைப்பை மாற்ற முன்னர் உரையாடிவிட்டு மாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 11:52, 2 அக்டோபர் 2023 (UTC)
- மன்னிக்க வேண்டும். தங்கள் செய்தியை நான் படித்ததே தலைப்பை மாற்றிய பிறகு தான். எவ்வாறு தலைப்பை மாற்றுவது என்பதை சத்திரத்தான் அவர்களுடன் கலந்து அவர் ஆலோசனையின் படி பழைய பக்கத்தை புது பக்கத்துக்கு நகர்த்தித்தான் மாற்றினேன். உச்சரிப்பு: வங்காள மொழியில் அவர் பெயரை உச்சரிக்கும் பொழுது "ந்றுபென் சக்ரபர்த்தி" என ஒலிக்கும். தமிழில் அவ்வாறு எழுதும் வழக்கம் இல்லாததால் "நிருபென் சக்ரபர்த்தி" என மாற்றியுள்ளேன். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 12:34, 2 அக்டோபர் 2023 (UTC)
- @Sree1959: சரியான உச்சரிப்பு என்ன என்பதை நீங்கள் தெரிவிக்கவில்லை. தலைப்பை மாற்ற முன்னர் உரையாடிவிட்டு மாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 11:52, 2 அக்டோபர் 2023 (UTC)
- @Sree1959: அவ்வாறெனில், Rabindranath Tagore இரபீந்திரநாத் தாகூர் என்றுதான் தமிழில் எழுத வேண்டும் என்கிறீர்களா? @செல்வா: உங்கள் கருத்து தேவை.--Kanags \உரையாடுக 06:33, 3 அக்டோபர் 2023 (UTC)
- வங்காள மொழியில் வகரம் இல்லை என்பது அதற்கு மாறாக மெலிந்த பகரம் (b)பயன்படுத்துகின்றார்கள் என்பதும் உண்மையே. இங்கே ஓரிரண்டு கருத்துகளைக்கருத்தில் கொள்ள வேண்டும். 1) கூடிய மட்டிலும் மூல மொழியில் உள்ளதற்கு நெருக்கமாகவும் தமிழ் மொழியில் எழுதும் மெய்ம்மயக்க விதிகளின் படியும் எழுதுதல் 2) மூல மொழியில் இல்லாதவாறு ஆனால் தமிழ்மொழியில் இயலுமாறு, மரபாகவோ பிற அசை வரன்முறை காரணமாகவோ (அதாவது குறில் நெடில் தமிழில் வேறு பாங்கில் வந்தால்தான் தமிழில் ஒலிக்க இயல்பாக இருக்கும், இது நெடுமரபாகவும் பேணப்பட்டு வந்துள்ளது), தமிழில் இரபீந்திரநாத்து தாகூர் (வங்காள மொழி ஒலிப்புக்கு நெருக்கமாக) என்றெழுதலாம். அல்லது தமிழ் வழக்கப்படி இரவீந்திரநாத்து தாகூர் என்றும் எழுதலாம். ஆனால் ஒரு முறையைச் சீராகக் கடைப்பிடிப்பது நல்லது. இங்குள்ள பெயரை நிருபேன் சக்கரபர்த்தி என்றெழுதலாம். (சக்ர என்றெழுதலாகாது, சக்கர என்று எழுதுவது தமிழில் சரியான முறை. தமிழில் -ர்த்- வரக்கூடும் எடுத்துக்காட்டாக "பார்த்தேன்", ஆகவே சக்கரபர்த்தி என்றெதலாம்). அல்லது தமிழ் முறைப்படி நிருபேன் சக்கரவர்த்தி என்றும் எழுதலாம். நிரூபன், நிருபன் என்றெல்லாமும் எழுதவேண்டுமென்று நினைத்தால் எழுதலாம். செல்வா (பேச்சு) 07:58, 3 அக்டோபர் 2023 (UTC)
- @செல்வா தங்களது கருத்துக்களை முழுவதும் படித்தேன், விரிவாக விளக்கியதற்கு மிகவும் நன்றி. தற்பொழுது நான் வெளியூரில் இருப்பதால் திரும்பவும் சென்னை வந்த பின்னர் வேண்டிய திருத்தங்களை செய்கிறேன். இருப்பினும் "நிருபென் சக்ரபர்த்தி" என்பதை "நிருபன் சக்கரவர்த்தி" அல்லது "நிருபேன் சக்கரபர்த்தி" என தலைப்பை மாற்றுவதானால் மறுபடியும் பக்கத்தை நகர்த்த நேரிடலாம் என்பதால் தான் யோசனை ஆக உள்ளது. வேறு வழி ஏதேனும் இருப்பின் அதை சிக்கல் இல்லாமல் செய்ய இயலும்.
- மற்றொன்று, 2013வது வருடம் இந்த கட்டுரையை ஒருவர் முதன்முதலில் எழுதிய போதும் தொடர்ந்து வந்த பத்து ஆண்டுகளிலும் இப்பொழுது நாம் மரபில் செலுத்தும் கவனம் எப்படி செலுத்தாமல் இருந்தோம் என்பதும் சிறிது வியப்பை அளிக்கிறது. இருப்பினும் இப்பொழுதாவது இது நம் கவனத்துக்கு வந்தது பற்றி மகிழ்ச்சி. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 16:58, 4 அக்டோபர் 2023 (UTC)
- நன்றி. நீங்கள் திரும்பி வந்தபின் மாற்றாலாம் என்று நினைக்கின்றேன். செல்வா (பேச்சு) 04:24, 5 அக்டோபர் 2023 (UTC)
- வணக்கம் @செல்வா அவர்களே. கட்டுரையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன. தலைப்பை மாற்றுவதற்கு பக்கத்தை நகர்த்துவது தவிர வேறு ஏதேனும் வழியுள்ளதா? இல்லையென்றால் அதையும் மாற்றி விடுகிறேன். ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 03:42, 9 அக்டோபர் 2023 (UTC)
- நன்றி. நீங்கள் திரும்பி வந்தபின் மாற்றாலாம் என்று நினைக்கின்றேன். செல்வா (பேச்சு) 04:24, 5 அக்டோபர் 2023 (UTC)
- வங்காள மொழியில் வகரம் இல்லை என்பது அதற்கு மாறாக மெலிந்த பகரம் (b)பயன்படுத்துகின்றார்கள் என்பதும் உண்மையே. இங்கே ஓரிரண்டு கருத்துகளைக்கருத்தில் கொள்ள வேண்டும். 1) கூடிய மட்டிலும் மூல மொழியில் உள்ளதற்கு நெருக்கமாகவும் தமிழ் மொழியில் எழுதும் மெய்ம்மயக்க விதிகளின் படியும் எழுதுதல் 2) மூல மொழியில் இல்லாதவாறு ஆனால் தமிழ்மொழியில் இயலுமாறு, மரபாகவோ பிற அசை வரன்முறை காரணமாகவோ (அதாவது குறில் நெடில் தமிழில் வேறு பாங்கில் வந்தால்தான் தமிழில் ஒலிக்க இயல்பாக இருக்கும், இது நெடுமரபாகவும் பேணப்பட்டு வந்துள்ளது), தமிழில் இரபீந்திரநாத்து தாகூர் (வங்காள மொழி ஒலிப்புக்கு நெருக்கமாக) என்றெழுதலாம். அல்லது தமிழ் வழக்கப்படி இரவீந்திரநாத்து தாகூர் என்றும் எழுதலாம். ஆனால் ஒரு முறையைச் சீராகக் கடைப்பிடிப்பது நல்லது. இங்குள்ள பெயரை நிருபேன் சக்கரபர்த்தி என்றெழுதலாம். (சக்ர என்றெழுதலாகாது, சக்கர என்று எழுதுவது தமிழில் சரியான முறை. தமிழில் -ர்த்- வரக்கூடும் எடுத்துக்காட்டாக "பார்த்தேன்", ஆகவே சக்கரபர்த்தி என்றெதலாம்). அல்லது தமிழ் முறைப்படி நிருபேன் சக்கரவர்த்தி என்றும் எழுதலாம். நிரூபன், நிருபன் என்றெல்லாமும் எழுதவேண்டுமென்று நினைத்தால் எழுதலாம். செல்வா (பேச்சு) 07:58, 3 அக்டோபர் 2023 (UTC)
- //ஒரு முறையைச் சீராகக் கடைப்பிடிப்பது நல்லது.// பல்லாண்டுகளாகத் தமிழறிஞர்கள் எழுதிவந்த இரவீந்திரநாத் தாகூர் என்ற பெயரை இரபீந்திரநாத் தாகூர் என மாற்றுவதற்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கிறேன். அத்துடன் இக்கட்டுரையின் தலைப்பும் ஒரு சீராக நிருபன் சக்கரவர்த்தி எனவே இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:57, 15 அக்டோபர் 2023 (UTC)