பேச்சு:நிறைவு (துடுப்பாட்டம்)

ஓவர் என்பதற்கு இது சரியான கலைச்சொல்லாக்கமாக இல்லை. அழுக்கடைந்த அல்லது தொலைந்த துடுப்பாட்ட பந்துகளை ஆட்டத்தின் இடையில் மாற்றுவதைக் குறிக்குமோ என்ற ஐயப்பாடும் எழுகின்றது. ஓட்டங்கள் என்பது போல ஓருசொல்லாக்கம் தேவை.ஆங்கிலத்தில் நடுவர் ஒரு பந்துவீச்சாளரின் பந்துவீச்சுக்கள் முடிவடைந்ததைக் குறிக்கும் விதமாக ஓவர் என்று கூறுவார்.இதையே குழூஉக் குறியாக்கி ஆறு பந்துகளுக்கு ஓவர் என்று ஆங்கிலத்தில் வழங்குகின்றனர்.நாமும் "நிறைவு" என்ற சொல்லை துடுப்பாட்டத்தில் மட்டும் சிறப்புப் பொருள் உள்ளதாக இவ்வாறு பயன்படுத்தலாமா ? --மணியன் 12:15, 18 சனவரி 2011 (UTC)Reply

நிறைவு என்பது சரியாக இருக்கும். நீங்கள் சொன்னது போல “பந்து பறிமாற்றம்” என்பது பழைய பந்துகளை மாற்றுவதைக் குறிப்பது போல உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 12:59, 18 சனவரி 2011 (UTC)Reply
நிறைவு (துடுப்பாட்டம்) என்று தலைப்பை நகர்த்தியுள்ளேன். ஆறு பந்துகள் வீசி நிறைவடைவதால் நிறைவு (Over) என்று அழைக்கப்படுகிறது. எனவே இத்தலைப்பு சரியாக இருக்கும்.AakashAH120 (பேச்சு) 02:58, 21 சூலை 2019 (UTC)Reply
நிறைவு என்ற சொல் தமிழில் ஓவர் என்ற சொல்லைக் குறிக்கப் பயன்பாட்டில் உள்ளதா? அல்லது வேறு சொல் உள்ளதா?--Kanags \உரையாடுக 03:10, 21 சூலை 2019 (UTC)Reply
கோரா வலைத்தளத்தில் 1 சில பயனர்கள் Over என்பதற்கு அறு வீச்சு மற்றும் வீச்சலகு போன்ற பெயர்களைப் பரிந்துரைத்துள்ளனர். மேலும் அத்தளத்தில் அவர்கள் துடுப்பாட்டம் சார்ந்த பல்வேறு ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழ்ச்சொற்களை வழங்கியுள்ளனர். தற்போது பெரும்பாலும் ஓவர், விக்கெட் போன்ற சொற்களே செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. AakashAH120 (பேச்சு) 04:19, 21 சூலை 2019 (UTC)Reply

வீச்சலகு தொகு

Kanags, வீச்சலகு என்ற தலைப்பிற்கு நகர்த்தும்படி தங்களை வேண்டுகிறேன். இதில் மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவியுங்கள். நன்றி.AakashAH120 (பேச்சு) 05:41, 21 சூலை 2019 (UTC)Reply

@AakashAH120: இங்கு அதற்கான ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன்னர் மற்ற கட்டுரைகளில் உள்ள ஓவர் எனும் வார்த்தையினை வீச்சலகு என மாற்றாதீர்கள். ஏனெனில் அதற்கு வேறு வார்த்தை முடிவானால் நீங்கள் செய்த அனைத்து மாற்றங்களையும் மீண்டும் மாற்ற வேண்டி வரும்.
தாங்கள் கூறுவது சரியே. இனி அவ்வாறு மாற்ற மாட்டேன். நன்றி. AakashAH120 (பேச்சு) 08:32, 22 சூலை 2019 (UTC)Reply
@Info-farmer and Fahimrazick: இதற்கு சரியான வார்த்தை தங்களுக்குத் தெரிந்தால் கூறவும். நன்றி ஸ்ரீ (talk) 14:28, 21 சூலை 2019 (UTC)Reply

Kanags, இந்த உரையாடலின் முதற்பகுதியில் 2011ஆம் ஆண்டு, மணியன் மற்றும் சோடாபாட்டில் ஆகிய நிர்வாகிகள் கூறியுள்ள கருத்துகளை நான் ஆமோதிக்கிறேன். அதன் காரணமாகவே நிறைவு என்ற தலைப்பிற்கு இப்பக்கத்தை நகர்த்தினேன். பிறகு தங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் விளைவாக அப்பக்கத்தை நீக்கிவிட்டேன். எனினும் நிறைவு என்பதே மிகவும் பொருத்தமான பெயராக இருக்கும். மாற்றுக்கருத்து இருக்கும் பட்சத்தில் வீச்சலகு என்பதைப் பயன்படுத்தலாம். உரையாடல்களில் விரைவாக தீர்வுகள் எட்டப்படுவதே தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் என்பது என் தாழ்மையான கருத்தாகும். நன்றி. AakashAH120 (பேச்சு) 08:25, 22 சூலை 2019 (UTC)Reply

வீச்சலகு என்பது பொருத்தமாகப் பட்டாலும் தமிழில் யாவருக்கும் பொதுவாகத் தெரிந்த விதத்தில் ஓவர் என்று இடுகுறிப் பெயராகப் பயன்படுத்துவதில் தவறில்லை. நிறைவு என்றால் ஆட்ட நிறைவு அல்லது ஓட்ட நிறைவு என்று பலவாறாகப் பொருள் கொள்ளலாம் என்பதால் நிறைவு என்று பயன்படுத்துவது பொருத்தமாகப் படவில்லை. வீச்சலகு என்று சொல்லும் போது ஏதோ பௌதிகவியலில் (இயற்பியலில்) வரும் அலகு என்பது போல் உணர்கிறேன். அது சரியா பிழையா என்பதை விடுத்து, இடுகுறிப் பெயராக ஓவர் என்று பயன்படுத்தினால் தமிழும் சிதைவதில்லை, பொருளும் பொதுவாகத் தெரிந்ததாக இருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 09:59, 22 சூலை 2019 (UTC)Reply

அப்படியென்றால் அறுவீச்சு என்பது சரியாக இருக்கும். ஆறு பந்து வீச்சுகளை உள்ளடக்கியது ஒரு அறுவீச்சு. இது எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் உள்ளது. AakashAH120 (பேச்சு) 10:39, 22 சூலை 2019 (UTC)Reply

அறுவீச்சு என்றால் அறுந்த வீச்சு என்றும் பொருள் படலாமே. நோபோல் போன்றவையும் அறுந்தவை அன்றோ.--பாஹிம் (பேச்சு) 13:06, 22 சூலை 2019 (UTC)Reply

No Ball என்பதற்கு பிழை வீச்சு என்பதே சரியான பொருள். தமிழில் அறுபது, அறுசுவை, அறுபடை போன்ற சொற்கள் உள்ளன. அதுபோல் அறுவீச்சு என்பதும் சரியானதாகவே தோன்றுகிறது. இது அனைவரும் புரிந்துகொள்ளக் கூடியதே. AakashAH120 (பேச்சு) 13:41, 22 சூலை 2019 (UTC)Reply

எதற்காக இவ்வளவு கவலைப்பட வேண்டும்? தமிழில் பெயர்ச் சொற்கள் இடுகுறிப் பெயர்கள், காரணப் பெயர்கள் என இரு வகையின. வேற்று மொழிகளிலிருந்து பெறப்படும் பெயர்கள் தமிழில் இலக்கணத்திலோ சொற்பொருளிலோ குழப்பம் தராவிடின் அவற்றை இடுகுறிப் பெயர்களாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. முற்காலத்தில் தமிழர்கள் ஜாவா எனப்படும் தீவின் பெயரை சாவகம் என்றும் கடா அல்லது கெடா (Kedah என்பதிலுள்ள ககரம் க ஓசைக்கும் கெ ஓசைக்கும் இடையில் மொழியப்பட வேண்டும்) அப்படியே எழுதினால் தமிழில் மிகவும் வேறுபட்ட பொருள் தரும் என்பதால் கடாரம் என்றும் தமிழ் முறைக்கேற்ப ஒலிபெயர்த்தார்களே தவிர மொழிபெயர்க்கவில்லை. அடுத்தது, இங்கு குறிப்பிடப்படும் ஓவர் என்பது பொதுவாக எல்லோரும் விளங்கிக் கொள்ளும் ஒரு சொல்லே. இவ்வாறானவற்றை ஒலிபெயர்ப்பாக எழுதுவதே தகும்.--பாஹிம் (பேச்சு) 03:38, 23 சூலை 2019 (UTC)Reply

அறுவீச்சு அல்லது வீச்சலகு தொகு

கிரிக்கெட், ரன் போன்ற சொற்களும் இன்று அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நம் விக்கிப்பீடியாவில் அவற்றை துடுப்பாட்டம், ஓட்டம் என்று குறிக்கிறோம் அல்லவா? அதுபோல் ஓவர் என்பதை அறுவீச்சு என்று தமிழில் குறிப்பதே சரியானது. அடைப்புக் குறியில் ஓவர் என்ற ஆங்கிலச் சொல்லை இடலாம். மராத்திய விக்கிப்பீடியாவில் ஓவர், விக்கெட் போன்ற சொற்களுக்கு மராத்திய மொழிச்சொற்களையே தலைப்பாக அமைத்துள்ளனர். அதுபோல் கூடியவரை தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவதே தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அழகு தரும் என்பது என் கருத்து. அறுவீச்சுக்கு பதிலாக வீச்சலகு என்றும் குறிப்பதும் சிறந்தது. இது கவிஞர் மகுடேசுவரன் என்பவர் அறிமுகப்படுத்திய சொல்லாகும். துடுப்பாட்டத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு அவர் வழங்கியுள்ள தமிழ்ச்சொற்கள் நடைமுறையில் புழங்குவதற்கு ஏதுவான சிக்கன சொற்களாகவும் உச்சரிக்க எளிமையாகவும் அமைந்திருப்பது சிறப்பு. சான்று AakashAH120 (பேச்சு) 06:07, 23 சூலை 2019 (UTC)Reply

கிரிக்கெட் என்பதை மட்டைப் பந்து என்றெழுதாமல் கிரிக்கெட்டு அல்லது கிரிக்கட்டு என்றெழுதுவதையே நான் ஆதரிக்கிறேன். மட்டையால் பந்தை அடித்து விளையாடும் எல்லே போன்ற பல விளையாட்டுக்கள் பல்வேறு நாடுகளில் காணப்படுகின்றன. ஆங்கிலேயன் கண்டு பிடித்த விளையாட்டுக்கு அவன் பெயரிட்டிருக்கிறான். அவனது பிள்ளையை அவன் வைத்த பெயராலன்றோ அழைக்க வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 06:36, 23 சூலை 2019 (UTC)Reply

தமிழகத்தில் உருவான கபடி விளையாட்டு இன்றளவும் அதே பெயரில் தான் மற்ற மொழிகளில் அறியப்பட்டு வருகிறது. அதுபோன்று கிரிக்கெட் என்ற ஆங்கிலச் சொல்லை தமிழில் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் கிரிக்கெட் தொடர்புடைய மற்ற சொற்களையும் ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது தான் தவறு. மராத்திய விக்கிப்பீடியாவில் கிரிக்கெட் தவிர அதுசார்ந்த Over, Wicket போன்ற மற்ற பக்கங்கள் அனைத்தும் மராத்திய மொழிப் பெயர்களிலேயே அமைந்துள்ளன. அவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நம்மைப் போன்ற தமிழ் விக்கிப்பீடியா பயனர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். AakashAH120 (பேச்சு) 10:42, 23 சூலை 2019 (UTC)Reply

இங்கே இணக்கம் எட்டப்படாமல் தலைப்பு மாற்றப்பட்டுள்ளமை தவறு. @Kanags, AntanO, and Ravidreams: கவனியுங்கள்.--பாஹிம் (பேச்சு) 03:41, 24 சூலை 2019 (UTC)Reply

பந்துப் பரிமாற்றம் என்ற தலைப்பை மாற்றக்கோரி 2011 ஆண்டே கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இத்தனை வருடங்களாக இதுகுறித்து தீர்வு எட்டப்படாமல் இருந்துள்ளது. இது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை பாதிக்கும். என்னைப் பொறுத்தவரை இதுபோன்று நீண்டகால கோரிக்கை உள்ள பக்கங்களில் நிர்வாகிகள் உரையாடி பயனர்களிடம் கருத்துகள் கேட்டறிந்து கூடிய விரைவில் தீர்வு எட்ட வேண்டும். இங்கு தலைப்பு மாற்றம் பற்றிய என் கருத்துக்கு நிர்வாகிகள் தரப்பில் எதிர்கருத்துக்கள் எதுவும் தெரிவிக்காததால் தலைப்பை வீச்சலகு என்று மாற்றியுள்ளேன். மேலும் என் முடிவில் தவறு இருந்தால் தெரிவிக்கும்படி நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் இணக்கம் ஏற்பட வேண்டுமென்றால் தலைப்பை மீண்டும் பழையபடி மாற்றிவிட்டு இங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு எட்டலாம் என்பது என் கருத்து. நன்றி. AakashAH120 (பேச்சு) 04:05, 24 சூலை 2019 (UTC)Reply

வணக்கம் @AakashAH120: உரையாடலில் முடிவு எட்டப்படுவதற்கு முன் தாங்கள் தலைப்பினை நகர்த்தியிருக்க வேண்டாம். தாங்கள் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதனால் மாற்றினேன் எனத் தெரிவித்துள்ளீர்கள். அவர்கள் தங்களின் கருத்துக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லையே? மேலும் நிர்வாகிகளின் கருத்து மட்டுமன்றி நம்மைப் போன்ற ஒவ்வொரு விக்கிப்பீடியர்களின் கருத்தும் முக்கியமானதே.
இனிமேல் உரையாடல் பக்கத்தில் தீர்வு எட்டப்பட்ட பின்னரே ஒரு பக்கத்தின் தலைப்பை மாற்றுகிறேன். நன்றி. AakashAH120 (பேச்சு) 15:56, 26 சூலை 2019 (UTC)Reply

//பந்துப் பரிமாற்றம் என்ற தலைப்பை மாற்றக்கோரி 2011 ஆண்டே கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இத்தனை வருடங்களாக இதுகுறித்து தீர்வு எட்டப்படாமல் இருந்துள்ளது. இது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை பாதிக்கும்.// நிச்சயமாக இல்லை நண்பரே. தங்களின் நல்ல நோக்கம் புரிகிறது. ஆனால் தாங்கள் தாமதமாகப் பார்ப்பதை எங்களைப் போன்றவர்கள் மிகப் பொருத்தமான சொல்லுக்கான காத்திருப்பாகப் பார்க்கிறோம். மேலும் தங்களின் கருத்திற்காக உடனடியான பதிலை தாங்கள் எதிர்பார்ப்பதாக எனக்குத் தோன்றுகிறது. பல பேர் தங்களின் ஓய்வு நேரங்களில் தான் இங்கு வருவர். எனவே சிலருக்கு ஓய்வு கிடைக்காமல் இருக்கலாம் அல்லவா? எனவே கொஞ்சம் பொறுத்திருக்கலாம் என்பது எனது கருத்து.four என்பதற்கு நாலடி என்பது பொருத்தமானதாகத் தோன்றவில்லை. நான்கு ஓட்டங்கள் என்பதில் தவறு ஏதேனும் உள்ளதா? தங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. தேர்வு நேரம் என்பதால் இங்கு பதிலளிக்க தாமதமாகியது. நன்றி.ஸ்ரீ (talk) 15:13, 26 சூலை 2019 (UTC)Reply

தங்களது விளக்கம் மற்றும் ஆதரவிற்கு நன்றி. தங்கள் கருத்தின்படி நான்கு ஓட்டங்கள் என்பதே பெருத்தமானதாக இருக்கும். மாற்றிவிடுகிறேன். AakashAH120 (பேச்சு) 15:46, 26 சூலை 2019 (UTC)Reply

Four என்பதை நாலோட்டம் என்றால் என்ன?--பாஹிம் (பேச்சு) 15:32, 26 சூலை 2019 (UTC)Reply

தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். எனினும் நான்கு ஓட்டங்கள் என்று பயன்படுத்துவதே எளிதில் புரியும் வகையில் இருக்கும். AakashAH120 (பேச்சு) 15:46, 26 சூலை 2019 (UTC)Reply

@ஸ்ரீ நான்கு ஓட்டங்கள் என்பது களத்தில் ஒரு மட்டையாளர் எடுக்கும் ஓட்ட.ங்களையும் குறிக்கும். எனவே அவற்றை வேறுபடுத்திக் காட்ட எளிய வழி உள்ளது.

  • அவர் நான்கு ஓட்டங்கள் எடுத்தார்.
  • அவர் நான்கு ஓட்டங்கள் அடித்தார்

இது தவிர மற்ற இடங்களில் பொதுவாக நான்கு என்று குறிப்பிடலாம்.

  • 7 நான்குகள் மற்றும் 2 ஆறுகள் உட்பட 70 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  விருப்பம் ஸ்ரீ (talk) 15:18, 27 சூலை 2019 (UTC)Reply

எல்லை (Boundary) என்பது நான்கு மற்றும் ஆறு ஆகிய இரண்டையும் குறிக்கும். எனினும் சில நேரங்களில் நான்குகளுக்கு மாற்றாக எல்லைகள் என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப்படுத்துகிறது. 2 இது தவிர்க்கப்பட வேண்டும். AakashAH120 (பேச்சு) 01:38, 27 சூலை 2019 (UTC)Reply

அறுவீசல் தொகு

வீச்சு, வீச்சம் என்பவை range என்ற ஆங்கில சொல்லுக்கு சமானமாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே வீசல்கள் என பயன்படுத்துவதே சரி. ஆதலால் அறுவீசல் பொருந்துமா?சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:42, 27 சூலை 2019 (UTC)Reply

  விருப்பம் AakashAH120 (பேச்சு) 08:35, 27 சூலை 2019 (UTC) /// எனினும் அறுவீசலை விட நிறைவு என்பது எளிதில் புரியும் வகையில் இருக்கும். ஏனெனில் இது அனைவருக்கும் பரிச்சயமான சொல்லாகும். (Over=நிறைவு) AakashAH120 (பேச்சு) 03:02, 29 சூலை 2019 (UTC)Reply

நிறைவு தொகு

(1) பந்து வீச்சாளர், களத்தடுப்பு வீரர்கள் என்று யார் ஓடினாலும் அதற்கு பெயர் ஓட்டம் தான். ஆனால் துடுப்பாட்டத்தில் ஓட்டம் (Run) என்பது ஒரு அணி மற்றும் அதன் மட்டையாளர் பெறும் புள்ளியை (Point) மட்டுமே குறிக்கும். அதுபோல் நிறைவு (Over) என்பது துடுப்பாட்டத்தில் ஆட்ட நிறைவு உட்பட வேறு எந்த நிறைவையும் குறிப்பதில்லை. அது வீச்சுகளின் நிறைவை மட்டுமே குறிக்கிறது. வீச்சலகு, அறுவீச்சு போன்ற சிக்கலான சொற்களை விட நிறைவு என்பதே எளிதில் விளங்கும் சிறந்த சொல்லாக இருக்கும். எனவே நிறைவு (துடுப்பாட்டம்) என்ற தலைப்பை பரிந்துரைக்கிறேன். AakashAH120 (பேச்சு) 04:45, 28 சூலை 2019 (UTC)Reply

ஒருவரே தொடர்ச்சியாக முன்னுக்குப் பின் முரணாகப் பரிந்துரைகளைச் செய்வது தகுமா? முன்னர் ஒரு தலைப்பைச் சரியென்று கூறி நகர்த்தி விட்டு பின்னர் மீண்டும் ஒரு தலைப்பைச் சரியென்று கூறி நகர்த்தி, மீண்டும் இதுவல்ல அதுதான் வேண்டும் என்று கூறிக் கொண்டு அடம் பிடிக்காமல் சற்றுப் பொறுமையாக ஏனைய பயனர்களின் கருத்துக்களையும் அறிந்து தலைப்பை ஏற்படுத்துவதே சாலப் பொருந்தும். இத்தலைப்பு விடயத்தில் இடுகுறிப் பெயராக பொதுவாகத் தெரிந்த ஓவர் என்ற சொல்லே கையாளப்பட வேண்டும் என்பதே என் கருத்து.--பாஹிம் (பேச்சு) 06:36, 28 சூலை 2019 (UTC)Reply

தங்கள் வாதம் தவறானது. ஒருவேளை தங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டால் ஓட்டத்தை ரன் என்றும் தேர்வுத் துடுப்பாட்டத்தை டெஸ்ட் போட்டி என்றும் ஆட்டப் பகுதியை இன்னிங்சு என்றும் மாற்ற வேண்டும் அல்லவா? இந்த மாற்றங்களை ஆதரிக்கிரிறீர்களா? AakashAH120 (பேச்சு) 08:01, 28 சூலை 2019 (UTC)Reply

(2) 2011ஆம் ஆண்டு இந்த உரையாடலின் முதற்பகுதியில், மணியன் மற்றும் சோடாபாட்டில் ஆகிய நிர்வாகிகள் பதிவிட்டுள்ள கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். எனவே தலைப்பை நிறைவு (துடுப்பாட்டம்) என்று நகர்த்தியுள்ளேன். மேலும் வாக்கை மீறி தலைப்பை நகர்த்தியதற்கு வருந்துகிறேன். இதற்காக என்னை தடை செய்தாலும் சரி. ஆதரவு தெரிவித்தாலும் சரி. இரண்டையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். நன்றி. AakashAH120 (பேச்சு) 08:12, 28 சூலை 2019 (UTC)Reply

@AakashAH120: தங்களின் கருத்தில் முரண் உள்ளது.
  • //2011ஆம் ஆண்டு இந்த உரையாடலின் முதற்பகுதியில், மணியன் மற்றும் சோடாபாட்டில் ஆகிய நிர்வாகிகள் பதிவிட்டுள்ள கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். எனவே தலைப்பை நிறைவு (துடுப்பாட்டம்) என்று நகர்த்தியுள்ளேன்.// எனில் வீச்சலகு என மாற்றுவதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டில் அவர்கள் கூறியதனையும், 2019 இல் நாங்கள் கூறியதனையும் ஏன் கருத்தில் கொள்ளவில்லை?
    • பதில்: @ஞா. ஸ்ரீதர்:, முதன்முதலில் நான் இப்பக்கத்தை நிறைவு என்று மாற்றினேன். ஆனால் ஒரு நிர்வாகி ஒருவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதை நீக்கிவிட்டேன். ஏனெனில் அவர் ஓவர் என்பதைக் குறிக்க வேறு ஏதேனும் சொற்கள் உள்ளதா என்று கேட்டார். (உரையாடலின் முதற்பகுதியில் உள்ள பத்திகளை ஒப்பிட்டு உறுதி செய்யவும்.) அதன்படி நானும் வலைதளங்களில் ஆராய்ந்து வீச்சலகு, அறுவீச்சு போன்ற சொற்களைப் பரிந்துரைத்தேன். பிறகு வீச்சலகு என்று மாற்றினேன். ஆனால் நடைமுறையில் அவை சிக்கலான சொற்கள் என்பதை இங்கு நடைபெற்ற விவாதத்தின் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் நிறைவு என்ற தலைப்பிற்கு இங்கு எந்த எதிர்ப்புகளும் இதுவரை எழவில்லை. (ஒரு பயனர் நிறைவு என்பது ஆட்ட நிறைவு. ஓட்ட நிறைவையும் குறிக்கும் என்று கூறினார். அது எதிர்ப்பல்ல, சந்தேகம். அவரது சந்தேகத்திற்கு நான் விளக்கமளித்து விட்டேன். [காண்க (1)] எனவே பழையபடி நிறைவு என்ற தலைப்பே சரியாக இருக்கும் என்பதால் நகர்த்தினேன். AakashAH120 (பேச்சு) 02:55, 29 சூலை 2019 (UTC)Reply
  • //டெஸ்ட் போட்டி என்றும் ஆட்டப் பகுதியை இன்னிங்சு என்றும் மாற்ற வேண்டும் அல்லவா? இந்த மாற்றங்களை ஆதரிக்கிரிறீர்களா?//

அந்த தலைப்புகளையாவது மாற்றும் முன் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள்.

  • பதில்: நான் அவற்றை மாற்றக் கோரவில்லை. ஒரு பயனர் ஓவர் என்ற தலைப்பு சரியாக இருக்கும் என்றார். ஒருவேளை அவ்வாறு மாற்றினால் தமிழ்ப்பெயர்களில் உள்ள ஓட்டம் உள்ளிட்ட பக்கங்களையும் ஆங்கிலப் பெயர்களில் மாற்ற வேண்டும் அல்லவா? என்று கேள்வி தான் கேட்டேன். AakashAH120 (பேச்சு) 02:55, 29 சூலை 2019 (UTC)Reply
  • // ::தாங்கள் கூறுவது சரியே. இனி அவ்வாறு மாற்ற மாட்டேன். நன்றி. AakashAH120 (பேச்சு) 08:32, 22 சூலை 2019 (UTC)// //::இனிமேல் உரையாடல் பக்கத்தில் தீர்வு எட்டப்பட்ட பின்னரே ஒரு பக்கத்தின் தலைப்பை மாற்றுகிறேன். நன்றி. AakashAH120 (பேச்சு) 15:56, 26 சூலை 2019 (UTC) // இவ்வாறு இரு முறை நீங்கள் கூறியுள்ளீர்கள். ஆனால் மீண்டும் மாற்றியுள்ளீர்கள்.Reply
    • பதில்: வாக்கு மீறியதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்து விட்டேன். தற்போது அளித்துள்ள வாக்கை இனி மீறமாட்டேன். //நிறைவு என்பதை மாற்றக்கோரி 2011ஆம் ஆண்டே கோரிக்கை எழுந்துள்ளது.// இதை இந்த உரையாடலில் பலமுறை கூறிவிட்டேன். 8 ஆண்டுகளாக தலைப்பு குறித்து விவாதம் நடைபெறாமல் இருந்தது வருத்தமளித்தது. எனவே தலைப்பை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நிறைவு என்று மாற்றினேன். இது தன்னிச்சையான முடிவு என்றாலும் சரியானதே ஆகும். AakashAH120 (பேச்சு) 03:18, 29 சூலை 2019 (UTC)Reply
  • //மேலும் வாக்கை மீறி தலைப்பை நகர்த்தியதற்கு வருந்துகிறேன். இதற்காக என்னை தடை செய்தாலும் சரி. ஆதரவு தெரிவித்தாலும் சரி. இரண்டையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்// தங்களைத் தடை செய்ய நினைத்திருந்தால் இவ்வளவு உபயோகமான உரையாடலே இங்கு நடந்திருக்காது என்பதனை நினைவில்கொள்ளவும். முதலிலேயே தங்களை தடை செய்ய கோரிக்கை விடுத்திருக்கலாமே?.எங்களைப் பொறுத்தவரை அனைத்துப் பயனர்களும் முக்கியமே. ஸ்ரீ (talk) 13:27, 28 சூலை 2019 (UTC)Reply
    • பதில்: நான் தடை செய்ய கோரவில்லை. ஒருவேளை தடை செய்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவே கூறினேன். தங்கள் கருத்துப்படி அனைத்து பயனர்களும் முக்கியமே. ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் இருப்பதில்லை. எனவே இங்கு பொதுவான ஒரு பெயரை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்த விவாதம் தீர்வின்றி தொடர்ந்து கொண்டே தான் போகும். இந்த உரையாடலின் முதல் பத்தியில் ஒரு பயனர் நிறைவு என்ற சொல் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். அதுவே சரியான கருத்தாகும். தவிர நிறைவு என்ற தலைப்பு குறித்த தங்களுடைய கருத்தையும் அறிய விரும்புகிறேன். நன்றி. AakashAH120 (பேச்சு) 16:12, 28 சூலை 2019 (UTC)Reply
நிறைவு என்ற சொல்லில் எனக்கு முழுமையாக உடன்பாடு இல்லை. கட்டுரைத் தலைப்புக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனாலும் நடைமுறையில் பொருத்தமற்றது. over என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு.--Kanags \உரையாடுக 08:06, 29 சூலை 2019 (UTC)Reply
ஓட்டம் என்பதும் Run இன் நேரடி மொழிப்பெயர்ப்பு தானே? அது நடைமுறையில் சாத்தியம் என்றால் இதுவும் சாத்தியமே. AakashAH120 (பேச்சு) 09:56, 29 சூலை 2019 (UTC)Reply
Return to "நிறைவு (துடுப்பாட்டம்)" page.