பேச்சு:நீரின் மின்கடத்துமை

Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இது நீரின் மின்கடத்துமை என்று இருக்க வேண்டும். நீரின் தூய்மையை அளக்க இது பயன்படுகின்றது. குறைக்கடத்தித் துறையில், சிலிக்கான் வட்டைகளை "கழுவ" மிகத் தூய்மையான நீர் பயன்படுத்துவர். இதனை மின்மவணு நீக்கப்பட்ட நீர் என்பர் (De-ionezed ulatra pure water). இவ்வகை நீரின் மின் தடைமை (resistivity)பொதுவாக 18 மெகா ஓம் -செமீ (MΩ·cm) இருக்கும். காய்ச்சி வடிந்த நீர் (distilled water), பெரும்பாலும் 250 கிலோ ஓம்-செமீ முதல் ஒரு மெகா ஓம் -செமீ வரை இருக்ககூடும். --செல்வா 21:43, 23 மே 2009 (UTC)Reply

இக்கட்டுரையின் பெயரை நீரின் மின்கடத்துமை என மாற்றப் பரிந்துரைக்கிறேன்--கார்த்திக் 11:06, 24 மே 2009 (UTC)Reply
கடத்துதிறன், கடத்துமை என்ன வேறுபாடு? ஏன் மாற்ற வேண்டும்?--Kanags \பேச்சு 11:25, 24 மே 2009 (UTC)Reply
கடத்துமை என்பது பண்பு. கடத்துதிறன் என்பது கடத்தும் வல்லமை (conducting power), அல்லது கடத்தும் பயன்கெழு (efficiency). திறன் என்னும் சொல் power அல்லது efficiency என்பதற்கு ஈடாகப் பயன்படுத்துகிறோம் அல்லவா? இங்கே கடத்துமை அல்லது தடைமை என்பது அப்பொருளின் நீளம் அகலம் போன்ற வடிவ அலகுகளைப் பொருத்ததாக மட்டும் இல்லாமல், அப்பொருளின் த்ன்னியல்புத் தன்மையைப் பொருத்தது. இதனாலேயே, இதனை தற்கடத்துமை (தன்னியல்பான கடத்துமை) என்றும் கூறுவதுண்டு. ஆங்கிலத்தில் Conductivity, Resistivity என்று கூறுவர். Resistance என்பதைத் தடையம் என்றும், conductace என்பதைக் கடத்தியம் என்றும் கூறுகிறோம். Resistor, Conductor என்பனவற்றை தடை, கடத்தி என்று முறையே கூறுகிறோம். கடத்தியமும், தடைமமும், அதன் நீள, அகல, தடிப்பு அளவுகளைப் பொருத்ததுமட்டும அல்லாமல் பொருளின் கடத்துமை, அல்லது தடைமையையும் பொருத்தது. மை என்னும் விகுதி பண்பைக் குறிக்கும். தடைமையை பொதுவாக கிரேக்க எழுத்து ரோ (rho, )என்னும் எழுத்தால் குறிப்பர். தடைமத்தை R என்னும் எழுத்தால் குறிப்பது வழக்கம். அந்தத் தடையின் நீளம் என்றும் மின்னோட்டம் பாயும் குறுக்குவெட்டுப் பரப்பு A என்றும் கொண்டால், தடைமம் என்பது தடையின் நீளம், குறுக்குவெட்டுப் பரப்பு ஆகிய வடிவ அளவுகளைப் பொருத்தது மட்டுமல்லாமல் தடைமம் தரும் அப்பொருளின் தன்னியல்பான மின் தடைமை என்பதனையும் பொருத்தது ஆகும். இதில் மின் தடைமை என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான மாறா நிலையெண் அல்லது (பொருள் இயற்பியல்) மாறிலி. : என எழுதலாம். கடத்துமை என்பது தடைமை என்பதன் தலைகீழ் பண்பு. கடத்துமையைப் பொதுவாக இசிக்மா (sigma, ) என்னும் கிரேக்க எழுத்தால் குறிப்பது வழக்கம் = கடத்துமை என்று கொண்டால், . --செல்வா 12:26, 24 மே 2009 (UTC)Reply
Return to "நீரின் மின்கடத்துமை" page.