பேச்சு:நுண்மமாக்கல்
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
--Natkeeran 12:34, 14 ஜூலை 2007 (UTC)
Abstract பற்றி
- பல இடங்களில் en:Abstraction என்ற கருத்துருவை அல்லது அத்தோடு தொடர்புடைய சொற்களை தமிழில் வெளிப்படுத்த சிக்கலாக உள்ளது. ஒப்புநிலை, கருத்துபடிமம் போன்று சொன்னாலும், ஒரு சுற்றுவழைப்புத்தான். தமிழில் இதன் கருத்து பின்புலத்தை விரிவாக்கினால் நன்று. நன்றி. --Natkeeran 22:14, 4 மார்ச் 2007 (UTC)
- நற்கீரன், abstract, abstraction என்றால், ஒன்றின் கருவான, முக்கியமான கருத்துக்களை பிரித்தெடுத்துத் தொகுத்தல் ஆகும். இதனை பிழிவு என்று தமிழில் வழங்குவர். ஒருவருடைய கட்டுரையின் கருத்துப்பிழிவு என்று சொல்லலாம். "கதையின் கருத்துப்பிழிவு என்னவென்றால்..." என்றெல்லாம் எழுதலாம். சுருக்கம் என்பது வேறு பிழிவு என்பது வேறு.
- கட்டுரைகளுக்கு எழுதப்படும் abstract பற்றி மேலே சுட்டவில்லை. abstract mathematics, abstract concepts, abstraction layers, abstract thinking (vs concrete thinking) என்ற கருத்து புலத்தில். இராம.கி அப்பூதியாக என்று பரிந்துரை தந்துள்ளார். அதாவது பூதவியல் புலத்தில் அல்லாமல் என்று பொருள் தரும்படி. இங்கும் இச் சொல் அலசப்பட்டது: http://groups.google.ca/group/tamil_wiktionary/browse_thread/thread/2a55b923f01fc155?hl=en
- உங்கள் விளக்கம் மூலம் செறிவெண்ணும் நன்று போன்றே தெரிகின்றது, ஆனால் த.நா இலங்கையிலும் இருக்கும் வழக்கத்தையும் கவனத்தில் கொள்தல் வேண்டும் அல்லவா.
நன்றி. --Natkeeran 22:59, 4 மார்ச் 2007 (UTC)
- ஏனோ இப்பதிவைப் பார்கத் தவறிவிட்டேன்! மேற்கண்ட இடங்களில் வரும் abstract என்பதை பொதுநுண் அல்லது நுண்பொது அல்லது நுண்பிழிவு என்னும் சொற்களால் குறிக்கலாம். abstract mathematics என்பதை நுண்பொதுக் கணிதம், நுண்பிழிவுக் கணிதம் எனலாம். abstract concept என்பதை பொதுநுண் கருத்துரு அல்லது நுண்பொதுக் கருத்துரு எனலாம். தமிழில் நுண்மாண் நுழைபுலம் என்பர். அதில் இருப்பதுபோல், நுண்மாண் கருத்துரு, நுண்புலக் கருத்துரு, நுண்புலக் கணிதம், நுண்புலச் சிந்தனை, நுண்புல எண்ணல் எனலாம். நுண்-நுட்பம் என்பதும், பொதுமை என்பதும் அடிப்படைக் கருத்துக்கள். நுண்பிழிவு என்பது ஒரு எண்ணப்பரப்பில் பிழிந்தெடுத்த நுட்பமான பொதுமை என்பது கருத்து. இராம.கியின் பதிவை நான் இன்னும் பார்க்கவில்லை. விக்சனரியிலும் பார்க்கவில்லை.--செல்வா 04:52, 8 மார்ச் 2007 (UTC)
- நன்றி. எனக்கு ஆங்கில புலத்தில் புரிந்து வைத்திருக்கும் abstract என்பதின் philosophical (மெய்யியல்) கருத்துருவுக்கு இணையான கருத்துருவை தமிழில் அல்லது தமிழ் மெய்யியலில் இன்னும் நான் எதிர்கொள்ளவில்லை என்றுதான் நினைக்கின்றேன். நுண் என்பது நுட்பத்துடன் அல்லது நுட்பமாக என்றே பொதுவாக பொருள் பட்டு நிற்கின்றது. இருப்பினும் நுண்புல - abstract, அப்பூதியாக - non materialistic போன்றவை நல்ல பரிந்துரைகளே.
- Abstraction refers to different conceptual plane. அந்த விதத்தில் புலம் என்று நீங்கள் எடுத்தாள்வது பொருந்திவருகின்றது. எப்படிப்பட்ட புலம்? Non-materialistc, Non-wordly, More complex!, More removed. வட்டம் என்று சொல்லும் பொழுது நாம் அந்த நுண்புலத்தில் சிந்திப்பதாக சொல்வார்கள். Plato's forms அங்கு ideal ஆக இருக்கும். ஒரு கருத்து புலத்தைத்தான் இங்கு எடுத்துரைக்க முயல்கின்றேம். http://www.wsu.edu/~dee/GLOSSARY/ABSTRACT.HTM
- நீங்கள் தந்த பரிந்துரைகள் வழக்கத்தில் உண்டா?
--Natkeeran 05:16, 8 மார்ச் 2007 (UTC)
- வழக்கத்தில் இருக்கின்றதா என அறியேன். சில நிமிடங்களுக்கு முன்னர் ஆக்கியதே. தமிழ்வழி சிந்தித்தால், அதுவும் ஒரு இடம்-காலத் தேவையுடன் சிந்தித்தால் இன்னும் சிறப்பாகவும் கருத்து விரியுமாறும் ஆக்கங்க்ள் எழலாம்.--செல்வா 05:33, 8 மார்ச் 2007 (UTC)
- abstract என்ற சொல் ஆங்கிலத்தில் பல்வேறு பொருள்களைத் தருகிறது. எனினும் அவை எல்லாவற்றுக்குள்ளும் ஒரு உள்ளார்ந்த தொடர்பும் இருக்கின்றது. இந்த உள்ளார்ந்த பொருளிலிருந்துதான் தமிழில் சொல்லாக்க வெண்டுமென்று நான் கருதுகிறேன். அப்பூதி என்பது non-physical என்றுதான் பொருள் தரும் என எண்ணுகிறேன். abstract என்பது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் non-physical என்றோ, Non-materialistc என்றோ பொருள்படாது. எடுத்துக்காட்டாகக் கட்டிடக்கலை, ஓவியம், சிற்பம் போன்ற துறைகளில் non-physical, Non-materialistc என்ற பொருள் கொள்வதற்கு இடம் கிடையாது. இதுறைகளிலே, ஒரு குறிப்பிட்ட பொருளின் இயல்புத் தோற்றத்தின் சிக்கல்களைக் குறைத்து, எடுத்துக்காட்டவிரும்பும் பண்புகளை மேம்படுத்திக் காட்டுவது என்ற பொருளைத்தான் காணமுடியும். Mayooranathan 18:54, 12 மார்ச் 2007 (UTC)
- நான் மயூரநாதனின் கருத்துடன் உடன்படுகின்றேன். Abstract என்பது அடிப்படையாக உள்ளப் பொதுமைப் பண்புகள், அடிநுண்பண்பு எனலாம். அதாவது சிறப்பான கோணங்களிலோ, காட்சிகளிலோ அடிப்பாவு பெற்ற பொது நுட்பப் பண்புகள் எனலாம்.--செல்வா 19:06, 12 மார்ச் 2007 (UTC)
நுண் என்ற வேர் சொல்லின் விளக்கம் தேவை?...
நுண் என்பது சிறு என்ற கருத்தோட்டத்திலேயே பொதுவாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது. ஆகையால் இந்த கருத்தோட்டம் சிக்கலைத் தரக்கூடும். --Natkeeran 12:50, 14 ஜூலை 2007 (UTC)
things அல்லது matter என்பவற்றை பருப்பொருட்கள் என்றும், abstract நுண்பொருள் என்றும் மு. வரதரசனாசன் பயன்படுத்தியுள்ளார். --Natkeeran 01:41, 30 ஜூலை 2007 (UTC)
- நுண் என்ற வேர் பொதுவாக சிறுமையைக் குறித்தாலும், நுணுக்கம் என்பதில் "intricate" என்ற வகையிலும் நுட்பம் என்பதில் ஆழ்ந்த அல்லது "specialised" என்ற பொருளிலும் பொதுப் பயன்பாட்டில் உள்ளது. மேலும் ஆழமாக இணையத்தில் துழாவியதில் பின்வரும் அருமையான தகவல் கிடைத்தது.[1] அதைக் கொண்டு பார்க்கையில் "abstract" மட்டுமல்ல அதன் தாத்தா-பாட்டிக்கும் முப்பாட்டனார்களுக்கும் கூட நுண் எனும் வேர் பொருந்தும் எனத் தோன்றுகிறது. :-) -- Sundar \பேச்சு 07:42, 30 ஜூலை 2007 (UTC)
Proto-South Dravidian : *nuṇ-
Meaning : minute, fine
Dravidian etymology:
Tamil : nuṇ
Tamil meaning : minute, fine, etc.
Tamil derivates : nuṇpu, nuṇmai, nuṇuku, nuṇṇimai minuteness, smallness, slenderness, sharpness, refinement, nicety, exquisiteness (as in workmanship), acuteness, subtlety, discrimination, precision, accuracy, delicacies, dainties, mystery; nuṇṇiyān_ person of acute intellect, quick parts or subtle discrimination, minister; nuṇakkam sharpness, minuteness, subtlety, fineness; nuṇaŋkiyōr persons of subtle or sharp intellect; nuṇaŋku (nuṇaŋki-) to be thin, minute, attenuated, be subtle, fine, refined; n. minuteness, subtlety, fineness; nuṇi (-v-, -nt-) to waste away, be thinned down; (-pp-, -tt-) to sharpen to a point, powder, examine carefully; n. a point; nuṇukkam fineness, minuteness, sharpness, acuteness, acumen, subtlety, exquisiteness (as of work), niggardliness; nuṇukku (nuṇukki-) to make very small (as beads), powder, pulverize, pound, grind, shatter to pieces, write a small hand, be niggardly, stint, sharpen to a point, sharpen the wits, execute minutely or finely (as a work); n. smallness, fineness, subtlety, any small or minute thing, small handwriting; (Ramnad dial., Annamalai, p. 875) uṇukku to powder (= nuṇukku); nuṇuku (nuṇuki-) to be slender, delicate (as a woman's waist), be minute, become thin, be sharp, keen, acute (as one's intellect); nuṇuŋku (nuṇuŋki-) id., be powdered, pulverized, sing softly, as a tune; n. powder; nuṇavai flour of rice and other grains, a ball of sesame confection; nuvaṇai minuteness, fineness, flour; nuṭpam minuteness, fineness, subtlety, insight, acuteness, precision, accuracy, an invisible planet, minute point of time, a figure of speech which expresses an idea by implication, a critical commentary; nuṭaŋku (nuṭaŋki-) to be fine, thin, attenuated; n. thinness, smallness; nuẓai (-v-, -nt-) to be minute, fine, be keen, acute, make innuendoes; n. minuteness, fineness, intellectual sharpness; nuẓaivu minuteness, fineness, keen understanding or perception; nūẓai acuteness, fineness, minuteness
Malayalam : nuṇma
Malayalam meaning : minuteness
Malayalam derivates : nuppam fine texture of cloth
Kannada : nuṇ
Kannada meaning : smoothness, softness, fineness, niceness, neatness, subtilty, gentleness, etc.
Kannada derivates : nuṇupu, nuṇpu, numpu smoothness, delicateness, fineness; nuṇṇage, nuṇṇane smooth, smoothness, state of being powdered, state of being smooth by shaving, baldness, bald; nuṇṇitu, nuṇṇittu that is smooth, etc.
Tulu : noṇṇa, noṇṇagè
Tulu meaning : soft, nice
Proto-Nilgiri : *nun-
Notes : Tamil nuvaṇai is a metathese from nuṇavai; nuṭaŋku may be a secondary formation from nuṭ- in such forms as nuṭpam; the forms with -ṛ-, however, are hard to interpret.
Number in DED : 3700
குறள்
குறுகத் தரித்ததால் தானே குறள் என்று பெயர் வந்தது!
abstract - குறள்
- -)
Amachu 15:12, 30 ஜூலை 2007 (UTC)
திட்டமிட்ட தாக்குதலா?
இப்பக்கம் ஏன் இப்படி தாக்குதலுக்கு உள்ளாகிறது?--Terrance \பேச்சு 11:56, 8 மே 2008 (UTC)
- இது கட்டாயம் ஒருவராலோ சிலராலோ, விளையாட்டுக்காகவோ, தீநோக்குடனோ செய்யும் குறும்புதான். தன்/தம் நேரத்தையும் திறமையையும் நல்வழியில் பயன்படுத்தலாமே இவரோ/இவர்களோ! இவ்வகைத் தீக்குறும்புகளால் என்ன பயன்? இதனைச் செய்பவரை நல்லமுறையில் வேண்டிக்கொள்கிறேன், வேண்டாம் என்று.--செல்வா 14:51, 8 மே 2008 (UTC)
abstact-நுண், நுண்ணிலை abstraction- நுண்ணிலையாக்கம் எனபவற்றை நான் மெய்யிய்லிலும் அளவையியலிலும்(தருக்கவியலிலும்) பயன்படுத்தி வருகிறேன். நுண்ணிலையாக்க்கம் பற்றி தனி கணிதவியல் கட்டுரை உள்ளதால் இதன் தலைப்பை நுண்ணிலையாக்கம்(பொது) எனமாற்றியுதவுக.16:11, 5 சூன் 2023 (UTC)