பேச்சு:நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
ஆட்சிக் காலம்
தொகுஇவனது வரலாற்றில் ஆட்சிக் காலம் 205 முதல் 220 எனவும் பட்டியலில் 205-215 வரை எனவும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும் இப்புத்தகம் முழுவதனையும் படித்தாலே இக்கேள்விகள் பலவற்றிற்கும் பதில் கிடைக்கும்.--நிரோஜன் சக்திவேல் 02:34, 16 பெப்ரவரி 2007 (UTC)
நெடுஞ்செழியன் கால சர்ச்சை
தொகுதலையாலங்கானத்தை தலையலங்கோலமாக்கிய இச்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனுக்கு முன்னோனாவான். அதற்கு அறிஞர்கள் கூறும் சில சான்றுகள்,
- சிலம்பில் ஆரியப்படை கடந்தவனைப் புகழும் போது
- இளைய ராயினும் பகையரசு கடியுஞ்
- செருமாண் தென்னர் குலமுத லாகலின்
என்ற பாடல் வரும்.
இளைய வயதில் பகைவரை எதிர்த்த பாண்டியன் என்றால் அது தலையாலங்கானத்தவன் தானே. அதன்படி இவ்வாரியப்படை கடந்தவனுக்கு இவன் முன்னோனே.
- சிலப்பதிகாரத்தை எழுதியவரின் காலத்தையே ஆரியப்படை கடந்தவனின் காலமாய் கொண்டோமானாலும் இந்த தலையாலங்கானத்தவனே முன்னோனாக வருவான்.
- நான் தரும் சில சான்றுகள்
- கி.மு. மூன்றாம் நூற்றாண்டு மதிக்கத்தக்க பெருவழுதி என்னும் பெயர் பொரித்த நாணயங்கள் பல கிடைத்துள்ளன. இவற்றிலுள்ள சின்னங்களெல்லாம் யாகத்துக்கு பயன்படுபவை. அதனால் இந்நாணயத்தில் பொறிக்கப்பட்டவன் குடுமியாகலாம்.
- கி.மு. 2ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க மாங்குளம் கல்வெட்டுக்களில் நெடுஞ்செழியன் பெயருளது. மாங்குடி கிழவர் தலையாலங்கானத்தவனைப் புகழும் போது குடுமியை இவன் முன்னோனாக குறிப்பிட்டுளார். அதன்படி பார்க்கையில் குடுமிக்கு சிலகாலம் பிந்தியவனே இவன் என்று தெரிகிறதல்லவா.
மொத்தத்தில் தலையாலங்கானத்தவனுக்கு ஆரியப்ப்டை கடந்தவன் முன்னோன் என்பதற்கு சான்றிலாமையாலும், ஆனால் ஆரியப்படை கடந்தவனுக்கு தலையாலங்கானத்தவன் முன்னோன் என்பதற்கு சான்றுளமையாலும், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி பெயர் பொறித்த நாணயங்களின் காலமும் மாங்குளம் கல்வெட்டுகள் குறிப்பிடும் நெடுஞ்செழியன் காலமும் ஒத்து வருவதாலும் தலையாலங்கானத்தவன் ஆரியப்படை கடந்தோனுக்கு முன்னோனே என ஐயமின்றி விளங்கும்.
- அதனால் இத்தலையாலங்கானத்தவனின் காலத்தை கிபி நூற்றாண்டில் குறிப்பிடுவது பொருந்தாது என்பது என் கருத்து மற்றவர் கருத்துக்களும் தேவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18
- 29, 16 சூன் 2012 (UTC)
- அன்புள்ள தென்காசியாருக்கு, நெடுஞ்செழியன் கட்டுரையைப் பார்த்துவிட்டு வரிசைப்படுத்துங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:34, 17 சூன் 2012 (UTC)
புறம் 371, 372
தொகுமேல் கொடுத்த பாடல்களில் செழியன் இறப்பது போல் குறிப்புகள் இல்லையே. இதை எந்த நூலில் இருந்து எடுத்தது எனக் கூற வேண்டுகிறென்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:17, 21 மே 2013 (UTC)