பேச்சு:நோயாளர் ஊர்தி
ஆம்புலன்சு என்பதை விட நோயாளர் ஊர்தி என்பதே நன்றாக இருக்கிறது.. மேலும் அதுவே தமிழ்த் தலைப்பும்.. நோயாளர் ஊர்தி என்ற தலைப்புக்கோ அல்லது வேறு ஏதாவது சரியான தமிழ்த் தலைப்பு இருந்தால் அதற்கு மாற்றினால் நன்று..--shanmugam (பேச்சு) 07:11, 26 மார்ச் 2012 (UTC)
- முதலுதவி வண்டி (ஊர்தி).--Kanags \உரையாடுக 07:36, 26 மார்ச் 2012 (UTC)
- அவசர ஊர்தி என்பது சரியாக இருக்குமா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:11, 26 மார்ச் 2012 (UTC)
பிணியாளர் ஊர்தி, அவசர ஊர்தி இவற்றில் கூகிள் தேடலில் [1] அதிகம் காணப்பட்டவை அவசர ஊர்தி இதுவே சரியாக இருக்கும் --ஸ்ரீதர் (பேச்சு) 09:12, 26 மார்ச் 2012 (UTC)
- திரிவூர்தி(EUDICT)
- (நோயர் உந்து; இயங்கு மருந்தகம்; நகரும் மருந்தகம் (EUDICT)
- நோயர் ஊர்தி (EUDICT)
- நோயாளர் ஊர்தி (EUDICT)
- நோயாளர் வட்டி (EUDICT)
- மருத்துவ ஊர்தி, உதவுகை ஊர்தி (EUDICT)
- விபத்துச்சேவையூர்தி (EUDICT)
- மருத்துவ ஊர்தி , நோயாளர் ஊர்தி , உதவுகை ஊர்தி .(Tamil Cube)
- மருத்துவ ஊர்தி , உதவுகை ஊர்தி (Tamil Cube).
- இயங்கு மருந்தகம் , நோயாளி வண்டி , படையைப் பின்பற்றிச் செல்லுகிற மருந்து வண்டி .(Tamil Cube)
- air ambulance நோயாளர் வானூர்தி .(Tamil Cube)
மேலே கொடுத்துள்ளவை AMBULANCE என்ற சொல்லுக்கு இரண்டு ஆங்கிலம் தமிழ் அகரமுதலிகள் (EUDICT , TAMILCUBE) தரும் பொருளாகும்
கட்டுரைக்கு ஆம்புலன்சு என்று தலைப்பிட்டதற்கு சில காரணங்கள் உள்ளன:
தகவல் தேடும் பழக்கம் (Information seeking behaviour) எவ்வாறெனில் பயனர்கள் தங்களுக்குத் தெரிந்த கருத்தை (concept) தங்களுக்கு மிகவும் தெரிந்த திரவுச் சொற்களின் (keywords அல்லது descriptors) துணை கொண்டு தேடுகிறார்கள். எனவே கட்டுரைத் தலைப்பிடுவது பயனருக்கு மிகவும் அறிமுகமான இலக்கு மொழியில் (target language) இருப்பது பயன்பாட்டை மேனிலைப் (use promotion) படுத்த உதவும். நம் இலக்கு தெரிந்த கருத்து (concept) மற்றும் திறவுச் சொற்கள் (keywords) மூலம் தெரியாத கருத்து (concept) மற்றும் திறவுச் சொற்களை (keywords) அறிமுகப் படுத்துவதாகும். (From known to unknown). நம் மொழி வளமிக்கது ஒரு கருத்துக்கு (concept ) பல பொருள்கள் (meaning) உள்ளன (polysemes). ஒரு சொல் பல பொருளிலும் கையாளப் படுகின்றன. (homonyms). எனவே தான் கட்டுப் படுத்தப்பட்ட சொல் தொகுதிகள் (controlled vocabullary) நுட்ப எழுத்துக் கலையில் (technical writing) கையாளப் படுகின்றன.
இக்கட்டுரையில் ஆம்புலன்சு என்ற தெரிந்த திரவுச்சொல்லை பயன்படுத்தி தெரியாத திறவுச் சொல்லை அறிமுகப்படுத்துகிறோம். இவ்வாறு அறிமுகப்படுத்தும் சொல் விக்கிப்பீடியர்களால் ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல்லாகவும் அனைத்து தறுவாயிலும் (context ) கையாளத்தக்க திறன் படைத்த சொல்லாகவும் இருத்தல் அவசியம்.
இது போன்ற கட்டுப் படுத்தப்பட்ட சொல் தொகுதிகளை (controlled vocabulary) உருவாக்குவது (terminology) விக்சனரியின் தலையாய பணிகளில் ஒன்று. இவ்வாறு அமைக்கப் பட்ட சொற்றொகுதிகளை மட்டுமே பயன் படுத்த விக்கிபீடியர்கள் நெறிப்படுத்தப் படவேண்டும்.
இவை எல்லாம் என் ஆசைகள். நான் technical writing பயிற்சி பெற்றுள்ளதால் இவற்றை விளக்கத் துணிந்தேன். தவறெனில் மன்னிக்கவும்.
மற்றபடி நிர்வாகிகள் முடிவுப்படி தலைப்பை மாற்றி அமைக்க வேண்டுமெனில் அவ்வாறே மாற்றி விடலாம். --Iramuthusamy (பேச்சு) 11:27, 26 மார்ச் 2012 (UTC)
விரிவு பெறாத துணைத்தலைப்புகளைச் சேர்த்து வைத்தல்
தொகுஇக்கட்டுரையில் சில துணைத்தலைப்புகள் விரிவு பெறாமல் இருந்தன. எனினும், பங்களிப்பாளரின் உழைப்பைக் கருத்தில் கொண்டு அதனை அழிக்க மனமில்லாமல் <!-- --> என்னும் comment tag இட்டு சேமித்து வைத்துள்ளேன். தொகுப்புப் பெட்டியில் தென்படும் அதே வேளையில் பொதுப் பார்வைக்குத் தெரியாது. இதே அணுகுமுறையை அனைத்துக் கட்டுரைகளிலும் பின்பற்றலாமா?--இரவி (பேச்சு) 09:05, 31 அக்டோபர் 2012 (UTC)