பேச்சு:பகா எண்
prime minister - பெரும அமைச்சர் என்ற சொல்வது பொருந்துமா? பிரதம என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன என்று தேடிக் கொண்டிருந்தேன்--ரவி 10:53, 5 ஆகஸ்ட் 2007 (UTC)
- பொருந்தும் என்று நினைக்கிறேன். 'maximum' என்பதற்கும் 'பெருமம்' தான். உண்மையில், அது பெரும எண் (prime number) உடன் மோதுவதால், நான் 'maximum' க்கு வேறு சொல் தேடிக்கொண்டிருக்கிறேன். --Profvk 14:40, 5 ஆகஸ்ட் 2007 (UTC)
- முதலமைச்சர் என்று வழக்கத்தில் ஒரு நல்ல சொல் இருக்கின்றதே. --Natkeeran 14:58, 5 ஆகஸ்ட் 2007 (UTC)
நண்பர்களே, மன்னிக்கவும். Prime Numbers என்பதற்கு பெரும எண்கள் என்பது பொருந்தாது. பெருமம் என்றால் maximum என்று முன்னர் ஆண்டிருக்கின்றோம். சிறுமம் என்றால் minimum. இச்சொற்கள் இப்பொருட்களுக்கு வேண்டாம் எனினும், பெரும என்னும் சொல் prime என்பதற்குப் பொருந்தாது. வழக்கத்தில் உள்ள சொல் வகுபடா எண். நான் ஒரு முறை ஒரு வெண்பாவில் பயன்படுத்திய சொல் தனியெண். Prime Minister என்பதற்குத் தலைமை அமைச்சர் என்பது வழக்கில் உள்ளது. (முதலமைச்சர் என்பது chief minister). Prime Number என்பதற்கு வகுபடா எண் என்பது பொருந்தும். வகுபடாதனி என்றும் கூறலாம். --செல்வா 16:07, 5 ஆகஸ்ட் 2007 (UTC)
- வகுபடா எண்ணா? பகா எண்ணா? --Profvk 16:48, 5 ஆகஸ்ட் 2007 (UTC)
- பகாதனி என்ற பெயர்ச்சொல் உண்டா?--Profvk 16:59, 5 ஆகஸ்ட் 2007 (UTC)
- ஆம் பகாஎண் என்பதுதான் சரியானது. அவசரத்தில் வகுபடாஎண் என்று எழுதிவிட்டேன். மன்னிக்கவும். இதுதான் வழக்கில் உள்ள சொல். --செல்வா 17:09, 5 ஆகஸ்ட் 2007 (UTC)
- வழக்கில் உள்ள சொல் தவிர, பகாதனி என்று நீங்கள் குறிப்பிட்டதுபோலும் கூறலாம். எனக்கும் பிடித்துள்ளது. ஆனால், தேவை இல்லை என்று நினைக்கிறேன். --செல்வா 17:12, 5 ஆகஸ்ட் 2007 (UTC)
- Prime என்பதைப்பெயர்ச் சொல்லாக வைத்து பல கூட்டுப்பெயர்கள் கணிதத்தில் நடமாடுகின்றன. எ.கா: Mersenne prime; Fermat Prime; Titanic prime; Factor Prime, etc. இவைகளுக்கெல்லாம் 'பகாதனி' என்ற சொல், (எண் என்ற சொற்சேர்க்கை இல்லாமல்) பயன்படும்.--Profvk 18:58, 5 ஆகஸ்ட் 2007 (UTC)
- ஆம். நல்ல கருத்து பேரா.வி.கே. Mersenne prime; Fermat Prime; Titanic prime; Factor Prime, போன்ற சிறப்புத் தனி எண்களுக்கு பகாதனி என்னும் சொல் பொருந்தும். பயன்படுத்தலாம்.--செல்வா 12:07, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
- Prime என்பதைப்பெயர்ச் சொல்லாக வைத்து பல கூட்டுப்பெயர்கள் கணிதத்தில் நடமாடுகின்றன. எ.கா: Mersenne prime; Fermat Prime; Titanic prime; Factor Prime, etc. இவைகளுக்கெல்லாம் 'பகாதனி' என்ற சொல், (எண் என்ற சொற்சேர்க்கை இல்லாமல்) பயன்படும்.--Profvk 18:58, 5 ஆகஸ்ட் 2007 (UTC)
முதன்மை எண் என்ற தலைப்பு பொருத்தமாயிருக்கும் எனக் கருதுகிறேன். இலங்கைப் பாடநூல்களில் இச்சொல்லே பயயன்படுகிறது.--Prash 06:10, 27 ஆகத்து 2011 (UTC)
- வழிமாற்று ஒன்று முன்னரே உள்ளது. தற்போது, கட்டுரையின் முதல் வரியில் அடைப்புகளுள் குறிப்பிட்டுள்ளேன்.
- தங்களின் கணிதக் கட்டுரைகளைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடருங்கள். வளரட்டும். வாழ்க. அன்புள்ள --Sengai Podhuvan 12:51, 27 ஆகத்து 2011 (UTC)
- தமிழ்நாட்டுப் பாடநூல்களில் பகுஎண், பகாஎண் என்னும் குறியீடுகளே உள்ளன. அவை மிகவும் பொருத்தமானவை. --Sengai Podhuvan 12:57, 27 ஆகத்து 2011 (UTC)
- Prime numbers are divisible by 1 and self, so calling them பகாஎண் would be improper IMO பகாஎண் -> indivisible number, ala 0. ஸ்ரீகாந்த் 13:17, 27 ஆகத்து 2011 (UTC)
- எனக்கும் பகா எண் என்ற இத்தலைப்பு பொருத்தமில்லை என்றே படுகிறது, ஒன்றாலும் தன்னாலும் மட்டுமல்ல இவ் எண்களை (0.25,0.5) போன்ற கணக்கிட முடியாதளவு எண்களாலும் மீதியின்றி வகுக்கலாம்(பகுக்கலாம்).--Sank (பேச்சு) 16:28, 20 சூன் 2012 (UTC)
- தன்னாலும் ஒன்று என்னும் எண்ணாலும் தவிர வேறு எந்தவொரு முழு எண்ணாலும் வகுக்க முடியாது என்பதே பொருள். எந்த ஒரு கலைச்சொல்லும் ஒரு குறிப்புதான், அதன் வரையறையைக் கொண்டுதான் சரியாக பொருளைப் புரிந்து கொள்ள முடியும். பகாவெண் என்பது வழக்கூன்றிய சரியான சொல். பகாத்தனி என்பது அதற்கு இன்னுமொரு சொல். சிறீகாந்து சொல்வது போல பொருள் கொள்ள வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் Prime number என்றால் முதல் எண் "என்றுதான்" பொருள் என்று வாதாடலாம். பகா எண் அல்லது பகாத்தனி என்றால் என்ன என்று வரையறை செய்தே ஆள வேண்டும் (இது தமிழுக்கு மட்டும் அன்று எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்). தமிழில் இருப்பதால், சிந்திக்கும் திறன் வெளிப்படுவதால்தான் பொருந்தும் பொருந்தாது என்னும் கருத்துகளே எழுகின்றன :) :) --செல்வா (பேச்சு) 18:29, 20 சூன் 2012 (UTC)
- நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. தலைப்பு அப்படியே முழுப்பொருளையும் தருவதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்புக்காக Prime number என்றால் முதன்மை எண் என்றும் Factor Prime இனை முதன்மை காரணி என்றும் இலங்கையில் அழைக்கின்றோம்.--Sank (பேச்சு) 18:50, 20 சூன் 2012 (UTC)
- தன்னாலும் ஒன்று என்னும் எண்ணாலும் தவிர வேறு எந்தவொரு முழு எண்ணாலும் வகுக்க முடியாது என்பதே பொருள். எந்த ஒரு கலைச்சொல்லும் ஒரு குறிப்புதான், அதன் வரையறையைக் கொண்டுதான் சரியாக பொருளைப் புரிந்து கொள்ள முடியும். பகாவெண் என்பது வழக்கூன்றிய சரியான சொல். பகாத்தனி என்பது அதற்கு இன்னுமொரு சொல். சிறீகாந்து சொல்வது போல பொருள் கொள்ள வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் Prime number என்றால் முதல் எண் "என்றுதான்" பொருள் என்று வாதாடலாம். பகா எண் அல்லது பகாத்தனி என்றால் என்ன என்று வரையறை செய்தே ஆள வேண்டும் (இது தமிழுக்கு மட்டும் அன்று எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்). தமிழில் இருப்பதால், சிந்திக்கும் திறன் வெளிப்படுவதால்தான் பொருந்தும் பொருந்தாது என்னும் கருத்துகளே எழுகின்றன :) :) --செல்வா (பேச்சு) 18:29, 20 சூன் 2012 (UTC)
’composite number’ என்பது கலப்பெண் அல்லது கலப்பு எண் என இக்கட்டுரையுலும் வேறுசில கட்டுரைகளிலும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ’complex number‘ என்பதும் கலப்பெண் எனக் குறிக்கப்படுவதால் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக ’composite number’ -’பகு எண்’ (தமிழ்நாட்டுப் பாடநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு) என மாற்றியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:17, 22 மே 2014 (UTC)