பேச்சு:பகுமுறை வடிவவியல்
வாள்முனை ஆள்கூற்று முறைமை உள்ள பெயரைக் கருத்தில் கொண்டு இக்கட்டுரையின் தலைப்பை ஆள்கூற்று முறைமை என்று மாற்றலாமா? Coordinate system என்பது குறித்தே இக்கட்டுரையை எழுதியுள்ளோம். அடிப்படை கலைச்சொற்களில் சீர்மை தேவை.--இரவி (பேச்சு) 06:59, 15 மார்ச் 2012 (UTC)
நீக்க வேண்டாம்
தொகுசோடாபாட்டில், பகுதி வகையீட்டுச் சமன்பாடு, இக்கட்டுரையைப் போன்று அடிப்படை முக்கியத்துவம் உள்ள தலைப்புகளுக்கு விரைவு நீக்கல் வார்ப்புரு இட வேண்டாமே? {{துப்புரவு}}, {{தரமுயர்த்து}} முதலிய வார்ப்புருக்களை இடலாம். அடிப்படை முக்கியத்துவம் இல்லாத, வேறு பயனர்கள் பங்கெடுத்து மேம்படுத்த உதவும் உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகளுக்கு மட்டும் நீக்கல் வார்ப்புரு இடலாம். நன்றி--இரவி (பேச்சு) 10:36, 15 மார்ச் 2012 (UTC)
- ”அடிப்படை முக்கியத்துவம்” என்பது காண்போரின் பார்வையில் உள்ளது. உங்களக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிவது எனக்குத் தோன்றுவதில்லை. hard sciences முக்கியத்துவம் வாய்ந்தது humanities முக்கியத்துவம் அற்றது என்று நான் கருதவில்லை. ஒற்றை வரி/தலைப்பு விளக்கக் கட்டுரைகள் வேண்டாமெனில் அந்தத் தரம் அனைத்து தலைப்புகளுக்கும் பொருந்தும். மற்ற கட்டுரைகளைப் போலவே இதிலும் இட்டுள்ளேன். ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. மேம்படுத்துவோர் மேம்படுத்தலாம். ஒரு வரியால் பயனெதுவும் இல்லை எனப் பல கட்டுரைகளை நீக்கி வந்துள்ளோம். அதே அளவுகோலைக் கொண்டே அனைத்து தலைப்புகளையும் அளவிட வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 10:40, 15 மார்ச் 2012 (UTC)
ஏ. எம். ஹாஜா பந்தே நவாஸ் கட்டுரையில் பின்வரும் தகவல் உள்ளது:
//ஏ. எம். ஹாஜா பந்தே நவாஸ் கெம்பலாபாத் தூத்துக்குடி முத்துவாப்பா மெயின்ரோடுவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும். எழுத்தாளரும், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றவருமாவார்.//
ஒரே ஒரு நூல் உசாத்துணை உள்ள இந்தக் கட்டுரை அரிய தகவல் என்றும் நீக்கக் கூடாது என்றும் வாக்கிட்டுள்ளீர்கள். இதனை விட பகுமுறை வடிவவியல் கட்டுரையில் உள்ள வரி உங்கள் பார்வையில் எவ்வாறு முக்கியத்துவம் குறைவானது என்று விளக்குவீர்களா? இது ஒரு வரிக் கட்டுரை என்று நீக்கினால் ஏன் இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் குறித்த 158 கட்டுரைகளில் மூன்று வரிக்கு குறைவான கட்டுரைகளை நீக்கக்கூடாது?--இரவி (பேச்சு) 10:57, 15 மார்ச் 2012 (UTC)
- மூன்று வரிகளுக்குக் குறைவான எவற்றையும் வேறு வேறாக நான் கையாளச் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் பகுப்பில் “மூன்று வரிகளுக்குக் குறைவாக” உள்ளது என்று எங்கும் நாம் உரையாடலில் கொண்டு வரவில்லை. அளவு பற்றியானதாக இன்றி அங்கு “குறிப்பிடத்தக்க தன்மை” பற்றியானதாகவே அந்த பகுப்பு பற்றியான உரையாடல் இருந்தது. அங்கு நீங்கள் எழுப்பிய கேள்வி அளவு பற்றியானது இல்லையே, ஏன் இதொடு தொடர்பு படுத்துகிறீர்கள்?. எப்படி இருப்பினும் தாராளமாக அப்பகுப்பில் உள்ள “மூன்று வரிக்கு குறைவான” கட்டுரைகளுக்கும் குறித்த கால நீக்கல் வார்ப்புரு இட்டு நீக்கலாம். “மூன்று வரிகள் குறையாதிருக்க வேண்டும்” என்பது நாம் கொண்ட ஒரு வரைமுறை அதை ஒரே மாதிரி அனைத்து கட்டுரைகளுக்கும் பயன்படுத்துவதில் எனக்கு எந்த மறுப்புமில்லை. தனித்து நிற்க போதிய உள்ளடக்கம் இல்லையெனில் பட்டியலாக்கலாம் என்றே அங்கு வாக்களித்துள்ளேன் (அதே போல பல கட்டுரைகள் இருப்பதால் பட்டியலாக்கம் சாத்தியமென்பதால்) இதனையும் கணிதத் தலைப்புகள் கட்டுரைக்குக் கூட வழிமாற்றி விடலாம் தவறில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 11:06, 15 மார்ச் 2012 (UTC)
- மீண்டும் ஒரு முறை பகுப்பு பேச்சு:இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள், விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு இவ்விரு பக்கங்களையும் படித்துப் பார்த்தேன். அளவு பற்றி யாரும் குறிப்பிடவில்லை. நானும் அளவு குறைந்தாலும் நீக்க வேண்டாமென்று எங்கும் சொல்லவுமில்லை. இவ்வுரையாடல் முழுக்க அவ்வெழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்கதன்மையைப் பற்றியே அமைந்துள்ளது. அப்பகுப்பில் ஒருவரிக்கட்டுரைகள் இருப்பின் அவற்றில் தாராளமாக நமது குறித்த கால நீக்கல் வார்ப்புருவை இட்டு ஒரு மாதம் கழித்து நீக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:13, 15 மார்ச் 2012 (UTC)
- குறிப்பு: என் தனிப்பட்ட விருப்பம் - அளவு அடிப்படையில் எதையும் நீக்காதிருப்பதே - ஆங்கில விக்கி போல ஒரு வரிக்கட்டுரைகளை அனுமதிப்பதில் எனக்கு விருப்பமே. ஆனால் பிற காரணங்களால் (ஒரு வரிக்கட்டுரைகள் மிகுந்து தரம் குறையும், தெலுங்கி விக்கி போல் நிகழலாம் என்ற காரணங்களால்) தமிழ் விக்கியில் வழக்கில் உள்ள வழிமுறையை அப்படியே கட்டுரை தலைப்புகள் பேதமின்றி (முக்கியத்துவம் என்ற கருதுகோளைக் கொண்டுவராமல்) ஒரே போல அனைத்து கட்டுரைகளுக்கும் செயல்படுத்த முனைகிறேன். “முக்கியமானது / முக்கியமானதல்ல” என்ற வரையறை subjective. ஆளுக்காள் மாறுபடும். எனவே அதைக் கொண்டு சீரான நீக்கல் வழிமுறை ஒன்றை உருவாக்கி பின்பற்ற இயலாதென்பதே என் கருத்து. அறிவியல், நடிகர், திரைப்படம், எழுத்தாளர் என்று பிரித்துப்பாராமல் அளவு/வரிகணக்கு என்ற ஒரே அளவுகோல் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் அளவு குறைவானவற்றை நீக்கலாம் என்ற கொள்கையை மாற்றிக் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:26, 15 மார்ச் 2012 (UTC)
சோடாபாட்டில், அடிப்படை முக்கியத்துவம் என்பது காண்போரின் பார்வையில் உள்ளது என்றாலும் இது குறித்த பொதுப்பார்வையும் இருப்பதால் தானே ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய முக்கிய கட்டுரைளை உருவாக்கி வருகிறோம்? உள்ளூர் முக்கியத்துவம், உலக முக்கியத்துவம், துறை சார் முக்கியத்துவம் என்று பொதுக்கருத்துடனும் இணக்க முடிவுடனும் வரையறுக்க முடியும். மூன்று வரிக்குக் குறைவானது என்பதை மட்டுமே பிரச்சினையாகக் கருதி அந்த விதியை உருவாக்கவில்லை. மூன்று வரிக்கும் குறைவாக கட்டுரைகள் உருவாக்கலாம் என்றால் சிலர் அதே போல் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் உருவாக்க முனையும் போது அவற்றை விரிவாக்குவது கடினம். கட்டுரையை விரிவாக்கி எழுதும் அளவுக்குப் போதிய உசாத்துணைகள் இல்லை என்றால் இன்னும் சிரமம் ஆகும். ஒரு திறமையான எழுத்தாளர் ஒன்றுமே இல்லாத விசயத்தை மூன்று வரிகளாக மாற்றி எழுத முடியும். ஆக, ஒரு புறம், மூன்று வரியோ அதற்கு மேலோ இருக்கிறது என்பதற்காகத் தரவுத்தள கட்டுரைகள், குறிப்பிடத்தக்கமை சர்ச்சை உள்ள கட்டுரைகளை ஏற்கிறோம். தனியாக இருந்தால் நீக்கப்படக்கூடிய கட்டுரையை 100+ கட்டுரைகள் உள்ளன என்பதற்காக பட்டியல் ஆக்குகிறோம். மறுபுறம், மூன்று வரிக்குக் குறைவாக உள்ள அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளை நீக்குகிறோம். ஒட்டு மொத்த வளர்ச்சி நோக்கில் பார்க்கையில், இது சரியாகத் தோன்றவில்லை. இதில் உங்களைத் தனிப்பட்டு ஏதும் சொல்லவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் நீக்கல் கொள்கை குறித்து நாம் தெளிவாக உரையாடி ஒரு புரிதலுக்கு வருவது நன்று. ஒரே ஒரு வேண்டுகோள்: பகுதி வகையீட்டுச் சமன்பாடு பக்கத்தில் நீக்கல் வார்ப்புரு இருப்பதையே இன்று தான் பார்த்தேன். அதை மேம்படுத்தலாம் என்று நினைக்கும் முன்னரே, ஒரு மாத கால அவகாசம் முடிந்ததால் அதனை நீக்கி உள்ளோம். நீக்கல் வார்ப்புரு இடும் போது தொகுப்புச் சுருக்கத்தில் இட்டால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் கவனம் பெறும். வேறு வகையிலும் விரைந்து நீக்க வேண்டிய பக்கங்கள் பகுப்பைக் காட்சிப்படுத்தி கவனம் ஈர்ப்பது பற்றி சிந்திக்க வேண்டும். இக்கட்டுரைகளை எழுதியோர் வழமையான பயனர்கள் என்றால் அவர்கள் பேச்சுப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கலாம். அதே துறையில் உள்ள மற்ற பங்களிப்பாளர்களின் கவனத்தையும் ஈர்க்கலாம். எடுத்துக்காட்டுக்கு, உயிரியில் தொடர்பான கட்டுரை என்றால் விக்கித் திட்டம் உயிரியல் பக்கத்தில் குறிப்பிடலாம். அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த, விரிவாக்கி எழுதுவதற்கு வாய்ப்புள்ள கட்டுரைகளை மேம்படுத்தத் தேவையான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நன்றி--இரவி (பேச்சு) 13:05, 15 மார்ச் 2012 (UTC)