பேச்சு:பரதநாட்டியம்
பொருள்
தொகுசைவ சமயிகள் என்ற சொல் இக்கட்டுரையில் ஆளப்பட்டுள்ளது. இந்த வார்த்தை சரியா? இதன் பொருள் என்ன? --Sivakumar \பேச்சு 07:45, 22 செப்டெம்பர் 2006 (UTC)
சிவா, சமயிகள் என்பது சமயத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பொருள்தரும். இது சரியானதுதான். சான்றுக்காக, மதராஸ் பல்கலைக் கழகத்தின் தமிழகராதியில் இருந்து தொடர்புள்ள பகுதிகளை வெட்டி ஒட்டியிருக்கிறேன் பார்க்கவும். இரண்டாவது பதிவில் சைவசமயிகள் என்ற சொல் நேரடியாகவே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.
- சமயி (p. 1293) [ camayi ] n camayi . < samayī nom. sing. of samayin. 1. Religionist, sectarian; மதஸ்தன். தக்க சமயிகள் தந்திறங் கேட்டதும் (மணி. 28, 86). 2. (Šaiva.) One who has been initiated by the camaya-tīṭcai; சமயதீட்சை பெற்றவன். சமயியெனப் புத்திரகன் சாதகனு மென்ன (சைவச. மாணாக். 4).
- சைவர் (p. 1645) [ caivar ] n caivar . < Šaiva. Those who profess the Šaiva religion, of seven classes, viz., aṉāti-caivar, āti-caivar, makā-caivar, aṇu caivar, avāntara-caivar, piravara-caivar, antiya-caivar; அனாதிசைவர், ஆதிசைவர், மகா சைவர், அணுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என்ற எழுவகைச் சைவசமயிகள். (சைவச. பொது. 435, உரை.)
குழப்பம் இருக்குமானால், சைவர் என்றோ, சைவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றோ சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்றோ மாற்றிக்கொள்ளலாம். Mayooranathan 08:02, 22 செப்டெம்பர் 2006 (UTC)
- மேற்கோள்களுடன் கூடிய விளக்கத்திற்கு நன்றி மயூரநாதன். சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் என அடைப்புக்குறிக்குள் தரலாம். --Sivakumar \பேச்சு 08:15, 22 செப்டெம்பர் 2006 (UTC)
இயன்றவரை தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துங்கள் ( அஹம்யுத ஹஸ்தங்கள் எதிர் கை அசைவுகள்)
தொகுபரதநாட்டியம் தொடர்பாக பெருந்தொகை கலைச்சொற்களுக்கு தமிழ்ச் சொற்கள் உண்டு. எனவே இயன்றவரை தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவும். குறைந்தளவு இணையான தமிழ்ச் சொற்களையாவது தர வேண்டும். எ.கா நேத்ர பேதம் என்பதிலும் பார்க்க கண் அசைவுகள் என்றும், அஹம்யுத ஹஸ்தங்கள் என்பதிலும் பார்க்க கை அசைவுகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் பார்க்க: பரதநாட்டியம் தலைப்புகள் பட்டியல். --Natkeeran (பேச்சு) 13:59, 26 சூன் 2013 (UTC)
- ஆம் நற்கீரன், பரதநாட்டியத்தில் கை அசைவுகள் , கண் அசைவுகள் , கழுத்தசைவுகள் என்பன உண்டு. சமசுகிரதத்தில் பேதம் எனப்படுகிறது(அசைவு). எனினும் ஹஸ்தங்கள் என்பவை முத்திரைகள் எனப்படுகின்றன. அசம்யுத ஹஸ்தங்கள் ஒற்றைக்கை முத்திரைகள் என்றும் சம்யுத ஹஸ்தம் என்பது இரட்டைக்கை முத்திரைகள் என்றே வழங்கப்படுகிறது. பார்க்க இங்கே குறிப்பிட்டுள்ளேன் -- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 13:51, 27 சூலை 2013 (UTC)