பாகல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நீக்கல் அனைத்தும் சரியல்ல தொகு

இந்த நீக்கலில் முழுஉடன்பாடு எனக்கில்லை. மருத்துவ பயன்பாடுகளை மட்டும் நீக்கி இருக்கலாம். எனினும், அது உரையாடலுக்கு பின்னே தான் செய்தல் சிறந்தது.. ஆனால், படங்களை நீக்குதல் சரியல்ல என்றே நான் எண்ணுகிறேன். பொதுவாக நீக்குதலுக்கு முன்னே, அது எத்தகையதாயினும், உரையாடற்பக்கத்தில் தெரிவித்து விட்டு, நீக்குதல்/ மாற்றுதல் சிறந்த நடைமுறையாகவே இருக்கும். நம்மைப் போன்ற வளரும் சமூகத்தினர், இந்த அறிவிப்பு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பொதுவகத்தில் தான், எனக்குத் தெரிந்தவரை கடுமையான விதிகள் பின்பற்றப் படுகின்றன. ஏனெனில், உள்வரும் தரவு அங்கு மிக அதிகம். எனினும், காரணம் வினவப்படுகிறது. அறிவிப்பு கொடுக்கப்படுகிறது. எனவே, இது பற்றி சிந்திக்கவும்.--உழவன் (உரை) 11:49, 19 நவம்பர் 2015 (UTC)Reply

வெறுமனே கருத்துத் தெரிவிக்காமல், தொடர்புபட்டவரை இங்கு இணைப்பது சிறப்பு. நிற்க, எல்லாவற்றுக்கும் கருத்து தெரிவித்துதான் நீக்க வேண்டும் என்று இல்லை. சுருக்கத்தில் தெரிவித்துள்ளேன். ஆட்சேபனை இருந்து மீளமைத்தால், நான் பேச்சுப் பக்கத்தில் கருத்திடுவேன். கட்டுரை சிறிதாயிருக்க, படங்களால் நிரப்புவது நல்ல முறையாகப்படவில்லை. இந்த முறை தொடர்ந்தால் கட்டுரைக்குப் பதிலாக படங்கள்தான் இருக்கும். அவ்வாறு இருந்துள்ளது. படங்களைப் பார்க்க வேண்டுமானால் பொதுவம் உள்ளது. இத்தொகுப்பில் அவ்வாறு இணைத்துள்ளேன். படங்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விதி இங்கில்லை அல்லது இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது. வேண்டுமாயில் அது குறித்து உரையாடலாம். ஆங்கில விக்கியில் அதுபற்றி உள்ள பக்கங்கள்: Wikipedia is not an image repository, en:Wikipedia:Manual_of_Style/Accessibility#Images, en:Wikipedia:Manual_of_Style/Images, en:Template:Too many photos --AntanO 12:26, 19 நவம்பர் 2015 (UTC)Reply
அன்ரன், இக் கட்டுரையில் அக் காட்சியகம் இருப்பது பொருத்தமானதே. கட்டுரை சிறிதாக இருந்தாலு, படங்கள் இருப்பது தவறு இல்லை. ஏன் அப்படிக் கருதுகிறீர்கள். ஒரு படம் 1000 சொற்களுக்கி இணையானது என்பது பழமொழி. --Natkeeran (பேச்சு) 15:42, 19 நவம்பர் 2015 (UTC)Reply
அப்படியாயின் இன்றிலிருந்து 10 சொற்களுடன் இரு படங்களை இணைத்து 2010 சொற்கள் கொண்ட கட்டுரை உருவாக்குகிறேன். உங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுக்கு ஆ.வி. குறிப்பிட்டும், தர்க்கம் செய்வது விளங்கவில்லை. Wikipedia is not an image repository. --AntanO 16:10, 19 நவம்பர் 2015 (UTC)Reply
இக் குறிப்பிட்ட கட்டுரையில், படங்களோடு விபரங்களும் தரப்பட்டு இருந்தன. மிகவும் பயனுள்ள ஓர் இணைப்பு. உங்கள் வாதம் என்னவென்றே எனக்கு விளங்கவில்லை. மிகவும் இறுக்கமான சீர்தரங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாடும் உதவியாக அமையவில்லை. --Natkeeran (பேச்சு) 16:19, 19 நவம்பர் 2015 (UTC)Reply
இவ்வாறு படங்களால் கட்டுரைகளை நிரப்பலாம் என்றால், விக்கி அதற்கு சம்மதிக்கிறது என்றால், ஏற்றுக் கொள்கிறேன். படங்கள் நிறைந்த கட்டுரைகளை உருவாக்குகிறேன். அப்போது யாரும் மறுத்தால் தக்க பதிலை வழங்க முடியும். அல்லது அக்கொள்கை பிடிக்கவில்லை என்றால் விலகிவிடுவேன். ஆனால் விக்கி வழிகாட்டல் இன்றி உங்கள் தன்விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. என் வாதம் என்னவென்பதற்கு சான்றாக அ.வி. இணைப்புக்கள் தந்துள்ளேன். நான் தரத்தை தக்க உதாரங்களுடன் தந்திருக்கிறேன். உங்களுடைய உசாத்துணை எங்கே? "ஒரு படம் 1000 சொற்களுக்கி இணையானது" என்ற பழமொழியா? --AntanO 16:28, 19 நவம்பர் 2015 (UTC)Reply
விக்கியில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் gallery அல்லது images என்ற ஒரு பகுதி உண்டு. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது ஒன்றும். எ.கா en:Mango, en:Lake Ontario. ஆக, நீங்கள் எப்படி ஒட்டுமொத்தமாக படத் தொகுப்பை நீக்க முடியும். குறும், நெடும் என்ற வேறுபாடு இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ் விக்கியில் பெரும்பான்மைக் கட்டுரைகள் குறுங்கட்டுரைகள் என்பதால் தற்சமயமாக நீங்கள் பார்த்த ஒரு படத் தொகுப்பும் குறுங்க் கட்டுரையாக இருக்கின்றது. --Natkeeran (பேச்சு) 16:51, 19 நவம்பர் 2015 (UTC)Reply
இதுதானா உசாத்துணை?! Mango கட்டுரையில் (குறுங்கட்டுரையல்ல) மேலதிகமாக 4 படங்கள் உள்ளன. அவ்வாறு இங்கும் பல உள்ளன. அவற்றையெல்லாம் நீக்கவில்லை. கட்டுரைக்கு ஏற்பவும், கட்டுரை வடிவை குலைக்காமலும் இருந்தால் சரி. அதைவிடுத்து, வழிகாட்டலின்றி, "ஒரு படம் 1000 சொற்களுக்கு இணையானது" என்ற தன் விளக்கம் ஏற்புடையதல்ல. ஆ.வி வழிகாட்டலை உதாரணமாகக் கொண்டு நான் செயற்பட்டேன். இங்கு என்ன வழிகாட்டல் உள்ளது என்று இணைப்புத் தந்தால் அதனை கருத்திற் கொள்ளலாம். அதைவிடுத்து தன்னிலை விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. முடிந்தால் கொஞ்சம் துப்புரவுப் பணி செய்யுங்கள். நான் குறிப்பிடும் தாற்பரியம் விளங்கும். --AntanO 17:06, 19 நவம்பர் 2015 (UTC)Reply
ஆங்கில விக்கியில் நிறையக் கட்டுரைகளில் படத் தொகுப்புகள் உண்டு. ஆங்கில விக்கியிலும் கட்டுரையில் உள்ளன் படத் தொகுப்புக்களை நீக்கச் சொல்லி வழிகாட்டல் இல்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். குறுங்கட்டுரைகளில் படத் தொகுப்பு இருக்கக் கூடாது என்று வழிகாட்டல் இல்லை என்றே கருதுகிறேன். சிக்கலுக்குரிய சில கட்டுரைகளைச் சுட்டினால் அவை எப்படி "கட்டுரை வடிவை"க் குறைக்கின்றன என்று பார்க்க முடியும். --Natkeeran (பேச்சு) 20:43, 19 நவம்பர் 2015 (UTC)Reply
உங்களுக்கு புரிதலில் சிக்கல் உள்ளதென்று நினைக்கிறேன். அல்லது வழிகாட்டல் முழுவதையும் வாசித்து விளங்கிக் கொள்ளவில்லை. படங்களை அதிகம் இணைப்பேன் என்று வாதம் புரிந்து கொண்டே இருப்பதில் பயன் இல்லை. படங்களினால் கட்டுரையை நிரப்பலாம் என்ற வழிகாட்டல் எங்குள்ளது? நீங்கள் படங்களை நிரப்புவோம் என்று பிடிவாதம் பிடித்தால், என்னாலும் நிரப்ப முடியும். துப்புரவுப் பணியை கிடப்பில் போட்டுவிட்டு படங்கள் நிரப்புதல் பணியை செய்யமுடியும். பூசணி - இக்கட்டுரையைப் பாருங்கள். நன்றாகத்தானே உள்ளது என்று சொல்லலாம். சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வடிவமைப்பு பற்றி உங்களுக்கு எவ்வித இரசணை உள்ளதோ நான் அறியேன். --AntanO 03:45, 20 நவம்பர் 2015 (UTC)Reply
பூசணி கட்டுரையில் படங்களால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது எனது கருத்து. நன்றி. --Natkeeran (பேச்சு) 19:26, 20 நவம்பர் 2015 (UTC)Reply

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────@AntanO:! படங்களை முழுமையாக நீக்கியது சரியான நடைமுறை அல்ல. அப்படங்களை மீண்டும் இட, நான் எத்தகைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? கட்டுரையை விட, பேச்சுபக்கத்தின் அளவு, அதிகமாக வளருவதில் எனக்கு உடன்பாடில்லை. --உழவன் (உரை) 02:06, 20 நவம்பர் 2015 (UTC)Reply

உங்கள் விருப்பம்போல் செய்யலாம். அல்லது கட்டுரை வடிவமைப்பு பற்றி அறிந்தவரிடம் வினவலாம். அல்லது விக்கி சமூகத்தின் ஒப்புதல் பெறலாம். பேச்சை தொடக்கிவிட்டு, கட்டுரையை விட, பேச்சுபக்கத்தின் அளவு, அதிகமாக வளருவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் எதும் நடக்கப்போவதில்லை. :) --AntanO 03:45, 20 நவம்பர் 2015 (UTC)Reply
@AntanO:! //பேச்சை தொடக்கிவிட்டு, கட்டுரையை விட, பேச்சுபக்கத்தின் அளவு, //
நாம் விக்கியில் செயற்படுவது கட்டுரையை வளர்பதற்கே. பலரும் ஈடுபடுவதற்கான நடைமுறைகளையே ஆய்வோம். எனவே, இங்கு நீங்கள் நீக்கியது தவறு என்று மட்டுமே, எனது கருத்தினை முன்நிறுத்தவில்லை. உரையாடலுக்கு பிறகு நீக்குதல் நல்ல நடைமுறை என்பதனையே முன்மொழிகிறேன். எனவே தான் பேச்சு பக்கம் வளர விருப்பமில்லை என்று கூறினேன். எனது முன்மொழிவு பலரையும் ஈடுபடுத்த பயனாகும்.
//உங்கள் விருப்பம்போல் செய்யலாம்.//
தாவரவியலை கல்லூரி அளவில் படித்த எனக்கு அடிப்படைத் தெரியும். எனவே, எனது விருப்பத்தை விட, பலரும் ஒன்று கூட எது தடையாக உள்ளது என்பதை பல கல்லூரிகளிலும், சில பல்கலைகழகங்களிலும் நடந்த கலந்துரையாடல் முடிவுகள் அனைத்தையும் கூற விருப்பம். நேரமேலாண்மை எனக்கு இன்னும் பிடிபடவில்லை. சுருக்கமாகச் சொன்னால், en:Wikipedia:Glossary_of_plant_morphology என்பது போன்ற பக்கம் நம்மிடமில்லை. மேலும், அது முழுமையாகவும் அங்கில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் பின்பற்றியுள்ள தாவரவகைப்பாட்டியல் முறை மிகப் பழையமுறை. இதுபற்றி உரையாடலை இங்கு தொடங்கினேன். எளிமையாகச் சொன்னால், விக்கி இனங்களில் பின்பற்றப்படும் முறையே, தற்போது முன்னேறிய நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை ஆகும். இந்நிலையில் படங்களும், அதனுரையும் மிக மிக முக்கியம். தொடக்க பங்களிப்பாளர்களுக்கு , விக்கி ஒரு கூட்டுமுயற்சி என்பதற்கு படமும், படவுரை இடுதலும் நெருக்கத்தை உருவாக்கும். படங்களின் எண்ணிக்கையை நாம் ஒன்று கூடி முடிவெடுக்கலாம். எனவே தான் நீக்குதலில் விருப்பமில்லை என்கிறேன்.
//கட்டுரை வடிவமைப்பு பற்றி அறிந்தவரிடம் வினவலாம்.//
நீங்கள் நீக்கியதால், அது மீண்டும் அல்லது இன்னும் பிற கட்டுரைகளில் நீக்காமலிருக்க உங்களிடம் வினவினேன். விக்கிபரப்புரையில் ஈடுபட்ட போது, பல துறைசார்ந்த அறிஞர் கூறுவது யாதெனில், "ஏன் நீக்கப்படுகிறது என்று கூறுங்கள். மதிப்பிடுகிறீரகள். விக்கியின் மதிப்பைக் கூட்ட வரும் எங்களுக்கு இது மனதளவில் சலிப்பை உருவாக்குகிறது என்கின்றனர்." அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கும் பொறுமை நம்மிடம் இருந்தால், நமக்கு சிறந்த பங்களிப்பாளர்கள் கிடைப்பர்.
// விக்கி சமூகத்தின் ஒப்புதல் பெறலாம். //
இதனை தான் நானும் கூறினேன். சமூகம் என்பது நாமே. நாம் மட்டுமே சமூகமன்று. ஒரு அறிவிப்பு தெரிவித்தல் நல்ல நடைமுறையாகும். அல்லது சில படங்களை நீக்கி விட்டு அதற்குரிய காரணம் கூறினால், அது பலரையும் ஈடுபடுத்தும். கட்டுரை மேலாண்மை என்பது நீக்குதல், வகைப்படுத்துதல் மட்டும் அல்ல. அதனின் எழுத்துப்பிழைகளையும் நீக்கலாம். மேற்கோள்களையும், விரிவாக்கப் பணியும். அங்ஙனம் நாம் செய்யும் போது, ஒரு பங்களிப்பாளருக்கு மனதில் ஏற்படும் மகிழ்ச்சி. தன்னம்பிக்கை, வேகம் அதிகமாகிறது. அதனால் இது போன்ற வளம் விக்கியில் உருவாகும். எனது பரப்புரையில் ஏற்காடு இளங்கோ உடன் பணியாற்றிதில் நான் கற்றுக் கொண்ட பாடம். இந்த அணுகுமுறையில் ஏற்பட்ட சமூக பிணைப்பு வளர்முகமாக உள்ளது.. எனவே, முன்ன்றிவிப்பு மிக முக்கியமென முன்மொழிகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 05:56, 20 நவம்பர் 2015 (UTC)Reply
நீங்கள் உங்களுடைய கருத்தை முன் வைத்துள்ளீர்கள். நல்லது. இங்குள்ள உரையாடலின் தன்மை குழப்பம் நிறைந்துள்ளது. படங்கள் பற்றியதா? கொள்கை, வழிகாட்டல் பற்றியதா? பயனர் ஈர்ப்பு பற்றியதா? அவற்றை தக்க உரையாடலில் உரையாடுவதே சிறப்பு. பிற கருத்துக்கள்: //அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கும் பொறுமை நம்மிடம் இருந்தால்// யார் செய்வது? //நமக்கு சிறந்த பங்களிப்பாளர்கள் கிடைப்பர்.// உள்ள பயனரை தக்க வைத்துக் கொள்ள பொறி முறையும் தேவை. அல்லது இது போன்ற கசப்பான வரலாறுகள் விக்கிப்பீடியாவில் பதிவாகும். --AntanO 06:42, 20 நவம்பர் 2015 (UTC)Reply
சரிங்க. அனைத்தும் ஒன்றுக் கொண்டு தொடர்புடையதே ஆகும். நீக்குதலுக்கானக் குறிப்பை, நீங்கள் தராதது எனக்கு வருத்தமே. மனச்சூழலைக் கருதி, படங்களை நேரம் இருக்கும் போது. ஆய்ந்து மீண்டும் இடுகிறேன். .வணக்கம்.--உழவன் (உரை) 06:58, 20 நவம்பர் 2015 (UTC)Reply
உங்களை வருத்தப்பட வைப்பது என் நோக்கமல்ல. நீங்குதல் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதற்காக என்னுடைய வருத்தங்கள். அத்தொகுப்பைச் செய்தது நீங்கள்தான் என்பதும் எனக்குத் தெரியாது. நான் கட்டுரையைத்தான் பார்க்கிறேன்; அதன் தொகுப்பாளரை அல்ல. உங்களுக்கு தெரியுமோ தெரியாது. பல இடங்களின் நானே படங்களின் அமைப்பை சீர் செய்துள்ளேன். எ.கா உள் மங்கோலியா - இதன் வரலாற்றுப்பக்கம். ஆனால், உரையாடலின் தொடக்கத்தில் இக் கட்டுரையில் அக் காட்சியகம் இருப்பது பொருத்தமானதே என்பதன் பின்னனியின் உண்மைத்தன்மை என்ன? உங்களுக்கும் எனக்குமிடையில் இடம்பெற்ற உரையாடலில் ஓர் ஒழுங்குமுறை இருந்ததே. அது தொடர்ந்திருந்தால் ஆக்கபூர்வ விளைவு ஏற்பட்டிருக்கும். நானும் இது போன்ற எதிர்ப்பைக் காட்டியிருக்க மாட்டேன். --AntanO 07:30, 20 நவம்பர் 2015 (UTC)Reply
//அத்தொகுப்பைச் செய்தது நீங்கள்தான் என்பதும் எனக்குத் தெரியாது.// எத்தொகுப்பை?--உழவன் (உரை) 15:35, 20 நவம்பர் 2015 (UTC)Reply

ஆயிரக்கணக்கான பக்கங்களில் விக்கிப்பீடியா துப்புரவுப் பணி தேங்கியுள்ளது. ஆனால், துப்புரவுப் பணி மேற்கொள்பவர்களோ ஒரு சிலரே. Antan முதலிய பலரும் தகுந்த இடங்களில், குறிப்பாக ஒரே பயனர் அல்லது ஒரே மாதிரியான தொகுப்புகள் தென்படும் போது, பேச்சுப் பக்க முன்னறிவிப்பு அல்லது பயனர் பேச்சுப் பக்க முன்னறிவிப்பு தந்தே நீக்கி வருகின்றனர். ஆனால், இவ்வாறு அறிவிப்பு தருவதையே கூட தங்களுக்கு நேரும் தனிப்பட்ட இழுக்காக கருதும் நீண்ட நாள் பங்களிப்பாளர்களும் உளர். இன்னும் சிலரோ கட்டுரை எப்படி இருந்தாலும் அதனை அப்படியே தக்க வைக்க முயல வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் துப்புரவுப் பணியாளர்களின் பணி மிகுந்த நெருக்கடிக்குள்ளான ஒன்று என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம், பொதுவான ஏற்புடைய துப்புரவுக் காரணிகளுக்காவது தகுந்த தொகுப்புச் சுருக்கத்துடன் துப்புரவைச் செய்தால் போதுமானது என்பதை ஏற்க வேண்டும். துணிவுடன் செயற்படுங்கள் என்ற அடிப்படை விக்கிப்பீடியா கொள்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். படக்காட்சியகம் தொடர்பான என் கருத்துகளை இங்கு இட்டுள்ளேன். அங்கு உரையாடலைத் தொடர்வோம். உழவன், தற்போது கட்டுரையை விரிவாக்கி அதற்கு ஏற்ப படம் இணைக்கும் உங்கள் அணுகுமுறை நன்று. வளர்முகமாகச் செயற்படுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 18:00, 20 நவம்பர் 2015 (UTC)Reply

படங்களுக்காக மட்டும், இங்கு உரையாட வில்லை. இரவி சொல்லியது போல, பலவித மனநிலையில் ஒரு பங்களிப்பாளர் இருப்பதால், ஒரு முன்அறிவிப்பு அவசியமே. பலவித நண்பர்கள் எனக்கு தொடர்ந்து எனது பங்களிப்பை மேம்படுத்தி இருக்கிறார்கள். அதில் ஆன்டனும் ஒன்று. {{Reflist}} <references/> குறித்த விவரங்களை, முன்பு தெளிவு படுத்தினார். தெளிவு வேண்டிய தொடர்ந்து உரையாடினேன். நீக்கப்பட்ட படங்களையோ, குறிப்புகளேயோ நான் முதலில் பதியவில்லை. புதுப்பயனர் மனநிலையை கருத்திற் கொண்டே உரையாடினேன். ஒரு பக்கம் அழகாக இருக்கிறது. இல்லை என்பது அவரவர் அனுபவ மனநிலையைப் பொறுத்தது. அதனை படவுரையை சேர்ப்பதன் மூலம், இப்படி செய்யுங்கள் என்று ஒரு பயனருக்கு வழிகாட்டலாம். எனவே, இந்த நீக்குதல் என்பது சிறந்த துப்புரவு நடைமுறை அல்ல. இதே பக்கத்தில் இருந்த இலக்கணப் பிழைகள் நீக்கியுள்ளேன். அதுவே துப்புரவு பணியின் முதற்கட்டமாக இருத்தல் சிறப்பாகும். ஒட்டு மொத்தமாக நீக்குதல் ஒரு பயனர் ஆர்வத்தை/ உழைப்பை தடுக்கும். ஒரு பயனர் வளரும் வரை காத்திருப்போம்.--உழவன் (உரை) 02:23, 22 நவம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாகல்&oldid=1969656" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாகல்" page.