விக்கிப்பீடியா பேச்சு:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்

டெரன்ஸ் - படிமங்கள் தொகு

படிமங்கள் பற்றி நாம் இதுவரை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 10,000 கட்டுரைகளை எட்டும் போது இது முக்கியமாக நோக்கப்படும்.

Fair use

(இதற்கு தமிழ் என்ன?) படிமங்களுக்கான விதிமுறைகள விரிவு படுத்தப்பட வேண்டும். இதன்போது ஆங்கில விக்கியளவு கடுமையான விதிகள் தேவையற்றவை எனினும் சில விதி முறைகளை ஆக்குவது நலம். (ஏ+கா இணைய தளத்தின் பெயர் கொண்ட படிமங்கள்) விதிகள் தெளிவாக எழுதப்படுவது விக்கியில் சனநாயகத்தை மேம்படுத்த உதவும்.

மூலம்

இக்குறையை நானே பலமுறை விட்டிருக்கிறேன். படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான மூலம் கட்டாயம் சேர்க்கப்படல் வேண்டும்

பொது உரிமம்

பொது உரிமம் தொடர்பான படிமங்களில் வெறுமனே அதை குறிக்காமல் ஏன் (சொந்த படைப்பு, காலத்தால் முந்தியது, இந்திய பதிப்புரிமைச் சட்டப்படி...) என்பதைக் குறித்தல்

நீக்கம்

பொறுத்தமற்ற படிமங்கள் நீக்குவதற்கான ஒரு விதி முறை வேண்டும்.

--டெரன்ஸ் \பேச்சு 13:33, 6 டிசம்பர் 2006 (UTC)

பாலாஜி - படிமங்கள் தொகு

படிமங்களை வகைப்படுத்துவது பற்றி நாம் இப்போது சிந்திப்பது மிகவும் நல்லது. எனினும் காப்புரிமைப் பற்றி பலரின் கருத்துக்களிலிருந்து நான் சற்று மாறுபடுகிறேன். நான் படிமங்களைப் பதிவேற்றும் போது முடிந்தவரை அப்படிமம் சம்மந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து எடுக்கிறேன். அப்படி முடியாவிட்டால் கூகில் செய்து எடுத்துக்கொள்கிறேன். காப்புரிமைப் பற்றி நான் பெரிதும் அலட்டிக்கொள்வதில்லை.

பாலாஜி, இங்கு உங்களிடம் முற்றிலும் வேறுபடுகின்றேன். முற்றிலும் கட்டற்ற முறையில் இருப்பதுதான் தொலைநோக்கில் நல்லது. இங்கு வரும் ஒரு பயனர், ஒரு படத்தை பிரதி செய்து பயன்படுத்தும்பொழுது அதன் பதிப்புரிமை பற்றி பயப்படாமல் பயனபடுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். நாம் கட்டற்ற படங்களை மட்டுமே பயன்படுத்துவோம் என்றால், அவர்களும் அப்படி அனுமதி தர முன்வருவார்கள். அப்படியான ஒரு சூழலே நன்று. இந்த நோக்கிலான சிந்தனையே கட்டற்ற என்ற கொள்கைக்கு பொருந்தும். மேலும், Creative Commons, GNU GPL, Wikipedia Commons, NASA என்று படங்கள் கிடைக்கின்றன. தமிழ் நாட்டு அரச தளங்களையும் தங்கள் படங்களை PL தர வேண்டும் என்று வேண்டுதல் விட வேண்டும். இதுவே தொலை நோக்கில் சரியான வழி. --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)
நற்கீரனுடன் உடன்படுகிறேன். உண்மையில், விக்கிபீடியா போன்ற பொதுநல அமைப்பின் மீது அதுவும் தமிழ்நாட்டில் யாரும் வழக்கு போட மாட்டார்கள் என்பது உண்மை தான். போட்டாலும் ஒரு தலைமுறைக்கு வழக்கு இழுக்கலாம். ஆனால், இங்கு விதயம் மாட்டிக் கொள்கிறோமா என்பது பற்றி இல்லை. நாம் செய்வது சரியா என்பது தான். (நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே சரிங்கிறீங்களா ;)) பாலாஜி, ஓரிரு மாதங்கள் முன்பு வரை நான் கூட உங்கள் மனப்பான்மையுடன் தான் இருந்தேன். ஆனால், இப்பொழுது கருத்து மாற்றங்களை கொண்டுள்ளேன். ஒரு பயனுள்ள கலைக்களஞ்சியத்தை உருவாக்குகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவு அது முறையானதாகவும் கட்டற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். நாளை தமிழ் விக்கிபீடியா இறுவட்டுகள், தமிழ் விக்கிபீடியா அச்சுப் பதிப்புகள் வரும். அப்பொழுது, நம் படிமங்களை பயன்படுத்த முடியாமல் போவதால் என்ன நன்மை? கலைக்களஞ்சியத்தை வளர்ப்பதோடு, கட்டற்ற செயல்பாடு, கொள்கை, ethics, principles, பண்பாடு ஆகிய இதரக் கூறுகளையும் நம் தமிழ்ச்சூழலில் வளர்க்க முற்படலாமே? அதற்கு விக்கிபீடியா ஒரு களமாகவும் முன்மாதிரியாகவும் ஏன் இருக்கக்கூடாது? நாம் எவ்வளவு தான் பூசி மெழுகினாலும் காப்புரிமை மீறல் என்பது ஒரு திருட்டு தான். யாரும் கண்டுபிடிக்கும் வரை திருடலாம், ஊர்க் காரியத்துக்காக திருடலாம் என்று உண்டா என்ன? திருட்டு திருட்டு தான். தற்பொழுது கட்டற்ற படிமங்கள் குறைவாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், எண்மப் படக்கருவிகளின் பெருக்கத்தால், படிமங்களை பகிர்ந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதை flickr போன்ற தளங்களில் கவனிக்கலாம். அடுத்த முறை ஊருக்கு போகும்போது நானே கூட சில படங்களை எடுத்து இப்படிப் பகிரலாம். நிலைமை வெகு விரைவில் மாறும், பாலாஜி.
பொதுவாக தமிழ்நாட்டில் அச்சு நூல்களை படி எடுப்பது, திரைப்பட வட்டுக்களை படி எடுப்பதை குற்ற உணர்வு இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம். அதே தவறை நாம் விக்கிபீடியாவிலும் செய்ய வேண்டாமே. இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் பிறரின் படைப்புகளுக்கு மதிப்பு தரும் நற்பண்பை வளர்த்தெடுக்கலாம். தவிர, கீழே நற்கீரன் சொல்லி உள்ள அனைத்துக் கருத்துக்களுடனும் முழுக்க உடன்படுகிறேன்--Ravidreams 10:31, 9 டிசம்பர் 2006 (UTC)


உரையாடல் பக்கங்களில் நிறைய எழுத விரும்பாததால், சுருக்கமாக பதிலளிக்க முயற்சிக்கிறேன்!
1. நாம் தீர்க்க விரும்பும் பிரிச்சனையை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். படிமங்களை பதிவேற்றும் போது அதன் காப்புரிமை நிலையை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியம். எனவே tag மற்றும் மூலம் குறிப்பிடப்படாத படிமங்களை அகற்றுவதை நான் ஆதரிக்கிறேன்.
2. எனினும் பயணர்களின் பங்களிப்புகள் மேலும் அதிகரிக்க வேண்டுமென்றால் possibly non-free என்று வரையறுக்கத்தக்க படிமங்களையும் நாம் அனுமதிக்க வேண்டும். அத்தகைய படிமங்கள் எப்போது அகற்றப்பட வேண்டுமென்பது த.வி.யின் கொள்கையைப் பொருத்தது. (சில ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வதுகூட நல்லது!)
3. நல்ல நோக்கம் (GFDL) மற்றும் நடைமுறைச் சாத்தியம் (rampant piracy in India) இரண்டிற்கும் நடுவில் நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. இப்போது த.வி.யில் பங்களிப்போரில் பலர் வளர்ந்த நாடுகளிலிருப்பது கவணிக்கத்தக்கது. தமிழ்கம், ஈழம், சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களிலிருந்து பெருமளவில பங்களிப்புக்கள் வரவேண்டும். நமக்கு நேரம் மட்டுமே முதலீடாக இருக்கலாம். அவர்களுக்கு இணையத் தொடர்புக்கான செலவு உள்ளிட்ட பல முதலீடுகள் இருக்கலாம். அதற்கு எற்றார் போல த.வி. கொள்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
4. த.வி.யில் பங்களிக்க வருபவர்களின் கொள்கைகளை மாற்ற நாம் முயற்சிக்கத் தேவையில்லை! நான் விண்டோஸ் உள்ளிட்ட காப்புரிமையுள்ள மென்பொருள்களை (முறையாக வாங்கியிருந்தும்) முற்றிலிலுமாகப் புறக்கணிக்கிறேன். அதனால் இந்தியாவில் pirated விண்டோஸ் பயன்படுததுவோரை நான் குறை சொல்ல வேண்டுமா என்ன?்
5. நான் பதிவேற்றிய படிமங்கள் அனைத்தும் public domain, fairuse, possibly non-free என்று வரையறுக்கத்தக்கவையே. பெரும்பாலானவற்றுக்கு நான் மூலத்தையும் குறிப்பிட்டுள்ளேன். எனினும் தங்களுக்கு ஆட்சேபனையிருந்தால் அவற்றை அகற்ற முன்வருகிறேன்.
பாலாஜி 16:56, 9 டிசம்பர் 2006 (UTC)

காரணங்கள்:

1. GPLலில் வெளியிடப்படும் படிமங்கள் மிகவும் குறைவே. ஊடகங்களில் வெளியிடப்படும் படிமங்களை நாம் பயன்படுத்துவதை அதன் உரிமையாளர்கள் ஆட்சேபிக்கிறார்கள் (அல்லது ஆட்சேபிப்பார்கள்) என்பதற்கு தற்போது நம்மிடம் தெளிவான Pointers எதுவும் இல்லை. த.வி. போன்ற பொது நல அமைப்புகள் மிது யாரும் வழக்கு போடமாட்டார்களென நம்புவோம்.

குறைவாக இருக்கலாம், ஆனால் நீங்கள் படங்களை எடுத்து அப்படி பகிரும் பொழுது அந்த பொதுச் சொத்து வட்டம் விரியும். இப்பொழுது பலரும் digital camara மூலம் படம் எடுத்து பகிர முற்படுகின்றார்கள். அப்படியான படங்கள் காலப்போக்கில் பெருகும் என்றே எதிர்பார்க்கலாம். --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)

2. எனினும் யாரேனும் ஆட்சேபித்தால் அப்போது குறிப்பிட்ட அந்த படிமத்தை நீக்கிவிட்டால் போகிறது. கூகுல் விடியோ, யூடியுப் போன்ற வனிக நிறுவணங்களே கூட இதே கொள்கையைப் பின்பற்றுகின்றன. ஆட்சேபத்திற்குரிய படிமத்தை நாம் நீக்கத் தயாராக இருக்கும் வரை த.வி சட்டரீதியாக Vulnerable இல்லை என்றே நினைக்கிறேன்.

அப்படிப்பட்ட வணிக நிறுவனங்கள் செய்வதால் பொது நல - இலாப நோக்க மற்ற த.வி. செய்ய வேண்டும் என்று சொல்வதின் தர்க்கம் புரியவில்லை. எனது கருத்து என்னவென்றால் பயனர் த.வி. படம் ஒன்றை தரவிறக்கம் செய்யும் பொழ்து 100% வீதம் பதிப்புரிமை பற்றி கவலைப்படாமல் தரவிறக்க வேண்டும். --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)

3. நமக்கு முன்பாக இரண்டு வழிகள் இருக்கின்றன. FUDக்கு (Fear, Uncertanity and Doubt) பயந்து படிமங்களை சேர்க்காமல் இருப்பது! அல்லது படிமங்களை (மூலத்தோடு) சேர்த்து த.வி.யை பயனர்களுக்கு மேலும் சிறப்பாகத் தருவது!

மேலே சுட்டியபடி, அனேக கட்டுரைகளுக்கு PD, GNU GPL, CC ஆகிய கட்டற்ற உரிமைகளுடன் படம் கிடைக்கும், கிடைக்கின்றது. இது FUD இல்லை. இது விடுதலை பற்றியது.
இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே. த.வி. தெளிவான நிலைப்பாடு தற்சமயம் இல்லை, ஆனாலும் பதிப்புரிமை உள்ள படங்களை அனுமதி இன்றி சேர்க்கப்படாததென்பதே எமது புரிந்துணர்வு, மற்றும் ஆ.வி. கொள்கை. --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)


பயன்படாப் படிமங்களை நீக்குதல் தொகு

பயன்படாப் படிமங்களை [1] நீக்குவது தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 13:17, 26 ஜனவரி 2007 (UTC)

ஒரு விக்கிபீடியாவிலுள படிமங்கள் எண்ணிக்கை மற்றும் மொத்தப் பக்க எண்ணிக்கை போன்றவை அந்த விக்கிபீடியாவின் தரம் தொடர்பிலான கணிப்புக்களில் செல்வாக்குச் செலுத்துபவையாகையால் பயன்படாதுள்ள படிமங்களை நீக்கிவது பொருத்தமாகப் படுகிறது. --கோபி 15:44, 26 ஜனவரி 2007 (UTC)
உடனடியாக நீக்காதீர்கள். இதைப்பற்றி சற்று அலசவேண்டும். இதைப்பற்றி ஒரு கொள்கையை ஏற்படுத்தி, பின்னர் நீக்கலாம். --Natkeeran 20:32, 26 ஜனவரி 2007 (UTC)
மேற்படி பட்டியலிலுள்ள பல படிமங்கள், எடுத்துக்காட்டாக நாடுகளின் தேசியக் கொடிகள், வேறு படிமங்களால் பதிலிடப்பட்டுவிட்டன என்று தோன்றுகிறது. தொடக்க காலங்களில் படிமங்களைச் சொடுக்கிப் பெரிதாக்குவதற்காக ஒவ்வொரு படிமமும் இரண்டு அளவுகளில் தேவைப்பட்டதாகத் தெரிகிறது. இப்பொழுது அப்படியல்ல. அதனால் முன்பு பதிவேற்றிய படிமங்கள் இப்பொழுது தேவையற்றவை ஆகிவிட்டன என்று நினைக்கிறேன். உண்மையில் அவை தேவையற்றவைதானா, அவற்றுக்கு மாறுப் படிமங்கள் உள்ளனவா என்பதை உறுதிசெய்து கொண்டு அவற்றை நீக்கிவிடலாம் என்பது எனது கருத்து. எனினும் நற்கீரனுடைய குறிப்பிட்டது போல் இது பற்றிய கொள்கையொன்றை ஏற்படுத்துவது நல்லது. Mayooranathan 04:29, 27 ஜனவரி 2007 (UTC)
கோபி நிச்சயமாக கவனித்துத்தான் தேவையில்லாத படிமங்களைத் தான் நீக்குவார் நிர்வாக அணுக்கம் உள்ளவர் இதைத் தேவையென்றால் மீள்விக்கலாம் எனவே படிமங்களை நீக்குவது கணினியின் recycle bin இற்குப் படிமங்களப் போடுவதைப் போன்றே எனக்குக் காட்சியளிக்கின்றது. இது சரியென்றால் தமிழ் விக்கிபீடியாவின் மொத்த அளவு படிமங்களை நீக்குவதால் குறைவடையுமா?. இதற்காகச் செலவிடும் நேரத்தை விட கட்டுரைகள் ஆக்குவதில் செல்விடுவதே நல்லது நாம் இன்னமும் 10, 000 கட்டுரைகளை எட்டவில்லை.
தவிர காமன்ஸில் படிமங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக நீக்கபட்டால் அந்தப் படிமத்தை மீள்விப்பதற்கு இலகுமாதிரித் தெரியவில்லை. தமிழ் விக்கிபீடியாவில் ஆகக் குறைந்தது ஒருவருக்காவது காமன்ஸில் நிர்வாக அணுக்கம் ஏற்படும் வரை இம்முடிவுகளை பின்போடுவது நல்லதாக இருக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்தே. தரக் கண்காணிப்பு பற்றிய கோபியின் கருத்துக்களை வரவேற்கின்றேன் அநேகமான கணிப்புக்கள் ஏனைய இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டே கணிக்கப்பட்டுள்ளது ஆனால் ஆங்கில விக்கிபீடியாவுடன் ஒப்பிட்டால் கட்டுரைகளின் எண்ணிக்கை வியக்க வைக்கின்றது. ஒருநாளில் ஆயிரக்கணக்கான புதிய கட்டுரைகள் வருகின்றது. இன்னமும் தமிழ் விக்கிபீடியா பல்கலைக் கழகங்களில் சரியான முறையில் புகவில்லை. தமிழ் விக்கிபீடியா பற்றிய அறிமுகம் பற்றியும் மேலும் ஆர்வலர்களைச் சேர்பதுமே சாலச் சிறந்ததாக அமையும். "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்னும் தமிழ் பழமொழிக்கமைய பயனர்களின் பங்களிபுக் கூடும் போது தமிழ் விக்கிபீடியா தலைநிமிர்ந்து நிற்கும். --Umapathy 12:53, 27 ஜனவரி 2007 (UTC)

நான் இதுவரை நீக்கியவை கொமன்ஸில் உள்ள அற்கு நீக்கப்பட வாய்ப்பற்ற மற்றும் த.வி.யில் பயன்படாத படிமங்களே. பயன்படாப் படிமங்களானாலும் த.வி.க்கு பிரத்தியேகமான படிமங்களை நீக்க வேண்டியதில்லைத்தான். இது தொடர்பில் கொள்கைகளை ஏற்படுத்தி நீக்குவது நல்லது. நீக்கப்பட்ட படிமங்களை மீள்விக்க முடியும். ஆயினும் நீக்குவதால் அளவு குறையும் என்றே தோன்றுகின்றது. நன்றி. கோபி 15:48, 27 ஜனவரி 2007 (UTC)

கட்டற்ற படிமங்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்பட வேண்டும். அத்தகைய படிமங்களை கொமன்ஸில் பதிவேற்றிப் பயன்படுத்துவது சிறப்பானது. த.வி.யில் பதிவேற்றப்படும் படிமங்கள் த.வி.க்குப் பிரத்தியேகமான fair use படிமங்களாக மட்டும் இருப்பது நல்லது. (உ-ம்:எழுத்தாளர்களின் படங்கள், நூல் அட்டைப் படங்கள், தமிழ் தொடர்பான சின்னங்கள்) கோபி 15:51, 27 ஜனவரி 2007 (UTC)

பயன்படாததும் தமிழ் விக்கிபீடியாவுக்குத் தேவைப்படாததுமான படிமங்களை நீக்குவதில் தவறில்லை ஆனால் காமென்சில் இருக்கிறது என்பதற்காக இங்குள்ள படிமங்களை நீக்கவேண்டாம். காமென்சில் உள்ள படிமங்களில் எங்களுக்குக் கட்டுப்பாடு கிடையாது. அங்கேயுள்ள படிமங்களை விரும்பியவர்கள் மாற்றிவிடக்கூடும். அவற்றையெல்லாம் நாங்கள் கவனித்துக்கொண்டிருக்க முடியாது. எனக்கு விக்கிபீடியாவில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அநுபவம் உண்டு. அக்காலத்தில் ஆங்கில விக்கியிலிருந்து தொடர்பு கொடுக்கப்பட்ட படிமங்கள் தமிழ் விக்கியில் இருந்தன. அவற்றுட் சில தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். சில சமயம் காணாமலே போய்விடுவதும் உண்டு. நான் உட்படத் தமிழ் விக்கிபீடியாவைச் சேர்ந்தவர்கள் பதிவேற்றிய பல இங்கும் காமென்ஸிலும் இருக்கின்றன. இவற்றில் பலவற்றைப் படம் எடுப்பதிலும், பதிவேற்றுவதற்கு ஏற்றமுறையில் ஒழுங்கு படுத்துவதிலும், பதிவேற்றுவதிலும் காலம், பணம் என்பன செலவாகியிருக்கின்றன. இத்தகைய படிமங்களில் எங்களுக்குக் கட்டுப்பாடு இருப்பது நல்லது. நான் விக்கிபீடியாவுக்கென்று எடுத்த பல படங்கள் குறிப்பிட்ட தேவையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டவை. அவற்றின் கோணம், அவற்றில் தெரியும் அம்சங்கள் போன்றன முக்கியமாக இருக்கக்கூடும். ஆனால், காமன்சில் ஒரு நிர்வாகி அது போதிய தெளிவு இல்லையென்றோ அல்லது வேறு காரணத்துக்காக்கவோ வேறு படிமத்தால் மாற்றீடு செய்துவிடக்கூடும். அழிப்பது இலகு. மீண்டும் அவற்றைத் தேடிக்கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கக்கூடும். காமென்சில் இருப்பது இருக்கட்டும். இங்கு பயன்பாட்டில் இருப்பதை அப்படியே விட்டுவிடுங்கள். Mayooranathan 17:31, 27 ஜனவரி 2007 (UTC)
பயன்படாத படிமங்கள் யாவை என்று வரையறை செய்ய வேண்டும். மயூரநாதனின் கருத்துக்களும் முக்கியம். நுட்ப மேம்படுத்தலும், வகைப்படுத்தலும் தேவை. --Natkeeran 17:57, 27 ஜனவரி 2007 (UTC)

பயன்படாத படிமங்களில்ற் கூட த.வி.க்குப் பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட (உ-ம்:மயூரநாதன்) படிமங்கள் உள்ளன. அவற்றை நீக்க வேண்டியதில்லை. மேலும் எமக்கு முக்கியமாகத் தெரியும் படிமங்கள் கொமன்ஸில் முக்கியத்துவமற்றது போற் தெரிந்து நீக்கப்படும் ஆபத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் மிகவும் பொதுவானவற்றை (உ-ம்: நான் நீக்கிய கரடிப் படிமம்், albaa.jpg போன்றவை) இங்கும் வைத்திருக்க வேண்டியதில்லை. உடனடியாக அத்தகையவற்றையெல்லாம் தேடி அழிக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் புதிதாக பதிவேற்றப்படும் படிமங்கள் கொமன்ஸில் இருந்தால் பதிவேற்றுவதைத் தவிர்த்தல் மற்றும் புதிய படிமங்களுக்கு உரிய பகுப்பு இடல் போன்ற செய்றபாடுகளைப் பயனர்கள் பின்பற்றுவதை உறுதி செய்வது நீண்டகால நோக்கில் முக்கியமானௌ என்றே கருதுகிறேன். --கோபி 18:16, 27 ஜனவரி 2007 (UTC)

தொடர்புடையை சுட்டிகள் தொகு


உரிமைகள் பற்றிய சொல்லாடல்கள் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும். தொகு

--Natkeeran 18:58, 29 ஜனவரி 2007 (UTC)

அரசு தொடர்பான படிமங்கள் தொகு

சில சமயம் அரசாங்கம் தொடர்பான படிமங்களை தரவேற்றும் போது ஒரு கட்டுரைக்கு சில எண்ணிக்கை நியாய பயன்பாடு படிமங்களையே பதிவேற்ற முடியும் என்று யாரோ கூறியதாக நினைவு. மேலும் வித்வான்சாக் என்ற துப்பாக்கி படிமத்தை இந்திய இரானுவ இணைய தளத்திலிருந்து தரவேற்றலாமா என்று கேட்டதற்கு சோடாபாட்டில் கூடாது என்றார். அரசாங்கம் வெளியிட்ட படிமங்கள் என்றால் எங்கு வேண்டுமானாலும் உபயோகிக்க முடியாதா? அது பொதுவுடைமை தானே? இது விக்கியின் எந்த காப்புரிமை விதிப்படி தடுக்கப்பட்டுளது என்று யாராவது கூற முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:57, 18 மே 2012 (UTC)Reply

w:en:Copyright_law_of_India இந்தியஅரசாங்கத்தின் காப்புரிமைச் சட்டப்படி அரசாங்கத்தின் அனைத்து வேலைகளும் காப்புரிமை பெற்றவை. 60 வருடங்களுக்கு அவற்றை உபயோகப்படுத்த இயலாது. இதில் நியாயப் பயன்பாட்டு காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் விக்கி அமெரிக்காவின் சட்டப்படி நியாயப் பயன்பாட்டு படிமங்களை ஏற்றுக் கொள்வதால் நாம் விக்கியில் உள்ள விதிமுறைப்படிதான் நியாயப் பயன்பாட்டு படிமங்களை பதிவேற்ற வேண்டியிருக்கும் --shanmugam (பேச்சு) 10:53, 18 மே 2012 (UTC)Reply

நன்றி. சண்முகம். அதை ஆங்கில கட்டுரையில் government work என்றுள்ளார்கள். மேலும் ஆங்கில கட்டுரைக்கு இணைப்பு தரும்போது [[:en:Copyright_law_of_India]] கொடுத்தாலே போதுமானது. w தேவைப்படாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:06, 18 மே 2012 (UTC)Reply

சரி தென்காசி சுப்பிரமணியன்.. : கொடுக்க மறந்து விடுவதால் அது விக்கியிடை இணைப்பாக மாறிவிடுகிறது, அதனாலேயே w வை எப்போதும் சேர்த்து கொள்வேன் :)--shanmugam (பேச்சு) 11:16, 18 மே 2012 (UTC)Reply

ஒவியப் படிமங்கள் தொகு

ஒருவர் வரைந்த ஒவியத்தை நாம் சொந்தமாக புகைப்படம் எடுத்து விக்கியில் தரவேற்றலாமா? அதில் சொந்த ஆக்கம் வார்ப்புரு இடுவதா அல்லது வேறேனும் வார்ப்புரு உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:02, 21 மே 2012 (UTC)Reply

ஒருவரின் ஓவியத்தை புகைப்படம் எடுத்தாலும் அதன் காப்புரிமை அவரிடமே இருக்கும் என நினைக்கிறேன் (இது பற்றி எங்கேயோ படித்தாக ஞாபகம், இப்போது தேடினால் கிடைக்கவில்லை). நியாயப் பயன்பாட்டு படிமமாகத்தான் பயன்படுத்த வேண்டும். 60 வருடங்களுக்கு முந்தைய படம் எனில் பொது உரிமைப் பரப்பில் இடலாம்.--சண்முகம் (பேச்சு) 06:34, 21 மே 2012 (UTC)Reply

நியாயப் பயன்பாடே நான் நினைத்த படிமங்களுக்குப் போதுமானது நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:45, 21 மே 2012 (UTC)Reply

படக்காட்சியகம் தொகு

https://en.wikipedia.org/wiki/Wikipedia:Image_use_policy#Image_galleries பகுதியில் காணப்படும் வழிகாட்டல் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் ஏற்புடையதே. குறிப்பாக, வளரும் நாடுகளைச் சேர்ந்த தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் படங்களைத் தரவிறக்குவதற்குச் செலவழிக்கும் இணையக் கட்டணத் தொகையையும், பக்கம் தரவிறங்குவதற்கான நேரத்தையும் கணக்கில் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 17:40, 20 நவம்பர் 2015 (UTC)Reply

படத் தொகுப்புக்கள் கட்டுரைகளுக்கு தகவலும் வளமும் சேர்க்கின்றன. இவற்றை குறுங், நெடுங் கட்டுரைகளில் சேர்ப்பதை நாம் தடுத்தல் ஆகாது. குறிப்பிட்ட வழிகாட்டலில் குறுங்கட்டுரைகளில் படத் தொகுப்பு இடம்பெறுதல் தொடர்பான எந்தவித கருத்தும் இடம்பெறவில்லை என்பது குறிக்கத்தக்கது. பெரும்பான்மையாக எழுத்துக்களைக் கொண்ட பத்திகள் இருப்பது வறட்சியாக இருக்கும். படங்கள், பட்டியல்கள், அட்டவணைகள், சமன்பாடுகள், எடுத்துக்காட்டுக்கள் உபட்ட பல்வேறு தகவல் வெளிப்படுத்தல் முறைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 19:34, 20 நவம்பர் 2015 (UTC)Reply

ஆங்கில விக்கிப்பீடியா வழிகாட்டல் அனைத்து வகை கட்டுரைகளுக்கும் பொருந்துவதாகவே உள்ளது. இதில், குறுங்கட்டுரை, நெடுங்கட்டுரை வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

//the use of a gallery section may be appropriate in some Wikipedia articles if a collection of images can illustrate aspects of a subject that cannot be easily or adequately described by text or individual images. //

தமிழ் விக்கிப்பீடியாவில் உரையாக வெளிப்படுத்தும் முனைவின்றி படங்களை மட்டும் சேர்த்து வைக்கும் போக்கு நிச்சயமாக இருக்கிறது. விரிவான உரைக்குத் தகுந்த படங்கள் ஆங்காங்கே இருப்பதை யாரும் மறுப்பதில்லை.

//Images in a gallery should be carefully selected, avoiding similar or repetitive images, unless a point of contrast or comparison is being made. Just as we seek to ensure that the prose of an article is clear, precise and engaging, galleries should be similarly well-crafted. //

இதை நாம் முறையாகப் பின்பற்றுவது இல்லை.

//A gallery is not a tool to shoehorn images into an article, and a gallery consisting of an indiscriminate collection of images of the article subject should generally either be improved in accordance with the above paragraph or moved to Wikimedia Commons. //

இந்த நடைமுறை தேவை

//One rule of thumb to consider: if, due to its content, such a gallery would only lend itself to a title along the lines of "Gallery" or "Images of [insert article title]", as opposed to a more descriptive title, the gallery should either be revamped or moved to the Commons.//

நாம் பெரும்பாலும் சேர்க்கும் படக்காட்சியகங்கள், குறிப்பாக குறுங்கட்டுரைகளில், இவ்வாறாகவே அமைகின்றன. இவற்றுக்குப் பொதுவக இணைப்பு தருதலே தகும்.

//Articles consisting entirely or primarily of galleries are discouraged, as the Commons is intended for such collections of images.//

இது குறுங்கட்டுரைகளுக்குப் பொருந்தும்.

சுருக்கமாக, நாம் விரிவான கலைக்களஞ்சியத்தை எழுத முனைந்து அதனை விளக்கத் தேவைப்படும் படங்களைச் சேர்ப்போம். உரையில் கவனம் செலுத்தாமல் படங்களை மட்டும் சேர்ப்பதில் பாதகமில்லை என்று கருதலாம். ஆனால், editorial நோக்கில் இவை தேர்ந்த கலைக்களஞ்சிய வடிவமைப்புக்கு உதவுவதில்லை. --இரவி (பேச்சு) 19:55, 20 நவம்பர் 2015 (UTC)Reply

Return to the project page "படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்".