பேச்சு:பாண்டியர்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 7, 2012 அன்று வெளியானது. |
கேள்வி
தொகுஇக்கட்டுரையில் இரண்டு பட்டியல்கள் உள்ளன இருப்பது நல்லதா அல்லது தனித்து ஒரு பட்டியல் இருப்பது நல்லதா?--நிரோஜன் சக்திவேல் 14:16, 8 பெப்ரவரி 2007 (UTC)
- நிரோஜன், ஒரு பட்டியலை நீக்குவதுதான் சரி. வார்ப்புருவில் இருக்கும் பொழுது, கட்டுரையில் இருக்கத்தேவை இல்லை. நீக்கிவிடுங்கள்.--செல்வா 15:22, 8 பெப்ரவரி 2007 (UTC)
- நிரோ, நீங்கள் வார்ப்புருவில் தந்துள்ள ஆட்சிக் காலங்களை எந்த நூலில் இருந்து பெற்றீர்கள் அல்லது எந்த ஆய்வுக் கட்டுரையில் இருந்து பெற்றீர்கள் என குறிப்பது மிகத்தேவையானது. --செல்வா 15:28, 8 பெப்ரவரி 2007 (UTC)
விரைவில் குறிக்கின்றேன் மேலும் நீங்கள் உசாத்துணையாகத் தந்த நூல் மிகவும் பழைமையானதாகவுள்ளது நான் வைத்துள்ள நூல் புதிது.இங்கு அனைத்துப் பாண்டியர் தகவல்களும் உண்டு வெகு விரைவில் அனைத்தும் விக்கியில் சேர்க்கப்படும்.--நிரோஜன் சக்திவேல் 15:58, 8 பெப்ரவரி 2007 (UTC)
- மிக்க நன்றி. ப.சின்னசாமியின் நூல் அண்மையில் வெளிவந்த நூல், எனவே அதில் கூடிய தெளிவு இருக்கும். கட்டாயம், இங்கே த.வியில் இருந்த பழைய குறிப்புகளைத் திருத்தியும் விரித்தும் எழுதுங்கள். நல்ல பணி. மூவேந்தர்களைப் பற்றி விரிவாக த.வி.யில் இருக்க வேண்டியது மிகவும் தேவையானது. --செல்வா 20:59, 8 பெப்ரவரி 2007 (UTC)
நிரோ, மிகுந்த பாராட்டுகள்! அருமையாக வளர்ந்து வருகின்றது இக்கட்டுரை! வாழ்த்துக்கள்!--செல்வா 16:28, 10 பெப்ரவரி 2007 (UTC)
நன்றி திரு செல்வா அவர்களே--நிரோஜன் சக்திவேல் 16:34, 10 பெப்ரவரி 2007 (UTC)
விமர்சனப் பார்வை தேவை
தொகுபாண்டியர் ஆட்சி ஒரு கதையில் வருவது போல, nostalgia தன்மையோடு தரப்படுகின்றது. செங்கோல் ஆட்சி சிலரால் தரப்பட்டிருக்கலாம். கொடுங்கோல் ஆட்சி எவ்வப்பொழுது நிலவியது? அடுக்கமைவு சமூக கட்டமைப்பு? பொதுமக்களுக்கு இருந்த உரிமைகள் எவை? வாழ்நிலை என்ன? இந்த நோக்கிலும் தகவல்கள் சேர்க்கப்பட்டல் கட்டுரை மேம்படும். --Natkeeran 17:57, 1 மார்ச் 2007 (UTC)
இனிமேல் தான் அவையெழுதவேண்டும் எவ்வாறு பாண்டியரின் ஆட்சியில் வஞ்சகர்கள் தோன்றினர் என்பதனைத்துமிப்புத்தகத்தில் உளது.விரைவில் சேர்க்கப்படும்.இப்பொழுது பாண்டியர்கள் வரலாறுகள் உருவாக்கப்படுகின்றது.--நிரோஜன் சக்திவேல் 18:08, 1 மார்ச் 2007 (UTC)
பிழையினைக் கவனியுங்கள்
தொகுதொல்காப்பியம் கி. மு 7000 நூற்றாண்டளவில் எழுதப்பெற்றதென்பதாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஒருவேளை அச்சுப்பிளையோ தெரியவில்லை பெரும்பாலும் கி. மு 700 ஆண்டளவில் என நினைக்கின்றேன்.சரி பார்க்கவும்.--நிரோஜன் சக்திவேல் 04:24, 29 அக்டோபர் 2007 (UTC)
அனைவருக்கும் என் முதற் வணக்கம்.
என்னார்வம் விக்சனரியில்.இங்கு நிறுத்தல் அளவை-லுள்ள கழஞ்சு என்பதற்கு பொருள் சேர்த்துள்ளேன்.ஏனெனில், விக்சனரியை வார்ப்புரு மூலம் என்னால் இணைக்க முடியவில்லை. இது போன்று நிறையச்சொற்களின் பொருள் விக்சனரியில் இருந்தும், விக்கிபீடியாவிலில்லை.தகவலுழவன் 05:29, 8 ஜனவரி 2008 (UTC)
Include pictures
தொகுIt might be a good idea to include pictures from english wikipedia. Please see pictures in en:Pandyan Kingdom. - ml:user:simynazareth
தோற்றமும் சாதிகளும்=
தொகுதற்போது ஒரு பயனர் சொந்த ஆய்வினைப் பயன்படுத்தி பாண்டியர்கள் “மள்ளர்கள்” என்று நிறுவ முயன்று வருகிறார். இந்த மீட்டுருவாக்கம் அண்மைய காலங்களில் பரவலாக நிகழ்ந்து வருகிறது. பல சாதிகள் மூவேந்தர் வழிவந்தவர்களாகத் தங்களைக் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த மீட்டுருவாக்கத்துக்கு விக்கிப்பீடியா தளமல்ல. மிகப்பெரும்பான்மையானோரால் (ஆய்வாளர் சமூகத்தில்) ஒப்புக்கொள்ளப்பட்ட புறச்சான்றுகள் எதுவுமின்றி “பாண்டியரின் தோற்றம்” பகுதியில் சாதிகளைத் தொடர்பு படுத்தி எதையும் இணைக்க வேண்டாம். பரதவர் பற்றிய குறிப்பையும் அப்படியே நீக்கியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:57, 5 சனவரி 2011 (UTC)
இந்திய வரலாற்றில் கேள்வி
தொகுஇந்திய வரலாற்றில் ஏதாவது அரசகுலம் 2000 ஆண்டுகளுக்கு மேல் அரசாண்டதாக வரலாறு உண்டா? இருந்தால் இங்கு தெரியப்படுத்தவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:25, 19 சூலை 2012 (UTC)
பாண்டியர் நாடு பாண்டியர் கட்டுரைகள் ஏன் இணைக்கப்பட்டன?
தொகுபாண்டியர் நாடு பாண்டியர் கட்டுரைகள் ஏன் இணைக்கப்பட்டன? இது போலவே மற்ற அரசுகள் தொடர்பான கட்டுரைகள் தனித்தனியாக உள்ளனவே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:50, 31 திசம்பர் 2015 (UTC)
- en:Wikipedia:Merging#Reasons for merger இதன் அடிப்படையில். மேலும், யாரும் மாற்றுக் கருத்து முன் வைக்கவில்லை. --AntanO 16:58, 31 திசம்பர் 2015 (UTC)
கட்டுரையில் இணைப்புக்கான வேண்டுகோள் இடபட்டதா? என்னால் வரலாற்றில் பார்க்க முடியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:52, 31 திசம்பர் 2015 (UTC)