பேச்சு:பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கருத்து
தொகுநற்கீரன், பாராட்டுகள்! பாவலரேறு பெருஞ்சித்திரனாரைப் பற்றி கருத்துக்கள் சேகரித்து வைத்திருந்தேன், கட்டுரையாக்க. நீங்கள் முந்திக்கொண்டீர்கள். இவர் தென்மொழி, தமிழ்ச்சிட்டு முதலிய இதழ்களை வெளியிட்டு வந்ததைக் குறிப்பிட வேண்டும். இவருடைய நூறாசிரியம் புகழ்மிக்கது. தேவநேயப் பாவாணருடைய சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் தென்மொழியில் வெளியாகித்தான் பரவலாக அறிய நேர்ந்தது. கருத்துக்களைச் சேர்த்து கட்டுரையை விரிவுபடுத்த உதவுகிறேன். மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய மூவரும் தனித்தமிழ் இயக்கத்தை வெகுவாக வளர்த்தவர்கள், பரிதிமாற்கலைஞருடன் சேர்த்தி தோற்றுநர்கள் என்றே கூறலாம். சங்க காலத்துப் புலவர் பெருஞ்சித்திரனார் என்பவரை வேறுபடுத்திக் காட்டுமாறு தலைப்பு அமைதல் வேண்டும் [பெருஞ்சித்திரன் (சங்ககாலப் புலவர்) என பின்னர் அத்னைத் தொடங்கலாம் என நினைக்கிறேன்] -செல்வா 03:58, 8 ஜனவரி 2008 (UTC)
- நன்றி செல்வா. இவருடைய செயலும் செயற்திறனும் நூல் நான் மீண்டும் மீண்டும் வாசிப்பவற்றில் ஒன்று. ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளிலும் இவர் கணிசமான அக்கறை காட்டினார் என்பதும் இங்கு குறிக்கதக்கது. --Natkeeran 00:33, 9 ஜனவரி 2008 (UTC)
- உண்மை. இப்பொழுதல்ல. 1968-1970களிலேயே இலங்கைத் தமிழர் சிக்கல்கள் குறித்து எழுதி உணர்ச்சி ஊட்டினவர். அக்காலத்து தென்மொழி இதழ்கள் இருந்தால் படித்துப் பாருங்கள். இலங்கைத் தமிழர்கள் உயிர்நீத்ததை உள்ளுருகி பாடலகள் எழுதியவர். இப்பொழுது நேரம் கிடைப்பது அரிதாக உள்ளது. பின்னர் வந்து இக்கட்டுரையை விரிவு செய்ய உதவுகிறேன். இவரை 1968-1972 காலப்பகுதியில் நான் இவரை ஓரிரண்டு முறை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அப்பொழுது நான் தேன்மழை என்னும் (தமிழகத்தின்) முதல் அனைத்துக்கல்லூரி மாணவர் இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவனாக பங்களித்துவந்தேன். கவிஞர் பொன்னடியான், ஆசிரியர் சாவி, ஓவியர் ஜெயராஜ், தமிழ்ப்பணி இதழாசிரியர் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் போன்று பலரை அக்காலத்தில் சந்தித்தேன். --செல்வா 18:43, 9 ஜனவரி 2008 (UTC)
தலைப்பு மாற்றம்
தொகுபெருஞ்சித்திரனார் தான் எழுதிய படைப்புகளில் கையொப்பமிடுகையில் 'பெருஞ்சித்திரன்' என்றே எழுதினார். எனவே இக் கட்டுரையின் தலைப்பையும் அவ்வாறு மாற்றலாமா?--MS2P (பேச்சு) 04:05, 17 ஏப்ரல் 2023 (UTC)
- வணக்கம் @MS2P:. பரவலாக அறியப்படுவது பாவலரேறு பெருஞ்சித்திரனார். இதில் மாற்றம் தேவையில்லை என்பது என் கருத்து. -- சா. அருணாசலம் (பேச்சு) 09:09, 17 ஏப்ரல் 2023 (UTC)
நன்றி --MS2P (பேச்சு) 09:40, 17 ஏப்ரல் 2023 (UTC)
Please add this reference as external link. i am unable to do it