பேச்சு:பெண்ணியம்
பெண்ணியம் என்பது விக்கித்திட்டம் பெண்ணியம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு பெண்ணியம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இக்கட்டுரை விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டம் மூலம் உருவாக்கப்பட்டது/ விரிவாக்கப்பட்டது. |
பெண்ணியம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும். |
இந்த வரைவிலக்கணம் போதுமானதல்ல என்பதோடு தவறான பார்வையையும் தருவதாகப்படுகிறது.
பெண்ணியம் எனப்படுவது பெண்களுக்கெதிரான எல்லாவிதமான புறக்கணிப்புக்கள், சிறுமைப்படுத்தல்கள், உரிமை மறுப்புக்கள் போன்றவற்றை எதிர்க்கும் அரசியலாகும். இது ஆண் நிலைச் சிந்தனைக்கு எதிராக பெண் நிலைச்சிந்தனையினதும், பார்வையினதும் வரவைக் கோரி நிற்கிறது. பெண்களை இரண்டாந்தரப்பிரசைகளாகக் கணிக்கும் அனைத்து சமூக அரசியல் நிறுவனங்களையும், நம்பிக்கைகளையும் வழிமுறைகளையும் தகர்க்கும் செயற்பாட்டை தனது இயக்கமாகக் கொள்வது.
--மு.மயூரன் 00:56, 16 ஜூன் 2007 (UTC)
மயூரன் குறிப்பிடும் "பெண்களுக்கெதிரான எல்லாவிதமான புறக்கணிப்புக்கள், சிறுமைப்படுத்தல்கள், உரிமை மறுப்புக்கள்" ஆகியற்றவற்றிற்கு அடிப்படையே ஆணும் பெண்ணும் இயல்பிலேயே வெவ்வேறு கடமைகளை ஆற்ற இயற்கையால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற கருத்துத் தான். நான் கொடுத்த வரைவிலக்கணத்திற்கு மயூரனின் வாதங்கள் விளக்கமாக இருக்க முடியுமே தவிர, என் வரைவிலக்கணத்திற்கு எதிரானதாகவோ, அதனைத் தவறான கருத்துக்கள் கொண்டவை என நிறுவக் கூடியனவாகவோ இல்லை. "இரண்டாந்தரப்பிரசைகளாகக்" என்ற பதத்திற்குப் பதிலாக இரண்டாந்தரமக்களாக என்ற பதத்தைப் பயன்படுத்தினால் தெளிவாக இருக்கும்.
- இந்த உரையாடற்பக்கத்தில் நன தந்திருக்கும் வாசகங்கள் சரியான வரைவிலக்கணம் அல்ல. அதனால் தான் இங்கு தந்தேன். ஏற்கனவே கட்டுரையில் உள்ள வரைவிலக்கணம் போதுமானதல்ல. ஆண்கள் செய்யும் பணிகளை பெண்கள் செய்யலாம் என்பதுபோன்ற சிறிய மேலோட்டமான விளக்கங்களுடன் பெண்ணியம் என்ற அரசியலை விளக்கிவிட முடியாது. ஆங்கில விக்கிபீடியாவின் கட்டுரை ஏறத்தாழ ஒரு தரமான வரைவிலக்கணத்தைத் தருவதாகப்படுகிறது. அதனை மொழி பெயர்த்து இங்கே சேர்த்தல் நலமானது. "இரண்டாந்தர மக்கள்" என்ற சொல்லாடலுடன் எனக்கு முரண்பாடு இல்லை. --மு.மயூரன் 12:25, 20 ஜூன் 2007 (UTC)
மாயூரன்! பெண்ணியம் என்றால் இவ்வளவு தான் என்று நான் நான்கு வரிகளில் கூறிவிடவில்லை. பெண்ணியத்தின் அடிப்படை என்று ஒரு கருத்தைக் கூறினேன். பெண்ணியச் சிந்தனையால் உந்தப்பட்ட இயக்கங்கள் அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் பொருளாதாரத் தளங்களில் ஏராளம். அவை அனைத்தையும் நாளடைவில் கட்டுரைக்குள் கொண்டுவர வேண்டியது விக்கிபீடியா பயனர்களின் பொறுப்பு. உங்களால் முடிந்த வரை நீங்களும் செய்யுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் செய்கிறேன். ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளதை அப்படியே மொழிபெயர்த்துப் போடலாம் என்பது வரவேற்கத்தக்கக் கருத்து அன்று.
பெண்ணியம் கதையாடலில் பெண்கள் இன்னும் பங்கெடுக்க இல்லை என்பது ஒரு முரண்பாடா...அல்லது ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடா? அல்லது பெண்ணியத்தின் கருத்தை விளக்க ஒரு எடுத்துக்காட்டா. --Natkeeran 18:30, 20 ஜூன் 2007 (UTC)
முக்கியமான இக்கட்டுரையை மேம்படுத்தித் தர வேண்டுகிறேன். கவனிக்க: @Rsmn, Kanags, George46, Nan, Booradleyp1, and Mayooranathan:. இந்த ping வசதி வந்த பிறகு அடிக்கடி பல இடங்களில் உங்களைச் சுட்டி வேண்டுவதற்குப் பொறுக்கவும் :) --இரவி (பேச்சு) 08:14, 21 நவம்பர் 2015 (UTC)Reply
- இந்த உரையாடலையும், இங்கு நடந்துள்ள மாற்றங்களையும் கவனியுங்கள். @Kanags and Shriheeran:--கலை (பேச்சு) 07:47, 11 சூன் 2017 (UTC)Reply
- கட்டுரையில் சில திருத்தங்களைச் செய்திருக்கிறேன். சில பகுதிகளுக்கு மேலதிக மேற்கோள்கள் கேட்டிருக்கிறேன். அதைவிடப் பதிப்புரிமை மீறல் எனச் சொல்ல வேண்டுமானால்:
- //பெண்ணியம் என்பது பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்துகொண்டு அவற்றைக் களைய முற்படும் இயக்கமாகும்.அதன்மூலம் உலகளவில் அரசியல், பண்பாடு,பொருளாதாரம்,
ஆன்மீகம் ஆகியவற்றில் நல்ல மாற்றத்தை உருவாக்கிட முடியும். சார்லட் பன்ச் என்பவர்,"பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது மட்டுமல்ல.சமூகத்தையே மாற்றியமைக்க முயல்வதாகும்" என்று எடுத்துரைப்பார்.// "பறத்தல் அதன் சுதந்திரம்" என்ற Graduate Course இல் உள்ளது.
- //பிரான்சு நாட்டைச் சேர்ந்த சிமோன் டி பேவர் இரண்டாவது பாலினம் (The Second Sex:1949) என்ற நூலை எழுதினார். இந்த நூலை முன்னோடியாகக் கொண்டு, பெண்ணியம் ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும் போராட்டக் கருவியாகவும் முன்வைக்கப்பட்டது.// [1]
இவற்றுக்குத் தகுந்த மேற்கோள்கள் தரலாம். சொற்றொடர்கள் பலவற்றை எளிமையாக்கலாம்.--Kanags \உரையாடுக 10:03, 11 சூன் 2017 (UTC)Reply