இதனை பெரிய ஆக் அல்லது பெரும்புள் ஆக் என்று பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கிறேன். ஏனெனில், ஓக் (Oak) என்று ஒரு மரம் உள்ளது. அதில் பல வகைகளும் உள்ளன. ஆக் என்பது பிடிக்கவில்லை எனில் ஔக் அல்லது அவுக் என்று பெயரிடலாம். பெரும்பாலும் ஆக் என்பது போலதான் ஆங்கிலத்தில் பலுக்குகிறார்கள் (ஒலிக்கிறார்கள்). --C.R.Selvakumar 15:45, 31 ஜூலை 2006 (UTC)செல்வா

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:58, 14 மே 2007 (UTC)Reply

தாங்கள் குறிப்பிட்ட இணைப்பு பயன்பாட்டில்லாததால் நீக்கப்பட்டது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:21, 22 சூலை 2011 (UTC)Reply

தலைப்பு தொகு

பெரிய அவுக்கு என்ற பொருளில் பேரவுக்கு என மாற்ற வேண்டும். ககர ஒற்றில் சொல் முடிவது குற்றம்.--பாஹிம் (பேச்சு) 17:06, 16 மார்ச் 2019 (UTC)

மேலே செல்வாவினால் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களையும் பொருத்திப் பார்க்கலாம் என நினைக்கின்றேன். பெரும்புள் ஆக்கு எனக் கூறினால் என்ன? அவுக்கு என்பதன் பொருள் என்ன? @Fahimrazick and செல்வா:--கலை (பேச்சு) 18:51, 16 மார்ச் 2019 (UTC)

Australia - அவுஸ்திரேலியா என்பது போன்று Auk என்பதை அவுக்(கு) என வரிவடிவப்படுத்தியுள்ளேன். செல்வாவும் அவுக் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் ககர ஒற்றில் முடிவது இலக்கணக் குற்றம் என்பதால் கு சேர்த்துள்ளேன். அவ்வளவுதான்.--பாஹிம் (பேச்சு) 18:21, 17 மார்ச் 2019 (UTC)

ஆக்கு என்பது அண்மித்த உச்சரிப்பாக இருப்பதனால், பெரும்புள் ஆக்கு என்றே அழைக்கலாமா?--கலை (பேச்சு) 06:48, 18 மார்ச் 2019 (UTC)
@செல்வா:--Kanags (பேச்சு) 06:53, 18 மார்ச் 2019 (UTC)

ஆம், பெரிய ஆக்கு எனலாம். இணைய சொற்பிறப்பியல் அகரமுதலி, கீழ்க்காணுமாறு சொல்லுகின்றது: "type of large, colonial diving bird, 1670s, a Northern England name, from a Scandinavian source such as Old Norse alka, probably originally imitative of a water-bird cry (compare Latin olor "swan," Greek elea "marsh bird")" ஆகவே ஒலியெழுப்புவதன் அடிப்படையில் அமைந்திருக்கலாம். ஆக்கு என்பது ஏற்கக்கூடிய சொல். இடாய்ச்சில் Riesenalk என்கின்றார்கள். இதில் Riesen என்பது பெரிய. பறவையில் இனப்பெயராக alk எனச் சேர்த்திருக்கின்றார்கள். எசுப்பானியத்திலும் El alca gigante என்றே சொல்கின்றார்கள். எனவே ஆலுகா அல்லது ஆக்கு என்று சொல்லலாம்.--செல்வா (பேச்சு) 22:08, 22 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெரிய_ஆக்கு&oldid=2680799" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெரிய ஆக்கு" page.