பேச்சு:போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை

சி.வி.ஆர்.டி.இ என்பது தற்சமயம் ஆவடி, சென்னையில் மட்டும் தான் உள்ளது என நினைக்கிறேன். சென்னை இல்லாமல் தலைப்பை போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி என்று மாற்றலாமா? --குறும்பன் (பேச்சு) 14:27, 15 மார்ச் 2012 (UTC)

மாற்றி விட்டேன். ஆம் நீங்கள் சொல்வது சரியே! --செல்வா (பேச்சு) 14:47, 15 மார்ச் 2012 (UTC)

போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி தொகு

செல்வா பேச்சு , குறும்பன் பேச்சு

அபிவிருத்தி என்பதை விட வளர்ச்சி என்பது சரியே. அனால் சி.வி.ஆர்.டி.இ நிறுவனம் போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம், ஆவடி (சென்னை என்று மட்டும் குறிபபிடுவதில்லை) என்று மொழி பெயர்த்து பெயர்ப்பலகை மற்றும் பெயர் விவரத்தாள் கற்றையில் (letter pad) குறிப்பிடுவது வழக்கம். நான் இங்கு பணி புரிந்து ஒய்வு பெற்றவன் எனவே இந்தத் தலைப்பை இட்டேன்.--Iramuthusamy (பேச்சு) 16:31, 15 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி முத்துசாமி. என் நண்பர்கள்/கல்லூரித் தோழர்கள் சிலரும் இங்கு பணி புரிந்திருக்கின்றனர். செயக்குமார், இராசேந்திரன் போன்றோர். "அபிவிருத்தி" என்று இருக்க வேண்டும் என்றால் மீண்டும் மாற்றிவிடலாம். முதலில் அவர்கள் தமிழில் பெயர்ப்பலகை/முகப்புத்தாள்களில் எழுதியிருக்கின்றார்கள் என்பதே பெரு மகிழ்ச்சி தருவது :) தகவலுக்கு நன்றி. உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்கின்றேன். --செல்வா (பேச்சு) 16:38, 15 மார்ச் 2012 (UTC)

பகுப்பு:இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு நிறுவனங்கள் தொகு

பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ...
பகுப்பு:பகுப்பு:இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு நிறுவனங்கள்

"பகுப்பு:பாதுகாப்பு ஆய்வு மற்றும்வளர்ச்சி நிறுவனங்கள்" என்பது சரியாக இருக்கும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஆயுத தளவாடங்கள் குறித்த நிறுவனங்கள் குறித்த சிறு விளக்கம்:

  • பாதுகாப்பு ஆய்வு மற்றும்வளர்ச்சி நிறுவனம் (DRDO) = 50 சோதனைக்கூடங்கள்
  • இயக்குநர் ஜெனரல் தர உத்தரவாதம் (DGQA) = பரிசோதகங்கள் (Inspectorates)
  • ஆயுதத் தொழிற்சாலை வாரியம் (IOB) = 41 இந்திய ஆயுதத் தொழிற்சாலைகள்

மிக்க நன்றி ஐயா இரா.முத்துசாமி (பேச்சு) 16:09, 24 ஆகத்து 2022 (UTC)Reply

Return to "போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை" page.