பேச்சு:மானிப்பாய் மகளிர் கல்லூரி

இலங்கையின் கல்வி முறைகள் தெரிந்த ஒருவர், மேற்கொண்டு துப்புரவு செய்தால் ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையை தக்க வைக்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:40, 16 திசம்பர் 2016 (UTC)Reply

செல்வசிவகுருநாதன் அவர்களே இக்கட்டுரையில் வெகுவானவற்றை நீக்கியுள்ளேன். நான் செய்தது பிழையாயின் மீளமையுங்கள். தங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்.
பயனர்:Nilogini Vasanthakumar, கட்டுரையை இவ்வளவு நீளமாக வளர்த்தெடுத்தமைக்கு பாராட்டுகள். ஆனாலும், கட்டுரையின் பல பகுதிகள் ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் இருந்து கூகுள் தானியங்கி மூலம் மொழிபெயர்த்தது போல உள்ளது. வரிகள் எதுவும் முழுமையாக இல்லை. இவற்றைத் திருத்துங்கள். அல்லது அவை விரைந்து நீக்கப்படும். மேலும், அதிபர்களின் பெயர்களை மட்டும் பட்டியலாகத் தாருங்கள். ஆசிரியர்களின் பட்டியல் எதுவும் கட்டுரையில் தேவையற்றது. அவை நீக்கப்படும். மன்றங்களைப் பற்றி சுருக்கமாகத் தந்தால் போதுமானது. அவற்றின் பொறுப்பாளர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் எதுவும் தேவையில்லை. இன்னும் நிறையத் திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளது.--Kanags \உரையாடுக 22:07, 16 திசம்பர் 2016 (UTC)Reply

துப்புரவு செய்து, அவருக்கு சில ஆலோசனைகளையும் தந்தேன். ஏனோ அவர் அவற்றைக் கவனிக்கவில்லை. (இப்போது மீண்டும் சரிசெய்வதற்கு சோர்வாக உள்ளது!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:17, 16 திசம்பர் 2016 (UTC)Reply

இலங்கையில் வட மாகாணத்தில் இருந்து பலர் குறிப்பாக மாணவர்கள் பங்கெடுத்து வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. (இதற்காக ஏதேனும் பரப்புரை அண்மையில் செய்யப்பட்டதா?). ஒரு வரியானாலும், கட்டுரைகளை முழுமையாக நீக்காமல், கால அவகாசம் கொடுக்கலாம். மேலும், இவர்கள் அனைவருமே பயன்படுத்தும் எழுத்துரு என்ன என அறிய முடியவில்லை. குறிப்பாக ர், ரி போன்ற எழுத்துகள் ஒருங்குறியில் இல்லை. (@Shriheeran:.--Kanags \உரையாடுக 23:37, 16 திசம்பர் 2016 (UTC)Reply
எந்த விதமான பரப்புரைகளும் நடத்தப்படவில்லை. நாமாகவே தான் த.விக்கிக்குள் நுழைகிறோம் ஐயா. மேலும் //ர்,ரி போன்ற எழுத்துக்கள் ஒருங்குறியில் இல்லை//என்பதை சற்று விளக்கிக் கொள்ள முடியுமா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.(@Kanags:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:08, 17 திசம்பர் 2016 (UTC)Reply
சிறீகீரன், நான் உங்களைச் சொல்லவில்லை. நீங்கள் நீண்டகால உறுப்பினர். தற்போது திடீரென்று பலர் எழுதத் தொடங்கியுள்ளார்கள். அதனால் தான் கேட்டேன். கட்டுரையைப் பாருங்கள். ர், ரி போன்ற எழுத்துகள் ஒருங்குறியில் இல்லை. நான் சிலவற்றைத் திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:15, 17 திசம்பர் 2016 (UTC)Reply
Kanags, எனக்கும் பரப்புரை நடந்திருக்கின்றதா? என்ற சந்தேகம் இருந்தது. பல யாழ்ப்பாணக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. -- மாதவன்  ( பேச்சு ) 10:06, 17 திசம்பர் 2016 (UTC)Reply

ஆம், மாதவா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:17, 17 திசம்பர் 2016 (UTC)Reply

Return to "மானிப்பாய் மகளிர் கல்லூரி" page.