பேச்சு:முன்னிற்கும் சுரப்பி
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Nan
இதன் தலைப்பை விந்துநீர்ப்பை அல்லது விந்துநீர்ச் சுரப்பி அல்லது வித்துப்பை என மாற்றலாம் என்று நினைக்கிறேன். ஆங்கிலப் பெயரை புராசுட்டேட் என்று பிறைக்குறிகளுக்குள் ஆங்கிலத்திலும் தமிழிலும் தரலாம். --செல்வா 01:45, 2 நவம்பர் 2010 (UTC)
- ஆம், அப்படி மாற்றுவதே நல்லது என்று எனக்கும் தோன்றுகின்றது.--கலை 06:31, 2 நவம்பர் 2010 (UTC)
- இலங்கைப் பாடப்புத்தகங்களில் முன்னிற்கும் சுரப்பி என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இலக்கிய ரீதியிலும் இதுவே ( en:prostate) சரியாகப் படுகிறது.--சஞ்சீவி சிவகுமார் 06:51, 2 நவம்பர் 2010 (UTC)
- சஞ்சீவி சிவகுமார், நீங்கள் சொல்வது ஆங்கிலச்சொல்லின் நேரடியான் மொழிபெயர்ப்பு (அதிகம் பொருள் தரவில்லை). பாடப்புத்தகத்தில் இருப்பதால், கட்டாயம் குறிப்பிடவேண்டும்.--செல்வா 01:10, 3 நவம்பர் 2010 (UTC)
விந்துப்பை என்ற பெயர் புரோஸ்டேட்டைக் குறிக்காது. seminal vesicle ஐ வேண்டுமானால் விந்துப்பை எனலாம். புரோஸ்டேட் சுரப்பி என்ற பெயரே என் தனிப்பட்ட தெரிவாக இருப்பினும் தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு அது ஒவ்வாததாகையால் இப்போதைக்கு முன்னிற்கும் சுரப்பி என்ற பெயருக்கு கட்டுரையை நகர்த்துகிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 13:50, 28 ஏப்ரல் 2012 (UTC)
- தமிழ் விக்சனரியிலும் தமிழ் வர்ச்சுவல் யுனிவர்சிடியின் மருத்துவக் கலைக் களஞ்சியத்திலும் சுக்கியன் என்ற இணைச்சொல் தரப்பட்டுள்ளது.--மணியன் (பேச்சு) 08:18, 25 சனவரி 2015 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 12:05, 25 சனவரி 2015 (UTC)