பேச்சு:மூத்த குடிமக்கள்
\\இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் மூத்தகுடி மக்கள், செலுத்த வேண்டிய வருமானவரியிலிருந்து ரூபாய் இரண்டாயிரம் வரி தள்ளுபடி சலுகை உண்டு.\\
மூத்த குடிமக்களுக்கு மட்டுமல்லாது, ஐந்து லட்சம்வரை வரிக்குட்பட்ட வருமானம் (taxable income) உடைய அனைத்து குடிமக்களுக்கும் செலுத்த வேண்டிய வருமானவரியிலிருந்து ரூபாய் இரண்டாயிரம் வரி தள்ளுபடி சலுகை மார்ச் 2014 பட்ஜெட்டில் ((2014- 2015 assessment year) அறிவிக்கப்பட்டதுRebate under section 87A.
கட்டுரையில் ’இச் சலுகை 5 லட்சம் வரை வரிவிதிப்புக்குட்பட்ட வருமானமுடைய மூத்த குடிமக்களுக்கும் உள்ளது’ என திருத்தம் செய்துவிடலாமா?--Booradleyp1 (பேச்சு) 05:06, 8 சூலை 2014 (UTC)
- தற்போது இரண்டாயிரம் வரி தள்ளுபடி தொடர்பான செய்தியை கட்டுரையிலிருந்து நீக்கி விட்டேன். ஏன் எனில் இச்சலுகை ஐந்து இலட்சம் ஆண்டு வருவாய் உள்ளவர்கள் அனைவருக்கும் பொருந்துகிறது. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:00, 8 சூலை 2014 (UTC)
விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:55, 9 சூலை 2014 (UTC)
- மூத்த குடிமக்கள் என்பதை விட மூத்தகுடி மக்கள் என்பதே சரியான தலைப்பாகத் தெரிகிறது. ஏன் மாற்றப்படட்து?--Kanags \உரையாடுக 20:58, 10 சூலை 2014 (UTC)
- மூத்த=senior குடிமக்கள்=citizen என்பது சரியாகத்தானே இருக்கிறது. வேண்டுமானால் மூத்தகுடிகள் எனலாம். --மணியன் (பேச்சு) 00:47, 11 சூலை 2014 (UTC)
- மூத்த குடிமக்கள் என்பதை விட மூத்தகுடி மக்கள் என்பதே சரியான தலைப்பாகத் தெரிகிறது. ஏன் மாற்றப்படட்து?--Kanags \உரையாடுக 20:58, 10 சூலை 2014 (UTC)
’மூத்த குடிமக்கள்’ என்பதே பொருத்தமானது. ‘மூத்தகுடிகள்’ என்பது வேண்டாமே. அது ’பழங்குழுக்கள்’ அல்லது ’பழமைவாய்ந்த இனங்கள்’ என்ற பொருளைத் தரலாம். (மேலதிகத் தகவலுக்கு: தமிழ்நாட்டின் கிராமப்புறங்களின் பேச்சுவழக்கில் ’மூத்தகுடியா(ள்)’ என்பது ஒருவனின் முதல் மனைவியையும், ‘இளையகுடியா(ள்)’ என்பது அவனது இரண்டாம் மனைவியையும் குறிக்கப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. இப்பொழுது ’பலதாரத் திருமணங்கள்’ தடைசெய்யப்பட்டதால் இச்சொற்களும் வழக்கொழிந்து போயின.)--Booradleyp1 (பேச்சு) 04:12, 11 சூலை 2014 (UTC)
- விருப்பம்--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 00:30, 12 சூலை 2014 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 22:12, 11 சூலை 2014 (UTC)
- விருப்பம் =தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:50, 9 ஆகத்து 2014 (UTC)
"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"
தொகுஇக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)