பேச்சு:மூன்றாம் ராமா

Active discussions


கூகுள் மொழிபெயர்ப்பில் மேம்பாடு தேவைதொகு

@Balu1967, Parvathisri, Balajijagadesh, மற்றும் Info-farmer: இக்கட்டுரையில் கூகுள் மொழிபெயர்ப்பு பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதை இன்னும் சீராக்கி எழுதிடத் தேவை உள்ளது. //ஆனால் அவர் தனது மனைவிகளில் எவரையும் ராணியாக வளர்க்கவில்லை.// போன்ற மொழிபெயர்ப்பு தவறு. //மரபுகளின்படி அவரது வாரிசு அசாதாரணமானது.// இது ஏன் அசாதாரணமானது என்ற தகவல் ஆங்கில விக்கியில் உள்ளது. தமிழில் இல்லை. இப்படி முழுமையான தகவல் இல்லாததால் கட்டுரையைப் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. மரபுகளின்படி அவரது வாரிசு அசாதாரணமானது என்ற சொற்றொடரே பிழையான பொருள் தருவதாக அமைந்துள்ளது. இது போல் தங்களுடைய மற்ற கட்டுரைகளிலும் மேம்பாடு தேவை எனில் அவற்றைக் கவனித்துத் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், இவற்றை இப்போது திருத்தாமல் விட்டால் அப்படியே தங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். நடுவர்கள் அனைத்துக் கட்டுரைகளிலும் மொழிபெயர்ப்புத் தரத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 18:28, 20 நவம்பர் 2019 (UTC)

  • நன்றி இரவி கருத்தில் கொள்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:41, 20 நவம்பர் 2019 (UTC)
  • நேற்று சில கட்டுரைகளுக்கு பவுன்டன் கருவியில் குறிப்புகளைத் தந்துள்ளேன். பலரும் அறிய இனி அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் குறிப்புகளைத் தந்து, அவற்றை இந்த துணைப் பக்கத்தில் குறிப்பிடுவேன். மேலும் அந்த துணைப்பக்கமானது ஏற்கனவே, இப்போட்டியில் இல்லாத, இதற்கு முன் எழுதப்பட்ட கட்டுரைகளையும் மேம்படுத்த உதவும் என நம்புகிறேன்.--உழவன் (உரை) 01:37, 21 நவம்பர் 2019 (UTC)
@Parvathisri, Balu1967, மற்றும் Info-farmer: புரிதலுக்கு நன்றி. Fountain கருவியைப் போட்டியாளர் தவிர வேறு யாரும் பார்க்க மாட்டார்கள். இங்கு பேச்சுப் பக்கத்தில் இட்டால் மற்ற பயனர்களும் கவனித்து உதவலாம். 1000க்கு மேற்பட்ட அனைத்துப் போட்டிக் கட்டுரைகளிலும் ஆலோசனைகள் வழங்க முடியாவிட்டாலும், சில எடுத்துக்காட்டுகளைக் கூறினால், போட்டியாளர்கள் அவற்றைக் கருத்தில் கொண்ட செயல்பட உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 09:05, 21 நவம்பர் 2019 (UTC)

மூன்றாம் இராமா கட்டுரைதொகு

வணக்கம் இரவி. தங்களின் கவனிப்பு இன்னும் என்னை கவனத்துடன் செயல்படத் தூண்டுகிறது. மூன்றாம் இராமா கட்டுரையை மேம்படுத்தியுள்ளேன். கவனிக்கவும். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 04:13, 21 நவம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூன்றாம்_ராமா&oldid=2854485" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மூன்றாம் ராமா" page.