பேச்சு:மெக்சிக்கோ
மெக்சிகோ என்றே எழுதலாமே? உடன்பாடென்றால் பக்கத்தை நகர்த்தலாம்--ரவி 10:40, 4 ஜனவரி 2006 (UTC)
yes
தலைப்பு மாற்றம் பற்றி
தொகுமெக்சிகோ என்பதுதானே தமிழில் வழக்கத்தில் உள்ள பெயர். மேலும் இந்தக் கோப்பை கேட்டால் மெஃசிகோ என்பது போல கேட்கிறது.--சண்முகம்ப7 (பேச்சு) 15:26, 3 சூலை 2012 (UTC)
- மெசிக்கோ அல்ல மெஃகிக்கோ (மெஹிக்கோ) என்றே பலுக்கப்படுகிறது. ஆனாலும் இதனை முதற்பந்தியில் அடைப்புக்குறிக்குள் தரலாம். பெரும் பயன்பாட்டில் உள்ளது மெக்சிக்கோ. அதனையே முதன்மைப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 21:19, 3 சூலை 2012 (UTC)
- எசுப்பானிய ஒலிப்பு மெஃகிக்கோ (meHiko) என்பது போல. மெக்சிகோ/மெக்சிக்கோ என்பது பரவலான பயன்பாட்டில் உள்ளது. இது ஆங்கில ஒலிப்பைப் பின்பற்றியது (Meksiko = மெக்ஃசிக்கோ) ((ஆங்கிலம் /mɛksɨkoʊ / எசுப்பானியம் IPA: [ˈmexiko]). நாடுகள், மொழிகள் முதலியவற்றை ஒரே சீராகத் தமிழ்விக்கிப்பீடியாவில் எழுதிப் பயன்படுத்துவது நல்லதாக இருக்கும். மூலமொழி ஒலிப்பை ஒட்டி, ஆனால் தமிழ் முறைக்கு ஏற்ப எழுத்துப்பெயர்ப்பைச் சீர்மைப்படுத்துவது மிகவும் நல்லது. வழிமாற்றுகள் நாம் தரும்பொழுது பிற பல வடிவங்களுக்கு இருக்கலாம். மிகவும் தேவை எனில் ஒருசில இடங்களில், ஒருசில இடங்களில் மட்டும் ஆங்கில அல்லது பிரான்சிய ஒலிப்பை ஒட்டி "சீர்மை" வடிவத்தை வழங்கலாம், இங்கும் தமிழ் முறைக்கு ஏற்பவே இருப்பது முறை. --செல்வா (பேச்சு) 23:01, 3 சூலை 2012 (UTC)
நேற்று இந்நாட்டு அதிகாரிகளுடன் ஒரு நிகழ்ச்சியிற் கலந்து கொண்டேன். அவர்கள் மெகிக்கோ (மெஹிக்கோ) என்றே கூறுகிறார்கள். ஆயினும் என்னிடம் பேசும் போது ஆங்கிலத்தில் மெக்சிக்கோ என்றார்கள். எப்படிப் பார்த்தாலும் சரியான பெயரில் அல்லது தமிழ் முறையில் தலைப்பிடுவதே பொருத்தம். இங்கே சரியான பெயர் மெகிக்கோ என்றும் ககர ஒற்றையடுத்துச் சகரம் வரின் அக்ககரம் டகரமாகத் திரியும் இலக்கணத்தைப் பின்பற்றி, ஆங்கில வழித் தமிழாக்கத்தில் மெட்சிக்கோ என்றுமே வர வேண்டும். எப்படிப் பார்த்தாலும் மெக்சிக்கோ என்றெழுதுவது பிழை.--பாஹிம் (பேச்சு) 03:58, 15 அக்டோபர் 2020 (UTC)
சிலர் எழுதுவது போன்று மெஃகிக்கோ என்று ஒலிப்புக் கருதி எழுதுவதும் தகுந்ததன்று. காகம், தாகம், வேகம், போகம், மோகம், சோகம், தேகம் என்று இடையில் வரும் ககரத்தின் ஓசையே இங்கும் வருவதால் ஃ எழுத்து தேவையற்றது.--பாஹிம் (பேச்சு) 04:01, 15 அக்டோபர் 2020 (UTC)
@Kanags:, எதற்காக தகுந்த உரையாடலின்றி தலைப்பு மாற்றம் வேண்டுகோளை நீக்கினீர்கள்?--பாஹிம் (பேச்சு) 12:18, 15 அக்டோபர் 2020 (UTC)
- நாம் (நம்மில் பலர் பொதுவெளியில்) பிழையானவற்றை மீண்டும் மீண்டும் எழுதி வழக்கூன்றச் செய்கின்றோம். மெக்சிக்கோ என்று தமிழில் வருதல் பிழை. மெச்சிக்கோ, மெட்சிக்கோ, மெகிக்கோ என்ற ஒன்றைத் தேர்வு செய்யலாம். "பரவலாக" இல்லையே என்று கவலுறத்தேவையில்லை. ச. வெ. இராமன் என்பது பரவலாக முன்பு இல்லை, ஆனால் நாம் முறைப்படி எழுதியபின்னர், பலரும் ச.வெ.இராமன் என்று எழுதுகின்றார்கள். தமிழில் எழுதும்பொழுது தமிழிலக்கணப்படி எழுதுதல் நல்லது. நான் பாகிம் சொல்வதை ஏற்கின்றேன். --செல்வா (பேச்சு) 15:10, 15 அக்டோபர் 2020 (UTC). தமிழில் எஃகு, வெஃகாமை, வெஃகி போன்ற சொல்லாட்சிகள் உண்டென்பதால் மெஃகிக்கோ என்றெழுதலாம் என்பது என் கருத்து.--செல்வா (பேச்சு) 15:17, 15 அக்டோபர் 2020 (UTC)
@செல்வா: முற்காலத்தைப் போலன்றி இக்காலத்தில் அதுவும் விக்கிப்பீடியா போன்ற ஓர் உலகளாவிய இணையக் கலைக்களஞ்சியத்தில் உலக மொழிகளிலிருந்தெல்லாம் பெயர்களைத் தமிழில் எடுத்தெழுத வேண்டியிருக்கின்றது. இதனால் ஏற்படும் சிக்கல்கள் ஏராளம். இங்கே மொழிபெயர்ப்புக் கொள்கை ஒன்றைப் பின்பற்றிக் கொள்வதே சாலச் சிறந்தது. முடிந்தளவு மூல மொழிப் பெயர்களையே தமிழ்ப்டுத்த வேண்டும். ஆங்கிலப் பெயர்களையல்ல. எம்மில் பலரும் ஆங்கிலம் கற்றிருப்பதால் ஆங்கில வழியில் தமிழாக்கம் செய்ய நினைப்பது சரியானதன்று. எடுத்துக் காட்டாக, திருச்சி என்பதை ட்ரிச்சி என்று அவர்கள் கூறினால் அதையே பின்பற்றி நாமும் அப்படிக் கூறுவது சரியல்லவே. அப்படிக் கூறும் தமிழர்களும் அல்லது தமிழர்களென்று கூறிக் கொள்வோரும் இருக்கிறார்கள் என்பது வேறு விடயம். முன்னொரு தடவை ஆங்கில வழித் தமிழாக்கத்தில், தமிழ் நாட்டு ஆங்கில நடையில், இந்தோனேசியாவிலுள்ள பண்டுங் நகரை பேண்டுங் என்றெழுதியிருந்ததைப் பார்த்து மாற்றினேன். பேண்டுங் என்று இந்தோனேசியாவில் தேடினால் அப்படியொரு பெயரை எவரும் கூறுவதில்லை. மூல மொழியை அப்படியே தமிழ்ப்படுத்துவது சாத்தியமில்லாவிடின் எம்மால் முடிந்தளவு மூல மொழிக்கு நெருக்கமாக அதனைத் தமிழ்ப்படுத்துவதே முறை. நாம் தமிழ்ப்படுத்தும் போது வேறுபாடுகளை வேறுபடுத்திக் காட்டுவது சாத்தியமாகாதவிடத்து மாத்திரம் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவது தவறில்லையென்றே நினைக்கிறேன். மாறாக, ஆங்கிலமல்லாத மொழிகளிலிருந்து எடுக்கும் போது ஆங்கிலத்தைப் பின்பற்றித் தமிழ்ப்படுத்துவது இன்னுமின்னும் குழப்பத்தைக் கூட்டுமே தவிர தமிழ் மொழிக்கு நன்மை பயக்காது. ஆங்கிலேயர்களே அவ்வாறு செய்வதை ஏற்றுக் கொள்வதில்லை. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதித்துவத்துக்கும் (EU Delegation) பிரித்தானியக் கழகத்துக்கும் (British Council) மொழியியல் ஆலோசகராகவும் மதிப்பீட்டாளராகவும் கடமையாற்றினேன். அப்போது நடந்த உரையாடல்களில் பிரித்தானியக் கழகத்தின் சார்பில் மொழியியலாளர்களே கலந்து கொண்டனர். நான் கூறிய மேற்படி கருத்தை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.--பாஹிம் (பேச்சு) 03:30, 16 அக்டோபர் 2020 (UTC)
- @Fahimrazick: மேலே உள்ள உங்கள் கருத்துகள் பலவற்றுடன் ஒன்றுபடுகின்றேன். "வேறுபடுத்திக்காட்டுவது சாத்தியமில்லாத" என்னும் இடத்திலும் தமிழல்லாத எழுத்துகளை நுழைத்தல் தேவையில்லை என்பது என் கருத்து. ஆஙிலத்தில் வலி, வளி, வழி ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டவியலாது. த என்னும் ஒலி ஆங்கிலத்தில் இல்லை. அவர்கள் பிற எழுத்துகளைப் பொதுவழக்கில் எடுத்தாளுவதில்லை. எனவே தமிழெழுத்துகளில் மட்டும் எழுதுவதே முறை. ஆனால் இந்த முறையைப் பலரும் மீறுகின்றார்கள், எளிமையின் அருமையையை உணருவதில்ல, 79 எழுத்துகளைக் குழந்தைகள் கற்கவேண்டும், அப்படியே கற்றாலும் இன்னும் பற்பல ஒலிகள் பிறமொழியில் உல்ளவாறு குறிக்கவியலாது என்பதையும் அறிய மறுக்கின்றார்கள். இது ந்ஹடைமுறையில் இருந்துவரும் ஒரு சிக்கல். பிறமொழிச்சொற்களைத் தமிழில் எழுதுவதில் சரியான, சீரான புரிந்துகொள்ளுமை இல்லை. --செல்வா (பேச்சு) 19:06, 19 அக்டோபர் 2020 (UTC)
நான் அதை மறுக்கவில்லை, செல்வா. இங்குள்ள நடைமுறைச் சிக்கலையும் கருத்திற் கொள்ள வேண்டுமே. கிரந்த எழுத்துக்கள் வேற்றுமொழியினதாயினதும் காலங்காலமாக அவற்றைத் தமிழெழுத்துக்களுடன் எழுதிப் பழக்கி விட்டார்களே. அதுதான் சிக்கல்.--பாஹிம் (பேச்சு) 02:15, 20 அக்டோபர் 2020 (UTC)