பேச்சு:மோகன்தாசு கரம்சந்த் காந்தி
மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
மோகன்தாசு கரம்சந்த் காந்தி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
உள்ளடக்கம்
I don think that the M. K. ganthi redirect page is neeeded--ரவி (பேச்சு) 12:57, 2 ஜூலை 2005 (UTC)
- Why? I created the redirect page because there was a red broken link to M.K.Gandhi at the ஈ. வெ. இராமசாமி நாயக்கர் article. I think it's just fine cause, this way we could prevent broken links and prevent somebody from creating duplicate articles. அஆ 05:37, 3 ஜூலை 2005 (UTC)
I have fixed the M.K.Ganthi link at periyaar page to mahathma ganthi page and deleted the M. K. Ganthi redirect page. Generally, its not prefered to created a redirect page unless the name is popular. If u find a broken link to a unpopular name, u can fix the link to a popular name. and thanks for taking care to fix the links.--ரவி (பேச்சு) 4 ஜூலை 2005 08:49 (UTC)
- ok. no problem - அஆ 5 ஜூலை 2005 05:57 (UTC)
காந்தி 1924ஆண்டு கர்நாடகத்தில் உள்ள பெல்காம் நகரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.
நான் பகத்சிங் பற்றி சேர்த்த உள்ளடக்கத்தில் எனக்கு குழப்பமுள்ளது. விவரமறிந்தவர்கள் தெளிவாக்க வேண்டுகிறேன். காந்தி இர்வின் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டாரா? அல்ல இந்த தூக்கு விசயத்தில் அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தக் கூடாது என்பதில் கையெழுத்திட்டாரா?--தென்காசி சுப்பிரமணியன் 11:23, 22 அக்டோபர் 2011 (UTC)Reply
கரம்சந்த் என்பதைத் தமிழ் வழக்கின்படி கரம்சந்து என மாற்றலாமா?--பாஹிம் (பேச்சு) 09:21, 11 சூன் 2012 (UTC)Reply
- விருப்பம்--Kanags \உரையாடுக 09:35, 11 சூன் 2012 (UTC)Reply
அத்துடன், மோகந்தாசு என்றுதானே வரவேண்டும்?--பாஹிம் (பேச்சு) 12:00, 12 சூன் 2012 (UTC)Reply
- இல்லை, மோகன்தாசு என்றிருந்தாலே போதுமானது.--Kanags \உரையாடுக 12:27, 12 சூன் 2012 (UTC)Reply
ஆளுமைகளின் பட்டங்கள் / பெயர்கள் தொடர்பான மாற்றுக் கருத்துகள் எந்தெந்த கட்டுரைகளில் உள்ளது என்பைதப் பின்தொடர்வதற்காக பெயர் மாற்ற வார்ப்புரு சேர்த்துள்ளேன். இதனை என் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் சேர்க்கவில்லை.--இரவி (பேச்சு) 20:04, 6 ஏப்ரல் 2015 (UTC)
//பகத்சிங்க்இன் வழிமுறை காந்தியின் அஹிம்சை முறைக்கு எதிரானதாகும். பகத்சிங்கை ஆதரித்திருந்தால் மட்டுமே காந்தியைக் குற்றவாளியெனச் சொல்ல முடியும். எனவேதான் வெள்ளையனின் உயிரைக் கொன்ற பகத்சிங்கிற்காக காந்தி இர்வின் ஒப்பந்தத்தில் காந்தியால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் காந்தி பகத்சிங் மற்றும் தோழர்களின் விடுதலைக்காக தனிப்பட்டமுறையில் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தார். வழிதவறிய மைந்தர்கள் அவர்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் சொன்னார். காந்தி இது தொடர்பாக ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதங்கள் ஆவணகாப்பகங்களில் உள்ளன. பகத்சிங், படுகேஷ்வர் தத் தவிர பிறர் உயிர் பிழைத்தமைக்கு காந்தியே காரணம்.//
மேலே பாலூர்பாலா பயனரால் சேர்க்கப்பட்ட உள்ளடக்கங்கள் பல சர்ச்சைக்கூறிய கருத்துக்களை கண்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தேவை.
//பகத்சிங்க்இன் வழிமுறை காந்தியின் அஹிம்சை முறைக்கு எதிரானதாகும்.//
இக்கருத்து சரி.
//பகத்சிங்கை ஆதரித்திருந்தால் மட்டுமே காந்தியைக் குற்றவாளியெனச் சொல்ல முடியும்.//
அப்படி என்றால் என்ன சொல்ல வருகுறீர்கள். பகத்சிங்கு குற்றவாளி என்றா? அல்லது ஆங்கிலேய அரசு குற்றவாளி என்று கூறியதை பொதுப்படுத்துகிறீர்களா? அக்காலத்தில் இருவருமே தேச பக்தர்களாகத்தான் பார்க்கப்பட்டார்கள்.
//ஆனால் காந்தி பகத்சிங் மற்றும் தோழர்களின் விடுதலைக்காக தனிப்பட்டமுறையில் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தார். வழிதவறிய மைந்தர்கள் அவர்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் சொன்னார். காந்தி இது தொடர்பாக ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதங்கள் ஆவணகாப்பகங்களில் உள்ளன.//
இந்த கருத்துகளுக்கு ஆதாரமும் விளக்கமும் தேவை. தனிப்பட்ட உதவி என்றால் அவை எவை? வழிதவறிய மைந்தர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? ஆவணக்காப்பகங்களில் உள்ளன என்பது சரி. ஆனால் அவற்றில் என்ன எழுதி இருந்தார்?
//பகத்சிங், படுகேஷ்வர் தத் தவிர பிறர் உயிர் பிழைத்தமைக்கு காந்தியே காரணம்.//
பகத்சிங்கு தூக்கில் இடப்பட்டார். அவர் எங்கே காப்பாற்றப்பட்டார்? மேலும் பகத்சிங், படுகேஷ்வர் தத் தவிர என்றால் என்ன பொருள்? தூக்கில் இடப்பட்டது மூவர் ஆக இருக்கையில் பகத்சிங், தத் தவிர மற்றவர்கள் எனக் காட்டுவது பொருந்தாது. மேலும் பக்த்சிங்கை சேர்ந்த மற்றவர்களை காந்தி காப்பாற்றினார் என்பதற்கு என்ன ஆதாரம்?
- மொத்த்தில் கிடைக்கும் ஆதாரங்கள் கொண்டு பார்த்தால் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் காந்தி கை எழுத்திட்டது தெளிவு.
- உயிர்கொலையை ஏற்காதது தான் அகிம்சை.
- அப்படி இருக்கையில் பல பேரைக் கொன்ற வெள்ளையர்களிடம் காந்தி அகிம்சை காட்டுவது சரி.
- லாலா லஜ்பதி ராயை அடித்துக் கொன்ற ஆங்கிலேயக் காவலாளியை ஒருவரை மட்டும் சுட்டுக் கொன்ற பகத்சிங் அவரின் தோழர்கள் மட்டும் தூக்கில் தொங்க கையெழுத்திடுவது எப்படி அகிம்சையாகும்? மூவரையும் காந்தி உண்ணாவிரதம் இருந்து மாற்று வழிக்கு கொண்டு வந்திருக்கலாமே? காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கை எழுத்திடாமல் அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டு மூவரையும் காப்பாற்றி இருக்கலாமே? என் அகிம்சை முறைக்கு இந்த தூக்கு தண்ட்னை ஒப்புதல் ஒப்பந்தம் எதிரானது எனக்கூறி கை எழுத்திடுவதை தவிர்த்து இருக்கலாமே?
- எப்படிப்பார்த்தாலும் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டது உயிர்கொலை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மூன்று கொலைகளுக்கு உடந்தையாய் அமைந்தது. அது அகிம்சை ஆகாது. இந்த ஒப்பந்தத்தில் கை எழுத்திட்ட போது காந்தி அகிம்சையில் இருந்து வழி தவறினார் என்பதே சரி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:15, 17 ஆகத்து 2013 (UTC)Reply
வணக்கம் ! தென்காசி சுப்பிரமணியன் தங்களின் விருவிருப்பான பங்களிப்புகள் கண்டு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!
- மகாத்மா காந்தி கட்டுரையின் பேச்சு பக்கத்தில் தாங்கள், பகத்சிங் பற்றி சேர்த்த உள்ளடக்கத்தில் எனக்கு குழப்பமுள்ளது, விவரமறிந்தவர்கள் தெளிவாக்க வேண்டுகிறேன் (11:23, 22 அக்டோபர் 2011 (UTC) என்று குறிப்பிட்டும்,
- காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கை எழுத்திட்ட போது காந்தி அகிம்சையில் இருந்து வழி தவறினார் என்பதே சரி. (13:15, 17 ஆகத்து 2013 (UTC) என்றும் குறிப்பிட்டும் உள்ளீர்கள்.
தங்களின் குழப்பம் குறித்து நீண்டகாலம் எவரும் தெளிவாக்காததால், காந்தி அகிம்சையில் இருந்து வழி தவறினார் என அவசரப்பட்டு முடிவுக்கு வந்துள்ளீர்கள் என நான் கருதுகின்றேன்.
பகத் சிங் தூக்கில் இடப்பட்டு 82 ஆண்டுகள் கடந்த தற்போதைய நிலையில், பகத்சிங்கின் தூக்குதண்டனை பற்றிய விவாதமானது, முந்தைய (1930) ஆதார பூர்வமான தகவல் ஏதும் இன்றி சமீபகால ஊடகங்களின் யூக கருத்துக்களை கொண்டு முடிவுக்கு வரக்கூடாது என நான் கருதுகின்றேன்.
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் பகத்சிங்கின் தூக்குதண்டனை பற்றிய குறிப்பு மட்டுமே இல்லை, பல குறிப்புகள் அடங்கியுள்ளன.
தேசிய அளவில் ஊடகங்களில் பகத்சிங்கின் தூக்குதண்டனை குறித்த விவாதங்கள் இடம்பெரும் இவ்வேளையில் பாரத பிரதமர் அவர்கள் பகத் சிங் தியாகம் போற்றுதலுக்குரியது என்றும் பகத் சிங்கின் தியாகத்தை போற்றும் வகையில் போதிய தகவல் ஆதாரம் இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம் மகாபாரதம் போன்ற நீண்ட வரலாறு, கணக்கிலடங்காதவர்களின் தியாகம் வரலாற்று குறிப்புகளில் இல்லை. மகாத்மா காந்தியின் சுயசரிதை அடங்கிய மகாத்மா காந்தி சிந்தனைகள் தொகுப்பு நூல்கள் - (16 ) மற்றும் பல தரமான பதிப்பக வெளியீடு நூல்களை படித்தும், மூத்த மக்களின் ஆலோசனை பெற்றும் தெளிவு பெற தங்களை அன்புடன் வேண்டுகின்றேன். மேலும் உலகமே வியக்கும் மகாத்மா காந்தி பற்றிய உயர்வான மதிப்பீடுகளை, விக்கிபீடியாவில் தங்களின் விவாதம், (முகநூல் அரட்டை போன்ற) மோசமான உதாரணமாகிவிடக்கூடாது என நான் கருதுகின்றேன். தங்களின் பகத்சிங்கின் தூக்குதண்டனை குறித்த பங்களிப்புகளை மீள் ஆய்வு செய்து தகுந்த மாற்றங்களை செய்ய வேண்டுகின்றேன்.--ஸ்ரீதர் (பேச்சு) 14:51, 19 ஆகத்து 2013 (UTC)Reply
வணக்கம்.
நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் கருத்துத் தெரிவிப்பதை விட அதில் உள்ள உள்ளடக்கங்களுக்கு ஆதாரம் தேடிப் போடுங்கள். முதலில் நான் அந்த உள்ளடக்கத்தை சேர்த்த போது எனக்கு ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. அதனால் பேச்சுப் பக்கத்தில் அப்படிக் கேட்டிருந்தேன். அதன்பிறகுதான் தேடிப்பார்த்ததில் பிரண்ட் லைன் பத்திரிக்கையில் இதைப்பற்றி தகவல் கிடைத்தது.
\\மேலும் உலகமே வியக்கும் மகாத்மா காந்தி பற்றிய உயர்வான மதிப்பீடுகளை, \\
உலகமே வியக்கிற பல நபர்களை பற்றி விக்கிப்பீடியாவில் தான் ஒழுங்காக தெரிந்து கொள்ள முடியும் அவர்களிடம் குறைகள் என்னென்ன உண்டு என்று. எனக்கு அவரை உலகமே வியக்கிறதா அல்ல ஒரு சிறு பகுதி மட்டும் தான் வியக்கிறதா என்பதை பற்றி எல்லாம் கவலையில்லை. ஒருவர் பற்றிய இரண்டு தரப்பு விடயங்களும் நடுநிலையோடு கட்டுரையில் இருக்க வேண்டும் அவ்வளவு தான்.
\\தங்களின் குழப்பம் குறித்து நீண்டகாலம் எவரும் தெளிவாக்காததால், \\
அந்த தூக்குத் தண்டனை உள்ளடக்கங்களை குறித்து நீண்டகாலம் யாரும் பேசவில்லை என்பதால் தான் விக்கிப்பீடியர்கள் முகநூல் குழுமத்தில் இதைப் பற்றி பகிர்ந்தது. அனைவரின் பார்வைக்கும் வந்தால் தான் முழு தகவல்களும் கிடைக்கும். கட்டுரைத் தெளிவாகும்.
\\முகநூல் அரட்டை போன்ற\\
எதைக் கூற வேண்டும் என்றாலும் நீங்கள் நேரடியாகக் கூறலாம். என்னிடம் உவமை எல்லாம் காட்டத் தேவையில்லை. இப்படி நீங்கள் உவமை காட்டினால் நீங்கள் எதைக் கூற வருகிறீர்கள் என்று தெரியாது.
கட்டுரையில் பாலூர் பாலா சேர்த்த உள்ளடக்கங்களிலும் நடு நிலைமை வழுவியவை சில உண்டு. பின்வருவனவற்றை பாருங்கள்.
\\பகத்சிங்கை ஆதரித்திருந்தால் மட்டுமே காந்தியைக் குற்றவாளியெனச் சொல்ல முடியும்.\\
இதில் இவர் என்ன சொல்ல வருகிறார்? ஆங்கிலேயே அதிகாரிகள் அன்று பகத்சிங்கை குற்றவாளி என்றார்கள். அதையே பொதுப்படையாக்கி பகத்சிங்கை ஆதரிப்பவர் எல்லாம் குற்றவாளி என்பது போல் பொருளை இது தருகிறது. அப்படி என்றால் பகத்சிங்கிற்கு ஆதரவு தெரிவித்த இந்தியர்கள் அனைவரும் குற்றவாளிகளா?
இக்கட்டுரையை பல பேர் பார்த்து திருத்தினால் மட்டுமே நடுநிலைமையோடு கட்டுரை இருக்கும். அதற்குதான் அதை முகநூலில் பகிர்ந்தேன். பொருத்திருந்து பார்க்கலாம். அதில் சர்ச்சைக்கூறிய வாக்கியங்களுக்கு நீங்களும் ஆதாரம் தேடுங்கள் நானும் தேடுகிறேன். உண்மை வெளிவந்தால் மகிழ்ச்சி தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:17, 19 ஆகத்து 2013 (UTC)Reply
இந்திய வரலாற்றில், பகத்சிங் முதலியோரின் தூக்குத் தண்டனையை அங்கீகரித்தோ தூக்கு தண்டனையை ஒப்புக்கொண்டோ எந்தப் பத்திரத்திலும் காந்தி கையொப்பம் இடவில்லை. இங்கு குறிப்பிடப்படும் ஆவணம் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஆகும். அது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிடுவதற்கும் லண்டனில் நடந்த இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ளவும் ஒப்புக்கொண்டு இந்திய தேசிய காங்கிரஸ் அப்போதைய வைசிராயுடன் செய்து கொண்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தில் பகத்சிங் முதலியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான சரத்தினை சேர்க்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தவில்லை என்று பலர் காந்தியை விமர்சிக்கிறார்கள். எனவே, தூக்கு தண்டனையை அங்கீகரிக்கும் பத்திரம், தண்டனை ஒப்பீட்டு பத்திரம் ஆகிய சொற்களை நீக்க வேண்டும். அல்லது அச்சொற்களால் குறிக்கப்பெறும் ஆவணம் வேறென்றால், உரிய சான்றாதாரத்தை இணைக்கவும்.−முன்நிற்கும் கருத்து CXPathi (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. -05:24, 1 மே 2022 (UTC)Reply
@தென்காசி சுப்பிரமணியன்: --AntanO (பேச்சு) 05:36, 1 மே 2022 (UTC)Reply
- CXPathi இன் கருத்து சரியானதே. கட்டுரையில் தரப்பட்டுள்ள சான்றில் காந்தி தூக்குத்தண்டனைப் பத்திரத்தில் கையொப்பமிட்டதாக எங்கும் தெரிவிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, ஆங்கிலேயர் எதற்காக தூக்குத் தண்டனைப் பத்திரத்தில் காந்தியைக் கையொப்பமிடக் கேட்டார்கள். வரலாறு திரிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 08:03, 1 மே 2022 (UTC)Reply
22 அக்டோபர் 2011 அன்று நான் சேர்த்த உள்ளடக்கத்திலேயே அடைப்புக்குறிக்குள் (காந்தி இர்வின் பேக்ட்) என்பதை கொடுத்து தான் சேர்ந்திருந்தேன். இப்பவும் அது இருக்கு. 2011 அப்பலாம் சேர்ந்த புதிதில் விக்கித்தன்மையோடு எழுதும் முறையை நான் அதிகம் கற்றதில்லை. அதெல்லாம் போக போக வளர்த்துக்கொண்டது தான். ஆனால் CXPathi சொன்ன கீழுள்ள கருத்து மூன்றாம் நிலை தரவு போல் விக்கித்தன்மையுடன் சரியாகவே உள்ளது. அதனால் ஏற்கனவே உள்ளதை நீக்கி கீழுள்ள மூன்றாம் நிலை தரவு போல் விக்கித்தன்மையுடன் உள்ள கருத்தை சேர்த்தாலும் நலம் தான்.
//அந்த ஒப்பந்தத்தில் பகத்சிங் முதலியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான சரத்தினை சேர்க்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தவில்லை என்று பலர் காந்தியை விமர்சிக்கிறார்கள்.//
மேலுள்ள கருத்தை சேர்ப்பதாக இருந்தால் //பலர் காந்தியை விமர்சிக்கிறார்கள்// என்பதில் யார் யார் என ஒரிருவர் விமர்சித்த செய்திகளின் இணைப்பையும் சேர்த்தால் மூன்றாம் நிலை தரவு போல் நடுநிலையாய் இருக்கும். --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:25, 1 மே 2022 (UTC)Reply
@தென்காசி சுப்பிரமணியன்: //பகத் சிங் கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார்// என்று கட்டுரையில் எழுதியிருக்கிறீர்கள். இப்போதும் உள்ளது. இது எந்தளவுக்கு உண்மை? எப்போது கையெழுத்திட்டார்?--Kanags \உரையாடுக 08:31, 1 மே 2022 (UTC)Reply
அடைப்புக்குறிக்குள் (காந்தி இர்வின் பேக்ட்) என்பதை கொடுத்து தான் சேர்ந்திருந்தேன் என சொல்லியுள்ளேன். நான் சொன்னது கீழுள்ள உள்ளடக்கம்.
//தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) // --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:37, 1 மே 2022 (UTC)Reply
- @தென்காசி சுப்பிரமணியன்: அவ்வாறானால் கட்டுரையில் திருத்தத்தைச் செய்யுங்கள். கட்டுரையைப் படிப்பவர்களுக்கு காந்தி தான் தூக்குத்தண்டனைக்கு உத்தரவிட்டார் என்றே எண்ணுவார்கள். அப்படி உங்களுக்குத் தோன்றவில்லையா?--Kanags \உரையாடுக 08:40, 1 மே 2022 (UTC)Reply
ஆமாம். அப்படித்தான் தோன்றும். ஆனால் நான் சரிசெய்வதை விட CXPathi சரி செய்வது சரியாக இருக்கும். அவர் சொல்வது விக்கித்தனமையுடன் உள்ளது. அதனால் ஏற்கனவே உள்ளதை நீக்கி கீழுள்ள மூன்றாம் நிலை தரவு போல் விக்கித்தன்மையுடன் உள்ள கருத்தை சேர்த்தாலும் நலம் தான்.
//அந்த ஒப்பந்தத்தில் பகத்சிங் முதலியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான சரத்தினை சேர்க்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தவில்லை என்று பலர் காந்தியை விமர்சிக்கிறார்கள்.//
ஒரு கட்டுரையையோ ஒரு கட்டுரை பகுதியையோ ஒன்றுக்கு மேற்பட்டோர் சரிபார்த்து திருத்தினால் தான் விக்கித்தன்மை கூடுதலாக இருக்கும். ஆங்கிலத்தில் ஒருவர் மட்டுமே ஒரு கட்டுரையையோ கட்டுரை பகுதியையோ எழுதினால் அதை சரிபார்க்க தனி வார்ப்புரு வைத்துள்ளார்கள். நமக்கு இல்லைனே நினைக்கிறேன். அதனால் நம்மில் பலர் பேசிவிட்டு திருத்துவது சரியாக இருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:50, 1 மே 2022 (UTC)Reply