பேச்சு:மௌவல்
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic அறிவியற்பெயர் தவறென நினைக்கின்றேன்
வலப்புறம் இணைக்கப்பட்டுள்ள பூ மரமல்லி அன்று. படத்துக்குத் தரப்பட்டுள்ள குறிப்பைப் பாருங்கள். படத்தில் உள்ளது குளவி (மலர்). அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 12:39, 14 பெப்ரவரி 2013 (UTC)
- இல்லை ஐயா நன்கு பார்த்துவிட்டேன். பூ சரியாக தான் உள்ளது. இடப்பக்கத்தில் உள்ள மரத்தின் பூ தான் வலப்பக்கத்தில் உள்ள பூ.பாலாஜி (பேச்சு) 14:59, 14 பெப்ரவரி 2013 (UTC)
- ஆயின் நன்று. விட்டுவிடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 22:24, 14 பெப்ரவரி 2013 (UTC)
அறிவியற்பெயர் தவறென நினைக்கின்றேன்
தொகு- மரமல்லி என்னும் நெடுங்காம்பு உள்ள வெள்ளை நிறப் பூவின் அறிவியற்பெயர் Millingtonia hortensis என்பதாகும். மரமல்லிதான் மௌவல் என்பதா என்பதைச் சரிபார்க்கவும் வேண்டும். --செல்வா (பேச்சு) 00:47, 17 நவம்பர் 2019 (UTC)
- @செல்வா, Balajijagadesh, and AntanO:
- செல்வா! நீங்கள் கூறியது சரியென்றே எண்ணுகிறேன். தற்போதுள்ள தாவரவியல் பெயர் தவறு. Jasminum sessiliflorum என்பதே சரி. இதற்குரிய சான்றினை, s:சங்க இலக்கியத் தாவரங்கள்/அகர வரிசைப் பட்டியல் என்ற நூலில் அறியலாம். பாலாஜி இட்ட தாவரவியல் பெயரினை, ஆன்டன் மாற்றியிருப்பதால். இருவரின் எண்ணங்களையும் அறிய விரும்புகிறேன். த♥உழவன் (உரை) 06:07, 28 அக்டோபர் 2023 (UTC)
- பேச்சு:தளவம் என்பதன் தாவரவியல் பெயரும் தவறே. உங்களின் எண்ணங்களைக் கண்ட பிறகு உரிய தாவரவியல் மாற்றங்களைச் செய்வேன்--த♥உழவன் (உரை) 17:20, 28 அக்டோபர் 2023 (UTC)
- தளவம் என்னும் பக்கத்தைப் பார்த்தேன். பிச்சிப்பூ என்பது முல்லைதானே? அக்கட்டுரையில் "சாமந்தி" என்றொரு பெயரும் உள்ளது அது சரியா? . பிச்சிப்பூவின் அறிவியற்பெயரை நான் அறியேன். தக்கவாறு சரிபார்த்து உறுதிசெய்து திருத்திவிடுங்கள். நானும் பின்னர் வந்து பார்க்கின்றேன். நன்றி. செல்வா (பேச்சு) 14:38, 30 அக்டோபர் 2023 (UTC)
- நன்றி. பல தாவரவியில் பெயர்களை சில ஆண்டுகளுக்கு முன், பன்னாட்டு அமைப்பினர் மாற்றம் செய்துள்ளனர். எனவே, s:அட்டவணை:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf மறுவாசிப்பை, இதுபோன்ற பன்னாட்டு தரவுகளோடு செய்ய வேண்டும். வழக்கத்திலுள்ள தமிழ் பெயர்கள், எனக்குச் சில மயக்கங்களைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முல்லை என்ற சொல்லை, ஒரு வகையான மல்லிகைக்குப் பயன்படுத்துகின்றனர். த♥உழவன் (உரை) 03:02, 31 அக்டோபர் 2023 (UTC)
- தளவம் என்னும் பக்கத்தைப் பார்த்தேன். பிச்சிப்பூ என்பது முல்லைதானே? அக்கட்டுரையில் "சாமந்தி" என்றொரு பெயரும் உள்ளது அது சரியா? . பிச்சிப்பூவின் அறிவியற்பெயரை நான் அறியேன். தக்கவாறு சரிபார்த்து உறுதிசெய்து திருத்திவிடுங்கள். நானும் பின்னர் வந்து பார்க்கின்றேன். நன்றி. செல்வா (பேச்சு) 14:38, 30 அக்டோபர் 2023 (UTC)
- Jasminum officinale தாவரவியல் பெயரின் தாயகமோ, அறிமுகப்பயிரோ இந்தியா இல்லை இச்சான்றால் அறியலாம். ஆனால் Jasminum sessiliflorum(Jasminum angustifolium var. sessiliflorum ) என்ற இனத்தின் தாயகம் இந்தியா என இச்சான்றால் அறிய இயலும். என தற்போதுள்ள வகைப்பாட்டியல் தகவற்பெட்டியை மாற்றுக.--த♥உழவன் (உரை) 13:43, 3 நவம்பர் 2023 (UTC)
- மௌவல் --AntanO (பேச்சு) 04:10, 5 நவம்பர் 2023 (UTC)
- நான் கற்றவரை, பல மலர்கள் பொருத்தமற்ற தாவரவியல் தரவுகளுடன் இருக்கின்றன. ஏனெனில், சான்றுகளில்லா முழுமையற்ற தரவுத் தொகுப்பு. கற்க நிற்க இணையப் பக்கமானது, ஆர்வத்தின் அடிப்படையில், கூகுள் குழும நண்பர்கள் உருவாக்கி உள்ளனர். நல்ல முயற்சி. ஆனால் அவற்றின் தரவுகள், ஆங்கில விக்கிப்பீடியாவின் தரவுகளைக்(குறிப்பாக poet's jasmine) கொண்டும், ஒவ்வொரு படத்திலும் காட்டப்படும் தளத்தில் இருந்தும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், s:அட்டவணை:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf என்ற நூல் பல்கலைப் பேராசிரியரால், பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதுள்ள தாவரவியல் பெயர் Jasminum officinale தவறே. 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள, இதன் உள்ளினங்களை, GBIF ஆய்ந்து, அறிந்த போது , இன்னும் தெளிவாக என்னால் இதனை அறிந்து கொள்ள இயலுகிறது. மாற்ற உங்களுக்கு விருப்பம் இல்லையெனில், இந்த பேச்சுப்பக்கத்திற்கு தற்போதுள்ள வகைப்பாட்டியல் தகவற்பெட்டியை நகர்த்த பரிந்துரைக்கிறேன். த♥உழவன் (உரை) 01:49, 8 நவம்பர் 2023 (UTC)