பேச்சு:ரூதர்போர்டு சிதறல்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by TNSE MANI VNR
இரவிஐயா இந்தப் பக்கத்தை நீக்க வேண்டுகிறேன்.மீண்டும் புதிதாக உருவாக்க விரும்புகிறேன்.நேரடியாக மொழிபெயர்ப்பைச் செய்த போது தவறு நேர்ந்து விட்டது.--மணிவண்ணன் (பேச்சு) 02:06, 14 சூன் 2017 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:38, 14 சூன் 2017 (UTC)
- நந்தகுமார்ஐயா நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 06:17, 14 சூன் 2017 (UTC)
- மணிவண்ணன், தமிழ் விக்கிப்பீடியர் அனைவரையும் நீங்கள் பெயர் சொல்லியே அழைக்க வேண்டுகிறோம். இதன் மூலம் அனைவரும் தோழமையுடன் திட்டத்தில் ஈடுபடும் சூழல் அமையும் என்று நம்புகிறோம். தாங்கள் இப்பக்கத்தைத் தொடங்கிய பிறகு இன்னும் பலர் இப்பக்கத்தை மேம்படுத்தியுள்ளார்கள். எனவே, திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பினால் நேரடியாக பக்கத்தின் "தொகு" பொத்தானை அழுத்தி மேம்படுத்தலாம். இவ்வாறா சூழலில் மீண்டும் முதலில் இருந்து மொழிபெயர்ப்புக் கருவி மூலம் பங்களிப்பதைத் தவிர்க்கலாம். பிறரும் பங்களித்துள்ள பக்கத்தை இந்தக் காரணத்துக்காக நீக்கி இருக்க வேண்டாம். கவனிக்க: @Nan:--இரவி (பேச்சு) 10:32, 14 சூன் 2017 (UTC)
- நந்தகுமார்ஐயா நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 06:17, 14 சூன் 2017 (UTC)
- இக்கட்டுரை நீக்கப்பட்டதை இப்போது தான் பார்க்கிறேன். இதனை மீள்விக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:46, 14 சூன் 2017 (UTC)
சிரமத்தைப் பொறுத்துக் கொள்க நண்பர்களே....கட்டுரைக்கு முழுவடிவம் தரவே அவ்வாறு கேட்டேன்...இனி மேல் வடிக்கும் கட்டுரைகளை முழு சிரத்தையுடன் படைக்க முயல்கிறேன்.--மணிவண்ணன் (பேச்சு) 12:00, 14 சூன் 2017 (UTC)
- மணிவண்ணன், நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது கட்டுரைகளை விரிவாக்கி விக்கியில் இட்டு சரி பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் கட்டுரைகளின் தலைப்பை நேரடியாகத் தராமல் பயனர்:TNSE MANI VNR/மணல்தொட்டி/ரூதர்போர்டு சிதறல் என்பது போல் தந்து மேம்படுத்தி வரலாம். கட்டுரை உங்களுக்கு நிறைவான நிலையை எட்டிய பிறகு கட்டுரைப் பெயர்வெளிக்கு மாற்றலாம். தலைப்பை எப்படி நகர்த்துவது என்று அறிய இந்த உதவிப் பக்கத்தைப் பாருங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 12:06, 14 சூன் 2017 (UTC)
இரவி நீங்கள் கூறியது போல் மற்ற கட்டுரைகளுக்குச் செய்துள்ளேன்.ஆலோசனைக்கு நன்றி.--மணிவண்ணன் (பேச்சு) 13:44, 14 சூன் 2017 (UTC)