பேச்சு:லெனோவா
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic தலைப்பு
தலைப்பு
தொகுலெனோவோ என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 01:05, 24 ஆகத்து 2015 (UTC)
- ஆம், /lɛnˈoʊvoʊ/ என்ற பலுக்கலின்படி, லெனோவோ என வரவேண்டும். இலெனோவோ என்பது இன்னுஞ் சிறப்பு. --மதனாகரன் (பேச்சு) 01:21, 24 ஆகத்து 2015 (UTC)
- கட்டுரையைத் தொடங்கும் போது, இது குறித்து எண்ணினேன். எங்கள் வாழிடத்தில், நண்பர்களிடத்தில், அதிகமாக லினோவா என்றே பயன்படுத்துகிறோம். இணையத்திலும் இருவித சொற்பயன்பாடும் உள்ளது. எனவே, இருவிதச்சொற்களுக்கும் வழிமாற்று அமைக்கலாமென்று பரிந்துரைக்கிறேன். ஓபிஸ் என்று பல இலங்கையர் ஒலித்துக் கேட்டிருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டினர் ஆபிஸ் என்றே ஒலிப்பர். அதுபோலவே இச்சொல் வேறுபடுகிறது என்று கருதுகிறேன்--த♥உழவன் (உரை) 01:59, 24 ஆகத்து 2015 (UTC)
- மேலே oʊ என்பதற்கு ஓரிடத்தில் ஓவும் இன்னோரிடத்தில் ஆவும் வருகிறது. அதனால் தான் கேட்டேன். சில இந்திய ஊடகங்களும் (இந்து) லெனோவோ என எழுதுகின்றன. --மதனாகரன் (பேச்சு) 06:37, 24 ஆகத்து 2015 (UTC)
- விக்கிப்பீடியா பேச்சு:ஆங்கில ஒலிப்புக் குறிகள் என்பதைக் காணவும். மேலும், என்னைப்பொறுத்தவரையில் மூலச்சொல் சீனம். அதனையோ, ஆங்கில ஒலியோ அப்படியே தமிழில் வர வேண்டும் என்பதனை நான் ஏற்க விரும்பவில்லை. இதனை இராசத்தான் பெயர்மாற்றத்தில் கூறியிருக்கிறேன். இது பொது ஊடகமென்பதால், வழிமாற்று வைத்தால் நன்றாக இருக்கும் என்பதே எனது இறுதியான பரிந்துரை.சொல்லாய்வுக் களமாக விக்சனரியையே கருதுகிறேன்.
- விகசனரி திட்டம் உருவாக்கப்பட்ட நோக்கங்களுள், சொல்லாய்வும் ஒன்று. அனைத்தையும் விக்கிப்பீடியாவிலேயே செய்ய வேண்டும் என்பது இரு திட்டங்களையும் வளர்க்காது. விக்கிப்பீடியா மட்டுமே விக்கிமீடியா அல்லவே? பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள் என்ற பகுப்பில் பல, நுண்ணிய உரையாடல்கள், விக்சனரி திட்டத்திற்கு தேவையானவை என்றே எண்ணுகிறேன். அங்கிருந்தால் நமது திறனை பலர் அறிய வாய்ப்புண்டு. இல்லையெனில், விக்சனரி சொற்களிடும் பகுதியாக மட்டுமே இருக்கும். எனவே, இந்திய மொழிகளில் தமிழ்விக்சனரி முதலாவதாக இருந்தாலும், உங்கள் திறனை அங்கும் குவிக்க அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அதற்கான எளிய இணையக் கருவியொன்றை, விக்கிதானுலாவி(AWB), பைவிக்கிதானியங்கி (PWB)கருவிகளின் அனுபவங்களைக் கொண்டு, நீச்சல்காரன் உதவியுடன் எளிமையாக அமைத்து, சோதித்து வருகிறேன். விரைவில் அறிமுகப் படுத்துவேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 03:20, 25 ஆகத்து 2015 (UTC)