பேச்சு:இராசத்தான்

Add topic
Active discussions

முதல் சுற்றுதொகு

மலையாள மனோரமா தமிழ் புத்தகம் வரலாறு அனைத்து புத்தகங்களிலும் இந்தப் பெயர்தான் உள்ளது. ஊரின் பெயர்களுக்கு சிறப்பு வரலாறு அந்த கட்டுரையிலேயே உள்ளது. தமிழ் நாடு தமில் நாடு என்று எழுத முடியாதோ அது மாதிரிதான் ஆங்கிலத்தில் அந்த உச்சரிப்பு எழுத்து இல்லை அதனால் டமில் நாடு என்று எழுதுகிறார்கள். எழுத்து மாற்றும் பொழுது அதே பொருள் தருமானால் மாற்றலாம். அல்லது சிறப்பு காரணப் பெயராக இருக்குமானால் மாற்றலாம், பூந்த மல்லி அதை பூவிருந்த வல்லி என்று எழுதினால் பொருள் தருகின்றது. பொருள் தராத பட்சத்தில் அவற்றை மாற்ற வேண்டிய அவசியமில்லை. புதிதாக ஒரு ஊரே உருவாக்குவது போல்தான் ஆகும்.--செல்வம் தமிழ் 02:59, 25 ஏப்ரல் 2009 (UTC)


பல இடங்களில் ஹிந்தி, ஹிந்து சமயம் என்று எழுதுகிறார்கள் என்பதற்கான அதுவே முறையாகிவிடாது. ஆங்கிலத்தில் டமில் நாடு என்று எழுதுகிறார்கள், ஏன் என்றால் ஆங்கிலத்தில் ழ் இல்லை. அதேபோல தமிழுக்கும் சில ஒலி வரையறைகள் உண்டு. --Natkeeran 03:03, 25 ஏப்ரல் 2009 (UTC)


தமிழர்கள் பெயருக்கு முன் ஆங்கிலத்தில் Initial போட்டு எழுதுவதால் அது சரியாகி விடாதே. பல ஊர் பெயர்களும் இப்படி உள்ளன N.புதுப்பட்டி, M.புதுப்பட்டி, K.புதுப்பட்டி, R.புதுப்பட்டி. இதை மாற்ற வேண்டும். குறைந்தபட்சம் இங்கேயாவது தமிழில் எழுதுவோம். எல்லாவற்றுக்கும் வழிமாற்று கட்டாயம் இருக்க வேண்டும். தமிழை தமிழ் எழுத்துகளால் எழுதுவது தவறில்லையே. இயன்றவரை கிரந்தம் தவிர்த்து எழுதுவோம். --குறும்பன் 03:18, 25 ஏப்ரல் 2009 (UTC)

தமிழில் எழுதுவது என்று பொருள் கிடையாது தமிழை சிறுமை படுத்தும் செயல் பொருளற்ற வகையில் கிரந்தங்களை மாற்றக்கூடாது. ஸ்ரீவைகுண்டம் இதை திருவைகுணைடம் என்பது ஸ்ரீ என்பதற்கு பதில் திரு என்ற பொருள் உள்ள மரியாதை சொல் சேர்க்கப்படுகின்றது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் ஸ்ரீ என்பதற்கு பதில் கிரந்தத்தை மாற்றுகின்றேன் என்று சிரிவைகுண்டம் என்று எழுதினால் என்ன பொருள் வைகுண்டம் சிரிக்கின்றதா? இதுமாதிரி கிரந்தத்தை மாற்றுவதற்கு பெயர் தமிழ் பற்று அன்று. பெரும்பான்மையோர் ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் இருக்க வேண்டும். பொருள் இல்லாமல் தமிழ் பாட நூல்களில், தமிழ் மொழி அனைத்து அரசு நூல்களில் அரசிதழ்களில் செய்வது இல்லை. (இணையத்தில் உள்ள அரசு பாட நூல்கள் தளம் சென்று பார்க்கவும்) அதற்கு இணையான தமிழ் சொல் கண்டுபிடியுங்கள் அதுவரை அதை நீடிக்க விடுங்கள். சகட்டு மேனிக்கு மாற்றுவது சரியில்லை--செல்வம் தமிழ் 02:05, 8 மே 2009 (UTC)

ஸ்ரீவைகுண்டம் என்பதை திருவைகுண்டம் என்று எழுதினால் நன்று. சிறீவைகுண்டம் என்று எழுதுவது தவறல்ல. ஸ்ரீ என்பதற்கு பதில் சிறீ என்று எழுதுகிறார்கள். எல்லா இடங்களிலும் ஸ்ரீ என்பதற்கு திரு பொருந்தாது, அது போலவே எல்லா இடங்களிலும் திரு என்பதற்கு ஸ்ரீ பொருந்தாது என சில அறிஞர்கள் சொல்கிறார்கள். சிரிவைகுண்டம் என்பது தவறு, அதை திருத்தலாம். சிறீதரன் (ஸ்ரீதரன்) என்று எழுதப்படுவதை நீங்கள் கவனித்ததில்லையா? --குறும்பன் 03:33, 8 மே 2009 (UTC)

இங்கு என்னப் பொருள் கூறுகின்றது இராசி பார்ப்பவர்கள் அதிகம் வாழுகின்றார்களா? என்னப் பொருளைக் குறிக்கின்றது. பொருள் விளக்கம் தருக? பொருள் இல்லாத தமிழ் சொல் இல்லை? பொருள் குற்றம் இருக்கின்றது. வரலாற்று சான்றுகளையும் தருக?--செல்வம் தமிழ் 02:13, 8 மே 2009 (UTC)

ராஜா தமிழில் இராசா என்றே எழுதப்படுகிறது. இராசி என்று எழுதுவதில்லை. எனவே இங்கு இராசி பார்ப்பவர்கள் மட்டும் இருக்க மாட்டார்கள். அரசர்களும் இருப்பார்கள்:).--Kanags \பேச்சு 02:20, 8 மே 2009 (UTC)


ஒரு மாநிலத்தின் பெயரை எப்படி மாற்றுகின்றீர்கள் எதாவது சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா? அதைக் குறிப்பிடுங்கள். கல்கத்தா என்பதை கொல்கத்தா என்று அழைக்க அரசாணை உள்ளது அது மாதிரி இதற்கு அரசாணை உள்ளதா? இந்திய ஒருமைப்பாட்டை ஊறுவிளைவிக்கின்ற செயல் என்பதை பதிவு செய்கின்றேன்? இந்திய வரைபட்த்தில் இம்மாதிரி மாநிலம் இல்லை? பம்பாய் என்பதை மும்பை என்று அழைக்க அரசாணை உள்ளது இது எதை காட்டுகின்றது அவர்கள் பற்றை காட்டுகின்றது. ஒரு இந்தியர் இன்னொரு இந்தியரின் உணர்வை மதிக்கவேண்டும். சென்னை ஆங்கிலத்திலும் சென்னை என்று அழைக்க அரசாண உள்ளது அனைத்து மாநிலங்களும் அப்படியே அழைக்கின்றன. யாரும் மாற்றி அழைக்கவில்லை (இந்த மாற்றத்திற்கும் பொருள், ஆணை இருக்கின்றது-தன்னிச்சையாக மாற்றவில்லை). அதுமாதிரி மேற்கோள்கள இருந்தால் இச்சர்ச்சையை எழுப்புவதில் இருந்து விலகுகின்றேன்.--செல்வம் தமிழ் 02:43, 8 மே 2009 (UTC)

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். இராஜஸ்தானை இராசத்தான் என்பது பெயரை மாற்றி எழுதுவதல்ல. கிரந்தம் நீக்கி எழுதியுள்ளார்கள். இது தவறல்லவே. இராஜஸ்தானை டில்லி என்று சொன்னால் தவறு. --குறும்பன் 03:00, 8 மே 2009 (UTC)


அதற்குத்தான் மேற்கோள் கேட்கின்றேன் ஏதாவது மாற்றி எழ்த சொல்லி ஆணை இருக்கின்றதா? சட்டப் பேரவையில் குறிப்பிட்டிருக்கின்றார்களா? கிரந்தம் எப்படி மாற்றவேண்டும் என்று மேலே விளக்கம் கொடுத்துவிட்டேன். பொருள் தாராத கிரந்தம் மாற்றம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வினைச் சொல்லுக்கு மாற்றுவதில் தவறில்லை நாட்டின், நாட்டிற்குள் இருக்கும் மாநிலத்திற்கு மாற்றுவதற்கு சிறப்பு அதிகாரம் வேண்டும். அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற, பொருள் தருகின்ற வினைச்சொல், சிலர் அனுமதிக்கின்ற பெயர்சொல்லுக்குத்தான் பொருந்தும். இதற்கு எந்த வகையிலும் பொருந்தவில்லை. நீங்கள்தான் மீண்டும் மீண்டும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அரசு பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்களா. இந்தப் பெயரை எழுதினால் மதிப்பெண் தருவார்களா? எவ்வளவோ போட்டித் தேர்வுகள் உள்ளன?--செல்வம் தமிழ் 03:12, 8 மே 2009 (UTC)

இப்படிதான் எழுத வேண்டும் என்று ஏதாவது அரசாணை உள்ளதா? நான் அறிந்திருக்கவில்லை. நம் மொழி நடைக்கு ஏற்ப மாற்றுவது தவறல்ல. அரசு பாடப்புத்தகத்தில் நாம் தான் மாற்றச்சொல்ல வேண்டும். நீங்கள் பள்ளியில் படித்தபொழுது இருந்த அரசு புத்தக தமிழுக்கும் இப்போது உள்ள அரசு புத்தக தமிழுக்கும் எவ்வளவு வேறுபாடு என்று கவனித்தீர்களா? நான் படித்தபொழுது இருந்த அளவு தமிழ் கூட இப்போது இல்லை. --குறும்பன் 03:33, 8 மே 2009 (UTC)


அரசாணை உள்ளது? எப்படி வேண்டுமானாலும் எழுத அரசாணை இல்லை. விக்கியிலும் அப்படி வரைமுறை குறிப்பிட்டிருக்கின்றீர்களா? நான் படித்தபொழுது அல்ல இப்பொழுதும் இணையத்தில் பாடப்புத்தகங்கள்உள்ளது சென்று பார்க்கலாம். கிரந்தம் மாற்றம் இப்பொழுது நாடைபெற்ற ஒன்று அல்ல 40 , 50 வருடங்களாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. உங்களுக்குத் தெரிந்தது கோடிக்கணக்காணவர்களுக்கு எப்படித் தெரியாமல் போனது? ஏற்கனவே முயற்சித்து அரிதியிட்ட பெயர்கள்தான் மாநிலங்களின் பெயர்கள்.--செல்வம் தமிழ் 03:40, 8 மே 2009 (UTC)


எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்றால் கிரந்த்தை தவிர்த்து மட்டும் எப்படி எழுத சொல்ல முடியும். ஆங்கிலத்தில் ஆங்கிலம் மற்றும் சாதாரண ஆங்கில்த் தளம் என்றிருப்பது போல கிரந்த எழுத்து தமிழ்தளம், மாற்றுத் தமிழ் தளம் என்று இரண்டு பிரிக்கப்படவேண்டும்.--செல்வம் தமிழ் 03:47, 8 மே 2009 (UTC)

செல்வம் தமிழ், வெவ்வேறு மொழிகளில் ஒரு பெயரை எப்படி எழுதுவது அல்லது அழைப்பது என்பதற்கு எப்படி அரசாணை வெளியிட முடியும் என்பதை சற்று பொறுமையாக எண்ணிப் பாருங்கள். 'டாயிட்சு மொழியில் (செருமன்) 'j' என்னும் ஒலி இல்லை, j என்ற எழுத்து அவர் மொழியில் 'ய' என்று ஒலிக்கும். அவ்வாறு இருக்கையில் அவர்களுடைய மொழிக்கு அவர்கள் கொண்டுள்ள பெயரான 'டாயிட்சு என்பதை ஆங்கிலத்தில் உலகத்தவர் அனைவரும் German என்று அழைப்பதில்லையா? அவர்களது நாட்டின் பெயரான Deutscheland என்பதை Germany என்று அழைப்பதில்லையா? 'Ivrit என்ற பெயர் கொண்ட மொழியை Hebrew என்று ஆங்கிலத்தில் எழுதும்போது நாம் ஏற்றுக்கொள்வதில்லையா? République française என்பதை அண்டை நாட்டு மொழியான ஆங்கிலத்தில் France என்று எழுதுவதில்லையா? தமிழ் என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது Thamiḻ (ஆங்கிலத்தில் th என்ற ஒலி உள்ளது) என்றுதான் எழுத வேண்டும் என்று தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தால் இங்கிலாந்திலும், நியூசிலாந்திலும், பிரேசிலிலும், ஏன் வங்காளத்திலும் இணங்குவார்களா? எண்ணிப் பாருங்கள். கிரந்தத்தைப் பயன்படுத்த வேண்டுமானால் உரையாடி சில இடங்களில் ஏற்கலாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே காட்டமாகக் கருத்து தெரிவித்து விட்டால் பின்னர் காரணங்களைக் கொண்டு உரையாடுவதில் சிக்கல் ஏற்படும். உணர்வு அடிப்படையிலான விவாதமாகி விடும். Rajasthan என்ற ஆங்கில எழுத்திலும் राजस्थान என தேவநாகரியிலும் அடைப்புக்குறிகளுக்குள் தந்துவிடலாம். -- சுந்தர் \பேச்சு 05:52, 8 மே 2009 (UTC)

கிரந்தப் பயன்பாடுதொகு

மேலே பயனர் செல்வம் தமிழ் கூறுவது போல நினைப்பவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் மாற்றுக் கருத்து உள்ளவர்களும் பலர் இருக்கின்றார்கள். கிரந்தத்தை வேண்டாம் என்போரும், வேண்டும் என்போரும் சற்று பொறுமையாகவே பேசுவது நல்லது. இச் சிக்கல் மீண்டும் மீண்டும் வருவது. செல்வம் தமிழ், நீங்கள் ஒரு மாநிலத்தின் பெயரை எப்படி மாற்றுகின்றீர்கள்? என்கிறீர்கள். தமிழ்நாட்டின் பெயரை மற்ற மாநிலத்தார் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்த்தீர்களானால் புரிந்துவிடும். அவர்கள் மொழியில் எழுத்தில்லை ஆகவே அப்படி எழுதுகிறார்கள் என்றால், தமிழ் மொழியிலும் அவ்வொலிகளுக்கான எழுத்துகள் இல்லாததாலேயே இப்படி சிலர் எழுதுகிறார்கள். ஆனால் ஜ, ஷ எல்லாம் இருக்கின்றதே, எழுத முடிகின்றதே என்கிறார்கள் சிலர். ஆனால், தமிழில் உள்ள எழுத்துகளைப் பற்றிய இலக்கணம் உள்ளது. வடவெழுத்து ஒரீஇ என்னும் முறையும் உள்ளது. எழுத்துகள் என்பன ஒரு மொழிக்கு மிக அடிப்படையானது. நாளிதழ்கள், கிழமை இதழ்கள் (வார இதழ்கள்) முதலியன கிரந்த எழுத்துகளைப் பெய்து எழுதுகிறார்கள் என்பதாலும் இதைப் போலவே வேறு இடங்களிலும் செய்கிறார்கள் என்பதால் அது சரியாகாது. எழுத முடியும் என்பதால் சரியாகாது. இன்றைய ஒருங்குறி (யூனிக்கோடு) வசதியில் ஆங்கிலத்தில் எழுதும் போதும்கூட paறைyan, ஞாnasambaந்தn, yaaழிni என்றெல்லாம் எழுத முடியும். ஆனால் ஆங்கிலத்தில் அது சரியாகிவிடாது (ஒலிப்புத் துல்லியம் என்னும் போர்வையில்). அடுத்து, இதுமாதிரி கிரந்தத்தை மாற்றுவதற்கு பெயர் தமிழ் பற்று அன்று. பெரும்பான்மையோர் ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் இருக்க வேண்டும். என்கிறீர்கள். தமிழ்ப் பற்றுக்காக அல்ல. தமிழ் மொழியின் முறைகளுக்குக் கூடியவரை முன்னுரிமை தந்து எழுதுவோமே என பலர் நினைக்கிறார்கள். இந்த பெரும்பான்மையோர் என்னும் வாதம் பிழைபட சிலர் முன் வைக்கின்றார்கள். (1) இலங்கையில் கிரந்த எழுத்தின் பயன்பாடு ஏறத்தாழ இல்லை, (2) ஊடகங்கங்களில் கிரந்த சார்பு உள்ளவர்கள் பரவலாக இருக்கின்றார்கள் என்பதால் தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மையானவர்கள் கிரந்தத்தை பரவலாக ஏற்கிறார்கள் என்று கூறுவதற்கு இல்லை. நானறிய தமிழ்நாட்டில் பெரும்பானமியோருக்கு கிரந்தம் அன்னியமானது. கிரந்தச்சார்புடையோர் பலவழிகளிலும் பரப்பி வருகிறார்கள் என்பது உண்மை. அதனை பலர் இன்றளவும் எதிர்த்தும் வருகிறார்கள் என்பதும் உண்மை. ஆகவே இது இன்று இன்னும் சிக்கலாகவே உள்ளது. ஆனால் தமிழ் இலக்கணம் இது பற்றி தெளிவாக இருக்கின்றது. --செல்வா 04:53, 8 மே 2009 (UTC)


கிரந்த சார்புடையவன் அல்லதொகு

கிரந்தம் என்பது பயன்படுத்துவதற்காக வந்தது அதற்காக பயன்படுத்தவில்லை என்றால் பிறகெதற்கு. பெரும்பான்மையோர் என்று அரசு. அறிஞர்கள், தமிழ் பணைபாட்டுத் துறை, தமிழ் பற்றாளர்கள். நானும் ஆரம்பத்தில் கிரந்தத்தை வன்மையாக தவிர்த்தவன். இனி வருபவரகள் கிரந்த எழுத்தை தவிர்த்தை பெயர் வைக்க வேண்டும். அப்படி யாரும் செய்வதில்லை மாறாக பழைய வரலாற்றுடன் கூடிய பெயர்களையே மாற்ற முயல்கின்றனர். இதனால் தமிழில் எப்படி விஞ்ஞானம் வரும், உலக அறிவியல்கள் வரும். நம் எழுத்துக்களையும் பிறர் தழுவியருக்கின்றனர். இது மொழியின் பரிணாம வளர்ச்சி. நம் வார்த்தைகளைப் போன்றே பிற மொழிகளிலும் இருப்பதே இதற்குச் சான்று.


அரசு, அரசாங்கம் பொதுப்படையாக ஏற்றுக் கொண்ட ஒன்றை யாரும் மாற்ற முயற்சிக்கவில்லை. இதை அரசுக்கு தெரிவித்தால் அதற்குரிய விளக்கங்கள் கிடைக்கும் அல்லது அதை மாற்றுவதற்கு ஆவண செய்வார்கள இப்படி ஆளாளுக்கு பெயர் வைத்தால் முறையற்றதாகி விடும். அதன் வரலாறு மறைந்து விடும் காரணமில்லாமல் அரசு செய்யவில்லை.


ஒரு தமிழ் வருடத்தையே மாற்றியிருக்கின்றனர் இதைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். அதையும் ஆய்விற்க்கு அனுப்பியபின் தான் மாற்றப்பட்டது.அதற்கும் இன்று வரை விமர்சனம் உள்ளது. (இது தான் பெரும்பான்மை-பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு) தமிழ் பண்பாட்டு, வளர்ச்சி அமைச்சகம் இருக்கின்றது அங்கு முறையிட்டு விளக்கம் கேளுங்கள் மாநிலப் பெயர்களை ஏன் மாற்றாமல் இருக்கின்றீர்கள்,என்று தமிழை நேசிக்க்கூடிய அரசுதான் இப்பொழுது நடைபெறுகின்றது. அரசிதழ்களில் மாற்ற ஆவண செய்வார்கள் அல்லது அதற்குரிய விளக்கம் கிடைக்கும். பாடங்களில் ஒரு பெயர் இங்கு ஒரு பெயர் அவர்களை குழப்புகின்ற நிலைதான் இங்கு உள்ளது.


கிரந்த எழுத்துக்களை மாற்றுவதாயிருந்தால் பொருள் தாராமல் மாற்றத் தேவையில்லை என்பது தான் என் கருத்து. அப்படி மாற்றினால் அது வெற்று சொல் தான். அதை மாற்றினால் என்ன மாற்றாவிட்டால் என்ன? அது கிரந்த எழுத்தை மாற்றுவதைத் தவிர வேறு எந்தப் பொருளையும் குறிக்கவில்லை. தமிழ் மொழி விக்கி விஞ்ஞானம், வரலாறு, பொது அறிவு இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவேண்டும். அதற்கு மாற்று வினைச் சொல் அனைவருக்கும் எளிதில் புரியக் கூடிய வகையில் தமிழ் இலக்கணம் படித்தவருக்கு மட்டும் தான் புரியவேண்டும் என்ற நோக்கத்தில் இல்லாமல் வைக்கவேண்டும்.

நீங்கள் குறிப்பிடுகின்ற சொல் தமிழ் அகராதியில் வரவில்லையென்றால் மெத்த படித்தவர்கள் கூட அறிவது கடினம். இதற்கு ஒரு விளக்கத் தளம் உருவாக்க நேரிடும். ஆங்கில விஞ்ஞான சொற்கள் அனைத்தும் கிரேக்க, இலத்தீன் மொழிகளைச் சார்ந்தே உள்ளது அதை கண்டுபிடித்தவரின் பெயரில் உள்ளன அதை தமிழில் மாற்றினால் அதை கண்டுபிடித்தவரின், அறிய முயற்சி, மனித சமுதாயத்திற்காக அவரின் கண்டுபிடிப்பின வரலாறு காலப்போக்கில் தமிழர்கள் அறிய முடியாமல் மறைந்து விடும். அதைப்போலத்தான் நாடு, மாநிலங்கள் அவை குறித்தப் பெயர்களும். சில பல மாநிலத்தவர்கள் தவறாக பயன்படுத்துகின்றார்கள் என்பதற்காக நாமும் அதையே பின் பற்ற வேண்டிய அவசியமில்லை அதுவும் அங்குள்ளவர்களின் ஒரு சிலர்களின் கருத்தினால் விளைந்தவை.


இன்று வரை கிரந்தங்களையே தவிர்ப்பதை பேசிக் கொண்டிருக்கின்றனர். பலர் கிரந்த எழுத்தின் ஆணிவேரிலேயே (வட மொழிலேயே) திருமணம் செய்கின்றனர், தமிழ், தமிழ் கிரந்த எழுத்துக்ளை மாற்ற வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பவர்கள் கூட, (பெயர்கள் வடமொழிப் பெயர்கள் தான்) அது என்ன என்று புரியாமலே அந்த உச்சாடணைகளில் திருமணம் செய்கின்றனர். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதில்லை, வடமொழியில் தான் அதை தமிழில் அர்ச்சனை செய்யுங்கள் என்று கேட்க கூட அஞ்சுகின்றார்கள். தமிழ் நீசமொழி என்கிறார்கள் இதை விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே எதிர்க்கின்றார்கள்.


கிரந்த எழுத்துக்களை தவிர்த்து பெயர் வைப்பதேயில்லை. நாகரிகமில்லை என்பதால். இதை மேலும் விவரித்தால் பலரது மனது புண்படும். என்க்கு மட்டும் ஆசையா? நம் நாடு பலதரப்பட்டவர்களை ஒருங்கிணைந்த நாடு பல்வேறு மொழி பேசுபவர்கள் வாழுகின்ற நாடு. அவர்களின் வாழ்க்கை முறையும், அங்கிருக்கும் மொழி உச்சரிப்பையும், நிலப்பரப்பின் வரலாற்றையும் தமிழன் அறிந்து கொள்ள வேண்டிருக்கின்றது.


வேறு மொழியில் உள்ளவைகளை,அறிவியல்களை,தொழில் நுட்பங்களை, பெயர்களை தமிழில் கொண்டு வர தமிழன் அறிந்து கொள்ள கிரந்த எழுத்துக்கள் தேவைப் படுகின்றது.அதைத் தவிர கிரந்த எழுத்துக்களால் எந்தப் பயனும் இல்லை. ஆகையாலே அனுமதிக்கின்றோம். நாம் வைக்கும் புதியப் பெயர்கள், நமது தமிழ் நாட்டில் புதிதாக வைக்கும் இடப் பெயர்களை கிரந்த எழுத்து இல்லாமல் வைக்க உறுதி கொள்ள வேண்டும். அது நடைமுறையில் தான் உள்ளது அதை யாரும் பின் பற்றுவதில்லை. மாறாக வட மொழிப் பெயர்களை வைக்கின்றனர். இந்த உறுதியானல்தான் தமிழ் வளரும். தமிழன் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படுவான்.

என் சந்ததியினர் ஆங்கிலத்தில் படிப்பதில் முற்றிலும் உடன்பாடு இல்லை கேவலம் கணிப்பொறிக்கே தாய் மொழி இருக்கின்றது (மெஷின் லேங்குவேஜ்). நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் முதலில் என் தாய் மொழியில் என்ன அர்த்தம் என்று தான் அறிய முயற்சிப்பேன். என்னுள் இருக்கும் தொடர்பான் தாய் மொழி தமிழே. அதை போலத்தான் கணிப் பொறிக்கும். தாய் மொழியை உறுதியாகப் பற்றிக் கொண்ட நாடுகள்தான் வல்லரசாக உருவெடுத்துள்ளது. சீனாவில் அனைத்தும் சினமொழியில் மாற்றப் படுகின்றது. ஒரு புத்தகம் வந்த உடனேயே சாத்தியமாகின்றது ரஷ்யாவிலும் இதே நிலைதான்.

ஆங்கிலம் அவர்களுக்கு தெரியாததினால் வளர்ச்சியடையவில்லையா? அதைத்தான் தமிழில் செய்ய வேண்டும் என்கின்றோம் அதற்குத் தற்காலிகமாக இந்த கிரந்த எழுத்துக்கள் தேவை. (வேறு எழுத்து அல்லது சொற்கள் உருவாக்கும் வரை) இந்தியாவில் உள்ள தமிழர்களில் தமிழ் மொழியில் படித்தவர்களே சாதித்திருக்கின்றனர். இது அனைத்து தமிழருக்கும் சென்றடைய வேண்டும் என்றால் அனைத்தும் தமிழில் கொண்டுவரப்படவேண்டும். அதற்குத்தான் கிரந்த எழுத்துக்கள். நானே பல விஞ்ஞான, தாவரவியல், விலங்கியல் கட்டுரைகள் எழுத முற்படவில்லை இந்த சர்ச்சைக்காகத்தான்.

ஒரு அமெரிக்கர் ஏல் பல்கைக்கழகப் பேராசிரியர் பெர்னால்ட் பேட் தமிழ் மொழிக் குறித்த ஆரய்ச்சிகளை 30 வருடங்களாக குடும்பத்துட்ன தங்கி மேற்கொள்கின்றார். அரசின் சார்பில் அவருக்கு உதவியும் கிடைக்கின்றது. (இப்பொழுது அவரை தமிழர் என்றே சொல்லிக்கொள்கின்றார்), அவர் பேசுகின்ற, அவர் வைத்திருக்கின்ற பற்றுக் கூட இங்கிருப்பவர்களிடம் இல்லை. ஆங்கிலம் கலப்பில்லாமல் தொலைக்காட்சியில் பேட்டியளிக்கின்றார். ஜெர்மானியர் ஒருவர் மற்றும் அவர் நண்பர்கள் கிருத்துவ மதப்பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் தமிழ் பற்றின் பால் இங்கே தன் நாட்டிற்காக தமிழ் மொழி ஆய்வு மேற்கொள்கின்றனர். அதில் பட்டமும் பெற்றுவிட்டனர். இப்படி நிறைய பேர்.

ஜெர்மன் என்பதை செருமன் என்று குறிப்பிடுவதால் எதை எதை மாற்றுகிறீர்கள் ஜெர்மானியர் என்ற மக்களின் வரலாற்றை மாற்றுகின்றீர்கள், அந்த மொழியின் வரலாற்றை மாற்றுகின்றீர்கள். தமிழன் அறிய சந்தர்ப்பம் கொடுக்காமால் மாறைக்கப்படுகின்றது. செருமனுடைய மக்கள் வாழ்கின்றார்களா? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு ஒரு எட்டிமாலாஜி எழுத வேண்டும். பல மொழிகள் தமிழ் மொழியில் இருந்து சென்றன அதே போன்று பிற சொற்களும் பல நம் மொழிக்கு வந்திருக்கின்றன. ஆரை என்பதுதான் ரேடியஸ் ஆனது. இந்த ஆரை எங்கிருந்து வந்த்து ரை யில் இருந்து வந்த்து இப்படி மொழியியல் வரலாறு போய்க்க்கொண்டேயிருக்கும், இதுவும் கண்டுபிடிப்புக்கள்தான் இன்னொருவர் கண்டுபிடிக்கும் வரை இதை அமலில் வைத்திருப்பர்.


திருக்குறளில் உள்ள எழுத்துக்களை பல திருத்தித்தான் படிக்க முடிந்த்தாக கூறுவர். ஒலைச்சுவடிகளில் புள்ளி வைக்கமுடியாத்தினால் (புள்ளி வைத்தால் ஒலை கிழிந்துவிடும்-ஆகையால் சில இடங்களில் கோடு மாதிரி கிருக்கல்கள் இருக்கும்) அவைகளை நம் எழுத்து வடிவிற்கு கொண்டுவருவதற்கு சிரமபட்டனர் என்று கூறுவதுண்டு. இப்படி பல உதாரணங்களை சொல்லமுடியும்.


இதில் ஒன்றும் உணர்ச்சிவயப்படுகின்ற நிலையில்லை. கொஞ்சம் ஆழ்ந்து (சமுதாயத்தை நினைத்து-நம்மைப்போல அவர்களும் உயர வேண்டும்) சிந்தித்தால் இதில் உள்ள உண்மை புரியும், நன்மையும் புரியும் (நானும் புரியாமல் கண்மூடித்தனமாக எதிர்த்துக் கொண்டிருந்தேன்). இந்த சர்ச்சைகளாலேயே தமிழ் இணைய தளங்கள் வருவது தாமதமாகின்றது. தமிழையே அறிமுகம் செய்ய வேண்டியிருக்கின்றது. இன்னும் பின்னோக்கி வலித்து சென்று கொண்டிருக்கின்றோம்.

தமிழில் இணைய தளங்கள் வருவது தாமதம் ஆவதற்கு இது தான் காரணம் என்று கருதுகிறீர்களா? தமிழில் இணையதளம் வராததற்கு அதனால் அவர்களுக்கு வரும்படி இல்லை என்பதே காரணம். இப்போது உள்ள பல தளங்கள் தமிழ் மீது பற்று கொண்டதால் மட்டுமே அவர்களால் நடத்தப்படுகிறது. --குறும்பன் 15:05, 10 மே 2009 (UTC)

தமிழ் என்னமோ ஏழைகள் மொழி, வறுமை மொழி என்றாகிவிட்டது. ஊருக்குத் தான் உபதேச்ம் என் பிள்ளைகள் கான்வன்டில்தான் படிக்கும், நான் ஆங்கில வடமொழிப் பெயர்களைத்தான் என் சந்ததியினர்க்கு வைப்பேன், என்ற டாடி- மம்மி பேர்வழிகளை உண்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர். (நான் அப்படியில்லை அதனால் தான் கொஞ்சம் தைரியமாக-தமிழ் முறையில் தான் திருமணம்- பெயர் எல்லாம்)

இவர்களிடமிருந்து காப்பாற்ற தமிழனனின் அறிவு வளர்ச்சிக்காக, விஞ்ஞானத்திற்காக, வரலாற்றிற்காக, தமிழனனின் ஏற்றத்திற்காக, தமிழ் சகோதரர்களின் மேம்பாட்டிற்காக, உலகவியலை தமிழன் உணர்ந்து கொள்வதற்காக, வாழ்வாதாரத்திற்காக சற்று காலம் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தினால் தவறில்லை. தமிழை காப்பாற்றுவர்கள்,படிப்பவர்கள் ஏழைத் தமிழர்கள், வறுமைத் தமிழர்கள் மட்டுமே.(சற்று முற்போக்கு, தியாக மனப்பான்மையோடு-சிந்திக்கவும்)--செல்வம் தமிழ் 07:40, 8 மே 2009 (UTC)

தமிழ்நாடு அரசி பாடநூல்- சமூக அறிவியல் 9 ஆம் வகுப்புதொகு

இதற்குப் பிறகும் நீங்கள் முடிவுக்கு வரவில்லையென்றால் இராஜஸ்தான் என்ற தனித்தலைப்பில் தனிக்கட்டுரைத் துவங்குதைத்தவிர வேறு வழியில்லை.--செல்வம் தமிழ் 22:17, 8 மே 2009 (UTC)

மேலே நீங்கள் இட்டிருந்த உங்கள் நெடிய கருத்துரைக்கு மறுமொழி தர வேண்டும் என்று எண்ணியிருந்தேன், அதற்குள் நீங்கள் இன்னொன்றையும் இட்டிருக்கின்றீர்கள். நீங்கள் கொடுத்துள்ள அப் பாடநூலில், பக்கம் 323 இல் உத்ராஞ்ல் என்று எழுதியிருக்கின்றார்கள். உத்ராஞ்சல் என்று எழுதவில்லை. ஆகவே உத்ராஞ்சல் என்று எழுதக்கூடாது என்று வாதிடுவீர்களா? கிரந்த எழுத்துகளால் வரும் கேடுகளில் இப்படி எழுத நேரும் என்று 15 ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டிருந்தேன் (பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலையின் தமிழ் பேராசிரியர் சியார்ச் ஆர்ட் அவர்களுடன் உரையாடியபொழுது). இப்பொழுது பஞ்ஜு, நெஞ்ஜு என்றும் எழுதத் தொடங்கியிருக்கின்றார்கள். பாடநூல்களில் உள்ளவை நமக்கு வழிகாட்ட வேண்டும், ஆனால் அப்படி இல்லாதவற்றை சரி செய்து எழுதுதல் தேவைப்படலாம். உத்ராஞ்சல் என்று எழுதுதல் வேண்டும் அல்லது உத்திராஞ்சல் என்று எழுதுதல் வேண்டும். இக் கட்டுரையின் பெயரை இராஜஸ்த்தான் இராஜஸ்தான், ராஜஸ்தான், ராயத்தான், ராச்சசுத்தான் இராச்சசுத்தான், ராசத்தான் இராயதானம் என்று பல விதமாக எழுதலாம். கிரந்த எழுத்துடன் எழுதுவதென்றால் இராஜஸ்தான் என்று எழுதலாம். கிரந்தம் இல்லாமல் எழுதலாம் என்றால் இராச்சசுத்தான் அல்லது இராயசுத்தான் என்று எழுதலாம் என்று நினைக்கிறேன். டாய்ட்சு நாட்டவர் ராயஸ்த்தான் என்று எழுதுகிறார்கள். எசுப்பானிய மொழியிலே Rayastán o Rājastān என்கின்றனர். இதில் இரண்டாவது சொல்லை Raahastaan என்று ஒலிக்க வேண்டும். எசுப்பானியத்திலும் தமிழ் போல ja ஒலி கிடையாது (உலகில் 400 மில்லியன் மக்கள் எசுப்பானியம் பேசுகிறார்கள்). Jesus என்னும் புகழ்மிக்க சொல்லைக்கூட அவர்கள் Hesoos என்றுதான் ஒலிக்கின்றனர். கிரந்தம் இல்லாமல் எழுதுவதைத் தவறு என்று நீங்கள் எப்படிக் கூறுகின்றீர்கள்? உத்ராஞ்ஜல் என்றுதான் எழுதவேண்டும் என்று கூறுவீர்களா? இதில் சற்று பொறுமையாக அலசி எது சரியானது என்று எண்ணித்தேர்ந்து செயல்படுவது நல்லது. --செல்வா 23:41, 8 மே 2009 (UTC)
கிரந்தம் இல்லாமல் எழுத வேண்டும் எனில், ஒலிப்பு நெருக்கம் சிறிது கூட்ட, இராய்ச்சசுத்தான் எனலாம். கருத்துக்காக பதிவு செய்கிறேன். பரிந்துரை என்று கொள்ளவேண்டாம். --செல்வா 00:01, 9 மே 2009 (UTC)
தமிழ்நாடு அரசு பாடநூல்- சமூக அறிவியல் 9 ஆம் வகுப்பு- நீங்கள் கொடுத்திருந்த இணைப்பை பார்த்தேன், அதில் ஏகப்பட்ட தவறுகள். உங்களுக்கே அது தெரியும் என்று நினைக்கிறேன். இத்தவறான புத்தகத்தை நாம் அடிப்படையாக கொள்ளமுடியாது. இத்தவறுகளை வரும் பதிப்பில் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புவோம். தமிழ்நாடு அரசு பாடநூல் இணைப்பை முன்பே பார்த்துள்ளேன், பாடங்களில் நிறைய தவறுகள் இருந்ததால் தான் அதைப்பற்றி குறிப்பிட்டேன். அதில் நிறைய தமிழ் சொற்களே அல்ல. இதை எழுதியவர் அமெரிக்க ஆங்கிலம் நிறைய பேசுபவராக, ஆங்கிலம் மோகம் உடையவராக இருக்க வேண்டும். --குறும்பன் 14:55, 10 மே 2009 (UTC)

எதேச்சதிகாரம்தொகு

கிரந்த விடயங்களில் இந்த மாதிரி செயல்படுபவர்க்ள இங்குள்ள தமிழர்கள் யாரும் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை. வெளிநாடு வாழ் தமிழர்கள் மட்டுமே என்று பட்டவர்த்தனமாக தெரிகின்றது. இதில் விளக்கங்கள் கொடுக்கவே வேண்டியதில்லை தமிழ் நாட்டு பாடநூல்களில் கொடுத்த்து தவறு உங்களால் அரிதியிட்டு வாதிடுவீர்கள் என நீனைக்கின்றேன்.

இப்பொழுது உண்மையிலேயே உணர்ச்சி வசப்படுகின்றேன். இது எல்லை மீறிப் போய் வரம்பின்றி ஏதேச்சதிகாரக நிலைக்கு வந்து விட்டது. ஏழு கோடி பேர்களையும் அறிவீலிகள் நாங்கள் தான் அறிவாளிகள் . நாங்கள் எதை வேண்டுமானாலும் மாற்றுவோம் அதை யாரும் எதிர்க்கத் தேவையில்லை, மேற்கோளும் காட்டமாட்டோம் என்று வலம் வருவதாக எண்ணுகின்றேன். இது ஒருவரின் தனிப்பட்ட பெயரை மாற்றுவதிலிருந்து,நாடு, மாநிலப் பெயரை மாற்றுகின்ற அளவுக்கு எல்லை மீறி வந்து விட்டது. எமது நாட்டை எப்படி அழைக்கவேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கின்றீர்கள்.

ஒன்றை மாற்றும் பொழுது அவற்றினால் எழும் சர்ச்சைகளைப்பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. அதுவும் உங்களுடைய விடயத்தில், பிறர் விடயத்தில் அதை மூச்சு முட்ட எதிர்க்கின்றீர்கள் முறையான காரணத்தை குறிப்பிடுவதிவதில்லை. நீங்கள் குறிப்பிட்ட காரணங்களை மறுபடியும் படித்துப் பாருங்கள், யாருடைய மேற்கோளாவது அல்லது சான்றுகள் ஏதாவது கொடுத்திருக்கின்றீர்களா? இதே நிலையில் போனால் இந்தியாவின் பெயரையும் மாற்றுவீர்கள். உடனே இதில் கிரந்தம் இல்லை அதனால் மாற்றமாட்டோம் என்பீர்கள்.

இதிலேயே எதேச்சதிகாரம், சர்வாதிகார, மன்ப்போக்கை வெளிப்படுத்துகின்றது. இதற்கு முறையான அனுமதி பெற்று இருக்கின்றீர்களா? எந்த காரணம் குறிப்பிட்டாலும் தவறு என்று தோன்றாமல் போனது எப்படி? விக்கியில் நாட்டின் பெயரை மாற்றுவோம் என்று வெளிப்படையாக அறிவிக்க இயலுமா? இப்படி மனம்போன போக்கில் செயல் பட்டால் மற்றவர்கள் மட்டும் எப்படி கட்டுப் படுவர். பிறகு எதற்கு மேற்கோள்கள் ?--செல்வம் தமிழ் 04:20, 9 மே 2009 (UTC)

செல்வம், மேலே நீங்கள் தந்த இணைப்பிலுள்ள தமிழ்நாட்டுப் பாடநூற் கோப்பின் முதற்பக்கத்தில் இந்தியர் குடியேறிய நாடுகளில் ஒன்றாக டச்சு குறிப்பிடப்படுகின்றது. உண்மையில் டச்சு என்றொரு நாடு உள்ளதா அல்லது வேறொரு நாட்டுப் பெயரை டச்சு என்று மாற்றி விட்டார்களா? -கோபி 07:00, 9 மே 2009 (UTC)


அத்து மீறிய குற்றச்சாட்டுதொகு

அத்து மீறிய குற்றச்சாட்டு. ஒட்டுமொத்தமாக "வெளிநாட்டுத் தமிழர்கள்" என்றான் என்ன அர்த்தம்? வெளிநாட்டில் தமிழ்நாட்டு தமிழர்கள் இல்லையா? "யாதும் ஊரே யாவெரும் கேளிர்". "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக்காயா. வெளிநாட்டில் வாழ்ந்தால் தமிழன் இழிவானவனா?

தமிழ் அதன் தனித்தன்மையை இழக்காமல் இருக்க வேண்டும் என்ற போராட்டம் "வெளி நாட்டில்" தொடங்கியது அல்ல. தமிழ் மொழியின் வரலாற்றைப் பற்றி அருவரி தெரிந்தால் கூட இது தெரியும்.

தமிழ்நாடு அரசின் தமிழ் பற்று பற்றி அவர்களின் இணையத் தளங்கள் சென்று பாத்தால் தெரியும். 80% இணையத் தளங்கள் ஆங்கிலத்தில் மட்டும் உள்ளன. ஆகவே தமிழ்நாடு அரசு பற்றிய தகவல்கள் எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் தரவேண்டும். ஏன் என்றால் அதுதானே அரசின் முன் உதாரணம். இலங்கை அரசு சிறுபான்மை இனத்தை வெளிப்படையாக சித்திரவதை செய்கிறது, இனப்படுகொலை செய்கிறது. அது வேறு சில விட மேல் போல் தெரிகிறது. கிரந்தமும் ஆங்கிலமும் கலந்து எழுதும் மோட்டுக் குடி மோகத்தின் திமிரை எம் மீது திணிக்காதீர். நீங்கள் எழுதிய கட்டுரைகளைப் பாருங்கள் எங்கெல்லாம் ஆங்கிலம் தேவை இல்லையோ, அங்கெல்லாம் திணித்திருக்கிறீர்கள். எ.கா கீழே. பி.எஸ் என்றால் என்ன?

அந்தந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி சென்னை மாநகரக்காவல்
காவல் நிலையங்கள் (பி.எஸ்) 90 2009 ஆண்டு தற்பொழுதய நிலவரம்
அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் (ஏ.டபுள்யு.பி.எஸ்} 35 2007 ஆண்டு நிலவரப்படி
புறக்காவல் நிலையங்கள் (ஒ.பி) 9 2005-2006 ஆம் ஆண்டு நிலவரப்படி
காவல் எல்லைகள் (போலிஸ் லிமிட்) 220 ச.கி.மீ 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி
மக்கள் தொகை 70 இலட்சம் 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி


நற்கீரன், செல்வம் தமிழ் அருள்கூர்ந்து உணர்ச்சி வசப்படாமல், அத்து மீறிப் பேசாமல், எதிர்-எதிர் கருத்துகளை முன்வைத்து கூடிப்பேசி இணக்க முடிவெடுப்போம். செல்வம் தமிழ் புதிதாக வந்தவர், அவருக்கு விக்கி நடைமுறைகள் பற்றிய கருத்துகள் வேறாக இருக்கலாம். மாற்றுக் கருத்துகள் உள்ளவர்களும் பண்புடன், கருத்துகளை மையமாக வைத்து (இதில் குமுகாய, சமுதாய உணர்ச்சி வல்லழுத்தங்கள், சாய்வுகள் இருப்பதாக இருந்தாலும்) முறைப்படி கருத்தாடுதல் வேண்டும். அடிப்படையில் செல்வம் தமிழ் இராஜஸ்தான் என்று இருக்கலாமே, ஏன் கிரந்தம் இல்லாமல் எழுதுகின்றீர்கள், சற்று மாறுதலாக உள்ளதே, இப்படி எழுதுவதற்கு என்ன சான்றுகோள்கள், எங்கிருந்து வழிகாட்டுகளைப் பெற்றீர்கள் என்று கேட்கிறார். அவைநேர்மையானவை. ஆனால் அவர் கேட்கும் விதம் சற்று காட்டமாக, எடுத்தெறிந்து பேசுவது போல் உள்ளது. உணர்ச்சிகளைக் குறைத்துக்கொண்டு, சற்று அமைதியுடன், செல்வம் தமிழ் அவர்களும், நீங்களும் நானும் பிறரும் உரையாடினால் நல்லதல்லவா? இணக்க முடிவு இராஜஸ்தான் என்றோ, இராயசுத்தான் என்றோ வேறு எதுவாகவோ இருப்பினும் அப்படி மாற்றிவிடலாமே. அருள்கூர்ந்து அறிவார்ந்த முறையில், முறை தழுவி, கருத்தை மையமாக வைத்து உரையாடுமாறு வேண்டிக்கொள்கிறேன். --செல்வா 15:50, 9 மே 2009 (UTC)

முறையான பெயர்தொகு

(tamil, tamilnadu பெயர் மாற்றம் குறித்து இதற்கு முன் விடுத்திருந்த கருத்தை மீளப் பெறுகிறேன்--ரவி 04:57, 12 மே 2009 (UTC))

செல்வம், கிரந்தம் கலந்தும் எழுதலாம் என்ற உங்கள் கருத்தை மதிக்கிறேன். ஆனால், அதற்கு நீங்கள் முன்வைக்கும் காரணங்கள் ஏற்புடையதாயில்லை.

 • பம்பாய் மும்பை ஆனது. கல்கத்தா கொல்கத்தா ஆனது. மெட்ராசு சென்னை ஆனது. இதற்கெல்லாம் அரசு ஆணை வந்தது உண்மை தான். ஆனால், இந்த ஆணை எல்லாம் அந்தந்த மாநில மொழியில் எப்படி அதை உச்சரிப்பது என்பதற்கே. உலகின் எல்லா மொழிகளிலும் எப்படி எழுத வேண்டும் என்று எந்த அரசும் ஆணை வெளியிட முடியாது. அவரவர் தங்கள் மொழிகளில் இருக்கிற எழுத்துகளை வைத்து இயன்ற அளவு ஒலிப்பு நெருக்கம் காட்டி எழுத வேண்டியது தான். west bengal என்பது ஒரு மாநிலத்தின் ஆங்கிலப் பெயர். மேற்கு வங்காளம் என்பது அம்மாநிலத்தின் தமிழ்ப்பெயர். உண்மையிலேயே, அம்மாநிலத்தின் பெயரை அவர்களது வங்காள மொழியில் எப்படி அழைக்கின்றார்கள் என்று நமக்கே (பொதுமக்களுக்குத்) தெரியாது. பல ஊர்களின் பெயர்களையும் அவரவர் மொழிக்கு ஏற்ப எழுதுவது எல்லா மொழிகளிலும் பன்னெடுங்காலமாக இருக்கும் வழக்கமே. maharashtraவை மராட்டியம் என்றும், keralaவை கேரளம் என்றும் எழுதுவது உறுத்த வில்லையே, ஏன்? ராஜஸ்தான் என்று எழுதாமல் ராஜஸ்தானம் என்று எழுதும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் உங்களுக்கு அது உறுத்தலாகவே இருந்திருக்காது. எனவே, ஒரு ஊரின் மூலப் பெயரை எப்படி மாற்றலாம் என்ற கேள்வியே செல்லாது. உண்மையான உறுத்தல் என்னவென்றால், உள்ளூர் வழக்கத்தில் இருந்து எப்படி மாற்றி எழுதலாம் என்பதே.

இப்பொழுதும் உள்வாங்கவில்லைதொகு

வெளி நாட்டுத் தமிழர்கள் இங்கு இருப்பவர்கள் கிரந்தம் பயன்படுத்துகின்றார்கள். என்று குற்றச்சாட்டு கூறப்பட்டபொழுது. நீங்கள் எப்படி மாநிலத்தின் பெயரை மாற்றமுடியும். அதற்கு மேற்கோள் இருக்கின்றதா? அதற்கு அதகாப்பூர்வ மேற்கோள் கொடுத்தால் முடிந்த்து. இதை நையாண்டியுடன் கேட்கவில்லை.--செல்வம் தமிழ் 13:03, 10 மே 2009 (UTC)

இதை rajasthan என்ற ஒரு பெயரை மட்டும் அடிப்படையாக வைத்து உரையாட முடியாது. ஏனெனில் பிரச்சினை ஒரு மாநிலத்தைப் பற்றியதல்ல. இன்னும் எத்தனையோ இடங்களில் இது போன்ற உரையாடல்கள் வரும். ஒரு பெயரை கிரந்தம் விடுத்து எழுதலாமா கூடாதா, விடுத்து எழுதினால் அதற்கான வழிமுறைகள் என்ன என்பதே பிரச்சினை.

சரி, ஆதாரம் உள்ள ஒரு ஊர் பெயரைப் பார்ப்போம். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஸ்ரீலங்கா என்று எழுதுகிறோம். இலங்கைத் தமிழர்கள் சிறீலங்கா என்கிறார்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் இதை எப்படி எழுதுவது என்பது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? நானும் இதை நையாண்டிக்காக கேட்கவில்லை. தமிழின் பன்னாட்டுப் பயன்பாட்டுத் தன்மையால் வரும் தவிர்க்க இயலாத கேள்வி இது--ரவி 16:07, 10 மே 2009 (UTC)


 • உள்ளூர் வழக்கத்திற்கு எது இறுதி முடிவு என்பதற்கு அரசு ஆணை குறிப்புகளையும் பாடப் புத்தகங்களையும் சான்றாக வைக்கிறீர்கள். தமிழக அரசின் முடிவு தான் இறுதி என்பது செல்லாது. ஏன் என்றால், தமிழ்நாட்டுக்கு வெளியே மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் ஆட்சி / முக்கிய மொழியாகவும் உலகெங்கும் இன்னும் பல நாடுகளிலும் தமிழ் பயன்பாட்டில் இருக்கிறது. அவர்களின் மொழி வழக்குகள் செல்லாதா? தமிழ் விக்கிப்பீடியா தமிழ்நாட்டுத் தமிழருக்கு மட்டும் அல்லவே?

ஒரு மொழியை எழுதும் விதம் சீராக இருக்க வேண்டும். பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டு விட்டார்கள் என்பதற்காக சரியா தவறோ அப்படியே ஏற்க இயலாது. பாடப் புத்தகத்தில் இல்லாத சொற்களுக்கு மட்டும் முறைப்படி எழுதுவோம் என்று நினைப்பது அறிவுடமையாகுமா? செல்வா குறிப்பிட்ட படி பாட நூல்களிலேயே முன்னுக்குப் பின் முரணாக பல உள்ளன. அதே போல், தமிழ்நாடு அரசு வெளியிடும் பாடநூல்களைத் தவிர பிற நாட்டு அரசுகளும் நூல்களும் வெளியிடவே செய்கின்றன. எந்த நாட்டு நூலை இறுதியாக கொள்வது?

 • கிரந்தச் சொல்லுக்குப் பொருள் இருந்தால் தமிழில் மாற்றி எழுதலாம். இல்லாவிட்டால், கிரந்தத்திலேயே எழுதுங்கள் என்ற வாதம் ஏற்புடையதில்லை. பொருளே இல்லை என்று ஆன பின் அதற்கு எதற்கு மெனக்கெட்டு ஒரு எழுத்து? ஆழ்வார் பாடல் ஒன்றிலே கூட சிரீதரன் என்று எழுதி இருப்பது அறிவீர்களா? அதைப் பார்த்து எல்லாரும் சிரித்தார்களா என்ன?
 • கிரந்தம் நீக்கினால் அறிவியல் தமிழ் வளராது என்கிறீர்கள். சரி, தமிழில் கடந்த பல நூற்றாண்டுகளாகவும் இப்போதும் இன்னும் கூடிய வலுவுடனும் கிரந்தத்தைக் கலந்து தானே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் அறிவியல் தமிழ் வளரவில்லை?
 • வெளிநாட்டுத் தமிழர் தமிழைச் சிதைக்கிறார்கள் போன்ற காழ்ப்புணர்வு கூடிய சொற்கள் எந்த விதத்திலும் நட்புணர்வுடன் உரையாட உதவாது. நான் கிரந்தத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் இருக்கிறேன். கடந்த சில ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்தேன். நான் வெளிநாட்டுத் தமிழனா உள்நாட்டுத் தமிழனா?

விக்கிப்பீடியாவில் உள்ள கிரந்த எதிர்ப்பாளர்கள் பலரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்களே. ஆனால், தமிழகத்துக்கு வெளியே வேறு மாநிலங்களுக்கு, வேறு நாடுகளுக்குச் சென்று வேறு மொழிகளின் தன்மை அறிந்து கொள்வது கிரந்தம் பற்றிய ஒருவரது பார்வையைப் பெரிதும் மாற்றும். ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அதில் எத்தனை ஒலிகள், எழுத்துகள் இருக்கின்றன என்பது ஒரு பொருட்டே இல்லை. --ரவி 04:24, 10 மே 2009 (UTC)

ஆழ்வார் பாடல் ஒன்றிலே கூட சிரீதரன் என்று எழுதி இருப்பது அறிவீர்களா? என்கிறீர்கள் ரவி. ஒரு பாடலில் இல்லை. பல பாடல்களில் உள்ளன. செல்வம் தமிழ் அவர்களுடைய கருத்து புதிதல்ல, என்றாலும் செல்வம் தமிழ் போலவும் வினோத் போலவும் பங்காற்றிக் கொண்டே இப்படிப் பேசுவோர் மிக மிகக் குறைவே. உணர்ச்சிவசப்படாமல், கருத்தை மையமாக வைத்து பன்னாட்டுப் பயன்பாடு, பலகாலம் பயன்பட வேண்டும் என்னும் கருத்துகளை முன்னிறுத்தி உரையாடுவோம். இங்கு செல்வம் தமிழ், கோபி, நற்கீரன், ரவி, குறும்பன் ஆகியோர் கருத்துகளை நான் ஊன்றிப் படித்தேன். செல்வம் தமிழ் அவர்கள் இப் பயனர்கள் கேட்ட கேள்விகளுக்கு அறிவடிப்படையில் கருத்துகள் முன் வைத்தால் பயனுடையாதாக இருக்கும் என நினைக்கிறேன். எத்தனையோ கட்டுரைகளில் கிரந்த எழுத்து தலைப்பிலும், கட்டுரையின் உள்ளேயும் இருப்பதால் இங்கே இராஜஸ்தான் என்று எழுதுவதில் சிக்கல் இல்லை என்பதை செல்வம் தமிழ் உணர வேண்டும். பின் ஏன் எழுதத் தேவை இல்லை என்று பலர் இங்கு கூறுகிறார்கள் என்பதை அவர் அவருக்கு இருக்கும் நல்லுணர்வோடு எண்ணிப்பார்க்க வேண்டும். அறிவியல் வளர்ச்சிக்கும் கிரந்த எழுத்தையோ பிற எழுத்துகளையோ ஏற்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழில் இப்படிச் சொல்பவர்கள், ஏன் பிற இந்திய மொழிகளில் (ஒரியா, இந்தி, தெலுங்கு, மராட்டி, குசராத்தி ..) வளர்ச்சி இல்லையாம் என்று விளக்க வேண்டும். இங்கு விக்கியில் பணியாற்றுவோர்கள் பெரும்பாலோரும் உலக நடப்புகளைக் கூர்ந்து பார்த்து வருபவர்கள், பல் துறையினர், அறிவுக் கூர்மையுடையவர்கள். ஏதும் அரைகுறை என்று திரு செல்வம் தமிழ் கருத வேண்டாம் என்றும் வேண்டிக்கொள்கிறேன் (அப்படி அவர் கருதின்றார் என்று சொல்லவில்லை). கருத்துரையாடும் பொழுது, வலுவான கருத்துகளை முன் வைக்கும் பொழுதும், பண்புடன் ஓர் நல் அவையில் முன் வைப்பது போல முன் வைத்து கருத்தாடினால் பயன்படுவதாக இருக்கும். தாம் முன் வைக்கும் கருத்துக்கு எதிர்மாறான கருத்து வலுவாக (அறிவடிப்படையிலும் கூடுதலான பயனர்களின் கணிப்பிலும்) இருந்தால் ஏற்கும் மனப்போக்கும் விக்கிப்பீடியாவின் எதிர்பார்ப்பு. சிறுபான்மையராயினும், அறிவடிப்படையே முதன்மையானது. தமிழ் விக்கிப்பீடியாவில் பெரும்பான்மையானவர் தமிழ் எழுத்துகளால் எழுதுவதே சிறந்தது என்று நினைத்தாலும், அறிவடிப்படையிலும் இதுவே செல்லும் கருத்து என்று இதுகாறும் இங்கு நிறுவப்பட்டிருந்தாலும், மிகப்பல இடங்களில் கிரந்தம் உள்ளது. கிரந்தத்தை அறவே விலக்க வேண்டியதில்லை, கூடியமட்டிலும் குறைவாக பயன்படுத்துவதே நல்லது என்னும் பொதுவான கருத்துடன் செயல்படுகின்றனர். கிரந்தம் இட்டுத்தான் எழுத வேண்டும் என்று மிக வலிந்து செல்வம் தமிழ் போல் வாதிடும் பொழுது அறிவு/கருத்து அடிப்படையில் மாற்றுக் கருத்துகளை பலர் இடுகின்றார்கள். அதிக நேரத்தை இதற்கு செலவிடாமல் ஆக்கப் பணிகளுக்கு நேரத்தை செலவிடலாம் என நினைக்கிறேன். அளவிறந்து இதற்கு நேரம் செலவிட வேண்டாம். செல்வம் தமிழ் இங்கு மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான சுருக்கமான மறுமொழிகள் தருவது, இக் கருத்தாடலை முன்னெடுத்துச் செல்லும் என்று நினைக்கிறேன்.--செல்வா 17:04, 10 மே 2009 (UTC)

யுனைட்டைட் ஸ்டேட்ஸ் ஒப் அமெரிக்கா, இயுரோப், இயுரோப்பியன் யூனியன், ஹியுமன் ரைட் வோட்ச்தொகு

United States of America, Europe, European Union, Human Rights Watch ஆகியவற்றை அப்படியே பெயர்களை வைக்க வேண்டும். அந்தப் பெயர்களை மாற்ற தமிழகளுக்கு யார் உரிமை தந்தது? எங்காவது அரச் ஆணை உள்ளதா? தமிழ்நாட்டு அரச வலைத்தளங்களில் இப்படித்தான் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்கள். எனவே இப்படியே எழுத வேண்டும்? என்ன சரிதானே? --Natkeeran 12:25, 10 மே 2009 (UTC)

பெயர்த் தேர்வுதொகு

 • கிரந்தம் கலந்து எழுதினால்- இராஜஸ்தான்
 • கிரந்தம் இல்லாமல் எழுதலாம் என்றால்
  • இராச்சசுத்தான்
  • இராயசுத்தான்
  • இராய்ச்சசுத்தான்
  • இராசத்தான்

இவற்றுள் ஒன்றைத் தேர்ந்து தலைப்பிடலாம். ஆனால் நினைவில் கொள்ள வேண்டியவை: (1)ஆங்கிலத்திலும் j என்பதற்கு ய் ஒலிதான் பொது (yes, hallelujah இங்கே பார்க்கவும்). ஆனால் வேறு சில இடங்களில் /dʒ/ என்னும் ஒலி வரும். (2) டாய்ட்சு நாட்டவர் ராயஸ்த்தான் என்று எழுதுகிறார்கள். (3) எசுப்பானிய மொழியிலே Rayastán o Rājastān என்கின்றனர். இதில் இரண்டாவது சொல்லை Raahastaan என்று ஒலிக்க வேண்டும். எசுப்பானியத்திலும் தமிழ் போல ja ஒலி கிடையாது (உலகில் 400 மில்லியன் மக்கள் எசுப்பானியம் பேசுகிறார்கள்). Jesus என்னும் புகழ்மிக்க சொல்லைக்கூட அவர்கள் Hesoos என்றுதான் ஒலிக்கின்றனர். --செல்வா 18:34, 10 மே 2009 (UTC)

தற்போது ராஜஸ்தான் என்ற ஊர் பெயரை என்னவோ இராச்சசுத்தான் என மாற்றியிருப்பது தான்தோன்றித் தனமாகப் படுகின்றது. ஒரு பெயர்ச்சொல்லை தமிழ்ப் படுத்தலாம் என்றாலும், அது தமிழர்களின் நாவில் வருமாறல்லவா தமிழ்ப் படுத்த வேண்டும். அது மட்டுமின்றி தற்காலத் தமிழில் வெகுமக்கள் ராஜஸ்தான் என்பதை ராஜஸ்தான் என்று தான் அறிகின்றார்கள். இது சரியா தவறா என்பதை விட விக்கி என்பது ஒரு கலைக்களஞ்சியமே தவிர மொழிவளர் ஆய்வுக்கூடும் கிடையாது. ராஜஸ்தான் என்ற சொல்லிற்கு தமிழ் வழங்கு சூழலில் வேறு ஏதாவது சொல் எதாவது ஒரு காலத்தில் பயன்பட்டனவா என ஆராய்ந்து கூட பார்க்காமல், இராச்சசுத்தான் என மாற்றியிருப்பதை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியே விஞ்சியது. இவ்வாறாக மாற்றும் அதிகாரத்தை ஒரு சிலர் எடுத்துக் கொண்டு தவறாகப் பயன்படுத்துவதாகவே எனக்குப் படுகின்றது. --Winnan Tirunallur (பேச்சு) 00:31, 13 ஆகத்து 2015 (UTC)
ராஜஸ்தான் என்ற சொல்லை தமிழில் மூன்று விதமாக நாம் பயன்படுத்தலாம். ஒன்று அதை திசைச் சொல்லாக அப்படியே கடன் வாங்கி ராஜஸ்தான் என்றே பயன்படுத்துவது. தற்காலத் தமிழ் ஊடகங்கள், வெகுமக்கள், நூல்கள் என பலவற்றிலும் இச் சொல்லே பயன்பாட்டில் இருப்பதால் இதை தொடர்ந்து பயன்படுத்தலாம். --Winnan Tirunallur (பேச்சு) 00:31, 13 ஆகத்து 2015 (UTC)
இரண்டாவது வழிமுறை அதை தமிழ்படுத்தி பயன்படுத்துவது, ஜ, ஸ, போன்ற வடமொழி எழுத்து வருமிடத்து அதை சங்கக் காலம் தொட்டே தமிழ் படுத்தியிருக்கின்றனர். அவ்வாறான தமிழ்ப் படுத்தல்கள் வெகுமக்கள் பயன்படுத்தக் கூடியதாகவும், வாசிக்க எளிமையானதாகவும் இருந்திருக்கின்றது. கஜபாகு என்பதை கயவாகு என சிலப்பதிகாரம் எழுதியிருக்கின்றது. ஜனம் என்பதை சனம் என தமிழில் மாற்றி பயன்படுத்தி வந்திருக்கின்றோம். ஆக, ஜ என்பதற்கு ய, ச ஆகிய எழுத்துக்கள் மாற்றாக வருகின்றது. ராஜா என்ற சொல்லானது பொதுத் தமிழில் ராசா என மாறி பயன்பட்டு வந்திருக்கின்றது. ராஜ என்பது ராச என மாறும். ஸ என்ற வடமொழி எழுத்துக்கு தமிழில் பொதுவாக ச என்ற எழுத்தே பயன்படுகின்றது. ஆனால் அது ஸ் என மாறும் போது தமிழில் அதற்கு மாற்று எழுத்து கிடையாது. இதற்கு சு என போட்டு எழுதலாம் என யார் தொடங்கி வைத்தது எனத் தெரியவில்லை, விக்கிபீடியா முழுவதும் ஸ் வருமிடத்து சு என எழுதி வருகின்றனர். இதனால் வாசிப்பதற்கு பெரும்பாடாக இருக்கின்றது. பழந்தமிழில் ஸ் என வருமிடத்து அது மொழிமுதலில் வரும் போது பொதுவாக செ, சொ என மாறிவிடுகின்றது. மொழியிடை வரும் போது தமிழ் இலக்கியங்களில் ட் ஆக மாறுவதை காண முடிகின்றது. கிஸ்கிந்தை என்பதை கம்பர் கிட்கிந்தை என எழுதியிருக்கின்றார். அப்படி நோக்கினால் ராஜஸ்தான் = ராசட்தான் என்று தானே மாறியிருக்க வேண்டும். ராஜஸ்தான் என்ற சொல்லை பிறமொழியே அறியாத ஒரு பாமரத் தமிழனிட சொல்லி திருப்பிச் சொல்ல சொல்லுங்கள், அவர் வாயிலிருந்து வருவதே மெய்யான தமிழாக்கம் ஆகும். ராஜஸ்தான் என்பதை ராசத்தான் என்று தான் சொல்வது எளிமையாக இருக்கும். --Winnan Tirunallur (பேச்சு) 00:31, 13 ஆகத்து 2015 (UTC)
மூன்றாவது வழிமுறை அந்த சொல்லின் பொருளை உள்வாங்கி தமிழாக மாற்றுவது, எடுத்துக்காட்டுக்கு பேஸ்புக் என்ற சொல் முகநூல் என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராஜ + ஸ்தான் என்ற இரு சொல்லினையும் தமிழில் அரசநாடு என்று தான் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இதில் அரச என்ற சொல் ராஜ என்ற வடசொல்லாக மாறியதாகவும், ராஜ என்ற வடசொல் அரச என்ற தமிழ் சொல்லாக மாறியதாகவும் இருவேறு கருத்திருந்தாலும், அரச என்ற சொல்லே ராஜ என்ற வடசொல்லிற்கு நிகராக தமிழ் சமூகம் பயன்படுத்தி வந்திருக்கின்றது. --Winnan Tirunallur (பேச்சு) 00:31, 13 ஆகத்து 2015 (UTC)
எந்த வகையில் நோக்கினாலும் இராச்சசுத்தான் என்ற சொல் என்றுமே வழக்கிலும் இருந்ததில்லை, வெகுமக்களாலும் பயன்படுத்தப்பட்டதும் இல்லை. வெகுமக்கள் விளங்கிக் கொள்ளுமளவிலும் இல்லை.--Winnan Tirunallur (பேச்சு) 00:31, 13 ஆகத்து 2015 (UTC)

மீண்டும் நையாண்டி தர்பார்தொகு

மீண்டும், மீண்டும் உம்மை நீங்கள் நான் ஒரு நையாண்டியாளன் என்பதை பட்டவர்த்தனமாக, அறிவித்துக் கொள்வது ஏற்படுயதல்ல. நான் யார் கருத்து தெரிவிக்கின்றார்கள் என்பதை பார்த்து கருத்து தெரிவிப்பதில்லை பெயரையும் பார்ப்பதில்லை அவர்கள் கருத்தை முன்வைக்கின்றார்கள் நானும் முன்வைக்கின்றார்கள் அதில் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கின்றேன் அது விமர்சிக்கப்படும், அல்லது யார் மனது மிகச் சிறிய அளவு புண் ஆகின்றது என்றால் பின்வாங்கத் தயங்கமாட்டேன் வருத்தம் தெரிவிக்கவும் தயங்கமாட்டேன் இதுவே தமிழனின் பண்பாடு. இப்பொழுது நீர் இதை விளையாட்டு மைதானம் ஆக்குகின்றீர் நற்கீரனைப் பற்றி நான் கருத்து தெரிவிக்கின்றேன் இவரை ப்ற்றி கருத்து தெரிவிக்கின்றேன் என்பதெல்லாம் நீங்களாக குழு அமைத்துக்கொள்வது, அதனால் நான் சப்போர்ட்டுக்கு வருவேன் வரிந்து கட்டுவேன் என்று சங்கம் அமைத்து அதையும் நீர்தான் தயக்கமில்லாமல் நியாயப் படுத்துகின்றீர்.

எனக்கு எல்லோரும் என் நண்பர்கள் முகம் தெரியாத, உடன் பிறவாத சகோதரர்கள்.( நீங்கள் எப்படி வினாடி வினா போன்று என்னை நடத்தும்பொழுதே எனக்குத் தெரிந்து விடும் இது வேண்டும் என்று கேட்கப்படும் கேள்வி என்று, எழுத்து உம்மை அடையாளம் காட்டிவிடும், எனக்கு மட்டுமல்ல, எல்லா நல்ல மனித உள்ளங்களுக்கும்) . நீங்களே ஒத்துகொள்கின்றீர் எனக்கு தமிழ் வார்த்தை பயன் படுத்துதல் தெரியாது என்று பிறகு ஏன் தலையிடுகிறீர்கள். நீங்கள் பலகாலம் பலரை நையாண்டி செய்து கொண்டிருப்பதாக நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துகொண்டீர்கள். அது மிகப் பெரிய பாவம் என்றே தெரியவில்லை. இப்பொழுதும் வாக்குமூலம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றீர், நீர் பிறரை நையாண்டி செய்ய அதுவும் பகிரங்கமாக அறிவிக்க யார் அனுமதித்தது. நையாண்டி என்பது படித்து வாங்கிய பட்டமா, சிறப்பு பட்டம் ஏதாவது வாங்கியிருக்கின்றீர்களா? இணையத்தில் இது குற்றசொல், குற்ற செயல் என்றே தெரியவில்லை. நையாண்டிக்காக கேட்பதென்றால் மயான மாயாண்டியிடம் கேட்கவேண்டும். --செல்வம் தமிழ் 06:12, 11 மே 2009 (UTC)

மன்னிக்கவும் செல்வம். இதற்கு மேல் எனக்குப் பண்புடன் பேசத் தெரியவில்லை. உங்களுடன் உரையாடி நேரம் வீணாக்கவும் விரும்பவில்லை. நன்றி.--ரவி 06:54, 11 மே 2009 (UTC)

நீர் பேசாமல் இருந்தாலே பெரும் பண்பு--செல்வம் தமிழ் 18:03, 11 மே 2009 (UTC)

செல்வம் தமிழ் 'நீர் பேசாமல் இரு' போன்ற சொற்களை இங்கு பயன்படுத்த வேண்டாம். தனிப்பட்ட முறையில் ஒருவரை த.வி யில் மோசமாக சித்தரித்து எழுதுவது பண்பல்ல. வலைப்பதிவில் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். தவி அப்படி அல்ல. --குறும்பன் 20:24, 11 மே 2009 (UTC)

எழுத்துச் சீர்திருத்தம்தொகு

எழுத்துச் சீர்திருத்தம் பற்றி தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.

மொழி அடிப்படையாக பேச்சைக் குறிக்கும். அது கட்டமைப்பும் ஒழுங்கும் உடையது. இருப்பினும் வட்டாரம், சமூகம், தொழில், தொழில் முறை சூழல் இவற்றால் மாறுபடக்கூடியது.............

தற்காலத் தமிழ் முந்தயத் தமிழைவிட பலவிதமான மாற்றங்களுடன் காணப்படுகின்றது. இத்தமிழையே தற்காலத் தமிழ் என்கின்றோம். மொழியைப் பலத்துறைகளில் பயன்படுத்துவதால் அவரவர்க்கு ஏற்றாற்போல் பயன்படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் மாற்றங்களை தடுப்பது என்பதோ முடியாத காரியமாகின்றது. இதனைப் பொரும்பாலோர் பின்னர் பயன்படுத்துவதால் பின்னர் அதுவே நிலைத்து நின்று விடுகின்றது. இதையே மு.வரதராசனார் கூறும்போது

:
பழைய இலக்கியங்களை கற்றுத்

திகழும் சிலரும் அழகிய செறிவான நடையைப் போற்றித் திகழும் சிலரும் எவ்வளுவுதான் தடுத்து நின்ற போதிலும் பெரும்பாலோராகிய இவர்களின் போக்கிலேயே மொழி செல்லும் தடைகள் ஒரு சிலகாலம் ஈர்த்துப் பிடித்து நிறுத்தலாம். இறுதியில் வெற்றி பெறுவது-பெரும்

பாலோரின் போக்கே ஆகும்...............
[மேலும் பல ஆய்வு விளக்கங்களுக்கு......]

-தமிழ் இணையப் பல்கலைக்கழகம்---செல்வம் தமிழ் 19:36, 11 மே 2009 (UTC)

ஆதாரங்கள் கேட்டதால் என்னால் முடிந்தவை. இன்னுப் பல இடங்களில் இதற்கான விளக்கங்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றேன். அது வரும் வரை காத்திருப்போம்.--செல்வம் தமிழ் 19:41, 11 மே 2009 (UTC)

ராஜஸ்தான் என பெயர் மாற்றம்தொகு

கட்டுரையின் தலைப்பை ராஜஸ்தான் என மாற்றி இருக்கிறேன். (ராஜஸ்தான் சரி எனபது என் எண்ணமில்லை. சரியோ தவறோ தற்காலிகமாகவேனும் ராஜஸ்தான் என்ற பெயர் இருக்கட்டும்). தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது சுமுக நிலை வர இந்த மாற்றம் தேவை என்று கருதி செய்கிறேன். இராசத்தானுக்காக வாதாடிய பிற பங்களிப்பாளர்கள் பிழையாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பிரச்சினை இராசத்தானை பற்றி அல்ல. ஊர்ப்பெயர்களில் கிரந்தம் விடுத்து எழுதலாமா, எப்படி எழுதுவது என்ற கொள்கை முடிவே பிரச்சினை. அதைப் பொதுவான ஒரு பக்கத்தில் கூட உரையாட முடியும். வேறு ஒரு பக்கத்தில் உரையாடுவோம். நன்றி--ரவி 13:19, 12 மே 2009 (UTC)

நானும் இதைத்தான் பரிந்துரைக்க எண்ணினேன். இப்போதைக்கு இராஜஸ்தான் என இருக்கலாம். இப்படி தனிநபர் பெயர், ஓரிடத்தின் பெயர் என்றெல்லாம் வரும்பொழுதும் ஒரு மொழியில் உள்ள எழுத்துகளில் மட்டும் எழுதுவது நல்லதா அல்லது கிரந்தம் போன்றவற்றைக் கலந்தும் எழுதலாமா என்பது தீர அலச வேண்டியது. எல்லா மொழிகளுக்கும் இருக்கும் உரிமை தமிழ் மொழிக்கு இருக்ககூடாதா என்று கேட்க வேண்டும். ஞாnasambaந்தn என்று எழுதினால் ஆங்கிலேயர்கள் ஒப்புக்கொள்வார்களா? இங்கே எழுத இயலுகின்றதே என்று வாதிடலாமா? ஏன் அவர்கள் vaள்ளி, paழniyappan, kaண்ணn என்று எழுதுவதில்லை? எவ்வொரு மொழியையும் அதன் எழுத்துகளில்தானே எழுதுவர்? சிலர் நினைப்பதுபோல ஒலிப்புதான் முக்கியம் எனின் இராச'சுத்தான் என்றுகூட எழுதலாம் (இதுவும் நான் விரும்புவதல்ல, பொதுவான ஏற்புடையதும் அல்ல), ஆனால் இப்படி எழுதுவதால் கா'ந்தி. பி'ல் கிளின்ட்டன், டே'விட், தா'தாபாய் நவுரோசி' என்று G,D, Dh, B, ஆகிய எழுத்தொலிகளையும் ஒரே குறியால் குறிக்க இயலும். நான் முன்னர் முன்கொட்டு இட்டு எழுதப் பரிந்துரைத்தேன். ஒற்றை மேற்கோள் குறியாக இருந்தால் பின்கொட்டு இடுவது நல்லது (குழப்பத்தைத் தவிர்க்க). பிறகுறிகள் இட்டுக் குறிப்பதென்றால் முன்னே இடலாம். எடுத்துக்காட்டாக இரா˚சசுத்தான் எனலாம். எக் குறியும்,கிரந்தமும் இல்லாமல் வடவெழுத்து ஒரீஇ என்னும் முறைப்படி தமிழில் எழுதுவதுதான் ஏற்புடையதாக இருக்கும் என்பது என் கருத்து. கிரந்தப் பயன்பாடு பற்றித் தெளிவான கொள்கை அல்லது பரிந்துரை விக்கியில் இருக்க வேண்டும். அதுவே நல்லது. --செல்வா 20:10, 12 மே 2009 (UTC)
நானும் பல்வேறு காரணங்களால் சில இடங்களில் மட்டும் இத்தகைய குறியீடுகளைப் பயன்படுத்தலாமென்று நினைக்கிறேன். தமிழ்முறையில் எழுதி ஒலிப்பில் நெறிபிறழும் வகையில் இருந்தால் (சொல்லின் முதலில் வல்லினம் மெலிந்து வருவது போன்ற பிறழ்ச்சிகள்) அதுவும் தீங்கிழைக்கும். இதுபோன்ற குறியீடுகள் இருந்தால் வழக்கமான நெறிகளில் இருந்து விலகியிருப்பதைச் சுட்ட முடியும். அவ்வாறு பயன்படுத்துகையில் ஒலிப்புத் துல்லியத்தையும் யாரும் காரணமாகக் காட்ட இயலாத வகையில் அமையும். நிறைகுறைகளை அலசி ஒரு முடிவெடுப்போம். மற்றபடி, தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க இப்போதைக்கு இந்தப் பெயர்மாற்றம் நல்லதுதான். -- சுந்தர் \பேச்சு 02:43, 13 மே 2009 (UTC)
நான் முதலில் பரிந்துரைத்ததின் காரணமே இப்படியெல்லாம் குழப்பம் வரும் என்றும், அப்படியே ஒலிப்பைக் காட்ட வேண்டியிருப்பின் ஜ மட்டும் ஏன், G,D, Dh, B, F ஆகியவற்றையும் குறிக்கலாமே ஒரே குறியால் என்றே முன் மொழிந்தேன். ஆனால் நீங்கள் கூறுவது போல அதுவும் தேவை இல்லை என்பதே சரியான முடிவாக இருக்கக்கூடும்.--செல்வா 04:28, 14 மே 2009 (UTC)
இராச்சசுத்தான் ஒலிப்பை இணைத்துள்ளேன். இவ்வொலிப்பு, அம்மாநிலத்தவரின் ஒலிப்பு அல்ல. அம்மாநிலத்தவரின் குரலிலேயே, ஒலிக்கோப்பை உருவாக்க முயலுகிறேன்.18:16, 1 செப்டெம்பர் 2011 (UTC)உழவன்+உரை..


இராச்சச்சுத்தான் என்றால் என்ன?தொகு

இது தான் மிக நீண்ட சர்ச்சை வந்து இங்கே மாற்றப்பட்டதே மீண்டும் எதற்கு? இந்தப் பெயர் மாற்றப்பட்டது? இதன் அர்த்தம் என்ன? இதற்கான ஆதாரம் எங்கே? யார்? மாற்றியதோ அவர்கள் இதை காட்ட வேண்டும்!!....ஒரு நாட்டின் பெயரை பாடப் புத்தகத்தில் இல்லாதப் பெயரை எப்படி? மாற்றலாம்? --செல்வம் தமிழ் (பேச்சு) 06:06, 15 மார்ச் 2013 (UTC)

தற்போது ராஜஸ்தான் என்ற ஊர் பெயரை என்னவோ இராச்சசுத்தான் என மாற்றியிருப்பது தான்தோன்றித் தனமாகப் படுகின்றது. ஒரு பெயர்ச்சொல்லை தமிழ்ப் படுத்தலாம் என்றாலும், அது தமிழர்களின் நாவில் வருமாறல்லவா தமிழ்ப் படுத்த வேண்டும். அது மட்டுமின்றி தற்காலத் தமிழில் வெகுமக்கள் ராஜஸ்தான் என்பதை ராஜஸ்தான் என்று தான் அறிகின்றார்கள். இது சரியா தவறா என்பதை விட விக்கி என்பது ஒரு கலைக்களஞ்சியமே தவிர மொழிவளர் ஆய்வுக்கூடும் கிடையாது. ராஜஸ்தான் என்ற சொல்லிற்கு தமிழ் வழங்கு சூழலில் வேறு ஏதாவது சொல் எதாவது ஒரு காலத்தில் பயன்பட்டனவா என ஆராய்ந்து கூட பார்க்காமல், இராச்சசுத்தான் என மாற்றியிருப்பதை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியே விஞ்சியது. இவ்வாறாக மாற்றும் அதிகாரத்தை ஒரு சிலர் எடுத்துக் கொண்டு தவறாகப் பயன்படுத்துவதாகவே எனக்குப் படுகின்றது. --Winnan Tirunallur (பேச்சு) 00:31, 13 ஆகத்து 2015 (UTC)
ராஜஸ்தான் என்ற சொல்லை தமிழில் மூன்று விதமாக நாம் பயன்படுத்தலாம். ஒன்று அதை திசைச் சொல்லாக அப்படியே கடன் வாங்கி ராஜஸ்தான் என்றே பயன்படுத்துவது. தற்காலத் தமிழ் ஊடகங்கள், வெகுமக்கள், நூல்கள் என பலவற்றிலும் இச் சொல்லே பயன்பாட்டில் இருப்பதால் இதை தொடர்ந்து பயன்படுத்தலாம். --Winnan Tirunallur (பேச்சு) 00:31, 13 ஆகத்து 2015 (UTC)
இரண்டாவது வழிமுறை அதை தமிழ்படுத்தி பயன்படுத்துவது, ஜ, ஸ, போன்ற வடமொழி எழுத்து வருமிடத்து அதை சங்கக் காலம் தொட்டே தமிழ் படுத்தியிருக்கின்றனர். அவ்வாறான தமிழ்ப் படுத்தல்கள் வெகுமக்கள் பயன்படுத்தக் கூடியதாகவும், வாசிக்க எளிமையானதாகவும் இருந்திருக்கின்றது. கஜபாகு என்பதை கயவாகு என சிலப்பதிகாரம் எழுதியிருக்கின்றது. ஜனம் என்பதை சனம் என தமிழில் மாற்றி பயன்படுத்தி வந்திருக்கின்றோம். ஆக, ஜ என்பதற்கு ய, ச ஆகிய எழுத்துக்கள் மாற்றாக வருகின்றது. ராஜா என்ற சொல்லானது பொதுத் தமிழில் ராசா என மாறி பயன்பட்டு வந்திருக்கின்றது. ராஜ என்பது ராச என மாறும். ஸ என்ற வடமொழி எழுத்துக்கு தமிழில் பொதுவாக ச என்ற எழுத்தே பயன்படுகின்றது. ஆனால் அது ஸ் என மாறும் போது தமிழில் அதற்கு மாற்று எழுத்து கிடையாது. இதற்கு சு என போட்டு எழுதலாம் என யார் தொடங்கி வைத்தது எனத் தெரியவில்லை, விக்கிபீடியா முழுவதும் ஸ் வருமிடத்து சு என எழுதி வருகின்றனர். இதனால் வாசிப்பதற்கு பெரும்பாடாக இருக்கின்றது. பழந்தமிழில் ஸ் என வருமிடத்து அது மொழிமுதலில் வரும் போது பொதுவாக செ, சொ என மாறிவிடுகின்றது. மொழியிடை வரும் போது தமிழ் இலக்கியங்களில் ட் ஆக மாறுவதை காண முடிகின்றது. கிஸ்கிந்தை என்பதை கம்பர் கிட்கிந்தை என எழுதியிருக்கின்றார். அப்படி நோக்கினால் ராஜஸ்தான் = ராசட்தான் என்று தானே மாறியிருக்க வேண்டும். ராஜஸ்தான் என்ற சொல்லை பிறமொழியே அறியாத ஒரு பாமரத் தமிழனிட சொல்லி திருப்பிச் சொல்ல சொல்லுங்கள், அவர் வாயிலிருந்து வருவதே மெய்யான தமிழாக்கம் ஆகும். ராஜஸ்தான் என்பதை ராசத்தான் என்று தான் சொல்வது எளிமையாக இருக்கும். அதனால் ராஜஸ்தான் என்பதை சரியாக தமிழ்ப் படுத்தினால் அது ராசத்தான் என்று தான் வருமே ஒழிய, இராச்சசுத்தான் என்று வராது. --Winnan Tirunallur (பேச்சு) 00:31, 13 ஆகத்து 2015 (UTC)
மூன்றாவது வழிமுறை அந்த சொல்லின் பொருளை உள்வாங்கி தமிழாக மாற்றுவது, எடுத்துக்காட்டுக்கு பேஸ்புக் என்ற சொல் முகநூல் என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராஜ + ஸ்தான் என்ற இரு சொல்லினையும் தமிழில் அரச + நாடு என்று தான் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இதில் அரச என்ற சொல் ராஜ என்ற வடசொல்லாக மாறியதாகவும், ராஜ என்ற வடசொல் அரச என்ற தமிழ் சொல்லாக மாறியதாகவும் இருவேறு கருத்திருந்தாலும், அரச என்ற சொல்லே ராஜ என்ற வடசொல்லிற்கு நிகராக தமிழ் சமூகம் பயன்படுத்தி வந்திருக்கின்றது. --Winnan Tirunallur (பேச்சு) 00:31, 13 ஆகத்து 2015 (UTC)
எந்த வகையில் நோக்கினாலும் இராச்சசுத்தான் என்ற சொல் என்றுமே வழக்கிலும் இருந்ததில்லை, வெகுமக்களாலும் பயன்படுத்தப்பட்டதும் இல்லை. வெகுமக்கள் விளங்கிக் கொள்ளுமளவிலும் இல்லை.--Winnan Tirunallur (பேச்சு) 00:31, 13 ஆகத்து 2015 (UTC)

இராசத்தான் என மாற்ற விருப்பம்தொகு

 1. @Winnan Tirunallur: இரண்டாவது வழிமுறையைப் பின்பற்றுவதே இங்கு நன்று. ராஜஸ்தான்-இராசத்தான் என் அமைவதே (ரகரம் மொழிக்கு முதல் வராது.) பொருத்தமாகத் தோன்றுகின்றது. விண்ணன் கூறியபடி, இராச்சசுத்தான் என்பதை விட இராசத்தான் பொருத்தமாக இருக்கும். இங்கும் இது பற்றிக் கூறியிருந்தேன். --மதனாகரன் (பேச்சு) 01:41, 16 ஆகத்து 2015 (UTC)
 2. இராசத்தான் என்பது பொருத்தமாக உள்ளது.--Kanags \உரையாடுக 01:52, 16 ஆகத்து 2015 (UTC)
 3. //ராஜா என்ற சொல்லானது பொதுத் தமிழில் ராசா என மாறி பயன்பட்டு வந்திருக்கின்றது.// என்ற அடிப்படையில், இராசத்தான் என மாற்ற உடன்படுகிறேன். மூல ஒலி முழுவதையும், ஒலிபெயர்த்தல் அவசியமன்று. நமது பல தமிழ் சொற்களை, பிற மொழியினர் அவரவர் வசதிக்கு ஏற்ப, மாற்றம்(எ.கா. திருவல்லிக்கேணி-->'ட்ரிப்ளிகேன்') செய்தது போல, சில மூல ஒலிகளை (இங்கு 'ஸ்') விடலாமே? இங்கு மொழியாக்கமே முக்கியமெனக் கருதுகிறேன். மேலும், நமக்கு சில ஒலிகள் தேவையில்லை என்பதை நமது கிளவியாக்க வரலாற்றில் காண இயலுகிறது. --உழவன் (உரை) 02:48, 16 ஆகத்து 2015 (UTC).
 4. இராசத்தான் என்றிருப்பதே முறை.--பாஹிம் (பேச்சு) 23:09, 22 ஆகத்து 2015 (UTC)
தமிழ் முறை என்பது தமிழ் நாட்டு அரசாங்கத்தின் முறையல்ல. தமிழ் நாட்டு அரசாங்கம் தமிழுக்கு முன்னுதாரணமுமல்ல. சென்னை போன்ற நகரங்களில் உள்ள பேச்சு வழக்கும் தமிழுக்கு முன்னுதாரணமல்ல. ஆங்கிலம் தெரியாதவர்கள் அவர்களது தமிழை (தமிழ் என்றுதான் அவர்கள் கூறிக் கொள்கிறார்கள்) விளங்கிக் கொள்வது கடினம். ஒரு காலத்தில் வடமொழியை தமிழெழுத்துக்களில் எழுதுவதற்காக உருவாக்கப்பட்டவைதான் ஸ, ஹ, ஜ ஷ, ஶ போன்ற எழுத்துக்கள். இவை தமிழெழுத்துக்களோ தமிழ் மொழிக்குரிய எழுத்துக்களோ அல்ல. தமிழெழுத்துக்கள் என்பவை 12 உயிரும் 18 மெய்யும் 216 உயிர்மெய்யும் 1 ஆய்தமும் சேர்ந்த 247 எழுத்துக்கள் மாத்திரமே. இவையல்லாத ஏதாவதொரு எழுத்து பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தமிழல்ல என்பது உறுதி. கிரந்தம் கலந்தால் அது தமிழல்ல. தமிழ் நாட்டில் எழுதினாலும் தமிழ் நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தாலும் பிழை பிழையே. தமிழைத்தான் தமிழென்று கூற முடியும். ஆங்கிலத்தையோ வடமொழியையோ வேற்றுமொழிகளையோ அல்ல. தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழை மட்டும் ஏற்கும் உரிமை இங்குள்ள விக்கிப்பீடியர்களுக்கு இருக்கிறது. வேற்று மொழியின் ஓசை தமிழுக்கு நெருங்கி வரின், அதைத் தமிழ் முறைக்கு ஏற்றவாறு பயன்படுத்துவதே தகும். வேற்று மொழிச் சொல்லைத் தமிழில் எழுத்துப் பெயர்த்து எழுதும் போது ஒத்து ஒலிக்கும் சொற்கள் பொருண்மயக்கம் தருமாயின் அத்தகையவற்றுக்கு இந்த விதிகளிலிருந்து விலக்களிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.--பாஹிம் (பேச்சு) 23:58, 22 ஆகத்து 2015 (UTC)
தோழர் @Fahimrazick: அவர்களுக்கு வணக்கம்,
1. முதலில் கிரந்த எழுத்துக்களையே தமது சொந்தப் பெயரில் பயன்படுத்திக் கொள்கின்ற நீங்கள் கிரந்தம் வேண்டாம் என பேசுவதே எனக்குப் பெரும் நகைமுரணாக இருக்கின்றது, அது போகட்டும், அது தங்களது தனிப்பட்ட சுதந்திரம். --Winnan Tirunallur (பேச்சு) 13:15, 24 ஆகத்து 2015 (UTC)
2. எந்தவொரு மொழிக்கும் குறிப்பிட்ட எழுத்துக்களே பயன்பாட்டில் உள்ளன என்பதால் அந்த எழுத்துக்களுக்குள் மட்டுமே அந்நிய மொழிச் சொற்களை எழுத முடியும் என்பதை நாமும் அறிவோம். இந்த ஒரு காலத்தில் என்ற வரலாற்று மொழியியல் பாடங்கள் தேவைப் படுவன இல்லை, ஏனெனில் இவற்றை யாமும் பள்ளி முதல் கல்லூரி வரை கற்றுவிட்டே வந்திருக்கின்றோம், அதுவும் போகட்டும். --Winnan Tirunallur (பேச்சு) 13:15, 24 ஆகத்து 2015 (UTC)
3. ஆனால் ஒன்றை தாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் சில மொழிகளில் சில எழுத்துக்கள் இடைக்காலங்களில் சேர்ந்து கொள்கின்றன. அதனை கூடுதல் எழுத்துக்களாக தேவைக்கேற்ப அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆங்கிலத்தில் கூட சில பிரஞ்சு சொற்களை பயன்படுத்துகின்ற போது அதன் diacritic marks இருப்பதை கவனிக்கலாம். ஆங்கிலம் மட்டுமல்ல சீன மொழி, ஜப்பானிய மொழிகளில் கூட அந்நியச் சொற்களை எழுத கூடுதல் எழுத்துக்களை குறிப்பிட்ட சில இடங்களில் பயன்படுத்துகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.--Winnan Tirunallur (பேச்சு) 13:15, 24 ஆகத்து 2015 (UTC)
4. தமிழில் கிரந்த எழுத்துக்கள் வேண்டாம் என வெகுசிலர் கூறினாலும் தமிழ் புத்தகங்கள், தமிழ் பத்திரிக்கைகள் முதல் இன்று தமிழ் ஒருங்குறி வரையில் ஜ, ஷ, ஸ, ஹ போன்ற கிரந்த எழுத்துக்களுக்கு இடமளிக்கப்பட்டு இருக்கின்றன. அதே போல தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்களில் பெரும்பான்மையினர் இந்த எழுத்துக்களை அன்றாடம் எதோ ஒரு வகையில் பயன்படுத்தியும் வருகின்றனர். இந்த எழுத்துக்களை கடந்த 1500 ஆண்டுகளாக தமிழ் பேசும் சமூகம் கல்வெட்டுக்கள் முதல் பல இடங்களில் பயன்படுத்தியும் வந்திருக்கின்றனர். இந்த எழுத்துக்களை மக்களால் அடையாளம் காணக் கூடியதாகவும், அதை புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இன்றிருக்கின்றது. --Winnan Tirunallur (பேச்சு) 13:15, 24 ஆகத்து 2015 (UTC)
5. எவ்வாறு கிரந்த எழுத்துக்களை பயன்படுத்த வேண்டாம் என்பதற்கு உங்களுக்கு உரிமை இருப்பதாக சொல்லுகின்றீர்களோ, அதே உரிமை கிரந்த எழுத்துக்களை தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கும் முழு உரிமை இருக்கின்றது. அதற்கான வாய்ப்புக்களை கணனித் தமிழும் வழங்கியிருக்கின்றது. கணனியில் இந்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என்றால் நிச்சயம் யாமும் அதைப் பயன்படுத்தப் போவதில்லை. ஆனால் வாய்ப்பு இருக்கின்றது, தமிழர்கள் பயன்படுத்துகின்றார்கள், தமிழ் இணைய தளங்கள் பயன்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமில்லை இலங்கையிலும் பாடப்புத்தகங்கள், அரசு இணையதளங்கள் என எங்கும் பயன்படுத்தப்பட்டே வருகின்றன. அதனால் கிரந்தத்தை பயன்படுத்தக் கூடாது என நீங்கள் சொல்வதில் நியாயமே இல்லை. உங்களுக்கு பயன்படுத்த விருப்பமில்லையென்றால் பயன்படுத்தாதீர்கள், ஆனால் பயன்படுத்த விரும்புவோரை தயவு செய்து தடுக்காதீர்கள். எமக்கான கருத்துச் சுதந்திரத்தை வழங்கப்பட வேண்டும் என்பதே எனது பேரவா.--Winnan Tirunallur (பேச்சு) 13:15, 24 ஆகத்து 2015 (UTC)
6. தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் தமிழ் உயர்வானதோ, தாழ்வானதோ என நான் சொல்ல வரவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் தமிழானது இங்குள்ள ஏழரைக் கோடி மக்களாலும், கருநாடகத்தில்லுள்ள 40 லட்சம் தமிழர்களாலும், கேரளத்திலுள்ள 12 லட்சம் தமிழர்களாலும், மலேசியாவிலுள்ள 18 லட்சம் தமிழர்களாலும், சிங்கப்பூரிலுள்ள 2 லட்சம் தமிழர்களாலும், அமெரிக்காவிலுள்ள 2 லட்சம் தமிழர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களே தமிழ் விக்கிபீடியாவை அதிகளவு நுகர்வோராக இருக்கின்றனர். அவர்களுக்கு புரியும் மொழியில் எழுதுவதில் தவறில்லை. மீண்டும் நான் இங்கு நினைவுப் படுத்த விரும்புவது விக்கிபீடியா ஒரு அறிவுக் களஞ்சியம், இது மொழியாராய்ச்சிக் கூடம் கிடையாது. --Winnan Tirunallur (பேச்சு) 13:15, 24 ஆகத்து 2015 (UTC)
7. தமிழ்நாட்டு அரசைப் பற்றியும், சென்னையின் வட்டார மொழியைப் பற்றியும் இழிவான முறையில் கருத்தைப் பதிவு செய்துள்ள உங்களுக்கு எனது வன்மையான கண்டனங்கள். ஒவ்வொரு வட்டார வழக்கிற்கும் ஒருவகையிலான தன்மை இருக்கும். அதை இழிவானதாகவோ, உயர்வானதாகவோ நாம் கருத வேண்டியதில்லை. தமிழறிஞர்களான வள்ளுவர் முதல் திருவிக உட்பட பல பொன்னானவர்களை வழங்கிய மண் சென்னை என்பதை மறந்துவிடக் கூடாது. தாங்கள் சார்ந்துள்ள மட்டகளப்பின் வட்டாரத் தமிழில் கூட பல தனித் தன்மைகள் இருக்கின்றன ழகரம் ளகரமாகவும், கிறு, கின்று போன்ற இடைநிலைச் சொற்கள் கூட கி என மாறி ஒலிக்கப்படுகின்றது அதனால் அதை மட்டம் தட்டி நாம் என்றுமே பேசியதில்லை. இங்கு வேண்டுமென்றே திசைத்திருப்பும் நோக்கில் வட்டார மொழி பற்றிய இழிவான கருத்துக்களை தாங்கள் கொண்டு வருவதாக தோன்றுகின்றது. ஆக, அவ்வாறான ஒரு பேச்சுக்கு தங்களைப் போன்ற சான்றோர்கள் ஊக்கமளிக்கக் கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.--Winnan Tirunallur (பேச்சு) 13:15, 24 ஆகத்து 2015 (UTC)
8. பொதுவழக்கில் பயன்பட்டுக் கொண்டிருக்கும் பெயர்ச்சொற்களை அவ்வாறே எடுத்தாள்வதே தற்போதைய நிலையில் ஆரோக்கியமான போக்காக இருக்கும் என நான் கருதுகின்றேன். அதே சமயம் தனித் தமிழ் ஆர்வலர்களின் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் அடைப்புக்குறிகளுக்கும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தனித் தமிழ் பெயர்களையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். இதன் மூலம் பொதுவழக்கில் மக்களால் அறியப்பட்டு வரும் ஒரு பெயர்ச்சொல்லிற்கு தனித் தமிழ் சொல்லொன்றும் ஈடாக இருக்கின்றதை அவர்கள் அறிய வழிவகுக்கும். --Winnan Tirunallur (பேச்சு) 13:15, 24 ஆகத்து 2015 (UTC)
9. ராஜஸ்தான் என்ற சொல்லையே தமிழ்நாடு, கருநாடகம், கேரளம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ்ப் பள்ளி மாணவர்களும், தமிழ் ஊடகங்களும் பயன்படுத்துகின்றன. இதனையே நாமும் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் ராஜஸ்தான் என்ற சொல்லை கூகிளில் எழுதி தேடுவோருக்கு அதைப் பற்றிய மேலதிக தகவல்களை விக்கிபீடியா ஊடாக அறிந்து கொள்ள உதவும். அதே சமயம் தனித் தமிழார்வலர்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் அடைப்புக்குறிக்குள் இராசத்தான் என்ற தனித்தமிழ் மயப்படுத்திய சொல்லையும் சேர்த்து எழுதலாம்.--Winnan Tirunallur (பேச்சு) 13:15, 24 ஆகத்து 2015 (UTC)
10. இதே வழிமுறையை ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஸ்பெயின், கிருஷ்ணகிரி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என ஏற்கனவே புழக்கத்தில் வந்துவிட்ட பெயர்ச்சொற்களுக்கும் பயன்படுத்த வேண்டும். பிரான்சு, சுவீடன் போன்ற பெயர்ச்சொற்கள் ஏற்கனவே தமிழ்ப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுவதால் அவற்றில் நாம் மாற்றம் செய்ய வேண்டியதில்லை. புதிதாக ஏற்கனவே புழக்கத்தில் இல்லாத அந்நியப் பெயர்ச்சொற்களை தமிழில் எழுதும் போது தமிழின் ஒலியமைதி கெடாதவாறு நல்ல தமிழில் ஒலிமாற்றம் செய்து எழுதலாம். இதில் சிக்கல்கள் எழுகின்ற சமயம் தமிழ் வல்லுநர்கள், தமிழாசிரியர்கள், தமிழாய்வாளர்கள் போன்றோரது மேன்மையான ஆலோசணையை நாடி அவர்களது வழிகாட்டலில் இயங்குவது மேலும் உதவி புரியும். --Winnan Tirunallur (பேச்சு) 13:15, 24 ஆகத்து 2015 (UTC)
கிரந்தம் தொடர்பில் பொதுவாக இங்கே உரையாடுவோம். விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு/கொள்கை வரைவு --மதனாகரன் (பேச்சு) 15:26, 24 ஆகத்து 2015 (UTC)
 1. @Winnan Tirunallur:,
எனது பெயர் தமிழ்ப் பெயரன்று. நான் அதைத் தமிழ்ப்படுத்தவுமில்லை. ஆனாலும் எனது பெயரிலிருந்து கிரந்தத்தை நீக்கி எழுதுவது எனக்கு ஏற்புடையதே.
நீங்கள் நினைப்பது போல் நான் தமிழ் நாட்டு அரசாங்கத்தையோ சென்னையையோ இழிவாக்கவில்லை. உள்ளதை உள்ளவாறு சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். தமிழ் நாட்டு அரசாங்கம் தமிழுக்கு முன்னுதாரணமல்ல. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
திருவள்ளுவர் சென்னையிற் பிறந்தாரா? ஆதாரம்?
நான் இங்கு மொழியாராய்ச்சி செய்யச் சொல்லவில்லை. எழுதும் மொழியில் திறம்பட எழுத முயல்வது தவறல்லவே?
கிரந்தக் கலப்பின்றித்தான் எழுத வேண்டுமென்று யாரும் உங்களை வற்புறுத்தியதாக நான் கருதவில்லை. கிரந்தத்தைப் பயன்படுத்தினாலும் சில சொற்களில் மயக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளமையை நான் அறிவேன். விக்கிப்பீடியாவில் எழுதத் தொடங்கிய போது நானும் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்திக் கொண்டே இருந்தேன். பின்னர் நற்றமிழில் எழுதுவது சிறப்பு என்பதை உணர்ந்து கிரந்த எழுத்துக்களைத் தவிர்க்க முயல்கிறேன்.
யேர்மனி, யப்பான் என்றவாறு எழுதும் வழக்கம் இலங்கையிலிருக்கிறது.

--பாஹிம் (பேச்சு) 06:32, 25 ஆகத்து 2015 (UTC)

தோழர் @Fahimrazick: அவர்களுக்கு வணக்கம், சென்னையின் வட்டார வழக்கை வேண்டுமென்றே இப் பேச்சுப் பக்கத்தில் கொண்டு வரக் காரணம் என்ன? சரி போகட்டும். தமிழ் நாட்டு அரசாங்கம் தமிழ் மொழிக்கு முன்னுதாரணமல்ல அதே சமயம், தாங்கள் சொல்வதும் தமிழுக்கு முன்னுதாரணமல்ல, தமிழ் விக்கிபீடியா ஒருசிலரது தனிப்பட்ட சொத்துமல்ல. 7 கோடி தமிழர்களுக்கு புரியும் மொழியில் இந்த அறிவுக் களஞ்சியம் அமைய வேண்டும் என்பதும், அதை அவர்கள் அறிவு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ராஜஸ்தான் என்றால் தான் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை புரிந்து கொள்கின்றார்கள். அந்த தலைப்பில் தான் தேடியந்திரங்களில் அவர்கள் தேடுவார்கள், அதை வைத்துக் கொண்டு தான் மேலதிக தகவல்களைப் பெறுவார்கள், அதனைத் தான் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தி கூடுதல் மதிப்பெண்கள் பெறுவார்கள், பெரியவர்களுக்கும் ராஜஸ்தான் பற்றி மேலதிகமாக அறிந்து கொள்ள அதுவே உதவும். இங்கு நான் சொல்ல விழைவது ராஜஸ்தான் என்று எழுதினால் மட்டுமே அது விக்கிபீடியா பயன்பாட்டாளர்களுக்கு பயன் மிக்கதாக அமையும். இராசச்சுத்தான் என்றால் அது ஒரு சிலரோடு குறுகிவிடும். இதில் இலக்கண சரி பிழைகள் பற்றி நான் விவாதிக்கவில்லை. இலக்கணப் பாடங்கள் எடுக்க வேண்டிய தளமும் இதுவல்ல. யேர்மனி, யப்பான் ( யப்பான் என்பதே இலக்கணக் குற்றம் அது இயப்பான் என வரவேண்டும் ) என்ற சொற்கள் வட்டார வழக்குடையவை, அல்லது இலங்கையில் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியவை, அல்லது தனித்தமிழ் விரும்பிகள் சிலரால் மட்டுமே புரிந்துக் கொள்ளக் கூடியவை, எப்படி சென்னைத் தமிழ் தமிழுக்கு முன்னுதாரணமில்லை என நீங்கள் சொல்கின்றீர்களோ, அதே போல இலங்கைத் தமிழும் தமிழுக்கு முன்னுதாரணமில்லை. நான் சொல்ல விழைவது பெரும்பான்மைத் தமிழர்களுக்கு புரியும் வண்ணம் சொற்களைப் பயன்படுத்துங்கள். உங்களது செந்தமிழ் பேரன்பை தனிப்பட்ட வலைப்பதிவுகள், சொந்தக் கட்டுரைகள், தனிப்பட்ட வாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங்குங்கள். அதை பிரபலமாக்குங்கள், அப்படி பிரபலமடைந்தால் தமிழ் விக்கியிலும் அது செந்தமிழாக தானாகே மாறிவிடும். அதை விட்டு அறிவுக் களஞ்சியமான இங்கு வந்து சொந்த விருப்பங்களின் அடிப்படையில் மொழியாராய்ச்சிகளை மேற்கொள்ளாதீர்கள். தமிழ் விக்கி என்பது இதை வாசிக்கும் அனைவருக்கும் புரியும்படியானதாக இருக்க வேண்டும். இது தான் விக்கிபீடியாவின் அடிப்படைக் கொள்கையும் கூட. --Winnan Tirunallur (பேச்சு) 06:52, 25 ஆகத்து 2015 (UTC)

இராஜஸ்தான் என மாற்ற விருப்பம்தொகு

 1. இராஜஸ்தான் என்ற பொதுப்பெயருக்கு மாற்றலாம். அல்லது இராச்சசுத்தான் என இப்படியே விட்டுவிடலாம் இதனால் @Winnan Tirunallur: போன்ற பல பொதுப்பயனர்கள் தன்னாட்சி மொழிநடை தொடர்பாகத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த மிகவும் உதவும். எதிர்காலத்திலொரு நாள் சமூகமாற்றம் ஏற்படலாம்--நீச்சல்காரன் (பேச்சு) 04:14, 16 ஆகத்து 2015 (UTC)
தமிழ் எழுத்துகளில் எழுதுவது தன்னாட்சி மொழிநடையா? ராசத்தான் என்று எழுதினால் கூட ஏற்கலாம். ராஜஸ்தான், இராஜஸ்தான்? இங்கு ஸ் என்பதை அடுத்துவரும் தகரத்தை எப்படிப் பலுக்குவது? ம்பி, மம், வந் போன்றவற்றில் வரும் எத்தகரமாகக் கொள்வது? ஸ் எந்த இனத்திற் சேரும்? வல்லினமா? இடையினமா? மெல்லினமா? தமிழ் நெடுங்கணக்கில் இந்த ஆறு எழுத்துகள் உண்டா? பொதுப்பெயரென்று இன்றைய சில செய்தித்தாள்களின் தமிங்கில நடையைப் பின்பற்றக் கூறுகின்றீர்களா? மேற்கூறிய செய்தித்தாள்களில் வரும் திரைப்படத் திறனாய்வுகளையும் சில தமிழ்த் (?) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்ள ஆங்கில அகரமுதலியைப் புரட்ட வேண்டியிருக்கும் அவலத்தை எங்குப் போய்ச் சொல்ல? --மதனாகரன் (பேச்சு) 05:01, 16 ஆகத்து 2015 (UTC)
மிதமிஞ்சிய கலப்புத் தமிழை நமது ஊடகங்கள் ஊக்குவித்து வருகின்றன. ஊடகங்களை கட்டுபடுத்தும் அதிகாரம் தமிழ்நாடு அரசிற்கு இல்லை என்பதால் இந்த அவல நிலை தொடரவே செய்கின்றது. அதே சமயம் கடுமையான செந்தமிழ் நடை என்பதையும் நான் எதிர்க்கின்றேன். அது பொது மக்களின் மொழியிலிருந்து தமிழை எதோ சமஸ்கிருத மொழியைப் போல தூரமாக்கிவிடும். இராஜஸ்தான் என்ற சொல்லை இராசத்தான் என எழுதுவதால் பெரியளவில் குழப்பங்களோ, மயக்கமோ வராது என்பதால் அதை நான் ஆதரிக்கின்றேன். அதே சமயம் எல்லா இடங்களிலும் ஸ் என்ற ஒலியை நம்மால் விட்டுவிட முடியுமா என்பது ஐயமே. பல ஐரோப்பிய பெயர்ச்சொல்களில் அதிகளவு ஸ் வருகின்ற போது ஓரிரு இடங்களில் அதைப் பயன்படுத்தியே ஆக வேண்டியுள்ளது என்பதையும் நாம் மறக்கக் கூடாது. க, ச, ட, த, ப என்னும் ஐந்து வல்லினங்களுக்கும் மாற்றொலிகள் இருக்கின்றன. அவை முறையே Ga, Sa, Ta, Dha, Ba என சொல்லிடையில் ஒலிக்கும். அதனால் இந்த ஒலிகளைக் கொண்ட பிறமொழிச் சொற்களை தமிழுக்கு மாற்றும் போது க, ச, ட, த, ப, என்ற எழுத்துக்களைப் பயன்படுத்தலாம். ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றை முறையே ச, ய, ழ, ட, க ( கிஷான் > கிழான், கஷாயம் > கிழாயம், மேஜை > மேசை, ஜன்னல் > யன்னல், மஹா > மகா, கஸ்யப > கசியப, ஸ்வர்ணம் > சொர்ணம், ஸ்வந்ததிரம் > சுதந்திரம், மகிஷா > மகிசா, மகிஷ் > மகிழ் ) ஆகிய எழுத்துக்களைக் கொண்டு எழுத முனையலாம், ஆனால் அப்போது கூட அது தமிழின் சொல்லமைதியைக் கெடுக்காமலும், யாருக்கும் வாயில் நுழையக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவ்வாறு வாயில் நுழைய முடியாமல் ( Stephen < ஸ்டீபன், Stratsbourgh > ஸ்திராஸ்பேர்க், Australia < ஆஸ்திரேலியா ) போகும் பட்சத்தில் ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. --Winnan Tirunallur (பேச்சு) 05:51, 16 ஆகத்து 2015 (UTC)
இராசசுத்தான் என்றாலும் சரியாக இருக்கிறது --கி.மூர்த்தி 06:00, 16 ஆகத்து 2015 (UTC)
Stephen-தீபன், Australia-ஆத்திரேலியா, Stratsbourgh-திராற்சுபேர்கு என்று எழுதலாம். ஸ்தானம்-தானம், அஸ்திவாரம்-அத்திவாரம் என்பவற்றைப் போல் எனலாம். இசுட்டீபன் என்று எழுதுவதை விட, தீபன் எனலாம். இலங்கையில் Scandium-காந்தியம் என்றே எழுதப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 06:30, 16 ஆகத்து 2015 (UTC)
ஸ்வர்ணம்-சொர்ணம் என்றெழுதுவது இலக்கண முறைக்கு மாறானது. தனிக்குறிலையடுத்து ரகர மெய் வராது. ரகர மெய்யைத் தொடர்ந்து ணகர மெய் வரவும் முடியாது. கர்ணன்-கன்னன் (கண்ணனுடன் குழப்பத்தைத் தவிர்க்க னகரத்தைப் பயன்படுத்தியிருக்கலாம்.) என்று பயன்படுத்தப்படுகின்றது. ஸ்திராஸ்பேர்க் எவ்வாறு வாயில் நுழைகிறதென அறிய விருப்பம். --மதனாகரன் (பேச்சு) 06:39, 16 ஆகத்து 2015 (UTC)
தனிக்குறிலையடுத்து ரகர மெய் வராது என்பது தவறு. மற மன்னன் காயும் புள்ளிக் கர்க்கடம் என்று கம்பன் வர்ணிக்கிறார்(கர்க்கடம் என்றால் நண்டு). அதனால் தான் முன்பு கூறியது போல ஆய்வு செய்ய உகந்தவர்கள் நாம் அல்ல என்று மீண்டும் கூறுகிறேன். நமது அரைகுறை தமிழறிவால் சண்டையிடுவதைவிட அனைத்துலக விக்கிச் சமூகம் ஏற்றுக் கொண்ட பொதுப்பெயர் வழி பெயரிடலாம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பெயரைப்பயன்படுத்தலாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாய்வு செய்து தன்னாட்சியான புது நடையை வழங்கலாம் என்று முந்தைய உரையாடல்களில் கூறப்பட்டதாலேயே, இங்கு தன்னாட்சி என்று சுட்டிக்காட்டுகிறேனே தவிர தமிழெழுத்திற்கல்ல.-நீச்சல்காரன் (பேச்சு) 07:21, 16 ஆகத்து 2015 (UTC)
தனிக்குறிலையடுத்து ரகர மெய் வராது என்பது தவறு. சொல்லப் போனால், 12-ம் நூற்றாண்டில் எழுந்த நன்னூல் இலக்கண மரபிலிருந்து தற்காலத் தமிழ் பலவகையில் வளர்ச்சி கண்டுள்ளது. தொல்காப்பியத்திற்கும் நன்னூலுக்கும் இடையிலேயே தமிழ் பல வளர்ச்சியடைந்திருப்பதைப் பார்க்கின்றோம். அதே போல நன்னூலுக்கும் தற்காலத் தமிழுக்கும் பலவகை வளர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது. தமிழில் கிரந்தம் தவிர்ப்பு என்பது நமது மரபு, அதுவே தமிழின் தனித்துவம் என்பதை நானும் ஏற்கின்றேன். ஆனால் நன்னூல் சொல்வதைப் போலவே ரகரம் மொழிமுதல் வராது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தற்காலத் தமிழில் ரகரம், டகரம் மொழி முதலில் எழுதப்படுகின்றன. அது ஒரு புது மரபைத் தோற்றுவித்திருக்கின்றது. ஸ்வர்ணம் - சொர்ணம் ஆவது தமிழில் இயல்பே. மொழி என்பது மக்கள் பேசுவதோடும் ஒத்துப் போக வேண்டும், இலக்கணத்திலிருந்து தூரமாகிவிடக் கூடாது. இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு நிலையில் இருக்க வேண்டும். ராஜஸ்தான் என்பதை ராஜஸ்தான் என்றோ, இராசத்தான் என்றோ எழுதுவதில் தவறில்லை. ஆனால் இராசச்சுத்தான் என எழுதுவது தான் மிகக் கொடுமையாகப் படுகின்றது. நடைமுறையில் உள்ளதையோ, மக்களுக்கு எளிமையானதையோ தான் நாம் பின்பற்ற வேண்டும். அதுவே மொழிவளர்ச்சிக்கு வித்திடும். --Winnan Tirunallur (பேச்சு) 17:51, 16 ஆகத்து 2015 (UTC)
  விருப்பம் மொழி என்பது மக்கள் பேசுவதோடும் ஒத்துப் போக வேண்டும், இலக்கணத்திலிருந்து தூரமாகிவிடக் கூடாது. இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு நிலையில் இருக்க வேண்டும். எப்படி என்பதில்தான் புரிதல் இன்மையும் ஒத்துப்போகாமையும் உள்ளன. --AntanO 17:56, 16 ஆகத்து 2015 (UTC)
நிச்சயமாக, இதை எப்படி கையாள்வது என்பதில் தான் சிக்கல் எழுகின்றது. நமது முதன்மையான இலக்கண நூலான நன்னூல் எழுதப்பட்டு 900 ஆண்டுகளாகிவிட்டன. இந்த 900 ஆண்டுகளில் தமிழில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், வளர்ச்சிகளை கணக்கில் எடுத்து தமிழ் மொழியின் தனித்துவம், அழகு, ஒலிநயம் குறையாமலும், அதே சமயம் புதிய வளர்ச்சிகள், பரிணமித்தல்கள், விரிந்து விட்ட காலச் சூழல்கள், திசைச் சொற்களை கையாள்வதில் ஒரு வரைமுறையை ஏற்படுத்துதல் போன்றவைகளில் நமக்கு குழப்பம் இருக்கின்றது. இதனை சரி செய்ய தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு கல்வி மாந்தர்களும், மொழியியல் வல்லுநர்களும் இணைந்து புதிய தமிழ் இலக்கண நூல் ஒன்றை எழுதி வெளியிட முன் வர வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே பல சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு எட்டப்படும். --Winnan Tirunallur (பேச்சு) 18:22, 16 ஆகத்து 2015 (UTC)
டகரம், ரகரத்தை மொழிக்கு முதல் எழுதினால் வரும் சிக்கல்களை ஆய்ந்து பாருங்கள். ஒலி, இலக்கண நுட்பமுள்ள மொழியின் இயல்பைச் சிதைத்து விடக்கூடாது. அ + பறவை = அப்பறவை, அ + டின் (Tin) = அட்டின், அடின்? அ + வடை = அவ்வடை, அ + ரயில் = அர்ரயில், அவ்ரயில், அரயில்? ரகரத்தை மொழிக்கு முதல் கொண்டு வருவதால், மீண்டும் ஒரு (பல?) மீறல். ரகரம் ஒருபோதும் உடனிலை மெய்ம்மயக்கத்தில் அமையாது என்பது மீறப்படுகின்றது. அல்லது வ்ர என்ற மெய்ம்மயக்கம் செயற்கையாகக் கொண்டு வரப்படுகிறது. ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்வது போல் இது விரிந்து செல்லும். --மதனாகரன் (பேச்சு) 18:04, 16 ஆகத்து 2015 (UTC)
டகரம், ரகரம் சொல்லின் முதலில் பயன்படுத்தலாமா கூடாதா என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன? இலக்கணப் படி கூடாது என்பது தான் சரி. ஆனால், தற்காலத் தமிழ் வழக்கத்தில் டகரம், ரகரம் ஆகியவை சொல்லின் முதலில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் இவை திசைச் சொற்களாகவே இருக்கின்றன. இந்த திசைச் சொற்கள் தமிழ் சொற்களோடு புணரும் போது, குறிப்பாக தாங்கள் சுட்டிக் காட்டியது போல, சுட்டுச் சொற்களோடு புணரும் போது அது தமிழின் மொழியில்பை உள்வாங்கிக் கொண்டு தான் புணருகின்றது. அ + ரம்பம் = அர்ரம்பம் என யாரும் பயன்படுத்துவதில்லை, அது அந்த ரம்பம் என மாறிவிடுகின்றது. இங்கு புணர்ச்சி விதிகளாவது அந்த என்ற சொல்லே அ என்ற சுட்டுக்கு இணையாக வருகின்றது. அதனால் டகரம், ரகரம் மொழிமுதல் வரும்போது அதன் முன் இகரம், உகரம் சேர்க்க வேண்டுமா, கூடாதா என்பதை விக்கிப் பயனாளர்களது முடிவுக்கு விட்டுவிடுகின்றேன். இதில் தமிழ் சமூகம் ஒரு நிரந்தர தீர்வை எட்டும் வரை விக்கி பயனாளர்களது பெரும்பான்மைக் கருத்துக்கு ஏற்ப நாம் பயன்படுத்தலாம். --Winnan Tirunallur (பேச்சு) 18:18, 16 ஆகத்து 2015 (UTC)
என்னைக் கேட்டால் கூடுமான வரை தனித் தமிழ் சொற்களை உருவாக்குவது நல்லது, கணனி, செல்பேசி என பல சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உருவாக்க முடியாத போதோ, அல்லது ஏற்கனவே புழக்கத்தில் அயல்மொழிச் சொற்கள் வந்துவிட்ட போதோ திசைச் சொற்களை தமிழ்ப்படுத்தி பயன்படுத்தலாம். coffee > காபி, cricket > கிரிக்கெட்டு, rail > ரயில் போன்றவைகள். கிரந்தம் தவிர்த்தல் என்பது தேவை என்றாலும் 100 % கிரந்தம் தவிர்த்தலால் விக்கித் தமிழுக்கும் பொதுவழக்கில் உள்ள தமிழுக்கும் பெரிய இடைவெளி வந்துவிடும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதனால் ஏற்கனவே புழக்கத்தில் வந்துவிட்ட பெயர்ச்சொற்களை அப்படியே பயன்படுத்தலாம், அடைப்புக் குறிகளுக்குள் தமிழ்ப் படுத்திய சொற்களை எழுதலாம். இதன் மூலம் மக்களுக்கு தனித்தமிழ் சொற்கள் மீதன் பரிச்சயம் ஏற்படும். அதனை ஊடகங்கள், இணையதளங்கள், புத்தகங்கள், நாளிதழ்கள் என பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், கிரந்தம் சேர்ந்த சொல்லின் தேவை மறையும், அவ்வாறான ஒரு கட்டத்தில் நாம் தனித்தமிழ் சொற்களை இங்கும் முதன்மைப் படுத்தி மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இராசச்சுத்தான், இடாய்ச்சு போன்ற மிகக் கடுமையான தமிழின் சொல்லமைதிக்கே குந்தகம் விளைவிக்கும்படியான, புழகத்திலேயே இல்லாத தமிழ்ப் படுத்தல்களை நான் எதிர்க்கின்றேன். --Winnan Tirunallur (பேச்சு) 18:18, 16 ஆகத்து 2015 (UTC)

2. தமிழ்நாடு அரசின் பாடநூலில் ராஜஸ்தான் என்றே பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிந்தது [1]. அதில் ராஜஸ்தான் என்பதை இராசச்சுத்தான் என்றோ, இராஜஸ்தான் என்றோ, இராசத்தான் என்றோ பயன்படுத்தப்படவில்லை. ஆகையால், ராஜஸ்தான் என்பதையே நாமும் பயன்படுத்துவோம். அடைப்புக் குறிக்குள் ( இராசத்தான் ) என குறிப்பிடுவோம். --Winnan Tirunallur (பேச்சு) 18:52, 16 ஆகத்து 2015 (UTC)

3. வடமொழிக்கு நிகரான தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதில் பொதுவான அணுகுமுறை தேவை. ஸ-ச, ஷ-ச உச்சரிப்பு ஓரளவு பொருந்துகிறது. ஜ-ச உச்சரிப்பு பொருத்தவில்லையே?--நிர்மல் (பேச்சு) 21:06, 22 ஆகத்து 2015 (UTC)

தமிழ்நாடு அரசு என்பதே பிழை. முதலில் தமிழ் நாடு என்று இரு சொற்களில் வர வேண்டும். அடுத்தது, அரசு என்ற சொல் சேரும் போது தமிழ் நாட்டு அரசு என்று வர வேண்டும். இவ்வாறு தொடக்கத்திலேயே பிழை விடுபவர்களை எப்படிப் பின்பற்றுவது?--பாஹிம் (பேச்சு) 01:34, 23 ஆகத்து 2015 (UTC)
தமிழ்நாடு என்பதை தமிழ்நாடு என இருசொற்களாக வரவேண்டும் என்பதை எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள் அறிந்த கொள்ள பேராவல் கொண்டவனாய் இருக்கின்றேன். விட்டால் ஆசிரியன் என்பதே பிழை ஆசு இரியன் என்பது தான் சரி என்பீர்களோ?! --Winnan Tirunallur (பேச்சு) 03:36, 25 ஆகத்து 2015 (UTC)

கம்பன் வாழ் நாள் என்பதை வாணாள் என்று (வாணாள் அளித்தி முடியாமல், நீதி வழுவாமல் நிற்றி மறையாய்) புணர்த்தியுள்ளவாறே இங்கும் தமிழ் + நாடு என்பதைச் சேர்த்தெழுதினால் புணர வேண்டும் என்ற அடிப்படையில் அச்சொற்களைப் பிரித்தெழுத வேண்டும் என்கிறேன். அஃதென்ன ஆங்கிலத்தில் இரு சொற்களாக Tamil Nadu என்றெழுதுவதும் பின்னர் தமிழில் ஒரே சொல்லாகத் தமிழ்நாடு என்று எழுதுவதும்? எதற்காக தமிழ்நாடு அரசு என்றெழுதுகிறார்கள்? பாண்டிய நாட்டு மன்னன் என்றெழுதாமல் பாண்டிய நாடு மன்னன் என்றா எழுத வேண்டும்? தமிழ் நாட்டு அரசாங்கத்தின் இந்தப் பிழையான வழிகாட்டலை எதற்காகப் பின்பற்ற வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 06:39, 25 ஆகத்து 2015 (UTC)

நீங்கள் பின்பற்ற வேண்டாம், நாங்கள் பின்பற்றிக் கொள்கின்றோம். தொல்காப்பியர் வழிகாட்டிய இலக்கணத்துக்கும் பவணந்தியார் வழிகாட்டிய இலக்கணத்துக்கும் பரிணாம வளர்ச்சிகள் பல உள்ளன, பவணந்தியாரது இலக்கணத்திலிருந்து நாங்கள் பல்வேறு திசைகளில் இன்று பரிணமித்துவிட்டோம். உலகோடு ஒட்ட ஒழுகல் என்பார் வள்ளுவர், தமிழரது தாயகமான தமிழ்நாட்டில் நாங்கள் இதைப் பயன்படுத்துகின்றோம், அதை நீங்கள் பயன்படுத்த வேண்டிய எவ்வித முகாந்திரமும் இல்லை. விரும்பினால் இலங்கைத்தமிழ், தனித்தமிழ் எனத் தனி விக்கிபீடியா பக்கத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அங்கு விரும்பிய வண்ணம் எழுதிக் கொள்ளுங்கள் தோழரே. உங்களது காழ்ப்புணர்ச்சிகளை இங்கே காட்ட வேண்டாம். நாங்கள் அரைகுறைத் தமிழராகவே இருந்துவிட்டு போகின்றோம். --Winnan Tirunallur (பேச்சு) 07:00, 25 ஆகத்து 2015 (UTC)

Winnan Tirunallur, தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு பற்றிய உங்கள் கருத்துகள் உள்வாங்கப்பட்டு அது தொடர்பான கொள்கை வரைவுக்கு முனைந்துள்ளோம். எனவே, ஒரே கருத்தைப் பல்வேறு பக்கங்களில் பதிவதைத் தவிருங்கள். இது அனைவரின் ஆற்றலையும் வீணாக்கும். //விரும்பினால் இலங்கைத்தமிழ், தனித்தமிழ் எனத் தனி விக்கிபீடியா பக்கத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.// போன்ற விசமத்தனமான, பன்னாட்டுத் தமிழர்கள் ஒன்று கூடி உழைக்கும் திட்டத்தில் குழப்பத்தையும், ஒற்றுமையின்மையையும் தூண்டும் கருத்துகளைத் தவிருங்கள். உங்களின் இப்போக்கு தொடர்ந்தால் உங்கள் பயனர் கணக்கைத் தடை செய்ய வேண்டி வரலாம்.

உணர்வுகளைத் தூண்டிக் குழப்பத்தை உருவாக்கும் இது போன்ற உரையாடல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைத்துப் பயனர்களையும் கேட்டுக் கொள்கிறேன். அருள்கூர்ந்து ஒத்துழையுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 07:10, 25 ஆகத்து 2015 (UTC)

1. எனது கருத்தை உள்வாங்கி அது தொடர்பான கொள்கை வரைவுக்கு முனைந்துள்ளமைக்கு மிக்க நன்றிகள்.--Winnan Tirunallur (பேச்சு) 07:19, 25 ஆகத்து 2015 (UTC)
2. பன்னாட்டு தமிழர்கள் ஒன்று கூடி உழைக்கும் திட்டத்தில் சென்னை வட்டார மொழியை வேண்டுமென்றே வம்புக்கிழுத்து மனவருத்தத்தை ஏற்படுத்தியமைக்கு தங்களின் மேலான கருத்தை எதிர்ப்பார்க்கின்றேன். இங்கு குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பது எனது எண்ணமல்ல, அவ்வாறு பேச நேர்ந்திருந்தால், அதற்கு தார்மீக பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். அவ்வாறான கருத்தையும் பின்வாங்கிக் கொள்கின்றேன். நன்றிகள் ! --Winnan Tirunallur (பேச்சு) 07:19, 25 ஆகத்து 2015 (UTC)

Please do not feed the trollதொகு

Please do not feed the troll--இரவி (பேச்சு) 17:31, 24 ஆகத்து 2015 (UTC)

குழாயடிச் சண்டையிட எனக்கும் விருப்பமோ, நேரமோ இல்லை, கிரந்தம் கூடும்/ கூடாது என்பதில் ஒரு இறுதி தீர்மானம் வரும் வரை காத்திருக்கின்றேன் தோழரே ! மிக்க நன்றிகள். --Winnan Tirunallur (பேச்சு) 07:04, 25 ஆகத்து 2015 (UTC)
 1. http://www.textbooksonline.tn.nic.in/Books/Std10/Std10-SocSci-TM-1.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராசத்தான்&oldid=1904120" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இராசத்தான்" page.