Bpselvam
வாருங்கள், Bpselvam!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
நீங்கள் சர் அ.தா.பன்னீர்செல்வம் அ்வர்களைப் பற்றி ஆக்கிய கட்டுரை சர் அ. தா. பன்னீர்செல்வம் என்ற தமிழ்த் தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பங்களியுங்கள். -- சுந்தர் \பேச்சு 14:41, 19 ஜனவரி 2009 (UTC)
பயனர்களுக்கு வேண்டுகோள்
தொகுகட்டுரைகளின் முரண்பாடுகளை சுட்டிக்காட்டும்போது அவற்றை எநத நோக்கத்தில் எழுதியிருப்பார் என்று கணிக்கமுடியாதபோது உடனடியாக தவறு, குற்றம் என்ற சொற்களை பயன் படுத்துவதை தவிர்க்கவும். தமிழ் நுணுக்கமான மொழி ஒரு சொல் பல்வேறு பொருள்களை வெளிப்படுத்திவிடும். கட்டுரையின் முரண்பாடுகளை தெரிவிக்கும் போது சரியான மேற்கோள்களையும், இணையக்குறிப்புகளையும் வெளியிடுவது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதுவே கட்டுரையாளர்களுக்கு உதவுவது ஆகும். இதன் வளர்ச்சியில் பலரும் பங்குபெருவர். இங்கு அனைவரும் சமம்.--செல்வம் தமிழ் 09:23, 6 பெப்ரவரி 2009 (UTC)
- தயவு செய்து இப்படியான உரையாடல்களை உங்கள் பயனர் பக்கத்தில் எழுதுவது எவ்விதத்திலும் பயனளிக்கப் போவதில்லை. ஏனென்றால், நீங்கள் உங்கள் பயனர் பக்க உரையாடலில் எழுதுவது எவருக்கும் தெரியப்போவதில்லை. அதற்காகவே இருக்கவே இருக்கிறது ஆலமரத்தடி அல்லது, குறிப்பாக ஏதாவது கட்டுரை தொடர்பான கருத்துக்களுக்கு அவ்வக் கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் தாருங்கள். கீழே நீங்கள் தந்தது பேச்சு:வல்லரசுகள் பக்கத்தில் இடுவதே சிறப்பு. பலரும் தங்கள் கருத்தைத் தெரிவிப்பார்கள்.--Kanags \பேச்சு 09:37, 6 பெப்ரவரி 2009 (UTC)
மீண்டும் வேண்டுகோள்
தொகுசெல்வம் அவர்களுக்கு மீண்டும் நான் தெரிவிப்பதாவது, கட்டுரைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை அந்தந்தக் கட்டுரைகளின் உரையாடல் பகுதியில் தெரிவியுங்கள். உங்கள் பயனர் பக்கத்தில் எழுதுவது முறையல்ல. அப்படி எழுதினால் எவரும் பதில் தரப்போவதில்லை. நன்றி.--Kanags \பேச்சு 07:20, 6 பெப்ரவரி 2009 (UTC)
கனக்
தொகுSuper Power என்பது ஒரு நாடு பல நாடுகளை கட்டுபடுத்தவது பல பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் படி பார்த்தார் ஆதிக்கம் செலுத்துகின்ற அல்லது வல்லரசாக அறிவித்து கொண்ட நாடுகள் என்ற தலைப்பில் கட்டுரை வரவேண்டும். நீங்கள் குறிப்பிட்ட மூன்று நாடுகளும் இதனடிப்படையில்தான வரும். 1944 ல் பலநாடுகள் மாறி மாறி தங்களை super power ஆக அறிவித்துக் கொண்டன. இப்படி தன்னாட்சியை,சுதந்திர விரும்புகிற இந்த தேசத்தில் இந்த சொல் பொருந்தாது.--செல்வம் தமிழ் 12:41, 5 பெப்ரவரி 2009 (UTC)
கனக்
தொகுவல்லரசு என்பதற்கு நேரிடையான ஆங்கில சொல் கிடையாது. அப்படியே பார்த்தாலும் Super power Nations என்று இருக்கும் இதற்கு நேரிடையான ஆங்கில கட்டுரைகளும் கிடையாது Superpower என்று தான் உள்ளது. இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன இதை தீர்மானிப்பவர்கள் அல்லது தீர்மானித்தவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறதல்லவா. தவிர நான் குறிப்பிட்ட வல்லரசு ஐ நா வால் தேர்ந்தெடுக்கப்பட்டவரைத்தான் குறிக்கும். இதற்கு சரியான மேற்கோள்களும் கிடையாது. ஆகையால் பள்ளி தமிழ் வரலாற்று பாடப்புத்தகங்களில் வல்லரசு என்ற சொல் இந்த ஐ நா அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்குத்தான் வழங்கப்படுகிறது. அப்படித்தான் பாடம் நடத்தப்படுகிறது, நடத்தப்பட்டது. நீங்கள் தவற்றை சுட்டி காட்டும்போது மேற்கோள்களை அல்லது அந்த குறிப்புகள் உள்ள முகவரியை சுட்டிக் காட்டினால் நன்மையாக இருக்கும்.--செல்வம் தமிழ் 12:21, 5 பெப்ரவரி 2009 (UTC)
- செல்வம், வல்லரசு தொடர்பான கருத்துக்களை அதன் பேச்சுப் பக்கத்தில் இடுவதுதான் முறை. உங்கள் பயனர் பக்கத்தில் இடுவது முறையல்ல. எனவே மீண்டும் உங்கள் கருத்துக்களை பேச்சு:வல்லரசுகள் பக்கத்தில் இடவும். நன்றி.--Kanags \பேச்சு 20:32, 5 பெப்ரவரி 2009 (UTC)
படம் சேர்ப்பது தொடர்பில்
தொகுசெல்வம், நீங்கள் நிழற்படத்தை இணைப்பது பற்றி ஒத்தாசைப் பக்கத்தில் கேட்டிருந்தீர்கள். இடதுபுறமுள்ள சட்டத்தில் கோப்பைப் பதிவேற்று என்ற இணைப்பு உள்ளதல்லவா? அதை சொடுக்கி உங்கள் கணினியிலுள்ள படத்தைத் தகுந்த அளிப்புரிமையின்கீழ் பதிவேற்றுங்கள்.
பதிவேற்றியபின், கட்டுரையில் [[படிமம்:Example.jpg|thumb|தலைப்பு]] என்பது போன்ற நிரலை இணைத்துவிட்டால் போதும். Example என்பதற்கு மாற்றாக நீங்கள் ஏற்றும் படத்தின் பெயரைச் சேர்க்கவும். -- சுந்தர் \பேச்சு 15:59, 19 ஜனவரி 2009 (UTC)
திரு சுந்தர்
தொகுசில வார்த்தைகள் அப்படியே தமிழ் படுத்த முடியாது. இதை மெயின் கேம்ப் என்றே அனைவரும் அறிவர் தமிழிலும் அந்த புத்தகம் மெயின் கேம்ப் என்ற தமிழ் பெயரிலேயே விற்பனை ஆகிறது. தவிர இந்த உச்சரிப்பு ஜெர்மனியில் தானே தமிழில் அந்த உச்சரிப்பு எழுத்துக்கள் இல்லையே. இராஜாஜியை எப்படி இராசாசி எனறு அழைப்பது. தமிழ் பொருள்படும் வார்த்தையை உச்சரிப்பை வேறு மொழியில் மாற்றமுடியாது அதேபோல் வேறு மொழியில் உள்ள உச்சரிப்புகளை அப்படியை தமிழ் மொழியில் கொண்டு வர அப்படி மாற்றினாலும் எழுதியவரைத்தவிர வேறு யாரும் அறிய முடியாது. இதனால் இந்த தலைப்பை தேடுபவர்கள் சிரமப்படுவார்கள். உங்கள் பதில்.--செல்வம் தமிழ் 02:31, 4 பெப்ரவரி 2009 (UTC)
- நீங்கள் உங்கள் பேச்சுப் பக்கத்தில் இந்த செய்தியை இட்டிருந்ததால் கவனிக்கவில்லை. செருமனில் உள்ளதைக் கட்டாயம் அப்படியே தர வேண்டியதில்லை. ஆனால் தமிழ் எழுத்துகளில் இதைத் துல்லியமாக எழுத முடிந்ததால்தான் அதை பரிந்துரைத்தேன். மெயின் கேம்ப் என்ற பெயரில் அந்நூல் வெளியாகியுள்ளது எனக்குத் தெரியாமலிருந்தது. அப்படியானால் மாற்றுப் பயன்பாடாகவாவது தரலாம். இதுபோன்ற கருத்துகளை கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலிட்டால் மற்றவர்களும் கருத்துத் தெரிவிக்க ஏதுவாகும்.-- சுந்தர் \பேச்சு 04:53, 4 பெப்ரவரி 2009 (UTC) பி.கு. என்னையும் மற்ற பயனர்களையும் நீங்கள் பெயர் சொல்லியே அழைக்கலாம், திரு என்ற முன்னொட்டு தேவையில்லை. :-)
அ. தா. பன்னீர்செல்வம்
தொகுஅ. தா. பன்னீர்செல்வம் பற்றிய கட்டுரைக்கு நன்றி. நீங்கள் சர் பன்னீர் செல்வம் என்பவருக்கு நெருங்கிய உறவினர் போலத் தெரிகிறது. இவரைப் பற்றிய மேற்கோள்கள், கட்டுரைகள் வேறு ஏதாவது ஊடகத்தில், (இணையம், பத்திரிகைகள், இதழ்களில்) வெளிவந்திருந்தால் அவற்றை மேற்கோள்களாகக் காட்டுவது நல்லது. கட்டுரையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். சில வரிகள் விக்கிப்பீடியா நடைக்கேற்ப நீக்கியுள்ளேன். நன்றி.--Kanags \பேச்சு 04:42, 20 ஜனவரி 2009 (UTC)
பார்க்க: [C V Raman] ஆங்கில விக்கியில் தலைப்பில் பட்டம் போட விடமாட்டார்கள், நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர் போலிருக்கிறது, தமிழ் விக்கியிலும் தலைப்பில் பட்டம் போட கூடாது என்பது கொள்கை முடிவு. உங்கள் சிறப்பான பங்களிப்பு தொடரட்டும் --குறும்பன் 02:54, 10 பெப்ரவரி 2009 (UTC)
ஆஸ்திரியா
தொகுஆஸ்திரியா கட்டுரையின் வார்ப்புருவைத் திருத்தியிருக்கிறேன். நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் மிக்க நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள். ஏதேனும் உதவி தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள்.--Kanags \பேச்சு 11:22, 30 ஜனவரி 2009 (UTC)
இதைப் பாக்க, மேலும் விபரங்கள் பின்னர்
தொகுஇடது பக்க கருவிப் பெட்டியில் இருக்கும் கோப்ப்பை பதிவேற்று என்ற பக்கத்தைப் பாக்கவும். மேலும்: en:Wikipedia:Images...
--Natkeeran 17:15, 30 ஜனவரி 2009 (UTC)
- ஏகபோக அணுகுமுறை என்ற தங்கள் பயிற்சிக் கட்டுரையை நீக்கி விடவா? நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.--Kanags \பேச்சு 22:14, 30 ஜனவரி 2009 (UTC)
விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்களை மீண்டும் இங்கு பதிவேற்றத் தேவையில்லை. (உ+ம்: பெனிட்டோ முசோலினி இருப்பிடம்.jpg என்பது காமன்சில் Casa Natale Benito Mussolini.jpg எனற பெயரில் உள்ளது. அவற்றை அதே படிமப் பெயரில் இங்கு இணைப்புக் கொடுங்கள்.--Kanags \பேச்சு 22:24, 30 ஜனவரி 2009 (UTC)
ஸ்டாலின் கட்டுரை
தொகுசெல்வம், ஸ்டாலின் கட்டுரை மிக அருமையாக வளர்கிறது. சிறு தவறுகளை திருத்தினேன். சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். தொடர்ந்து பங்களியுங்கள். மிக்க நன்றி.--Daniel pandian 19:47, 2 பெப்ரவரி 2009 (UTC)
- நன்றி, பாண்டியன், என் பிற கட்டுரையும் பார்த்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.--செல்வம் தமிழ் 22:57, 2 பெப்ரவரி 2009 (UTC)
- பார்க்க: பேச்சு:வல்லரசுகள்.--Kanags \பேச்சு 10:03, 5 பெப்ரவரி 2009 (UTC)
பாராட்டுகள்
தொகுசெல்வம் தமிழ், நீங்கள் குறுகிய காலத்தில் பல அருமையான கட்டுரகள் எழுது வளம் கூட்டியிருக்கின்றீர்கள். என் உளமார்ந்த பாராட்டுகள்!--செல்வா 02:10, 28 பெப்ரவரி 2009 (UTC)
வேதியியல்
தொகுதங்களின் மீத்தைல் ஐசோ சயனேட் கட்டுரை நன்று. அதனோடு சேர்ந்த சில கட்டுரைகளை ஆங்கிலத் தலைப்புடன் எழுதியிருக்கிறீர்கள். தமிழ் விக்கியில் ஆங்கிலத் தலைப்பில் அல்லது ஆங்கில உள்ளடக்கத்துடன் கட்டுரைகள் எழுதுவதில்லை. தலைப்புகள் ஒரு கட்டுரைத் தலைப்புகளாக இருந்தாலும், அவற்றின் உள்ளடக்கங்கள் ஒரு வார்ப்புருவின் உள்ளடக்கத்தை ஒத்துள்ளது. விளங்கவில்லை. சோதனைக்காக இவற்றை உருவாக்கினீர்களா?--Kanags \பேச்சு 09:17, 2 மார்ச் 2009 (UTC)
பாக்க: விக்கிப்பீடியா:ஊடக உதவி
தொகு- விக்கிப்பீடியா:ஊடக உதவி
- தற்போது நித்திரை செல்கிறேன்...மேலும் உதவ சுந்தரிடம் குறிப்பு விட்டுச் செல்கிறேன். --Natkeeran 04:36, 4 மார்ச் 2009 (UTC)
- ஒத்தாசைப் பக்கத்தில் பார்க்கவும் அல்லது பேச்சு:சத்திய சாயி பாபா பக்கத்தைப் பார்க்கவும்.--செல்வா 13:29, 4 மார்ச் 2009 (UTC)
நன்றி
தொகுநீங்கள் தொடர்ந்து ஈடுபாட்டுடன் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது கண்டு மகிழ்கிறேன். நன்றி--ரவி 13:18, 4 மார்ச் 2009 (UTC)
- செல்வம் தமிழ், உங்கள் பங்களிப்புகள் வியப்பூட்டுகின்றன. தமிழ் விக்கிக்கு நல்ல ஆக்கம் அளித்து வருகின்றீர்கள். அருள்கூர்ந்து தொடர்ந்து இயன்றவாறு பங்ககளித்து உதவுங்கள். மிக்க நன்றி.--செல்வா 01:56, 6 மார்ச் 2009 (UTC)
படிமங்கள்
தொகுசெல்வம், படிமங்களை வேறு விக்கிப்பீடியாக்களில் இருந்து தரவிறக்கி மீண்டும் இங்கு ஏற்றும் போது தகுந்த வார்ப்புருக்களை இணைக்க வேண்டும். உதாரணமாக, படிமம்:கேரளா உயர் நீதிமன்றம்.jpg என்ற படிமம் ஆங்கில விக்கி பயனர் ஒருவரினால் ஆக்கப்பட்டு பொதுவில் விடப்பட்டுள்ளது. அதற்கு இங்கு {{pd-self}} வார்ப்புரு பயன்படுத்த முடியாது. இவ்வார்ப்புருவை உங்களுடைய சொந்த ஆக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். பதிலாக {{PD-user|en:user:Attokaran}} என்ற வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள். நன்றி.--Kanags \பேச்சு 05:05, 8 மார்ச் 2009 (UTC)
தமிழ் நாடு
தொகுசெல்வம், தமிழ் நாடு என்ற தலைப்பில் நீங்கள் வார்ப்புரு ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். இதற்கு நீங்கள் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம். ஏனெனில் அது {{தமிழ் நாடு}} என்ற பெயரில் ஏற்கனவே உண்டு. இது தமிழ்நாடு கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வார்ப்புருக்களுக்கு சிறப்பு பெயரிடும் முறை உண்டு. அனைத்து வார்ப்புருக்களும் வார்ப்புரு: என்று தொடங்க வேண்டும். நன்றி.--Kanags \பேச்சு 09:23, 8 மார்ச் 2009 (UTC)
பாராட்டுப் பதக்கம்
தொகுசெல்வம் தமிழ் மிக விரைவில் நீங்கள் 100 விரிவான கட்டுரைகள் எழுதிவிடுவீர்கள். என் நெஞ்சார்ந்த பாராட்டுகள் உங்களுக்கு! நீங்கள் ஆக்கியிருக்கும் தலைப்புகள் எல்லாம் முக்கியமானவை! மிகத் தேவையானவை! தொடர்ந்து பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பெரும் ஆக்கம் தரூவீர்கள் என நம்புகிறேன். வாழ்க உங்கள் நல்லுணர்வு, நற்பணி, நல்லுழைப்பு. அன்புடன் --செல்வா 15:24, 9 மார்ச் 2009 (UTC)
இன்றுவரை நீங்கள் தொடங்கிய 95 கட்டுரைகளின் தலைபுகளை இங்கே பார்க்கலாம் --செல்வா 15:28, 9 மார்ச் 2009 (UTC)
விக்கிப்பீடியா:பக்க வடிவமைப்பு கையேடு
தொகுவிக்கிப்பீடியா:பக்க வடிவமைப்பு கையேடு, பொதுவாக, வரையறை மட்டுமே தடிப்பு எழுத்தில் எழுதுவது வழக்கம். மற்றய முக்கிய சொற்களை தகுந்த உள் இணைப்புத் தாருங்கள். நன்றி. --Natkeeran 01:24, 12 மார்ச் 2009 (UTC)
மணல் தொட்டியில் பழயைதை நீக்கினால் இலகுவாக இருக்கும்
தொகு--Natkeeran 02:45, 10 ஏப்ரல் 2009 (UTC)
உங்கள் ஒத்தாசை பக்கத்திய கேள்விக்கு விடை
தொகுஉங்கள் ஒத்தாசை பக்கத்திய கேள்விக்கு விடை இங்கு தந்துள்ளேன் பார்க்கவும்.--செல்வா 15:58, 19 ஏப்ரல் 2009 (UTC)
- உங்கள் அண்மைய கேள்விக்கான விடையையும் ஒத்தாசைப் பக்கத்தில் இட்டுள்ளேன், பார்க்கவும். மேலும் இங்கு உங்களுக்கான கருத்து/செய்தி ஒன்றை இட்டுள்ளேன். அதையும் பார்த்து கருத்து தெரிவிக்கவும். -- சுந்தர் \பேச்சு 14:43, 20 ஏப்ரல் 2009 (UTC)
மீண்டும் பாராட்டுகள்!!
தொகுதமிழ் செல்வம், நீங்கள் தமிழக உள்ளாட்சி பற்றியும் அறமன்றங்களைப் பற்றியும் எழுதிவரும் மிக மிகப் பயனுடைய தகவல் செறிவான கட்டுரைகளைப் பார்த்து மிக வியக்கின்றேன். உங்கள் நல்லாக்கங்களால் தமிழ் விக்கிப்பீடியா ஒரு தனி உயர்வு பெற்று இருக்கின்றது என்பது என் கருத்து. உடன் பங்களிபாளனாகிய என் மகிழ்ச்சியை நன்றியுடன் பகிர்ந்துகொள்கிறேன். தொடர்ந்து நல்லாக்கம் தரவேண்டுமாய் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். --செல்வா 16:50, 20 ஏப்ரல் 2009 (UTC)
இயன்றவரை கிரந்தத்தை தவிர்த்து எழுதினால் நன்று.
தொகு--Natkeeran 02:13, 25 ஏப்ரல் 2009 (UTC)
கிரந்த எழுத்தின் பயன்பாட்டில் பல கருத்துகள் உள்ளன. சற்று பொறுமையாகவே அணுகுவது நல்லது. இதில் எதிர்-எதிர் கருத்துகள் கொண்டவர்கள் தக்க காரணங்களை முன் வைத்து உரையாடுவதற்கு மாறாக உணர்ச்சியையே பெரிதும் முன்வைத்து அணுகுகிறார்கள். காரணங்களை முன்வைத்து உரையாடுவது நல்லது.--செல்வா 05:20, 8 மே 2009 (UTC)
உரையாடல் பண்பாடு
தொகுநற்கீரன், செல்வம் தமிழ் அருள்கூர்ந்து உணர்ச்சி வசப்படாமல், அத்து மீறிப் பேசாமல், எதிர்-எதிர் கருத்துகளை முன்வைத்து கூடிப்பேசி இணக்க முடிவெடுப்போம். செல்வம் தமிழ் புதிதாக வந்தவர், அவருக்கு விக்கி நடைமுறைகள் பற்றிய கருத்துகள் வேறாக இருக்கலாம். மாற்றுக் கருத்துகள் உள்ளவர்களும் பண்புடன், கருத்துகளை மையமாக வைத்து (இதில் குமுகாய, சமுதாய உணர்ச்சி வல்லழுத்தங்கள், சாய்வுகள் இருப்பதாக இருந்தாலும்) முறைப்படி கருத்தாடுதல் வேண்டும். அடிப்படையில் செல்வம் தமிழ் இராஜஸ்தான் என்று இருக்கலாமே, ஏன் கிரந்தம் இல்லாமல் எழுதுகின்றீர்கள், சற்று மாறுதலாக உள்ளதே, இப்படி எழுதுவதற்கு என்ன சான்றுகோள்கள், எங்கிருந்து வழிகாட்டுகளைப் பெற்றீர்கள் என்று கேட்கிறார். அவைநேர்மையானவை. ஆனால் அவர் கேட்கும் விதம் சற்று காட்டமாக, எடுத்தெறிந்து பேசுவது போல் உள்ளது. உணர்ச்சிகளைக் குறைத்துக்கொண்டு, சற்று அமைதியுடன், செல்வம் தமிழ் அவர்களும், நீங்களும் நானும் பிறரும் உரையாடினால் நல்லதல்லவா? இணக்க முடிவு இராஜஸ்தான் என்றோ, இராயசுத்தான் என்றோ வேறு எதுவாகவோ இருப்பினும் அப்படி மாற்றிவிடலாமே. அருள்கூர்ந்து அறிவார்ந்த முறையில், முறை தழுவி, கருத்தை மையமாக வைத்து உரையாடுமாறு வேண்டிக்கொள்கிறேன். --செல்வா 15:50, 9 மே 2009 (UTC)
வருந்துகிறேன்
தொகுகடைசியாக மீண்டும் , மீண்டும் அவற்றிற்கு நேரிடையான விளக்கம் தராமையால் சுமூகமாக முடிக்கவேண்டியதை இழுத்த்தினால் வந்த விளைவு. என்னை கேள்வி கேட்கும்பொழுது நான் கடைசியாக எனக்கு மேற்கோள்கள் கிடைக்கவில்லையென்றால், அதற்கு சரியான பொருள் தெரியவில்லையென்றால் சர்ச்சையிலுருந்து நானை விலகியிருக்கின்றேன். மேற்கண்ட நிகழ்வில் அப்படி நடைபெறவில்லை. பொதுவாக மக்கள் அழைக்கும் பெயரை மாற்றியிருக்கின்றீர்கள் அதற்கு அதிகாரப்பூர்வ மேற்கோள்கள் இருக்கின்றதா? உடனே விலகுகின்றேன் என்று அறிவித்தும் மீண்டும் மீண்டும் அதையே சுட்டி காட்டியதால் சற்று உணர்ச்சி வயப்பட்டேன் வாதத்தினால் எழுந்த உணர்ச்சியேத் தவிர யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்திலில் அல்ல. இதில் பழையவர் புதியவர் என்பது அல்ல. நல்ல விடயத்துக்காகத் தானே விவாதித்தோம். என்னால் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்கான வருத்தத்தைதெரிவித்துக் கொள்கின்றேன். இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதாவது அதிகாரப்பூர்வ மேற்கோள்கள், ஆணைகள் கிடைத்தால் மாற்றத்தான் போகின்றோம். நாங்கள் மேற்கோள்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம் சிறிது காத்திருக்கவும் என்று குறிப்பிட்டிருந்தால் இந்த சர்ச்சை எழுந்திருக்காது. ஏற்கனவே பெயரை மாற்ற முயற்சித்தேன் முடியவில்லை. இதை தடுக்கின்றபொழுது காரணம் குறிப்பிடுவது அவசியமாகின்றது. எனக்கும் அது தேவை. வினைச் சொற்களில் நானே மாற்றுகின்றேன் பெயர்ச் சொல், காரணப் பெயர்களில், ஊரின் பெயர்களில் மாற்றுவதில்லை அந்தப் பெயரிலேயே அறியப் படுவதால் அவசியமாகின்றது. இது எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒன்றுதான். சிறப்பு ஆணை இருந்தால் மாற்றலாம். இதை மறுத்தால் கட்டுரை எப்படி உருவாகும். விக்கியில் இதைத்தானே குறிப்பிட்டிருக்கின்றீர்கள் விக்கியில் குறிப்பிட்டுள்ளது பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதானே. இப்பொழுது கூட அந்த கட்டுரை வேண்டுமென்றால் வைத்துக்கொள்ளுங்கள் இராஜஸ்தான் என்று தனிக்கட்டுரை எழுதிக் கொள்வோம். இதை விவாதித்தால் இன்னும் பெரியதாக வளரும். நன்றி மீண்டும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.--செல்வம் தமிழ் 18:21, 9 மே 2009 (UTC)
- உங்கள் கருத்துகளுக்கு நன்றி, செல்வம் தமிழ். உங்கள் நல்ல பண்பு தெற்றென விளங்குகின்றது. இங்கு உங்களைப்போல் பங்களிப்பவர்கள் ஏறத்தாழ எல்லோருமே ஒரு நல்லுணர்வால் உந்தப்பட்டே உழைக்கின்றனர். நீங்கள், வினைச் சொற்களில் நானே மாற்றுகின்றேன் பெயர்ச் சொல், காரணப் பெயர்களில், ஊரின் பெயர்களில் மாற்றுவதில்லை அந்தப் பெயரிலேயே அறியப் படுவதால் அவசியமாகின்றது. இது எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒன்றுதான் என்கிறீர்கள். வினைச்சொல்லாக இருந்தாலும் பெயர்ச்சொல்லாக இருந்தாலும், ஒருவர் மொழியில் இருக்கும் எழுத்துகளைக் கொண்டுதானே எழுத வேண்டும் என்பது ஒருசிலரின். உங்களுக்கு கிரந்த எழுத்துகள் ஏற்பு வேறு சிலருக்கு அவை ஏற்பில்லை. ஏற்காதவர்கள் வடவெழுத்து ஒரீஇ என்னும் இலக்கண விதியையும், வழிவழியாய் இவைதாம் தமிழ் எழுத்துகள் என்று நெடுங்காலம் வந்துள்ள விதி முறைகளையும் சுட்டுகின்றார்கள். விபீடணன், கிருட்டினன், இராமன் என்னும் சொற்களை எடுத்துக் காட்டுகிறார்கள். ஆகவே அடிப்படை மிக எளிய கேள்வி, கிரந்தம் சேர்த்து எழுதலாமா கூடாதா. இது நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதான விடை உள்ள கேள்வி இல்லை. எதிர்-எதிர் கருத்துகள் கொண்ட இருபக்கத்திலும் காரணங்கள் உள்ளன. Rajasthan என்னும் மாநிலத்தின் பெயரை எப்படி எழுதலாம் என்பதில் உங்கள் கருத்து உங்களுக்க்கு தெளிவாக உள்ளது. கருத்துகளை முன் வைத்து வாதிடுங்கள். இக் கேள்விகள் பற்றி பலரும் மிக ஆழமாக எண்ணியிருக்கின்றனர். இராஜஸ்தான் என்று தனிக்கட்டுரை எழுதுவதல்ல இங்கு உள்ள சிக்கல். --செல்வா 23:34, 9 மே 2009 (UTC)
ரவி, கோபி போன்ற பயனர்கள் இது குறித்து உரையாடி உள்ளனர். அந்த கருத்தே என் கருத்தும். கிரந்த எழுத்தை தவிர்ப்பது தமிழ் பற்றைத் தவிர வேறு எந்தப் பொருளையும் உணர்த்தவில்லை. புதிய பொருளற்ற சொல்லையே உரிவாக்குகின்றத். இது அதை விட மிகப்பெரியத் தவறு.இதையெல்லாம் ஆய்ந்து பல நம் அறிஞர்கள் அனுமதித்த ஒன்று தான் கிரந்த எழுத்துக்கள். இதற்கு வாக்கெடுப்பு நடத்தினால் எடுத்த எடுப்பிலேயே தோல்வயுறும் என்பது தான் என் ஆணித்தரமான கருத்து. தமிழில் எழுத்துக்களை கூட்டவேண்டும். அதுவரை நீடிக்கலாம் தடையில்லை. இதில் நான் மிக உறுதியாக இருக்கின்றேன். புதிய பொருளுள்ள சொற்களை உருவாக்குங்கள். அது வினைச் சொல்லுக்கு, பொருட் பெயருக்கு தவறே இல்லை.
நாட்டின் பெயர், வரலாற்றில் உள்ளவர் பெயர், வேறு மொழியில் வாழ்ந்தவரின் பெயர்,விஞ்ஞானப் பெயர் அதுவும் பொருள் தரவேண்டும்,(பெரும்பாலான விஞ்ஞானப் பெயர்கள் கிரேக்க, இலத்தீன் மொழிகளில் இருந்து வந்தவை அதை ஆங்கிலம் ஏற்றுக் கொள்ளவில்லையா? உலகளவில் தமிழ் எட்டப்பட வேண்டும் என்றால் இதை அனுமதிப்பதை தவிர வேறு வழியில்லை, தவறும் இல்லை. தமிழ் எழுத்துக்கள் உருவாக்கப்படும் பொழுது விஞ்ஞானம் வளரவில்லை, வரலாற்றுப் பாடங்கள் இல்லை, இலக்கியம் மட்டும் தான் இருந்தது. இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினால் தமிழ் மிக கட்டப்பட்டு இளங்கலை படிப்புதான் வரைதான் வந்திருக்கின்றது அதுவும் சில படிப்புகளுக்கு மட்டும்தான். இன்னும் முதுகலை, முனைவர் பட்டம் என்று எல்லாத் துறைகளுக்கும், உச்சபட்ச படிப்புகளுக்கும் செல்லவேண்டும். அதற்குத் தடைபோடும் சுயநலச் செயல்கள்தான் இவைகள். (இதுவே வெட்கப்பட வேண்டிய விடயம்), இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி என்று அனைத்திலும் செல்லவேண்டும் என்றால் இதை அனுமதித்துதான் ஆகவேண்டும்) இங்குள்ளவர்கள் ஆங்கிலத்தில் படித்துவிட்டு வெளிநாடு சென்று விட்டீர்கள் தமிழ் பாடங்களையே, தமிழ் மொழிலேயே படிப்பவர்களுக்கு தான் அந்த கட்டம் தெரியும். இதற்கு எந்த விளக்கவும் கொடுக்கமுடியாது. உங்கள் பிள்ளகளை தமிழில் படிக்கவைக்க, தமிழ் பயிற்று மொழிலேயே படிக்கவைக்க, தற்பொழுதும் படிக்கவைத்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர். உறுதியுடன் சொல்லுகின்றேன் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தான் இருப்பார்கள். அப்படியென்றால் யாருக்காக இதை செய்கின்றீர்கள். தமிழற்களை அறிவுக்குரூடாக்கும் விடயம் தான் இது. பூஷ்வாத் தனம்.நீங்கள் அந்த எண்ணம் கொண்டவரில்லையென்றாலும் அதைத்தான் உணர்த்தும். எந்த விளக்கம் கொடுத்தாலும் இதுதான் உண்மை, உண்மை, உண்மை (மனசாட்சியுடன்).
பொருள் தராத பெயர் தமிழருக்குத் தேவையில்லை, ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மாநிலங்களின் பெயர்கள் தமிழில் உறுதியான ஒன்றுதான், அரசிதழில் வெளியிடப்பட்ட ஒன்றுதான், நாட்டின் பெயர்கள் அரசிதழில், பாட்த்திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒன்றுதான். ஏதாவது ஒன்றை அளவீடாக கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் பொதுக் கருத்தை எட்ட முடியும். மீண்டும், மீண்டும் கிரந்த்தத்தை தவிர்ப்பதற்கு வலியுறுத்தும் ஆணைகள் எங்கே, சட்டங்கள் எங்கே? இதற்கு தேவையில்லை என்றால். மாற்றவும் தேவையில்லை. விக்கிப்பீடியாவில் சட்டம் போட்டிருக்கின்றார்கள் என்றால் தமிழுலகம் ஏற்றுக் கொள்ளுமா? இது குறித்து விளக்கம் தந்தோமானால் விளக்கங்களே கேள்விகளே எழுப்புகின்றன.
மனித உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்று போய்க்கொண்டே இருக்கும். அதற்காகத்தான் அளவீடாக நீதிபதி, நீதிமன்றம், அறிஞர்கள் , போன்றவர்களை, போன்றவைகளை எல்லைகாளாக வைக்கின்றோம். அதில் முடிவான வற்றை அதுவரைப் பயன்படுத்துவோம். அதை மேற்கோளாக காட்டுவோம். போட்டித் தேர்வு எழுதும் இன்றைய மாணவர்கள் இத்தளத்தை பார்க்கின்றனர். இது எதைப்பார்த்து எழுதினாய் ஒரு மாணவரின் ஆசிரியர் கேட்டால் விக்கிப்பீடியாவில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று கூறினால் தளத்தைப் பற்றி நல்ல அபிப்ராயம் வருமா? மதிப்பெண் கிடைக்குமா? தமிழ் படிக்கின்ற மாணவருக்குத் தான் பெரும்பாலும் இத்தளம் பயன் அளிக்கும். அவரும் பயன்படுத்தவில்லை. என்றால் யார் பயன்படுத்துவர்.
இப்படி பல விமர்சனங்கள் வந்து வந்து தான் சில எழுத்துக்ளை அனுமதித்திருக்கின்றோம். அதை மேற்கோளாக வைத்து செயற்படுவதே சர்ச்சைகளைத் தவிர்க்கும். வேறு எந்த விளக்கம் கொடுத்தாலும் உங்களுடைய பற்றை வெளிப்படுத்துவதாக கருதுவார்களேத் தவிர. அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதற்காகத் தான் பொருள், பொருள் என்கின்றேன்.--செல்வம் தமிழ் 04:43, 10 மே 2009 (UTC)
//தமிழ் எழுத்துக்கள் உருவாக்கப்படும் பொழுது விஞ்ஞானம் வளரவில்லை, வரலாற்றுப் பாடங்கள் இல்லை//
தற்கால அறிவியலில் உள்ள பல கருத்துகளை பழந்தமிழ் இலக்கியத்தில் சுட்ட முடியும். சரி, ஒரு கேள்வி: தமிழ் தவிர்த்த பிற இந்திய மொழிகளில் தான் கிரந்த ஒலிகளுக்கான எழுத்துகள் உள்ளனவே? அவை எந்த அளவு அறிவியல், வரலாறு முதலிய துறைகளில் முன்னேறியுள்ளன? முன்னேறவில்லை என்றால், ஏன் முன்னேறவில்லை?--ரவி 08:44, 10 மே 2009 (UTC)
//ரவி, கோபி போன்ற பயனர்கள் இது குறித்து உரையாடி உள்ளனர். அந்த கருத்தே என் கருத்தும்.//
பல இடங்களில் என் கருத்தே உங்கள் கருத்து என்கிறீர்கள். நான் ஒரு போதும் கிரந்தத்தை ஆதரித்துப் பேசியதில்லை என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
//கிரந்த எழுத்தை தவிர்ப்பது தமிழ் பற்றைத் தவிர வேறு எந்தப் பொருளையும் உணர்த்தவில்லை. புதிய பொருளற்ற சொல்லையே உரிவாக்குகின்றத். இது அதை விட மிகப்பெரியத் தவறு.இதையெல்லாம் ஆய்ந்து பல நம் அறிஞர்கள் அனுமதித்த ஒன்று தான் கிரந்த எழுத்துக்கள்.//
எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கும் நீங்கள், மேற்கண்ட கிரந்த ஆதரவு ஆய்வு முடிவை, எந்தெந்த அறிஞர்கள் எப்போது எங்கு என்ன நோக்கத்துக்காக ஆராய்ந்து முடிவெடுத்தார்கள் என்று ஆதாரம் தர முடியுமா?--ரவி 08:51, 10 மே 2009 (UTC)
கிரந்த எதிர்ப்பு முடிவை எப்படி தன்னிச்சையாக எடுத்தீர்களோ அப்படித்தான்? உங்கள் பெயரை தவறாக குறிப்பிட்டுவிட்டேன் அது வினோத் என்று மாற்றிக்கொள்ளுங்கள். இது குறித்து விளக்கம் வேண்டாம் என்று முன்பே குறிப்பிட்டுவிட்டேன். என் கருத்தை பதிய உரிமை இருக்கின்றது. இந்த கேள்விகளை அரசாங்கத்திடம் கேட்டால் நன்மை உண்டாகும். மேலும் மீண்டும் சர்ச்சையை கிளப்புவது பொருத்தமற்றது. இதற்குரிய விளக்கங்கள் நிறையவே கொடுத்தாகிவிட்டது.--செல்வம் தமிழ் 09:07, 10 மே 2009 (UTC)
//கிரந்த எதிர்ப்பு முடிவை எப்படி தன்னிச்சையாக எடுத்தீர்களோ அப்படித்தான்?//
ஆக, முதற்கண் கிரந்தத் திணிப்பு என்பது யாரோ தன்னிச்சையாக எடுத்த எதேச்சதிகார முடிவு என்று ஒப்புக் கொள்கிறீர்கள். அப்படித் தானே?
த.வியில் ஆயிரக்கணக்கான பக்கங்களிலும் தலைப்புகளிலும் கிரந்தம் அப்படியே தான் இருக்கிறது. கிரந்தத்தை அனுமதிக்கவே கூடாது என்று எந்தக் கொள்கையும் இல்லை. ஒரு சில கட்டுரைகளில் சில பயனர்கள் கிரந்தம் விடுத்து எழுத நினைத்தால் அதைத் தடுக்க நினைப்பதும் இல்லை. அதிகாரப் போக்கு, எதேச்சதிகாரம் என்பதெல்லாம் உங்கள் கற்பனை. நன்றி--ரவி 11:20, 10 மே 2009 (UTC)
நையாண்டி செய்பவர்
தொகுகிரந்த ஆதரவாளர்க்ளை நையாண்டி செய்பவர் என்று தங்களைப்பற்றி ஏற்கனவே ஒரு இடுகையில் பார்த்தேன். கிரந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் நையாண்டியை............... உங்கள் கூற்றுப்படி நான் கிரந்த ஆதரவாளன் என்பது அதே உங்கள் கூற்றுப்படி நீங்கள் கிரந்த எதிர்ப்பாளர் அதையும் நீங்களே. இங்கு நடக்கும் விவாதங்களை சரியாக உள்வாங்காமல் கருத்து தெரிவிப்பது ஆகும். இதோ உங்கள் முந்தைய பண்பாடு இதிலிருந்து நிறையவே நடுவுநிலைமையும் தெரிகின்றது வாழ்க உமது பற்று.
ரவிசங்கர் says: August 26, 2008 at 6:51 am சுப. நற்குணன்,
உங்களை இவ்வளவு விரிவாக எழுத வைத்ததற்கு மன்னிக்கவும். கிரந்த எழுத்துக்கு ஆதரவாக இருப்பவர்களின் கருத்தை நையாண்டி செய்து எழுத முயன்றேன். நம்ம எழுத்து திறமை அவ்வளவு பத்தாது போல
கிரந்தம், புது எழுத்துகள் சேர்ப்பு தொடர்பில் உங்கள் கருத்து தான் என்னதும். பார்க்க - கிரந்தம்
--செல்வம் தமிழ் 10:53, 10 மே 2009 (UTC)
கிரந்தம் என்ன ஆஸ்கார் அவார்டா? கிரந்த ஆதரவாளர் எதிர்ப்பாளர். தேசிய ஒருமைப்பாடு, தேசத்துரோகி என்று பிரித்தால் ஒரளவிற்குத் தகும். இப்படிபட்ட பயனர்கள் மத்தியில.......... ஒருவர் தமிழ்நாட்டுப் பாடபுத்தகத்தில் தவறிருக்கின்றது என்னைத் திருத்தச் சொல்கின்றார். என்ன கருத்தை பற்றி பேசுகின்றோம்? எதை வலியிறுத்துகின்றோம்?. யோசிப்பதே இல்லை. வாத்தியார கிட்ட சொல்லியிருக்கவேண்டும் அரசிடம் சொல்லவேண்டியதை அல்லது அந்த புத்தகத்தை எழுதிய பேராசிரியர்களிட்ம, ஆசிரியர் குழுக்களிடம், கல்விக்குழுக்களிடம், கல்வி அமைச்சகத்திடம் சொல்லவேண்டும். அடுத்தமுறை நீங்களே புத்தகம் எழுதுங்கள் என்று அழைத்திருப்பார்கள். இராஜஸ்தான் என்பதற்கு மேற்கோள் காட்டியிருந்தேன். ஒலைக்குடிசையில் இருப்பவன், விவசாயி லேப்டாப் வைத்துக் கொண்டு விக்கிப்பீடியாப் பார்த்தா படிப்பான். அவனுக்கெப்படி நீங்கள் ஒருவர் இருக்கின்றீர்கள் என்றுத் தெரியும். இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் யாராயிருந்தாலும் உணர்ச்சிவயப்படுவர். இல்லையேல் நம்மை பிண......... நிர்வாகிகள் கவனிக்க. நையாண்டிக்காக கேள்விக் கேட்பவர் என்று தன்னை அறிவித்துக்கொள்ளும் ஒருவரை எப்படி நியாவாதியாக எடுத்துக்கொள்ளமுடியும். மனித உரிமையை ப்ற்றி கட்டுரை எழுதுகின்றேன் இங்கேயே மனித உரிமை மீறப்படுகின்றது. ஒருவரை இழுவுபடுத்துவது மனித உரிமை மீறல் என்று எப்படித் தெரியாமல் போனது. எழுத்து ஒருவரின் முகம் காட்டிவிடும் என்று நண்பர் கனக் க்கு ஏற்கனவே தெரிவித்திருக்கின்றேன். இப்படி இருப்பவருக்கு பற்று இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
விவேகானந்தர் சொன்னது போல பல ந்தி பல வழிகளில் சென்று கடலை அடைகின்றது அப்படித்தான் நம்முடைய விக்கி கட்டுரையாளர்களும் அவரவர் கருத்துக்களுடன் தமழுக்கு சேவை செய்கின்றனர். எல்லோருடைய சேவையும் ஒன்றுதான். தமிழில் மிகப் பெரிய இணையத்தளமாக விக்கியமைய வேண்டும் எல்லோரையும் போலத்தான் என்னுடைய கனவும். இதை பெருமையாக பேசவேண்டும் மாணவர்கள் இதை பயன்படுத்தவேண்டும் என்பது தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் ஈர்க்கப்பட்டு இதில் பங்கு பெறவேண்டும் அதற்காகத்தான் பக்கங்களை அழகு படுத்துகின்றேன். இந்த நிலையில் இருப்பதால் யாரும் வரவில்லையோ என்று தோன்றுகின்றது. பெரிய அறிஞர்களை நீங்கள் கேவலப்படுத்திவிட்டால் என்ன செய்வது. அவர்கள் எல்லாம் மானத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
இரண்டு நாளாக நண்பர்கள் உரையாடினார்கள் உணர்ச்சிபூர்வமாக இருந்த்து. யாரையும் கேவலப்படுத்திக் கொள்ளவில்லை. அதுவே பயத்தைக் கொடுத்தது. ஆனால் சம்பந்தமே இல்லாத சிலர் தீடீரென்று வந்து கேவலப்படுத்திவிட்டனர். ஆக அவர் நடிப்பவர் என்று இடுகையில் தெரிந்த்து. இப்படியெல்லாம் ஒருவர் இருப்பாரா? கேள்வியே ஒருவரை கேவலப்படுத்த்தான் கேட்கப்படுகின்றதா? என்ன படித்து...........என்ன?--செல்வம் தமிழ் 12:06, 10 மே 2009 (UTC)
உங்கள் கருத்தை உள்வாங்கி எழுதிய மறுமொழி, எழுப்பிய கேள்விகளை இங்கு பார்க்கவும். --ரவி 11:16, 10 மே 2009 (UTC)
நீங்கள் உள்வாங்கியது போதும். இதற்கு விளக்க விவாதம் நேற்றே முடிந்து விட்டது. வெளிவாங்குகின்றேன். உமது நிலையை விளக்கியபின் என்ன விளக்கம் வேண்டிக்கிடக்கின்றது.--செல்வம் தமிழ் 13:14, 10 மே 2009 (UTC)
செல்வம், தமிழ் விக்கிப்பீடியாவில் சில மாதங்களுக்கு ஒரு முறை யாராவது அடையாளம் காட்டாமல் வந்து த.வி நடை குறித்து விமர்சிப்பார்களே தவிர, ஒரு பங்களிப்பும் நல்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக அவர்களோடு பண்பாடு உரையாடி உரையாடி வெறுத்துப் போயே சில வேளை பகடியாக எதிர்வினையாற்றுகிறேன். பேச்சு:மஞ்சுசிறீ கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன். இதுவே என்னுடைய தற்போதைய நிலைப்பாடும்:
//வெளியுலகில், தமிழ் விக்கிபீடியாவின் மொழி நடை தொடர்ந்து விமர்சனதுக்கு உள்ளாகி வருவது கவனிக்கத்தக்கது. விமர்சனம் என்பதைத் தாண்டி, சராசரி வாசகனை அதிகம் குழப்பாமல் நம் முயற்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது. தமிழ் விக்கிபீடியா தனித்தமிழ் வெறியர்களின் கையில் என்பது போன்ற தவறான தோற்றம் வருவதும் தொடக்க நிலையில் உள்ள நம் திட்டத்துக்கு உகந்ததல்ல. எந்த முக்கிய கொள்கை முடிவானாலும், விக்கிபீடியாவின் நடுநிலைமையை விளம்புவதற்காகவேனும், இன்னும் சில மாற்றுக் கருத்துடையவர்களின் கருத்தையும் பதிவு செய்து, உரையாடி, அவகாசம் கொடுத்து முடிவு எடுக்கலாம் என்று நினைக்கிறேன். தற்போது மிகக் குறைவான எண்ணிக்கையிலான பங்களிப்பாளர்களே இருக்கும் நிலையில் இது போன்ற முக்கிய கொள்கை முடிவுகளை வலியுறுத்துவது முறையாக இருக்குமா?. சரியான முடிவாகவே இருந்தாலும் ஒருதரப்பான முடிவாக இருப்பது நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன். கிரந்த எழுத்துக்கள் தொடர்பாக தற்போது எந்த கொள்கை முடிவு எடுப்பதற்கான அவசரத் தேவையும் இருப்பதாகத் தோன்றவில்லை. தற்போதைக்கு அவரவர் கருத்து நிலைக்கு ஏற்ப செயல்படும் சுதந்திரம் இருக்கட்டுமே? இன்னும் கூடிய பங்களிப்பாளர்கள் வந்த பிறகு இது குறித்து முடிவெடுக்கலாம் என்பது என் கருத்து//
இராசத்தான் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் கையெழுத்திடாமல் எழுதி இருந்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் நையாண்டியாக எழுதி இருந்தேன். நற்கீரனை நோக்கி நீங்கள் உணர்ச்சி வயப்பட்டு எழுப்பிய கேள்வியும் ஒரு காரணம். தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் ஆற்றி வரும் பெரும் பங்களிப்பினை மிகவும் மதிக்கிறேன். அது தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். த.வி-க்கியில் ஒரு சில பக்கங்களில் கிரந்த ஆதரவு-எதிர்ப்பு வாதங்கள் நடந்தாலும் 99% பக்கங்களில் கிரந்தம் இருக்கவே செய்கிறது. ஒரு நிருவாகியாக இருந்தாலும் அவரவருக்கு தத்தம் கருத்துகள் இருக்கும் தானே? இதை உரையாடக் கூடவா ஆகாது? சற்று இதைச் சிந்தித்துப் பாருங்கள். --ரவி 15:52, 10 மே 2009 (UTC)
ஒரு சந்தேகம்
தொகுசெல்வம், இராசத்தான் பேச்சுப்பக்கத்தில் பின்வரும் இணைப்பைத் தந்திருந்தீர்கள்.
குறித்த பாடநூலின் 319 - 326 வரையான எட்டுப் பக்கங்கள் அக்கோப்பில் உள்ளன.
பக்கம் 319
1. இந்தியா ஒரு அறிமுகம் எனத் தொடங்குகிறது. இது தமிழ் இலக்கணப்படி பிழையானது. ஆயினும் தமிழக அரச பாடநூலில் உள்ளதென்பதால் அவ்வாறே நாம் எழுதலாமா?
2. டச்சு என ஒரு நாட்டின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிடப்படுவது எந்த நாட்டை?
3. சூரினம் மற்றும் மயன்மார் என்பதில் வரும் மற்றும் என்ற பயன்பாடு தமிழுக்கு ஒவ்வாதது; ஆனால் பாடத்திட்டத்தில் உள்ளதென்பதால் அதனையே பயன்படுத்த வேண்டுமா?
பக்கம் 320
4. ஐக்கிய நாடுகள் எனகு குறிப்பிடப்படும் நாடு எது?
5. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் என எழுதுவது தமிழ்நடைக்குப் பொருத்தமா?
பக்கம் 321
6. இனைத்து இது சரியா?
7. 6ணி என்றால் அதன் பொருள் என்ன?
8. 3.3 மில்லியன் கி.மீ. பரப்பளவை - பரப்பளவு கி.மீ.யிலா அளக்கப்படுகின்றது.
பக்கம் 322
9. ஓர் மையம் - இது சரியா?
இவை எடுத்துக்காட்டுக்கு ஒருசில மட்டுமே. இத்தகைய ஒரு பாடத்திட்டத்தை முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கின்றீர்களா? கோபி 07:00, 10 மே 2009 (UTC)
எழுதலாம் அதான் அளவு கோள். சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஆதாரங்கள் இல்லாதவை சர்ச்சைகளை வளர்க்கும் இப்போதைக்கு அதுவே சிறந்த்து. இது குறித்து பொது கருத்து, ஒத்த கருத்து எட்டியபின் மாற்றலாம். இது குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கலாம், தவறாக பாடம் நடத்துவதை தவிர்க்கலாம் அல்லவா?. அதுவே பொது நலம் நாம் மட்டுமே அளவு கோள் ஆக ஆகமுடியாது.--செல்வம் தமிழ் 07:15, 10 மே 2009 (UTC)
செல்வம், அரச பாடநூல்களைத் திருத்தச் சொல்ல இக்கேள்விகளை நான் உங்களிடம் முன்வைக்கவில்லை. நீங்கள் ஓர் ஆதாரத்தை முன்வைத்தீர்கள். அந்த ஆதாரம் பொருத்தமில்லை என்பதனை மட்டுமே சுட்டிக் காட்ட விரும்பினேன்.
அண்மையில் நான் த.வி.க்கு எப்பங்களிப்பும் செய்யவில்லை எனினும் அண்மைய மாற்றங்களைத் தொடர்ந்து அவதானித்தே வருகின்றேன். உங்கள் பங்களிப்புக்கள் மிக்க மகிழ்ச்சியளித்தவை. அதே நேரம் சொற்கள் மொழிபெயர்ப்பது போன்றவற்றுக்கு உரிய நூல்களைத் தேடிப் பொருத்தமான சொற்களைக் கையாண்டதும் பாராட்டுக்குரியது.
ஆனால் உண்மை என்னவென்றால் போதிய தரமான ஆதாரங்கள் தமிழில் இல்லை என்பதே. நான்கு பக்கங்களில் ஒன்பது பிழைகளைக் கொண்ட ஒரு நூலை ஆதாரமாக முன்வைக்கும் நிலையில் தமிழ் இருப்பது வருத்தந்தருவதாகவே உள்ளது.
ராஜஸ்தான் என்பதற்கு மேற்கோள் காட்டியிருந்தீர்கள். ஆனால் அம்மேற்கோள் நம்பகமானதல்ல என்பதனை மட்டுமே நான் சுட்டிக் காட்ட விரும்பினேன். கேவலப்படுத்துவதோ புண்படுத்துவதோ நோக்கமல்ல.
நீங்கள் காட்டிய ஓர் ஆதாரம் பொருத்தமில்லை என்று சொல்வதனை உங்களைக் கேவலப்படுத்துவதாக நீங்கள் எடுத்துக் கொண்டால் நாம் உரையாடுவதிலேயே பயனில்லை.
நன்றி. --கோபி 15:08, 10 மே 2009 (UTC)
கையெழுத்து
தொகுசெல்வம், தயவு செய்து நீங்கள் கருத்து தெரிவிக்கும் பக்கங்களில் உங்கள் கையெழுத்தை இடவும். யார் எந்த கருத்தைச் சொன்னார் என்று குழப்பம் இன்றி படிக்க உதவும். தங்கள் கையெழுத்தை இட கருத்தின் இறுதியில் --~~~~ என்று எழுதுங்கள். அல்லது, தொகுப்புப் பெட்டிக்கு மேல் உள்ள பொத்தான்களில் பத்தாவது பொத்தானை அழுத்துங்கள். அப்புறம், உங்களை அவமதிப்பதற்காக யாரும் திடீரென்று கிளம்பி வரவில்லை. நான், கோபி உட்பட நெடுநாள் பங்களிப்பாளர்களே. தற்போது பணிச்சுமையால் சற்று ஒதுங்கி இருக்கிறோம். என்னுடைய பங்களிப்புகளை இங்கு காணலாம். நன்றி--ரவி 15:56, 10 மே 2009 (UTC)
- செல்வம் தமிழ், "என் விருப்பத்தேர்வுகள்" (menu in top) பக்கத்தில் உள்ள 'வெறும் கையொப்பம் மட்டும் (இணைப்பு இல்லாமல்)' என்ற checkbox ஐ tick செய்யாமல் விட்டால் உங்கள் கையெழுத்து இணைப்புடன் நீல வண்ணத்தில் வரும். தற்போது உங்கள் கையொப்பம் இணைப்பு இல்லாமல் கருப்பு நிறத்திலேயே வருவதால் எங்கு உங்கள் உரையாடல் முடிகிறது என்பதை சுலபமாக அறியமுடியவில்லை. --குறும்பன் 19:34, 13 மே 2009 (UTC)
நன்றி மாற்றிவிட்டேன்--செல்வம் தமிழ் 19:56, 13 மே 2009 (UTC)
தமிழ்நாடு வனத் துறை
தொகுதமிழ்நாடு வனத் துறை பக்கத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். பார்க்கவும் செல்வம் தமிழ்--கார்த்திக் 05:43, 12 மே 2009 (UTC)
- செல்வம், நீங்கள் விளக்கம் எதுவும் தராமல் சிங்கவால் குரங்கு என்று மாற்றியதை நீக்கியுள்ளேன். ஒரு மாற்றத்தை மூன்று முறைக்கு மேலாக விவாதிக்காமல் செய்யக் கூடாது என்பது விக்கிப்பீடியாவின் நெறிமுறை ஆகும். (பார்க்க en:WP:3RR) அதனால் அதை மீண்டும் மாற்ற விரும்பினால் கட்டுரையின் பேச்சுப்பக்கத்திலோ விவாதியுங்கள். என்னுடைய திருத்தத்தில் காரணமாகச் சொல்லியுள்ளது காட்டுயிர் நூல்களில் அவ்வாறு உள்ளது என்பது. அதை மறுப்பதற்கான காரணத்தைச் சொல்லுங்கள். இருதரப்புக்கும் உடன்பாடென்றால் திருத்தி விடலாம். -- சுந்தர் \பேச்சு 09:06, 12 மே 2009 (UTC)
விக்கிப்பீடியா நிர்வாகிகளுக்கு குறிப்பாக செல்வா, அதற்கு மேல் உள்ள அதிகாரப்பூர்வத் தலைமை நிருவாகிகளுக்கு
தொகுஇத்தளத்தில் அனைவரும் குழுவாக செயல்படுவதாக கருதுகின்றேன். இரண்டு நாளாக சிலர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது. மேற்கோள் காட்டிய கட்டுரையில் நீக்க முயற்சிக்கும் பொழுதே அறிந்து கொண்டேன். மீண்டும் மீண்டும் தொடர்ந்து நீக்குகின்றனர். காரணம் கூறாமல் நீக்குவது கண்டனத்துக்குரியது. கட்டுரை எழுதி தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இத்துடன் விக்கிப்பீடீயாவில் இருந்து விலகவேண்டும் என்று விரும்புகின்றார்களோ என்னவோ?. கடைசியாக பங்கு பெற்றவர் சுந்தர், கார்த்திக் பாலா. கார்த்திக் பாலா ஈடுபட்டிருக்கமாட்டார் முனைவராக பயிற்சி பெறுபவர்.
இவருக்கு என்ன வெறுப்போ தெரியவில்லை. கட்டுரை முடிவுறாத நிலையில் யாரும் பங்கு பெற்றதில்லை. இவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் என்னிடம் பதில் கிடைத்தது அதனால் இருக்கலாம். இவர்களுடைய ஒவ்வாத கருத்துக்கு நான் ஒத்துப் போகாமல் இருந்திருக்கலாம். எல்லாரையும் எடுத்தறிந்து, தமிழகத்தில் உள்ள எல்லாம் தவறு, அரசு தவறு, பாடநூல் தவறு, எல்லோரும் முட்டாள்கள் என்று மாறைமுகமாக சுட்டிக் காட்டி பேசியதிற்கு நான் பிடிகொடுக்காது போயிருக்கலாம். நீங்கள் இந்த போக்கை கடைப்பிடித்தால் நானும் இதே போக்கைத்தான் கடைப்பிடிக்க வேண்டி வரும்.
இராசத்தான் என்ற கட்டுரைக்கு கூட இன்று வரை நீக்கவில்லை, செல்வா குறிப்பிட்டும் கூட. ஸ்ரீபெரும்புதூர் என்ற கட்டுரை இருக்கலாம் ஆனால் இராஜஸ்தான் இருக்க்கூடாது என்று முறையற்ற வகையில் செயல் படும் பொழுதே நியாயத்துட்ன யாரும் நடக்கவில்லை. இதில் இவர்களே நிர்வாகிகளாக இருப்பதால் இந்த நிலை ஏற்படுகின்றது. விக்கி வரையறுத்த கொள்கைகளை, விதிகளை இவர்களே மீறுகின்றனர்.
இவர்கள் எழுதிய கட்டுரையை யாரும் கைவைக்கமுடியாது பிறர் எழுதும் கட்டுரைகளை வேண்டும் என்றே தலையிடுகின்றனர் இதற்கு கட்டுரை வரலாறுகளைப் பார்த்தாலே புரியும். நேற்றும் கிரந்த்தைபற்றி ஆதாதரமும் கொடுத்து விட்டேன் கிரந்த கல்வெட்டு எழுத்துக்களை பயன்படுத்தலாம். சிலர் தைரியமாக நையாண்டி செய்தேன் என்று கூறுகின்றனர். நக்கீரனுக்காக செய்தேன் என்று குற்றத்தை ஒப்புக்கொள்கின்றார். இதற்கு நக்கீரனும் உடந்தையா? வெளி நாடு வாழ் இந்தியரை வெளி நாடு வாழ் இந்தியர் என்றுதான் சொல்லமுடியும்.
நான் வெளி நாடு சென்றாலும் என்னையும் வெளி நாடு வாழ் தமிழர் என்றுதான் கூறுவார்கள். இதில் என்னத் தவறு இருக்கிறது. சட்டத்திற்குட்பட்ட வார்த்தைதானே. தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரின் பெயரேயே மாற்றுகின்றனர். எதனால் இந்த நாட்டில் வாழாத்தினால் தான் இங்கு வாழ்பவர் அப்படி செய்யமாட்டார்கள் ஒன்று அவர் மேல் வெறுப்பு இருக்கவேண்டும் அல்லது எதிர்க்கட்சியினராக இருக்கவேண்டும். இந்திய மாநிலத்தின் பெயரேயே மாற்றுகின்றனர்.. இந்திய நாட்டில் வாழ்ந்திருந்தால் இந்த செயல் செய்திருப்பார்களா?. பிற நாடுகளைத் தான் மாற்றுகிறீர்கள் என்று பார்த்தால் இங்குள்ள மாநிலங்களையும் மாற்றுகின்றீர்கள்.
அதற்கு மேற்கோள்கள் கேட்டால் தரமாட்டேன். இவர்கள் யாரை வேண்டுமானாலும், சின்ன விஷயத்திற்கே மேற்கோள்கள் கேட்பார்கள். அவர் ரஷ்யாவின் அதிபர் ஜோஸப் ஸ்டாலின் பெயரை வைத்திருக்கின்றார் என்றாலும், நான் மாற்றுவேன், மாற்றலாம் தமிழ் நாட்டில் எல்லாம் தவறு இலக்கணம் தெரியாது, கிரந்தம் தெரியாது, நாங்கள்தான் தமிழ்நாட்டுக்கே கல்வி கற்றுக்கொடுத்தோம்.
(நீங்கள் குறிப்பிட்டதை ஒரு முறை படித்து பாருங்கள்) நீங்கள் முதலிலேயே அறிவித்து விடலாம் இங்கு இப்படித்தான் வரையரை என்பதெல்லாம் கிடையாது ஆளாளுக்கு நாட்டாமை போன்று செயல்படுவோம். இது மாதிரி பல பேர்களை அனுப்பியிருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. நான் முன்போல ஈடுபாடு காட்டுவதில்லை. என்க்கு முன்பே தெரிந்து விட்டது அதனால் எச்சரிக்கையாகவே இருந்தேன். தினம் தினம் உங்களின் நடவடிக்கைகள் பல விஷயங்களை கற்றுக் கொடுத்துவிட்டன.
இவரும் கட்டுரை ஆரம்பிக்க மாட்டார் நான் எப்பொழுது கட்டுரை ஆரம்பிக்கின்றேன் என்று பார்த்து உடனே உள்ளே நுழைந்து ஏடாகூடம் செய்வது. நீங்கள் செய்கின்ற வினை உங்கள் பின்னால் வரும். அது ஏதாவது ஒரு உருவிலோ, ஏதாவது ஒரு வகையில் வரும். எல்லாவற்றுக்கும் தண்டணை உண்டு. நீங்கள் மறுப்பதால் பயனில்லை கட்டுரை வரலாறு காட்டிக் கொடுத்துவிடும்.
கட்டுரை எழுதுவதை விட பதில் கொடுப்பதிலேயே நேரம் போகின்றது. அவ்வப்பொழுது இடைஞ்சல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இராசத்தான் என்று இவர் மட்டும் தவறாக எழுதினால் பறவாயில்லை என் கட்டுரையிலும் தவறாக பயன்படுத்த வற்புறுத்துவது என்ன நியாயம். இடைஞ்சல் கொடுத்தால் கட்டுரை எப்படி எழுத முடியும். என்க்கு இடைஞ்சல் கொடுப்பவர்கள் இனி கட்டுரை எழுதட்டும். அவரே படித்துக் கொள்ளட்டும். நிர்வாகிகள் பதிலளிக்குமாறு கேட்கின்றேன். --செல்வம் தமிழ் 10:36, 12 மே 2009 (UTC)
சுந்தர் அப்படி என்ன அவசரம்
தொகுஇதை நீங்கள் முதலிலேயே சொல்லவேண்டும் இந்த விதிகள் எல்லாம் தெரியாது விக்கியில் கூறியிருந்தாலும் சிலவற்றை அனுபவபூர்வமாகத் தான் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் இப்படி செய்தால் எதிர் பக்கத்தில் இருப்பவர் எப்படி விளங்கிக்கொள்ள முடியும். விக்கியை ரொம்ப காலம் பயன்படுத்துபவர் என்ற பெயர் பெற்றவர்கள் நீங்கள். எல்லாப் பயனர்களும் பார்வையற்றவர்கள் போல்தான் அந்தப் பக்கம் நடைபெறுவதை நீங்கள் விளக்காமல் செய்தால் எடுத்துக்கொள்வார்கள். வீணாண சர்ச்சைகள் தான் உருவாகும். இப்பொழுதுதானே ஒரு சர்ச்சை முடிந்த்து. நிர்வாகிப் பொறுப்பில் இருந்து கொண்டு செய்யலாமா? (நிரிவாகி பொறுப்பில் உள்ளவர்தானே) என்ன உங்களுக்கு விரோதம் என்ன அவ்வளவு அவசரம்? அதற்குள் உலகமா அழிந்து விடவா போகின்றது? பொறுமையாக என்னிடம் குறிப்பிட்டுவிட்டு செய்யுங்களேன். இந்த கட்டுரையை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள் என்று விட்டுவிடப் போகின்றேன். இவ்வளவு ஆர்வம் உள்ளவர் நீங்களே கட்டுரை எழுதியிருக்கவேண்டும் அல்லது துவங்கியிருக்கவேண்டும். இது ஏதோ முன் விரோத்தைத்தான் காட்டுகின்றது. உங்கள் புத்திசாலிதனத்தை என்னிடம் ஏன் காட்டவேண்டும்.
மேற்கோள் காட்டியிருக்கின்ற பகுதியை நீக்கினால் எதற்கு மேற்கோள் உமது மேற்கோள்கள் தான் உண்மையானவை பிறர் மேற்கோள்கள் பொய்யானவையா? என்ன உணர்த்துகின்றீர்கள். இனிமேல் நீங்கள் எழுத விரும்பாத கட்டுரை ஏதாவது இருந்தால் பட்டியலிடுங்கள் அதை நான் முடிந்தால் (இப்பொழுது அல்ல பிறகு) எழுதுகின்றேன்.--செல்வம் தமிழ் 11:06, 12 மே 2009 (UTC)
- என்னுடைய நீக்கலுக்கான காரணத்தை ஒவ்வொரு தொகுப்பிலும் தொகுப்புச்சுருக்கப் பெட்டியில் இட்டிருந்தேன். தொகுப்புச் சுருக்கங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று எண்ணினேன். பொதுவாக, முதல் முறை மாற்றும்போது தொகுப்புச்சுருக்கத்தில் செய்தி இடுவது வழக்கம். சிக்கலான மாற்றம் என்றால் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இடுவோம். பங்களிப்பாளரின் உடனடி கவனத்தை ஈர்ப்பது என்றால் மட்டுமே பங்களிப்பாளரின் பேச்சுப் பக்கத்தில் செய்தி இடுவது வழக்கம். நீங்கள் இரண்டு முறைகளின் போதும் கவனிக்கவில்லை என்பதால் உங்கள் பேச்சுப்பக்கத்தில் இட்டேன். தொகுப்புச்சுருக்கத்தைப் பற்றி பங்களிப்பாளர்களை வரவேற்கும்போது விளக்க வேண்டும் என்று நினைக்கிறேன். புதிதாய் வருபவர்கள் கவனத்திலிருந்து தப்பிவிடக்கூடியது. இது தொடர்பான ஆங்கில விக்கி உதவிப் பக்கத்தைப் பார்க்கவும்: en:Help:Edit summary. என்னுடைய பங்களிப்புகளின் தொகுப்புச் சுருக்கங்களை இங்கே பார்க்கலாம்.
- உங்கள் மீது எனக்கு எந்த முற்பகையும் கிடையாது. நீங்கள் எதனால் அவ்வாறு நினைக்கிறீர்கள் எனப் புரியவில்லை. இங்கு ஒவ்வொருவரும் நன்னயம் கருதுகிறோம். அனைவரும் அவரவர் சொந்த நேரத்தைச் செலவழித்து பங்களிக்கையில் மற்றவர்களது நோக்கத்தை குறையாக நான் எண்ணியதில்லை. ஆனால், நீங்கள் கட்டுரைகளை நோக்கிய நிறைகுறைகளை உங்களை நோக்கியதாகக் கொண்டுள்ளீர்களோ என்று அஞ்சுகிறேன். ஒருவேளை நேரில் பேசுவது போல் இல்லாமல் எழுத்தில் படிக்கையில் தவறான தோற்றத்தைத் தருகிறதோ என்னவோ?
- நான் நிருவாகியாக உங்கள் தொகுப்பை மீள்விக்கவில்லை. அது எந்த பயனர் வேண்டுமானாலும் செய்யக்கூடியதே. நீங்கள் மேற்கோள் காட்டியவற்றில் எவற்றை நான் நீக்கினேன் என்பதைக் கூறினால் திருத்திக் கொள்கிறேன். தவறாக நீக்கியிருந்தால் வருந்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:30, 12 மே 2009 (UTC)
சிங்க வால் குரங்கு,lion tailed mqcq..., சாம்பல் நிற அணில் இது அநுத வன்த்துறையின் அறிமுகம். நான்தான் இணைப்புத் தருகின்றேனே. அது வேறு பெயரில் தலைப்பில் இருந்தாலும் அதைப் பார்த்துவிட்டுத்தான் உங்களுக்கு பதிலிலத்தேன் நீங்கள் இது ஒரு அதிகாரப்பூர்வ தமிழ் நாடு வனத்துறை இணையத் தளத்தின் தமிழாக்கம். நான் எழுதிவிட்டபின் மொழிபெயர்ப்பு பிழை இருந்தால் திருத்தவும் என்று குறிப்பிட்டிருந்தேன் அதற்கு மேற்கோள் இடுகின்றேன் நீங்கள் வேண்டுமானால் விலங்கியல் ரீதியான விளக்கங்களை அதன் பகுதிகளில் கொடுங்கள் என்றுதானே குறிப்பிட்டேன். அதை மூன்று முறை மாற்றியும் மீண்டும் மீண்டும் மாற்றினால் நானும் உரையாடல் பகுதி சென்று பார்க்கின்றேன் ஒன்றும் குறிப்பிடவில்லை. மீண்டும் மீண்டும் மாற்றிக்கொண்டேயிருக்கின்றீர்கள்.
இங்கு அனைவரும் இவருடன் வாதிட்டதால் சண்டைக்கு வந்தேன் உங்களை நையாண்டி செய்தேன் என்று வெளிப்படையாக கூறுகின்றனர். அதற்கு சம்பந்தபட்டவரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஒருவரையொருவர் பேசிக்கொண்டு செய்தால் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. அது நடந்தவுட்ன இது நடந்த்தால் உங்கள் மனதில் இருப்பதை என்னால் அறிய முடியவில்லை. இங்கு நடப்பதை வேறுவிதமாக எடுத்துக் கொண்டால், கருத்து பதிவு, கருத்து சுதந்திரம், நாம் இதைச் சொன்னோம் அதனால் இவர் இதைச் சொல்கின்றார் என்று எடுத்துக் கொண்டால் இந்த எண்ணங்கள் எழாது. மாறாக வெளிப்படையாக பகிரங்காமாக நிர்வாகிப் பொறுப்பில் உள்ளவர்களே தாக்குகின்றனர். அந்தப் பொறுப்பு ஆசிரியர் தொழிலைவிட மேலானது பொறுமை வேண்டும். அவர்களுக்கே எதிரான கருத்துக்கள் வந்தாலும் தடம் புறளக்கூடாது. சபாநாயகர் பதவிப் போல. இரண்டு நாளாக பெரும்பாலானவர்கள் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களே. புதிதாக இடம் பெற்றவர்கள் என்றே அறிகின்றேன். கட்டுரையையே வெறுப்பில் நீக்கிவிட்டேன், முடிந்தால் தாங்களே மீள்வழிப்படுத்தவும் அதை உங்களிடமே விட்டுவிட்டேன்.
தமிழன் என்றுதான் தன்னிலை உணரப்போகின்றானோ, ஈரமானத் தமிழன், ஒற்றுமையற்றத் தமிழன்,சொரணையற்றத் தமிழன், பிறமொழியினரைப் பார்த்தாவது திருந்தாத தமிழன், இனமானமற்றத் தமிழன், பிறர் காலடியில் வீழ்ந்து கொண்டிருக்கோமே என்று உணராதத் தமிழன். என்று பேராசிரியர் அன்பழகன் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார் அதுதான் நினைவுக்கு வருகின்றது. --செல்வம் தமிழ் 12:06, 12 மே 2009 (UTC)
- நீங்கள் தந்த இணைப்பில் சிங்கவால் குரங்கு என்று இருந்ததா? நான் பார்த்தவரை அந்த இணைப்பில் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. அதன் தமிழ்ப்பெயர் சிங்கவால்குரங்கு என்று இருந்ததைத்தானே சோலைமந்தி என்று மாற்றினேன். அதற்கான காரணத்தை நான் எனது தொகுப்புச்சுருக்கத்தில் இட்டிருந்தேனல்லவா? இந்தத் தொகுப்பில் வலதுபுறம் எனது பெயருக்குக் கீழே காரணத்தைச் சொல்லியிருந்ததைப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 12:30, 12 மே 2009 (UTC)
சரி சுந்தர் அது தான் கட்டுரையாக எழுதியுள்ளீர்களே சிங்கவால் என்று சோலைமந்தியை ஒன்றாக வைத்து இணைப்புத் தானே கொடுத்தேன் இது தவறல்லவே. வண்டலூர் விலங்கியல் புங்காவில் சிங்கவால் குரங்கு உள்ளது. இது வன்த்துறை பொதுக்கட்டுரை என்றுதானேக் கூறினேன். சிங்கவால் குரங்கு என்றுத் தேடுபவர்கள் இந்த இணைப்பை பயன்படுத்தலாம் அல்லவா. ஆங்கிலத்தின் தமிழாக்கம் அகராதி பார்த்து சிங்கவால் குரங்கு என்று இணைப்புத் தானே கொடுத்தேன். இராஜஸ்தான் இணைப்பு இராசத்தான். இராஜஸ்தான் என்று தேடுபொறியில் தேடினால் கிடைக்காது. இந்த தளங்காளாவது காட்டுமல்லவா? தமிழகத்துக்கு இணைப்பு தமிழ்நாடு கொடுக்கவில்லை. இதற்குப் பெயர்தான் சோலைமந்தியா? என்று தெரிந்து கொள்வார்கள். அதற்கும் மேற்கோள் கொடுக்கின்றேனே.ஸ்ரீபெரும்புதூரை திருப்பெரும்புதூர்க்கு இணைப்பு கொடுக்கின்றேன். இது விக்கியில் வழக்கமான ஒன்றுதானே--செல்வம் தமிழ் 12:44, 12 மே 2009 (UTC)
மறுப்புகள்
தொகுநற்கீரன் சொல்லியோ அவருக்காக மட்டுமோ நான் உங்களுக்கு கருத்தளிக்கவில்லை. அவர் இதை கவனிக்காமல் இருந்திருக்கலாம். கவனித்தாலும் மறுப்பு தெரிவிக்க ஒன்றும் இல்லை.
உங்களை நோக்கியே கூட தேவையற்ற சொல்லம்பு வீசப்படுமானால், உங்கள் பக்கம் நியாயம் இருக்குமே ஆனால், உங்களுக்காகவும் ஒருவர் தானாகவே குரல் கொடுக்கவே செய்வார். ஏன், உணர்ச்சிவசப்படாமல் நடக்குமாறு செல்வா எங்களை அறிவுறுத்தவில்லையா? உங்களுடன் பேசி வைத்துக் கொண்டா அறிவுறுத்தினார்?
விக்கிப்பீடியாவில் மிக வழக்கமாக நடைபெறுவனவற்றைக் கூட உங்களுக்கு எதிரான சதியாக நினைத்துக் கொள்வது வருத்தம் அளிக்கிறது. அப்படி ஒரு சதியும் இல்லை. விக்கிப்பீடியர் சமூகம் சற்று மாறுபட்டது. கருத்தளவில் மிகவும் வலுவாக மோதக் கூடியது. அதே வேளை தனிப்பட்ட நட்புணர்வு ஒரு போதும் குலையாதது. நீங்கள் பெருமதிப்பு வைத்திருக்கும் செல்வா அவர்கள் விக்கிக்கு வந்த புதிதில் இதை விட பெரிய கருத்து வேறுபாடு வந்தது. இப்போது அனைவரும் நல்ல புரிதல் வைத்திருக்கிறோம். இதை நீங்கள் அவரிடமே கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஆயிரக்கணக்கான பக்கங்களில் கிரந்தம் இருக்கும் போது, ஒரே ஒரு ராஜஸ்தான் பக்கத்தில் மாற்றி நாங்கள் என்ன சாதிக்கப் போகிறோம்? அதையும் மாற்றி விட எவ்வளவு நேரம் ஆகும்? ஆனால், இது போன்ற உரையாடல்கள் நடைபெற வேண்டிய தேவை இருக்கின்றன. அது எங்காவது ஒரு கட்டுரையில் நடைபெறத் தான் வேண்டும். அது உங்கள் கட்டுரையில் நடந்தது ஒரு தற்செயல் நிகழ்வு. உங்களின் இன்னும் எத்தனையோ கட்டுரைகள் நீங்கள் எழுதிய படி தான் உள்ளன. தயவு செய்து திறந்த மனதுடன் சிந்தித்துப் பாருங்கள்.
அன்புடன்,
ரவி
ராஜஸ்தான் என பெயர் மாற்றி உள்ளேன்
தொகுவணக்கம் செல்வம். சர்ச்சைக்குரிய கட்டுரையின் தலைப்பை ராஜஸ்தான் என மாற்றி உள்ளேன். இந்த மாற்றத்தை எந்த ஒரு பங்களிப்பாளரும் செய்ய முடியும். நிருவாகி என்ற வகையில் செய்யவில்லை. தொடர்ந்தும் வழமை போல் உங்கள் கட்டுரை பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 13:23, 12 மே 2009 (UTC) நன்றி இந்த தோழமை பண்பைத்தான் விரும்புகின்றேன். என்னால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் வருந்துகின்றேன். நன்றி மறப்போம் மன்னிப்போம்--செல்வம் தமிழ் 13:29, 12 மே 2009 (UTC)
- செல்வம் தமிழ், நான் சில நாட்களாக தமிழ் விக்கியில் சரிவர பங்களிக்க முயலவில்லை. எனவே இன்றுதான் சற்று பொறுமையாக இவற்றைப் பார்க்கிறேன். நான் விக்கிய்யில் சேர்ந்து இன்னும் சில நாட்களில் 3 ஆண்டுகள் நிறைவுறும். நான் அறிந்த அளவிலே விக்கி நண்பர்களின் தோழமை பற்பல மடங்கு என்பதனை உணரக்கூடும். நான் அப்படி உணர்ந்தேன். நாம் எல்லோருமே தனிப்பட்ட முறையில் பல கருத்துகள் கொண்டிருந்தாலும், விக்கியில் முடிவுகள் எப்பொழுதுமே கூட்டாக எது சரி, எது பொதுநலம் என்று அறிவு அடிப்படையில் மிக அக்கறையுடன் எடுக்கப்படுகின்றது (நானறிய). இப் பண்பாடு வளரவும், மேலும் மேலும் செழிப்படையவும், நாம் எல்லோரும் இயன்றளவு உழைக்க வேண்டும். அறிவோடும், நல்லுணர்வோடும் இயங்கினால் விக்கி மிக மிக அருமையான ஓர் தொழிநுட்பம், கூட்டாக்க, கூட்டுழைப்பு நற்களம். குற்றம் குறைகள் எதிலும் இருக்கும், ஆனால் இங்கு முயன்று குற்றங்களைஇக் ளைந்து கொண்டே வரவும் நல்லனவற்றை பெருக்கிக்கொண்டே செல்லவல்ல அருமையான அமைப்பு. ஆனால் பயனர்களின் நல்லிணக்க நல்லுணர்வு மிக அடிப்படையான ஒன்று. அதனைப் பேணுவது முதற்கடமைகளுள் ஒன்றென நினைக்கின்றேன். விக்கியின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று, ஒருவர் ஒன்றைச் செய்தார் எனில் முதலில் நல்லதுக்காகத்தான் செய்திருப்பார் என்னும் நோக்கில் அணுகவும் என்பது. இது இப்படி இல்லை என்று ஒருவர் முதலில் நம்பினாலும், அப்படி நினைத்து அணுகவேண்டியது ஓர் கொள்கைப் பரிந்துரை. நன்னம்பிக்கையின் அடிப்படையில் அது இல்லை என்று இல்லை எனில் மற்றவர் வந்து உதவுவர். நிலைமையைச் சரி செய்வர். விரைவில் நானும் பங்களிக்க வருவேன். உங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றிகள்--செல்வா 17:46, 14 மே 2009 (UTC)
தமிழ்நாடு வனத்துறை கட்டுரை தொடர்பில்
தொகுதெளிவான விளக்கத்துடன் கார்த்தி பேச்சு:தமிழ்நாடு வனத்துறை#நீர் நில வாழ்வன என்ற இடத்தில் உங்களுக்காக செய்தி விடுத்திருந்தும், நீங்கள் மறுமொழி எதுவும் தராமல் கட்டுரையை மாற்றியுள்ளீர்கள். கவனிக்காமல் விட்டுவிட்டீர்களா? -- சுந்தர் \பேச்சு 12:35, 14 மே 2009 (UTC)
- செல்வம் தமிழ், இந்த ஒரு வேண்டுகோளை மட்டுமாவது ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். முதல் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள இக்கட்டுரையினால் பிழையான ஒரு கருத்தை தமிழர்களுக்குத் தந்துவிடக் கூடாது. -- சுந்தர் \பேச்சு 12:34, 31 மே 2009 (UTC)
தனிநபர்த் தாக்குதல்
தொகுசெல்வம், இசுலாம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் என்று அராபத் கூறியதை அவர் தவிர்த்திருக்கலாம். ஆனால் நீங்கள் அறிவு சொறிவு போன்ற இழிச் சொற்களைப் பயன்படுத்தி இங்கு இட்டது முற்றிலும் தவறானது. அதை நீக்கியுள்ளேன். இனிமேல் இது போன்று சாட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 03:04, 7 ஜூன் 2009 (UTC)
சுந்தர் முதலில் மதசார்பற்ற நிலையில் அவர் இருக்கவேண்டும் அறிவு இல்லாமல் என்ற சொல் ஒருவரை பாதிக்கப்படும் பொழுது தான் அந்த சொல் வெளியே வருகின்றது. அறிவு இல்லாமல் வந்த சொல்லே காரணம். ஒரு சொல் பிரயோகிக்கப்படும் பொழுது அது பாதித்தவருக்குத் தான் அதன் வலி தெரியும். அந்த சொல் பிரயோகிக்கப்படும் பொழுதே கண்டனம் தெரிவித்திருக்கலாமே. இதனால் என்னுடைய சொல் வெளியே வந்திருக்காது. அவரும் தன்னிலை உணர்ந்திருப்பார். என்னோட சொல் இன்னும் சற்று பலமாக வந்திருக்கும் இத்தோடு விட்டேன். அவர் பிரயோகித்த வார்த்தை தெரியாமல் நான் உரையாடல் பக்கத்தில் நாகரிகமான முறையில் பதில் தெரிவித்துள்ளேன். அங்கு பொதுப் படையாக தெரிவித்த கருத்துக்கு இங்கு வந்து வார்த்தையை பிரயோகித்துள்ளார். ஆலமரத்தடி என்ன தனிநபர் தாக்குதல் இடமா. கருத்துக்களே தெரிவிக்க யாருக்கும் உரிமையுண்டு. நான் நாகரிமாக கட்டுரையாளரை பாரட்டி அந்த கருத்துக்குத் தானே எதிர்ப்புத் தெரிவித்தேன் நான் திருத்தியே இருக்க வேண்டும். நான் செய்யவில்லை. அதற்கு இங்கு வந்து தாக்குதல் தொடுப்பது தகுமா? நான் அவரைத் தாக்கினேனா? இந்த வார்த்தையின் உஷ்ணம் தெரியவில்லை. வேறு எவரிடமும் நேரிடையாக கூட பிரயோகிக்க கூடாத வார்த்தை. இது தெரியாமல் இஸ்லாம் தெரிந்து என்ன பயன்.--செல்வம் தமிழ் 03:27, 7 ஜூன் 2009 (UTC)
படிமம் பதிவேற்றல்
தொகுசெல்வம் தமிழ், பாகவதரின் படிமம் ஒன்றை ஆங்கில விக்கியில் இருந்து தரவிறக்கி இங்கு பதிவேற்றியிருந்தீர்கள். இதற்கு PD-self என்ற வார்ப்புரு பொருந்தாது. இந்த வார்ப்புருவை உங்களது ஆக்கம் ஒன்றுக்கே நீங்கள் தரலாம். பதிலாக, PD-user என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். இங்கு அந்தப் பயனரின் ஆங்கில விக்கிப் பயனர் பெயரை இடலாம். எ-கா: {{PD-user|:en:User:பயனர்பெயர்}}, அல்லது {{PD-enuser|பயனர்பெயர்}}. மேலும், பொதுவாக வேறொரு விக்கியில் இருந்து தரவிறக்கும் படிமங்களை பெயரை மாற்றமல் அதே பெயரில் இங்கு பதிவேற்றுவது நல்லது. இதே படிமம் பின்னர் பொதுவில் (காமன்சில்) கிடைக்கும் போது இங்கு அதனை நீக்கி விடலாம்.--Kanags \பேச்சு 10:42, 23 ஜூன் 2009 (UTC)
அப்படி பண்ணி பார்த்தேன் வரவில்லையே. அதை ஒரு முறை பண்ணிபார்த்தேன். மீண்டும் முயற்சிக்கின்றேன். அப்படியே பெயர் மாற்றாமல் ஏற்றினால் ஏற்கனேவே இருக்கின்றது என்று வருகின்றது. இல்லையேல் எச்சரிக்கை வருகின்றது. நன்றி--செல்வம் தமிழ் 11:24, 23 ஜூன் 2009 (UTC) கனக் இந்த pd user எங்கு இடவேண்டும்.--செல்வம் தமிழ் 11:36, 23 ஜூன் 2009 (UTC)
வேண்டுகோள்
தொகுஒரு கட்டுரையை சிறிது சிறிதாக அடிக்கடி தொகுத்துச் சேமிப்பதற்கு தங்களுக்கு நடைமுறை காரணங்கள் இருப்பதை அறிவேன். இயன்ற அளவு சற்று பெரிய மாற்றங்களாக ஒன்றாகச் சேமித்தால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இருந்து பார்ப்போருக்கு உதவும். நன்றி --ரவி 15:52, 23 ஜூன் 2009 (UTC)
ஆமாம் சரிதான். பல பிழைகள் அவ்வப்பொழுது தென்படுகின்றது. அப்படியே முயற்சிக்கின்றேன். நன்றி--செல்வம் தமிழ் 15:54, 23 ஜூன் 2009 (UTC)
சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்
தொகுவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:54, 18 பெப்ரவரி 2010 (UTC)
பங்களிப்பு வேண்டுகோள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:56, 21 சூலை 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Bpselvam,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த நீதிக்கட்சி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 25, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த சென்னை_உயர்_நீதிமன்றம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 9 செப்டம்பர், 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த ஈ._வெ._இராமசாமி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 16, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
உங்களுக்குத் தெரியுமா?
தொகுநீங்கள் பங்களித்த தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 22, 2013 அன்று வெளியானது. |
கிரந்தம்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவி்ல் கிரந்தம் சேர்த்தும் விடுத்தும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ளன. அனைத்திலும் சர்ச்சைக்குரிய தலைப்பு என்று வார்ப்புரு இடுவதால் வேலைப்பளுவே கூடும். எனவே, இதைத் தவிர்க்க வேண்டுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் குறித்த கொள்கை பற்றி 50,000 கட்டுரைகள் தாண்டிய பிறகோ 10 ஆண்டு முடிவுக்குப் பிறகோ (2013 அக்டோபர்) உரையாடலாம் என்ற புரிதல் உள்ளது. எனவே, உங்கள் கருத்துகளைப் பொதுவான ஒரே ஒரு பக்கத்தில் தர வேண்டுகிறேன். அங்கு உரையாடலைத் தொடர்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 15:37, 15 மார்ச் 2013 (UTC)
கிரந்தம் எல்லாம் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று..
தொகுஇதை நாங்கள் ஏற்றுக் கொள்வது இல்லை..ஒரு தனிநபருக்காக எல்லாம் ஏழரைக் கோடி பேர்கள் பயன்படுத்துவதை மாற்ற முடியாது. தமிழக மாணவர்கள் அவதிப்பட முடியாது. அரசு ஆவணம் பாடங்களில் இருந்தால் காட்டலாம். இதை தவிர எந்த பேச்சுக்கும் இடமில்லை. ஏற்கனவே விவாதித்தாகிவிட்டது.--செல்வம் தமிழ் (பேச்சு) 15:47, 15 மார்ச் 2013 (UTC)
- செல்வம், இங்கே யாரும் தன் விருப்பபடி மொழியை மாற்றி எழுதுவதில்லை. முற்காலத்தில் இருந்தே பல சமசுகிருத சொற்கள் தமிழ் எழுத்து முறைப்படி மாற்றி எழுதப்பட்டிருக்கின்றன. சில மாற்றம் பெறவில்லை என்பதும் உண்மை. மேலும், இது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வில்லை. தமிழகம், இலங்கை ஆகிய வெவ்வேறு பகுதிகளில் இருந்து எழுதுகிறார்கள். தமிழக அரசின் ஆதாரம் கேட்பது சரியல்ல. தமிழக அரசு தவறாக எழுதினால் அதை சரியென ஏற்க வேண்டிய அவசியம் இல்லையே! மேலும், மொழி விதிக்கு உட்பட்டு எழுதுதலே சரி. சிலர் g.k. வாசன் என்று எழுதுகிறார்கள். பல சுவரொட்டிகளில் பார்த்திருக்கக்கூடும். இதையும் சரி என ஏற்றுக் கொள்வீர்களா? கிரந்தத்தின் பல எழுத்துக்களும், பல சமற்கிருத சொற்களும் காலப்போக்கில் மறைந்துவிட்டனவே. நம் தாய்மொழியில் பிற மொழிச் சொற்கள் இருக்கலாம். அது நம் மொழியையே விழுங்கிவிடக்கூடாது. காலப்போக்கில் மீதி எழுத்துக்களும் அகன்றூ விடும். அதுவே இயல்பு. அதுபோன்றே, பிற மொழியில் உள்ள ஒலிப்புகள் தமிழில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப் பார்த்தால், அரபு, சீனம் போன்ற மொழிகளுக்காக பல நூறு எழுத்துக்களைத் தமிழ் பெற வேண்டியிருக்கும். இது தேவையில்லாத ஒன்று.
- இவ்வளவும் சொன்னது கிரந்தத்தின் மீது கொண்ட வெறுப்பினால் அல்ல. கிரந்தத்தைப் பயன்படுத்துவது உங்கள் விருப்பம். மொழி அதன் விதிகளுக்கு உட்பட்டே எழுதப்பட வேண்டும். இன்னும் சில நாட்களில் ஆங்கில எழுத்துகளும் ஒட்டிக் கொண்டு விடும், (ஏற்கனவே, தமிழ்த் திரைப்படங்களீல் ஆங்கில இனிசியல் போட்டே அனைத்து பெயர்களும் எழுதப்படுகின்றன என்பதைக் கவனிக்க)- இவற்றையும் ஏற்றுக் கொள்வோமா?. மொழி ரீதியான ஆய்வு செய்து பாருங்கள். நன்றாகப் புரியும். தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:02, 15 மார்ச் 2013 (UTC)
- என்னதான் சம்சுகிருத பெயர் வைத்தாலும் நம் பெற்றோர் தமிழ் ஒலிப்பில் பேசுவதைக் கவனிக்க. ராஜா என்றூ பெயர் வைத்தாலும் ராசா என்றே கூறூவதையும் கவனிக்க. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:05, 15 மார்ச் 2013 (UTC)
- இந்த கிரந்தம் எல்லாம் தமிழ்நாட்டு பாடநூலில் தெரிந்து தான் வழங்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட நபருக்காக எல்லாம் நாட்டுப் பெயரை மாற்றி நாங்கள் வாசிக்கமுடியாது. எங்கள் அரசாங்கம் எப்படி அழைக்க எங்களுக்கு வலியுறுத்தியிருக்கிறதோ அதன்படி அழைக்கிறோம். பெயருக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது. வட எழுத்து சில எழுத்துக்கள் உச்சரிப்புக்காக அனுமதிக்கப்பட்டது தான். ஆகையால் இது ஏற்றுக் கொள்ப்படாது. −முன்நிற்கும் கருத்து R.SEKARAN (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- அடுத்தவர் கருத்தை அழிப்பது தவறு. எங்கள் அரசு என்று பிரித்துப் பேசுவது சரியல்ல. தமிழக அரசு கிரந்தத்தை பயன்படுத்த வலியுறுத்த வில்லை தெரியாமல் அறிவாளித்தனமாகப் பேச வேண்டாம். தமிழ்நாட்டுப் பாடநூல்களில் கிரந்த, வடமொழிச் சொற்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. சமசுகிருதச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் எழுதல் என்று கேள்வித் தாள்களிலேயே உள்ளது. தமிழ்நாட்டில் கிரந்தம் பயன்பாட்டில் உள்ளதே தவிர, தமிழறிஞர்களும் தமிழக அரசும் கிரந்தத்தை பயன்படுத்த வலியுறுத்தவில்லை. குறைக்கவே முயல்கின்றனர். உங்கள் கருத்துக்கு ஆதாரம் என்ன?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:40, 15 மார்ச் 2013 (UTC)
ஆமா இது என்ன? செல்வம் தமிழ் அண்ணா......இந்த கிரந்தம் அது இதுன்னு சொல்றாங்க...தமிழ்நாட்டில இருக்கிறவங்களுக்கு இவங்க ஏன் பாடம் சொல்லிக்கொடுக்கிறாங்க!! இவங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா? செல்வம் தமிழ் கருத்தை முழுமனதாக வழிமொழிகிறேன்.--Nambitn 16:50, 15 மார்ச் 2013 (UTC)
இவங்க எங்க படிசாங்கன்னு கேள்வி கேளுங்கண்ணா தமிழ் மீடியமா இல்லை இங்கிலிபீஸ் மீடியமா? இல்லை கார்ப்பொரேஷன் ஸ்கூலிலா? இவங்க எங்கேயிருந்து இங்கே இருக்கிறவங்களை மிரட்றாங்க?--Nambitn 16:53, 15 மார்ச் 2013 (UTC)
//அடுத்தவர் கருத்தை அழிப்பது தவறு. எங்கள் அரசு என்று பிரித்துப் பேசுவது சரியல்ல. தமிழக அரசு கிரந்தத்தை பயன்படுத்த வலியுறுத்த வில்லை தெரியாமல் அறிவாளித்தனமாகப் பேச வேண்டாம். //
1அட இங்கே பாருப்பா அறிவாளித்தனத்தை நமக்கே சொல்லிக்கொடுக்குதுங்க...என்னது கிரந்தம்...இந்த ஜ..ஷ..எல்லாம் வருதை அதையா? அதை பயன்படுத்தாவேண்டாம்னுட்டு எந்த அரசாணையும் எங்க அரசாங்கம் போடலை. பெயரை மாத்தனும்னும் எங்க அரசாங்கம் உத்தரவு போடலை மாத்துனா சட்டப்படி குத்தம். சட்டம் இருந்தா அரசாங்கத்தில இல்லை மாத்தியிருப்பாங்க. எங்க புள்ளைங்களுக்கு ஏன்? பாடம் சொல்லிக் கொடுக்கப்போறாங்க...எங்க புள்ளைங்களை நாங்க இலவச பள்ளியில தானே சேர்த்திருக்கோம்..அதுவம் தமிழ் மீடியத்துல எங்கே? உங்க புள்ளைங்களை எங்கே சேர்த்து இருக்கீங்க சொல்லுங்க பார்ப்போம்!! கான்வன்டுல இங்கிலீபீஸ் ஸ்கூல்ல சேர்த்து இருப்பீங்க!! நாங்க வசிக்கிறதே சேரியில தான், குப்பத்துல தான்....எங்கப் புள்ளைங்க படிச்சதை நீங்க மாத்தாதிங்க...உங்க புள்ளைங்களுக்கு நீங்க தனியா பணத்தை செலவு பண்ணி நல்லா கத்துக் கொடுத்துக்குங்க தமிலை!! இங்கே இவ்வளவு அட்டகாசம் வேறு இருக்குதா? அண்ணே நீங்க சொல்லும் போது கூட நான் நம்பளை!! இங்கே வந்து பார்த்தா அழிச்சாட்டியம் தெரியுது.
- நம்பி, தமிழ்க்குரிசில் - நையாண்டியைத் தவிர்த்து கருத்தை மட்டும் பதிவு செய்யுங்கள். உரையாடல் தடம் புரளாமல் இருக்க இது தேவை.
- நம்பி - தனி மனித விமர்சனம் இங்கு எடுபடாது. மாறாக நீங்கள் கூற வரும் கருத்துகளிலிருந்து உரையாடலை திசை திருப்பவே உதவும்.--சோடாபாட்டில்உரையாடுக 18:01, 15 மார்ச் 2013 (UTC)
அட யாருப்பா இது!! பெயரை குறிப்பிட்டு தாம்பா இணையத்தில எழுதக்கூடாது. சோடாபாட்டில் என்று ஒருவர் பெயர் வைக்க முடியுமா? இங்கே ஐ.டி அந்த ஐ.டிக்கு எழுத்து தான் இந்தப் பக்கம் தெரியுது. அது நக்கல் குசும்பல் எகத்தாளம் இதெல்லாம் வரும். அது உணர்ச்சிகளால் எழுதப்படுவது. இது விமர்சனம். அதை எல்லாம் கண்டுக்காம என்ன விமர்சனம் வைக்கிறாங்க என்று மட்டும் பார்! அதை விட்டுட்டு இங்கு அதிகாரத்தை ஐ.டி களுக்கு பண்ணாதே...எழுதுவது பொதுப் பார்வை...இங்கே நிறைய பேர் பார்ப்பாங்க!! அதனால ஒருத்தர் பர்சனலாக எடுக்கிறது என்பதுஎன்றால் அப்ப இதை தனி நபர் தான் செய்கிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது.
எங்கப்புன் குதிருக்குள்ளே இல்லைன்னு! சொல்ரது மாதிரி இருக்குது. முதல்ல விமர்சனங்களில் உள்ள யதார்த்தத்தை மட்டும் பார்...எங்கே பனங்காட்டு நரி என்றால் அது ஒரு ஐ.டி...சிங்கம் என்றால் அது ஒரு ஐ.டி அவ்வளவு தான் அது எழுதுவது எந்த ஒரு தனிநபருக்காகவும் இல்லை. நாங்க எவ்வளவு காலமா இருக்கோம் எங்களுக்கு தெரியாதா?
இங்கே என்ன வீடியோ சார்ட்டிங்கா நடக்குது. இப்படி பண்ணும்போதே தெரியுது. இங்கே நாங்க எது வேணுன்னாலும் பண்ணுவோம். நீ படிச்சு தான் ஆகனும்னு இங்கே இருந்துகொண்டு, பொது தளத்தில் இருந்து கொண்டு, எழை மாணவர்களையும் தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களையும் உதாசீனப்படுத்தும் அளவுக்கு இதை செய்ய எப்படி? துணிவு வந்தது? எதனால் வந்தது?
தமிழகத்தில் 60 லடசம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் இருக்கிறார்கள். அதுக்காக எங்க ஆளுங்க எழுதினா நீ சர்வாதிகாரமா வந்து எங்க புள்ளங்க சோத்துல மண்ணைப் போடனும்னு பார்க்கறீயே!! உங்க புள்ளைங்களா படிக்குது?
இதை எவன்னா ஏத்துப்பானா? இங்கே யாரு தமிழ் மீடியத்தில தட்டு சோறு வாங்கிட்டு படிச்சா? யாரு சத்துணவு சாப்பிட்டுகிட்டு தமிழ் மீடியத்தை அவங்க புள்ளைங்களை சேர்த்து இருக்கா? அதை முதல்லை இங்கே தெரிவி!!
எங்க புள்ளைங்க படிக்குது. அதுக்காக எங்க ஜனங்க வந்து எழுதறாங்க...இதுல ஏன்? தமிழ் மீடியத்தில படிக்காத தமிழ் பயிற்று மொழியில் பயிலாத பணக்கார ஆளுங்க..அவங்க புள்ளைங்களை சேர்க்காத ஆளுங்க வந்து நாட்டாமை பண்ணுவது? எங்கே பாடப்புத்தகத்தில் இருக்கிறது? அதை காட்டவும்.--Nambitn 01:40, 16 மார்ச் 2013 (UTC)
- நம்பி, நீங்கள் விக்கிப்பீடியாவில் எந்த செயலும் செய்யவில்லை. பேச்சுப் பக்கங்களில் யாரையாவது திட்டிக் கொண்டு நேரத்தை வீணாக்குகிறீர்கள்! கண்டபடி திட்டுவதற்கு இது வலைப்பதிவு அல்ல. உங்கள் கருத்துக்கு என் மறுமொழிகள் இதோ:
1. தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று கேட்டால் 247 என்று சிறு குழந்தையும் சொல்லும். எந்த காலத்திலும் சமசுகிருத கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்த்துகொண்டதில்லை. தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும் கிரந்த எழுத்துக்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தரப்படுவதில்லை. இது பொய்யா? 2. கிரந்த எழுத்துகளுக்கு மாற்றான தமிழ் எழுத்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் கிரந்தம் பயன்பாட்டில் உள்ளது என உறுதியாகக் கூற முடியுமா? அப்படியென்றால் கிரந்த எழுத்துமுறை கட்டுரையில் உள்ள அனைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம். தமிழ்நாட்டில் எத்தனை பேர் இந்த எழுத்துகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள் எனக் கூறுங்கள். இதுவும் பொய்யா? 3. ஸங்கீதம், ஸுப்ரமண்யன், ராமஸ்வாமி, ரஸம் என்று எழுதுவதில்லை. சங்கீதம், ராமசாமி, சுப்பிரமணியன் என்றே எழுதுகிறோம். கிரந்தம் பொது வழக்கிலும் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. இப்படியா நீங்கள் எழுதுகிறீர்கள்? 4. பிள்ளைகள் படிப்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது தவறானது. பல நாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழில் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு அமெரிக்காவில் குடியிருக்கும் லட்சாதிபடி என்று என்னை நினைக்க வேண்டாம். சென்னையில் பிரபலமாகாத ஒரு கல்லூரியில் லோன் கூட கிடைக்காமல் படிக்கும் ஏழை மாணவன் நான். 5. நீங்கள் சொன்னதுபோல் ஒருவரே பல ஐ.டி வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஒருவர் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டுமென்பதே விதி. சிலர் தங்கள் கருத்தை உறுதிப்படுத்துவதற்காக பல ஐ.டிக்களை உருவாக்கி வேறு நபர்கள் போல் காட்டிக்கொள்வார்கள். நானும் பார்த்திருக்கிறேன். எனக்கு அந்த பழக்கம் இல்லை. தமிழ்க்குரிசில் என்பது என் புனைப்பெயர் அல்ல. சிறு வயதில் என் பக்கத்து வீட்டு அதிகாரியின் நினைவில் வைத்துக்கொண்டது. 6. முழுக்க முழுக்க ஆங்கில வழியில் படித்தேன் என்பது உண்மை. ஆனால், தமிழ் வழியில் பயின்ற பிள்ளையைவிட பல மடங்கு தமிழில் என் புலமையை நிரூபிக்கத் தயார்! தனிப்பட்ட விதத்தில் நக்கல், நையாண்டியாகப் பேச வேண்டாம். என் கருத்துக்கள் பொய்யென்று நிரூபிக்க முடியுமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 02:54, 16 மார்ச் 2013 (UTC)
சாட்டில் சேகரன், தோழர்கள் வரவும்
தொகுசெல்வம் தமிழ் அண்ணே நீங்க சொன்னா மாதிரி தான் இருக்குது...சேகரன் கூட சொன்னான்...நீங்கள் சாட்டில் வாருங்கள்..அப்படியே மேலும் தகவலை அனுப்புங்கள் இன்று நமது சகாக்களுடன் குழுவிவாதம் நடத்துவோம்....நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அப்புறம் இதன் புகார் மற்றும் மெயில் ஐ.டி க்களை தாருங்கள்...இது பற்றி நமது குழுவில் அனைத்து நண்பர்களுடன் விவாதிப்போம். உடனடியாக சார்ட்டில் சேகரன் வரவும்....நம்ம பேராசிரியரும் தொடர்பு கொண்டார். பார்த்துக்கொள்ளலாம். அனைத்து ஆதாரங்களையும் அப்படியே அனுப்புங்கள் அதை நமது அனைத்து குழுவிலும் பொதுவில் அந்த மின்னஞ்சலை வைத்து அனுப்ப சொல்லலாம். பிரச்சினை இல்லை. இது ஏதோ தவறான அணுகுமுறையை இங்கே தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுத்த இங்கே நடந்து கொண்டிருக்கிறது....தொடர்ந்து முயற்சி செய்வோம்...பலரும் இது பற்றி தெரிவித்தனர் அது உண்மை என்பதாக இங்கே கண் கூடாகவே தெரிகிறது. --Nambitn 07:43, 16 மார்ச் 2013 (UTC)
நீங்கள் சொன்னது போலவே யார் யார் வருவார்கள் என்றீர்களோ? அவர்கள் வந்திருக்கிறார்கள் சரியாகத்தான் சொன்னீர்கள் அப்ப இது இவங்களோட செயல்பாடுதான் என்பது கன்பார்ம். ஆனால் இவர்கள் யாருமே தமிழ் பயிற்று மொழியில் படித்தவர்களும் இல்லை. இங்கே தமிழக ஏழை மக்களும் இல்லை. அரசு பள்ளியில்பயில்பவர்களும் இல்லை. இவர்கள் குழந்தைகளை தமிழ் மீடியத்தில் சேர்க்கப் போவதும் இல்லை.
பணக்காரனுக்கு ஏழையின் வலி எப்படி தெரியும்? அதான் அங்கிருந்து கொண்டு நம் குழந்தைகளுக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான ஒரு போதிப்பை சர்வாதிகாரமான ஒரு விஷயத்தை இங்கே வாட்ச் மேன் வேலை பார்த்துகிட்டு இருக்காங்கோ!! இது ஒடுக்கப்பட்ட மக்களை புறக்கணிக்க இங்கே ஏதோ ஒரு இயக்கத்தின் தூண்டுகோளாக இருக்கலாம். இல்லை என்றால் எந்த ஆதாரமும் இல்லாமல் இது மாதிரி எல்லாம் ஒரு நாட்டில் இருந்து செயல் பட மாட்டார்கள்.
பெரும்பான்மையினர் இருக்கும் நமது தமிழக மக்களையும் ஏழைகளையும் நிச்சயம் புறக்கணிக்க மாட்டார்கள். ஆகையால் இதை அனைத்தையுமே அனுப்புவோம்.
அதான் இங்கே யாரையும் பங்கெடுக்க விடறது இல்லேன்னு நினைக்கிறேன். இதையும் ஆதாரமாக அனுப்பலாம்.
எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா? இவங்களே தமிழ் படிக்கலையே இவங்க புள்ளைங்களும் தமிழ் மீடியத்தில படிக்கலை அப்புறம் யாருக்காக இதை வலியிறுத்தறாங்க இதுவரைக்கும் ஒருத்தரும் நம்ம கேள்விக்கு பதிலே சொல்லலை...அதாவது நான் தமிழ் பயிற்று மொழியில் படித்தேன் என்று...என் குழந்தைகளை நான் படிக்க வைக்கிறேன் என்று ஒருவர் கூட சொல்லவில்லை....
படிச்சிருந்தா கண்டிப்பா இதற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டாங்க!!!
அப்ப இவங்க அத்தனை பேரும் ஒரு சர்வாதிகாரப் போக்கை இங்கே கடைப் பிடிக்கிறார்கள் என்பது 100 க்கு 100 உண்மையாகிறது. இவங்க முன்னேறதுக்கு ஆங்கிலமும் இவங்க சார்ந்த நாடும் தேவை...இங்கே நம்ம தமிழ் மக்களுக்கு மட்டும் இவங்க தமிழ் கத்துக் கொடுப்பாங்க! இதிலே நிறைய பணக்கார சில்வண்டுகள் இருக்கலாம். அதுங்க தான் இது மாதிரி எழுதிகிட்டு இருக்கிறது.
ஒரு விஷயத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பவன், ஒரு விஷயத்தை கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் இருவனுமே பணக்காரனாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் நிர்பந்தம் இருக்கவேண்டும். என்ன? சரியா?
சரி இதையும் அங்கே பேசிக்கலாம். விடுங்க! விடுங்க! அப்படியே போகட்டும்.
ஆமாம் இது ஏதோ ஒன்று மாதிரி தான் இருக்கிறது..இதை நமது அனைத்துக் குழுவிலும் வைப்போம்..நமது தோழர்களுக்கு அனுப்புவோம்..மின்னஞ்சலை பொதுவில் வைத்து எல்லா முகநூல் டிவிட்டர் குழுக்களிலும் இதை வைப்போம்....அப்படியே இதன் மின்னஞ்சலை கொடுங்கள் அதையும் அனுப்புவோம் இன்று இரவு நமது குழு விவாதத்தை நடத்துவோம். இவங்க எங்கேயோ வெளிநாட்டில நல்லா பணத்தோட இருந்துகிட்டு இங்கேயிருக்கிற ஏழை தமிழ் மாணவர்களின் சோற்றில் மண் அள்ளிப்போடும் பாவகரமான காரியத்தில் ஈடுபணிகிறார்கள். ஆனால் இதை செய்பவர்கள் யாரும், அவர்கள் குடும்பமும் நல்லா இருக்கப் போவதே இல்லை. அது நிச்சயம். 60 லட்சம் தமிழ் மாணவர்களை இங்கே நெருங்கவிடாமல் செய்யும் சார்வாதிகார மனப்போக்கு தடுக்கப்பட்டே ஆகவேண்டும். இதை நாம் தொடர்ந்து செய்வோம். இவங்க தான் ஸ்டாலினை இசுடாலின் என்று மாற்றிய சிகாமணிகளா? --R.SEKARAN (பேச்சு) 08:29, 16 மார்ச் 2013 (UTC)
//நம்பி, நீங்கள் விக்கிப்பீடியாவில் எந்த செயலும் செய்யவில்லை. பேச்சுப் பக்கங்களில் யாரையாவது திட்டிக் கொண்டு நேரத்தை வீணாக்குகிறீர்கள்! கண்டபடி திட்டுவதற்கு இது வலைப்பதிவு அல்ல. உங்கள் கருத்துக்கு என் மறுமொழிகள் இதோ://
யாருப்பா இது...அதிகாரம் பன்றது இணையத்தில...இதெல்லாம் யாரு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கரா? இது மாதிரி கேக்கறதுக்கு? மறுபடியும் கமன்ட்டை சரியா படிக்கிறதே இல்லையா? இது பொது பார்வைக்கு...இது வீடு அல்ல. இந்த எழவே தெரியாம எப்படி? அங்கே கமன்ட்டுக்கு பதில் ஆதாரம் இருந்தாக் கொடுக்கணும் இல்லே மத்தவங்களை கொடுக்கிற வரைக்கும் பொறுக்கணும்.
என்ன படிச்சீங்க!!...அங்கே விக்கிப்பீடியாவில இருக்கிற தகவலையும் படிக்கிறது இல்லே போலிருக்கு. இதுவரைக்கும் நண்பர்கள் போட்டாங்களே யாராவது யாரையாவது குறிப்பிட்டு போட்டாங்களா? இப்படி எழுத கத்துக்குங்க...இதான் பொதுப் பார்வை...--Nambitn 09:42, 16 மார்ச் 2013 (UTC)
இங்கே என்னமோ முதலாளி மாதிரியும் நாங்க என்னமோ தொழிலாளி மாதிரியும் யாரு இந்த அதிகாரத்தை எல்லாம் உங்களுக்கு கொடுத்தா...பன்றதை பார்த்தாவே தப்பாவே இருக்கே!!...இது ஒரு பொது தளம் இங்கே கேள்வி வரத்தான் செய்யும். வரவே விடாம தடுக்கிறதா வேலை..முடிஞ்சா கேட்ட ஆதாரத்தை கொடு...இல்லை கொடுக்கிறவங்களுக்கு வழிவிடு. இங்கே இருந்துகிட்டு எல்லாத்தையும் கணிக்கிறே ஜோசியக்காரங்க மாதிரி--Nambitn 09:46, 16 மார்ச் 2013 (UTC)
எப்படி? எழுதுவாங்க? முடிவு தெரியாம? எழுதினா இங்கே இருக்கும் அவங்களோட மாணவர்களுக்கே, ஏழை மாணவர்களுக்கே பயன்படாமா போறதுக்காகவா? எழுதுவாங்க? எழுதினா தமிழே பயன்படுத்தாத, தமிழில் பயிலாத நாட்டுக்காகவா எழுதுவாங்க? எழுதினவங்களே இங்கே படாத பாடு பட்டாச்சு!! எங்க மக்களுக்கே பயன்படாம போகுதே!!--செல்வம் தமிழ் (பேச்சு) 10:10, 16 மார்ச் 2013 (UTC)
எதுக்கு? எங்க மக்களுக்காக நாங்க எழுதினா நீங்க உங்க சர்வாதிகாரத்தில யாருக்கும் பிரயோஜனப்படாம மாத்திகிட்டே இருப்பீங்களா? அதுக்கா எழுத சொல்றீங்க? அதுக்கு எவன்னா எழுதுவானா? முதல்ல இதுக்கு ஆதாரத்தை வை...எழுதினவங்களே இப்ப கேள்வி கேட்டிருக்காங்களே அதுக்கு பதிலை வைங்க...ஆதாரத்தை காட்டுங்க!
நாம ஏன் தமிழ்நாட்டுத் தமிழ் என்று தொடங்க கூடாது? இல்லை தமிழ் (தமிழ்நாடு) என்று தொடங்க கூடாது..இங்கே ஏன் மாறடிக்கணும்?செல்வம் அண்ணே .. ?--115.242.206.252 18:42, 16 மார்ச் 2013 (UTC)
நிச்சயமாக இலங்கைத் தமிழுக்கும், தமிழகத் தமிழுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. வார்த்தைகள், பேச்சு முறையிலும் வேறுபாடுகள் உள்ளன. ஒன்று பொதுவாக அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பெரும்பாலான தமிழர்கள் பேசும் தமிழ் இருக்கவேண்டும். அல்லது தமிழ் (தமிழ்நாடு) எனத் தொடங்குவதே நல்லது. ராஜஸ்தானை ராஜஸ்தான் எனத்தான் சொல்ல முடியும். ராயசுத்தான் எனச் சொன்னால் யாருக்குப் புரியும்?
இந்திய அரசு வலைவாசலை மேம்படுத்தி தர வேண்டுகோள்
தொகுவணக்கம் நண்பரே, தாங்கள் வலைவாசல்:இந்திய அரசு என்பதனை உருவாக்கி மேம்படுத்தியிருப்பதைக் கண்டேன். அந்த வலைவாசலில் சிறப்பு படங்கள், சிறப்பு கட்டுரைகள் போன்றவற்றை இணைத்து மேம்படுத்தி தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:06, 11 அக்டோபர் 2013 (UTC)
முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த வலைவாசல்:இந்தியா என்ற வலைவாசல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஜனவரி 1,2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
தொகுவணக்கம் Bpselvam!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:16, 30 திசம்பர் 2014 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சனவரி 11, 2015 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த இட்லர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சனவரி 27, 2016 அன்று வெளியானது. |