விக்கிப்பீடியா பேச்சு:பெயரிடல் மரபு

What shall be the naming convention for templates like template:EU countries, template:United kingdom etc.? Should them be named in tamil like வார்ப்புரு:ஐஓ நாடுகள், வார்ப்புரு:ஐக்கிய இராச்சியம் etc., keeping in mind some contributors who might not know english at all? I prefer naming them templates like these in tamil. But the wiki templates like stub, translate and those templates that we use often shall be kept in english for ease of typing and for the convenience of interwiki users.--ரவி (பேச்சு) 06:52, 30 மே 2005 (UTC)Reply

I agree. This would raise the awareness towards the words like "வார்ப்புரு". -- Sundar 06:55, 30 மே 2005 (UTC)Reply

Ok, except for the common wiki templates, we shall name the templates hereafter in tamil. The already existing templates in english shall be moved to tamil names later when we get time/more contributors. Hope it is fine.--ரவி (பேச்சு) 16:12, 30 மே 2005 (UTC)Reply

should it be DNA or டிஎன்ஏ or ஆகஅ?

தொகு

I'm uncomfortable with the name DNA for an article here, however popular it may be. Can we have டி.என்.ஏ instead? -- Sundar 12:01, 30 மே 2005 (UTC)Reply

I thought a lot b4 naming it DNA. I observed that in most of the wikis the article name is still DNA and not transliterated. You may note that there is an alternate redirect page ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் in which I have tried to translate DNA as much I can. In my opinion DNA is much easier to read than டிஎன்ஏ. There was another article பிபிசி which I created;but it was because பிபிசி was easier to read and a familiar name too. If we start writing as டிஎன்ஏ then another logical question that arises is: why don't we write as "ஆகஅ", the shortform for "ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்". Then another question is should we write it as "ஆகஅ" or "ஆ.க.அ"; or is it டி.என்.ஏ or டிஎன்ஏ? I look forward for suggestions/ discussion to set up a naming convention for such topics as I plan to write few articles like RNA etc., Then we can have the conclusions in the Manual of style and naming conventions page.--ரவி (பேச்சு) 16:12, 30 மே 2005 (UTC)Reply
I am for putting this article - and all other similar articles - under the full name, so RNA would go under "ரைபோ கரு அமிலம்" with redirects from all the abbreviations. I also think it makes most sense to use the actual Tamil abbreviation, with fullstops between the letters (as that is how abbreviations are written nowadays). We should also have redirects from the Tamil transliteration of the English words - I am certain I have seen it called "டியாக்ஸிரிபோ நியூக்ளிக் ஆஸிட்" in print. -- அரவிந்தன் 20:04, 30 மே 2005 (UTC)Reply
Yes. ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் should be the article title and டி.என்.ஏ and perhaps even DNA should redirect there and not the other way about. -- Sundar 06:25, 31 மே 2005 (UTC)Reply

ok I will move the contents of DNA article to ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம் and give redirect links from DNA,டியாக்ஸிரிபோ நியூக்ளிக் ஆஸிட், ஆ.க.அ,டி.என்.ஏ . Then, since we don't have capital letters in Tamil, we need to have dots in between the abbreviated tamil letters.Thus, டி.என்.ஏ is the right name; not டிஎன்ஏ--ரவி (பேச்சு) 09:31, 31 மே 2005 (UTC)Reply

T இற்கு ரி பிரதேசம் சார் உச்சரிப்பு

தொகு

விக்கிபீடியாவில் பொதுவான, பிரதேச சார்பற்ற உச்சரிப்புக்களை பயன்படுத்துவதே சிறப்பு.

t இற்கு மாற்றாக ரி யினை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இவ்வழக்கம் நான் அறிந்தவரை யாழ்ப்பாணம் சார்ந்த பிரதேசங்களில் மாத்திரம்தான் இருக்கிறது.. விக்கிப்பீடியா வில் இந்தியாவை ச்சேர்ந்த பங்களிப்பாளர்கள் இருப்பார்களாயின் ஆலோசிக்கவும். எங்களூர் பேச்சுவழக்கில் றி, ரி என்பவை மிகத்தெளிவாக வேறுபருத்தப்பட்டு Ri , ri என்றே உச்சரிக்கப்படும். "ட்டொரான்டோ" சரியான வடிவம். இதுபற்றி இன்னமும் தேடல்; தேவை --மு.மயூரன் 17:37, 19 ஆகஸ்ட் 2005 (UTC)

மயூரன் பிரதேச உச்சரிப்பை பயன்படுத்தாமல், எழுத்து நடைக்கென ஒரு பொது முறையை ஏற்படுத்துவது என்பதுவே தமிழ் எழுத்து மருபு. ஆயினும், எச் சொல் எழுத்து பொது முறைக்குரியது என்பது விவாதத்துக்குரியதே. குறிப்பாக, ரொறன்ரோ போன்ற்ற சமீபத்தில் பரவலான பாவனைக்கு வந்திருக்கும் சொற்கள். to-ro-n-to ரொறன்ரோ என்பதற்க்கு பொருத்தம் என்பது தனிப்பட்ட கருத்து, மற்றும் கனேடிய வழக்கு என்றும் சொல்லலாம்.--Natkeeran 17:49, 19 ஆகஸ்ட் 2005 (UTC)
T யின் ஒலியை தர வல்லது தான் என்றாலும் (எ.கா-வெற்றி-vetri), தமிழ் நாட்டில் பொதுவாக T யின் ஒலியைத்தர பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே. Tக்கு பதிலாக இலங்கை பயன்பாடான , வை பயன்படுத்தினாலும் எந்த இடத்தில் ரகரத்தையும் எந்த இடத்தில் றகரத்தையும் பயன்படுத்துவது என்று புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. குறைந்த பட்சம் தலைப்புகளிலாவது இரு நாட்டு எழுத்துப்பயன்பாடுகளுக்கு ஏற்ப வழிமாற்றுப்பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து--ரவி (பேச்சு) 12:02, 21 ஆகஸ்ட் 2005 (UTC)


பெயர் முன் எழுத்துக்கள்

தொகு

இந்த விடயத்தில் அதி சிறப்பு கவனம் செலுத்தப்ப்ட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். பொதுவாக பெயர்களை தேடுபவர் எல்லோரும் முன்னெழுத்துக்களை நினைவில் வைத்திருப்பர் என்றில்லை. அகரவரிசைப்படுத்தும் போரும், முன்னெழுத்துக்களை பெயருக்கு முன்னால் இடும்போது சிக்கல்கள் தோன்றும்.

எனவே பெயருக்கு பின்னால் எழுத்துக்கள் வரக்கூடிய தரமுறை ஒன்று தேவை.

ஆங்கிலத்தில் wells, h. g. என்றவாறு பயன்படுத்துகிறார்கள். பெயர்-கமா-இடைவெளி-எழுத்து-புள்ளி-இடைவெளி என்றவாறாக. ரஹ்மான், ஏ. ஆர். என்று வரும்.


இவ்விடயத்தில் சிறந்த தரமுறை ஒன்றினை கொண்டுவருமிடத்து, மிக வினைத்திறன் மிக்க தேடல், அகரவரிசைப்படுத்தல் என்பவை சாத்தியப்படும்.

--மு.மயூரன் 07:54, 7 அக்டோபர் 2005 (UTC)Reply

மயூரன், முக்கியமான விடயத்தை தான் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆங்கில விக்கிபீடியா பக்க பெயரிடல் மரபை தான் தற்பொழுது பின்பற்றி வருகிறோம். அவசியம் இருந்தால் அனைவரின் கருத்துக்கு ஒப்ப தகுந்த மாற்றங்களை இதில் கொண்டு வரலாம். தற்பொழுது ஆங்கில விக்கிபீடியாவிலும் A. R. Rahman என்பதாகத் தான் பெயரிடல் மரபு உள்ளது. Rahman, A. R என்று அல்ல. சரி, கொள்கை மாற்றம் செய்யப்படும் வரை இப்பிரச்சினைக்கு என்ன தீரவு?
  • தேட்டல் சிக்கல்களை தவிர்க்க ஆங்கில விக்கியில் disambiguation பக்கங்களை உருவாக்குகிறார்கள். அது போல தமிழிலும் தகுந்த இடங்களில் செய்யலாம்.
  • அப்புறம், ரஹ்மான் என்று தேடும் போது செல் பொத்தான் சரியான தேடல் முடிவுகள் தராவிட்டாலும் தேடு பொத்தான் சரியான முடிவுகள் தரும்.
  • பகுக்கும் போது [[பகுப்பு:இசையமைப்பளர்கள்|ரஹ்மான், ஏ. ஆர்]] என்று எழுதினால், பகுப்பு பக்கத்தில் ரஹ்மான், ஏ. ஆர் என்றே அப்பக்கம் தொகுக்கப்படும்.
  • முன்னெழுத்துக்கள் பிரபலமாக இல்லாத பொழுதும் அதே பெயரில் வேறு பிரபலமானவர் எவரும் இல்லாத போதும் முன்னெழுத்துக்களை தவிர்த்து வெறும் பெயரை மட்டும் பக்கத்தலைப்பக வைப்பது இப்பிரச்சினையை தவிர்க்கும். அல்லது, பெயர் மட்டும் உடைய பக்கத்தில் இருந்து முன்னெழுத்துக்களுடன் கூடிய பக்கத்திற்கு வழிமாற்று கொடுக்கலாம்.
  • பொதுப் பயன்பாட்டில் தமிழ் மற்றும் இந்தியப் பெயர்களை ரஹ்மான், ஏ. ஆர் என்று எழுதும் வழக்கம் இல்லை என்பதால் ரஹ்மான், ஏ. ஆர் என்று தேடுவோரை விட ஏ. ஆர் . ரஹ்மான் என்று தேடுவோரே அதிகம் இருப்பர் என ஊகிக்கிறேன்.

இங்கு, ஏ. ஆர். ரஹ்மானை ஓர் எடுத்துக்காட்டுக்கு தான் குறிப்பிட்டுள்ளேன். தற்பொழுது உள்ள கொள்கையில் மாற்றம் அவசியமில்லை என்பது என் கருத்து. மற்றவர்களை கருத்தையும் அறிந்து தகுந்த மாற்றங்களை செய்யலாம்--ரவி (பேச்சு) 10:05, 7 அக்டோபர் 2005 (UTC)Reply

இந்த விடயத்தில் எந்த முடிவு என்றல்ல, ஏதாவதொரு ஒருமித்த முடிவுதான் தேவை. இதுபற்றி மற்றய பங்களிப்பாளர்களுடனும் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம். இடைவெளிகள் தொடர்பிலும் ஒருமித்த கருத்து தேவை. --மு.மயூரன் 19:41, 8 அக்டோபர் 2005 (UTC)Reply

தற்பொழுது முன்னெழுத்துக்களுக்கு அடுத்து ஒரு வெற்றிடம் விட வேண்டும் என்பது மரபு. இவ்விதி ஆங்கில விக்கிபீடியாவை ஒட்டி பின்பற்றப்படுகிறது. எனினும், இதில் உள்ள logic என்னவென்று புரியவில்லை. தமிழ் நாட்டில் பொதுவாக இப்படி முன்னெழுத்துக்கு அடுத்து வெற்றிடம் விடும் வழக்கம் இல்லை. ஆகையால், பெயரிடல் மரபு தெரியாத புதுப்பயனர்கள் வெற்றிடம் விடாமல் தான் தலைப்பை உருவாக்குவர். அப்புறம், பிற பயனர்கள் மெனக்கெட்டு தலைப்பு மாற்றுவது, அவர்களின் வேலைப்பளுவை தான் அதிகமாக்கும். தவிர, மில்லிமீட்டருக்கான சுருக்கத்தை மி. மீ என்று இடம் விட்டு எழுதுவதை விட மி.மீ என்று இடம் விடாமல் எழுதுவது தான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆக, இந்த வெற்றிடம் விடுவது குறித்த உங்கள் கருத்துக்களை தெரிவித்தால், பெயரிடல் கொள்கையில் உரிய மாற்றத்தை செயல்படுத்தலாம். ஆங்கில விக்கிபீடியாவில் ஏன் இடம் விட்டு எழுதுகிறார்கள் என்று சுந்தர் அறிந்திருக்கும் பட்சத்தில் தயவு செய்து விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--ரவி (பேச்சு) 13:30, 9 அக்டோபர் 2005 (UTC)Reply


நான் மிகப் பிந்திதான் இந்த விக்கியில் சேர்ந்திருக்கிறேன். இன்று சி.வி.இராமன் பற்றி கட்டுரை ஏதும் உள்ளதா என்று தேடிவிட்டுத்தான், இல்லை என்று எண்ணி கட்டுரை எழுதத்தொடங்கினேன் (சுமார் 1 மணி நேரம் ஆகியது). கடைசியில் பார்த்தல் ஏற்கனவே ஒரு நல்ல கட்டுரை இருந்திருக்கிறது! பெயரிடல் முறை சரிவர விளங்காத்தாலும் (விக்கி தேடல் முறை சரியாக இல்லாத்தாலும்) இந்த குழப்பம். முன்னரே மயூரன் சொன்ந்து போல ராமன் அல்ல்து இராமன் கமா அல்லது இடஒவெளிக்குப் பிறகு முன்னெழுத்துக்கள் குறிப்பதே பழக்க்மான முறை. நான் சி.வி.இராமன் என்றும் தேடினேன், கிடைக்கவில்லை. இப்படி குழப்பங்கள் எனக்கே இந்த ஒரிசில நாட்களிலேயே பல முறை நிகழ்ந்துள்ளது. எனவே நான் ஏற்கனவே எழுதியுள்ளதை மீண்டும் அறியாது எழுதினால் மன்னிக்கவும்.--C.R.Selvakumar 01:25, 30 மே 2006 (UTC)செல்வா.Reply


பெயர்களை எப்படி தமிழில் உச்சரிப் போமோ, அப்படித்தான் எழுதவேண்டும். ஆங்கில உச்சரிப்பு எழுத்துகளை தவிற்க்க. அதனால், ரஹ்மானை அ.ரா.ரஹ்மான் (அல்லா ராகா ரஹ்மான்) எனவும், ராமனை ச.வெ.ராமன் (சந்திரசேகர வெங்கட ராமன்) எனவும்தான் எழுதவேண்டும் --விஜயராகவன் 17:15, 13 டிசம்பர் 2006 (UTC).

இதில் இருந்து நான் மாறுபடுகிறேன். அவர்கள் பிரபலமாக எப்படி அறியப்பட்டார்களோ அப்படித் தான் முதன்மை கட்டுரை அமைய வேண்டும். மு. கருணாநிதி என்றும் கட்டுரை இருப்பதை கவனிக்கவும். ஒரு கொள்கையாக நாங்கள் ஆங்கிலத்தை திணிப்பது இல்லை. கே. எஸ். ரவிகுமாரில் உள்ள கே. எஸ்-க்கு எப்படி விரிவு கண்டுபிடிப்பது? யார் அப்படி தேடுவார்கள்? இது வரை சி. என். அண்ணாதுரை என்று தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், அதுவே சரி.--Ravidreams 18:40, 13 டிசம்பர் 2006 (UTC).

ரவி, பிரபலம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க , சர். ராமன்கிட்ட 'ஒங்க பேர் என்ன?' என்ன என கேட்டிருந்தால், சந்திரசேகர வெங்கட ராமன் எனத் தான் சொல்லியிருப்பர். அதனால்தான் நாம் அவர் முதற்சொற்களை ச.வெ. என எழுதியாகணும். ஆங்கிலத்தில் கேட்கராபோல எழுதுவது, ஆங்கில மோகமே ; அந்த மோகத்தின் முகமூடி 'பிரபலம்'. தமிழ்ப் பெயர் எதையும் நாம் ஆங்கிலத்தில் எழுதக் கூடாது. அது அண்ணாதுரைக்கும் பொருந்தும்.--விஜயராகவன் 20:56, 13 டிசம்பர் 2006 (UTC)

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதற்கேற்ப எனது முந்தைய கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்--ரவி 08:35, 25 ஜூன் 2009 (UTC)

நிகழ்வுகளின் ஆண்டுகள் - ஐயம்

தொகு

ஆங்கில விக்கியில் நிகழ்வுகளின் ஆண்டுகளைத் தலைப்பின் முதலில் குறிப்பிடும் நடைமுறை உள்ளது; (எ-டு) en:2005 Maharashtra floods. தமிழ் உரை நடையில் எவ்வாறு குறிப்பிடலாம்? பின்வருவனவற்றில் எது சரியாக இருக்கும்.

-- Sundar \பேச்சு 06:06, 22 நவம்பர் 2005 (UTC)Reply

சில சிக்கல்கள்

தொகு
  • ஒருமையில் தலைப்பிடுவதா பன்மையில் தலைப்பிடுவதா? காட்டாக தமிழர் உடை என்று ஒரு பகுப்பு ஏற்படுத்தி விட்டு அதற்குள் பல வகை தமிழர் உடைகளைச் சேர்ப்பது பொருந்துமா?
  • சுருக்கத்துக்காக அல்லது பொது தன்மையை தக்க வைக்க க், ச் விட்டுவிடுவது சரியா?

காட்டாக: கனடாவின் பொருளாதாரம், இலங்கைப் பொருளாதாரம். இங்கே கனடா பொருளாதாரம், இலங்கை பொருளாதாரம் என்பது சரியாக தென்படுகின்றதா?

--Natkeeran 23:44, 3 நவம்பர் 2006 (UTC)Reply

தமிழ் முன்னெழுத்துகள்

தொகு

ஆங்கில முன்னெழுத்துகளால் பிரபலமாக அறியப்படுவோரின் பெயர்களைத் தமிழ் முன்னெழுத்துகள் கொண்டு எழுதுவது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. எனவே, இது குறித்த மீண்டும் உரையாட விரும்புகிறேன். எடுத்துக்காட்டுக்கு,

N. Chokkan என்ற எழுத்தாளர் தமிழிலும் என்.சொக்கன் என்றே தமிழிலும் அறியப்படுகிறார். இதனை நா. சொக்கன் என்று தமிழ்ப்படுத்தி எழுதுகிறோம்.


தமிழில் எழுதுவதற்கான காரணங்கள்

தொகு
  • தமிழில் பெயர் எழுதும் போது தமிழ் முன்னெழுத்துகளைப் பயன்படுத்துவது தமிழ் முறைமை.
  • கே. ஆதவன் என்று எழுதினால் கே என்பது தமிழ் எழுத்து கே.யைக் குறிக்கிறதா, ஆங்கில எழுத்து Kஐக் குறிக்கிறதா என்று குழப்பம் வருகிறது. இது போல் இன்னும் பல ஆங்கில முன்னெழுத்துகளும் குழப்பம் தருகின்றன. முதற்பெயர் அடிப்படையில் கட்டுரைகளை வரிசைப்படுத்தினால், இது போன்ற குழப்பங்கள் சிக்கல் தரும்.
  • S, G, H போன்ற ஆங்கில முன்னெழுத்துகளால் தேவையற்று கிரந்நம் புகுகிறது.
  • W, X போன்ற முன்னெழுத்தை டபிள்யூ, எக்சு என்று எழுதுவது முன்னெழுத்துகளை மிகவும் நீளச் செய்கிறது.


ஆங்கிலத்தில் எழுத வேண்டுவதற்கான காரணங்கள்

தொகு
  • ஒருவர் பெயரை எப்படி எழுதுவது என்பது அவரது உரிமை. அவர் எழுதியபடியே எழுதுவது தான் அவருக்கு அளிக்கும் மரியாதை.
  • முன்னெழுத்து மட்டுமல்ல அதன் ஒலியும் சேர்ந்தே ஒருவரின் அடையாமாக இருப்பதால் அந்த ஒலியைக் காப்பது அவசியம். எடுத்துக்காட்டுக்கு, MGR என்பது ஒரு ஆங்கில எழுத்துக்கூட்டு என்பதை விட அதுவே ஒரு பெயருக்கு உரிய ஒலிப்பு போல் தனித்துவம் மிக்கதாக இருக்கிறது.
  • ஆங்கில முன்னெழுத்துகளாலேயே பரவலாக அறியப்படுவதால் தமிழ் முன்னெழுத்துகள் குழப்பும். யாரைச் சுட்டுகிறார்கள் என்று புரியாமல் போகும். இரு வேறு ஆட்களோ என்று எண்ண வைக்கலாம்.

தீர்வு?

தொகு

ஆங்கில முன்னெழுத்துகளை நேரடியாகத் தமிழ் எழுத்துகளை வைத்து மாற்றீடு செய்வது விரும்பத்தகாததாக இருப்பது புரிந்து கொள்ளத்தக்கது.

ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆட்களின் முழுநீளப் பெயர் (ஊர்ப்பெயர், முதற்பெயர் உட்பட) எழுதுவது வழக்கமாக உள்ளது. நூலக அறிவியலிலும் இது ஒரு வழக்கம். எனவே, இதனை முன்னிட்டுத் தமிழ் விக்கிப்பீடியாவிலும் வெறும் தமிழ் முன்னெழுத்தைத் தராமல் முழுநீளப் பெயர்களைத் தரலாம். தேவைப்படும் மாற்றுப் பெயர்களில் வழிமாற்று தரலாம். (இத்தகைய தீர்வைப் பரிந்துரைத்த kanagsக்கு நன்றி!)

மேற்கண்ட கொள்கை பரிந்துரை குறித்து உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.--ரவி 08:50, 25 ஜூன் 2009 (UTC)

இரட்டைச் சொற்கள்

தொகு

இரண்டு சொற்கள் வரும் தலைப்புக்கள் சில சமயம் கூட்டாக எழுதலாம். இதில் புழக்கத்தில் உள்ள மரபு என்ன (அ) இதனைத் தெளிவாக்கினால் நலம். காட்டாக நீராவிச்சுழலி என்றும் நீராவி கொதிகலன் என்றும் இருக்கின்றன. அவை நீராவிச் சுழலி என்று இருக்க வேண்டுமா அல்லது நீராவிக்கொதிகலன் என்று இருக்க வேண்டுமா? எப்படி எழுதினாலும், நீராவி கொதிகலனின் ஒற்று மிக வேண்டும் (க்) என்று நினைக்கிறேன். --இரா.செல்வராசு 02:49, 14 ஜூன் 2010 (UTC)

நல்ல பரிந்துரை, செல்வராசு. ஒற்று இவ்விடங்களில் மிகும் என்றே நானும் நினைக்கிறேன். பிரித்து எழுதுவதால் தேடுபொறிகளில் சிக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆதே வேளையில் சிறிய தொடர்களுக்குச் சேர்த்தே எழுதலாமென்று நினைக்கிறேன். சேர்த்து எழுதும்போது வல்லின ஒற்றில் சொல் முடியும் நிலையைத் தவிர்க்க முடியும். எதுவாகினும் மற்ற வடிவில் இருந்தும் மாற்றுவழி ஏற்படுத்துதல் நல்லது. -- சுந்தர் \பேச்சு 03:11, 14 ஜூன் 2010 (UTC)

ஆங்கிலத் தலைப்பு எழுத்துக்கள்

தொகு

கட்டுரை இவ்வாறு கூறுகிறது:

ஏ. ஆர். ரகுமான் - சரியான பெயரிடல் மரபு. A. R. Rahman - தவறான பெயரிடல் மரபு எம். எஸ். சுப்புலட்சுமி - தவறான பெயரிடல் மரபு ம. ச. சுப்புலட்சுமி - சரியான பெயரிடல் மரபு

ம.ச.சுப்புலட்சுமி என்றுதான் சொல்ல வேண்டும் என்றால், அ.ர (அல்லது அ.இர) ரகுமான் என்று கூறத் தேவையில்லையா? மேலும், ரகுமான் பற்றிய கட்டுரையில் சனவரி என்று மாதத்தின் பெயர் காணப்படுகிறது. இதன்படி சூன் மாதம் என்று எழுத வேண்டும். ஆயினும், இதில் உள்ள இயக்க அமைப்பைப் பின்பற்றிக் கையெழுத்திடுகையில் ஜூன் என்றே பதிவாகிறது (காண்க: மேலுள்ள ஒரு ஜூன் மாதப் பதிவு). இதில் ஒருமித்த கருத்து உருவாகிவிட்டதா? அறிய ஆவல்.--Tamil sarva 11:28, 16 ஜூலை 2010 (UTC)

முரணைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. எல்லா இடங்களிலும் தமிழ் முன்னெழுத்துகள் வருவது தான் சரியாக இருக்கும். விக்கியில் பதிவாகும் மாதப் பெயர்களிலும் சூன், சூலை என்றே எழுதுமாறு திருத்த வேண்டும்--ரவி 12:08, 16 ஜூலை 2010 (UTC)
இம்மாற்றத்தைச் செயல்படுத்த http://translatewiki.net/wiki/Main_Page தளத்தில் நாம் மாற்ற வேண்டும். இதே போன்ற மற்ற வழுக்களையும் முனைந்து சரி செய்ய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:37, 17 ஜூலை 2010 (UTC)

தூதரக பட்டியல்கள்

தொகு

en:List of diplomatic missions of India, en:List of diplomatic missions in India இரண்டையும் சீராக எல்லாநாடுகளுக்கும் பொருந்துமாறு பெயரை பரிந்துரைக்கவும். en:List of diplomatic missions of India=தூதரகங்களின் பட்டியல், இந்தியா என்று கொடுத்துள்ளேன். இது சரியானத் தலைப்பா? en:List of diplomatic missions in India என்கிற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டி உள்ளதால் குழப்பலாம். en:List of diplomatic missions in India = இந்தியாவில் உள்ள தூதரகங்களின் பட்டியல் என்று கொடுத்தால் வார்ப்புரு:Asia topic வார்ப்புருவை திருத்தவேண்டும்? (இந்தியா'வில்', ஆப்கானித்தா'னில்').

அதேபோல் தமிழக மாவட்டங்கள் என்பது பேச்சுவழக்கில் சரியென்றாலும், 'தமிழ்நாடு' (official) மாவட்டங்கள், தமிழக அரசு=தமிழ்நாடு அரசு என்று இருக்குமாறு வழிமாற்று செய்வது நல்லது. புதிதாக தமிழ் கற்பவர்களுக்கு உதவும்?-- மாஹிர் 07:53, 1 சனவரி 2011 (UTC)Reply

தமிழக ஊர்ப்பெயர்களில் தமிங்கிலம்

தொகு

தமிழக ஊர்ப்பெயர்களில் தமிங்கிலம் தவிர்க்க தமிழ் எழுத்துச் சுருக்கங்களையும் முழுப் பெயரையும் பயன்படுத்த வேண்டும் என்பதை முறையான வழிகாட்டாக அறிவிக்கலாமா? பார்க்க: பேச்சு:காசிபாளையம் (G), பேச்சு:S.நல்லூர், பேச்சு:S.கோடிக்குளம் நன்றி.--இரவி 07:52, 5 பெப்ரவரி 2012 (UTC)

ஆம் கட்டாயம் தேவை! --செல்வா (பேச்சு) 15:31, 13 அக்டோபர் 2012 (UTC)Reply

ஆம் கட்டாயமாக அறிவிக்க வேண்டும்.-முதுமுனைவர் மு.ஐயப்பன் (பேச்சு) 11.37 ஆகஸ்டு 2020 ஐயன் (பேச்சு) 06:09, 20 ஆகத்து 2020 (UTC)Reply

மரபணுக்களுக்கான பெயரிடு முறைமை

தொகு

மரபணுக்கள் மற்றும் புரதங்களுக்கான பெயர்கள் பல மொழி விக்கிகளிலும் பொதுமை கருதி ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. எனினும் Leptin எனும் புரதப் பெயரை லெப்டின் என்று பயன்படுத்த முடிகிறது. ஆனால் CYR61 என்பதை சிஒய்ஆர்61 என எழுத வேண்டியிருக்கிறது. இது குறித்து பயனர்கள் கருத்தை வேண்டுகிறேன். நன்றி !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:39, 13 அக்டோபர் 2012 (UTC)Reply

CYR61 போன்றவற்றை நாம் எப்படியும் பிறைக்குறிகளுக்குள் கொடுப்போம், எனவே இவற்றைத் தமிழில் எழுதும்பொழுது சி.ஒய்.ஆர்.61 என்று இடையே புள்ளி வைத்தோ, அலல்து சி_ஒய்_ஆர்_61 என்று அடிக்கோடு இட்டோ எழுதுவது நல்லது. ஆனால் இதே பொருள் CCN1 என்றும் அழைக்கபப்டுகின்றது. நாம் சிசுட்டைன்-மிகுந்த குருதிக்குழாயாக்குந் தூண்டி 61 என்று விளக்கமாகவும் எழுதுதல் வேண்டும் இதன் அடிப்படையில் சிமிகுதூ61 என்றும் கூடக் கூறலாம். தேவையைப் பொருத்து இவற்றில் பயன்பாடு அமையும். --செல்வா (பேச்சு) 15:30, 13 அக்டோபர் 2012 (UTC)Reply

தங்கள் கருத்துக்கு நன்றி பேராசிரியரே ! கட்டுரைத் தலைப்பில் சி.ஒய்.ஆர்.61 என்று புள்ளி வைத்து எழுதுவது எனக்குச் சிறப்பாகப் படுகிறது. சிசுட்டைன்-மிகுந்த குருதிக்குழாயாக்குந் தூண்டி 61 என்பதைக் கட்டுரையின் முதல் வரியில் முதன்மைப்படுத்தலாம் என எண்ணுகிறேன். இது குறித்து மற்றப் பயனர்தம் கருத்துகளையும் அறிதல் நலம். ஏனெனில் இச்சீர்மை எல்லா மரபணுப் புரதக் கட்டுரைகளிலும் பேணப்பட வேண்டியது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:56, 13 அக்டோபர் 2012 (UTC)Reply

பிறமொழி திரைப்படங்களின் தலைப்பு

தொகு

தற்பொழுது கீழ்க்கண்டவாறு பரிந்துரை உள்ளது:

  • லைஃவ் ஈசு பியூட்டிஃவுல் (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
  • வாழ்க்கை அழகாக இருக்கிறது (திரைப்படம்) - தவறான பெயரிடல் மரபு :)!.


ஆனால் மொழிபெயர்த்து வழங்கும் பழக்கமும் பல மொழி விக்கிகளிலே உள்ளது. எடுத்துக்காட்டாக Buddha Collapsed out of Shame என்னும் படம் ஒரு பாரசீக மொழிப்படம். அதன் பாரசீக மொழிப்பெயரும் உரோமன் எழுத்தில் பெயர்ப்பும்: : بودا از شرم فرو ریخت ;Buda azsharm foru rikht. இதே படத்தைப் பிரான்சிய மொழியில் "Le Cahier" என்றும், எசுப்பானிய மொழியில் "Buda explotó por vergüenza" என்றும் கூறுகின்றார்கள். எனவே புத்தர் வெட்கத்தில் சாய்ந்தார் போன்ற மொழிபெயர்த்தைத் தலைப்பத் தந்து. அந்தப் படத்தின் பாரசீகப்பெயரையும் தந்து ஒலிபெயர்ப்பையும் புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் என்று தரலாம். ஆகவே தேவையான இடங்களில் மொழிபெயர்த்தும் தலைப்பை இடலாம் என்று கூறுதல் சரியான வழிகாட்டலாக இருக்கும். படிக்கும்பொழுது பொருளும் புரியும், மூல மொழி ஒலிப்பும் முதல் வரியிலேயே இருக்கும். இது சரியான முறையாக இருக்குமா?--செல்வா (பேச்சு) 06:33, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

கொள்கை மாற்றம்

தொகு

(ஆலமரத்தடி உரையாடல் இங்கு படியெடுக்கப்படுகிறது)

எதற்கு எடுத்தாலும் ஆங்கில விக்கிப்பீடியா நிர்வாகக் கொள்கைகளைச் சுட்டிக்காட்டி இங்கு விவாதம் புரியும் நாம் அந்த விக்கிப்பீடியாவின் ஒரு கொள்கையின் சாரத்தைப் புறக்கணித்துவிட்டோம்/கவனிக்கவில்லை என நினைக்கிறேன். அனைவருக்கும் புரியும் படியும், சுருக்கமாகவும் தெளிவாகவும், பரவலாக அறியப்பட்ட சொல்லாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. இதுபோக இடத்திற்கு ஏற்றது போல சமூகம் விவாதித்து முடிவு எடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் குழப்பம் வாய்ந்த இடங்களில் எழுதியவரின் தலைப்பிற்கு அல்லது விவாதப் பொருள் அமைவிடம் சார்ந்த கருத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேற்கொண்ட அடிப்படை விதியைத் தமிழ் விக்கி பெயரிடல் மரபுக் கொள்கையிலும் சேர்க்கப் பரிந்துரைக்கிறேன். மாற்றுக் கருத்திருந்தால் ஓட்டுமுறையையும் பயன்படுத்தலாம்.

நன்மைகள்

தொகு
  1. விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கையைக் கடைபிடித்தல்.
  2. இதன் மூலம் தேவையற்ற மொழிசார்ந்த சச்சரவுகள் தீரும்.
  3. அதை நோக்கி ஆக்கப்பூர்வமாகப் பேச்சுப் பக்கங்களில் விவாதிக்கலாம்.
  4. தலைப்புக்கள் சார்ந்து பயனர்களின் சுய ஆய்வுகள் தவிர்க்கப்படும்.
  5. புதிதாகத் தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் படிக்க வருபவருக்குப் புரிதல் சிக்கல் குறையும்.
  6. இறுதியாக, தமிழ் மக்கள் அனைவருக்கும் பயன்படும்.

கேள்விகளும் பரிந்துரைகளும்

தொகு
  1. பரவலாக அறியப்பட்ட சொல் என்றால் பிறமொழி கலந்துவிடுமே? யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகவே சரியான தமிழ்ச்சொல் இருந்தால் அவற்றிற்கு முன்னுரிமை, பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்த சொல்லுக்கு அடுத்த முன்னுரிமை, அதுவும் இல்லாதபோது மொழிபெயர்ப்புக்கு அடுத்தமுன்னுரிமை. அடைப்புக்குறிக்குள் பிற தலைப்புகளைக் கொடுப்பதில் சிக்கல் இல்லை.
  2. தற்போதைய தன்னாட்சித் தமிழிலே இருக்கட்டும் பரவலாக அறியப்பட்ட சொல்லுக்கு வழிமாற்றி போதாதா? வழிமாற்றிகள் அப்பக்கத்திற்கு மட்டும்தான் வழிகாட்டும். உருபுகளோ, வினைகளோ சேர்த்தால் யாருக்கும் வழிகாட்டாது. அதே நேரத்தில் முதன்மைத் தலைப்பாகக் கொண்டு கட்டுரையிருந்தால் அதன் வாக்கியங்களில் அத்தலைப்பு நன்றாகப் பயன்படுத்தப்பட்டு தேடுதளங்களில் உதவும். உதாரணம்:ரயில் என்றால் மட்டுமே தொடருந்து பக்கத்திற்கு வழி கிடைக்கும், ரயில்கள் என்றோ ரயில்களை என்றோ தேடினால் கிடைக்காது. ஆகவே இந்தியத் தலைப்புகளுக்கு ரயில் என்றும் பிற நாடுகளுக்கு அதன் உத்தியோகப்பூர்வ பெயர்களிலும் இடலாம்.(Strong national ties to a topic)
  3. சரியான மொழி இலக்கண நடையைப் பயன்படுத்த வேண்டாமா? தாராளமாக அடைப்புக்குறிக்குள் தனித்தமிழ் வழக்கு: இந்திய வழக்கு, என்று சொல்லலாமே. விக்கிப்பீடியாவொரு மொழிநடைக் கையேடு அல்ல.
  4. அனைவருக்கும் தெரியுமே, இதைக் கொள்கையில் சேர்ப்பதால் என்ன லாபம்? இதுவொரு அடித்தளமே. எங்கெல்லாம் தலைப்புகள் பற்றிய விவாதம் நடக்கிறதோ அங்கெல்லாம் ஒழுங்கு படுத்த இக்கொள்கை வடிவம் பெறவேண்டும். இதன் பின்னர் இதன் அடிப்படையில் மொழிநடை வழிகாட்டல்கள் திருத்திக் கொள்ளலாம். பலரும் அறிந்திருந்தாலும் இக்கொள்கைக்குப் பொருந்தாத விவாதங்களும் நடைபெறுகின்றன.

இதுவரை எழுத்தப்பட்ட கட்டுரைகளை மாற்றுவது மனத்தடங்கள் வரலாம் அதனால் இனிமேல் வரும் கட்டுரையிலாவது இம்முறை அமல்படுத்த வேண்டும். தனிப்பட முறையில் விக்கி நடையைப் பிற இடங்களில் பயன்படுத்த மிகுந்த சிரமமாகவுள்ளது.--நீச்சல்காரன் (பேச்சு) 04:56, 17 நவம்பர் 2013 (UTC)Reply

தகவலுழவன்

தொகு
    1. இதுகுறித்து முதல் முயற்சியை, நான் சிலவருடங்களுக்கு முன், இராசத்தான் கட்டுரையின் உரையாடற்பகுதியில் தொடங்கினேன். பிறகு இப்பகுப்பில் உள்ள உரையாடல்களைக் கண்டேன். பின்னர், இறுதியாக ஃபபேசியே கட்டுரையின் உரையாடற்பகுதியில் ஈடுபட்டேன். கலந்துரையாடல் சர்ச்சையாக பல இடங்களில் மாறி, அனைவரது காலத்தையும் உரையாடற்பகுதிக்கே செலவிடும் படி செய்தது எனக்கு வருத்தமே.
    2. ஏனெனில், புதிய சொற்களை அல்லது மேம்பட்ட சொற்களை கட்டுரையின் உள்ளே விவரிக்கும் போதே அது நிலைபெறும். தலைப்பிடுதலால் அது நிலை பெறாது என்பதே உண்மை.
    3. இன்றைய சூழலில், இவ்விக்கிசமூகம், வழிமாற்றாகக் கூட ஒரு சொல்லை ஏற்கவில்லை. கட்டுரையின் உள்ளே மொழியை கடந்த நுட்பங்கள் தான், கட்டுரையை மேம்படுத்துகின்றன. அது போல வழிமாற்று இருந்தால், பல சொற்களின் வழியே, நாம் எளிதில் பொதுமக்களை அடையலாம் என்பதே உண்மை.
    4. அந்நிலையை உருவாக்க முடியாத நிலையில், இனி கட்டுரையாக்கத்திலும், தொழிற்நுட்ப முயற்சியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். 4வரி உரையாடினால், 4வரிகட்டுரையாக்கத்தில் ஈடுபட வேண்டும் என்று எனக்கு நானே எல்லையை வகுத்துக் கொண்டு, எனது குறுகிய நேரத்தினை கட்டுரையாக்கத்திற்காக செலவழிக்கிறேன்.
    5. நம் தமிழ் விக்கிப்பீடியாவை எந்தெந்த அலகுகளால் அளக்கிறார்கள் என்று அனைவரும் உணரவேண்டும். அதற்காக உழைப்பவர் பேணப்பட வேண்டும். அதற்கான தொழிற்நுட்ப கருவிகள், விவரங்கள் என்னென்ன? இதுவரை அதிகம் உழைத்தவர் யார்? என்ற விவரங்கள் விளக்கப்பட்டால், பல அறிஞர்கள் இங்கு குவிந்து தமது படைப்புகளை எழுதுவர். இந்த தேவைகள் இருந்தால், நமது நிலை இரட்டிப்பாக ஓரிரு வருடங்கள் போதும். வணக்கம்,--≈ உழவன் ( கூறுக ) 05:57, 17 நவம்பர் 2013 (UTC)Reply

நற்கீரன்

தொகு
  • தலைப்பு தமிழில் இருக்க வேண்டும்.
  • தலைப்பு தமிழ் மொழிநடைக்கு/இலக்கணத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
  • பிற மொழிப் பெயர்ச் சொற்கள் ஒலிப்பெயர்ப்பு/எழுத்துப்பெயர்ப்புச் செய்யப்படலாம்.
  • கலைச்சொற்கள் தெளிவாகத் தெரியாத இடத்தில் வழக்கத்தில் உள்ள பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம்.

--Natkeeran (பேச்சு) 14:27, 19 நவம்பர் 2013 (UTC)Reply

உடன்படுகிறேன். மறுப்பில்லாத போது விக்கிக் கொள்கையை மாற்றிவிடுகிறேன். "தமிழ் மொழிநடைக்கு/இலக்கணத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும்" என்பது சரியே ஆனால் அச்சொல் வழக்கில் இல்லாவிட்டால் வழக்கத்திலுள்ள/பரவலாக அறியப்பட்ட சொல்லைப் பயன்படுத்தவேண்டுகிறேன். விக்கிப்பீடியா ஒரு மொழிநடைக் கையேடு அல்ல என்பதைப் பின்பற்றவேண்டும்--நீச்சல்காரன் (பேச்சு) 04:55, 20 நவம்பர் 2013 (UTC)Reply

ஏற்கனவே காப்பி போன்ற கட்டுரைகளில் இக்கொள்கை இசைவுடன் தானே பயன்படுத்தப்படுகிறது? என்ன வகையான மாற்றங்களை வேண்டுகிறீர்கள் என்பதற்கு இன்னும் சில எடுத்துக்காட்டுகளைத் தந்தால் புரிந்து கொள்ள உதவும். கொள்கை மாற்றம் கொண்டு வருவது எனில் விக்கிப்பீடியா:கொள்கை வகுத்தல் பக்கத்தில் உள்ள வழிகாட்டலைக் கவனிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:26, 20 நவம்பர் 2013 (UTC)Reply


"வழக்கில் இல்லாவிட்டால் வழக்கத்திலுள்ள/பரவலாக அறியப்பட்ட சொல்லைப் பயன்படுத்தவேண்டுகிறேன்" என்ற வேண்டுகோள் ஒவ்வொரு சொல்லையும் தனியாக ஆய்ந்தே முடிவு செய்ய இயலும். எ.கா பஸ் என்ற சொல் வழக்கத்தில் இருக்கும் சொல் எனினும் பேருந்து என்பதே பொருத்தமான தமிழ்ச் சொல். வீடியோ என்பது பெரும் வழக்கத்தில் இருக்கும் சொல் எனினும் காணொளி, நிகழ்படம் போன்றவை வழக்கத்தில் ஓரளவு இருக்கும் தமிழ்ச் சொற்கள். --Natkeeran (பேச்சு) 18:33, 20 நவம்பர் 2013 (UTC)Reply

நீங்கள் கொள்கையைத் தவறாகப் புரிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். பஸ் என்று பயன்படுத்த நானும் விரும்பவில்லை காரணம் பேருந்து என்ற சொல்லும் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில இடங்களில், பேருந்து என்பதும் சரியல்ல நீளவண்டி என்பதுபோல புதுப் பெயர் வைப்பததைத் தவிர்க்க வேண்டும் என்கிறேன். மேற்கோள்களும், புழக்கமும் இல்லாச் சொற்கள் விக்கிப்பீடியாவை அந்நியப்படுத்தும்.--நீச்சல்காரன் (பேச்சு) 18:24, 26 நவம்பர் 2013 (UTC)Reply

எடுத்துக்காட்டுகள்

தொகு

எனது மைய நோக்கம் எழுதும் ஆக்கங்கள் பிறருக்குப் பயன்படவேண்டும். ஆங்காங்கே நாம் பயன்படுத்தி வரும் வாதங்கள்: கல்வி நிறுவனங்கள் பரிந்துரைத்த சொல் வேண்டும், மூலமொழிச் சொல்லுக்கு ஒத்த ஒலிப்புகள் வேண்டும், மூலமொழிச் சொல்லானாலும் தமிழ் மரபில் எழுத வேண்டும், ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழிகளில் ஒலிக்கப்படாத ஒலிகள் இங்கும் ஒலிக்கத் தேவையில்லை, இந்திய மொழிக்குடும்பச் சொற்களுக்கு கிரந்தம் பயன்படுத்த வேண்டும், தனித் தமிழ்ச் சொல்லே வேண்டும், ஊடகங்களில் பயன்படும் சொல்லே பயன்படுத்த வேண்டும், மக்கள் அறிந்த சொல்லே வேண்டும், விக்கிச் சமூகம் கலந்துரையாடி தன்னாட்சியான சொல்லும் அறியமுகப்படுத்தலாம், மேலும் பல. இப்படி கீழிருந்து மேலாக ஒவ்வொரு சொல்வாரியாக ஆராய்ந்து வந்தால் அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள் குறுக்கிடும். தீவிரத் தமிழ்ச் சொல்லையே எனக்கு முன்னிலைப் படுத்த தோன்றலாம் உதாரணம்: wordpress என்பதை வார்த்தைப்பதிப்பகம் என்றும் parachute oil என்பதை வான்குடை தேங்காய் நெய் என்று நான் உருவாக்கக் கூடும். எனவே மேலிருந்து கீழாக ஆராயும் போது "பரவலாகத் தமிழர்கள் அறிந்துள்ள சொல்" என்று கொள்ளும் போது அதன் அடிப்படையில் கட்டுரையில் தலைப்பு அனைவருக்கும் பயன்படி அமையும். அதனாலேயே தமிழ் விக்கிப்பிடியாவில் உள்ள கட்டுரைகளை நேரடியாக உதாரணமாக வைக்கவில்லை. "விக்கிப்பீடியா ஒரு மொழி நடைக் கையேடு அல்ல பரவலாகப் பயன்படும் நல்ல சொற்களைப் பயன்படுத்த வேண்டும்" என்ற nutshell உருவாக்கவே முனைகிறேன்.

இவ்வாதத்தைப் புரிந்து கொள்ள இந்தக் கொள்கை தவறிய(தவறான சொல் என்று சொல்லவில்லை) சில கட்டுரைகளைக் இப்போது குறிப்பிடுகிறேன். (எனது வாதம் தவறு என்றாலும் திருத்திக் கொள்கிறேன்). இக்கட்டுரைகளைத் திருத்துவதற்குப் பரிந்துரைக்கவில்லை, இனி வரும் கட்டுரைகளில் இந்த ரத்தினச் சுருக்கத்தைப் புரிந்து அமைக்க வேண்டுகிறேன்.

ஐரோ, ம. கோ. இராமச்சந்திரன், பாக்கிசுதான், இராச்சசுத்தான், இடாய்ச்சு மொழி, உத்தராகண்டம், தெலுத்தா, ஆல் இசு வெல், யாவாக்கிறிட்டு, இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம், உழவன் விரைவு தொடருந்து, சார்க்கண்ட்

  • மேற்கொண்ட பெயர்கள் எல்லாம் விக்கியில் உள்ள முதன்மைத் தலைப்புகளே, தலைப்புக் கொள்கை இல்லாததால் பரவலாக அறியப்படாத சொல்லும், புணர்ச்சி விதிக்கு முரணான தொடர் அமைப்பும், அலுவல் பெயர் தவிர்த்தும் தலைப்புகள் உள்ளன.
  • இச்சொற்களுக்கு மாற்றாக வேறு சொற்களையே தமிழ் ஊடகம், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் பயன்படுத்திவருகிறார்கள். இச்சொற்கள் அரிதாகவோ, அல்லாமலோ பயன்பாட்டிலுள்ளது.
  • இதனைப் பயன்படுத்தினால் (எந்த நாடானாலும்) அரசுத் தேர்வுகளில் பல சொற்களுக்கு மதிப்பெண் கிடைக்காது.
  • கட்டற்ற ஒரு நடைமுறையும் தன்னாட்சி மொழி நடையும் இரு எதிர் துருவங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் ஆதிக்கம் செலுத்த இது வழிகோலும்.
  • வேறு மொழி விக்கியில் இத்தகைய தன்னாட்சி நடையிருக்கிறாதா என்பது சந்தேகம்
  • இச்சொற்கள் எல்லாம் பிழை என்பது வாதம் அல்ல பரவலான சொல்லையே தகவல் தொடர்பிற்கு மக்கள் பயன்படுத்த விரும்புவர் என்பதே வாதம்.
  • இச்சொற்களுக்கு நம்பகமான தமிழ் மேற்கோள்கள் இல்லாவிட்டால் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல்லையே பயன்படுத்த வேண்டும்
துடுப்பாட்டம், தொடருந்து போன்ற சொற்களைப் பொதுவான கட்டுரைகளைத் தவிர இந்திய சார்ந்த அமைப்புகளில் பயன்படுத்த தவிர்க்கலாம். கிரிக்கெட், ரயில் என்றே அதன் பெயர்கள் அறியப்படுகின்றன. (உழவன் விரைவு ரயில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்). java server page என்பதை யாவா வலைப் பக்கங்கள் என்பது தவறு. இட்லர் என்று பரவலாகப் பயன்படுத்தாவிட்டாலும், இப்படியும் வழங்கப்படுவதால் இத்தலைப்புகளை ஏற்கலாம். தொன்மா என்று மேற்கோள்கள் இல்லாவிட்டாலும் மாற்றுச் சொல் இல்லாததால் இவற்றையும் பயன்படுத்துவதால் பெரிய பிரச்சனையில்லை. இப்படி உதாரணங்கள் கேட்டால் திரட்டித் தரமுடியும். ஆனால் நமது அடிப்படை நோக்கத்தைத் தீர்மானித்துவிட்டு ஆராய்வதே சிறப்பாகையால் மேலும் உதாரணங்களைக் கேட்டாலொழிய தவிர்கிறேன்.

விக்கிப்பீடியா வழமையான நடைமுறைப்படி குறிப்பிட்ட நபர்களுக்கு அல்லது நிபுணர்களுக்கு மட்டும் புரிந்து கொள்ளக் கூடிய சொல்லைப் பயன்படுத்துதல் கூடாது. எளிய புழக்கத்தில் உள்ள சொல்லே தலைப்பாக நடைமுறைப் படுத்த வேண்டும். எனக்குத் தெரிந்து இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தன்னாட்சியாகப் பெயரிடுவதில்லை, அனைவருக்கும் சட்டென்று புரியும் சொல்லையே விவாதக் களத்தில் முன்வைத்து வாதம் செய்கிறார்கள், தலைப்பும் வைக்கிறார்கள். தமிழ் விக்கியிலும் அனைவருக்கும் புரியும் விதத்தில்தான் எழுதுகிறோம், இருந்தும் சில இடங்களில் இடர் ஏற்படுகின்றன. ஆகவே கொள்கையில் ஒரு தெளிவு வந்தால் அவை எதிர்காலத்தில் உதவும். நடைமுறையில் உள்ள நல்ல சொற்களை எடுத்து கையாளுவோம். மற்ற சொற்களை அடைப்புக் குறியில் இடுவோம். மேலேகுறிப்பிட்டுள்ள ரத்தினச் சுருக்கத்தை இச்சமூகம் ஏற்கும் போது, கீழ்கண்ட பெயரிடல் மரபுக் கொள்கை எனது பரிந்துரை

சுருக்கமாகவும், தெளிவாகவும், பரவலாக அறியப்பட்டும், நம்பகமான தமிழ் மேற்கோளுடனும் தலைப்புகள் அமைய வேண்டும். அவ்வாறு அறியப்படாத அல்லது கலைச்சொல் இல்லாத தலைப்புகளுக்குச் சொந்த மொழி பெயர்ப்பு செய்தோ, விவாதித்தோ தலைப்புக்கள் வைக்கலாம்.

திரைப்படங்கள், நிறுவனங்கள், இடப்பெயர்கள் போன்ற வணிக/அடையாளப் பெயர்களை அதன் அலுவல் பெயர் தமிழில் அல்லாத போது அறியப்பட்ட சொல்லையே பயன்படுத்த வேண்டும். மொழி பெயர்ப்பு செய்ய வேண்டாம். ஒரு நம்பகமான மேற்கோள் இருக்கும் பட்சத்திலோ, பெரியளவு பயன்படுத்தப் படும் வேறு சொல் இல்லாமல் இருந்தாலோ, மாற்று கருத்தில்லாத போதோ கிரந்தம் நீக்கியும் எழுதலாம்.

ஒத்த கருத்திருந்து முறையான முழுக் கொள்கை வரைவு தேவையென்றாலும் சமர்பிக்கிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 06:31, 21 நவம்பர் 2013 (UTC)Reply

செல்வாவின் கருத்துகள்

தொகு

நீச்சல்காரன் கேட்கும் கேள்விகளுக்கும் கூற்றுகளுக்கும் மறுமொழிகள் தர விழைகின்றேன். கூடிய மட்டிலும் நீச்சல்காரன் கூறிய கருத்துகள் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு கருத்துரைக்கின்றேன்.

  1. // உருபுகளோ, வினைகளோ சேர்த்தால் யாருக்கும் வழிகாட்டாது// --இதனைக் காரணமாக வைத்துப் பிறமொழி பெயர்களில் பெயர்கள் வைக்க வேண்டுவது ஏற்க இயலாதது. இப்படிப் பார்த்தால் இரயில்கள் என்று தேடினால் கூட கிடைக்காமல் போகலாம். தமிழில் எழுதும்பொழுது தமிழ் முறைபப்டி இலக்கணப்படிதான் எழுதுதல் வேண்டும். இரயில் என்று இடுவதா தொடர்வண்டி, தொடருந்து என்று பெயரிடுவதா என்பது வேறு கேள்வி. தொடர்வண்டி என்று பெயரிட்டு, பிறைக்குறிகளுக்குள் இரயில் என்று மட்டும்தான் தந்தால் (இரயில்கள், ரயில்கள், இரயிலை, ரயிலை என்றெல்லாம் இல்லை என்று கவலைப்படுவது தேவையில்லை. இதற்கு முடிவே கிடையாது. எந்த உருபு வினையோடு ஒருவர் தேடுவார் என்றெல்லாம் ஆய்வு செய்ய முடியாது. பிறைக்குறிகளுக்குள் இரயில் என்று தருவது போதும். கட்டுரையிலும் சில இடங்களில் இரயில் என்னும் சொற்பயன்பாடு இருந்தாலும் பிழை இல்லை.
  2. //விக்கிப்பீடியாவொரு மொழிநடைக் கையேடு அல்ல.// நல்ல மொழி நடையுடன் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க இடம் இல்லை. எந்த ஒரு தரமான படைப்பும், நல்ல தமிழில் நல்ல நடையில் இருக்க வேண்டுவது தேவை. விக்கிப்பீடியா நடைக்கையேடு இல்லை எனினும், நல்ல நடைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது குற்றம் அல்லவே! சொல்லப்போனால் அழகும் பெருமையும் ஆகும்!
  3. மேலே நற்கீரன் சொன்னதை அப்படியே ஏற்கின்றேன்.
  4. ஊடகத்தில் பயன்படுத்தும்படியாகத்தான் நாமும் பயன்படுத்த வேண்டும் என்னும் எந்தக் கட்டாயமும் இல்லை. ஊடகத்திலும் ஒரே முறையாகவோ, சரியான முறையிலோ எழுதப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக புதுதில்லி, புது டில்லி புது டெல்லி என்று பலவிதமாக எழுதுகின்றார்கள். இலக்கணப்பிழையாகவும், உண்மையில் ஒலிக்கவே முடியாதவாறும் கடைசியில் வல்லின ஒற்று (புள்ளி வைத்த வல்லின எழுத்துகளை (க், ச். ட். த், ப், ற்)) வரும்படியாகவும் இட்டு எழுதுகின்றார்கள். முடிந்தால் கேக் என்றோ "டாப்" என்றோ சொல்லிப்பாருங்கள் க் , ப் என்னும் ஒலிகள் வெளியே வரவே இயலாது. தமிழில் இப்படி எழுதக்கூடாது என்பது விதி (இது வெற்று விதி அன்று, அறிவார்ந்த, அறிவின், இயற்கையின் அடிப்படியின் அமைந்த விதி). வல்லின புள்ளி வைத்த எழுத்துக்கு அடுத்து ஓர் உயிரொலி வந்தால்தான் ஒலிக்க முடியும். கேக்கு என்று எழுதினால், அதில் வரும் கடைசி கு குற்றியல் உகரம் உடையது. எனவே கிரிக்கெட்டு என்று எழுதலாமே ஒழிய கிரிக்கெட் என்று எழுதுதல் கூடாது.
  5. ஊடங்கங்கள் எழுதுவதும் பாடநூல்கள் எழுதுவதும் சரியானதாக இருந்தால் ஏற்கலாம். பாடநூல்களில் வெளியான சில சொற்களைக் கீழே இடுகின்றேன்.மணி மணிவண்ணனின் புழக்கடைப் பக்கம் என்னும் வலைப்பதிவில் இருந்து: "பின்வரும் சொற்கள் 1944ல் பாடநூல்களில் இருந்திருக்கின்றன, ஆனால் இவை இன்றும் நம்மில் பெரும்பாலோர்க்குப் புரியாதவை: சோக்‌ஷிகள், க்‌ஷாரம், ஆஹார சமீகரணம், யோகவாஹி, சஞ்சாயகி, வாஹகம், ஹரிதகிகாமலம், அப்ஜ இரத்தகிகாமலம், பாக்கியஜனக அனிஷ்கர்ஷம், சங்கோஜயத்வம், பிரதிலோம, விபாஜியத்துவம், பிரதி மாகேந்திரம், அவினா சத்வம், அவிபேத்யம், சமாந்திர சதுர்புஜம், அதிருசிய ரேகை, நிஷ்காசினி, வித்யுத்லகானிகம், வக்ர பாவித்வம், உஷத்காலம், ஆபாஸபிம்பம், ஜ்யாமிதி, கிருஷித் தொழில்" இவை எல்லாம் என்னவென்று புரிகின்றதா? இப்படித்தான் எழுத வேண்டும் என்று கூறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இவை மட்டும் அன்று. பேராசிரியர் மறைமலை அவர்கள் "கலைச் சொல்லாக்கம்" என்னும் கட்டுரையில் (உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்புமலர், 2010, பக்கம் 522 இல்) தந்துள்ள சில சொற்களைப் பகிர்கின்றேன் "குலஸ்த்ரீபுருஷ பாலவிருத்த ஆயவ்ய பரிமாணம்" (census), வித்யுத் விஸ்லேஷணம் (Electrolysis), பாக்கியமிகஜம், அப்ஜனகம், கசேருலதை, ஸநாயு, பரிசோஷணம்" (இந்தக் கடைசி ஐந்தும் என்ன பொருள் என்று சிந்தியுங்கள் பின்னர் கூறுகின்றேன்) இப்படித்தான் எழுத வேண்டும் வலியுறுத்த முடியுமா, வேண்டுமா சொல்லுங்கள்.
  6. //இதனைப் பயன்படுத்தினால் (எந்த நாடானாலும்) அரசுத் தேர்வுகளில் பல சொற்களுக்கு மதிப்பெண் கிடைக்காது.// -- இது மதிப்பெண் பெற்றுத்தரும் தளம் அன்று. இது பாடநூலும் அன்று. இங்கே தெளிவாக, செறிவாக, சரியாக பொருள்கள் விளக்கப்பட்டிருக்க வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளதை எழுதினாலும் இந்தியாவில் மதிப்பெண்கள் யாரும் தரமாட்டார்கள் என்றே கூறுவேன்.
  7. //எனக்குத் தெரிந்து இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தன்னாட்சியாகப் பெயரிடுவதில்லை, அனைவருக்கும் சட்டென்று புரியும் சொல்லையே விவாதக் களத்தில் முன்வைத்து வாதம் செய்கிறார்கள், தலைப்பும் வைக்கிறார்கள்//--ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு வகையானது. இந்திய மொழிகளின் இலக்கணத்தில் பயன்படுத்தும் சொற்கள் பிறமொழிச்சொற்களில் இருந்து பெற்றவை. தமிழ் தொடக்ககாலம் முதல் தங்கள் மொழியில் தங்களுக்குப் புரியும் முறையிலேயே அனைத்தும் இருக்க வேண்டும் என்று மரபாக வழங்கி வந்திருக்கின்றார்கள். ஒவ்வொரு மொழியின் அணுகுமுறையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இந்தியிலோ மலையாளத்திலோ ஒருவிதமாகச் செய்கின்றார்கள் என்றால் அப்படித்தான் நாமும் செய்ய வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, அது முறையும் இல்லை. ஓர் எடுத்துக்காட்டு தருகின்றேன். ஆங்கிலத்தில் square என்று ஒரு சொல் உள்ளது. அடுத்து cube என்று இன்னொரு சொல்லை, square என்பதோடு எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் சீன மண்டரின் மொழியில் 方 (ஃபாங்) என்றால் சதுரம். ஆனால் 立方 (லி ஃபாங்) என்றால் கன சதுரம். அதாவது முற்றிலும் புதிய சொல்லாக cube என்பது போல் ஆளாமல், 立方 (லி ஃபாங்) என்று பருமன் உடையது, திரட்சி உடையது என்னும் பொருள் தரும் லி ( 立) என்னும் சொல்லைச் சேர்த்து புதிய கருத்தைச் சொல்லுகின்றார்கள். இது அவர்கள் முறை (தமிழிலும் இது போன்ற முறையையே கைக்கொள்ளுகின்றோம்). ஆங்கிலத்தில் femur என்னும் சொல்லைக் குறிக்க இடாய்ச்சு மொழியில் Oberschenkelknochen என்று கூறுகின்றார்கள். எந்த ஆங்கிலேயருக்கும் femur என்றால் தனியாக கற்காமல் அது எதைக் குறிக்கின்றது என்று சிறிதளவும் தெரியாது, ஆனால் இடாய்ச்சு மொழிச்சொல் சற்று நீளமாக இருந்தாலும் யாரும் சொல்லித்தராமலே, புதிய சொல் எதனையும் கற்காமலே இடாய்ச்சு மக்களுக்கு அது என்ன என்று தெரியும். ஏனெனில் schenkel = தொடை; knochen = எலும்பு, Ober = மேல் என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். நாம் தொடை எலும்பு என்றால் புரிந்துகொள்வது போல. நாம் புரியாத சொல்லாகிய (நம் மொழியில் பொருள் சுட்டாத) ஃபீமர் (femur) என்று எழுதும் பழக்கமோ மரபோ அற்றவர்கள். ஆங்கிலேயர் வழக்கம் வேறாக இருக்கின்றது. அதாவது ஒவ்வொரு மொழியின் அணுகுமுறையும் வேறானது. எல்லோரும் ஒரே விதமாகத்தான் செய்ய வேண்டும் என்பது தேவை இல்லை (பொருந்தியும் வராது).
  8. தமிழ் விக்கிப்பீடியாவில் கைக்கொள்ளக் கூடிய நல்ல நடைமுறை, ஏறத்தாழ தஞ்சைப் பல்கலைக்கழக வாழ்வியல் கலைக்களஞ்சியத்தில் பயன்படுத்தியிருக்கும் முறையைக் கைக்கொள்ளலாம். இது 15 தொகுதிகள் கொண்ட பெரும் கலைக்களஞ்சியம். இதில் மிகப்பெரும்பாலும் நல்ல தமிழ் முறையைப் பின்பற்றி இருக்கின்றார்கள்.

--செல்வா (பேச்சு) 04:52, 25 நவம்பர் 2013 (UTC)Reply

அன்புள்ள செல்வா ஐயா, நான் கூறியவற்றில் தொடர் தொடராகப் பதிலளித்திருக்கீர்கள் ஆனால் மொத்தமான மையக் கருத்தைப் பற்றி உங்களிடம் எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு சொல்லுக்கும் நீங்கள் நியாயம் கொடுக்கிறீர்கள், அதனை நானும் ஒப்புக்கொள்கிறேன். இங்குச் சொற்கள் தவறு என்று விவாதமல்ல எது பயனருக்குப் பயன்படும் என்பதைத்தான் விவாதிக்க விரும்புகிறேன்.
  • நீங்கள் கூறிய இரயில் அல்லது நான் கூறிய ரயில் இரண்டும் கூகிள் தேடலில் வரவில்லை என்பதுதான் கொள்கை மாற்றலுக்கான காரணம்.
  • நல்ல நடைவேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் யார் அந்த நடையைத் தீர்மானிப்பதில் தான் குழப்பம் வருகிறது. முன்னர் பட்டியலிட்டுள்ள வழக்கத்தின் படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தை முன்னிருத்துகிறார்கள். அதிகமானவருக்குப் புரியும் நல்லநடை வேண்டும் என்பதே நோக்கம்.
  • ஒலிக்க முடியாதவாறு எழுத்துக்கள் இருக்கிறது என்பதற்காக அறிமுகமில்லாத எழுத்துத்தொடர்களை அமைக்க வேண்டாம் என்கிறேன். ஒலிப்புகளைக் கற்றுதருவது விக்கிப்பீடியா அல்லவே. கிரிக்கெட் என்பதைவிட கிரிக்கெட்டு என்பது தான் உண்மையில் ஒலிக்கமுடியாத எழுத்துக்கூட்டல்கள் என்பேன். ஆனால் எனது எதிர்ப்பு "கிரிக்கெட்டு" என்பதற்கு அல்ல ஆனால் "இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்" என்பதில் தான் பிணக்கு. மேலும் தமிழ் இலக்கண விதிகள் பலவற்றைப் பயன்கருதி நவீனத் தமிழ் நடையில் விலக்குகள் கொண்டுள்ளோம் அதுபோல நீங்கள் குறிப்பிடும் விதியையும் விலக்கு அளிப்பதால் பலருக்குப் பயன்படும்.
  • அதற்காக ஊடகங்களில் உள்ள சொற்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அடையாளப் பெயர்களைத் தவிர மற்றவற்றிற்கு புழக்கத்தில் உள்ளதில் நல்ல சொல்லைப் பயன்படுத்தக் கேட்கிறேன். நன்கு அறியப்பட்ட தமிழ்ச்சொல் புழக்கத்தில் இருக்கும் போது புதுச் சொல்லை இங்குக் கொண்டுவரவேண்டாம் என்கிறேன். அதனால் 1944 பாடநூலை நானும் ஏற்பதில்லை.

மேலே கூறியுள்ள என் பரிந்துரையுடன் தமிழ் விக்கிப்பிடியா தலைப்பிடும் நடை அனைவருக்கும் புரியும் விதத்தில் அமைய வேண்டுமா அல்லது மொழிநுட்பம் தெரிந்தவர்களுக்குப் புரியும் விதத்தில் அமைய வேண்டுமா என்று ஆரோக்கியமான ஓட்டெடுப்பு நடத்தலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 07:31, 25 நவம்பர் 2013 (UTC)Reply

  1. நீச்சல்காரன், நீங்கள் "கிரிக்கெட் என்பதைவிட கிரிக்கெட்டு என்பது தான் உண்மையில் ஒலிக்கமுடியாத எழுத்துக்கூட்டல்கள் என்பேன் " என்கின்றீர்கள். இப்படியெல்லாம் அறவே பொருந்தாத வகையில் பேசப் புகுந்தால் என்ன செய்ய முடியும். நீங்கள் "ட்" என்று நிறுத்தவே முடியாது ( ட் என்னும் ஒலி வெளியே வரும்படி). தினத்தந்தி நாளிதழ் கோர்ட்டு என்று எழுதுகின்றது தினமலர் நாளிதழ் கோர்ட் என்று எழுதுகின்றது. வேற்றுமொழிச் சொல்லை தினத்தந்தி எழுதுவது சரியான முறை, இதில் மாற்றுக்கருத்துகள் ஏதுல் இல்லை. மேலும் "கிரிக்கெட்" என்று எழுதுவதாகக் கொண்டால் (அப்படி எழுதுவது தவறு என்பதையும் தாண்டி), கிரிக்கெட்+ இல் = கிரிக்கெடில் என்றுதானே ஆகும் ? (கிரிக்கெட்டில் என்று ஆகாது), கிரிக்கெட் + ஆல் = கிரிக்கெடால் என்றுதானே ஆகும் ? (கிரிக்கெட்டால் என்று மாறாதே) இலக்கணத்தையும் மாற்றச்சொல்லி, அதனை மாணவர்களுக்கும் புகட்டச் சொல்லிவீர்களா?
  2. இரயில் என்று இப்பொழுது தேடிப்பார்த்தேன், கிட்டுகின்றதே! தமிழ் விக்கிப்பீடியா மட்டும் இல்லை, தினமணி நாளிதழ், வலைப்பதிவுகள் போன்றவையும் கிட்டுகின்றன. இரயில் என்று தேடினால் 443,000 தேடல் முடிவுகளும் ரயில் என்று தேடினால் 471,000 முடிவுகளும் கிட்டுகின்றன. தமிழில் இரயில் என்று எழுதுவதுதான் சரியானது. எது சரியானதோ அதனைத்தான் முன்னிறுத்தவேண்டும். பரவலாக அறியப்படுவது என்பது மாறிக்கொண்டே இருக்கக்கூடும். மேலும் இன்றைய இணையப் பயன்பாட்டை வைத்துக்கொண்டு அப்படியான முடிவுகளுக்கும் வருதல் பொருந்தாது.
  3. "இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்" என்பதில் வரும் துடுப்பாட்டம் என்பதை மாற்ற வேண்டும் என்றால் அப்பக்கத்தில் உரையாடுவதே நல்லது. கிரிக்கெட்டு என்று இருக்க வேண்டும் எனில் அதற்கு ஏற்பு இருந்தால் இடலாம். "கிரிக்கெட்" என்று இருப்பது தவறு, அது கூடாது. மட்டைப்பந்து என்று இருக்க வேண்டும் என்று ஒருவர் வாதிட்டால், அதனை சீர்தூக்கிப்பார்க்கத்தான் வேண்டும். நான் மேலே கூறியதில் ஒரு முக்கியமான கருத்தைக் கூற முனைந்தேன். ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு அணுகுமுறை கொண்டிருக்கும். வேற்றுமொழிச்சொற்களை முறையான எழுத்தில் கையாளுவதில் மொழிசார்ந்த மரபுகள் உண்டு. தமிழில் சொல்லும் எந்தவொரு சொல்லும் தமிழ் வழியாகவே பொருள் சுட்டவேண்டும் என்பது நெடுங்கால மரபாக இருந்து வந்துள்ளது (சீன மொழி லி ஃபாங் (=கன சதுரம்) என்னும் எடுத்துக்காட்டை இதற்காகவும் கூறினேன்). கணினி என்பதைப் பயன்படுத்தக் கூடாது, கம்ப்யூட்டர் என்றுதான் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதெல்லாம் அண்மையில் கண்ட உரையாடல்கள். இன்று கணினி என்பதை யாரும் தவறாக நினைப்பதில்லை. இதனால் பிறமொழிச்சொற்களை ஏற்கவே கூடாது என்று நான் சொல்லவில்லை. தமிழில் புரியும்படியான நல்ல தமிழ்ச்சொல் இருந்தால், அதனைப்பயன்படுத்த எந்தத்தடையும் இருக்க வேண்டியதில்லை. பிறமொழிச் சொற்களைத் தமிழ் முறைக்கு ஏற்பத் தமிழில் வழங்குதல் வேண்டும். இவை எளிமையான நேர்மையான எதிர்பார்ப்புகள்.
  4. //ஒலிக்க முடியாதவாறு எழுத்துக்கள் இருக்கிறது என்பதற்காக அறிமுகமில்லாத எழுத்துத்தொடர்களை அமைக்க வேண்டாம் என்கிறேன்.// இதனை ஏற்கின்றேன். இதற்காகவே சரியான முறைகள் ஏற்கனவே வகுத்துத் தந்திருக்கின்றார்கள் நம் தமிழ் முன்னோர்கள். அறிமுகமில்லாத எழுத்துத்தொடர்கள் என்பதில் ஃப என்பதும் வருமா? ஃக என்பது அறிமுகம் இல்லாத எழுத்துக்கூட்டல் அன்று! எஃகு, வெஃகாமை முதலான பல சொற்கள் உண்டு. அதிக ஒலிப்புத்துல்லியம் பார்க்க முனைவதாலேயே பல குழப்பங்கள் விளைகின்றன.
  5. நீங்கள் "அனைவருக்கும் புரியும்படியாக", "மொழிநுட்பம் தெரிந்தவர்கள்" என்று எதிரெதிர் அணியாகக் கருதுவது மாயை. ஏனெனில் அனவருக்கும் என்பது நீங்களாக கற்பனை செய்வது. மொழிநுட்பம் தெரிந்தவர்கள் என்பதும் நாமாக மிகையாக அன்னியப்படுத்தி நினைப்பது. நீங்களே கிரிக்கெட்டு என்றால் உண்மையில் ஒலிக்க முடியாத ஒலிக்கூட்டல் என்று கூறுகின்றீர்கள், அப்பொழுது நீங்கள் மொழிநுட்பம் அறிந்தவர் என்று பொருளா? யாராலும், அவர் எந்த நாட்டினராக இருந்தாலும், எந்த மொழியினராக இருந்தாலும் "கிரிக்கெட்" என்று கடைசியில் ஓர் உயிரொலி இல்லாமல் ஒலிக்கவே முடியாது என்பது அடிப்படை அறிவியல் உண்மை. இதை மொழியியல் நுட்பம் அறியாத யாரொருவரும் வாய்விட்டுச் சொல்லிப்பார்த்தால் உடனே புரிந்துகொள்ளலாம். சரியான கருத்துகளை ஏற்பதில் என்ன தயக்கம்? மேலும் அப்படித் தமிழில் ஒரு சொல் முடியக்கூடாது என்பதும் தமிழ் இலக்கணம். எது சரியோ அதனை ஏற்க வேண்டுமா, கூடாதா என்பதே கேள்வி. இலக்கணத்தைக் கூடிய மட்டிலும் பின்பற்றவேண்டுமா கூடாதா என்பதே கேள்வி. கலைக்களஞ்சியம் போன்றவற்றை உருவாக்கும் பொழுது சரியான மொழி நடையில், முறைமைகள் வகுத்து எழுத வேண்டும். நடையும், மொழியும் எளிமையானதாகவும், தெளிவானதாகவும் இருக்க வேண்டும். சரியான சீர்மைகள் முறைமைகள் பேணுவது அறிவுடைய செயல். எந்தப் பெரிய கலைக்களஞ்சியத்திலும் (மேற்குலக நாட்டார் ஆங்கிலம், இடாய்ச்சு மொழி போன்ற மொழிகளில் ஆக்கியிருக்கும் படைப்புகளைப் பார்க்கும்பொழுது) சீரான முறைமைகள் வகுத்து, இலக்கணம் போற்று நடையில்தான் எழுதுகின்றார்கள். பேச்சுவழக்கிலே lemme go, gimme என்று பேசினாலும், சீரிய எழுத்தில் அப்படியெல்லாம் எழுதுவதில்லை.

--செல்வா (பேச்சு) 16:37, 25 நவம்பர் 2013 (UTC)Reply

  • //ஆனால் மொத்தமான மையக் கருத்தைப் பற்றி உங்களிடம் எதிர்பார்க்கிறேன்// பெயர்கள்,தலைப்புகள் யாவும் தமிழில் சரியான வகையில் இடுவதே நல்லது. பெயர்களை ச.வெ. இராமன் (சி.வி. இராமன் என்று பிறைக்குறிகளுக்குள் தரலாம்), ம.கோ. இராமச்சந்திரன் (எ.ஜி ராமச்சந்திரன் என்று பிறைக்குறிகளுக்குள் தரலாம்) என்பது போல ஒரு நன்முறையைப் பேணி எழுதுவதே நல்லது. ஜாவா ஸ்க்ரிப்ட் என்று எழுதுவது சரியானது போல தோன்றினாலும் அது சரியன்று. சாவா கிறிட்டு என்றோ யாவா கிறிட்டு என்றோ எழுதுவது சரியானது ஆனால் பிறைக்குறிகளுக்குள் "ஜாவா ஸ்கிரிப்டு" என்று என்றும் எழுதப்படுகின்றது என்று குறிப்பிடலாம். உரோமன் எழுத்திலும் எழுதிக்காட்டலாம் (Java Script). "ஸ்க்ரிப்ட்" என்பதில் வரும் ஐந்து மெய்யெழுத்துகளில் நடுவே ஒரே ஓர் உயிர் எழுத்து மட்டுமே உள்ளது!! இப்படியெல்லாம் தமிழில் எழுதவே கூடாது ஐயா! மெய்யெழுத்தில் தொடங்கியோ, வல்லின மெய்யெழுத்தில் முடியுமாறோ எழுதவே கூடாது. தமிழில் "ஸ்தலம்" என்பதை தலம் என்று எழுதுவது வழக்கம். தமிழில் மட்டும் அன்று, வட இந்திய மொழிகள் பலவற்றிலும் வழக்கம். இதைப் பற்றி விரிவாக தக்க எடுத்துக்காட்டுகளுடன் எழுதியும் உள்ளார்கள். சுருங்கச்சொன்னால், தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளபடி, இலக்கணப்பிழை இல்லாமல், முறை சார்ந்து தலைப்பிடல் சரியான முறை. --செல்வா (பேச்சு) 18:23, 25 நவம்பர் 2013 (UTC)Reply
செல்வா ஐயா, கருத்துகளுக்கு நன்றி. இஃகவ், திஃசொங்கா என்னும்போது ஆய்தக் குறுக்கத்தைக் கணக்கில் கொண்டோ, சகரத்தில் தொடங்குவது தமிழ்மரபு இல்லை என்றோ 'அது' என்பதற்குப் பதில் சரியானயிடத்தில் 'அஃது' என்றோ எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்? அங்குத் தமிழ் இலக்கண மரபுகள் மீறப்படவில்லையா? கிரிக்கெட் போட்டி (பொருட்செல்வம் என்பதுபோல) என்று உச்சரிப்பதை விட கிரிக்கெட்டுப் போட்டி என்றால் சிரமத்தை உணரமுடியும். ஆகவே இலக்கண மரபு என்று வாதிட்டால் ஒவ்வொன்றிற்கும் மறுப்புகளும் விலக்குகளும் காட்டமுடியும் அது இங்குத் தேவையில்லாதது. எனவே இலக்கண இறுக்கம் வேண்டாம் என்பதே பலரின் அவா. நான் தமிழ் இலக்கணத்தை எதிர்ப்பதோ, புறக்கணிப்பதோ நோக்கமில்லை. நீங்கள் அங்கிகரிக்கும் இலக்கண முறையான வார்த்தைகள் புழக்கத்தில் வருவதை நானும் விரும்புகிறேன். அவை தனிப்பட்ட விருப்புகள். அவை விக்கிப்பீடியாவிற்கு ஒத்துவருமா என்பதே கேள்வி. அதே போல புழக்கத்தில் உள்ள எல்லாச் சொற்களையும் எடுக்கச் சொல்லவில்லை. computer என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லிருக்கும் போது கண்ணிப்பான் என்பதுபோல புதிதாக அறிமுகப் படுத்தப்படுவது(ஐரோ, அடையாளச் சின்னம்) விக்கிப்பீடியாவின் நோக்கத்திற்கு ஒத்துவருமா என்பதே எனது பார்வை. குறைந்தபட்சம் நீங்கள் தமிழ் மரபுபடி என்று சொல்லும் பதங்களுக்கு மேற்கோளாவது வேண்டும். இல்லாவிட்டால் இல்லாதவற்றையெல்லாம் தமிழ்மரபு என்று வாதிடமுடியும். நான் மொழிந்துள்ள கொள்கை யாருக்கும் எதிரானது அல்ல, சரியான பரவல் இருக்கும்போது இராச்சசுத்தான் என்பதை அம்மாநிலமே ஆங்கிகரிக்கலாம். இவ்விறுக்கம் அதிகரித்தால் எளிய தமிழ் விக்கிப்பீடியா என்று புதிய விக்கி உருவாகிவிடக் கூடாது என அஞ்சுகிறேன். மாற்றுக் கருத்திருப்பதால் சமூகத்தின் ஒப்புதல் பெற ஓட்டெடுப்பு நடத்த வேண்டுகிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 00:37, 26 நவம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன், நீங்கள் கூறும் "இஃகவ், திஃசொங்கா" என்ன று எனக்குத் தெரியவில்லை. பசி, கொசு என்பது போல திசொங்கா என்றாலே காற்ரொலி சகரம் வரும். அதே போல இகவ் என்றாலே சிறிதலவு காற்றொலி ககரம் வரும். நான் முன்பு கூறியதுபோல பிறமொழிச்சொற்களில் மிகுதுல்லிய ஒலிப்பை எதிர்பார்ப்பதே சிக்கலுக்குக் காரணம். திரிபுகள் எல்லா மொழிகளிலும் நிகழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் இலக்கண மரபை மீறாமல் ஏறத்தாழ அனைத்தையும் எழுதலாம், ஆனால் நான் அந்த நிலையை எடுக்கவில்லை. கூடியமட்டிலும் பின்பற்றவே வேண்டும் என்று விரும்புகின்றேன். நீங்கள் கூறும் கிரிக்கெட் போட்டி என்பதைக் கிரிக்கெட்டுப் போட்டி என்றுதான் எழுதவேண்டும். இது நான் விதித்தது அல்ல. கிரிக்கெட் என்று எழுதினால் கிரிக்கெடில், கிரிக்கெடோடு என்று எழுத வேண்டிவரும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள் தனிச்சொல்லாக கிரிக்கெட்டு என்றுதான் இருக்க முடியும் தமிழில். இதெல்லாம் ஒட்டெடுப்பு நடத்திச் செய்யும் செயலல்ல. கிரிக்கெட்டு வேண்டுமா, துடுப்பாட்டம் வேண்டுமா, மட்டைப்பந்தாட்டம் வேண்டுமா என்று வேண்டுமானால் ஓட்டு/வாக்கு எடுப்பு நடத்தலாம். கிரிக்கெட்போட்டி என்று எழுதினால் ஒலிப்பில் சிக்கல் இல்லை ஆனால் சொற்பகுப்பில் சிக்கல் உள்ளது. பொருட்செல்வம் என்பது பொருள்+செல்வம் = பொருட்செல்வம். இது புணர்ச்சி விதி (ள் ட் ஆவது). சொற்பகுப்பில் சிக்கல் இல்லை. அது என்பதும் அஃது என்பதும் இரண்டுமேசரியானதுதான் ஐயா, ஏதும் விதிகள் மீறப்படவில்லை! தமிழில் மெய்யெழுத்தில் தொடங்குதல் கூடாது, வல்லின மெய்யெழுத்தில் முடிதல் கூடாது என்பதெல்லாம் வாக்கெடுப்பின்படி முடிவுகட்டும் கருத்துகள் அல்ல. மெய்யெழுத்துக்கூட்டங்கள் பற்றிய விதிகளும் மரபுகள் நன்கு அறியப்பட்டவை. தமிழில் மட்டும் இல்லை மிகப்பெரும்பாலானா இந்திய மொழிகளிலும் சப்பான், சீன மொழிகளிலும் கட்டுப்பாடுகள் உள்ளன (ஆனால் நம் மொழி போல் இலக்கணத்தால் வரையறை செய்யாமலே மரபாகவே கட்டுப்பாடு உள்ளது). ஆங்கிலத்திலும் கூட போலந்திய மொழிபோல மெய்யொலி கூட்டங்களை ஒலிக்க இயலாது. மொழிக்கு மொழி உள்ள வேறுபாடுகளை மதிக்காமல், பொருட்படுத்தாமல் சிலர் தமிழில் எப்படி வேன்டுமானாலும் மெய்யொலிக்கூட்டங்களைக் கொண்டு எழுதலாம் என்று முனைவது தவறு. வட இந்திய மொழியான போச்சுபுரியில் கூட "ஸ்நாந" என்பதை "அஸ்நாந்" என்று முன்னே உயிரொலி இட்டு எழுதுகிறார்கள். இதனை ஆங்கிலத்தில் prosthetic vowel என்கிறார்கள். இதே போல பஞ்சாபியிலும் இஸ்(த்)திரி என்று "ஸ்த்ரி" என்னும் சொல்லை எழுதுகின்றார்கள். வேறு சிலர் சக்கூல் (School) என்று எழுதுகின்றார்கள். நாம் இரயில என்று நாம் எழுதுவதும் இப்படித்தான். தெக்கண உருது மொழியிலும் கூட இராஜா (ராஜா அல்ல!) என்று எழுதுவதாக இரஃகீம் 10-ஆவது ஆண்டுவிழா ஒன்றுகூடலில் தெரிவித்தார். எனவே இலண்டன், இராமன், இரயில் என்று எழுதுவது பெரிய இடரோ துன்பமோ இல்லை. புதிய கருத்துகளை கட்டுரைகளில் சேர்ப்பதில் நான் கவனம் செலுத்த வேண்டும். மொழியின் இலக்கணங்களையும் மரபுகளையும் கூடிய மட்டிலும் பின்பற்றி சீரிய, அதே நேரத்தில், எளிய நடையில் எழுத வேண்டும். நல்ல தமிழில் நாம் எழுதினால் நிலைத்து நிற்கும், சிறப்பாகவும் இருக்கும். --செல்வா (பேச்சு) 04:47, 26 நவம்பர் 2013 (UTC)Reply
செல்வா ஐயா, நீங்கள் 'அஃது', 'அது' இரண்டும் ஒன்றான பயன்பாடு என்பது வியப்பாகயிருக்கிறது. உயிரெழுத்தில் தொடங்கும் பெயருக்கு முன் அஃது என்பதுதானே மரபு? இப்படி அவரவருக்குத் தெரிந்தவற்றை மட்டும் முன்னிலைப் படுத்துவதாலேயே மேற்கோளின்றித் தாமாகத் தலைப்பை மாற்றும் தன்னாட்சி முறையை ஆதரிக்கவில்லை. விக்கிப்பீடியாவின் பரப்புரைக்கும் உங்கள் சில கருத்திற்கும் சில முரண்கள் இருக்கிறது. ஆனால் அவற்றைச் சுட்டிக்காட்டி விவாதத்தைத் திசைதிருப்பவிருப்பமில்லை. இன்னும் இறங்கி வந்து சொல்வதென்றால் விக்கிப்பீடியா பயனர்களின் சுய ஆய்வுகள் கட்டுரைக்குள்ளும், தலைப்பிலும் வேண்டாம் என்கிறேன். விக்கிப்பீடியாவின் வழமையான முறைகளைச் சிதைக்கவேண்டாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 13:18, 26 நவம்பர் 2013 (UTC)Reply

நீச்சல்காரன், அது-அஃது என்பதன் விதி அப்படி இருப்பதாக அறியேன். அது ஒலிப்பின் நுணுக்கம், ஒலிநயம், சுருக்கம் முதலிய பற்றி அஃது என வருவது என்பதுதான் நான் புரிந்துகொண்டிருப்பது. அது என் ஊர்தான், அதாவது, அது ஏன் எனத் தெரியவில்லை என்று எத்தனையோ எடுத்துக்காட்டுகள் அது என்னும் பயன்பாட்டுக்குக் காட்டலாம். எது "சுய ஆய்வு" என்று சுட்டிக்காட்டுங்கள், பிறழ்வுகள் இருந்தால் திருத்திக்கொள்ளலாம். தெரிந்ததை எடுத்துச்சொல்வது "சுய ஆய்வு" இல்லை. தமிழில் மேலே நான் கூறிய அனைத்திற்கும் திட்டவட்டமான விதிகள் உள்ளன. அவை எந்த விதத்திலும் கடுமையானவை அல்ல. மிகவும் எளிதாகப் பின்பற்றக்கூடிய விதிகளே. அவற்றில் சிலவற்றைக் கீழே தருகின்றேன்.

  1. மெய்யெழுத்தில் தொடங்கி ஒரு சொல்லை எழுதுதல் கூடாது
  2. வல்லின மெய்யெழுத்தில் முடியுமாறு ஒரு சொல்லை எழுதுத கூடாது
  3. தமிழில் வழங்கும் பொழுது ஒரு சொல்லின் முதலிலும், இடையிலும் கடைசியிலும் வரக்கூடிய மெய்யொலிக்கூட்டங்கள் என்று வரையறை செய்துள்ளவாறு வழங்குதல் வேண்டும்.
  4. தமிழில் முதலில் வரும் எழுத்துகள் என்னும் வரையறைக்கு உட்பட்டு எழுதுதல் வேண்டும். எ.கா. லண்டன் என்று எழுதுவது தவறு, இலண்டன் என்று எழுதுதல் வேண்டும், இரயில், இராமன், இராவணன் என்று எழுதுதல் வேண்டும்.

இவை தவிர சொல் தேர்வுகளில் சில நேரங்களில் சில சிக்கல்கள் இருக்கலாம். எ.கா கிரிக்கெட்டு- துடுப்பாட்டம்-மட்டைப்பந்தாட்டம்-இவற்றில் எதைத் தேர்வது ஏன் என்ன என்பது சிக்கலாக இருக்கலாம். வேறு சில சிக்கல்களும் இருக்கலாம். இவற்றைக் கருத்தாடி தீர்த்துக்கொள்ளலாம். தமிழில் எழுதும்பொழுது கூடியமட்டிலும் தமிழ் இலக்கணத்தோடும், தமிழ்ச்சொற்களுக்கு முன்னுரிமை தந்தும் எழுதுவது விக்கிப்பீடியாவின் வழமையான முறைகளைச் சிதைப்பதாக ஆகுமா ஐயா? தமிழ் வழமைகளைச் சிதைக்காமலும் இருக்கலாம் அல்லவா? எதுவும் 'சுய ஆய்வு', "தன் ஆய்வு" என்று கருதினால், அது பற்றிப் பேசி முடிவு செய்யலாம், திருத்திக்கொள்ளலாம். ஒருவருக்குத் ஒன்று தெரியாததாலேயே மற்றவர் சொல்வது சுய/தன் ஆய்வு என்னும் முன் முடிவுக்கு வர வேண்டாம் என்று வேண்டிக்கொள்கின்றேன்.

--செல்வா (பேச்சு) 15:33, 26 நவம்பர் 2013 (UTC)Reply

செல்வா ஐயா, கடுமையான உரையாடலாக எனது உரையிருந்தால் மன்னியுங்கள். யாரையும் தனிப்பட்டோ, எந்தக் கொள்கைக்கும் தடைவிட்டோ எனது கொள்கை மொழிவுயில்லை. சரியான அங்கிகாரம் இருக்கும் ஒரு சொல்லைப் பயன்படுத்தவே முற்படுகிறது. எப்படி மரபுத் தமிழில் எழுதவிரும்புகிறோமோ அதுபோல நவீனத் தமிழ் நடையில் எழுதும் அறிஞர்களும் உண்டு அவர்களுக்கும் மதிப்பு தாருங்கள் என்றே கெஞ்சுகிறேன். நவீன நடையை 19,20 நூற்றாண்டு தமிழறிஞர்கள் பலர் பயன்படுத்தியுள்ளார்கள். ஒருவகையில் மொழிப் பரிணாமம் என்று சொல்லி மொழியியல் ஆய்வுகளுக்குள் போவது நோக்கமல்ல. விக்கிமீடியா முன்னுரிமை அளிப்பது மொழிநுணுத்திற்கா? தகவலணுக்கத்திற்கா? என்று கேட்பதால் நீங்களும் இக்கொள்கையின் தேவையைப் புரிந்துகொள்ளமுடியும். பல செயல்முறைகளுக்கு முற்காட்டாக த.வி. இருக்க வேண்டும் என்று விரும்பும் தங்களுடன் மொழிச் சுதந்திரத்திற்கு வாதிடுவது தயக்கமாக இருந்தாலும் எதார்ததம் இதுதான் என நினைக்கிறேன். எழுதும் நபருக்கும், எழுதப்படும் பொருளுக்கும் மொழி நடையில் பிறவிக்கி போல முன்னுரிமை கொடுங்களேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 16:56, 26 நவம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன் ஐயா, நீங்கள் கூறுவதன் நேர்மையை நன்கு அறிவேன். நான் நம் உரையாடல் கடுமையாக இருப்பதாக ஒருசிறிதும் நினைக்கவில்லை ஐயா! முதலில் ஒன்றைச் சொல்லிவிட்டு உங்களின் பிற கூற்றுகளுக்கு எனக்குத்தெரிந்த மறுமொழியைத் தருகின்றேன். முதலில் நம்மில் யாரொருவரும் இன்னொருவரிடத்தில் கெஞ்சக்கூடாது ஐயா. அன்புடனோ, நேர்மையுடனோ வேண்டலாம், கருத்துகளை முன்வைக்கலாம். எனக்குச் சரியென்று கருதுவதை நான் அறிந்தவாறு உங்களுடன் பகிர்கின்றேன், நீங்களும் அப்படித்தான் செய்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். ஆகவே நாம் கூட்டாக ஏற்பதும் ஏற்காததும் நம் கூட்டு நல்லறிவு. நான் பிறமொழிகளில் இருந்து காட்டுகள் தருவது எதற்காக என்றால் ஏதோ தமிழில் மட்டும் நாம் தனியாக விதிகள் வைத்திருப்பது போலவோ, தனித்து இயங்குவது போலவோ நினைக்க வேண்டாம் என்பதற்காகவே. இத்தாலிய மொழியில் எலிக்பாப்டர் என்பதை Elicottero என்று எழுதினாலோ, ஈலியம் (ஆங்கிலத்தில் Helium) என்பதை Elio என்று எழுதினாலோ தவறென்று நினைக்கவில்லை. உரோமன் எழுத்தில் எழுதும் மொழிகளே H இன் ஒலி இல்லாமல் எழுதுகின்றார்கள் (பிரான்சிய மொழியிலும் H ஒலி இல்லை). எனவே நாம் இமய மலை, இதயம், ஈமோகுளோபின் (ஆங்கிலம் Hemoglobin, இத்தாலியம் Emoglobina) என்று எழுதுவதால் பிழை இல்லை. இத்தாலிய மொழி விக்கியும் பிறவிக்கிதானே ஐயா? இடாய்ச்சு மொழி விக்கியும் பிறவிக்கிதானே? ஆங்கிலத்துக்கு நெருக்கமான மொழிகளைக் கொண்ட அவர்களே ஆங்கிலத்தில் வரும் J ஒலியை ஏற்பதில்லை. பேச்சு:யாவாக்கிறிட்டு என்னும் பக்கத்தில் "Java Script" பற்றிச் சொல்லித்தரும் நிகழ்படங்களுக்கான தொடுப்புகள் (இடாய்ச்சு, எசுப்பானிய மொழிகளில்) இருப்பதைப் பாருங்கள். முதல் சில நொடிகள் கேட்டாலே உணரலாம், இடாய்ச்சு மொழியாளர் யாவா என்று கூறுவதையும், "Havaacreept" என்று எசுப்பானிய கூறுவதையும் கேட்கலாம்) (பிரான்சிய மொழியாளரிடமும் ஆங்கில J ஒலி கிடையாது). இதனை நான் ஏன் குறிப்பிடுகின்றேன், என்றால் ஒவ்வொரு மொழியாளரும் சிறிதாகவோ பெரிதாகவோ அவர்கள் மொழிக்கு ஏற்ப வேறுபடக் கூறினால் பெரிய பிழை இல்லை. நீச்சல்காரன், நவீனத்தமிழிலும் பல நடைகள் உள்ளன. நாம் எழுதுவதும் நவீன நடைகளுக்குள் அடங்கிய ஒன்றுதானே ஐயா! கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தீர்கள் என்றால், நல்ல தமிழ் நடை என்பது எளிய, மிகப்பெரும்பாலானோருக்குப் புரியும் நடை. அதிகம், ஆங்கிலமோ, சமற்கிருதமோ பிறமொழிச்சொற்களையோ கலந்து எழுதுவது மிகச்சிறுபான்மையருக்கு (ஒரு 7-10%) புரியும்படியாகவோ தெரியும்படியாகவோ இருக்கும் நடை. எனக்குத் தெரிந்ததைப் பகிர்கின்றேன், அருள்கூர்ந்து தவறாக நினைக்காதீர்கள். இவை மிகவும் நல்ல முறைகள் என்றும் நமக்கு நல்லன செய்யும் வழிமுறைகள் (நம் மக்களுக்கும் மொழிக்கும்) என்று கருதியே இவற்றைப் பகிர்கின்றேன். --செல்வா (பேச்சு) 18:23, 26 நவம்பர் 2013 (UTC)Reply
செல்வா ஐயா, நீங்கள் குறிப்பிடும் மொழியைப் போல யாவா என்று பயன்படுத்துவதில் எனக்குப் பிணக்கில்லை. ஆனால் அம்மொழியினர் அங்கிகரித்தது போல யாவா என்பதை நம் சமூகம் புழக்கத்தில் கொண்டுள்ளதா? புதிய எழுத்துத் தொடர்களை நாமே புழக்கத்தில் கொண்டு வரலாமா? எம்மொழி விக்கிப்பீடியாவிலாவது இத்தகைய புதுச் சொல் அறிமுகங்கள் உண்டா என்று அறியத்தந்தால் மேலும் சிந்திக்கவுதவும். (புதுச் சொல் என்பது மொழிபெயர்ப்பல்ல வழக்கில் உள்ள சொல்லைப் புறக்கணித்து அறிமுகப்படுத்தும் சொல் என்று கொள்க) இறுதியாக நீங்கள் வந்து நிற்கும் இடத்தில் தான் நானும் நிற்கிறேன். மிகச்சிறுபான்மையினர் பயன்படும் சொற்களை விட பரவலாகப் பயன்படுத்தப்படும் சொற்களுக்குத் தான் விக்கிப்பீடியா அமைந்துள்ளது என நினைக்கிறேன், அதைத்தான் கொள்கையையிலும் அளிக்கிறேன் --நீச்சல்காரன் (பேச்சு) 18:37, 26 நவம்பர் 2013 (UTC)Reply
நான் சொல்லும் பெரும்பான்மை என்பது இன்னும் இணையத்துக்கே வராதவர்களையும் சேர்த்து ஐயா! பொதுத்தமிழ் என்பது என்ன? தமிங்கிலம் போன்று மிகுதியும் பிறமொழிச்சொற்களையும் பிறமொழி ஒலிகளையும் கலந்து எழுதும் கலப்புத் தமிழ் என்று பரவலாக சிறுபான்மையரால் நினைப்பதை எவ்வாறு கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே. //ஆனால் அம்மொழியினர் அங்கிகரித்தது போல யாவா என்பதை நம் சமூகம் புழக்கத்தில் கொண்டுள்ளதா? // - நல்ல கேள்வி ஐயா, நம் குமுகத்தில் எல்லோரும் J பயன்படுத்துவதில்லை. சாதி, சனம், நெசமாகவா என்று கூறுபவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். இலங்கைத்தமிழர்கள் யாவா என்கிறார்கள், இந்தியத் தமிழர்கள் சாவா (chaavaa) (saavaa அன்று!!) என்று கூறுவோர்கள் பலர் உள்ளனர். ஆனால் ஜாவா என்பவர்களும் இருக்கின்றார்கள், மறுக்கவில்லை. தமிழ் இலக்கணம், தமிழ் முறை என்று பார்க்கும்பொழுது சாவா அல்லது யாவா என்பதே ஏற்புடையது (சமூகத்திலும் உண்டு. அது பெரும்பான்மையா சிறுபான்மையா, எவ்வளவு பெரிய பெரும்பான்மை, எவ்வளவு சிறிய சிறுபான்மை என்பதெல்லாம் துல்லியமாக அறிவது கடினம். chaavaa என்பதற்கும், jaavaa என்பதற்கும் உண்மையில் பெரிய வேறுபாடு இல்லை. யாவாக்கிறிட்டு/சாவாக்கிறிட்டு/ஜாவாக்கிரிப்டு என்று எதுவாயினும், அதன் உள்ளடக்கத்தை விரிவாக்குவது பயன்பெருக்கும் செயலாகும். யாவாக் கிறிட்டு என்று இருந்தாலோ சாவாக் கிறிட்டு என்று இருந்தாலோ ஒன்றும் பெரிதாக இழந்துவிடமாட்டோம். ஆனால் "ஜாவாஸ்கிரிப்ட்" என்றால் தமிழின் சீர்மையை, ஒழுக்கத்தைச் சிதைப்போம். சீர்குலைவைப் பெருக்குவோம். விளையாட்டாகவாவது ஒரு 5-6 முறை சாவாகிறிட்டு (chaavaak krit(u)) என்று சொல்லிப்பாருங்கள் அல்லது யாவாகிறிட்டு (yaavaak kirit(u)) என்று சொல்லிப்பாருங்கள் எளிதாகப் பழகிவிடும்- உண்மையிலேயே எளிதாகவும் இருக்கும். நீங்கள் வழக்கில் உள்ள சொல் என்பது எவற்றை என்று சுட்டிக்காட்டினால் மறுமொழி கூற முடியும். நான் மேலே குறிப்பிட்ட 1944 ஆம் ஆண்டுப் பாட நூற்சொற்கள் வழக்கில் இருந்த சொற்கள்தாம். ஏன் நானே என் வாழ்வில் அக்கிராசனர், அபேட்சகர் என்னும் சொல்லாட்சிகளைக் கேட்டுள்ளேன். அதற்காக அதனை வேறுவிதமாகக் கூறக்கூடாது என்று தடை விதிக்கவேண்டும் என்று சொல்லமாட்டேன். அதுவும் போதிய அளவு சீர்மை எய்தாதத நிலையில் சீர்மை எய்தவல்ல நல்ல சரியான சொற்களை கூடாது என்று கூறமாட்டேன். "Operating System" என்பதற்கு இயங்குதளம் என்னும் சொல்லால் வழங்குகின்றார்கள். ஆனால் அது இயக்குதளம் என்று கூறிவருகின்றோம். இப்படிப் பொருள் குற்றமுடையதாகவோ, இலக்கணக் குற்றம் உடையதாகவோ, வேறு பயன்பாட்டுச் சிக்கல் தருவனவாகவோ இருந்தால், மாற்றலாம் என்னும் நோக்கில் செய்கின்றோமோ அப்படித்தான் பிறவும். எல்லா இடத்திலும் அப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. இயன்ற இடங்களில் செய்வோம். நம் விக்கிப்பீடியாவின் அடையாளப் பெயரையே விக்கிப்பீடியா என்று "ப்" சேர்க்கச் சொல்லி மாற்றினோம். இல்லாவிடில் அது wikiBEEdiyaa என்பது போல ஒலிக்கும். மற்ற இந்திய மொழிகளில் இல்லாதவாறு தமிழில் ஒலிப்பானது எழுத்துச்சூழலைப்பொருத்து, ஆனால் சீரொழுக்கத்துடன், வரும் ஓர் ஒலிப்பு முறை. இது கெடாதவாறு காக்கவும் வேண்டும். இது தமிழ் மொழியின் உயிரான ஒலிப்புக்கு மிக அடிப்படையானது. --செல்வா (பேச்சு) 19:21, 26 நவம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன் ஐயா, எது சிறந்தது என்று தமிழ் விக்கிக்குழுமன் நினைக்கின்றதோ அப்படியே செய்வோம், ஆனால் இலக்கண விதிகளைத் தமிழில் அப்படி பெரும்பான்மை சிறுபான்மை என்று விடும் ஒரு கருத்துக்கூட்டம் அல்ல. என்னால் முடிந்தது தக்க அறிவான காரணங்களை எடுத்துக் கூறுவது, அறமான கருத்துகளைக் கூறுவது; இவற்றை நேர்மையாக எடுத்து வைப்பது அவ்வளவுதான். ஆனால் 'எல்லோரும்' இப்படிச் செய்கின்றார்கள் அப்படிச் செய்கின்றார்கள், அது தான் நடப்புநிலை ("யதார்த்தம்")" என்று கூறி நல்ல வழிமுறைகளைக் கைக்கொள்ளக் கூடாது எனில் நான் ஏதும் சொல்வதற்கில்லை. 10-ஆம் ஆண்டு ஒன்று கூடலில் திரு செந்தில்நாதன் கூறினாரே, அது போல "சக்கரம் வேண்டாம், வீல் என்றே போடுங்கள்" (மேற்கோளில் உள்ளது நான் நினைவில் கொண்டவாறு, அவர் கூறிய கருத்தின் சாரம்) என்று பெருநிறுவனங்களிடம் அடிமைப்பட்டே கிடக்க வேண்டும் எனில் செய்வோம் (!!). யாரைக்கேட்டு தி**** நாளிதழ் இன்ஜினியர் என்று -ன்ஜி- கூட்டலைத் தொடங்கியது. இஞ்சினியர் என்று எழுதலாமே, வேற்றுமொழிச்சொல்லே என்றாலும். "கோர்ட்" என்று ஏன் எழுத வேண்டும், தின**தி நாளிதழ் போல் கோர்ட்டு என்றாவது எழுதலாமே. தவறானவற்றை ஏற்றுக்கொள்வோம், சரியானவற்றை ஏற்க மாட்டோம் எனில் ஏதும் செய்யமுடியாது ஐயா!தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட 15-தொகுதி வாழ்வியல் கலைக்களஞ்சியத்தில் 4-ஆவது தொகுதியைப் பாருங்கள். ஈ.வெ. இராமசாமி என்றுதான் எழுதியுள்ளார்கள். இங்கே நம் திட்டப் பக்கம் தவறுதலான வழிகாட்டல் தருகின்றது. இலால்பகதூர் சாத்திரி, இலாவோசு (Laos), இலாவோசு நாட்டில் கல்வி, இராமேசுவரம், இராமையர், இராமானுச அய்யங்கார் முதலான பல கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ 1000 பக்கங்கள் கொண்டவை. தொகுதி 5-இல் உருமேனியா, உருசோ, உரோகினி என்று பல தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. அதில் கொடுத்துள்ளதால் எடுத்தாளவேண்டும் என்று சொல்லவில்லை. இப்படியான எடுத்துக்காட்டுகளும் உள்ளன என்று கூறவே எடுத்துக்கூறுகின்றேன். அவர்கள் தவறு செய்தால் நாமும் செய்ய வேண்டும் என்றும் பொருள் இல்லை. நாம் எங்கெங்கெல்லாம் நல்லது உள்ளதோ அவற்றை எடுத்துக்கொள்வோமே என்பதே கருத்து. பெரு நிறுவனங்களிலும், நாளிதழ்களிலும் மிகச்சிறுபான்மையர்தாம் முடிவுகள் எடுக்கின்றார்கள் (அங்கே இங்கு போல் அல்ல, அங்கு நடைமுறைகள் வேறு). அவர்களின் நோக்கங்கள் வேறாக இருக்கலாம். நான் ஏதோ இடையூறாக நடுவே நிற்பது போல் உணரவேண்டாம். நானும் உங்களைப்போல் உடன்பங்காற்றும் பயனர்தான். எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படியே செய்யுங்கள்!--செல்வா (பேச்சு) 01:01, 27 நவம்பர் 2013 (UTC)Reply
விக்கிப்பீடியா ஒரு அரசு நிறுவனமோ, தமிழாய்வு நிறுவனமோ அல்ல தகவல் களஞ்சியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன் இயல்புநெறியைக் கடைபிடிப்போம். இருந்தாலும் பரிந்துரைத்த கொள்கையில் "நல்ல தமிழ்ச்சொற்கள்" என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் அதனால் பேருந்து என்பதை பஸ் என்றோ, விமானம் என்பதை ஃபிளைட் என்றோ, பொறியாளர் என்பதை இன்ஜினியர் என்றோ, திரித்துவக் கல்லூரி என்பதை டினிட்டி கல்லூரி என்றோ பயன்படுத்த அவசியமில்லை. மாற்றாக காட்லாந்து என்ற தமிழ்ப்பெயர் இருக்கும் போது இசுக்காட்லாந்து என்றோ, பாகிஸ்தான் என்ற அறியப்பட்ட பெயர் இருக்கும் போது பாக்கித்தான் என்றோ, உழவன் விரைவு ரயில் என்று அங்கிகரிக்கப்பட்ட பெயர் இருக்கும் போது உழவன் விரைவு தொடருந்து என்றோ, யூரோ என்று மட்டும் புழக்கத்தில் இருக்கும் போது ஐரோ என்றோ, ஜெ/செருமன் என்று மட்டும் அறியப்படும் போது இடாய்ச்சுலாந்து என்றோ வழக்குச் சொல் புறக்கணிப்பைத் தான் தவிர்க்க முனையும். ஆகவே உங்கள் அதீதக் கவலை தேவையற்றது. மேலும் இறுதிக்கட்டத் தீர்வு இக்கொள்கைவழி எழுதுபவர்களின் கட்டுரைகளில் தன்னாட்சி எழுத்துத் திருத்தம் செய்யாமல் இருக்கலாம். சமூகத்தின் முடிவையும் எதிர்பார்க்கிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 01:49, 27 நவம்பர் 2013 (UTC)Reply
இடாய்ச்சுலாந்து என்பதுதான் ஐயா அந்த நாட்டின் பெயர்! செருமனி அன்று! ஆங்கிலேயர் செருமனி என்கின்றார்கள், அவ்வளவுதான். பிரான்சிய நாட்டார் Allemagne என்கிறார்கள். பிரான்சு நாட்டில் உள்ள 7 இலட்சம் தமிழர்களுக்கு அந்நாடு "Allemagne" என்பதுதான். எசுப்பானிய மொழியிலும் Alemania என்றுதான் அழைக்கின்றார்கள். நேர்மையாகக் கருத்தாடுங்கள். செருமனி, செருமன் என்று குறிக்கவேண்டும் எனில் குறியுங்கள், ஆனால் அந்த நாட்டின் பெயர் இடாய்ச்சுலாந்துதான் ("Deutschland"). பல நாடுகளின் பெயரில் -லாந்து என்று முடிவது போல் இதுவும் ஒன்று. //ஆகவே உங்கள் அதீதக் கவலை தேவையற்றது// ?? இல்லை ஐயா, நீங்கள் கவலைப்படுவது போலவேதான் நானும் கவலைப்படுகின்றேன். //விக்கிப்பீடியா ஒரு அரசு நிறுவனமோ, தமிழாய்வு நிறுவனமோ அல்ல// இப்படி அரசு நிறுவனம் என்றோ, தமிழாய்வு நிறுவனம் என்றோ நான் எங்கும் கூறியுள்ளேனா ஐயா?! தக்கக் காரணங்கள் தந்து ஏற்கப்பட்ட சரியான சொல்லாட்சியைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு கொள்கை ஆக்குவீர்களா? இடாய்ச்சு-செருமன் ஆகிய இரண்டும் வேண்டுமென்றால் பயன்படுத்தலாம் என்று கொள்ளலாம். இலங்கைத் தமிழர்கள் யேர்மனி என்றும், யேர்மன் என்றும் வழங்குகின்றார்கள். எனவே இடாய்ச்சுலாந்து, இடாய்ச்சு மொழி என்றால் பல வழிகளிலும் பொருத்தமாக இருக்கும் என்று கருத்தாடித்தான் வழங்கினோம். யூரோ என்பதைப் பயன்படுத்தலாம். இங்கும் சரியான சொல் இயூரோ என்பதுதான். என் கருத்துகளுக்குத் தக்கக் காரணங்களையும் எடுத்துக்காட்டுகளையும் தந்துள்ளேன். நான் பட்டறிவாலும், நடப்புகளை அறிந்தும்தான் என் கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன். பாக்கித்தான் - பாக்கிசுத்தான் - பாக்கிஸ்தான் ஆகிய மூன்றும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் வேறுவிதமாகவும் எழுதுகின்றார்கள். தமிழில் கிரந்தம் கலந்துதான் எழுத வேண்டும் என்று எந்த விதியும் இல்லை, ஆனால் விலக்கி எழுத விதியுள்ளது. ஆனால் இந்த விதியைப் பயன்படுத்தி எல்லா இடங்களிலும் போய் யாரும் மாற்றவில்லை. சில இடங்களில் சிலர் மாற்றியிருக்கலாம். அப்படி மாற்ற கட்டாயம் உரிமை இருக்கின்றது. பாக்கித்தான் என்று கூகுளில் தேடினால் 326,000 முடிவுகள் கிட்டுகின்றன. அவை எல்லாமே தமிழ் விக்கிப்பீடியா அல்ல. கூடுதல் குறைவு என்பதை மட்டும் கருத்தில் கொள்ள முடியாது. பாக்கித்தான் என்று எழுதுவதும் எழுதுமுறைகளில் ஒன்றுதான். வாழ்வியல் கலைக்களஞ்சியத்தில் 12-ஆவது தொகுதியில் பாகிசுத்தான் என்று நெடிய கட்டுரை எழுதியிருக்கின்றார்கள். ஆகவே தமிழில் எழுதும்பொழுது ஒருசில விதங்களாக எழுதும் வழக்கம் உள்ளது. இதனால்தான் கொள்கைகளாகக் கொள்ளாமல், பரிந்துரைகளாக உள்ளன. --செல்வா (பேச்சு) 03:30, 27 நவம்பர் 2013 (UTC)Reply

சுந்தர் கருத்துகள்

தொகு

ஏறத்தாழ நற்கீரனின் கருத்தேதான் என்னுடையதும்.

  1. தனிப்பெயர்களைத் தவிர எஞ்சிய சொற்களனைத்தும் தமிழிலேயே மொழிபெயர்த்திருக்க வேண்டும். இதற்குச் சில விதிவிலக்குகள் உண்டு: பார்க்க விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு/தொகுப்பு 1
  2. ஆட்கள், நிறுவனங்கள், இடங்கள் ஆகியவற்றின் பெயர்களை மூலமொழியிலிருந்து (ஆங்கிலத்தில் இருந்து அல்ல) ஒலிபெயர்த்துத் தமிழ் எழுத்துமுறைக்கேற்ப எழுத வேண்டும். சில வேளைகளில் ஆங்கில வழிச்சொல் மிகப்பெரும்பான்மையாகத் தமிழில் வழக்கு பெற்றால் (நிப்பான் என்பதைக் காட்டிலும் சப்பான் 100 மடங்கு தமிழில் வழக்கு பெற்றிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்) அப்போது ஆங்கிலத் தலைப்பைத் தமிழில் ஒலிபெயர்த்து எழுதலாம்.
  3. இதுவரை தமிழில் பெருவழக்கெல்லாம் பெறவில்லை என்றால் (ஓராண்டுக்குமுன் வெளிவந்த இரானிய மொழிப்படம்) கட்டாயம் மூலமொழியில் இருந்து எடுத்தே ஒலிபெயர்க்க வேண்டும். பாராசூட்டு தேங்காயெண்ணையை வான்குடை என்று நாம் எழுத வேண்டியதில்லை. முகநூல் போல மிகமிக அரிதாகத் தமிழ் மொழிபெயர்ப்பே வழக்கு பெற்றுவிட்டால் மொழிபெயர்ப்பை இடலாம்.
  4. மூலமொழி ஒலிப்புநெருக்கம் பேணலாம், ஆனால் தமிழ் எழுத்துமுறைக்கு மாறாக அமைவது கூடாது. மெய்யெழுத்தில் தொடங்குதல், தமிழில் முதலெழுத்தாக வராத பிற எழுத்துக்களில் தொடங்குதல், வராத மெய்யொலித்தொடர்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இது பாடநூலோ, நாளிதழோ அல்ல. ஒரு கலைக்களஞ்சியம். நமது சமூகத்தில் கலைக்களஞ்சியங்களைப் பொதுமக்கள் பயன்படுத்துவது அரிதாக இருந்ததால் விக்கிப்பீடியாவையும் ஏதோ மற்றுமோர் இணையதளமாகவே பலர் பார்க்கிறார்கள். ஆனால் அது சரியல்ல, நாம் எழுதுவது கலைக்களஞ்சியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆங்கில விக்கியில் எங்கு எவ்வளவு இடைவெளி விட வேண்டும், தன்னிலையில் எழுதற்கூடாது, mdash இன்னின்ன இடங்களில்தான் வர வேண்டும் ndash இன்னின்ன இடங்களில்தான் வர வேண்டும், தலைப்பில் இவை வரலாம், அவை வரக்கூடாது, எத்தகைய பட்டங்களைக் குறிப்பிடலாம் முதற்கொண்டு இலக்கணம் வரை மிக இறுக்கமாக வலியுறுத்துகிறார்கள். அங்கெல்லாம் நாம் உடன்பட்டுவிட்டு இங்கு மட்டும் பொதுவழக்கு, நாளிதழ் வழக்கு என்று பேசுவது பொருத்தமாகாது. மொழிமாற்றம் இயல்பானதாக இருக்கலாம். அது பல நூற்றாண்டுகளாக நிகழும், எல்லா ஊடகங்களும் ஒரே மாதிரியாக மாறிவிட முடியாது. எல்லாவற்றிலும் எளிதாக மாற்றங்களைக் கொண்டுவரும் அமெரிக்கர்கள்கூட முறையான இடங்களில் சரியான மொழிவழக்குகளையே பின்பற்ற வலியுறுத்துகிறார்கள். அவர்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் தமிழுக்கு உரித்தான மரபை நாம் பின்பற்றிதான் ஆக வேண்டும். இல்லையென்றால் நாம் ஏன் தமிழில் விக்கிப்பீடியாவை நடத்த வேண்டும்? -- சுந்தர் \பேச்சு 10:05, 27 நவம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 13:32, 27 நவம்பர் 2013 (UTC)Reply
சுந்தர் உங்களின் 1,2,3 கருத்துடனும், 4 கருத்தில் ஆங்காங்கே உடன்பட்டாலும் அடிநாதமாக, பெருவழக்குப் புறக்கணிப்பு என்பதை ஒப்புக்கொண்டிருப்பதால் கருத்துடன் முரண்படுகிறேன். இரண்டு வகைச் சிக்கலுள்ளது, ஒன்று மரபு சார்ந்த எழுத்துப்பெயர்ப்பு, இரண்டாவது குழப்பமான மொழிபெயர்ப்பு.
"மரபு சார்ந்த எழுத்துப்பெயர்ப்பு": நீங்கள் த.வி.யில் உள்ள விதி இறுக்கமின்மையைப் பயன்படுத்தி ஆ.வி. விதிக்கு நிகர்விவாதத்தை(counterargument) முன்வைக்கிறீர்கள், ஆனால் தொல்காப்பிய இலக்கண மரபுகளின் தற்கால இறுக்கமின்மையையும் கவனிக்க அழைக்கிறேன். எத்தனையோ விதிகள் மீறப்படுள்ளதாக நானும் அறிகிறேன். ஆகவே கட்டற்ற நடைமுறையில் மரபுவிதிகளில் தளர்ச்சி வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தாலும், நம்மிலிருக்கும் ஓர் ஆதங்கம் அவற்றைப் பயன்படுத்த முனைகிறது என நினைக்கிறேன். விக்கிப்பீடியா மரபு நடையையோ, நவீன நடையையோ ஏற்கவேண்டிய அவசியமில்லை. அனைவருக்கும் புரியும் விதத்தில் இருப்பதே நோக்கம், மரபுமுறை புரிந்திருந்தால் அவைற்றைப் பயன்படுத்தலாம், இல்லாவிட்டால் நவீன "நல்ல" பெருவழக்கைப் பயன்படுத்தலாம். (இராச்சசுத்தான் என்பதை இன்னும் என்னால் வெளியில் பயன்படுத்தமுடியவில்லை.)
"குழப்பமான மொழிபெயர்ப்பு": விக்கி மொழிபெயர்ப்பாளர்களைக் குறைசொல்லவில்லை ஆனால் நமது தன்னாட்சி(புதிய மொழிபெய்ர்ப்புகள் அல்ல) மொழிபெயர்ப்பில் வரும் சிக்கலுக்கு ஓர் உதாரணம்: White house என்பதை வெள்ளை மாளிகை என்று அழைப்பதால் Light house என்பதை ஒளிமாளிகை என மாற்றுகிறோம். இங்குக் காரணமாக மூலமொழியில் உள்ள பொருள் என்றும் கொள்கிறோம். அப்படியெனில் நம் மக்களின் பயன்பாட்டுச் சொல்லான கலங்கரை விளக்கு என்பது என்னாவது? எனவே தான் புதிய மொழிபெயர்ப்புகள் நீங்கலாக மற்றயிடங்களில் வழக்கிலுள்ள நல்ல சொற்களைக் கையாளவேண்டும், சொற்கள் மக்களிடமிருந்தும் உள்வாங்கப்படவேண்டும். (யாவாக்கிறிட்டு என்பது இதற்கொரு உதாரணம்)
இச்சொற்கள எல்லாம் தவறு என்பது எனது வாதமில்லை, அதனால் அவற்றிற்கு நிகர்விவாதம் அன்போடு வேண்டாம். கட்டற்ற களஞ்சியத்தில் நல்ல பெருவழக்குகளைப் புறக்கணிப்பது உகந்ததா என எண்ணிப்பார்க்கக் கேட்கிறேன். உங்களிடம் கேட்கவிரும்பும் கேள்வி எந்த மொழி விக்கிப்பீடியாவில் எனினும் பெருவழக்குகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதா என அறியத்தந்தால் எனக்கு மேலும் சிந்திக்க உதவும்? --நீச்சல்காரன் (பேச்சு) 18:56, 27 நவம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன், நீங்கள் சில எடுத்துக்காட்டுங்களைத் தந்தால் உதவியாக இருக்கும். கலங்கரை விளக்கு என்றுதானே உள்ளது. --Natkeeran (பேச்சு) 19:04, 27 நவம்பர் 2013 (UTC)Reply
நேரடி உதாரணங்களைக் கொடுக்கும் போது அச்சொல்லை நியாயப்படுத்த விவாதங்கள் தொடர்கிறது. அதனால்தான் குறியீட்டு உதாரணத்தை முன்வைத்தேன். அச்சொற்கள் தவறு என்பது எனது வாதமல்ல இங்குப் பொருத்தமாகுமா என்பதே வாதம். சில நேரடி உதாரணங்கள்: இயங்குதளம் என்பதை இயக்குதளம், புகைப்படம் (என்பது வேர்ச்சொல்லாகக் கொண்டு பல சொற்கள் பெருவழக்கில் உள்ளது) ஒளிப்படம், காணொளி - நிகழ்படம், நிமிடம் - மணித்துளி முதலியவை நல்ல பெருவழக்கிற்கான சில உதாரணங்கள்--நீச்சல்காரன் (பேச்சு) 02:50, 4 திசம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன், அதிக இறுக்கம் வேண்டாம் என்பதே என் கருத்தும். கிரந்தம் கூடவே கூடாது என்றோ, கிரந்தம் கட்டாயம் பயன்படுத்தியே தீர வேண்டும் என்றோ ஏதும் இறுக்கம் வேண்டாம். நீங்கள் கூறும் இராச்சசுத்தான் எடுத்துக்காட்டில் இராஜஸ்தான் (இராஜஸ்த்தான்) என்றோ இராஜஸ்தானம் (இராஜஸ்த்தானம்) என்றோ எழுதலாம், ஆனால் அப்படித்தான் எழுதவேண்டும் என்று கூறுவதை ஏற்பதில் தயக்கம் உள்ளது. பார்க்கவும்: பேச்சு:இராச்சசுத்தான்#ராஜஸ்தான் என பெயர் மாற்றம். வாழ்வியல் கலைக்களஞ்சியத்தில் இராசசுத்தான் என்று விரிவான கட்டுரை எழுதியிருக்கின்றார்கள் (பார்க்கவும் தொகுதி-3 பக். 960-966.) நான் முகநூல் ஆயினும் எதுவாயினும் இராச்சசுத்தான் என்று எழுத ஒருசிறிதும் தயங்கமாட்டேன். ஏன் தயங்கவேண்டும்?!! நீங்கள் கூறும் வெள்ளை மாளிகை எடுத்துக்காட்டும், மொழி பெயர்ப்ப்பில் காணப்படும் இயைபு தன்மையை பொருட்படுத்தாததால் என்று நினைக்கின்றேன். ஆங்கிலத்தில் river bank என்றும் sea shore என்றும் சொல்வது வழக்கம். நாம் ஆற்றங்கரை, கடற்கரை என்று இரண்டுக்கும் கரை என்று கூறுகின்றோம். பொதுவாக மொழிபெயர்ப்பில் ஒரு சொல்லுக்கு ஒரு சொல்தான் எல்லா இடங்களிலும் ஈடு என்று கொள்ள முடியாது. இது போல பல மொழிகளில் இருந்து எடுத்துக்காட்டுகள் தரலாம். நீங்கள் வேண்டும் என்றால், பொது ஏற்பு இருந்தால் ஜாவாஸ்கிரிப்டு என்றும் சூட்டுங்கள் அதுவல்ல சிக்கல். பெரும்பான்மை என்பதை மட்டும் கருத்தில் கொண்டு இயங்குதல், அதுவும் வழுவான வழக்குகளை வலுக்கட்டாயமாக ஏற்கச்சொல்லுதலுக்கு உடன்பட இயலாது. சிறிது நெகிழ்ச்சி (இதனை உறழ்ச்சி என்றும் சொல்கிறார்கள்) தந்து, சிறிது தளர்த்தி எழுதலாம், அப்படித்தான் எழுதியும் வந்திருக்கின்றோம்; ஆனால் வலுக்கட்டாயமாக வழுவான வழக்கை ஏற்றே ஆகவேண்டும் என்று முன்னிறுத்த வேண்டாம். பெருவழக்கு சரியான வழக்காக இருந்தால் ஏற்பதில் என்ன தயக்கம், கட்டாயம் ஏற்கலாம், ஏற்கின்றோமே!! அல்லவா? சரியாக விக்கிப்பீடியாவில் எழுதினால் அது பெருவழக்கு ஆகாது என்று நீங்கள் முன்கூட்டியே கூற முடியுமா? தமிழ் மொழி போல எத்தனை மொழிகளில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வரிகளையும் இன்றும் படித்த மாத்திரத்தில் புரியும் படி உள்ளது? ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு மொழிக்கொள்கை, மொழி இயல்பு இருக்கும், ஆகவே பிறமொழி வழக்கங்களைத் தமிழ் மொழியும் தழுவித்தான் ஆக வேண்டும் என்று கூறமுடியாது "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்.." என்று ஒரு குறள் இருந்தால் உடனே ஏறத்தாழ அனைவரும் புரிந்துகொள்கின்றார்கள் என்றால் அது தமிழ் மொழியின் பழக்கவழக்கங்களால், தங்களின் மொழிக்கொள்கைகளால் ஏற்பட்ட நிலைப்புத்தன்மை. எத்தனை பிறமொழிகளில் ஒரு சொல்லின் முதலில், சொல்லின் கடைசியில் வரக்கூடிய எழுத்துகள், சொல்லில் வரக்கூடிய மெய்யெழுத்துக்கூட்டங்கள் என்று வரையறை செய்து இருக்கின்றார்கள்? இவை மொழியின் நிலைப்புத்தன்மைக்கு எவ்வாறு உதவியது என்று அறிவோமா? வடமொழி எழுத்துகள் (எழுத்தொலிகள்) தமிழுக்குப் புதியன அல்லவே! 2000-2500 ஆண்டுகளாக சந்தித்தும் கேட்டும்தானே வந்திருக்கின்றார்கள். ஆனால் எடுத்துக்கொள்ளவில்லை (இதற்கு பல நுட்பமான அறிவான காரணங்கள் உள்ளன). ஆங்கிலேயர்களும் பிரான்சிய மொழிக்கு மிக நெருக்கமாக இருந்தும், பல்லாயிரக்கணக்கான பிரான்சியச் சொற்களை ஏற்றுக்கொண்டிருந்தும், பிரான்சிய மொழியில் உள்ள எத்தனையோ ஒலிகளை (அடித்தொண்டை றகரம், மூக்கொலிகள், உரசொலிகள் முதலானவற்றை) ஏற்றுக்கொள்ளவில்லை. நான் வாழும் கனடாவில் க.அ.க (CBC) வானொலியைக் கேட்டுப்பாருங்கள் (cbc.ca), ஆங்கிலத்தில் பேசினாலும் பிரான்சியப் பெயர்களின் ஒலிப்புகளை அவர்கள் (பொது மக்கள் அல்லர் வானொலியாளர்) துல்லியமாக ஒலிப்பார்கள், ஆனால் அந்த ஒலிகளை ஆங்கில எழுத்து மொழியில் இடம் கொடுத்து ஏற்பதில்லை. (ஆங்கில) பொது மக்களாலும் சரிவரக் கூறமுடியாது. சிலரால் தெளிவாக ஒலிக்க முடியும் என்பதால் பொதுவாக எற்பதில்லை.--செல்வா (பேச்சு) 21:07, 27 நவம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன், நீங்கள் மேலே கூறிய கருத்துக்களுடன் பெரும்பாலும் உடன்படுவது அறிந்து மகிழ்ச்சி. இப்போது எஞ்சியிருக்கும் கேள்வியாகத் தெரிவது வழக்கில் இருக்கும் தமிழ்ச்சொல்லை ஒதுக்கலாமா? என்பது. கலங்கரை விலக்கம், அருவி போன்ற நல்ல தமிழ்ச்சொற்களை நாம் எப்போதும் எடுத்தாண்டே வருகிறோம். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. வழக்கில் தமிழ்ச்சொல் இல்லாதபோதுதான் சிக்கல் வருகிறது. அந்த நேரங்களில் வேற்றுமொழிச்சொல்லை ஆளும்போது ஒலிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று மட்டுமே பலரும் வலியுறுத்துகிறோம். அதிலும் இருக்கமாக முற்றிலும் கிரந்தம் தவிர்த்து எழுத வேண்டும் என்றுகூட இல்லை. கிரந்தம் கலந்தும் எழுதலாம். தொல்காப்பியத்தில் உள்ள சில விதிகளை அவ்வளவு இறுக்கமாகக் கடைபிடிக்கவில்லை. காட்டாக, சகரம், சைகாரம், சௌகாரத்தில் தமிழ்ச்சொற்கள் அந்தக் காலத்தில் தொடங்கவில்லை. பின்னால் நல்ல தமிழ்ச்சொற்களே அவ்வெழுத்துக்களில் தொடங்கியுள்ளன. அவ்வாறான இடங்களில் யாரும் இறுக்கம் காட்டுவதில்லை. நன்னூலைக்கூட எடுத்துக் கொள்ளலாம். அது தொல்காப்பியத்தைப் பார்க்கையில் மிகவும் அண்மையானதுதானே? பெருவழக்கையும் நாம் ஏற்றுக் கொள்வோம், ஆனால் மெய்யெழுத்தில் தொடங்குதல், கூட்டொலிகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்த்து வேறு எழுத்துக்கூட்டலில் எழுதலாமே? படிப்பவர்கள் கட்டாயம் புரிந்து கொள்வார்கள். யாவாக்கிறிட்டு போல மிக அரிதாகத்தான் எழுத்துக்கூட்டல்கள் பெரவழக்கில் இருந்து மாறுபடும். (அவ்வாறு வெகு அரிதாக நிகழ்வதையும் தவிர்க்க வேண்டுமானால் முறையாகச் செய்யலாம். உங்கள் கருத்தையும் இணைத்து வழிகாட்டலை மேம்படுத்துவோம்.) அங்கும் புரியவில்லை என்று யாருக்கும் நேராது. தேவைப்படும் இடங்களில் அடைப்பில் ஆங்கில எழுத்திலோ, ஐ.பி.ஏ. எழுத்திலோ, மூலமொழி எழுத்திலோ தருகிறோம். இணைப்புகளும் உள்ளன. இனிவரும் நாட்களில் ஒலிப்பு உதவிக் கோப்புகளை எளிதாக உருவாக்க முடியும். mouseover கொண்டு வேறு நுட்பங்களையும் உருவாக்கலாம். -- சுந்தர் \பேச்சு 08:43, 28 நவம்பர் 2013 (UTC)Reply
இவைதவிர, இன்னும் சில புள்ளிகள் இருக்கின்றன. அடுத்த ஓரிரு நாட்களில் தக்க எடுத்துக்காட்டுகளோடு எழுதுகிறேன். நீச்சல்காரன். செல்வாவின் கருத்தையும் எண்ணிப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 11:40, 28 நவம்பர் 2013 (UTC)Reply

குறும்பன் கருத்துக்கள்

தொகு

நம் சிக்கலே முன்பு அதிக அளவில் தமிழில் வடமொழி கலப்பு இருந்தது. தற்போது மிக அதிக அளவில் ஆங்கில கலப்பு உள்ளது. நாளை எதன் தாக்கம் (கலப்பு) அதிகம் இருக்கும் என்று கூறமுடியாது. தமிழ் கலைக்களஞ்சியத்தை பயன்படுத்துபவர்கள் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அதிகம் (அங்கு அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இருப்பதால் அதிகம் பயன்படுத்துவார்கள் என்ற கணிப்பில் கூறுகிறேன்). தமிழர்கள் மற்ற நாடுகளிலும் அதிகம் உள்ளார்கள், குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள பலர் ஆங்கிலம் அல்லாத உள்ளூர் மொழிகளேயே மற்ற நாட்டை, ஊரை, மற்றவற்றை குறிக்க அதிகம் பயன்படுத்துவார்கள்\அறிவார்கள். நாம் ஆங்கிலத் தாக்கத்தில் உள்ளதால் ஆங்கிலேயர்கள் அவர்கள் மொழிக்கேற்ப மாற்றி பயன்படுத்தும் சொற்களை நாம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றி சொல்ல முயல்கிறோம். மூல மொழியில் உள்ளதை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றத் தயங்குகிறோம் மாற்றினால் எதிர்ப்பை எதிர்கொள்கிறோம். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு ஆங்கில தாக்கம் அதிகம் என்பதால் தொலைக்காட்சியும் நாளிதழ்களும் தமிலிங்கலத்தை அதிகமாக மக்கள் மேல் திணிக்கின்றனர். மக்களும் அதை பயன்படுத்துகின்றனர். எ.கா: உத்தராகண்டம் பேரழிவை தொலைக்காட்சியில் பார்த்தேன் உத்தராகண்டம் என்பதை ஒவ்வொரு தொலைக்காட்சியும் நினைத்தபடி சொல்கின்றனர். ஒரு தொலைக்காட்சியில் கூட சீர்மை இல்லை. ஒரு தொலைக்காட்சியில் ஒரு முறை உத்தராகண்டம் என்றார்கள் அவர் தமிழ் விக்கியை படிப்பார் போலும் :) (அவரே மாற்றி மாற்றி தான் சொன்னார்). நாளிதழை பார்க்கவில்லை.

நாளை தமிழில் ஏதோவொரு மொழியின் தாக்கம் அதிகம் இருக்குமா இருக்காதா என்று சொல்ல முடியாது. இந்நாளைய முறைப்படி எழுதினால் நாளைய தலைமுறைக்கு புரியாமல் போய்விடும். இப்பவே தமிழகத் தமிழ் இலங்கைத் தமிழ் என்ற சிக்கல் உள்ளது, சில இடங்களில் அது இலங்கைத்தமிழாக இருக்குமோ என்று கருதி திருத்தாமல் விட்டிருக்கிறேன். கலப்படமற்ற தமிழில் எழுதினால் எப்போதும் எல்லோருக்கும் புரியும். நான் மகாராஸ்ட்டிராவை மகாராட்டிரம் என்று பலகாலமா எழுதுகிறேன்.

பழைய விடுதலை ஏட்டை என்னால் புரிந்து கொள்வது கடினம். அவர் அக்கால மக்களுக்கு புரியுமாறு எழுதினார் ஆனால் இப்போ அது இன்றைய தலைமுறைக்கு புரியாது.

நற்கீரன் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். சில இடங்களில் மாற்றம் இருந்தால் நல்லது என்று கருதும் இடத்தில் அக்கட்டுரையில் உரையாடி முடிவெடுப்பதே நல்லது. --குறும்பன் (பேச்சு) 21:11, 27 நவம்பர் 2013 (UTC)Reply

மலேசியா, நோர்வே, பிரான்சு, யேர்மனி, சுவிசு, மொன்றியால் (நகரம்) என்று பல நாட்டுத் தமிழர்களுக்கு ஆங்கிலம் முதன்மை/இரண்டாம் மொழி அன்று. ஆகவே ஆங்கிலம் எல்லோருக்கும் தெரியும் என்று ஊகிப்பது தவறு ஆகும். சுந்தர் கூறியபடி, ஆங்கிலப் பெரு வழக்கத்தில் இல்லாத பெயர் சொற்களுக்கு மூல மொழியில் இருந்து ஒலிப்பெயர்ப்புச் செய்ய வேண்டும். ஈழத்தில், சிறிய வகுப்புக்களில் (நான் படித்த போது) கிரந்த எழுத்துக்களை பள்ளிகளில் சொல்லித் தருவதில்லை என்பது குறிக்கத்தக்கது --Natkeeran (பேச்சு) 21:22, 27 நவம்பர் 2013 (UTC)Reply

\\சரியான மொழி இலக்கண நடையைப் பயன்படுத்த வேண்டாமா? தாராளமாக அடைப்புக்குறிக்குள் தனித்தமிழ் வழக்கு: இந்திய வழக்கு, என்று சொல்லலாமே. விக்கிப்பீடியாவொரு மொழிநடைக் கையேடு அல்ல.\\ நீச்சல்காரனின் இக்கூற்று எனக்கு சரியாக விளங்கவில்லை. எனக்கு தெரிந்து தனித்தமிழில் யாரும் எழுதியதாக எனக்கு தெரியவில்லை. --குறும்பன் (பேச்சு) 23:26, 28 நவம்பர் 2013 (UTC)Reply

நீங்கள் இந்தக் கொள்கையைத் தனித்தமிழுக்கு எதிரானது என்று பார்க்கிறீர்களோ என நினைக்கிறேன். ஆனால் உண்மை அதுவல்ல. விக்கிமீடியாவின் பரவலான மொழிச் சுதந்திரத்தைத் தான் குறிப்பிடுகிறேன். நல்ல பெருவழக்கைப் பயன்படுத்தச் சொல்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் தனித்தமிழோ, மூலமொழி ஒலிப்போ, கிரந்தம் நீக்கியோ, பொருள்மாறுபாடோ, ஐரோப்பிய ஒலிப்போ காரணமாகப் பல தலைப்புகளுக்குத் தன்னாட்சியாக, புதிய வழக்குகளை நீங்கள் கவனித்திருக்கலாம் அதனையே குறிப்பிடுகிறேன். 12ம் நூற்றாண்டு நூல்களானாலும், சங்கநூல்களானாலும் அடித்த தலைமுறை நடைக்கு மாறுபட்டதாகவேயிருக்கும். "இந்நாளைய முறைப்படி எழுதினால் நாளைய தலைமுறைக்குப் புரியாமல் போய்விடும்" என்பது தான் இயல்பு. இன்றைய பெருவழக்கைப் புறக்கணித்து நாளைய தலைமுறைக்குப் புதியவழக்கை வழங்கவேண்டுமா? அனைத்து விக்கியும் நல்ல பெருவழக்கை கையாளும் போது நாம் மட்டும் தன்னாட்சியான நடையைப் பயன்படுத்துவது முரணில்லையா? பலகாலம் விக்கிப்பீடியா நடையில் பழகியதால் தங்களுக்கு வேற்றுமைகள் தெரியாமலிருக்கலாம் என நினைக்கிறேன். பிறமொழி விக்கியில் தலைப்பிடல் கொள்கைகளைப் படித்தால் நமது நிலைபுரியலாம். விக்கிப்பீடியா ஒரு நிறுவனக் கலைக்களஞ்சியமல்லாததால் மொழிக்கு முன்னுரிமை அளிப்பதைவிட தகவலுக்கே முன்னுரிமை வழங்குகிறது.--நீச்சல்காரன் (பேச்சு) 01:46, 4 திசம்பர் 2013 (UTC)Reply
  • தமிழ் விக்கிப்பீடியா 10 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது, இந்தப் 10 ஆண்டுகளிலும் பல்வேறு தர அளவீடுகளில் இந்திய மொழிகளில் பெரும்பாலும் முதல் 3 இடங்களுக்குள்ளேயே இருந்து வந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு பக்கப்பார்வைகள் உயர்ந்து கொண்டேதான் இருந்து வந்துள்ளது. இன்றும் நாளொன்றுக்கு 2.5 இலட்சம் பக்கப் பார்வைகள் பெறுகின்றது. பிற இந்திய மொழிகள் விக்கிப்பீடியாக்கள் தமிழில் இருந்தும் நல்வழிகளை ஏன் பற்றிக்கொள்ளக்கூடாது? ஏன் சரியான வழியல்லாததாக நாம் கருதும் வழிமுறைகளை நாம் இங்கே பின்பற்ற வேண்டும்? இங்கு த.வி-யில் அறிவின் அடிப்படையிலும் அறமுறைகளின் அடிப்படையிலும் நேர்மையாக உரையாடி கூட்டாக மேற்செலுத்துகின்றோம், ஆனால் விக்கிப்பீடியாவிலே சிறுகூறாகிய பிறமொழிப்பெயர்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதும் ஒரு சிக்கலை ஏன் இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டும் என்று புரியவில்லை!! மேலே நான் சுட்டியவாறு வேற்றுமொழிச்சொல்லான கோர்ட்டு என்பதைக் கூட தினமலர் நாளிதழ் "கோர்ட்" என்று தமிழ் முறைக்கும் அறிவான முறைக்கும் புறம்பாகவும், தினத்தந்தி நாளிதழ் அதே வேற்றுமொழிச்சொல்லைக் "கோர்ட்டு" என்று சரியாகவும் எழுதுவதை நீங்கள் ஏன் பார்க்க மறுக்கின்றீர்கள்? புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் தி இந்து தமிழ் நாளிதழ் நீதிமன்றம் என்று அழகாக எழுதுகின்றதே. சில நாளிதழ்கள் வேண்டுமென்றே ஒற்றுப் பிழைகள் விட்டும், இலக்கணப் பிழைகள் மலிந்தும், கசட்டுத்தனமாக மிகவும் தவறுதலாகவும் எழுதுவதை ஏன் பின்பற்ற வேண்டும்? இந்திய மொழிகள் அனைத்திலுமே மெய்யெழுத்துக்கூட்டங்களை (consonant cluster), விதிமுறைகள் இல்லாமலே குறைத்துத்தான் எழுதுகின்றார்கள் (மொழி இயல்பின் காரணமாக). பக்கம் பக்கமாக இதற்கு எடுத்துக்காட்டுகள் தர இயலும் (அறிவார்ந்த நூல்களில் இருந்து அலசல்களில் இருந்து சான்றுகள் எடுத்துக்காட்ட முடியும்). ஆனால் தமிழில் திட்டவட்டமான விதிமுறைகள் உள்ளனவே!! இவை அறிவுக்கும் ஏற்ற முறைகள் ஆயிற்றே!! இந்திய மொழிகள் மட்டும் அல்ல, சப்பான் போன்ற மொழிகளிலும் "கண்டபடி" (அதாவது பிறமொழியில் கண்டவாறே) மெய்யெழுத்துகளைச் சேர்த்து எழுதமுடியாது. இங்கும் மிக நிறைய எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும் (ஒருசிலவற்றைக் காட்டுகின்றேன் சப்பானில் லகரம் கிடையாது. idol என்பதை aidoru (ஐடோரு) என்று எழுதுகின்றார்கள். asterisk என்பதை asuterisuku என்று எழுதுகின்றார்கள், umpire என்பதை ampaia என்றும், ice cream என்பதை aisukurimu என்றும் எழுதுகின்றார்கள்.). நான் கூறவருவது, தமிழ் முறைக்கு ஏற்ப எழுத வேண்டும் என்று கூறுவது முறையானது. அப்படி எழுதுவோர் பலர் உள்ளனர். அறியாத மக்கள் எழுதுவதையும், வேண்டுமென்றே தமிழ் முறைகளைக் கெடுத்து எழுதுவோர்களையும்தான் பின்பற்ற வேண்டும் என்பது என்ன முறை ஐயா? நான் விக்கிப்பீடியாவில் மட்டும் எழுதவில்லை, பார்க்கவில்லை, பல களங்களையும் கூர்ந்து கவனித்து வருபவன், இணையத்தில் குறைந்தது 22 ஆண்டுகள் தொடர்ந்து பல களங்களில் உரையாடி வருபவன். பலவகையான எழுத்துகளையும் படித்து வருபவன். நாம் 100 இல் 80-90 விழுக்காடு பெருவழக்கில் உள்ள சரியான வழக்கை ஒட்டியும், ஏதோ 5-10% "பெருவழக்கு" என்று நீங்கள் கருதுவதில் பிழையானவற்றை விடுத்து சரியான வழக்கைப் பின்பற்றியும் நடக்கின்றோம். என் விழுக்காடுகள் உளமதிப்பீடுகள்தாம். நாம் இந்தப் "பெருவழக்கு" என்பதைக் கலைக்களஞ்சியமாகிய இதற்குக் கருத்தில் கொள்ளும்பொழுது "பெருவழக்கு" என்பதைவிட "சரியான" வழக்கா என்று பார்த்து ஆள்வதே நல்லது. நீங்கள் கூறும் "பெருவழக்கு" என்பதும் உண்மையில் மிக மிகச்சிறுபான்மையர் திணிக்கும் வழக்கு என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்!! 20 நாளிதழ்கள் எனில் அதில் இவற்றை புகுத்துவோர் 40-60 பேர் இருக்கலாம். அவர்கள் பணியாற்றுவது தனியார் நிறுவனங்கள், அங்கே அறிவுக்கும், அறத்துக்கும் எந்த அளவு மதிப்புக் கொடுக்கின்றார்கள் என்பதையெல்லாம் நாம் இங்கிருந்து கணிக்க முடியாது. ஓர் எடுத்துக்காட்டுக்காகக் கூறுகின்றேன். ஒரு நாளிதழில் நடக்கும் அறமல்லாதன, கசப்பான மொழிநடை ஆகியவற்றை எதிர்த்து முகநூலில் ஒரு குழுவில் 4,335 பேர் கொண்ட "புறக்கணிப்போம்" குழு உள்ளது (பார்க்கவும்) . ஆனால் இந்தப் புறக்கணிப்போம் குழுவால் அந்த நாளிதழின் நடையையோ, அவர்கள் தவறானது என்று கருதும் போக்கையோ மாற்றிவிட முடியாது. "பெருவழக்கு" என்பதை நீங்கள் பொருட்படுத்துவதினும், ஒன்று சரியாக உள்ளதா என்று பார்ப்பதும், எதனால் அது சரியான வழக்கு என்று காண்பதும் முக்கியம் என்று கருதுகின்றேன். மேலும் இங்கு தனித்தமிழ் என்று ஏதும் இல்லை. தமிழ் விதிகளின் படி தமிழின் இலக்கணப்படி எழுத முயல்கின்றோம். வேண்டியவாறு நெகிழ்ச்சி தந்தும், மிகவும் இறுக்கமாக இல்லாமலும்தான் எழுதுகின்றோம். --செல்வா (பேச்சு) 21:12, 5 திசம்பர் 2013 (UTC)Reply
அறியாமை விலகுவதே அறிவு, ஆகவே தற்போதைய அறிவாய்ந்த பார்வைகூட அறியாமை விலகியபின் மாறுமல்லவா? இருந்தும் அறிவார்ந்த வழக்கு, அறிவார்ந்த வழக்கு என்று நீங்கள் குறிப்பிடும் வழக்குகளின் நிதர்சனப் பிழைகளைச் சுட்டிக்காட்டவிரும்பவில்லை(இதுசரியான இடமுமில்லை + நானும் சரியான ஆளில்லை). விக்கிப்பீடியா ஒன்றும் மொழி அறிஞர்களால், மொழியின் வரைமுறைகளைத் தீர்மானிக்கும் இடமல்ல என்றே நினைக்கிறேன். நல்ல பெருவழக்கு எதுவோ அதுவே பலருக்குப் புரியவுதவும். சரியான வழக்கைக் கல்வி நிறுவனங்கள் தான் வெளிக்கொணர வேண்டும், அந்த உரிமையை விக்கிப்பீடியா எடுத்துக் கொண்டால், குழுவாகச் சிலர் சேர்ந்து கொண்டு விரும்பிய நடையில் எழுதிக் கொள்ளும் அபாயம் உள்ளது என நினைக்கிறேன். அத்தகைய சரியான வழக்கு, புழக்கத்தில் இருந்தால் எடுத்துக் கொள்வதில் மாற்றுக் கருத்தில்லை(கோர்ட் என்பதற்கு நீதிமன்றம் என்று பயன்படுத்துவதை யாரும் மறுப்பதில்லை). அத்தகைய சரியான வழக்கு என நீங்கள் நினைக்கும் ஒன்று புழக்கத்தில் இல்லாவிட்டால் புழக்கத்தில் உள்ள பெருவழக்கே வேண்டும்.(இசுட்டாலின் என்பதைவிட ஸ்டாலின் என்பதே பொருத்தமான வழக்கு). தமிழ் முறைப்படி எழுதுவோர் போல விக்கிமுறைப்படி எழுதுவோரின் நிலையையும் கணக்கில் கொள்ளுங்கள். இந்தச் சிக்கலை ஏன் இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்தும்கூட, ஆகவே அனைவருக்கும் புரியும் நல்ல வழக்குகளைக் கையாளலாமே அல்லது அப்படி எழுதுவோரின் தலைப்பையாவது மாற்றாமல் இருக்கலாமே--நீச்சல்காரன் (பேச்சு) 03:20, 6 திசம்பர் 2013 (UTC)Reply

நீச்சல்காரன் நான் தனித்தமிழ் தான் வேண்டும் என்று கூறவில்லை. பெருவழக்கு என்பது பற்றியே நமது சிக்கல். எதை பெருவழக்கு என்று கொள்வது? \\ "இந்நாளைய முறைப்படி எழுதினால் நாளைய தலைமுறைக்குப் புரியாமல் போய்விடும்" என்பது தான் இயல்பு.\\ கலப்படமில்லாத நல்ல தமிழில் எழுதினால் இப்போதும் எப்போதும் எல்லோருக்கும் புரியும் என்பதே உண்மை. கலைக்களஞ்சியத்திற்கு அது தான் தேவை. நாம் பலவாறு தவறாக எழுதுகிறோம் அதனால் அதை சரி என்று சொல்லமுடியாது. செல்வா கூறியதையும் பாருங்கள். \\பல தலைப்புகளுக்குத் தன்னாட்சியாக, புதிய வழக்குகளை நீங்கள் கவனித்திருக்கலாம்\\ தலைப்பு புரியாவிட்டால் பேச்சு பக்கத்தில் கேட்க வேண்டியது தான், தவறாக தலைப்பு வைத்திருந்தால் மாற்றிவிடலாம். தவறான தலைப்புகள் பல மாற்றப்பட்டு இருக்கின்றன என்பது தாங்கள் அறியாதது அல்ல (இது தனித்தமிழ் அல்ல பேச்சு வழக்கில் எழுதினால் சில இடங்களில் மரியாதை குறைவு போன்ற தொனி படிப்பவருக்கு இருக்கும் என்பதால் இப்படி :) ). தொடக்கத்தில் நானும் தவறான தலைப்பில் கட்டுரை எழுதியவன், இப்போ குறைவு. எ.கா தமில் என்று தலைப்பு இருந்து அக்கட்டுரை தமிழைப்பற்றி இருந்தால் தமிழ் என்று மாற்றிவிடலாம். (உதாரணத்திற்காக இதை சொன்னேன்). சில தலைப்புகள் புரியாதவையாக இருந்ததால் அதை மாற்றியவரிடம், ஏன் அப்படி மாற்றினீர்கள் என்று கேட்டு அவரின் விளக்கத்தை பேச்சு பக்கத்தில் குறிப்பிட்டு விட்டேன். தலைப்பை மாற்றும் முன் பேச்சு பக்கத்தில் உரையாட வேண்டும் என்பதை அவர் மறந்திருக்கலாம். \\நாம் தன்னாட்சியான நடையைப் பயன்படுத்துவது முரணில்லையா\\ இங்கு வலைபதிவில் எழுதுவது மாதிரி எழுதக்கூடாது நீங்கள் அதையா சொல்கிறீர்கள்? \\விக்கிப்பீடியா ஒரு நிறுவனக் கலைக்களஞ்சியமல்லாததால் மொழிக்கு முன்னுரிமை அளிப்பதைவிட தகவலுக்கே முன்னுரிமை வழங்குகிறது\\ உண்மை. தமிழை தமிழில் எழுது என்பது எப்படி குற்றம் ஆகும் என்பது புரியவில்லை. ஒவ்வொருவரும் தோன்றும் படி (அவருக்கு அது பெருவழக்கு) எழுதினால் இது கலைக்களஞ்சியமாக இருக்காதே?--குறும்பன் (பேச்சு) 22:42, 5 திசம்பர் 2013 (UTC)Reply

குறும்பன், உரையாட ஏதுவாக இருப்பதாலேயே "பெருவழக்கு" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினேன். எனது தொடக்கக் கருத்தில் குறிப்பிட்டுள்ளபடி "சுருக்கமாகவும், தெளிவாகவும், பரவலாக அறியப்பட்டும், நம்பகமான தமிழ் மேற்கோளுடனும் தலைப்புகள் அமைய வேண்டும். அவ்வாறு அறியப்படாத அல்லது கலைச்சொல் இல்லாத தலைப்புகளுக்குச் சொந்த மொழி பெயர்ப்பு செய்தோ, விவாதித்தோ தலைப்புக்கள் வைக்கலாம்." ஆகாவே அதிக நம்பகமான மேற்கோள் உடன் உள்ள எந்த தலைப்பையும் பயன்படுத்தலாம். நான் மேலே சுட்டிக்காட்டியுள்ள சில உதாரணங்களை ஒப்பிட்டிப் பாருங்கள். கலப்படமில்லாத தமிழ் என்று சங்கக் காலத் தமிழில் எழுதுவதோ, கடந்த நூற்றாண்டுத் தமிழில் எழுதுவதோ தற்காலத்திற்குப் பொருந்துமா என யோசிக்கிறேன். நவீன இலக்கியங்கள் பல இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியவை என அறிகிறேன். தலைப்பு புரியாவிட்டால் பேச்சு பக்கத்தில் கேட்கும் முறையில் அதிகளவு நேரவிரயமும், வழிகாட்டலின்மையும் உள்ளதாலேயே இந்தக் கொள்கையை மறு ஆய்வுக்குக் கோருகிறேன். தன்னாட்சி என்று சொல்வது மேற்கோள்கள் ஏதுமில்லாமல் பெருவழக்கை மாற்றி, புதிய வழக்கை முன்னிருத்தும் முறை. தமிழைத் தமிழில் எழுதுவது குற்றமல்ல ஆனால் பெருவழக்கைப் புறகணித்து எழுதுவது, தமிழின் தற்கால/பரிணாம நடையைப் புறம் தள்ளுவதாகும். குற்றம் என்று எங்கும் குறிப்பிடவில்லை, பொருத்தமின்மை என்றுதான் கருதுகிறேன் --நீச்சல்காரன் (பேச்சு) 03:20, 6 திசம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன், நான் கோர்ட்-கோர்ட்டு என்னும் எடுத்துக்காட்டைக் கொடுத்ததற்குக் காரணம், வேற்றுமொழிச்சொல்லான court என்பதை எடுத்து ஆளவேண்டும் எனில் கோர்ட்டு என்றுதான் எழுத வேண்டும், கோர்ட் என்று அல்ல என்று சொல்வதற்காக. இங்கே இரண்டுமே நாளிதழ்களில் இருந்து எடுத்ததே. நாம் இங்கு பேசும் பொருள் வேற்றுமொழிச்சொற்களைத் தமிழில் எழுதுவது பற்றியது அல்லவா, அதற்காகச் சொன்னேன். இன்னொரு கருத்து நீங்கள் 'பெருவழக்கு' என்று கொள்வதைச் செய்பவர் மிகச்சிலரே. மேலும் பிழையானது எனில் பலரும் செய்தாலும், சரியாக எழுதுவோர் சிலராக இருந்தாலும், சரியானதை முன்னிறுத்த வேண்டும். எடுத்துக்காட்டுக்கு முயற்சித்தார்கள் என்னும் வழக்கு பிழையானது எனில் நாம் முயன்றார்கள் என்று சரியானதைத்தான் முன்னிறுத்தி எழுதுதல் வேண்டும் (இது பிறமொழிச்சொற் பற்றிய கருத்து இல்லை, சரியான-பிழையான என்னும் கருத்துப் பற்றியது, பெருவழக்கு-சிறுவழக்கு என்பதைப் பற்றியது). தமிழ் விக்கிப்பீடியாவும் ஒரு மாதத்தில் 4-5 மில்லியன் பார்வைகள் எட்டுவது, ஆகவே இதனையும் உங்கள் கணிப்பில் "பெருவழக்கு" என்று கொள்ளுங்கள்!! நம்மைப் பார்த்து பிறரும் சரியாக ஆளத்தொடங்கியிருக்கின்றார்கள் என்பதற்கும் எடுத்துக்காட்டுகள் உள்ளன. சரியான நல்ல வழக்குகளை மற்றவர்களும் சிறுகச் சிறுக பின்பற்றுவார்கள். நல்லதையும் சரியானதையும் தான் நாம் இயன்ற அளவும் பின்பற்ற வேண்டும், தவறான வழக்குகளை அல்ல. --செல்வா (பேச்சு) 21:27, 6 திசம்பர் 2013 (UTC)Reply
செல்வா ஐயா, மொழிகளில் சரியான வழக்கு என்பது இறுக்கமாகத் தீர்மானிப்பதில்லை. அதன் பயன்பாட்டு முறைகளின் படியே சமூகம் தீர்மானிக்கிறது. "முயற்சித்தார்கள்" என்பது பிழையாகத் தோன்றினாலும், வருங்காலத்தில் அதுவொரு பெருவழக்காக மாறும் போது அதையும் மொழிக்குள் சேர்க்கப்படும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதற்கு உதாரணமாக உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் அஃது,இஃது என்பதுதான் மரபு, அந்த மரபு மாறவில்லையா?, "எல்லாம்" என்ற சொல் தற்காலத்தில் முன்னிலைக்கும், படர்க்கைக்கும் பன்மையாகப் பயன்படுத்தப் படவில்லையா? பா பிரித்தா தற்காலக் கவிதைகள் படைக்கப்படுகிறது? ‘இன்’ என்ற சொல் சாரியையாக இருந்த வழக்கு மாறி வேற்றுமை உருபாகவில்லையா? எனவே நமது அற்றலைப் புதிய கலைச்சொற்களுக்குச் சரியான வழக்கை வழங்கி உதவலாம், ஆனால் சரியான வழக்கு எது என்று நல்ல பெருவழக்கிற்கு எதிரான ஆய்வு இத்தகைய திறமூலக் களஞ்சியத்தில் பொருத்தமன்று என நினைக்கிறேன். 4-5 மில்லியன் பார்வைகள் எட்டும் இங்கும் நாளையே யாரேனும் குழுவாகச் சேர்ந்து எல்லா வழக்குகளையும் மாற்றும் நிலைவரலாம் அல்லவா? "நம்மைப் பார்த்து பிறரும் சரியாக ஆளத்தொடங்கியிருக்கின்றார்கள்" என்பதற்கான சில எடுத்துக்காட்டுக்கள் தந்தால் சிந்தித்துப் பார்க்கவும், இணையாக எத்தனை வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று ஒப்பிட்டுப் பார்க்கவும் உதவும்.--நீச்சல்காரன் (பேச்சு) 01:12, 7 திசம்பர் 2013 (UTC)Reply

நீச்சல்காரன், நமக்கு தெரியும் சில செய்தி இதழ்களில் எப்படி தமிழை பிழையாக எழுதுகிறார்கள் என்று. செய்தியாளர்களுக்கும் எவ்வளவு தமிழ் அறிவு உண்டு என்று தெரியாது, செய்தி அச்சுக்கு போகும் முன் அதை திருத்தினால் தான் உண்டு. எதை நம்பகமானது என்று கொள்வது என்று அடுத்த சிக்கல் வரும். (சிக்கலுக்கா பஞ்சம், இப்படி சொன்னாலும் தவறு அப்படி சொன்னாலும் தவறு என்பவர்கள் நிறைய உள்ளனர்) தமிழ் மேற்கோள் என்று தேடினால் கிடைப்பது கடினம். மறியல் என்பதும் செய்திகளில் வருகிறது பந்த் என்பதும் ஹர்த்தால் என்பதும் இதழ்களில் வருகிறது. எது சரி என்று எப்படி தெரிந்து கொள்வது? ஒற்று(ப்) பிழையோடு நிறைய பேர் எழுதுகிறார்கள் அதனால் அதை ஏற்றுக்கொள்வது முறை என்று சொல்வது தவறல்லவா? தெரிந்து யாரும் செய்வதில்லை, தெரியாதது தான் காரணம். நான் நிறைய பிழைகள் செய்பவன். எங்கு வலி மிகும் மிகாது என்பதில் தமிழ் அறிஞர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் உண்டு. \\சங்கக் காலத் தமிழில் எழுதுவதோ, கடந்த நூற்றாண்டுத் தமிழில் எழுதுவதோ தற்காலத்திற்குப் பொருந்துமா என யோசிக்கிறேன்\\ சங்ககாலத் தமிழில் உரைநடை உண்டா? எல்லாம் பாட்டு தான் அல்லவா? கடந்த நூற்றாண்டுத் தமிழில் தமிழ் இருந்தால் புரிந்து கொள்வது கடினமா? அக்காலத்தைய விடுதலை ஏட்டை காட்டாக கொள்ளவும். சொந்தக்கதை -1: நான் எங்கள் பகுதி வட்டார வழக்கில் தான் எங்கும் பேசுவேன் (இப்பவும் அப்படிதான்). தஞ்சைத் தரணியை (நண்பன்) சேர்ந்தவனுக்கு நான் சொன்ன ஒரு சொல் புரியவில்லை, எனக்கும் நான் எந்த சொல்லை சொன்னேன் என்று தெரியவில்லை, 2 நாட்கள் கழித்து அதே சொல்லை நான் சொல்லும் போது பிடித்துக்கொண்டான். அப்புறம் தான் அதற்கு விளக்கம் சொன்னேன். ஏதோ அவன் கேட்டதால் மற்ற ஊர்களில் அச்சொல்லை பயன்படுத்துவதில்லை என்று தெரிந்து கொண்டேன். இல்லாட்டி?? நான் பேசும் தமிழை புரியவில்லை என்று யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. அது சரியென்று (எல்லோருக்கும் புரியும் என்று தான்) நினைத்துக்கொண்டுள்ளேன். எழுத்துத் தமிழ் வேறு அல்லவா? (நிறைய சொந்தக்கதை உண்டு, தனியா பேசினால் தான் நல்லா இருக்கும்  :) ) தனிச்சையான தலைப்புகள் எவை என்று சொல்லவும் (எனக்கு தெரியாததால் கேட்கிறேன் தவறாக நினைக்கவேண்டாம்) --குறும்பன் (பேச்சு) 02:40, 7 திசம்பர் 2013 (UTC)Reply

குறும்பன், 1) விக்கிப்பீடியா என்பது பலர் எண்ணியுள்ளது போல சரியான வழக்குகளைப் பரிந்துரைக்கும் இடமில்லை, எளிதில் புரியக் கூடிய[common name] பெயர் கொண்டே அமைகிறது. 2) அதேநேரத்தில் இக்கொள்கை பேருந்து என்பதை பஸ் என்றோ, பண்பலை என்பதை எஃப்.எம். என்றோ, விமானம் என்பதை ஃப்ளைட் என்றோ சொல்லவில்லை. எப்படி செய்தியாளர்கள் தவறு செய்யலாம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதுபோல விக்கிப் பயனரும் பொருத்தமில்லாத் தலைப்பைத் தெரியாமலே வைப்பதற்கான வாய்ப்பு அதிகம் அதனால் கூடுமானவரை மேற்கோள் உள்ள அல்லது பெருவழக்குள்ள பெயரைப் பரிந்துரைக்கிறேன். நீங்கள் கூறியது போல சிக்கல்கள் இருந்தால் பேச்சுப் பக்கத்தில் விவாதித்து தலைப்பைவைக்கலாம். ஆனால் பெருவழக்கு இல்லாத அல்லது பரவலான பயன்பாடிலில்லாத சொற்களைத் தலைப்பாக வைப்பதைத்தான் தன்னிச்சையான தலைப்பு எனக்கொள்ளலாம். ஏற்கனவே பல உதாரணங்களை மேலே கொடுத்துள்ளேன். மேலும் கொடுப்பதென்றால், ஸ்புட்னிக் என்று அறியப்பட்டவொன்றை இசுப்புட்னிக் என்பது, ஷ்ரேயா என்று மட்டும் தெரிந்தவரை சிரேயா என்பது, புனே என்ற தமிழ்ப்பெயரை புணே என்பது, ஹவாய் என்பதை அவாயி என்பது, இராதாகிருஷ்ணன் என்பவரை இராதாக்கிருட்டிணன் என்பது என்று பல தலைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றாக உரையாடினாலும் அரிதாகவே புரியக்கூடிய பொதுப் பெயருக்கு மாற்றுகிறோம் அதனால் சரியான கொள்கைப் பக்கம் இருந்தால் எதிர்காலத் தலைப்புகளாவது சிறப்பாகயிருக்கும் என நினைக்கிறேன். புதிய கலைச்சொற்களுக்குப் புதிய தலைப்பை மொழிபெயர்த்து வைப்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. அதேபோல தன்னாட்சியான தலைப்புகள் அனைவருக்கும் புரியும் என்றால் எனது கோரிக்கையைப் பின்வாங்கிக் கொள்வதிலும் மாற்றுக்கருத்தில்லை. அறிவார்ந்த பார்வையில் விக்கி என்பது தகவல் அளிக்கும் கருவி, அத்தகைய நிலையில் புரியாத புதிய வழக்குகளால் அதன் பயன்பாடு குன்று என்று நினைக்கிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 04:26, 7 திசம்பர் 2013 (UTC)Reply
  • இந்த உரையாடலில் நான் இதுவரை பங்கேற்கவில்லை. ஆனால் இங்கு விவாதிக்கப்படுகின்ற கருத்து மிக முக்கியம் என்பதில் ஐயமில்லை. புனே, புணே, பூனா (पुणे) போன்றவையும், ராதாக்ருஷ்ணன் (राधाकृष्णन - Radhakrishnan) என்னும் மூலப் பெயரை இராதாக்கிருஷ்ணன், இராதாக்கிருட்டிணன் என்று சொல்வதும் மாற்றுச் சொற்களாகத் தமிழ் விக்கியில் தரலாம். எனவே, எது பொருத்தமான வடிவம் என்று பொதுவழக்கிலிருந்து தெரிகிறதோ அதையே த.வி.யில் இடுவதோடு, வேறு பொருத்தமான சொல்வழக்குகளை மாற்றுச் சொற்களாகக் கொடுக்கலாம். ஒரு சொல் முற்றிலும் பொருத்தமற்றதாகத் தெரிந்தால் அது பற்றி பேச்சுப்பக்கத்தில் உரையாடி, தேவையானால் அகற்றலாம். वाराणसी என்பது "வாராணசி" என்று வர வேண்டும். ஆனால் பெரும்பான்மையோர் வாரணாசி என்பர். எது சரி??--பவுல்-Paul (பேச்சு) 05:32, 7 திசம்பர் 2013 (UTC)Reply

நீச்சல்காரன், புணே, புனே, புனா, பூனா எது சரி என்பது எனக்கு தெரியாது? எல்லாவற்றையும் நான் கேட்டுள்ளேன் (அங்கு சென்றவர்கள் வாயிலாக). இசுபுடனிக் என்பதோ ஆல் இசு வெல் என்பதோ உத்தராகண்டம் (இதை ஊடகங்கள் பலவாறாக பலுக்குவதை நான் கேட்டேன்) என்பதோ எனக்கு தவறாக தெரியவில்லை. Sputnik என்று எத்தனை பேருக்கு தெரியும் என்று நினைக்கிறீர்கள்? இடாய்ச்சு மொழி என்பது மூல மொழிக்கு நெருக்கமான ஒலிப்பல்லவா? நாம் ஏன் ஆங்கிலத்தில் பலுக்குவதையே இங்கும் பலுக்கி தவறான முன்னுதாரணத்தை காட்டவேண்டும்? இரயிலுக்கு மாற்றாக தொடருந்து என்பது பல காலமாக பல ஊடகங்களிலும் பயன்பட்டது தானே? இது தீர்வை நோக்கி இப்போது செல்வதால் இங்கு நான் இன்னும் குழப்ப விரும்பவில்லை --குறும்பன் (பேச்சு) 00:10, 9 திசம்பர் 2013 (UTC)Reply

எனது கருத்திற்கும் உங்கள் புரிதலிலுக்கும் நுண்ணிய வேறுபாடு உள்ளது என்றே நினைக்கிறேன். எனக்கும் அவை தவறாகத் தெரியவில்லை. ரயில் என்பதற்குப் பதில் தொடருந்து என்றோ இந்திய வழக்குப்படி தொடர்வண்டி என்றோ சொல்லலாம், ஆனால் உழவன் விரைவு ரயில் என்று பெயர் எழுதப்பட்ட வாகனத்தை உழவன் விரைவுத் தொடருந்து என்பது தேடிவருபவர்களுக்கு எட்டாமல் போகிவிடும். புனே என்று மட்டும் செய்தித்தாள்களில் படித்துவருபவர் புணே என்று தேடுவதறிது. அனைத்து மொழி விக்கியிலும் common terms தான் முன்னிருத்துகிறார்கள். அந்த common term மூலமொழியாக இருந்தால் எனக்கும் உடன்பாடே, அப்படி அல்லாத போது மூலமொழிக்கு நெருங்கிய ஒலிப்பில் தலைப்புகள் அமைந்தால் பயனர்களுக்கு விலகிய ஒலிப்பில் தமிழ் விக்கி அமையும்(பல சமூகத் தளங்களில் இவ்வாதார உரையாடல்களை நீங்களே கண்டிருக்கலாம்). ஏன் ஆங்கிலத்தில் பலுக்குவதையே இங்கும் பலுக்கிக் காட்டவேண்டுமென்றால் விக்கிப்பீடியா சமூகத்தால் சமூகத்திற்காகத் தயாரிக்கப்படுவது. மொழியாளார்களால் சமூகத்திற்காகத் தயாரிக்கப்படுவதல்ல. --நீச்சல்காரன் (பேச்சு) 02:11, 9 திசம்பர் 2013 (UTC)Reply

ஆம். தமிழர்கள் ஆங்கிலம் புழங்காத நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளார்கள் எனவே தமிழ் விக்கிப்பீடியா தமிழர்களுக்கானது த. வி தமிழகத் தமிழர்களுக்கு மட்டுமானது அல்ல என்பதே என் கருத்து. (சிக்கலே இங்கு தான் வருகிறது) அதனால் தான் நாம் ஏன் ஆங்கிலத்தில் பலுக்குவதையே இங்கும் பலுக்கி தவறான முன்னுதாரணத்தை காட்டவேண்டும்? என்றேன். --குறும்பன் (பேச்சு) 23:13, 9 திசம்பர் 2013 (UTC)Reply

இரவியின் கருத்துகள்

தொகு

ஏற்கனவே சுந்தர், செல்வா, குறும்பன் கூறியுள்ள பல கருத்துகளுடன் உடன்படுகிறேன். எனவே, மற்றவர் சுட்டாத சில விசயங்களை அல்லது நீச்சல்காரன் இன்னும் சற்று தெளிவாக எடுத்துரைத்திருக்கலாம் என்று கருதும் விசயங்களை மட்டும் குறிப்பிடுகிறேன். பொதுவாக, தமிழ் விக்கிப்பீடியாவில் 100% தொல்காப்பிய நடையிலும் எழுத முடியாது. 100% இலக்கணத்தை மதிக்காமல் தாறுமாறாகவும் எழுத முடியாது. தற்காலத் தமிழில் இருந்து பெரிதும் விலகாமல், இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நல்ல சமநிலை பேணப்பட வேண்டும். ஒரு வகையில் இறுக்கமான விதிகள் இல்லாமல் இருப்பது, விதிகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பது இச்சமநிலையைப் பேண உதவுகிறது. கலைக்களஞ்சிய நடை ஒரு சீராக இருக்க வேண்டும் என்றாலும் விக்கிப்பீடியா போன்ற ஒரு கூட்டு முயற்சித் திட்டத்தில் மாற்றுக் கருத்துடைய பங்களிப்பாளர்கள் இணைந்து செயல்பட இந்த அணுகுமுறை உதவுகிறது.

அதே வேளை, சில நியாயமான கவலைகளும் பகிரப்படுவதைக் காண முடிகிறது.

1. புத்தா கொலாப்சுடு அவுட் ஆஃப் சேம் என்ற பெயர் ஏற்கப்படவில்லை. ஆனால், சில்ரன் ஆப் ஹெவன் என்ற பெயர் ஏற்கப்படுகிறது. ஒரே துறை சார்ந்த இரு கட்டுரைகளில் உள்ள இந்த நிலை புதுப்பயனரைக் குழப்புவதாகவும் அயரச் செய்வதாகவும் இருக்கிறது. பேச்சு:புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் (திரைப்படம்) உரையாடலைக் கவனியுங்கள். தமிழ் விக்கிப்பீடியா முழுமைக்கும் சீரான கொள்கை கொண்டு வர முடியாவிட்டாலும், இது போன்ற குறிப்பிட்ட துறை சார் வழிகாட்டல்களையாவது தந்து அவற்றைச் சீராகப் பின்பற்றலாம்.

பாச்சிகா-யெ அசெமான் என்ற பெயரைச் சொன்னால் தமிழ் பேசும் யாருக்கும் தெரியாது. சொர்க்கத்தின் குழந்தைகள் என்று சொன்னால் புரியும். ஆனால், நூலா படமா எதைப் பற்றிச் சொல்கிறது, அது எந்தப் படம் என்று சட்டென்று உணர முடியாது. இது தான் உண்மை நிலவரம். வேறு சில படங்களுக்கு பிரெஞ்சு முதலிய மொழிப் பெயர்கள் இருந்தாலும், அவை அந்த உள்ளூர் மொழிப் பெயரிலேயே அந்தந்த நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டிருக்கலாம். தமிழ் பேசுப் பகுதிகளில் ஆங்கிலப் பெயரில் சந்தைப்படுத்தப்படுவதில் இருந்து இது மாறுபடுகிறது. இத்தகைய நிலையில் மூல மொழிப் பெயரையோ தமிழ்ப் பெயரையோ சுட்டுவதை விட படத்தின் அதிகாரப்பூர்வ, அனைவரும் உணர்ந்த ஆங்கிலப் பெயரை முன்னிறுத்தலாமே என்பது நியாயமான கேள்வி.

2. யாவாகிறிட்டு - தமிழ் விக்கிப்பீடியா பொது நடையில் இருந்து விலகி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக பலரும் சுட்டிக்காட்டும் பக்கம். இவ்வாறு சுட்டிக் காட்டுபவர்கள் தமிழ் எதிரிகளோ தமிழ் விக்கிப்பீடியர்களைத் தாலிபான்கள் என்று தூற்றுபவரோ அல்லர். ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர்கள். எனவே, இவர்களின் நியாயமான ஐயத்தையும் கவலையையும் திறந்த மனதுடன் அணுக வேண்டியுள்ளது. இடாயிட்சுலாந்து, எசுப்பானியா என்பதை அந்தந்த நாடுகள், கண்டங்களில் வாழும் தமிழராவது அறிவார்கள். புழங்குகிறார்கள். ஆனால், யாவாக்கிறிட்டு என்று தமிழ் இலக்கணப்படி எழுத இடம் இருந்தாலும், ஒரு வேளை கூகுள் தேடலில் சிக்கினாலும், எந்தக் கல்லூரியோ நிறுவனமோ தொழில்நுட்ப நூலோ தளமோ மாணவரோ வேலைக்கு எடுப்பவரோ அவ்வாறு குறிப்பிடுவதில்லை. அவர்கள் தமிழ் வழியில் படித்தாலும் சரி ஆங்கில வழியில் படித்தாலும் சரி. இந்த இடத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் அணுகுமுறை எந்த அளவுக்குச் சரி? இதனை ஏன் சாவாசுக்கிரிப்டு (இதையும் சிலர் ஏற்க மாட்டார்கள் என்றாலும்) என்றோ சாவாநிரல் (வணிகப் பெயரை இவ்வாறு எழுதுவது தவறு என்றாலும் முகநூல் என்று குறிப்பிடுவது போல் குறிப்பிடலாம்) என்றோ குறிப்பிடக்கூடாது? இல்லை, தமிழ் விக்கிப்பீடியர் கூடலில் செந்தில்நாதன் சுட்டியது போல் துறைக்கு ஒரு மொழி நடைக் கொள்கை வகுப்பது ஒத்து வருமா?

3. புதுப்பயனர்களிடத்து கிரந்தம் தவிர்ப்பு, தனித்தமிழ் பயன்பாடு ஆகியவற்றை ஒரு சில பக்கங்களில் எடுத்துரைப்பது கூட அவர்களைப் பெரிதும் அயர வைப்பதாக இருப்பதை உணர முடிகிறது. எனவே, ஒருவர் விக்கி முறைகளை நன்குணர்ந்து வேர் பிடித்து பங்களிக்கும் வரை இவ்வாறான உரையாடல்களை அவரிடம் தவிர்ப்பது நன்று. இது தொடர்பான வழிகாட்டல்களை உருவாக்க வேண்டும். --இரவி (பேச்சு) 17:43, 13 திசம்பர் 2013 (UTC)Reply

மறுமொழி-2

தொகு

நீச்சல்காரன், நீங்கள் கூறும் "அதுவொரு பெருவழக்காக மாறும் போது அதையும் மொழிக்குள் சேர்க்கப்படும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்." -இப்படியான கருத்துகளை மேற்குலக மொழியியலாளர்கள் சிலர் கூறுகின்றார்கள். இந்த வரையறுக்கப்பட்ட இலக்கணம், வழக்கு இலக்கணம் (செய்யுள்-வழக்கு) (prescribed grammar, descriptive grammar) என்பன பற்றியெல்லாம் நிறைய பேசலாம், அதன் நிறைகுறைகள், உண்மைகள், நுண்ணரசியல் ஆகியன ஆயிரம் உண்டு. ஆனால் அதில் நுழைய வேண்டாம். "தவறான"து வழக்கு ஊன்றுவது எப்படி? மேலும் மேலும் தவறு செய்வதால்தானே. முயல்-முயற்சி (வினை-பெயர்ச்சொல்), அது போல் பயில்-பயிற்சி, உணர்-உணர்ச்சி, வளர்-வளர்ச்சி. முயற்சித்தல் என்பது போல் தளர்ச்சித்தல், வளர்ச்சித்தல், உணர்ச்சித்தல் என்றெல்லாம் ஆக்குவோமா? அவரவர் விருப்பப்படி தவறு செய்தால் அதனையே ஏற்றுப் பெரிதாக்கி வழக்கு ஊன்றச்செய்ய வேண்டும், விதியாக்கவேண்டும் என்று ஏதும் புதி விதி உள்ளதா ஐயா? நீச்சல்காரன், நீங்கள் // விக்கிப்பீடியா என்பது பலர் எண்ணியுள்ளது போல சரியான வழக்குகளைப் பரிந்துரைக்கும் இடமில்லை// என்கின்றீர்கள்!!! அதே போல விக்கிப்பீடியா தவறான வழக்குகளைப் பரிந்துரைக்கும் இடமும் இல்லை!! என்ன ஐயா உங்கள் வாதம்! மீண்டும் மீண்டும் இந்தப் 'பெருவழக்கு' என்று நீங்கள் எதையோ கருதுவது ஒன்றை மட்டுமே கூறுகின்றீகள், மொழியின் இலக்கணம் (வெறும் இலக்கணம் மட்டும் அன்று, அறிவார்ந்த விதிமுறைகளாம் அவை தமிழில்!!), நல்ல எழுத்து வழக்குகள், பிற நல்ல கலைக்களஞ்சியங்களின் எடுத்துக்காட்டுகள், மொழி இயல்பு (தமிழ் மொழிக்கு மட்டும் அன்று, உலக மொழிகள் பலவற்றிலும் அந்தந்த மொழிகளுக்கான இயல்பு), நெடிய வரலாற்று வழக்கு (2000-3000 ஆண்டுகள்!), ஆகிய எதையும் கருத்தில் கொள்ளமாட்டேன் என்று வாதிடுகின்றீர்கள். மகாராட்டிரத்தின் நகரம் புணேதான் ஐயா! (இடாய்ச்சுலாந்து போல!!). நரேந்திர மோதி என்றுதான் எழுதவேண்டும் (மோடி அன்று!! எத்தனை எத்தனை 'பெருவழக்கு' இதழ்கள் தவறாக எழுதுகின்றன!! மோதி என்றால் தமிழில் முத்து என்று பொருள்.), இராதாக்கிருட்டிணன் அல்லது இராதாகிருட்டிணன் என்பதுதான் தமிழில் எழுதும் முறை (தமிழ் இலக்கண விதிகளுக்கு உட்பட்டு எழுதும் முறை). தனி மாந்தர்களுக்கு உரிமைகள் இருப்பதுபோல் 2000-3000 ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கும் மொழிக்கும் அதன் மரபுகளின் படி எழுதும் உரிமை உண்டு (மொழி என்பதை மொழியாளர் என்று ஆகுபெயராக எழுதியுள்ளேன்). என் பெயரை சப்பான் மொழியில் செரபகுமா என்று லகரத்தை ரகரமாகத் திரித்துத்தான் எழுத முடியும் மரபாக எழுதும்பொழுது. ஆங்கிலத்தில் Aழgappaன் என்றோ maணி, vaள்ளி என்றோ எழுதும் வசதி இருந்தாலும் (ஒருங்குறியால்), எழுதமுடியாது, எழுதக்கூடாது. பெயராக இருந்தால் முதல் எழுத்து தலலைப்பு எழுத்தாகத்தான் ('காப்பிட்டல் லெட்டர்') ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். இவையெல்லாம் ஆங்கில இலக்கண விதிமுறைகள். அதுபோல தமிழிலும் சில விதிகள் உண்டு. தமிழ் இலக்கணத்தைத் தமிழில் எழுதும்பொழுது பின்பற்றக்கூடாது என்று யாரும் விதி விதிக்கமுடியாது! நிறைய நெகிழ்ச்சி, உறழ்ச்சி எல்லாம் விட்டுத்தான் எழுதுகின்றோம் இங்கே. மிக அடிப்படையான சிலவற்றை மட்டுமே சற்றுக் கூடுதலாக வலியுறுத்துகின்றோம். புள்ளி வைத்த மெய்யெழுத்தில் தொடங்கி எழுதலாகாது, புள்ளிவைத்த வல்லின மெய்யெழுத்தில் முடியும்படி எழுதலாகாது, கூடாத (தமிழில் விலக்கப்பட்ட) மெய்யெழுத்துக்கூட்டங்கள் (முதலிலும் இடையிலும் கடைசியிலும்) வேண்டாம் போன்ற மிக எளிமையான விதிகளைத்தான் பரிந்துரைக்கின்றோம். ஒருவர் பெயராக இருந்தாலும் மொழியின் இலக்கண வழக்கத்தின்படித்தான் எழுதுதல் வேண்டும். இதிலும் மிகப்பல இடங்களில் யாரும் பெரிதாக வலியுறுத்தவில்லை. சொல்லப்போனால் இந்த அடிப்படை விதிகளை இன்னும் சீராகப் பின்பற்றுவது நல்லது என்பது என் கருத்து. --செல்வா (பேச்சு) 13:44, 7 திசம்பர் 2013 (UTC)Reply

தீர்வு நோக்கி

தொகு

ஒவ்வொரு கருத்தாக உரையாடுவோம். முதலில் ஒரே ஒரு கருத்தை முதலில் எடுத்துக்கொள்வோம். இது பற்றி மட்டும் உரையாடுவோம். ஒரு தீர்வுக்கு வருவோம். சரியா?

  • 1) தமிழ் விக்கிப்பீடியாவில் வரும் வேற்றுமொழிச் சொற்களில் கடைசி எழுத்தாக வல்லின புள்ளி வைத்த எழுத்தோ, தமிழில் கூடாத பிற எழுத்தோ இருத்தல் கூடாது. [ஆனால் எனக்குப்பிடிக்கும் என்பதைப் பிரித்து எழுதும் பொழுது எனக்குப் பிடிக்கும் என்று எழுதுவது வேறு ஏனெனில் அது சொல்லின் முடிவு இல்லை, தெளிவு கருதி பிரித்து எழுதுவது. மேலும் ப் என்று வருவதை அடுத்து பகர உயிர்மெய்யோ வேறு வரக்கூடிய உயிர்மெய் எழுத்தோதான் வரும்.].
  • தமிழ் இலக்கணம் என்பதற்காக மட்டும் இவ் விதி இல்லை. உண்மையில் வல்லின ஒற்றுடன் (ஒற்று = புள்ளி வைத்த மெய்யெழுத்து) ஒரு சொல் முடிந்தால் அந்த ஒலியை ஒலிக்கவே முடியாது. அந்த வல்லின ஒற்றை அடுத்து ஒரு துணை உயிர் இருந்தால்தான் ஒலிக்க முடியும் (இது போன்றவற்றையே அறிவார்ந்த, அறிவடிப்படையான விதி என்கின்றேன்). இன்னொரு காரணம் (இரண்டாவது காரணம்), தமிழ் போன்ற மொழிகள் பின்னொட்டாக (postposition) வேற்றுமைகளை இணைத்துப் பயன்படுத்தும் மொழி. ஆகவே "கேக்" என்பதை அடுத்து நான்காம் வேற்றுமை உருபாகிய "கு" வர வேண்டும் என்றால், எடுத்துக்காட்டாக கேக்குக்கு இனிப்புப் போதவில்லை என்று சொல்ல வேண்டி வந்தால், கேக் என்று எழுதியிருந்தோம் என்றால் எப்படி நான்காம் வேற்றுமை உருபைச் சேர்ப்பது? கேக் + கு = கேக்கு ஆகும், அப்பொழுது கேக்கு இனிப்புப் போதவில்லை என்று வருமே! அப்படி எழுத முடியாது. இதே போல -ஐ, -இல், -ஆல், -உடன் முதலான உருபுகளைச் சேர்க்கும்பொழுது கேகை (கே+ஐ), கேகில் (கேக்+இல்) என்றெல்லாம் தவறுதலாக எழுத வேண்டிவரும், அல்லது முரண்படும் புது இலக்கணங்கள் படைக்க வேண்டும். இதற்கான இடம் இதுவன்று; அதற்கான தேவையும் இல்லை!மூன்றாவதாக புணர்ச்சிவிதிகளையும் சீராகப் பயன்படுத்த முடியாமல் பெரும் குழப்பம் ஏற்படும். ஆனால் கிரிக்கெட்டு, கேக்கு, சிகரெட்டு, கோர்ட்டு, டேப்பு, கேப்பு என்று குற்றியலுகரத்துடன் எழுதினால் சிக்கல் ஏற்படாது. எனவே தமிழ் முறைப்படியும், மேலே கூறிய காரணங்களுக்காகவும், ஒரு சொல்லின் கடைசி எழுத்தாக வல்லின ஒற்றில் முடியக்கூடாது. இது பற்றி மட்டும் கருத்தாடுங்கள், அல்லது முடிவு சொல்லுங்கள்.--செல்வா (பேச்சு) 17:44, 7 திசம்பர் 2013 (UTC)Reply
1) இலக்கணரீதியான விடை: குணம் என்ற சொல் அத்து என்ற சாரியையுடன் உருபுடன் புணரும். இதுபோல நன்னூல், 244 விதிப்படி புதிய சாரியையாகக் கொண்டு உருபு சேர்த்தும் கொள்வதில் தவறுயில்லை என நினைக்கிறேன். கேக் என்பதில் "கு" என்ற சாரியையைப் பயன்படுத்தலாம். கேக்+கு+ஐ=கேக்கை, கேக்+கு+கள்=கேக்குகள், கேக்+கு+இன்=கேக்கின். கிரிக்கெட் என்பதில் "டு" என்ற சாரியை பயன்படுத்தி உருபுகளோடு பயன்படுத்தலாம். அப்படித்தான் பயன்படுத்தவும் படுகிறது. நீங்கள் குறிப்பிடுவது போல கொண்டால் அச்சொல் வன்தொடர்க் குற்றியலுகரமாகிவிடுவதால் புதிய பெயர்ச்சொல்லுடன் சேரும் போது வலி மிகவேண்டிய அவசியம் வரும். அப்போது கிரிக்கெட்டுப் போட்டி, கோர்ட்டுத் தீர்ப்பு என்று உச்சரிக்க சிரமமாகிவிடாதா?
2) பொதுவான விடை:இங்கு குறிப்பிடப்படுவது அடையாள/வணிகப் பெயர் என்று மட்டும் கொள்கிறேன். (எனெனில் பொதுவான பெயர்களுக்கு மாற்றாக மொழிபெயர்ப்பு செய்வதால் எழுத்துபெயர்ப்பு அவசியமில்லை. மட்டைப்பந்து, அணிச்சல், சுருட்டு, நீதிமன்றம், வார்ப்பட்டை, தொப்பி) ஒருவர்/ஒரு நிறுவனம் தன் பெயரை இப்படி அறிமுகப்படுத்தும் போது அதனை மாற்றும் உரிமை நமக்கு இல்லை என நினைக்கிறேன். இராசாத்தி என்பவர் தனது பெயரை ஆங்கிலத்தில் rajathi என்று அடையாளப்படுத்தும் போது irasathi என யாரும் மாற்றமுடியாதல்லவா அதுபோல "கிரிக்கெட் வாரியம்" என்று அறியப்படும் ஒன்றை "கிரிக்கெட்டு வாரியம்" என மாற்றுவது அதன்மீது வெற்றிடத்தைப் பூசுகிறது. வாட்டிகன் போப் என்பவரை வாட்டிகன் போப்பு என்பது நடைமுறை முரண்கள் இருப்பதையும் அறியத்தருகிறேன். அதே நேரத்தில் caldwell என்பவர் கால்ட்வெல் என்றில்லாமல் கால்டுவெல் என அறியப்பட்டாலோ, bob என்பவர் பாப்பு என அறியப்பட்டாலோ நீங்கள் கூறியபடி பயன்படுத்திக் கொள்ளலாமே. தகவல் அளிப்பே முதன்மை, மொழிவழக்கல்ல என்கிறேன் --நீச்சல்காரன் (பேச்சு) 19:41, 7 திசம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன் நீங்கள் மேலே 1)-இல் கூறியதுதான் சொந்த ஆராய்ச்சி என்பது, தமிழ் விக்கிப்பீடியா அதற்குக் களம் அன்று. மேலும் நீங்கள் கூறியது அறவே பிழையான ஆய்வு ஐயா! மகர மெய்யில் ("ம்") இல் முடியும் பொழுது "அத்து" சாரியை சேர்ப்பது வேறு. அந்த அத்து சாரியையோ பிற சாரியையோ கண்டவாறெல்லாம் சேர்க்க முடியாது. மேலும் உங்கள் விருப்பபடியெல்லாம் புதிய டு சாரியை, பு சாரியை என்றெல்லாம் சேர்க்க முடியாது!! நன்னூல் பேசும் நீங்கள் நன்னூலில் 107 ஆவது நூற்பாவில் இறுதி எழுத்துகள் எவையெவை இருக்கலாம் என்று கூறியுள்ளதை ஏன் பார்க்கவில்லை?!
ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயு முகரநா லாறு மீறே.
"நாலாறு" (=4x6= 24) எழுத்துகள்தான் வரலாம் . 1) அதாவது தனித்தும் மெய்யோடு கூடியும் வரும் பன்னிரண்டு உயிர்களும், ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள ஆகிய 11 எழுத்துகளின் மெய்யும் (ஞ முதல் ள வரையான 11 மெய்கள்), சாயும் உகரம் அதாவது குற்றியலுகரமும் சேர்த்து 12+11+1 = 24 எழுத்துகள் ஈற்றெழுத்தாக (கடைசி எழுத்தாக) வரும். க், ச், ட் த், ப். ற் ஆகிய வல்லின மெய் எழுத்துகள் 6 -உம் கடைசி எழுத்தாக வரமுடியாது, வரக்கூடாது; இவை தவிர ங் என்னும் மெய்யெழுத்தும் கடைசி எழுத்தாக வரக்கூடாது (சிங் என்று எழுதினால், சிங் + உடன் என்னும் பொழுது சிங்குடன் என்றும் "சிங்கோடு நடந்து போனேன்", என்றெல்லாம் வருவதைப் பாருங்கள்! எனவே சிங்கு என்று எழுத வேண்டும்!). நன்னூல் இருக்கட்டும். ஒரே ஒரு சில நொடிகள் "கேக்" என்று சொல்லிப்பாருங்களேன். ககர மெய்யின் ("க்") ஒலி வருமா என்று! கேக்கு என்று எழுதினால் அது கேக்கூஉஉ என்று நீட்ட வேண்டியதில்லை (மிகைப்படுத்திக்காட்டியிருப்பது புரிந்து கொள்ள, கேலி செய்ய அன்று!). "க்" என்னும் ஒலியை வெளிக்கொணர ஒரு சிறு குற்றியலுகரம், அவ்வளவுதான். எனவேதான் கேக்கு + இல் என்பது போல் வரும் பொழுது அந்த உகரம் ஓடிவிடும் (அந்தக் குற்றியல் உகரம் தனியாக வரும்பொழுது "க்"-ஐ ஒலிக்க மட்டுமே! இப்பொழுது தேவையில்லை); கேக்கில் என்று ஆகிவிடும் (இங்கே கேக்கு = கேக்க் + இல் = கேக்கில்; உகரம் ஓடிவிட்டதால். இதே போல் கேக்கால், கேக்குடன் என்றெல்லாமும். கிரிக்கெட்டுப் போட்டி, கோர்ட்டுத்தீர்ப்பு என்றால் எப்படி ஐயா உச்சரிக்கச் சிரமமாகும்?! படிக்கட்டுக்குப் பக்கத்தில், பாட்டுப் போட்டி என்று சொல்வது கடினமா? அப்படிச் சொல்வதில்லையா? என்ன ஐயா உங்கள் வாதம்?! //ஒரு நிறுவனம் தன் பெயரை இப்படி அறிமுகப்படுத்தும் போது அதனை மாற்றும் உரிமை நமக்கு இல்லை என நினைக்கிறேன்// என்கிறீர்கள், அப்போ எங்கள் மொழியின் அடிப்படை விதியையே மாற்ற மட்டும் உரிமை உள்ளதாக யார் சொன்னார்கள்?! அழகப்பன், வள்ளி, ஞானசம்பந்தன் முதலானவற்றை மட்டும் மாற்ற ஆங்கிலேயருக்கோ, யாப்பான் என்று கூற இடாய்ச்சு மொழியருக்கு மட்டுமோ, "Hesoos" என்பது போல Jesus பெயரை மாற்ற எசுப்பானியருக்கு மட்டுமோ உரிமை உள்ளதா? சென்னை என்பதை चेन्नई (சேன்னஇ) என்று எழுத இந்திக்காரர்களுக்கு மட்டும் உரிமை உள்ளதா? முதலில் உள்வாங்கும் மொழியின் உரிமை, அதன் மரபுகளுக்கு உரிமை, பிறகுதான் மற்ற எல்லாமும். தமிழ் விக்கிப்பீடியாவில் மிக நேர்மையான அணுகுமுறையைக் கொண்டு இருக்கின்றோம்; மூலமொழிச்சொல் என்னவோ, அதனைத் தமிழ் முறைக்கு ஏற்ப வழங்குவது. எல்லாமே ஆங்கிலேயர் சொல்வது போலவோ, மூலமொழியல்லாத பிறமொழியாளர் சொல்வது போலவோ எழுதுவதில்லை. மேலே பவுல் ஐயா குறிப்பிட்டது போல வாராணசி என்னும் ஊரின் பெயரை நாம் வாரணாசி என்று எழுதுவது தமிழில் முன்பு வழக்கமாக இருந்தால் (இது தமிழ் எழுதுமுறைக்கு மாறாக இல்லாதபடியால்), ஏற்று வழங்கலாம் (ஏனெனில் அது புறப்பெயர் மரபுப்படி, எக்ஃசோனிம் (exonym) என்னும் முறைப்படி). இல்லாவிடில் வாராணசி என்று எழுதுவதே வேண்டும். போப்பு + ஆண்டவர் = போப்பாண்டவர் என்றே எழுதுகின்றார்கள் (போப் + ஆண்டவர் = போபாண்டவர் என்று ஆகிவிடும்! ஆகவே இது தவறு.). போப் என்பது பிழை, போப்பு என்றுதான் எழுதவேண்டும். கால்டுவெல் என்பதுதான் சரி. கால்ட்வெல் (Caltwel?!)? அப்படியே Caltwel என்று பெயர் இருந்தால் காலுட்டுவெல் என்றோ, காட்டுவெல் என்றோ தமிழ் முறைப்படி எழுத வேண்டியிருக்கும். ஆங்கிலத்திலும், பிரான்சியத்திலும் எழுத்துக்கூட்டல் உள்ளது போலவே ஒலிப்பதும் இல்லை. ஆங்கிலத்திலே honor (honour), hour என்பதை ஆனர், அவர் என்பது போலவே ஒலிக்கின்றார்கள் (வெபுசிட்டர் அகராதி: \ˈä-nər\, \ˈau̇(-ə)r\). திரிபுகள் ஏற்படுவதற்கெல்லாம் கவலைபப்ட முடியாது. எல்லா மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான திரிபுகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. உரோமன் எழுத்திலேயே எழுதி ஒலித்தாலும் நாம் ஒலிப்பதை ஆங்கிலேயர் ஒன்றும் அப்படியே புரிந்துகொள்ளவும் மாட்டார்கள். (நீங்கள் முன்னர் கேட்டிருந்தது- இராதகிருட்டிணன் பற்றி). தஞ்சைப் பல்கலைக்கழக வாழ்வியல் களஞ்சியத்தில் 4-ஆவது தொகுதியில் பக்கம்-58 இல் "இராதாகிருட்டிணன் (சர்வ பள்ளி)" என்னும் தலைச்சொல் இட்டு கட்டுரை இட்டிருக்கின்றார்கள்- பாருங்கள். இதுதான் சரியான தமிழ் முறை, நல்ல வழிகாட்டும் கூட. இந்தி விக்கிப்பீடியா चेन्नई (சேன்னஇ) என்று எழுதுவது போல, पलनिअप्पन चिदंबरम (பலனிஅப்பந் சித³ம்ப³ரம்) என்பதுபோல, இதெல்லாம் அந்தந்த மொழிக்கு ஏற்ற முறை. அருள்கூர்ந்து எல்லா செய்திகளையும் இட்டு உரையாட வேண்டாம். சொல்லின் ஈற்றெழுத்து (கடைசி) என்பதின் விதியைப் பற்றி மட்டும் உரையாடலாம். நீங்கள் மேலே சொன்ன எதுவும் சரியாக இல்லை நீச்சல்காரன். தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய இலக்கண விதிகள் சாரியைகள், புணர்ச்சிவிதிகளை எல்லாம் இட வேண்டும் என்னும் புது ஆய்வை முன்வைக்க வேண்டாம், மேலும் நீங்கள் கூறிய ஆய்வும் தவறானது (ஆனால் இந்த ஆய்வு தவறனாதா சரியானதா என்று இங்கு அலச வேண்டாம்). நன்னூல் விதி 107 ஐப் பார்க்கவும். வேற்று மொழிச்சொல்லாயினும் கிரிக்கெட்டு, கேக்கு, கோர்ட்டு, போப்பு என்பது போல சரியான ஈற்றெழுத்துடன் எழுதவேண்டும். --செல்வா (பேச்சு) 05:27, 8 திசம்பர் 2013 (UTC)Reply
சரி ஒற்றெழுத்து வராது எனில், ஆனந்த்து, கிரிக்கெடு, போபு என எழுதாமல் ஆனந்து, கிரிக்கெட்டு, போப்பு என்பது போல குற்றியலுகரமாக அமைக்கச் சொல்லும் விதி/வழிமுறை எது எனவும் அறியத்தாருங்கள். இல்லாத பட்சத்தில் அவை சொந்த ஆய்வுகள் என கருதயிடமுள்ளதா என்றும் அன்புடன் உறுதிபடுத்துங்கள். மற்றவை பின்னர்..--நீச்சல்காரன் (பேச்சு) 01:49, 9 திசம்பர் 2013 (UTC)Reply
தமிழில் காடு, பாடு, காது என்னும் சொற்களை எப்படி ஒலிப்பீர்கள்? தமிழில் ஒரு வல்லின எழுத்து, வலித்து ஒலிக்க வேண்டும் என்றால் முன்னே வல்லின புள்ளி வைத்த எழுத்து வரவேண்டும் அல்லது சொல்லின் முதல் எழுத்தாக இருக்க வேண்டும். ஆகவே பாட்டு என்று எழுதினால் அதில் வரும் டு வலித்தும் (Tu), பாடு என்று எழுதினால் அதில் வரும் டு மெலிந்தும் ஒலிக்கும் (Du). கிரிக்கெடு என்பது kirikkeDu என்று ஒலிக்கும். கிரிக்கெட்டு என்று எழுதினால் kirikkeTTu என்று ஒலிக்கும். நீங்கள் எழுதும் கிரிக்கெடு என்பதில் கெ என்னும் எழுத்துக்கு முன் க் வருவதையும் பாருங்கள். அதனால்தான் கெ வலித்து ஒலிக்கின்றது, இல்லையென்றால் Ge என்பது போல ஒலிக்கும். போபு என்பது pObu என்று ஒலிக்கும். போப்பு என்பது pOppu என்று ஒலிக்கும். ஆனந்த்து என்று எழுதுதல் தமிழில் இயலாது ஆனால் ஆனந்து என்று எழுதலாம். இங்க்கு, கல்க்கி, பெல்ட்டு, ஆனந்த்து என்று எழுதுவதில் வரும் -ங்க்-, -ல்ட்-, -ல்க்-, ல்ட்-, -ந்த்- ஆகியவை ஒலிப்பு நோக்கி தமிழ் முறைக்கு மாறாக எழுதுவது. ஆனந்து (Anandhu) என்பதே சரியானது. முன்னே வல்லின புள்ளி வைத்த எழுத்து வந்தால்தான் ஓர் வல்லின எழுத்து வலித்து ஒலிக்கும். இன்றும் மலையாளிகளில் பலர் simply என்னும் சொல்லை simbly என்பது போல ஒலிப்பார்கள் (அதாவது பகரம் மெலிந்து ஒலிக்கும்). தமிழர்களிலும் பெரும்பாலானோரால் -mp- என்று ஒலிப்பது கடினம், -mb- என்பதே எளிது (கம்பு, செம்பு செம்பியன், கொம்பன் என்பது போல). அதாவது மெல்லின ம் வந்த பின் அடுத்து வரும் பகரம் மெலிந்தே ஒலிக்கும். பேச்சுமொழி ஆங்கிலத்திலும் let me என்பதைச் சேர்த்து ஒலிக்கும்பொழுது lemme என்பார்கள். இவ்வாறு மெய்யெழுத்துகள் இயைந்து ஒலிப்பதை (-tm- > -mm-), அப்படி (இயைந்து) ஒலிக்க வேண்டும் என்று தமிழில் விதியாக வைத்து இருக்கின்றார்கள். எப்படியாயினும் தமிழின் ஒலிப்புமுறைப்படி நாம் தமிழில் எழுதி ஒலிக்கின்றோம். --செல்வா (பேச்சு) 03:57, 9 திசம்பர் 2013 (UTC)Reply
எந்த விதியும் இங்குத் தரப்படவில்லையா? ஆக இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதியில்லை என்றும் ஒலிப்பிற்கு ஏற்ற எழுத்து பயன்படுத்தப்படுகிறது அதாவது சொந்த ஆய்வு என்று தெரிகிறது. பாரத் என்பதை இவ்வாய்வு படி பாரத்து என்று கொள்ளும் ஆனால் அனைவரும் பயன்படுத்தும் சொல் பாரதம். ஆகவே அறிவார்ந்த என்றாலும் சொந்த ஆய்வுகளுக்கான களம் விக்கிப்பீடியா இல்லை என்பதை நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள். ஆகவே மேற்கோள் இல்லாமல் "கிரிக்கெட்டு வாரியம்" என்று அடையாளப் பெயரை எழுதுவது பொருத்தமில்லைதானே? அல்லது இவ்வாய்வு சரியெனில் எனது சாரியை பரிந்துரையும் சரிதானே? மேலும் நீங்கள் சுட்டிக்காட்டிய சென்னஇ போன்ற இந்தி சொற்கள் மரபின் காரணமாக எழுதப்படவில்லை,(திமுகவில் உள்ள "கழகம்" என்ற சொல்பற்றிய உரையாடல்களை சௌபாலில் காணலாம்) பெருவழக்கின் காரணமாகவே எழுதப்பட்டுள்ளன. --நீச்சல்காரன் (பேச்சு) 06:20, 9 திசம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன், நீங்கள் வலிந்து வாதம் செய்வது போல் உணர்கின்றேன். இதில் சொந்த ஆய்வு எதுவும் இல்லை!! தொல்காப்பியத்தில் எழுத்து அதிகாரத்தில் 25-ஆவது நூற்பாவும் ("மயக்கம்"), நன்னூலில் எழுத்து அதிகாரம் 110 ஆவது நூற்பாவும் (இடைநிலை மயக்கம்) இதனை விளக்குகின்றன. இவையும் மீறி வழிவழியாய் வரும் எளிய வாழ் அறிவு ஐயா இது. காடு, ஆடு, மாடு என்பதை அறியாத தமிழரோ, காட்டு, ஆட்டு, பாட்டு போன்ற சொற்களை அறியாத தமிழர்களோ, கண்டு, ஆண்டு, மாண்டு போன்ற சொற்களை அறியாத தமிழர்களோ இருக்கமாட்டார்கள். இவற்றில் வரும் தமிழில் இடம்சார்ந்து, ஆனால் சீரொழுக்கமாக "டு" என்னும் எழுத்தின் ஒலிப்பு வருவதை அனைவரும் அறிவர். இதனாலேயே கவனமாக இருக்க வேண்டியுள்ளது. தமிழில் கிரிக்கெட்டு வாரியம் என்றுதான் எழுத முடியும். "கிரிக்கெட்" வாரியம் என்று எழுதமுடியாது, எழுதவும்கூடாது. தமிழில் ஈற்றெழுத்தாக (கடைசி எழுத்தாக) வரக்கூடியவை முன்னரே விளக்கப்பட்டுள்ளது மேலே. நான் இந்தி மொழியில் சென்னஇ என்று எழுதியதைப் பற்றிக் கூறியது, அவர்கள் மாற்றி எழுதியிருக்கின்றார்கள் என்று கூறவே. நீங்கள் மேலே குறிப்பிட்ட பட்டியலில் (சௌப்பாலில்) எங்கு உள்ளது என்று தெரியவில்லை ((151 உருப்படிகள்!) நீங்கள் கூறவந்த கருத்து. --செல்வா (பேச்சு) 19:07, 9 திசம்பர் 2013 (UTC)Reply
மேலே இருக்கும் கருத்தைத் தொடரும் முன் இரண்டு கேள்விகளுக்குச் சுருக்கமாக விடை பகரமுடியுமா? 1) தமிழ் விக்கிப்பீடியாவில் மோதி என்று எழுத வேண்டுமா மோடி என்று எழுத வேண்டுமா? (நரேந்திர மோதியின் பெயரை). 2) புது தில்லி என்று எழுத வேண்டுமா, புது டில்லி அல்லது புது டெல்லி என்று எழுத வேண்டுமா? சுருக்கமான விடை தாருங்கள். --செல்வா (பேச்சு) 20:52, 9 திசம்பர் 2013 (UTC)Reply
சொந்த ஆய்வு என்று இலக்கண முறைகளைக் கூறவில்லை, பயன்படுத்திய இடத்தைத்தான் கூறுகிறேன். இருந்தும் வலிந்துவாதம் செய்வதாக இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். தேவையில்லை என்றாலோ/சரியில்லை என்றாலோ எனது கோரிக்யைத் திரும்பிப் பெறவும் தயக்கமில்லை. அதுவரை சரியெனப்பட்டதையே கூறுகிறேன். காடு என்பது காட்டு என மாறும் முறையை அறிவேன் ஆனால் ஒற்றில் முடியும் வேற்றுமொழிச் சொற்களை இப்படித்தான் மாற்ற வேண்டும் என்று விதியில்லைதானே? குற்றியலுகரமாகவும் மாற்றலாம், மகரம் சேர்த்தும் மாற்றலாம்(உதாரணம்: பாரத்/பாரதம், யுத்/யுத்தம், சங்கீத்/சங்கீதம்), ன்/ர் கொண்டும் மாற்றலாம்(உதாரணம்:நாத்/நாதர், ஆனந்த்/ஆனந்தன்) மேலும் சில இருக்கலாம் நான் அறிந்தில. ஆகவே தான் இதுவொருவகையான ஆய்வு என்கிறேன். பிரியா ஆனந்தன் என்பதும் சரிதானே?. அடுத்தடுத்த கருத்தையும் பெரிய எழுத்தில் வையுங்கள் தீர்வு நோக்கிச் செல்லுவோம். மோடி என்பது மட்டுமே அதிகாரப்பூர்வத் தமிழ்ப்பெயர். புது டெல்லி, புது தில்லி இரண்டும் பரவலானது(Per wikipedia common term) அதனால் எதையும் பயன்படுத்தலாம். ஆனால் மோதி போல மூலமொழி ஒலிப்புநெருக்கம் என்று நஇ தில்லி என்பது விக்கித் தலைப்பிற்குப் பொருத்தமில்லை என்பதே எனது கருத்து. --நீச்சல்காரன் (பேச்சு) 01:51, 10 திசம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன், இலக்கண முறைகளைச் சொந்த ஆய்வு என்று கூறவில்லை என்று கூறியதற்கு நன்றி. பேச்சு:நரேந்திர மோதி பக்கத்தில் மறுமொழி இட்டிருக்கின்றேன், அருள்கூர்ந்து பாருங்கள். வேற்றுமொழிச்சொற்களை என்னென்ன விதிமுறைகளுக்குள் மாற்றலாம் என்று கூறியிருக்கின்றார்கள், தமிழில். அப்படியெல்லாம் விதிமுறைகள் இல்லாமலே பிறமொழியாளர்களும் பல வழிமுறைகளை வழிவழியாகப் பின்பற்றுகின்றார்கள். தமிழில் இப்படித்தான் மாற்றவேண்டும் என்று விதிமுறையில்லை ஆனால் இப்படியான விதிமுறைகளுக்குட்பட்டு மாற்ற விதி உண்டு. தமிழ்மொழியில் இருப்பது போல் விதிகள் இல்லாமலே பல மொழிகள் தங்கள் மொழியில் இயல்புக்கு மாற்றி எழுதுகின்றார்கள். பேச்சு:நரேந்திர மோதி பக்கத்தில் இன்னும் சற்று விரிவாகக் கூறியுள்ளேன். நீங்கள் கூறும் "common terms" என்னும் (பொது வழக்குப் பெயர்கள்) ஆங்கில விக்கிப்பீடியாவின் பயன்பாட்டுக்கு. தமிழ் விக்கிப்பீடியாவில் சரியான பெயரை முன்னிறுத்துவதே முறையாக இருந்து வந்துள்ளது. ஆனால் பிறழ்ந்துள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களில் வலிந்து போய் மாற்றிவிடவில்லை. நரேந்திர மோதி என்பது சரியான பெயர் ("கூடிய மட்டிலும் மூல மொழிக்கு நெருக்கமாகவும், தமிழ் முறைகளுக்கு இசைவாகவும்" அமைந்த பெயர்), ஆகவே அதனைத் தலைப்பாக வைப்பது நல்லது. நயி தில்லி என்று (நஇ தில்லி அன்று) என்று தமிழில் வழங்கலாம்தான், ஆனால் நயி என்பது ஆங்கிலத்தில் new என்று பெயர்த்திருப்பது போல், Neu ("Neu-Delhi") என்று இடாய்ச்சு மொழியில் உள்ளது போல், Nueva (Nueva Delhi) என்று எசுப்பானியத்தில் உள்ளது போல் மொழிபெயர்த்து எழுதும் ஒரு சொல், ஆகவே புதுதில்லி என்பதே சரியான சொல் (பெரும்பான்மையால் அன்று! "அதிகாரப் பூர்வமான" பெயரால் அன்று) [தினமணி நாளிதழ் புது தில்லி என்று சரியாக எழுதுகின்றது, பிற தமிழ் இதழ்கள் புதுடில்லி, புது டெல்லி என்று தவறுதலாக எழுத்கின்றன; யாரெல்லாம் சரியாக எழுதுகின்றார்களோ அது போல நாமும் சரியானதை முன்னிறுத்துவோம், சிறுபான்மையாயினும்; இவ்வுரிமை நமக்கு உண்டு.). நீங்கள், "தேவையில்லை என்றாலோ/சரியில்லை என்றாலோ எனது கோரிக்யைத் திரும்பிப் பெறவும் தயக்கமில்லை" என்கின்றீர்கள். அப்படியாயின், அருள்கூர்ந்து உங்கள் முன்மொழிவைப் திரும்பப்பெறுங்கள் என்று நான் முறையாக வேண்டிக்கொள்கின்றேன். ஆனால் இது தொடர்பாக இன்னும் விரிவாக எல்லா கேள்விகளையும் கேட்பது நல்லது என்று விரும்பினால் சொல்லுங்கள், கட்டாயம் பொறுமையாக உரையாடுவோம், புரிந்துகொள்வதற்காகவோ, அல்லது இன்னும் நல்ல முடிவுகளை எட்டமுடியும் என்பதற்காகவோ செய்யலாம். எப்படியாயினும், அறமான முறையில், தமிழின் உரிமைகளைப் போற்றி, அறிவடிப்படையில் அலசினால் நன்மை பெருகும் என நினைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 16:03, 10 திசம்பர் 2013 (UTC)Reply
[ஒரு வரலாற்றுப் பதிவுக்காக: கூகுள் தேடல் முடிவுகள் எதையும் நிறுவப் போதுமானதல்ல என்பது விக்கிப்பீடியாவில் பலரும் அறிந்திருக்கும் உண்மை. ஆனால் ஒரு பதிவுக்குறிப்பாக கூகுள் தேடுதலில் திசம்பர் 9, 2013 அன்று தேடிக்கிட்டியதைப் பகிர்கின்றேன் நரேந்திர மோதி 2,830; நரேந்திர மோடி 187,000] --செல்வா (பேச்சு) 16:21, 10 திசம்பர் 2013 (UTC)Reply
@செல்வா, வரலாற்றுப் பதிவுக்கு நன்றி, ஆகத்து 21, 2015 அன்று தேடிக்கிட்டியதைப் பகிர்கின்றேன். நரேந்திர மோதி 131,000; நரேந்திர மோடி 349,000 !!! இன்று பாரிய மாற்றம் தெரிகின்றது. :) :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 17:18, 21 ஆகத்து 2015 (UTC)Reply
விக்கிமீடியாவின் அனைத்து விக்கிப்பீடியாவிலும் நல்ல பெருவழக்கே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே தான் மொழிமரபை முன்னிருத்த வேண்டுமா அல்லது விக்கி மரபை முன்னிருத்தவேண்டுமா என்று பிற பயனரிடம் வாக்குப்பதிவைக் கோரினேன். நான் மொழி அறிஞனில்லை மற்ற விக்கிப்பீடியா போலவும், அதிகத் தமிழருக்குப் புரியவும், அதிகத் தமிழரின் கல்விப் பயன்பாட்டிற்கும், சமகாலத் தமிழ் நடையிலும் மட்டுமே தமிழ் விக்கியில் பங்களிக்க விரும்புகிறேன். ஆனால் இவை இங்கு மரபில்லை என்னும் போது தடையாக இருக்கவிரும்ப வில்லை. மொழிமரபு சார்ந்த பங்களிப்பிற்கான நேரம் தற்போதைக்கு எம்மிடமில்லை, சமரசம் செய்து கொண்டு மற்ற பங்களிப்புகள் வழங்கும் பக்குவமில்லை, எதிர்காலத்தில் அமையும் போது திரும்ப வருகிறேன். தற்போதைக்கு இக்கோரிக்கையைத் திரும்பப் பெறுகிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 17:18, 10 திசம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன், ஒரு சிறு தகவல், நானும் இது போல பல இடங்களில் உரையாடியுள்ளேன். அவற்றால் எனக்கு தமிழ் விக்கியில் பங்களிப்பதில் இருந்த ஆர்வம் குறைந்ததென்னவோ உண்மைதான். ஆனால், இது போன்ற உரையாடல்களில் நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது நம்மால் முடிந்ததை செய்யலாம் என்பது எனது முடிவு :). நீங்களும், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 17:30, 10 திசம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன், நாம் மேலே உரையாடியிருப்பவை கணிசமானவை. நாம் சமகால உரைநடைத் தமிழில்தானே உரையாடியிருக்கின்றோம்? // மொழிமரபை முன்னிருத்த வேண்டுமா அல்லது விக்கி மரபை முன்னிருத்தவேண்டுமா// என்று கேட்கின்றீர்கள் விக்கிமரபு என்பது பொதுக்கூறுகளும் மொழிக்கு மொழியான கூறுகளும் கொண்டவைதானே? அல்லவா? மொழிகள் இல்லாமல் விக்கியா, மொழிகளுக்கான விக்கியா என்றும் எண்ணிப்பார்க்கலாம்தானே! நானும் மொழி அறிஞன் அல்லன் ஐயா, ஆனால் கூடிய மட்டிலும் நல்வழிகளைப் பின்பற்ற முயல்கின்றேன். நானும் "அதிகத் தமிழருக்குப் புரியவும், அதிகத் தமிழரின் கல்விப் பயன்பாட்டிற்கும்" வேண்டும் என்பதாலேயே பங்களிக்கின்றேன். நல்ல தமிழில், சரியான தமிழில், எளிய தமிழில் எழுதுவதில் என்ன பிழை? //சமகாலத் தமிழ் நடையிலும் மட்டுமே தமிழ் விக்கியில் பங்களிக்க விரும்புகிறேன்// [அழுத்தம் இட்டுக் காட்டியிருப்பது நான்]. இதில் சிக்கல் என்னவென்றால் "எது சமகாலத் தமிழ் நடை" ? நாம் இங்கே உரையாடியது சமகால தமிழ் நடையில் இல்லையா? எந்தவொரு காலத்திலும், ஒவ்வொரு களத்திலும் ஒவ்வொரு நடை இருக்கும். கலைக்களஞ்சியம் போன்ற படைப்புகளில் வழங்கும் நடையும், புதினம் (நாவல்) புனைவு இலக்கியங்களில் வழங்கும் நடையும், பல்வேறு வகையான ஊடங்களில் வழங்கும் நடையும், தொழில்சார்ந்த படைப்புகளில் வழங்கும் நடையும் எனக் களம் தோறும் நடைகள் மாறுபடும். இது தமிழ் மொழிக்கு மட்டும் அன்று, எல்லா மொழிகளுக்கும் சிறு சிறு மாறுபாடுகளுடன் உண்டு. விக்கிப்பீடியாவின் முக்கியமான அடிப்படையான போக்குகளில் ஒன்று என்னவென்றால் பலரும் மறைத்தும் திரித்தும், எழுதியவற்றை உடைத்தெறிந்து நேர்மையான முறையை வலியுறுத்துவது. தொலைபேசிக் கருவி போன்ற மிகப்பல கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்த வரலாற்றுப் பக்கங்களையும், பிற நாடுகள், இயக்கங்கள் பற்றிய கட்டுரைகளில் உள்ள வரலாற்றுப் பகுதிகளையும் பாருங்கள். விக்கி மரபு என்று ஒன்று இருப்பதாலேயே இப்படி இங்கு நாம் உரையாட முடிகின்றது. நான் விடுதலை பெற்ற கனடாவில் வாழ்கின்றேன் என்று கூறி இடது புறமாக வண்டியை ஓட்டிச் செல்ல முடியாது. கனடாவில் வலப்புறம்தான் வண்டிகளை ஓட்டமுடியும். கனடாவில் மிதிவண்டிகளை நெடுஞ்சாலைகளில் ஓட்டிச்செல்ல முடியாது. கனடா நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் (ஆம் விடுதலை பெற்ற நாடுதான், எனக்கு விடுபாடு, சுதந்திரம் எல்லாம் உண்டு என்றாலும்). அது போல் ஒரு மொழிக்கும் உண்டு. உள்ளடக்கத்தையும் கருத்துகளைகளையும் தீட்டுவதற்கு மாறாக மொழியையே மாற்ற வேண்டும் சிதைக்க வேண்டும், எப்படிவேண்டுமானாலும் எழுதலாம் என்பது எப்படி சரியாகும். மேலும் இங்கு மிகவும் நெகிழ்ச்சியுடன்தான் இயங்கி வந்திருக்கினோம், இயங்குகின்றோம், ஆனால் தவறாகத்தான் எழுத வேண்டும் என்பதைக் கொள்கையாக எழுதுவதைத்தான் மறுத்துப்பேசுகின்றேன். --செல்வா (பேச்சு) 18:04, 10 திசம்பர் 2013 (UTC)Reply
சண்முகம், எனக்கும் மிகப்பல முறை ஆர்வம் குன்றியது உண்மைதான். ஏன் இப்படி என் பொன்னான நேரத்தைச் செலவிட வேண்டும் என்று மிகவும் வெதும்பியும் இருக்கின்றேன். திருவள்ளுவர் சொன்னது போல் ஊக்கம் உடைமை உடைமை என்று எண்ணியும், நம்மால் ஆன நல்லதைச் செய்வோமே, செய்ய முயலுவோமே என்றும்தான் தொடர்ந்து பங்களித்து வருகின்றேன். உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் என்று நானும் நீச்சல்காரனிடம் வேண்டிக்கொள்கின்றேன். வல்லினத்தில் முடியும் சொற்களுடன் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. நானோ யாருமோ போய் அனைத்தையும் மாற்றவில்லை, ஆனால் ஒருவர் எதையாவது போய் மாற்றினால் அது தவறு, அப்படி மாற்றக்கூடாது என்று கொள்கை வரைவதைத் தான் மறுக்கின்றேன். "பெருவழக்கு", "சமகால நடை" என்பதில் பல மெய்யான பொருட் சிக்கல்கள் உள்ளன. இதனைச் சாய்வின்றி கருதிப்பார்க்க வேண்டும். உண்மையிலேயே திறந்த மனத்துடன் கருத்துகளை அணுகி அலசிப்பார்ப்பதில் தவறு இல்லை. --செல்வா (பேச்சு) 18:28, 10 திசம்பர் 2013 (UTC)Reply

நீச்சல்காரனுக்கு வேண்டுகோள்

தொகு

நீச்சல்காரன், நா. பார்த்தசாரதி எழுதிய பொன் விலங்கு புதினத்தில், கதைத் தலைவன் ஒரு கல்லூரி விரிவுரையாளர். ஒரு முறை, கல்லூரி நூலகத்தில் அமர்ந்து சேக்சுப்பியர் எழுதிய நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருப்பார். அந்த வேளை பார்த்து, கல்லூரி முதல்வர் அவ்வழியாக வருவார். ஒரு விரிவுரையாளர் தனக்கு எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ஆனால், கதைத் தலைவன் அவர் வருவதை அறியாமல் நூலில் கவனமாக இருப்பார். கல்லூரி முதல்வர் சென்ற பின், பதறிப் போன நூலகர் கதைத் தலைவனிடம், "என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க, அவர் கோவிசுக்கப் போறார்" என்று சொல்வார். அதற்குக் கதைத் தலைவனோ, "மாபெரும் எழுத்தாளரான சேக்சுப்பியரின் நூலையே நான் உட்கார்ந்து தானே படித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் அவருக்கு அல்லவா, நான் கூடுதல் மரியாதை தர வேண்டும்" என்று கேட்பார். (நினைவில் இருந்து எழுதுவது. புதினத்தின் நிகழ்வு இதனை ஒட்டி இருக்கும்). நிற்க !

//இதுவரை எழுத்தப்பட்ட கட்டுரைகளை மாற்றுவது மனத்தடங்கள் வரலாம் அதனால் இனிமேல் வரும் கட்டுரையிலாவது இம்முறை அமல்படுத்த வேண்டும்.// என்று கொள்கை மாற்ற முன்மொழிவில் குறிப்பிட்டு இருந்தீர்கள். பொது வழக்கைப் பின்பற்ற வேண்டும் என்ற விக்கிப்பீடியா வழமையை மிக உறுதியாகப் பரிந்துரைக்கும் நீங்கள், மற்றவர் மனம் வருந்துவர் என்று ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மாற்றாமல் விடுவதை எந்த விக்கிப்பீடியா கொள்கை எடுத்துரைக்கிறது என்பதையும் குறிப்பிடலாமே? மற்றவர் மனம் புண்படக்கூடாது என்ற மாந்த நோக்கு விக்கிப்பீடியா கொள்கைக்கும் அப்பாற்பட்டு எழுகிறது அல்லவா? இன்று இருந்து நாளை இல்லாமல் போகும் மனிதர்களுக்கே நாம் இவ்வளவு நன்னோக்கு கருதினால், என்றும் இருக்கும் மொழிக்கு எவ்வளவு நன்னோக்கு கருத வேண்டும்? அதுவும், தமிழ் போல் தெளிவாக இலக்கணம் வகுக்கப்பட்டுள்ள மொழிக்கு? இந்த நோக்கு தான் செல்வா முதலியோரை இங்கு கருத்தாட வைக்கிறதேயன்றி, விக்கிப்பீடியா வழமையைச் சிதைத்தேனும் தன்னாட்சி நடையைப் புகுத்த வேண்டும் என்ற அணுகுமுறை இல்லை. இங்கு உரையாடிக் கொண்டு தான் இருக்கிறோமே தவிர, வலுக்கட்டாயமாக பக்கம் பக்கமாக போய் யாரும் கிரந்த எழுத்துகளைக் களைவதோ தனித்தமிழைப் புகுத்துவதோ தன்னாட்சி நடையைத் திணிப்பதோ இல்லை. புதுப்பயனர்கள் இது போன்ற உரையாடல்களால் அயர்கிறார்கள் என்பது உண்மை தான். அதற்கான வழிகாட்டலை உருவாக்க வேண்டும். மற்றபடி, 58,000+ கட்டுரைகள் உள்ள தமிழ் விக்கிப்பீடியாவில் 100 பக்கங்களில் கூட இது போன்ற மாற்றுக் கருத்து உரையாடல்கள் இருக்காது. அவையும் கூட ஏன் ஒரு முடிவை நோக்கி நகராமல் விட்டு வைக்கப்பட்டுள்ளன என்றால் இது போன்ற உரையாடல்களின் வரலாற்றையும் தொடர்ச்சியையும் பேணும் பொருட்டே. நிச்சயமாக ஒவ்வொருவரும் தங்களுக்கு இயன்றவாறு, விரும்பிய நடையில் பங்களிக்க தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் உண்டு.

சென்ற முறை இது போன்ற ஒரு உரையாடலில் தான் விலகிச் செல்வதாக அறிவித்தீர்கள். மற்றவர்களைப் போல் பொத்தாம் பொதுவாக விலகுவதாகச் சொல்லி எதிர் பரப்புரையில் ஈடுபடாமல் தெளிவாக அறிவித்து அமைதியாக இருந்தீர்கள். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுக் கூடலை முன்னிட்டு நீங்கள் மீண்டும் வந்து இணைந்து, தங்களால் இயன்ற நுட்பப் பங்களிப்புகள், பரப்புரை ஆகியவற்றில் விரும்பி ஈடுபட்டது நல்லதொரு முன்மாதிரி. அதாவது, சில விசயங்களில் மாறுபட்ட கருத்து கொண்ட போதும், பெருநோக்கில் இணைந்து செயல்பட முடியும் என்று காட்டினீர்கள். இதை விட என்ன பக்குவம் வேண்டும்? தங்களின் நுட்பப் பங்களிப்புகள் இன்னும் பலருக்கு உந்துதலாக இருந்தது. பல வழமையான பணிகளை விரைவாகச் செய்ய உதவியது. தங்களைப் போன்றோர் தொடர்ந்து பங்களிப்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வளம் ஊட்டும். மற்ற பல நல்ல பங்களிப்பாளர்களை உருவாக்கும். நீங்கள் கேட்ட சில கேள்விகளையே கூட நான் வேறுவிதமாக தற்போது எழுப்பியுள்ளேன். உரையாடல் தொடர்ந்து நல்லதொரு இணக்க முடிவை எட்டுவோம் என்று எதிர்பார்க்கிறேன். எனவே, இதன் பொருட்டு விக்கிப்பீடியாவில் இருந்து விலகும் என்ற முடிவைக் கைவிட வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 18:45, 13 திசம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம் --செல்வா (பேச்சு) 18:39, 19 திசம்பர் 2013 (UTC)Reply
விக்கிப்பீடியாவில் இருந்து விலகுவதாகப் பொருள் அளித்தால் மன்னிக்கவும். எனது எழுத்துப் பங்களிப்பையை அளிக்க மொழிவழக்கு தடையாக இருப்பதால் தமிழ் மொழியில் உள்ள விக்கிப்பீடியாவில் மட்டும் அதை நிறுத்தியுள்ளேன். என்னால் முடிந்த மற்ற பங்களிப்புகளுக்கு என்னளவில் எந்தத்தடையுமில்லை. தனியொருவர் பற்றி மேலும் விவாதிக்க விருப்பமில்லை. காலம் பல விசயங்களைக் கற்பிக்கும், எனது முடிவு தவறு என அறிந்தால் மீண்டும் பங்களிக்க வருவேன்--நீச்சல்காரன் (பேச்சு) 03:53, 20 திசம்பர் 2013 (UTC)Reply
ம்ம்.. சரி நீச்சல்காரன், உங்கள் நிலைப்பாட்டை மதிக்கிறேன். எழுத்துப் பங்களிப்பைத் தருவது தான் பிரச்சினை என்றால் தொடர்ந்து நுட்பப் பங்களிப்புகளைத் தர வேண்டுகிறேன். தமிழ் விக்கிமீடியாவின் பிற திட்டங்களான விக்சனரி, விக்கிமூலம் போன்ற இடங்களில் மொழி நடை பிரச்சினை இல்லை என்பதால், அங்கு முழுமையான பங்களிப்பைத் தர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:42, 20 திசம்பர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன், உங்கள் நேர்மையான கருத்தை மனதில் கொண்டு மொழிப்பயன்பாடு தொடர்பில் பல தரமான தகவல்களை மொழியியலாளர்கள் கூற்றுகளில் இருந்து சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அதனாலும் விக்கி விடுப்பினாலும் என்னால் நான் நினைத்த மாதிரி நீங்கள் ஏற்குமளவுக்கு இருக்கும் கருத்துக்களை இதுவரை பதிய முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். நீங்கள் இப்போதைக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து ஒரு விடுப்பு வேண்டுமானால் கொள்ளுங்கள். நானும் எனது எதிர்வரும் 3-4 வார விடுப்பிற்குப்பின்னர் நீங்கள் ஏற்கும் வண்ணம் எனது கருத்துக்களை பதிவேன். அதன்பின் ஒருமுறையாவது அதைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். அவசரப்பட்டு விலகுவதாக முடிவெடுக்க வேண்டாம். -- சுந்தர் \பேச்சு 16:17, 20 திசம்பர் 2013 (UTC)Reply

கிரந்த எழுத்துக்கள்

தொகு

வாழும் நபர்கள், வணிக நிறுவனங்கள், இடங்கள் போன்ற பெயர்கள் பிறமொழியில் இருந்தால் அவற்றைக் குறிக்கக் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதே சரியான மரபு. நம் மொழியில் இல்லாத ஒரு உச்சரிப்பைக் குறிப்பிட கிரந்தம் உதவுகிறது. அது பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அறிமுகமாகிவிட்டது. தற்போதும் பரவலாக நடைமுறையில் உள்ளது. பழந்தமிழர்களுக்குப் பிறமொழி எழுத்துக்களின் தேவை ஏற்படவில்லை. ஆனால் காலப்போக்கில் பிறமொழிப் பெயர்களைக் குறிக்க எழுத்துக்கள் தேவைப்பட்டன. எனவே கிரந்த எழுத்துக்களைத் தமிழ் ஏற்றுக்கொண்டது. காலத்திற்கேற்பத் தகவமைத்துக் கொள்வதுதானே இயற்கையின் நியதி? இதை பிற இனத்தவரின் திணிப்பு என்கின்றனர். பழந்தமிழர் எந்தவொரு மதத்தையும் பின்பற்றவில்லை. பிறர் திணித்த மதங்களை ஏற்றுக்கொண்டனர். அதுபோல் கிரந்தத்தையும் ஏற்றுக்கொள்வதுதானே நியாயம்?

இங்கிலாந்தின் சரியான உச்சரிப்பு இங்லண்ட். ஆனால் தமிழர் தங்கள் மொழிநடைக்கேற்ப இங்கிலாந்து என்று அமைத்துக்கொண்டனர். அது அவர்களுக்குப் பழகிவிட்டது. ஆனால் ஆஸ்திரேலியா, குஜராத், ராஜஸ்தான் போன்ற பெயர்களைக் கிரந்த எழுத்துக்களைக் கொண்டே குறிப்பிட்டு வருகின்றனர். பழங்காலத்தில் யாராவது ஆத்திரேலியா, குசராத்து, இராசத்தான் என்று வழங்கி வந்தார்களா? எனவே கிரந்த எழுத்துக்கள் தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டன. கிரந்த எழுத்துக்களை நீக்குவது உலகத் தொடர்பைத் துண்டித்துவிட்டு தமிழ்நாடு தனித்து இயங்கினால் மட்டுமே சாத்தியம். எனவே கண்மூடித்தனமாக கிரந்தத்தை எதிர்க்காமல் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது பிறமொழிச் சொற்கள் மட்டுமே. பேச்சுவழக்கில் அவற்றைத் தவிர்ப்பது கடினம். ஆனால் எழுத்துவடிவில் இன்றும் தூயத்தமிழ் வாழ்ந்து வருகிறது. கிரந்தத்தால் தமிழுக்கு பாதிப்பில்லை. ஏனென்றால் தமிழில் இல்லாத பிறமொழிப் பெயர்களைக் குறிக்க மட்டுமே கிரந்தம் பயன்படுகிறது. GangadharGan26 (பேச்சு) 01:42, 24 செப்டம்பர் 2019 (UTC)

இது பற்றி பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவிட்டன. முடிவிலியான உரையாடல்களில் தற்போதைக்கு யாருக்கும் ஆர்வம் இல்லை. நன்றி. --AntanO (பேச்சு) 01:53, 24 செப்டம்பர் 2019 (UTC)
யாருக்கும் ஆர்வம் இல்லை என்று தங்களுக்கு எவ்வாறு தெரியும்? தாங்கள் அனைவருக்கும் பிரதிநிதியா? இங்கு பல்வேறு பயனர்கள் வந்து பார்க்கும்போது தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பர். அதுவரை சற்றுப் பொறுமையாக இருங்கள். தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. GangadharGan26 (பேச்சு) 02:18, 24 செப்டம்பர் 2019 (UTC)

நல்லது, காத்திருங்கள். ஆனால் விக்கிவிதிக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் தடைசெய்யப்படலாம். நன்றி --AntanO (பேச்சு) 02:21, 24 செப்டம்பர் 2019 (UTC)

ஆமாம். இது பற்றி பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவிட்டன. இதில் காலவிரயம் செய்யாமல் ஆக்கப்பூர்வமாக அவரவர் இயன்றதை செய்து வருகின்றனர். உள்ளதை மாற்ற மட்டும் முனையாமல் மாற்றுக் கருத்துக்களை அப்பக்கங்களின் பேச்சுப்பக்கத்தில் இட்டுவிட்டு புதிய கட்டுரைகளையும் எழுதுங்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 07:33, 24 செப்டம்பர் 2019 (UTC)

இசுலாம் பெயரில் - எனும் குறியிடல் தொடர்பாக

தொகு

இசுலாமியப் பெயர்களில் - எனும் குறியிடல் இடம்பெற வேண்டும் எனும் விதியினையும் சேர்க்க வேண்டுகிறேன். இது தொடர்பாக இங்கு நடந்த உரையாடல்களைக் காணலாம். நன்றி ஸ்ரீ (✉) 15:27, 28 அக்டோபர் 2020 (UTC)Reply

வழிகாட்டலை விரிவாக்க வேண்டிய தேவை

தொகு

அண்மையில் விக்கியிலில்லாத நபர்கள் விக்கிப்பீடியாவின் தலைப்புக்களைப் பார்த்து அதில் கிரந்தம் தவிர்ப்பதையும் அவ்வாறு தவிர்ப்பதில் சீர்மை இல்லாமையையும் சுட்டிக்காட்டி வருகிறார்கள். இதுதொடர்பான வழிகாட்டலை நன்கு விரிவாக்க வேண்டிய தேவையுள்ளது. விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு வழிகாட்டலையும் விரித்து எழுதவேண்டும். @Neechalkaran, Ravidreams, and செல்வா: கிரந்தம் தவிர்த்து எழுத விரும்புபவர்களுக்கு சீராக மாற்றித்தருவதற்கான கருவியொன்றையும் கொண்டுவந்தால் நல்லது. காட்டாக வீரமாமுனிவர் கட்டுரையில் Constantine Beschi என்பதில் சகர ஒற்றை மெல்லொலிக்குப் பிழையாகப் பயன்படுத்தியிருந்தோம். ஸகரத்தைத் தவிர்க்க விரும்புவோர் சீராக தமிழ் ஒலிப்புமுறைக்கேற்ப ஒலிபெயர்ப்பதற்கான கருவியொன்றை உருவாக்கினால் நன்று. -- சுந்தர் \பேச்சு 14:20, 5 மே 2022 (UTC)Reply

மேலே உள்ள பேச்சுப் பக்கத்தைப் பார்த்தால், 2013க்குப் பிறகு தீவிரமான முரண்கள், உரையாடல்கள் ஏதும் எழவில்லை. இந்த மொழிநடைச் சிக்கல் தொடர்பாக தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு நிலைத்தன்மை வந்திருப்பதாகவே உணர்கிறேன். கிரந்த எழுத்துகள் கலந்து பல கட்டுரைத் தலைப்புகள் உள்ளன. அதே போல் தனித்தமிழில் எழுத விரும்புகிறவர்களையும் யாரும் தடுப்படுதில்லை. இந்த நிலையே போதுமானதாகவும் தொடர வேண்டிய ஒன்றாகவும் கருதுகிறேன். இதுவும் ஒரு வகையில் மக்களாட்சிச் செயற்பாடு போல் இரு நடைகளைப் பின்பற்றுபவரும் ஒருங்கிணைந்து செயற்படக் கற்றுக் கொண்டதாகவே காண்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விமர்சனங்களைத் தோண்டி எடுத்துச் சமூக ஊடகங்களில் உரையாடுகிறவர்களுக்காக நாம் தடாலடி மாற்றம் ஏதும் செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. அவர்கள் உள்நோக்கம்+காழ்ப்பு+பொய்+விசமம் கூடிய பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ம.கோ.இராமச்சந்திரன் என்று எழுதினால் கூட அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. MGR என்று தான் எழுத வேண்டும் என்கிறார்கள். ஏற்கனவே சோவியத் ஒன்றியம் என்று ஏன் எழுதுகிறீர்கள், அது என்ன ஊராட்சி ஒன்றியமா என்று கேட்ட நகைச்சுவை எல்லாம் நடந்தது. இந்த விமர்சனத்திற்கு ஒரு முடிவே கிடையாது. நாம் வளர்முகமான விமர்சனங்களைக் கவனித்து ஏற்றுக் கொண்டு நம் வழமையான பணிகளைத் தொடர வேண்டும் என்று கருதுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:23, 5 மே 2022 (UTC)Reply
ஆம், இரவி. நானும் நமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டுமென நினைக்கவில்லை. தெளிவாக விளக்கி வைத்தால் போதுமென நினைக்கிறேன். விமர்சனம் வரும்போது அதைக்காட்ட முடியும். மற்றபடி, கிரந்தம் பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தலாம். தனித்தமிழில் எழுதும்போது சீரான ஒலிபெயர்ப்பைக் கொண்டுவரலாமே என்ற எனது முன்மொழிவு இந்த விமர்சனத்துக்காகவன்று. Constantine Beschi என்பதை கிரந்தம் தவிர்த்து எழுத வேண்டுமானால் எப்படி எழுதலாமென்ற வழிகாட்டலும் துணைக்கருவியும் இருந்தால் நன்றாக இருக்கும். கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்று இருந்தது. இங்கே சகர ஒற்று மெலிந்து ஒலிக்காது. கான்சிட்டண்டைன் பெசுக்கி என்றிருந்தால் சரியாகவிருக்கும். இதைத் தெளிவுபடுத்தலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:20, 6 மே 2022 (UTC)Reply
இப்போதுதான் விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு வழிகாட்டலில் பின்வரும் விளக்கம் ஏற்கனவே உள்ளதைப் பார்க்கிறேன்.
நன்று. சுந்தர் \பேச்சு 05:22, 6 மே 2022 (UTC)Reply
இரு ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள், செல்வா, ராஜம் போன்றவர்களுடன் தனித்தமிழ் என்ற உரையாடலில் உருவாக்கிய கிரந்தம் நீக்கி உள்ளது அதிலேயே விதிகளும் உள்ளன. அதைப் பயன்படுத்தலாம். விடுபட்ட விதிகளை உதாரணங்களோடு சேர்க்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 07:04, 6 மே 2022 (UTC)Reply
அருமை, நீச்சல்காரன்! மறந்தே போய்விட்டேன். இதையொட்டி பிறமொழிப்பெயர்களின் ஆங்கில எழுத்துக்கூட்டலிலிருந்தும் தமிழெழுத்துக்கு மாற்றமாறு செய்தால் Constantine Bechi போன்ற பெயர்களும் சீர்தரம் பெறும். -- சுந்தர் \பேச்சு 07:49, 6 மே 2022 (UTC)Reply
விக்கிப்பீடியா குறித்த விமர்சனங்கள் அனைத்தையும் உள்நோக்கம் கொண்டவையாகக் கடந்துவிடமுடியாது. இந்தப் பெயரிடல் மரபில் முன்பிருந்த இறுக்கம் இப்போது இல்லை, விக்கிக்கென்று தனிநடைவேண்டுமென்ற கோரிக்கையும் வலுயிழந்துவிட்டதால் இதைக் கடந்துவிடலாம். நாம் மறு ஆய்வு செய்ய வேண்டிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கமை. வாழும் நபர்கள் குறித்த கட்டுரைகளில் மேற்கோள்கள் இல்லை என்ற காரணத்தால் பல படைப்பாளிகள் குறித்த கட்டுரைகள் இடம்பெறவில்லை. விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர் பக்கத்தை மொழிபெயர்த்து, அங்கே கலந்துரையாட வேண்டும் என நினைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:01, 7 மே 2022 (UTC)Reply
ஆம்! இலக்கியம் தொடர்பான செய்திகள் நமது செய்தி ஊடகங்களில் இடம்பெறுவது அரிதாக உள்ளது. இலக்கிய அமைப்புகளில் வழங்கப்படும் விருதுகள் தொடர்பான செய்திகள், நூல் வெளியீடுகள், ஏன் அரசு இலக்கிய விழாக்கள் கூட அரிதாகவே வெளியிடப்படுகின்றன. எனவேதான் சான்றுகள் கிடைக்கவில்லை, குறிப்பிடத்தக்கமை இல்லை என்ற காரணத்தால் நன்கறிந்த பல படைப்பாளிகளை நாம் கட்டுரையாக்க இயலவில்லை. நாம் சற்று நெகிழ்ந்து கொடுக்க வேண்டி உள்ளது.--கி.மூர்த்தி (பேச்சு) 05:14, 7 மே 2022 (UTC)Reply

கட்டாயம் விரிவாக்கவேண்டும்.. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தத்தின் பயன்பாடுபற்றி தெளிவான பரிந்துரைகள் உள்ளன என்றே நினைக்கின்றேன். அதிக இறுக்கம் இல்லாவிட்டாலும். எல்லா இடங்களிலும் சீராக விலக்காவிட்டாலும் கூடிய மட்டிலும் கிரந்தம் தவிர்த்து எழுதுதல் என்பதையே கடைப்பிடித்து வருகின்றோம் பெயர்களில் முன்னெழுத்துகள் தமிழில் இருக்க வேண்டுவது பற்றித் தமிழ்நாட்டரசு அறிக்கை வழங்கியுள்ளது. இதைப்பற்றி மேலும் பேசலாம். --செல்வா (பேச்சு) 18:11, 8 மே 2022 (UTC)Reply

நிறுவனங்களின் பெயர்கள்

தொகு

வணக்கம், நிறுவனங்களின் (பொதுத் துறை, தனியார்) பெயர்களுக்கான வழிகாட்டல் முதன்மைப் பக்கத்தில் இல்லை என்பதால் சேர்க்க வேண்டும் எனக் கருதுகிறேன். ஆங்கில விக்கிப்பீடியாவின் இந்தப் பக்கம் உதவியாக இருக்கும். அனைவரது கருத்துக்களைப் பொறுத்து முடிவெடுக்கலாம்.

பொருள்மயக்கம்

தொகு

கட்டுரைத் தலைப்புகளில் பொருள்மயக்கம் வரும் இடங்களில் காற்புள்ளி, அடைப்புக்குறி ஆகியவை பயன்படுத்துவது குறித்தும் கொள்கைகளை வகுத்தல் வேண்டும். உதாரணத்திற்கு பாரைப்பட்டி (சிவகாசி) அல்லது பாரைப்பட்டி,சிவகாசி. இதில் எந்த முறையினைப் பயன்படுத்துவது? (# < > [ ] | { } _ ஆகியவற்றினை தொழிநுட்பச் சிக்கல்களால் பயன்படுத்தவியலாது.) நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 15:28, 20 மே 2023 (UTC)Reply

Return to the project page "பெயரிடல் மரபு".