பேச்சு:நரேந்திர மோதி

Add topic
Active discussions

பெயர் மாற்றம்தொகு

மோதி/மோடி இரண்டும் வழக்கில் உள்ளன, ஆனால் மோடி மட்டுமே அதிகார இணையதளங்களிலும், பெருவழக்காகவும் உள்ளன. "விடு தோறும் மோடி ௨ள்ளம் தோறும் தாமரை" என்று அடையாளப் பெயராகவும் முன்னிறுத்தப்படுகிறது. பழனி என்பவர் தன் பெயரை ஆங்கிலத்தில் palani அல்லது pazhani என்பதற்கு உரிமை உள்ளது. இராசாத்தி[rajathi] என்பவரின் பெயரை ஆங்கிலத்தில் erasathi என்று அதிகாரப்பெயரல்லாமல் எழுதமுடியாது அதுபோலத் தான் மோடி என்பதே பொருத்தம். மேலும் தேடுதளங்களில் "மோடி" என்பதற்கு மட்டும் விக்கிப்பீடியா இணைப்பு வருகிறது, இதர உருபுகள் சேரும் போது விக்கிப்பீடியா முடிவுகள் வருவதில்லை. எனவே நரேந்திர மோடி என மாற்றப் பரிந்துரைக்கிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 17:26, 7 திசம்பர் 2013 (UTC)

"அதிகாரபூர்வ" என்று கூறுகின்றீர்கள், நீச்சல்காரன் நன்று, அதுபோல் தமிழ் மொழிக்கும் "அதிகாரபூர்வ" முறைகள் உண்டு. எல்லோரும், வணிக நிறுவனங்கள் முதல் தனியார்கள் வரை, எங்கள் மொழி மீது ஆதிக்கம் செலுத்தி எங்கள் மொழியைச் சிதைக்க எந்த அதிகாரமும் கிடையாது. பிறமொழிப்பெயர்களை எப்படி எழுத வேண்டும் என்றும் தமிழில் விதிகள் உள்ளன. அருள்கூர்ந்து கெடுவழிக்கு இட்டுச் செல்லாதீர்கள்! கூடியமட்டிலும் மூல மொழிக்கு நெருக்கமான ஒலிப்பாகவும் தமிழ் மொழியின் முறைகளுக்கும் இயல்புகளுக்கும் ஏற்ப வழங்குதல் நன்முறை. புறப்பெயர் (exonym) என்னும் வழக்கு எல்லா மொழிகளிலும் உண்டு. தமிழில் இராசாத்தி என்பதே முறை. Heraclitus என்பாரின் பெயரை இத்தாலியர் Eraclito என்றும், Heracles என்னும் பெயரை இத்தாலியர் Eracle என்றும். இப்படி பல மொழிகள் பல எடுத்துக்காட்டுகள் காட்டலாம். ஏன் London என்னும் ஊரின் பெயரை, உரோமன் எழுத்துகளிலேயே எழுதும் பிரான்சிய, எசுப்பானிய, போர்த்துக்கீசிய மொழியாளர், Londres என்றும், ஐசுலாந்தியர் Lundúnir என்றும், பின்லாந்தியர் Lontoo என்றும் வழங்குகின்றார்கள்? ஒவ்வொருமொழியிலும் முன்னொட்டு, பின்னொட்டு, சொல்லிடையே வரும் மெய்யெழுத்துக்கூட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு ஒழுகலாறுகள் (ஒழுக்க முறைகள்), இயல்புசார் முறைகள் இருக்கும். இது அந்தந்த மொழிகளின் உரிமை. ஆங்கிலத்திலும் பல நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் கூறமுடியும், தமிழ்ப்பெயர்கள் மட்டும் அல்ல, உரோமன் எழுத்தில் எழுதும் மொழிகளில் இருந்தே அவர்கள் மாற்றி எழுதுவதற்கு. Bayern என்பதைப் Bavaria என்று யாரைக் கேட்டு மாற்றினார்களாம்? இப்படிப் பலநூறு எடுத்துக்காட்டுகள் ஆங்கிலத்தில் உண்டு. |ஆங்கிலத்தில் புறப்பெயர் வழக்கம் என்னும் பக்கத்தை அருள்கூர்ந்து பாருங்கள். --செல்வா (பேச்சு) 15:13, 10 திசம்பர் 2013 (UTC)
//தமிழ் மொழிக்கும் "அதிகாரபூர்வ" முறைகள் உண்டு//   விருப்பம் --Anton·٠•●♥Talk♥●•٠· 15:24, 10 திசம்பர் 2013 (UTC)
செல்வா ஐயா, மொழியின் மரபை விட விக்கியின் மரபே(common term) இங்கு வேண்டும். இருந்தும் மூலமொழி ஒலிப்பில் தான் எழுதவேண்டும் என்று தமிழ் மொழியின் அதிகாரபூர்வ விதி எங்குள்ளது என அறியத்தந்தால் எனது நிலை மாறக்கூடும்.--நீச்சல்காரன் (பேச்சு) 16:53, 10 திசம்பர் 2013 (UTC)
புதிய தலைமுறைச் செய்திகளில் மோதி என்றே அழைக்கின்றார்கள். கூகுள் தேடுபொறியில் நரேந்திர மோடி என்று தேடினாலும் இக்கட்டுரை முதற்கட்டுரையாக வருகிறது. இவ்விரு காரணிகளும் முடிவெடுக்கும் பொழுது உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:16, 10 திசம்பர் 2013 (UTC)

நீச்சல்காரன், நீங்கள் கூறும் "common terms" என்னும் (பொது வழக்குப் பெயர்கள்) ஆங்கில விக்கிப்பீடியாவின் பயன்பாட்டுக்கு. தமிழ் விக்கிப்பீடியாவில் சரியான பெயர் தெரிந்தால், அதனை அதிகத் திரிபில்லாமல் தமிழில் எழுத முடிந்தால் அந்தப் பெயரை முன்னிறுத்துவதே முறையாக இருந்து வந்துள்ளது. ஆனால் பிறழ்ந்துள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களில் வலிந்து போய் மாற்றிவிடவில்லை. நரேந்திர மோதி என்பது சரியான பெயர் ("கூடிய மட்டிலும் மூல மொழிக்கு நெருக்கமாகவும், தமிழ் முறைகளுக்கு இசைவாகவும்" அமைந்த பெயர்). மொழிக்கு மொழி சிலவற்றை அணுகும் முறைகளில் மாறுபாடுகள் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்வீர்கள்தானே? நீங்கள் ".. மூலமொழி ஒலிப்பில் தான் எழுதவேண்டும் என்று தமிழ் மொழியின் அதிகாரபூர்வ விதி எங்குள்ளது என அறியத்தந்தால் எனது நிலை மாறக்கூடும்." என்று கேட்கின்றீர்கள். நல்லது, உங்களைப் போலவே நானும் ஒரு கேள்வி கேட்கின்றேன் (உங்கள் கேள்விக்கு விடையையும் பகிர்கின்றேன் அடுத்து), "மூல மொழி ஒலிப்பில் தமிழ் மொழியில் எழுத முடிந்தால் அப்படி தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியில் எழுதக்கூடாது என்று எங்கேயாவது "அதிகாரபூர்வ" விதி இருக்கின்றதா?" இப்பொழுது உங்கள் கேள்விக்கு என் கருத்து: தமிழில் மோடி என்று எழுதுவதில் சிக்கல் இல்லை ("கிரிக்கெட்" என்பதில் உள்ளது போன்ற மொழிச்சிக்கல் இல்லை), ஆனால் அவர் பெயர் மோதி!! (மோடி அன்று!! தமிழில் மோதி என்பதும் மோடி என்பதும் வெவ்வேறு விதமாக ஒலிக்கும்). இங்கே நான் மறுத்துக் கூறுவது "அதிகாரபூர்வம்" என்னும் கருத்தை. சரியாக நம் மொழியில் ஒன்றை நாம் ஆள நமக்கு முழு உரிமை உண்டு; ஆளக்கூடாது என்று சொல்ல இந்த "அதிகாரபூர்வம்" என்னும் கருத்து வருவதைத்தான் எதிர்க்கின்றேன். கட்டுரையில் முதலிரு வரிகளுக்குள் "மோடி" என்றும் இவர் பெயர் குறிப்பிடப்படுகின்றது என்று கூறுவதில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. --செல்வா (பேச்சு) 22:53, 10 திசம்பர் 2013 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியாவிலுமே, மேலே குறிப்பிட்ட (பொது வழக்குப் பெயர்கள்) என்னும் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கான கொள்கைப்பக்கத்திலே "These should be seen as goals, not as rules." என்று கூறியிருப்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். --செல்வா (பேச்சு) 23:08, 10 திசம்பர் 2013 (UTC)
செகதீசுவரன் சொல்வது உண்மை. வியப்பாகவும் இருக்கின்றது. கட்டுரையின் உள்ளே கூட மோடி என்று குறிப்பிடாமலேயே, கூகுள் தேடலில் நரேந்திர மோடி என்று தேடினால் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக வருகின்றது!! முதலாவதாக வருகின்றது!! நாம் நரேந்திர மோடி என்றும் இவர் குறிப்பிடப்படுகின்றார் என்று கட்டுரையின் உள்ளே குறிப்பதில் தவறு இல்லை. நன்றி செகதீசுவரன்! --செல்வா (பேச்சு) 23:15, 10 திசம்பர் 2013 (UTC)

வடநகர்தொகு

மோதி பிறந்த ஊரின் பெயர் "வாட்நகர்" என்று கொடுக்கப்பட்டுள்ளது, அது வாட்நகர் இல்லை, "வடநகர்". தயவு செய்து திருத்திக்கொள்ளவும். நன்றி. Karyakarta (பேச்சு) 06:21, 2 மார்ச் 2018 (UTC)

ஆட்சி முறைதொகு

@Gowtham Sampath: ஆட்சி முறை எனும் தலைப்பின்கீழ் இருந்த தகவல்கள் நீக்கப்பட்டதன் காரணத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:56, 27 திசம்பர் 2018 (UTC)

@Selvasivagurunathan m:
  • அமைச்சர்கள் அனைவரும் முதல் 100 நாட்களுக்குரிய தமது திட்ட அட்டவணையை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து அமைச்சர்களையும், அமைச்சகத்தின் செயலர்களையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.// இந்த வரி அவர் பிரதமராக பதவியேற்கும் போது எழுதப்பட்டது. (அனைத்து அமைச்சர்களையும், அமைச்சகத்தின் செயலர்களையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்) அவர் சந்தித்தாரா இல்லையா என்பது கூட நமக்கு தெரியாது. இது காலாவதியானதாக நீக்கினேன்.
  • தனது வாழ்க்கைக் கதையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்//இந்த வரிக்கும் ஆட்சி முறைக்கும் என்ன தொடர்பு என்று எனக்கு புரியவில்லை. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:38, 27 திசம்பர் 2018 (UTC)

1. ஒரு வாழும் ஆளுமை குறித்து அவ்வப்போது இற்றை செய்வது வழக்கம். உரிய மேற்கோளுடன் எழுதப்பட்ட ஒரு தகவலை எந்த விதிமுறையின் கீழ் நீக்குகிறீர்கள்? அவர் சந்தித்தாரா என்பது நமக்குத் தெரியாது என்பதற்காக அது காலாவதியா? என்பதனை கருத்தில் கொள்ளுங்கள்.

2. ஒரு பிரதமராக ஆட்சி செய்யும்போது எடுக்கப்படும் கொள்கைகள் ஆட்சி முறைதானே? உங்களுக்குப் புரியவில்லை என்பதற்காக நீக்குவது நியாயமா? புரியவில்லை எனில் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உரையாடுங்கள். உரிய மேற்கோளுடன் எழுதப்பட்டுள்ள தகவல்களை நீக்குவது நியாயமற்றது. எழுதுவது கடினமானது; நீக்குவது எளிது. —- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:56, 27 திசம்பர் 2018 (UTC)

நன்றி, நான் செய்த நீக்கத்தை மீண்டும் கட்டுரையில் இணைத்துள்ளேன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:11, 27 திசம்பர் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நரேந்திர_மோதி&oldid=3515266" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நரேந்திர மோதி" page.