பேச்சு:வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்

சீரிய முயற்சி. சொற்களை ஆளும் இடம் விக்சனரி. எனவே, இதுபோன்ற கட்டுரைகளை இங்கு எழுதலாமா? என்று ஐயுறுகிறேன். விக்சனரியில் புறமொழிச்சொற்கள் என்ற ஒரு பகுப்புள்ளது. அதில் எடுத்துக்காட்டாக சன்னல் என்பதனைக் காணவும்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

தனித் தனிச் சொல்லாக அல்லாமல், பட்டியலாக இருப்பதால் இங்கு இருக்கலாம் என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:31, 20 திசம்பர் 2011 (UTC)Reply
பட்டியலாக அமையலாம். (எனினும் விக்சனரியில் தனித்தனியாகச் சேர்த்தால் கூடுதல் பலம்). முன்னர் ஆங்கிலத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள் என்ற ஒரு பட்டியலும் உள்ளதென நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:11, 21 திசம்பர் 2011 (UTC)Reply
தொகுக்கும் விக்கிப்பீடியர்களுக்கு இச்சொற்கள் விக்சனரியில் இடம் பெற்றால் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு ஐயமெழும் போதெல்லால் விக்சனரியையே நாடுகிறேன். விக்கிப்பீடியாவிற்குள் இந்தப் பக்கத்தை அடைவதும் நினைவில் நிறுத்திக் கொள்வதும் சற்றுக் கடினமே.--மணியன் 05:05, 21 திசம்பர் 2011 (UTC)Reply

இவை போன்ற கலைச்சொல் தொகுப்புகள் இருந்ததனால் நானும் முயற்சித்தேன். இது தமிழ்ச் சொற்கள் போலவே நாம் பயன் படுத்தும் வட மொழிச்சொற்கள். சிலருக்கு இவை வடமொழி என்று கூட தெரியாதிருக்கும். எனவே அவற்றைப் பட்டியல் அமைப்பில் அதனைத் தர முயற்சித்தேன். இப்பட்டியலில் உள்ள சில சொற்கள் முன்னமே விக்சனரியில் இருக்கக் கூடும். இச்சொற்களை நான் அல்லது யாராவது விக்சனரியிலும் ஏற்றுவோம். --Parvathisri 11:57, 21 திசம்பர் 2011 (UTC)Reply

தலைப்பு மாற்றக் கோரிக்கை

தொகு

தலைப்பினை, தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் என்று மாற்றலாமா? அதுவே பொருத்தமானது என்று கருதுகிறேன். அனைவரது கருத்துகளும் தேவை. --சூர்யபிரகாசு உரையாடுக... 14:24, 21 திசம்பர் 2011 (UTC)Reply

ஆம் பொருத்தமான தலைப்பு சூர்யா. அவ்வாறே மாற்றி விடுங்கள்.   விருப்பம்--Parvathisri 16:20, 21 திசம்பர் 2011 (UTC)Reply
  விருப்பம்'தமிழிலுள்ள வடமொழிகளுக்கான, தமிழ்ச் சொற்கள்' என்பது போல தலைப்பை இன்னும் எளிமை படுத்தலாமா?
தேவநேயப் பாவாணர் திருக்குறளில் இருக்கும் வடமொழிச்சொற்கள்11 என்று விளக்கியுள்ளார். (எ.கா) அகரமுதல..பகவன்(கடவுள்)அவற்றிணையும் நாம் இணைத்தால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
நண்பர் தகவலுழவன், திருக்குறளை தவறாகவே பொருள் படைத்து உள்ளோம்.அது பகவன் மட்டும் அல்ல, ஆதிபகவன் என்பதே முழுக் சொல். தங்களின் பக்கத்தில் சற்று விவராமாக கூறி உள்ளேன். அன்புடன், -Pitchaimuthu2050 18:07, 12 பெப்ரவரி 2012 (UTC)
  விருப்பம்'வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்' என்பது இலகுவாகவுள்ளது. தமிழிலுள்ள வடமொழிகளுக்கான, தமிழ்ச் சொற்கள் என்பதற்கு வழிமாற்றுக் கொடுக்கலாம். --Anton 07:02, 23 சனவரி 2012 (UTC)Reply

பயனர் சூர்யா சொல்ல வருவது, இங்கே நாம் எல்லா வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்களையும் தரப்போவதில்லை. தமிழில் வழங்கி வரும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களையே தர உள்ளோம் என்றே நினைக்கிறேன். எனவே வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் என்ற தலைப்பு அவ்வளவு பொருத்தமானது அன்று--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:31, 23 சனவரி 2012 (UTC)Reply

தமிழில் தமிழ்ச் சொல் தான் வழங்கும் :) தமிழில் வழங்கும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் என்றால் முரணாகத் தோன்றுகிறதா? இதே போலத் தான் தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் என்பதும். எனவே, தமிழரிடையே வழங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் என்பது பொருந்தி வரலாம். குழப்பாமலும் இருக்கும். தமிழரிடையே புழங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் என்றும் சொல்லலாம் (Foreign words in use among Tamils என்பது போல் பொருள் வரும்). -- இரவி (தற்போது புகுபதிகையில் இல்லை). 08:52, 23 சனவரி 2012 (UTC)

நன்று.வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் என்ற தலைப்பே அருமையாக உள்ளது. மேலும் சில விளக்கங்களை கொடுக்கலாம் என்றே எண்ணுகிறேன். அவைகள் #எந்த ஒரு மொழியிலும் அம்மொழியில் உருவான சொற்களே இருக்கும். #ஒருவேளை ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட மொழியில் கூற வார்த்தைகள் இல்லாத போது பிறமொழிச் சொற்களை அம்மொழிக்குள் இணைத்துக் கொள்கின்றனர். #அவ்வாறே தமிழில் எந்த ஒரு வடமொழிச் சொல்லும் இருப்பதில்லை, இருக்கவும் போவதில்லை சூர்யா கூறியது போன்று தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் எனப் பெயர் மாற்றம் செய்யலாம், ஆனால் தமிழில் வடமொழிச் சொற்கள் இல்லை, தமிழர்களிடையே வடமொழிச் சொற்கள் உபயோகம் செய்யப்படுகின்றன. ரவி கூறுவதை அப்படியே ஏற்கிறேன்; அதாவது தமிழரிடையே புழங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் எனக்கூறலாம். ஆனால் இவ்வளவு பெரிய தலைப்பு தேவைதானா? சற்று யோசிக்க வேண்டிய விடயம். எனவே பார்வதிஸ்ரீ அவர்கள் கொடுத்துள்ள தலைப்பே பொருத்தமாக உள்ளது. அதுவே தொடர எனது விருப்பம். அன்புடன், -Pitchaimuthu2050 18:07, 12 பெப்ரவரி 2012 (UTC)

//தமிழில் வழங்கும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்// மேலேயுள்ள இந்தப் பதிவைப் பார்த்ததும் இப்படி ஒரு பட்டியல் வெளியிட்டால் நல்லதென்பது என் எண்ணம். இன்று தமிழில் வடமொழியை விட ஆங்கிலம் தான் கூடுதலாக கலந்துள்ளது. - Uksharma3 (பேச்சு) 17:02, 21 சனவரி 2014 (UTC)Reply

சங்கதி

தொகு

தமிழ் சொல் செய்தி என தரப்பட்டுள்ளது. இசையில் வரும் சங்கதிக்கு தமிழ்ச்சொல் என்ன? - Uksharma3 (பேச்சு) 16:51, 21 சனவரி 2014 (UTC)Reply

Return to "வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்" page.