பேச்சு:வாஇல் குனைம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 4, 2011 அன்று வெளியானது. |
Untitled
தொகுஇவரது பெயர் முதற் பக்கத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அரபு வழக்கப்படி வாஇல் ஃஙுனைம் என மாற்ற வேண்டும்.--பாஹிம் 07:56, 9 மே 2011 (UTC)
- மாற்றிவிட்டேன்--சோடாபாட்டில்உரையாடுக 08:06, 9 மே 2011 (UTC)
நன்றி, சோடாபாட்டில்.--பாஹிம் 08:12, 9 மே 2011 (UTC)
- பாகிம், இங்கு எதற்காக ஃ மேலதிகமாகத் தேவைப்படுகிறது?--Kanags \உரையாடுக 08:35, 9 மே 2011 (UTC)
- இங்கும் (Forvo.com - [3]) இங்கும் (youtube -[4]) வேயில் ஓனீம் என்றல்லவா ஒலிக்கின்றார்கள். தலைப்பை மறுபடியும் பரிசீலனை செய்ய வேண்டும். --பரிதிமதி 13:16, 1 சூன் 2011 (UTC)
- இந்த எழுத்தை 'கொய்ன்'. அப்படியானால் வாஇல் கொனிம் என்று எழுதுவதே சரியானது. ஓனீம் என்பதற்கு வாவ் வரவில்லை -- மாகிர் 13:31, 1 சூன் 2011 (UTC)
- ஃஙுனைம் புதிய சொல்லமைப்பாக உள்ளதே! இதை எவ்வாறு ஒலிக்க வேண்டும்?--பரிதிமதி 14:42, 1 சூன் 2011 (UTC)
- தலைப்பை மாற்ற மீண்டும் பரிந்துரைக்கின்றேன். வேயில் ஓனிம் என்பதே சரியான ஒலிப்பாகத் தெரிகின்றது. [1]
அரபு மொழிப் பெயருக்கு ஆங்கிலேயர்களின் ஒலிப்பைப் பின்பற்ற முயல்வது பொருத்தமானதல்ல. இவரது பெயர் அரபு மொழியிற்றான் உள்ளது. வாஇல் ஃஙுனைம் அல்லது வாஇல் குனைம் என்றுதான் இருக்க வேண்டும். நான் பல்லாண்டுகள் அரபு மொழியைக் கற்றிருக்கிறேன். எகிப்தின் அரபு மொழி நிறுவகத்திடமிருந்து சிறப்புச் சான்றிதழும் பெற்றுள்ளேன். இந்நிலையில் அரபு மொழியை அறியாதவர்கள் ஒலிப்புச் சொல்லிக் கொடுப்பது விசித்திரமாகப் படுகிறது.--பாஹிம் (பேச்சு) 19:07, 3 மே 2012 (UTC)
- அரபு மொழிப் பெயருக்கு ஆங்கிலேயர்களின் ஒலிப்பைப் பின்பற்ற வேண்டாம் என்பது சரி. அதே வேளை, வழமையான தமிழ் சொல்லாக்க முறைக்கு ஏற்புவும் இலகுவாக ஒலிக்க உதவுமாறும் வாஇல் குனைம் என்று எழுதினால் நன்றாக இருக்கும். ஃஙுனைம் என்பதை எப்படி ஒலிக்க வேண்டும் என்று புரியவில்லை. ஃங, ங ஆகியவற்றில் தொடங்கும் சொற்களையும் கண்டதில்லை.--இரவி (பேச்சு) 19:19, 3 மே 2012 (UTC)
- அரபு மொழி ஒலிப்பிற்கு ஆதாரம் தர வேண்டுகிறேன் (கோப்பாக இருந்தால் நல்லது); மேலும் நான் கேட்ட ஒரு அரபு மொழி ஊடகத்தின் ஒலிப்பையே சான்றாக எடுத்தாண்டுள்ளேன் -ஆங்கில ஊடகத்தின் ஒலிப்பை அல்ல - (காண்க: youtube -1:06 to 1:08)--பரிதிமதி (பேச்சு) 18:02, 10 மே 2012 (UTC)
ஊடகச் சான்று என்பதைவிட, நானே பல ஆண்டுகள் அரபு மொழி கற்றும் கற்பித்துமுள்ளேன். எகிப்தின் கெய்ரோ வானொலியின் அரபு மொழிப் பிரிவிலிருந்து சிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளேன். தேவையானால் நானே ஒரு ஒலிக்கோப்பை உருவாக்கிப் பதிவேற்றலாம் அல்லது உங்களுக்கு அப்படியே சந்தேகமிருந்தால் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் அரபு மொழி மூலமே கல்வி கற்ற பலர் இலங்கையிலும் இருக்கின்றார்கள். அவர்களின் தொடர்பு முகவரியைத் தரலாம். அப்படியில்லாவிட்டால், ஆன்லைன் பீஜே இணையத்தளத்தில் அறிஞர் பீஜே அவர்களிடம் கேட்டாலும் பதிலளிப்பார்.--பாஹிம் (பேச்சு) 18:32, 10 மே 2012 (UTC)
மற்றுமொன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அரபு மொழியில் எ, ஏ, ஒ, ஓ போன்ற ஓசைகள் இல்லை. சந்தேகமிருந்தால் தமிழில் குர்ஆன் இணையத்தளத்திற் சென்று முழுக் குர்ஆனையுமே செவிமடுத்துப் பார்க்கலாம். மேற்படி ஓசைகள் அரபியில் இல்லை என்பது தெளிவாகும்.
- இந்தப் பயனரோ இங்கு உரையாடலில் வந்த பயனர்களோ (அவர்கள் உரையாடலின் சாரத்தைப் பார்த்து நானாக ஊகித்தது- மாற்றிருந்தால் தெரிவிக்கலாம்) உங்கள் வாக்கை/புலமையை ஏற்பதில் சிரமம் ஏதுமில்லை பாகிம்! விக்கிப்பீடியா ஏற்க வேண்டாமா! ஆதலால் தான் ஏற்றுக்கொள்ளத்தக்க, தகுந்த ஆதாரம் தேவை என்று இன்னமும் கூறுகிறேன்.
(புலமை இல்லாதவரும் கூட) தகுந்த ஆதாரத்துடன் தவறில்லாமல் எழுதினால் விக்கியில் ஏற்கப்படும் அல்லவா? அப்படித்தானே விக்கி வளர்ந்தது. --பரிதிமதி (பேச்சு) 10:26, 11 மே 2012 (UTC)