பேச்சு:விந்து தள்ளல்
இக்கட்டுரையின் தலைப்பை இருபாலருக்கும் பொதுவான பாய்மப் பீச்சல் அல்லது பால்வினைப் பீச்சல் என மாற்றலாமா ? --மணியன் (பேச்சு) 15:22, 4 மே 2012 (UTC)
படம் இணைப்பு
தொகுஅடையாளம் காட்டாத பயனர் ஒருவர் வெளிப்படையான படம் ஒன்றை இணைத்திருந்தார். இத்தகைய படங்கள் பொது வாசிப்பிற்கு (குழந்தைகள் உட்பட) தகாதவையாக இருப்பதால், இது தொடர்பில் கலந்துரையாடி முடிவு செய்யும் வரை அப்படிமத்தை நீக்கியுள்ளேன். -- Sundar \பேச்சு 11:31, 21 டிசம்பர் 2007 (UTC)
ஆங்கில விக்கியில் இந்த படமே காணப்படுகிறது. எனவே அவர் படிமம் இல்லாத காரணத்தினால் அப்படத்தையே இங்கே இனைத்திருக்கக்கூடும். ஆங்கில் விக்கியில் இருப்பதினால் இங்கே இதை மறுபடியும் இடுவதில் தவறில்லை என்பது எனது கருத்து. மேலும் இந்த தலைப்பு பாலியில் தொடர்பான இருப்பதால் இவ்வாறான படிமங்களின் இணைப்பை தருவது தவிர்க்கமுடியாத செயல் வினோத் 11:38, 21 டிசம்பர் 2007 (UTC)
படிமப் பக்கத்துக்கான இணைப்பை - 12 வயதுக்கு மேற்பட்டோரின் பார்வைக்கு மட்டும் - என்ற அறிவிப்போடு தரலாம். நேரடியாகப் படமாகத் தருவதைத் தவிர்க்கலாம் என்றே தோன்றுகிறது. 12 வயது போதுமா அதற்கு மேற்பட்டிருக்க வேண்டுமா என்பதையும் உரையாடலாம். ஆங்கில விக்கிப் பண்பாட்டுச் சூழலும் தமிழ் சமூகச் சூழலும் ஒன்றல்ல என்பதால் ஆங்கில விக்கி நடைமுறைகளை நாம் அப்படியே பின்பற்றுவது எல்லா இடங்களிலும் பொருந்தாது. --ரவி 14:19, 21 டிசம்பர் 2007 (UTC)
இவ்வாறான Explicitஆன படங்களை தவிர்த்து விட்டு வரபடங்களையும் ஓவியங்களையும் இணைக்கலாம். அசாதாரண சூழ்நிலைகளில் மட்டும் இது போன்ற Explicit படங்களை அனுமதிக்கலாம்
எனினும் பாலியல் கல்வியை இந்தியாவிலேயே நடைமுறைப்படுத்த முயற்சிகள் நடக்கும் வேலையில்(எப்போதோ செய்திருக்க வேண்டியது), இவ்வாறான அறிவிப்புகள் தேவையற்றவை என நினைக்கிறேன். பாலியல் தொடர்பான கருத்துகள் ஏதோ மறைக்கப்பட வேண்டியவை என்ற பழமைவாத கருத்தை வலு கூட்டுவது போல் இது அமையும். And I suppose Wikipedia is not be Censored for whatsoever reasons :-) வினோத் 15:06, 21 டிசம்பர் 2007 (UTC)
வினோத், கோட்டோவியங்களைத் தருவதில் எனக்கும் உடன்பாடே. பேச்சு:பாலியல் வசைச் சொற்கள் பக்கத்தைப் பார்ப்பதும் இது குறித்து விக்கிபீடியர் மனநிலையை அறிய உதவலாம். தமிழ் விக்கிபீடியாவில் "sex" படம் இருப்பதற்காக சில பெற்றோர்களும் பள்ளிகளும் தமிழ் விக்கிபீடியாவை தடை செய்வது போன்ற சூழல் வரக்கூடாது. இன்றைய தமிழ்நாட்டுச் சூழலில் அப்படி நிகழ்வதற்கு நிறைய சாத்தியங்கள் உண்டு. அப்படி ஆகிவிடக்கூடாது என்பது தான் என் கவலை--ரவி 21:54, 21 டிசம்பர் 2007 (UTC)
பாலியல் பற்றி விழிப்புணர்வு வரதாத வரையில் பள்ளிகளில் தடை செய்யப்படும் நிலையும், தமிழ் மக்களின் ஐயப்படும் விலகப்போவதில்லை. பாலியல் பற்றி அனேக கட்டுரைகள் எழுதப்படாமலே இருக்கின்றன. மிக முக்கியமான கட்டுரைகளான விந்து, விந்தகம், பாலுறவு தாக்கின்பம், வலியேற்பு பாலின்பம், பெண்ணுறை, பிரமச்சாரியம், பாலியல் வல்லுறவு போன்றவற்றையாவது தரலாம். மற்ற மொழியில் இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றனவா என்றும் அங்கு செயல்படுத்தப்படும் வழிமுறைகளையும் விக்கியன்பர்கள் கலந்தாலோசிப்பது நலம் பயக்கும்.
இங்கு நடைபெற்றுள்ள உரையாடலை இப்போது தான் பார்க்கிறேன். கடந்த சில நாட்களாக இனப்பெருக்கத் தொகுதித் தொடர்பான பக்கங்களை குறுங்கட்டுரைகளாக Simple wiki இலிருந்து தமிழாக்கம் செய்து வருகிறேன். 2007க்கும் 2012க்கும் ஏதேனும் கருத்து மாற்றங்கள் உள்ளனவா? இப்பக்கங்களில் உள்ளப் படிமங்கள் அகற்றப்பட வேண்டுமா ? மற்றவர்கள் கருத்தை அறிய விழைகிறேன்.--மணியன் (பேச்சு) 15:22, 4 மே 2012 (UTC)