பேச்சு:விரைவு ஃபூரியே உருமாற்றம்
கட்டுரையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரியவில்லை. பின்வரும் பகுதி ஒரு எடுத்துக்காட்டுக்கு மட்டும். அதிலும் முதல் வரியில் எழுவாய் (subject), செயப்படுபொருள் (object) எதுவுமே இல்லை. //இதுவரை, மிக பொதுவான FFT கூலி–டக்கி வழிமுறையே ஆகும். இது ஒரு பிரித்து வெல்லும் வழிமுறையாகும். இதில் N = N 1N 2 என்பது போன்று சிக்கலான அளவுள்ள ஒரு DFT, N 1 மற்றும் N 2 என்ற அளவிலான பல சிறு DFTகளாக தொடர்ந்து மீண்டும் மீண்டும் உடைக்கப்படுகிறது, இதில் வழக்கமாக (ஜெண்ட்டில்மேன் மற்றும் சாண்டி ஆகியோரின் பெயரின் நினைவாக, 1966) சுழல் காரணிகள் என அழைக்கப்படும் ஒன்றின் சிக்கலெண் மூலங்களால் O(N) முறை பெருக்கப்படும் செயலும் நடைபெறுகிறது.//
கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் கவனிக்கவும். -- சுந்தர் \பேச்சு 06:57, 7 ஏப்ரல் 2010 (UTC)
மன்னிக்கவும் சுந்தர், கட்டுரையின் ஆங்கிலப் பதிப்பின் படியே இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஃபாஸ்ட்ஃபோரியர் மாற்றம் என்பதே தமிழில் (ஆங்கிலத்திலும் கூட) மிகவும் சிக்கலான, புரிந்துகொள்ளக் கடினமான ஒரு பாடப் பிரிவாக இருக்கும். உள்ளடக்கமே அப்படித்தான் உள்ளது. அதைக் குறித்து ஒன்றும் செய்ய இயலாது என நினைக்கிறேன். மேலும் இன்னும் இதைச் செம்மையாக செய்யலாம் என நினைத்தால் தயவு செய்து அந்த எடுத்துக்காட்டின் மேலும் செம்மையான மொழிபெயர்ப்பை தாங்கள் பரிந்துரைத்தால், நான் அது போல செய்ய முயற்சிக்கவும் உதவியாக இருக்கும்.
மேலும், தாங்கள் எடுத்துக்காட்டாகக் கொடுத்துள்ள பத்தியையே எடுத்துக்கொள்வோம், அதில் எழுவாய், பயனிலை எதுவும் இல்லை எனக் கூறியுள்ளீர்கள்,
"By far the most common FFT is the Cooley–Tukey algorithm."
இந்த ஆங்கில வரிக்கான தமிழ் வரி, பின்வறுமாறு,
"இதுவரை, மிக பொதுவான FFT கூலி–டக்கி வழிமுறையே ஆகும்."
இதில் "மிக பொதுவான FFT" - subject; "is" - verb; "கூலி–டக்கி வழிமுறையே ஆகும்" - complement என நினைக்கிறேன்.
இதில் தவறிருப்பின் தயவு செய்து திருத்தவும். மனமுவந்து திருத்திக்கொள்கிறேன். இதில் உள்ள அந்த FFT எனும் ஆங்கில சுருக்கப்பெயரே இந்தக் குழப்பத் தோற்றத்திற்குக் காரணம் என நினைக்கிறேன், அல்லது ஒரு காற்புள்ளி இட்டால் இது சற்று தெளிவாக விளங்கும் என நினைக்கிறேன், இவ்வாறு:
"இதுவரை, மிக பொதுவான FFT, கூலி–டக்கி வழிமுறையே ஆகும்."
தங்கள் கருத்துகளையும் திருத்தப் பரிந்துரைகளையும் மனமுவந்து வரவேற்கிறேன், அவை கட்டுரைகளும் எங்கள் தமிழறிவும் மேம்பட உதவுகின்றன என்பதில் மகிழ்ச்சி.
நன்றி, சாந்த குமார்.--−முன்நிற்கும் கருத்து Shanthalan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- சாந்தகுமார், //"இதுவரை, மிக பொதுவான FFT கூலி–டக்கி வழிமுறையே ஆகும்."// என்பது பின்வருமாறு தமிழில் எழுதப்படல் வேண்டும்:
- "இதுவரை, மிகப் பொதுவான FFT ஆனது கூலி–டக்கி வழிமுறையே ஆகும்."--Kanags \உரையாடுக 11:25, 9 ஏப்ரல் 2010 (UTC)
- பின்னூட்டங்களை கவனித்து மறுமொழி அளித்ததற்கு மிக்க நன்றி. சாநந் குமார். FFT என்ற ஆங்கிலச்சுருக்கமும் காற்புள்ளி இல்லாமையும் தான் எனது குழப்பத்துக்குக் காரணம். -- சுந்தர் \பேச்சு 11:39, 9 ஏப்ரல் 2010 (UTC)
- நிச்சயம் நகர்த்தலாம் . --இராஜ்குமார் 13:00, 9 ஏப்ரல் 2010 (UTC)
முன்னுரை சிவப்பு இணைப்புகள்
தொகுஇக்கட்டுரையில் உள்ள முன்னுரையில் உள்ள சிவப்பு இணைப்புகளை திருத்தம் செய்துள்ளேன் . -- இராஜ்குமார் 17:08, 9 ஏப்ரல் 2010 (UTC)
- நீங்கள் செய்த மாற்றங்கள் நன்று இராஜ். -- சுந்தர் \பேச்சு 05:13, 10 ஏப்ரல் 2010 (UTC)
அனைவருக்கும் நன்றி, தங்கள் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டன.
நன்றி --Shanthalan 08:44, 12 ஏப்ரல் 2010 (UTC)