வாருங்கள், Shanthalan!

வாருங்கள் Shanthalan, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 11:28, 15 அக்டோபர் 2009 (UTC)

வேண்டுகோள்தொகு

தயவு செய்து நேரடியாக விக்கியில் இருந்து மற்ற பங்களிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பங்களிக்க முன்வாருங்கள். ஏற்கனவே விக்கியில் உள்ள சில கட்டுரைகளை நீங்கள் தமிழாக்குவதால் உங்கள் உழைப்பும் வீணாகக் கூடும். பார்க்க: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கம். நன்றி.--ரவி 11:33, 15 அக்டோபர் 2009 (UTC)

Shanthalan வணக்கம்! உங்கள் பங்களிப்புகள் பல துறைகளைச் சார்ந்து உள்ளன; ஆங்கில விக்கியிலிருந்து கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியின் துணைக்கொண்டு செய்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள். இரண்டு விடயங்கள்:

  1. அதை எவ்விதம் செய்வது? சற்று விளக்குவீர்களா? (ஏனெனில், நான் பயன்படுத்திப் பார்த்த போது மிகக்குறைவான அளவே மொழிபெயர்ப்பு நிகழ்கிறது)
  2. ஆங்கில விக்கியில் எவ்வளவு தான் தரமான பக்கம் இருந்தாலும், அதைத் தமிழாக்கியதோடு நம் பணி நின்று விடுவதில்லை. தமிழ்ப் பயனர்களுக்கு உகந்த வகையில் திருத்தங்களும் செப்பனிடுதலும் தேவை அல்லவா? மேலும், தொடர்ந்து இயக்கத்திலிருந்து புதுப்பித்தல் (active updation) அவசியம் அல்லவா?

நன்றி! --பரிதிமதி 18:30, 18 நவம்பர் 2009 (இந்திய நேரம்)


நன்றி. தாங்கள் கூறியவாறு திருத்தங்களில் கவனம் செலுத்தி கட்டுரைகள் செம்மையாக அமைய பங்களிக்கிறேன். -- Shanthalan

மொழிபெயர்ப்பு தொடர்பான பின்னூட்டம்தொகு

சாந்த குமார், உங்கள் பயனர் பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள நோக்கங்கள் நன்று. இயல்பான சரியான மொழிபெயர்ப்புகளையே நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் மொழிபெயர்ப்பாளர் குழுவை நிருவகிப்பதாகக் கூறியுள்ளீர்கள். அருள் கூர்ந்து உங்கள் குழுவினர் மொழிபெயர்த்துள்ள கட்டுரைகளைப் பார்த்து குறைகளை அடையாளங்காணுங்கள். பகுப்பு:கூகுள் தமிழாக்கம் தொடர்பான பின்னூட்டம் என்ற பகுப்பில் நாங்கள் இணைத்துள்ள பேச்சுப் பக்கங்களிலுள்ள கருத்துக்களை கவனமாக உள்வாங்கி உங்கள் அணியினரிடம் எடுத்துச் சொல்லுங்கள். -- சுந்தர் \பேச்சு 09:22, 7 ஏப்ரல் 2010 (UTC)


நன்றி சுந்தர். தவறி விடுபட்ட குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றைத் திருத்தி, கட்டுரைகள் செவ்வனே அமைய பங்களிக்கிறேன். -- சாந்த குமார்
மிக்க நன்றி. இனி இத்திட்டம் இன்னும் சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களுக்கும் இது ஒரு முன்மாதிரியாகத் திகழட்டும். -- சுந்தர் \பேச்சு 12:30, 9 ஏப்ரல் 2010 (UTC)

உங்கள் நேரடிப் பங்களிப்பு மகிழ்வளிக்கிறது. உங்களைப் பின்பற்றி இன்னும் பல கூகுள் பங்களிப்பாளர்களும் நேரடியாகப் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி--ரவி 14:44, 9 ஏப்ரல் 2010 (UTC)


உங்கள் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறோம் (1/3)தொகு

வணக்கம் Shanthalan. தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருவது குறித்து முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் பங்களிப்பு குறித்து சில கருத்துகள், வேண்டுகோள்களை முன்வைக்க விரும்புகிறோம்:

தமிழ் விக்கிப்பீடியா என்பது பள்ளி மாணவர்களும் கூட அன்றாடம் பயன்படுத்தும் ஒரு கலைக்களஞ்சியம். எனவே, இங்குள்ள கட்டுரைகள் சீரான, நல்ல தமிழ் நடையில் இருப்பதும் பக்கங்கள் பிழையின்றி முழுமையாக இருப்பதும் முக்கியம் ஆகும். விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால் அனைத்துப் பங்களிப்பாளர்களும் கூடி உரையாடிச் செயல்பட்டால் தான் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த இயலும்.

  • கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் எழுதப்படும் சில கட்டுரைகளில் ஒரு வகையான வறண்ட, எந்திரத்தனமான மொழிபெயர்ப்பு உள்ளதாக உணரப்படுகிறது. ஒருவேளை, இது கருவியின் பிழையாகவோ கருவி உங்களின் செயல்திறனை மட்டுப்படுத்துவதாகவோ உணர்ந்தால், தயவு செய்து உங்கள் கருத்தை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி உருவாக்கக் குழுவுக்குத் தெரிவியுங்கள். அல்லது, இக்கருவியை விடுத்து நேரடியாக கைப்பட மொழிபெயர்க்கலாம்.
  • கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் அளிக்கப்பட்ட கட்டுரைகளில் தேவைப்படும் மேம்பாடுகளைக் காணுங்கள். புதிய கட்டுரைகளை உருவாக்கும் முன் தாங்கள் ஏற்கனவே மொழிபெயர்த்த கட்டுரைகளில் இக்குறைகள் இருந்தால், தயவு செய்து திருத்தத் தொடங்குங்கள். இவை பொதுவான குறைகள் என்பதால் இவற்றைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் குறிப்பிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. நீங்கள் விக்கிப்பீடியாவில் புகுபதிந்த பிறகு விக்கிப்பீடியாவின் வல மேற்புறத்தில் "என் பங்களிப்புகள்" என்று ஒரு இணைப்பு இருக்கும். இந்தப் பக்கத்தில் இருந்து உங்கள் பழைய கட்டுரைகளை இனங்கண்டு திருத்தத் தொடங்கலாம்.
  • தங்கள் பயனர் பேச்சுப் பக்கத்திலும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலும் நிகழும் உரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியர்களிடையே கூடிய புரிந்துணர்வு ஏற்படவும், கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் இது மிகவும் முக்கியம்.

இது கூகுள் கருவி மூலம் பங்களிக்கும் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் விடுக்கப்படும் பொதுவான வேண்டுகோள். இந்த வேண்டுகோளில் உள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனவே கவனத்தில் எடுத்திருக்கலாம். சில விசயங்கள் பொருந்தாமல் இருக்கலாம். எனினும், இப்பொதுவான வேண்டுகோளை ஏற்று, தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த வேண்டுகோள் குறித்த அடுத்தடுத்த நினைவூட்டல்கள் மே 3, 2010 அன்றும் மே 10, 2010 அன்றும் இடப்படும். அதற்குப் பிறகும் இவ்வேண்டுகோளுக்கு ஏற்ப தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைக் காண இயலாவிட்டால், மே 15, 2010 முதல் தாங்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

--ரவி 17:19, 26 ஏப்ரல் 2010 (UTC)

சாந்தகுமாரின் மறுமொழிதொகு

நன்றி சுந்தர். பழைய கட்டுரைகளைத் திருத்தும் பணிகள் தொடங்கியாயிற்று. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். விக்கிப்பிடியா இடைமுகத்திலான உரையாடல் எனக்குப் புதிது ஆகெவே தான் மறுமொழியளிப்பதில் சிறிது தடுமாற்றம்!

அவ்வப்போது திருத்தம் செய்த பழைய கட்டுரைகளைப் பற்றியும் புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளைப் பற்றியும் அவ்வப்போது விக்கி சமூகத்திற்கு தெரியப்படுத்துகிறேன், தாங்கள் எங்கள் கட்டுரைகளை மேம்படுத்த பரிந்துரைகளையும் கருத்துகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி --சாந்த குமார் 15:50, 29 ஏப்ரல் 2010 (UTC)

(சாந்த குமார், வார்ப்புருப் பக்கத்தில் இட்டிருந்த செய்தியை இங்கு நகர்த்தி உள்ளேன்.--ரவி 16:50, 29 ஏப்ரல் 2010 (UTC))

நல்லது சாந்தகுமார். நல்ல பயன் விளையுமென நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:05, 30 ஏப்ரல் 2010 (UTC)
உங்கள் வளர்முகமான அணுக்கம் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் விக்கியின் கட்டுரை எண்ணிக்கையுடன் தரமும் உயர்ந்திட விக்கிப்பீடியரின் அன்பும் அரவணைப்பும் என்றும் உண்டு. உரையாடல் பக்கங்களில் பங்கேற்று புரிந்துணர்வுடன் பணியாற்றுங்கள். வாழ்த்துகள் !!--மணியன் 08:25, 30 ஏப்ரல் 2010 (UTC)

ரவி, சுந்தர் மற்றும் மணியன் அனைவருக்கும் நன்றி..

--சாந்த குமார் 09:21, 30 ஏப்ரல் 2010 (UTC)

வணக்கம் சாந்த குமார். நேற்று உங்களோடு உரையாடியதில் மகிழ்ச்சி. வார்ப்புருப் பக்கங்களில் உரையாடக் கூடாது. எனவே, உங்கள் கருத்துகளை என் பேச்சுப் பக்கத்துக்கும் சுந்தரின் பேச்சுப் பக்கத்துக்கும் நகர்த்தி உள்ளேன். கட்டுரைவாரியாக, பயனர் வாரியாக அணுகுவதே விக்கியின் வழக்கமான நடைமுறை. எனவே, உங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரையும் நேரடியாகவே விக்கியில் திருத்தங்கள் செய்யுமாறும் உரையாடுமாறும் வேண்டிக் கொள்கிறேன். நன்றி--ரவி 10:15, 30 ஏப்ரல் 2010 (UTC)


நன்றி ரவி, அவ்வாறே செய்யலாம். நேற்று உங்களிடம் உரையாடியதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. சுந்தரும் பங்குபெறுவார் என எதிர்பார்த்தேன்.

நன்றி --சாந்த குமார் 10:25, 30 ஏப்ரல் 2010 (UTC)

சாந்த குமார், இப்படி நீங்கள் நேரடியாக உரையாடி பங்குகொள்வது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள். இப்படிக் கருத்துரையாடி வளர்முகமாக, கூட்டாகச் செயல்படும்பொழுது பல முனைகளில் கருத்தும், மொழிபெயர்ப்பும் ஆழம் பெறுவதையும், நல்லுணர்வும் நட்புணர்வும் வளர்வதையும் நீங்கள் நேரடியாக நன்கு உணர வாய்புள்ளது. உங்களுக்கும் உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக கூகுள் நிறுவனத்துக்கும் மிக்க நன்றி.--செல்வா 13:04, 30 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி செல்வா. --சாந்த குமார் 06:04, 3 மே 2010 (UTC)

உதவிக் குறிப்புகள்தொகு

வணக்கம்,

நீங்கள் நேரடியாக விக்கியிலேயே செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. உங்களுக்கு உதவக் கூடிய சில பக்கங்கள்:

கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள கூகுள் மொழிபெயர்ப்பு வார்ப்புருவை நீக்க வேண்டாம். கூகுள் கட்டுரைகளைத் தரப்படுத்த இவ்வார்ப்புரு தேவை. நன்றி--ரவி 11:22, 12 மே 2010 (UTC)

மகிழ்ச்சிதொகு

நீங்கள் கூகுள் கட்டுரைகளில் செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. நன்றி--ரவி 18:53, 11 ஜூலை 2010 (UTC)

மெய்யெழுத்தில் தொடங்கி எழுதவேண்டாம்தொகு

அருள்கூர்ந்து எச்சொல்லையும் மெய்யெழுத்தில் தொடங்கி எழுத வேண்டாம். நன்றி.--செல்வா 12:13, 14 ஜூலை 2010 (UTC)

விக்கி மாரத்தான்தொகு

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:22, 27 அக்டோபர் 2010 (UTC)

குங்குமப்பூச்செடிதொகு

இந்த பேச்சுப் பக்கத்தில் சில கருத்துக்களை இட்டுள்ளேன். பாருங்கள். தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்.--கலை 01:07, 20 நவம்பர் 2010 (UTC)

பயனர்:Shanthalan/இருமை நட்சத்திரம்தொகு

உங்கள் அணியிலிருந்து ஒரு கட்டுரை ஐபி முகவரி வழியாகப் பதிவாகியுள்ளது. யார் மொழிபெயர்ப்பாளர் என்று தெரியவில்லையாதலால் உங்கள் பயனர் வெளிக்கு மாற்றியுள்ளேன். - பயனர்:Shanthalan/இருமை நட்சத்திரம்--சோடாபாட்டில் 10:31, 23 திசம்பர் 2010 (UTC) சோடாபாட்டில், இந்தக் கட்டுரை எங்கள் அணி உறுப்பினரால் மொழிபெயர்க்கப்பட்டதல்ல... என்ன செய்யலாம்? -அன்புடன் --சாந்த குமார் 10:45, 23 திசம்பர் 2010 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:31, 21 சூலை 2011 (UTC)

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Shanthalan,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

முதற்பக்க கட்டுரை அறிவிப்பு திட்டம்தொகுஉங்களுக்குத் தெரியுமா திட்டம்தொகு


பாராட்டுகள்தொகு

அன்புள்ள சந்தாலன் (சாந்த குமார்), சந்தாலம் என்னும் சொல் ஆலமரத்தின் விழுதுகளைக் குறிக்கும். பெயருக்கேற்பச் செயல்படுகிறீர்கள். சூரிய மின் ஆற்றல் கட்டுரை மொழிநடை நன்றாக உள்ளது. செய்திகள் தெளிவாக உள்ளன. பணியைச் செம்மையாகச் செய்கிறீர்கள். பாராட்டுகள். இக்கால நிலையில் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டிய இன்றியமையாத கட்டுரை. வாழ்த்துக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 19:02, 9 மே 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shanthalan&oldid=1418622" இருந்து மீள்விக்கப்பட்டது