வெண்பா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இந்த பக்கத்தில் உள்ள விளக்க உரைகளையும் தமிழிலேயே தந்தால் எளிதில் படிக்க உதவியாக இருக்குமே! ஆங்கில உரைகளும் நன்றாக உள்ளதால், அவற்றை முற்றிலும் அழித்து விடாமல் ஆங்கில விக்கிபீடியாவிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.உங்கள் முயற்சிக்கு நன்றி. -- இரவி

நானும், சஞ்சீத் குமாரும், மற்றொருவரும் இணைந்து எழுதிய ஆய்வுக்கட்டுரையின் அடிப்படையிலேயே இக்கட்டுரை உள்ளது. இதை ஆங்கில விக்கிபீடியாவில்தான் முதலில் நான் எழுதினேன், பிற்பாடுதான் தமிழில் மொழிபெயர்த்தோம். இன்னமும் கூட சில பகுதிகள் ஆங்கிலத்திலேயே உள்ளது கவலைக்குறியது. எனக்கு அவற்றிற்கான தமிழ் சொற்கள் தெரியாதது வருத்தமளிக்கிறது. :-( -- Sundar \பேச்சு 11:14, 30 ஆகஸ்ட் 2005 (UTC)

நேர்பு நிரைபு

தொகு

//இன்னமும் கூட சில பகுதிகள் ஆங்கிலத்திலேயே உள்ளது கவலைக்குறியது. எனக்கு அவற்றிற்கான தமிழ் சொற்கள் தெரியாதது வருத்தமளிக்கிறது. :-( -- Sundar \பேச்சு//

பதிவு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. ஆயினும் மேலும் சில விளக்கங்கள் தேவைப்படலாம் என்று கருதுகிறேன். நான் தமிழ் விக்கிபீடியாவுக்குப் புதியவன் (வெண்பா ஆங்கிலக் கட்டுரையில் வெளி இணைப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கும் அதே பழைய ஹரிமொழி பொட்டு வணியின் அதே ஹரி கிருஷ்ணன்தான்.) எந்த இடங்களில் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் தெரியவில்லை என்பதை அறிய முடிந்தால் என்னால் ஆனதைச் செய்யக் காத்திருக்கிறேன். --ஹரி கிருஷ்ணன்.

வருக, ஹரி கிருஷ்ணன். உங்கள் எழுத்துக்களைப் பல மடற்குழுக்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன். தமிழ் விக்கிபீடியாவையும் வளம்படுத்துங்கள். இங்கே யாப்பு தொடர்பான பல குறுங்கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்துவதிலும் உங்கள் பங்களிப்பைச் செய்ய முடியுமானால் நல்லது. Mayooranathan 17:35, 31 மே 2007 (UTC)Reply

வெளி இணைப்பு

தொகு

சுந்தர், இந்த வெண்பா மடற்குழு இணைப்பையும் வெளி இணைப்பாக சேர்க்கலாம் என நினைக்கிறேன். இதில் புகழ்மிக்க கவிஞர் இக்பால் அவர்கள் பங்கு கொள்கிறார்கள். சி. ஜெயபாரதனும் மிக அழகான அருமையான வெண்பாக்களை எழுதிவருகின்றார். நேற்றுதான் இக்குழுவைப்பற்றி அறிந்தேன். விக்கி விதிகள் இவ்வகை மடற்குழுக்களை வெளி இணைப்பாகத் தருவதற்கு இணங்கி இருக்குமா என அறியேன்.--செல்வா 13:10, 16 மே 2007 (UTC)Reply

செல்வா, இணைப்பிற்கு நன்றி. கட்டுரையில் சேர்த்துள்ளேன். பொதுவாக, ஆங்கில விக்கியில் இதுபோன்ற இணைப்புகள் வரவேற்கப்படுவதில்லையெனினும் தமிழில் இணைய தளங்கள், அதுவும் தரமான உள்ளடக்கங்களைக் கொண்டவை குறைவென்பதால் நாம் இங்கு சற்று இறுக்கம் தளர்த்தி வருகிறோம். இதுமுதலிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என நற்கீரன் வலியுறுத்தி வருகிறார், விரைவில் நாம் அனைவரும் கலந்துரையாட வேண்டும். -- Sundar \பேச்சு 06:49, 17 மே 2007 (UTC)Reply
நன்றி சுந்தர்.--செல்வா 13:25, 17 மே 2007 (UTC)Reply

இது போன்ற niche (தமிழில் என்ன?) மடற்குழுக்களை அனுமதிக்கலாம்--ரவி 11:22, 17 மே 2007 (UTC)Reply

ரவி, niche என்னும் சொல் பொருள் பல பொருள்கள் கொண்டுள்ளது, சுவர் மாடம் என்பது ஒரு பொருள். அதாவது அதற்கென சிறப்பான சிறு இடம் இருப்பது (ஒடுக்கமாய்). தமிழில் இதனை மாடக்குழி, இடுக்கணி, புரை (பிரை) என்று கூறுவார்கள். தமிழ் லெச்சிகனின் niche என்று உள்ளிட்டுப் பாருங்கள். பொதுவாக எந்த ஓர் ஆங்கிலச் சொல்லுக்கும் இப்படித் தேடிப்பார்க்கலாம். சில சமையங்களில் சரியான சொல் கிடைக்கலாம். எல்லாச்சொற்களும் பொருந்தி வராமல் இருக்கலாம், ஆனால் புது சொற்கள் ஆக்குவதற்குத் துணை செய்யலாம். இங்கே நீங்கள் கூறும் niche என்னும் சொற்பொருளுக்கு மாடக்குழி, இடுக்கணி என்பன பொருந்தாது. புரை என்பதும் (பொருள்: துளை, ஓட்டை, குழி) பொருந்தாது. சிறப்பான, குறுகிய தேவை/பயன்பாடு என்பதால், குறுணி என்று கூறலாம். இலக்கிய வட்டம் என்பதுபோல், குறுவட்டம் எனலாம். பொதுவாக இப்படி ஆங்கில வழி (ஆங்கில-தமிழ் கலப்பாக) எண்ணும் கருத்துக்களுக்கு, முதலில் சில சொற்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். பிறகு வழக்கில் அவை மாறுபட்டோ, திருத்தம்பெற்றோ, உயிர் இருந்தால் வழக்கூன்றும். எனவே என் பரிந்துரைகள்: குறுணி, சிறுணி, சிறுவாட்டு, சிற்றணி என்னும் போக்கில் செல்வன. இடுக்கணி என்னும் சொல்லும் ஒருவாறு பொருந்தும் என நினைக்கிறேன். --செல்வா 13:24, 17 மே 2007 (UTC)Reply

ஆறு வகை

தொகு

ஆறாவது வகை சவலை வெண்பா வா அல்லது கலி வெண்பாவா?. தமிழ் இணைய கல்விக்கழகம் கலிவெண்பா என்கிறதே?--சோடாபாட்டில்உரையாடுக 18:17, 8 திசம்பர் 2011 (UTC)Reply

வெண்பா வகைகளை இணைத்தபோது என் தமிழம்மாவிடம் கேட்டதாக நினைவு. உறுதியாகத் தெரியவில்லை. http://www.tamilvu.org/slet/l0100/l0100pd2.jsp?bookid=19&pno=275 - இந்த நூலில் வெண்பா வகைகள் ஐந்து என்றும் அதில் சவலை வெண்பா ஒன்று எனவும் உள்ளது. ஒருவேளை வெவ்வேறு வகைப்பாடுகளோ என்னவோ? சவலை என்ற பெயரையும் அதன் வரையறையையும் பார்த்தால் வெண்பாவுக்கான இலக்கணத்தை மீறுவதையே காட்டுவது போலத் தெரிகிறது. இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் விளக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 10:10, 17 திசம்பர் 2011 (UTC)Reply
நமது தமிழக்கா பார்வதிஸ்ரீ இடம் கேட்டு விட்டு மாற்றிவிட்டேன் சுந்தர். கலிவெண்பா தான் ஆறாவது வகை என்றும் சவலை வெண்பா திரிந்த வெண்பாவென்றும் சொன்னார்.--சோடாபாட்டில்உரையாடுக 10:34, 17 திசம்பர் 2011 (UTC)Reply
நல்லது சோடா. அவரைப் போன்ற தமிழறிஞர் இங்கு பங்களிப்பது மிகவும் பயன் தருகிறது. :) -- சுந்தர் \பேச்சு 06:07, 18 திசம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெண்பா&oldid=955331" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வெண்பா" page.